Pages

Wednesday, November 19, 2008

ஈழத்தின் இலக்கியச் சிற்றேடுகளின் வரலாற்றில் டானியல்அன்ரனியின்சமர்’|

எழுபதுகளின் பிற்பகுதியில் யாழ்ப்பாணம் நாவாந்துறையில் இருந்து வெளிவந்த இலக்கியச் சஞ்சிகை சமர். சமரின் ஆசிரியராக இருந்த டானியல் அன்ரனி தனது 47வது வயதில் 1994இல் சற்றும் எதிர்பாராத வகையில் காலமானார்.
அறுபதுகளின் கடைசிக் கூற்றில் சசி கிரு~;ணமூர்த்தி, ராதேயன், பாலகிரி, டானியல் அன்ரனி ஆகியோர் செம்மலர்என்னும் இலக்கிய வட்டத்தினை ஆரம்பித்தனர். இலக்கியக் கலந்துரையாடல்கள், நூல் விமர்சனங்கள் என இலக்கிய வட்டத்தின் செயற்பாடுகள் துடிப்புடன் நடந்தன.
டானியல் அன்ரனி இவ்விலக்கிய வட்டத்தின் தலைவர். அணு என்னும் சஞ்சிகையையும் இந்த இலக்கிய வட்டம் வெளியிட்டது. மூன்று இதழ்களுக்கு மேல் ஷஅணு வரவில்லை. செம்மலர் இலக்கிய வட்டமும் செயலிழந்து போனது.
அதன் பின் ஒரு பத்து ஆண்டு;ள் கழித்து ஷசமரை வெளியிடத் தொடங்கினார் அவர். ஜனவரி 1979இலிருந்து.
நவீன கலை இலக்கியம் மற்றும் மாக்சிஸ அழகியல் ஆகியவற்றை விஸ்தாரமாக வெளிப்படுத்தும், அறிமுகப்படுத்தும் ஒரு களமாகவே செயற்பட்டது சமர்.
பேராசிரியர் அமரர் கைலாசபதியின் குரலாகவும் முற்போக்கு இலக்கியப் பிரசாரத் தளமாகவுமே களம் இருந்தது.
அலை, மற்றும் மு.பொ. வில்வரத்தினம் போன்றவர்களின் கைலாசபதி எதிர்ப்புப் பிரசாரத்துக்கு எதிர் பிரசாரம் செய்வதே சமரின் முக்கிய நோக்கம் என்று சமர் வெளியீட்டின் பின்னணியில் இயங்குபவர் பேராசியரியர் கைலாசபதியே என்றும் அப்போது பேச்சுக்கள் அடிபட்டன.
ஷஷசமர்ஷ என்னும் தலைப்பும் இந்தப் போருக்கான ஆரம்பத்தின் அறிகுறியின் தொனியாகவும் இருக்கிறது. சமரின் ஆசிரியர் பகுதியான அதிர்வில் ஒவ்வொரு இதழிலும் வந்த செய்திகள் இந்த மேற்படி பேச்சுக்கள் உண்மையாகவும் இருக்கலாம் என்பதையே உணர்த்தின.
ஷஷமார்க்ஸின் கல்லறையிலிருந்து ஒரு குரல் கட்டரையின் மூலம் இலங்கையில் பரவலாக எழுதி வந்தவர் வெங்கட் சாமிநாதன். எழுத்தாளர்கள் எழுத்தைவிட எழுத்துக்குப் புறம்பான நடவடிக்கைகளை ஆராய்வதில் அக்கறை உள்ள விமர்சகர் மார்க்சிஸ்டுகளின் இலக்கியங்களை நிதர்சன்........ தாக்குவதன் மூலம் மலிவாக விளம்பரம் தேடி......
(அதிர்வுகள் - சமர் 3)
