Pages

Saturday, April 09, 2005

அம்மா

நாவாந்துறைடானியல்ஜீவா

இரவில் இயங்கும் மனிதம்: விடிந்ததும் ஓயாது பறிபார்க்கப் போவார். நிலத்தில் வாழ்கின்ற நேரத்தைவிட வள்ளத்தில் வாழ்கின்ற காலமே அதிகம். குளிர் தாங்கும் உடைகூட உடலில் அணியாத ஒரு விறைச்ச மனுஷன். எந்தப் பனியானாலும் மழையிலும்ää தட்டம் தனிய வள்ளம் தாங்கிää தனிய வலை இழுத்து வருகின்ற சீவன். இப்படி அப்புவை பற்றி எல்லோரும் கதைத்துக் கொள்வார்கள்.
இப்போது அப்புவால் எழுந்துகூட நிற்க முடியாத நிலை.... வாழ்நிலம் வெறுமை போர்த்திய சுடுகாடு. காலம் காயம் பட்டு அப்புவின் மேல் அப்பிக் கொண்டது. மாமியின் வீட்டின் நடுத் திண்ணையில் உள்ள கட்டிலில் மரணத்தோடு போராடிக் கொண்டு இருக்கிறார். மரணம் நிமிடக் கணக்கில் எண்ணப்பட்டபடி. எனக்கு அப்பு என்றால் உயி;. நானும் அம்மாவும் தான் அப்புவை பார்ப்பதற்காக மாமியின்ரை வீட்டிற்கு வந்தோம். சுவாமி ‘அவஸ்தை ப10சை’ கொடுத்துட்டப் போறார் என்ற செய்தி காதில் விழும்வரை ஐயா ஒன்றும் புரியாத நிலையில தான் இருந்தார். ஆனால் அம்மா அதையும் மீறி என்னைக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டா. வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஓர் அரண்மனைக்குள் போவது போல் உள்ளுக்குள் ஒரு கூச்ச உணர்வு. மஞ்சள் நிற குறோட்டன் செடி என் சிந்து போல் சிரித்துக் கொண்டு நின்றது. மல்லிகையின் கிளைகள் விரிந்து யன்னல் கம்பிகளுக்குள் சுருண்டு மணம் பரப்பிக் கொண்டிருந்தது. முன் அறையின் கதவு திறந்து கிடந்தது. மேசையிலிருந்து ஏதோ சிந்து எழுதிக் கொண்டிருந்தாள். எல்லோர் முகமும் வாடியும்ää விழியின் கசிவன் பதிவுகள் கன்னத்தில். அவர்கள் தங்களுக்குள் ஏதோ முனகிக் கொண்டிருந்தார்கள். முன் விறாந்தையின் சுவரைச் சுற்றி கலர் கலரில் போட்டோக்கள் மாட்டப்பட்டு இருந்தன. எல்லாம் மாமியின்ரை மூத்த மகள் வெளிநாட்டிலை இருந்து அனுப்பிய போட்டோக்கள் தான். எவ்வளவு கலரா அழகாக இருக்கிறது. வெளிநாட்டை கனவில் கூட நினைக்க முடியாத எனக்கு இந்தப் போட்டோக்களை பார்த்தவுடன் வெளிநாட்டில் இருப்பதுபோல் ஒரு மாயை தோன்றிமறைந்தது.
ராசா மாமா எங்களை கண்டவுடன் ‘வா மூத்தது இப்பதான் என்ர வீடு தெரிந்ததோ’ என்றார். மாமா இப்படிச் சொல்லும் போதே மனசுக்குள் ஏதாவது அர்த்தம் வைத்துத்தான் சொல்லுவார் என்று எனக்குத் தெரியும்.

சிந்துவின் பார்வை என்மீது விழுந்தது. சிந்துவை நாட்கணக்கில் பார்த்துக் கொண்டிருந்தால் என் வாழ்விற்கு எதுவுமே தேவைப்படாது போல் தோன்றும். இன்று நெருங்க முடியாத நிலையிலிருந்தாலும் அவள் என்றென்றும் எனக்கு சொந்தமாகத் தான் போகிறாள் என்பதில் அசையாத உறுதியொடு இருக்கிறேன். மாமா. . . ? சந்தனம் ப10சிக் கொள்ளும் சாக்கடைக்கு இப்பயொரு பிள்ளையா.. . .? நல்ல நிலத்தில் விழுந்த விதைபோல் . . . முன்னர் அப்புவை பார்க்கப் போவதாக பொய் சொல்லிவிட்டு சிந்துவை பார்க்கப் போகலாம்ää ஐயா பேசியதிலிருந்து அப்படியும் போக முடியாமல் போய்விட்டது. அதனால் சந்திப்பின் இடைவெளி நீண்டுவிட்டது.