சிகரம் டிசம்பர் இதழில் அ. யேசுராசா.... கடிதம் வெளிவந்திருந்தது. அதன் இரு குறிப்புகளுக்கும் பதில் அளிப்பது அவசியம் எனக் கருதுகிறோம். மல்லிகை, சமர், இரண்டிலுமே கைலாசபதியின் கருத்துக்களை விமர்சிக்கும் வாய்ப்பில்லை. ஒருவித தனிநபர் வழிபாடு என்ற கருத்து ஒன்று.... மற்றது படைப்பு விமர்சனம் ஆகியவற்றில் ஆரோக்கியமானதோர் இலக்கியச் சூழல் இங்கு நிலவுவதாகக் கூறப்படுவது மாயையே என்பது கலாநிதிகள் ஆதிக்கம் என்று கைலாசபதி உட்பட பல விமர்சகர்கட்கு எதிரான காட்டித் தாக்குதலை மல்லிகை ஏற்கனவே அனுமதித்திருந்தது. இவ்வகையிலேயே மு. பொன்னம்பலம், மு. தளையசிங்கம் போன்றோரின் கருத்துக்களும் அவ்வப்போது வெளிவந்திருக்கின்றன..... (அதிர்வுகள் - சமர் 4)
.... இவர்களது சுயத்தை அம்பலப்படுத்துவதும் இவர்களது முரண்பாட்டின் அடிப்படையிலேயே உண்மைக் கலையை பிரபலப்படுத்துவதும் தனது முக்கிய பணியென சமர் ஏற்றுக் கொண்டது. (பார்வை - சமர் 5)
நின்று போனதாகக் கூறப்பட்ட ஆனாலும் முகம் காட்டத் தொடங்கியிருக்கிறது. அக் கட்டுரையைக் காட்டக் கூடாது என்றதுடன் கட்டுரையை சமருக்கு அனுப்பிய ஷஷஇவர்கள் எல்லாம் அயோக்கியர், கைப்பந்தங்கள் என்பது போன்ற கருத்துப்பதிவு சஞ்சிகை சிகரத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர். தனத்தை எந்த சஞ்சிகை ஆசிரியனால்தான் கொள்ள முடியும்... (அதிர்வுகள் - சமர்5)
ஜனவரி 79இலிருந்து மார்ச் 90 வரை இதழ்கள் வெளிவந்துள்ளன.
மட்டுவில்லைச் சேர்ந்த ஓவியர் கோ. கைலாசநாதனின் ஓவியங்கள் பெரும்பாலான சமரின் அட்டைகளை அலங்கரித்தன.
டானியல் அன்ரனியின் ஷவலை என்னும் சிறுகதை தொகுதிக்கும் கைலாசநாதனே அட்டைப்பட ஓவியம் வரைந்துள்ளார் என்றாலும் அது ஏனோ எடுபடவில்லை.
ஈழத்தின் இலக்கியச் சிற்றேடுகளின் வரலாற்றில் ஷஷசமரின்ஷ வருகையும் செயற்பாடும் குறித்து வைக்கப்பட வேண்டியதற்கான நிர்ப்பந்தத்தை தருவது சமரின் கனதியான கட்டுரைகளே.
முற்போக்கு இலக்கியமும் அழகியல் பிரச்சினைகளும் - கைலாசபதி
தமிழ் நாவல்களில் மனித உரிமை மக்கள் போராட்டமும் - கைலாசபதி
ஷஈழத்து இலக்கியமும் இடதுசாரி அரசியல் - சித்திரலேகா மௌனகுரு
சிங்கள சினிமா 70 - 80 நம்பிக்கை பத்து ஆண்டுகள் - ரெஜி சிரிவர்த்தனா
ஈழத்துப் புனைகதைகளில் சமுதாய மரபும் பேச்சு மொழி வழக்கும் - சி. வன்னியகுலம்
திரைக்கதை எழுதும் கலை கட்டுரை - திஸ்ஸ அபயசேகர. தமிழில் கே. லிங்கம்
சாதி அமைப்பும் இலங்கைத் தமிழர்களுக்கு வ.ஐ.ச. செயபாலன். இன்னும் சசி கிரு~;ண மூர்த்தி: மிர்னாள் சென்: முருகயைன்.... சமுத்திரன் சோ. கிரு~;ணராஜா, கே. சிவகுமரன்... கோ. கேதாரநாதன் என்று கட்டுரைகள் தொடர்கின்றன.
கவிதைகளும், சிறுகதைகளும் கூட சமரின் பிரசன்னத்தை பிரதானப்படுத்துகின்றன. மாத்தளை வடிவேலன், சாந்தன்: எம்.ஏ.நுஃமான். ஆனந்தமயில் சி. சுதந்திரராஜா ஆகியோரது சிறுகதைகளும் சமரில் பிரசுரம் பெற்ற நல்ல கதைகள்.