அம்மாவின் முந்தானையைப் பிடித்தபடி அப்பு படுத்திருக்கும் கட்டிலுக்கருகில் உட்கார்ந்து விட்டேன். அப்புவின் மூச்சின் இழுவை கொஞ்சம் கொஞ்சமாக கூடிக் கொண்டிருந்தது. கண்கள் Nமுலே செருகின் கொண்டு போனது. அம்மாவைப் பார்ப்பது போல் எனக்குத் தெரிந்தது. அந்தப் பார்வையின் அர்த்தம் எனக்கு மட்டும் தான் புரிந்தமாதிர் ‘புள்ள இனியாவது ஒற்றுமையாக இருங்கள்’ என்று கெஞ்சிக் கேட்பது போல் இருந்தது. அம்மாவுக்கு அழுது. . . அழுது கண்கள் வீங்கிவிட்டன. பின் விறாந்தையின் பக்கமாக இருந்து மாமா முன்விறாந்தைக்கு வந்தார். மாமா அடிக்கடி முன்னுக்கு வருவதும்ää பின்னுக்குப் போவதுமாக இருந்தார். சிந்து சொன்னது போல் இப்போது கள்ளுத் தவறணைக்கு போவதில்லையோ? வீட்டில் எடுத்து வைச்சுத்தான் குடிக்கிறார் போல் இருக்கிறது.

ஒவ்வொரு தடவையும் குசினிப்பக்கம் இருந்;து முன்விறாந்தைக்கு வரும்போதும் ஒரு சூடான ‘நக்கல்’ அம்மாவுக்கு சொல்கிறார் மாமா. அம்மாவும் அதுக்கு பதில் சொல்வதாக தெரியவில்லை. நக்கல் ஒவ்வொன்றும் நெஞ்சை சுட்டெரிக்கிறமாதிரி. . . அம்மா அனலில் விழுந்த புழுவைப் போல்மனதுக்குள் துடித்துக் கொண்டிருக்கிறா. வீட்டிலும் பிரச்சனை எழுகினற போதெல்லாம் மனதுக்குள் மூடி வைத்துää சாப்பிடாமல் யோசித்து அழுது கரைவதூன் அம்மாவின் பழக்கம். வெண்மை போர்த்திய மனதில் எத்தனை கனவுகள். கனவின் நோக்கு கைகூடமாமலே கானல் வரிகளாய் போகும். அம்மா உலகத்திலே வித்தியாசமான உறவு. எந்த குற்றத்தையும் மன்னிக்கும் மனப்பாங்கு தாயுள்ளத்தில்தால் எப்போதும்
தேங்கிக்கிடக்கும். எங்களை வளர்ப்பதற்காகவே அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டாள்.எங்கள் நெஞ்சுஅந்தக் கொடும் துயரை சுமந்தபடிதான இன்றுவரை..... அரிசி வித்து: அப்பம் சுட்டுää பிட்டு அவிச்சு நெருப்பைச் சுமந்து எங்கள் நிம்மதிக்காக தன்னையே உருக்கியவள். என் அம்மாவின் கருணை மனசை எங்க மாமாவுக்கு புரியப் போகுதா?.

ஊரில் மாமா என்றால் தனிமரியாதை. நல்லதுää கெட்டதற்கெல்லாம் முன்னுக்கு நிப்பவர். தன்னுடைய சொந்தப் பணத்தைக் கூட பணமாக பார்க்காமல்ää முன்விட்டு செயலில் இறங்குவபவர். ஊர்ச் சங்கத்தின் தலைவராக்க கூட இருக்கிறார். மாமா ‘ஒரு வெள்ளையடித்த கல்லறை’ என்றது எனக்கு மட்டும் தான் தெரியுமென்றல்ல. சிலருக்கு தெரிந்திருந்தாலும் வெளிப்படையாக காட்டிக் கொள்வதில்லை.

அம்மா ஒருநாள் என்னோடு கதைத்துக் கொண்ட இருக்கும்போது தலையைச்சுற்றி விழுந்திட்டா. அதை இப்போ நினைத்தாலும் அழுகைதான் வரும். அன்று காலை பள்ளிக்கூடத்துக்கு போகும்போது அம்மா ஒருமாதிரியாக சமாளித்து என்னை அனுப்பிட்ட ‘தம்பி இண்டைக்கு எப்படியும் சமைப்பனடா நீ மாஸ்ரரிட்டை கேட்டுப் போட்டு இடையில் வாடா. . . இல்லையெண்டால் பள்ளிக்கூடம் முடிஞ்சபிறகு வா. . . ராசா . . . என்ர புள்ளையல்லலை. இந்தத் nதுத்தண்ணியை குடிச்சுப் போட்டு போமோனே. . .’ நீ இப்படித்தான் சும்மா சொல்லுவää இதே மாதிரித்தான் ராத்திரியும் சொன்னீ. ‘படடா அண்ணன் அட்டைக்கு போயிற்று வந்தாப்பிறகு ஏதாவது கொண்டு வந்தானண்டால் நான் உன்னை எழுப்பிச் சாப்பாடு தருவேன் என்று சொன்னனீயல்ல. . .’ ‘பாவமடா அண்ணனும் நேற்றும் சாப்பிடாமல் தான் அட்டைக்கு போனவன்.’’ அம்மா சொல்லும்போது குரல் உடைந்தது. வாhத்தை என் இதயத்தில் நெருப்புடன் இடியாய் இறங்கியது.

வகுப்பறையில்; பாடம் மூளைக்கு ஏறுவதாக தெரியவில்லை. அம்மா அடிக்கடி சொல்கிற வார்த்தைகள் தான் என் நினைவுக்கு வந்தன. ‘அண்ணன்தான் தன்ர படிப்பை பாழாக்கிப் போட்டு கடலுக்குப் பொறான். . . . நீயாவது நல்லாப் படிக்கணும். இந்த சமூகத்தில் நாங்களும் தலை நிமிர்ந்து வாழணும்’ மனதிற்குள் அடிக்கடி வந்து Nமுhதிக் கொண்டிருந்தது. குடும்ப வறுமைக்காக ஐயா உழைக்கிறார். அவருக்கு உதவியாக அண்ணன் தொழிலுக்குப் போறான். நானும் தொழிலுக்கு போனால் எங்கள் பட்டினிக் கொடுமை தீர்ந்துவிடுமா? இதற்கு அதுதான் தீர்வாக இருக்க முடியுமா? இல்லை இதை தமாற்ற வேறு வழி ஏதாவது உண்டா? நெஞ்சிற்குள் கேள்வியாய் நிமிர்கிறது.

பாடசாலை முடிந்து வீட்டைத் தேடி நடந்து வருகின்றபோது தஎப்போதும் குசினிப் பகுதியின் மேல் கூரையை அவதானித்துக் கொண்டு வருவேன். கூரையின் மேல் பகுதியில் புகையெழுப்பினால் அம்மா சமைத்துக் கொண்டிருக்கிறதாக அர்த்தம் கொள்வேன் அப்படி இல்லையெண்டால் பட்டினியென்று நினைத்துக் கொள்வேன். அப்படி இல்லையெண்டால் பட்டினியென்று நினைத்துக் கொள்வேன். இன்று குசினிப் பக்கமாக புகையெழும்பலில்லை. . ஊர் வெளிச்சத்திற்குள் தொலைந்து போன இருண்டவீடு. அடுப்பரண்கள் இருந்தும் சுடர்விடாது ப10னைக்கு மட்டும் சொந்தமாகி போனதோ? நம்பிக்கை உணர்வுகள் நடுவழியில் நலிந்து போகிறது. ஒவ்வொரு கால் பதிவுகளும் தடுமாற்றத் தடங்களாக பதிகின்றன.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் அம்மா என் பண்ணில் எத்துப்பட்டா. . . இந்த நிலா முகம் கருமுகிலுக்குள் காணாமல் போய்ää வெளிச்சத்திற்கு வரும் தூரம். தொடும் தூரமா. . .? தொலை தூரமா. . .? அம்மா. . . வாழ்வின் சுகம் என்பதே இல்லாமல் போராடி போராடி அலுத்துப்போய். . . நம்பிக்கை மட்டும் உறைநிலைப் படலமாய் எப்போது உருக நிலையாகுமோ. . . புத்தகக் கட்டை தோளிலிருந்து கீழே இறக்கி வைத்துவிட்டு அம்மாவுக்குப் பக்கத்தில் இருந்த ‘மரவள்ள்pக் கிழங்குள்ள சிரட்டையை’ தூக்கிப் பார்த்தேன். ஒரு முறிக்கிழக்கில் யாரோ பாதி சாப்பிட்டபடி இருந்தது. ‘அம்மா யாரெணை பாதிக் கிழங்கு சாப்பிட்டது?’ நீ கத்துவாய் என்று சொல்லவும் கேட்காமல் அவன் தான் மூத்தவன் எடுத்துட்டு ஓடிவிட்டான். நான் வந்த பசிக்கு இதாவது கிடைத்திட்டு என்று நினைத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்கினேன். ஒரு பாதி சாப்பிட்ட பின்னர் அம்மாவை நிமிர்ந்து பார்த்தேன். அம்மா அவிச்ச கிழங்கு முடிஞ்சிதோ? இல்லையடா மோனை நான் ஒன்றும் செய்யல. . . அப் இது ஃ பக்கத்து வீட்டு ராசம்மாட்டை வாங்கினது. நீ பசியில வந்து கத்துவாய் என்பதற்காக. . . அப்ப ஒருதரும் சாப்படல்லையோ. . .!

இல்லை மோனை. . . சொல்லிக் கொண்டிருக்கும் போது கண்ணிலிருந்து கண்ணீர் கசிந்தது. தூணில் சாய்ந்து கொண்டிருந்த அம்மாää தலை சரிந்துகொண்டுவர அப்படியே கீழே விழுந்திட்டா. நான் ஒவென்று கத்திவிட்டேன். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரலெல்லாம் ஓடி வந்தார்கள். மயங்கிய நிலையிலிருந்த அம்மாவுக்கு தண்ணீர் தெளித்து எழுப்பினார்கள்.

மாமாவின் காட்டுச் சத்தம் என் நினைவைக் கலைத்தது. ‘இவர் என்ன ஊர்ச் சண்டியன் என்ற நினைப்போ. ஒருவாய் சதையில்லை அதுக்குள்ள அவருடைய நினைப்பு’ என்று மனதிற்குள் முனகினேன். மாமா பெரிய சத்தமாக ‘மூத்தது உன்ர பிள்ளைக்கு கட்டிக் குடுக்க எனக்கு விசரே. . . என்ர பிள்ளை ராசாத்தி போல இந்த கல்வீட்டில் கட்டிலில் படுக்கிறவளுக்கு உன்ர ஒழுக்கு வீட்டிலேää கெலித்தோட்டிற்கும் வழியில்லாத உன்ர வீட்டிலை நான் என்ர புள்ளையை முடிச்சுக் குடுக்க என்ர தகுதி என்னாகிறது?
அப்பு படுத்திருக்கும் கட்டிலின் இரு பக்கத்திலும் மெழுகுதிp கொழுத்தினார்கள். சிந்து மெல்ல என்னைப் பார்த்தாள். அவளின் பார்வையில் தன்னுடைய ஐயா பேசியதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்பது போல் இருந்தது. அப்புவின் மூச்சு திடீரென நின்றுவிட்டது. மாமி உட்பட எல்லோரும் அழுதார்கள். வீட்டின் ‘இரும்புக் கேற்’ திறந்த சத்தம் என் காதில் விழுந்தது. திரும்பிப் பார்த்தேன். என்னுடைய ஐயாதான் கதவைத் திறந்து வாசலில் கால் வைப்பதற்குள். . . சோத்துக்கு வழியில்லாதவன் இப்பத்தான் வாறான் என்றார் மாமா. iயா ஒன்றும் பேசாமல் உள்ளே வந்தார்.

பிரேதம் அடக்கம் செய்துவிடடு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளையில் மனிதர்களை விழுங்கும் புத்தரின் பக்தர்கள் வான்வீதியில் வலம் வந்தார்கள். கோட்டையை பெடியள் பிடிக்கப் போறான்களாம் அதுதான் ஒரே வெடிச்சத்தமாக இருக்குது என்று ஊர்வலத்தில் வந்தவர்களி; ஒருவர் மற்றவர்களுக்குச் சொல்கிறார். கணப்பொழுதில் எல்லோரும் பொட்டலங்களோடு அடுத்த ஊர்களுக்கு செல்வதற்காக வீதியில் இறங்கினார்கள். ஓட்டை வீடுää கல்வீடுää மாடிவீடு என்ற வேறுபாடு மறந்து எல்லோரும் வீதிக்கு வந்துவிட்டார்கள்.

(முற்றும்)

No comments: