Pages

Thursday, April 27, 2006

வெற்றுக் காகிதங்கள் நாவாந்துறைடானியல்அன்ரனிஉள்ளே வந்தான். வீடு முழுவதும் ஒரே இருள். பொிய அறையின் வாசல் நிலைப்படிக்கு மேலாக தொிந்த வெளிக்கூடாக உள்ளே எாிந்து கொண்டிருந்த 'அாிக்கன் லாம்பின் ' மெல்லிய வெளிச்சம் மாத்திரம் மங்கலாக வெளி விறாந்தைக்கு நிழல் விழுத்தியது.முற்றத்தில் நிற்கும் முருங்கை மரத்துடன் சின்னவன் கட்டிப்போட்ட 'கறுவல் ' ஆள் அரவம் கேட்டதும் விறுக்கென்று எழுந்து கால்கள் இரண்டையும் அகட்டி உடம்பைச் சிலிர்த்து சோம்பல் முறித்துக்கொண்டே ஆக்ரோசத்துடன் குரல் எழுப்பியபடி அங்கும் இங்குமாக ஓடியது.அவன் மெதுவாக அதன் வழுவழுப்பான முதுகுப் புறத்தைத் தடவிக் கொடுத்து விறாந்தைக்கு வந்தான்.பொிய அறையில் அம்மா, மூத்த தங்கைகள், சின்னஞ்சிறுசுகள் சிலவும் படுத்துக் கொள்ளுவார்கள். தந்தையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்தால்தான் நித்திரை கொள்வேன் என்று அடம்பிடிக்கும் சின்னவன், வழமைக்கு மாறாக இன்று உள் அறையில். அவனுடைய விசும்பல் விட்டுவிட்டு உள்ளே கேட்டது. படுத்த பாயிலேயே சலம் பெய்துவிட்டதற்காக அம்மா சற்று நேரத்திற்கு முன் அவனை அடித்திருக்க வேண்டும்.சாருக்குள் விாித்துக்கிடந்த ஓலைத் தடுக்கில் அவனுடைய தந்தை தான் படுத்துக் கிடந்தார். குறட்டைச் சத்தம் பலமாகக் கேட்டாலும் அவர் அயர்ந்து தூங்குகிறார் என்று சொல்லிவிட முடியாது. சின்ன அரவம் கேட்டாலும் 'பேய் பிசாசைக் ' கண்டவர் போல திடுமென விழித்தெழுந்து விடும் சுபாவம் அவருக்கு.தகப்பனை நினைத்தால் இவனுக்கு இப்பொழுதும் பயம்தான். இவனுக்கு அம்மாவை எப்படியாவது அரட்டிச் சாப்பாடு கேட்கவேண்டும். அம்மாவை அரட்டும் சத்தத்திலே தகப்பனும் எழுந்து விட்டால் பிறகு என்ன, ஒரே புறு புறுப்புத்தான்.'சும்மா இருந்து தின்னுறதும் பத்தாமல் எங்கேயோ ஊர் சுத்திப்போட்டு ஏமஞ் சாமத்தில வந்து இஞ்ச விடியப்புறம் தொழிலுக்குப் போறதுகளட நித்திரையையும் குழப்புறான் '.தந்தையின் பேச்சுக்களை கேட்கும் போது கோபம் கோபமாக வரும். அவமானத்தால் உடம்பெல்லாம் கூசும். வீட்டைவிட்டு எங்கே யாவது ஓடிப்போகவேண்டும்போல ரோசம் வரும். பிறகு ஆறுதலாக இருந்து தனிமையில் சிந்தித்துப் பார்க்கும்போது அவர் சொல்லுவதிலும் கூட நியாயம் இருப்பதுபோல் தென்படும்.இருபத்தைந்தைக் கடந்தும் படிப்பையும் தொடரமுடியாமல் வேலையைத் தேடிக் கொள்கிற சாமார்த்தியமும் இல்லாத குடும்பத் திற்கு மூத்தபிள்ளையைப் பற்றி முழுக் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ள தந்தை இப்படி அலுத்துக்கொள் வதில் தவறில்லை என்று தனக்குள்ளேயே மனதைத் தேற்றிக்கொள்வான்.மற்றவர்களின் உழைப்பில் நின்று கொண்டிருக்க இவனுக்கும் வெட்கமாகத்தான் இருந்தது. அதற்காக அவன்தான் என்ன செய்வான்!அவனிடமும் தான் 'பைல் ' நிறைந்த 'சேட்டுவிக்கற் 'றுகள், வேலை யாராவது கொடுக்க வேண்டுமே! யாரையாவது பிடித்து 'சாிக்கட்டி ' காாியம் பார்க்கலாம் என்றால் கையில் மூவாயிரம் வேண்டும் என்று சொல்கிறார்கள்.கையில் மூவாயிரம் இருந்தால் மூத்த தங்கையின் கல்யாணம் இரண்டு வருசத்துக்கு மேல் இழுபட்டுக்கொண்டு கிடக்குமா ?வயிறு பிசைந்தது. பசியினால் விண்.... விண்.... என்று இரைந்தது. பொிய அறைக்கதவு அண்டை சென்றான். மூத்தவள் ராணியை எழுப்பலாம் என்று முதலில் நினைத்தான். அவளை இலகுவில் எழுப்பிவிட முடியாது. அவள் எழும்புவதற்கு முதல் தகப்பனே எழுந்து வந்து விடுவார். அம்மாவை எழுப்புவதுதான் இலகுவான காாியம்.'அம்மா....அம்மா....அம்மா 'மெதுவாக வாசலில் நின்றபடி கூப்பிட்டான். உள் அறையில் சில நிமிடங்கள் வரை எந்தவித சலனமும் இல்லை. கதவை லேசாகத் தட்டிக்கொண்டே மறுபடியும் குரல் கொடுத்தான். உள்ளே யாரோ அரண்டு எழும் சலனம். அதைத்தொடர்ந்து அம்மாவின் அடைத்த குரல்.'புள்ள....புள்ள....தங்கச்சி, அண்ணன் வந்து நிக்கிறான் போல இருக்கு. எழும்பிப் போய் சோத்தைப் போட்டுக் கொடு '.'போண எனக்கு அலுப்பாயிருக்கு.... சும்மா எல்லாத்துக்கும் என்னத்தான் இந்த மனுசி முறிக்குது. அங்க அவள் மெள்ள பிரண்டு கிடக்கிறாள். அவளை அரட்டிச் சொல்லன் ' இது ராணியின் குரல்.'எழும்படி. அவள் இப்பதான் வீடி இல வெட்டிப்போட்டு அலுப்பில கிடக்கிறாள். அங்க அந்த இளந்தாாி எவ்வளவு நேரமாகக் காத்துக் கொண்டு நிக்கிறான். எழும்படி. சுனங்கல் '.தங்கை ராணி அலுப்புடன் அம்மாவைத் திட்டிக்கொண்டே லாம்புடன் வெளியே வந்தாள். அவள் கண்களில் நித்திரையின் அழுத்தம். நாள் முழுவதும் வீட்டு வேலைகள் செய்து அலுத்துப்போன சோர்வு முகத்தில்.இவன் தந்தையின் படுக்கையைத் திரும்பிப்பார்க்கிறான். அவர் மறுபக்கம் புரண்டு படுத்துக்கொள்கிறார்.'பாவம் மனுசன். இனி நடுச்சாமத்தில் எழும்பிப்போய் நித்திரை முழிச்சு தூண்டலுக்கு கிடந்துபோட்டு விடிய பஞ்சி அலுப்பில வாறவர். 'அவன் எழுந்துபோய் கைகளை நீாில் நனைத்துக்கொண்டு குசினிக்குள் சென்று மரப் பலகையில் குந்திக்கொண்டான்.ராணி சோற்றைக் கோப்பையில் போட்டுக்கொடுத்துவிட்டு கிணற்றடிப் பக்கம் இருந்த குடத்தில் தண்ணீர் வார்த்து வரச்சென்று விட்டாள்.முதல்படியை பிசைந்து வாயில் திணித்துக்கொள்ளப்போனபோதுதான் முதல் நாள் இரவு இவனும் நண்பன் யோசப்பும் போய் பார்த்து வந்த 'வல்மத்துவ ' சிங்கள சினிமாப் படத்தின் காட்சிகள் ஒன்றின்பின் ஒன்றாக மனதில் நெருங்கியடித்துக்கொண்டு வந்தன.வேலையற்ற பட்டதாாி நண்பர்கள், அவர்கள் கிராமத்தில் படும் க~;டங்கள். முகம் கொடுக்கும் பிரச்சினைகள்.நிலச்சுவாந்தாரன் ஒருவனின் கபடத் தனமான கொடுமையினால் சொந்த நிலத்தைப் பறிகொடுக்கும் அந்த ஏழை வாலிபனின் குடும்பம், தட்டிக்கேட்கச்சென்ற வாலிபன் இறுதியில் துப்பாக்கிவேட்டுக்குப்பலியாகி மடியும் அந்தக் கொடூரமான இரத்தத்தை உறைய வைக்கும் காட்சி....இறுதியில் எாியும் அவனுடைய சிதைக்கு முன்னால் அழுது புலம்பும் வயோதிபத்தாயின் ஆறாத்துயர்! 'சை, என்ன கொடுமை '.அவன் இதயத்தில் அவனை அறியாமலே ஒர் அந்தாிப்பு கண்களில் நீர்க் கசிவு. கூடவே எழுந்த பழி உணர்வு. இத்தனை கொடுமைகள் மலிந்த சமூகமா ?'அண்ண, அம்மானும் மாமியும் கொஞ்ச நேரத்துக்கு முன்னால வீட்ட வந்திற்றுப் போயினம் '. வெகு நேரமாய்த் தலை குனிந்தபடி கோப்பையிலிருந்த சோற்றையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அவன் தலையை நிமிர்த்திப் பார்த்தான்.ராணி தன் எதிரே பலகையில் இருந்த இவனையே வெகுநேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கேட்பது கூட இவன் காதுகளில் சாியாக விழவில்லை.'என்ன ராணி கேட்டனி ? ''அம்மானும் மாமியும் வீட்ட வந்திற்றுப் போயினம். இந்த ஆவணிக்குள்ள கல்யா ணத்தைச் செய்து போடட்டாம்.'அப்புவும் அம்மாவும் அதுக்கு என்ன சொன்னவியள் '.இவன் அப்படிக்கேட்டதும் ராணி தலையைக் குனிந்துகொண்டாள். அவள் கை விறகுச்சுள்ளி ஒன்றை எடுத்து நிலத்தில் ஏதோ கிறுக்கிக்கொண்டிருந்தது.மூத்தவனுக்கு வேலை கிடைச்சதுக்குப் பிறகுதான் கலியாணத்தைப் பற்றி யோசிக் கலாம் எண்டு சொல்லிப்போட்டினம்.'அதுக்கு அம்மான் ஆக்கள் என்ன சொல்லிச்சினம் ? ''உனக்கு வேலைகிடைச்சு எனக்குச் சீதனக்காசு சம்பாதிக்கிறதுக்கிடையில் தங்கட மகன் மூண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனாப் போயிடுவாராம். வசதியில்லாட்டி வேறு இடத்தைப் பார்க்கச்சொல்லிப் போட்டுப் போயிற்றினம். ' அவள் குரல் அதற்கு மேல் பேச முடியாமல் தழுதழுத்தது.இவன் நெஞ்சுக்குழியில் ஏதோ சிக்கிக் கொண்டது. மூச்சு முட்டிக்கொண்டு வருவது போன்ற தவிப்பு. பக்கத்திலிருந்த செம்பிலிருந்து நீரை மடமடவெனக் குடித்துவிட்டு விறுக்கென்று எழுந்து விட்டான்.அதற்கு மேல் ஒரு பிடி சோறும் தொண்டைக்குள் மறுத்துவிட்டது. செம்பையும் தண்ணீரையும், எடுத்துக்கொண்டு கழுவு வதற்காக வெளியே வந்தான். சில கணங்கள் மெளனத்தால் கரைந்தன.'தங்கச்சி சாப்பிட்டிற்றியா.... ''ஓம் .... ''பொய் சொல்லாத.... ''ஓம் அண்ணா, சோறு தண்ணியுக்குள்ள போட்டு பினாட்டோட குடிச்சனாங்க. ''அம்மா சாப்பிட்டாவா. ''ஓம்.... ''இவன் தம்பி எங்க ? படுக்கையில் காணோம். நாளைக்கு சோதனையில்ல தொடங்குது. ''ஓம் அண்ண, அவன் பள்ளிக்கூடத்தால பின்னேரம் வந்தான். நாளைக்கு ஆரோ மந்திாி மார் கொழும்பில் இருந்து புதுசாக்கட்டின கட்டிடத்தைத் திறக்க வருவினாமாம் எண்டு சொல்லிக்கொண்டு நின்றவன், பிறகு ஆரோ பெடியளோட சைக்கிளில கூடிக்கொண்டு போறான். மத்தியானமும் சாப்பிட வரயில்ல. 'தம்பியின் போக்கும் இவனுக்குப் பிடிபட வில்லை. எதற்கு எடுத்தாலும் நியாயம் பேசு வான். ஏதேதோ கூட்டங்களுக்கெல்லாம் போய் வருவதாக ஊாில் உள்ள பலர் இவனிடம் கூறியிருக்கின்றனர். படிப்பிலும் முன்பு போல் அக்கறையில்லை. வீட்டிலும் அதிகம் தங்கு வதில்லை.இவன் மனதில் பெரும் குழப்பம். நம்பிக்கைகள் தீர்ந்துபோன ஆற்றாமையினால் மனதை அழுத்திக்கொண்டிருந்த துயரங்கள் தூக்கத்தைத் துரத்தி அடித்தன.அறையைத் திறந்துகொண்டு உள்ளே போய்விட்டான்.அன்று பெளர்ணமி கழிந்து மூன்றாம் நாள். நிலவு அப்பொழுதுதான் காலித்துக் கொண்டு வந்தது. இதமாக வீசிக்கொண்டிருந்த சீதளக் காற்றின் சிலுசிலுப்பில் கிணற்றடிப் பக்கம் நிற்கும் நெல்லி மரத்திலிருந்து இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன.எங்கேயோ வீட்டிலிருந்து யாரோ ஒருவன் உச்ச சுதியில் நாட்டுக்கூத்துப் பாட்டைப் பாடுகிறான். தகரப்பேணி மிருதங்கமாக முழங்குகிறது.இரண்டாவது சினிமாக் காட்சி பார்த்து விட்டு வீதியால் செல்வோாின் ஆரவாரங்கள், விமர்சனங்கள். அதிர் வெடிச் சிாிப்புக்கள். அவையும் அடங்கின.படுக்கையைத் தட்டிப் போட்டு அலுப்புடன் சாய்ந்துகொண்டு சில கணங்கள் தூங்குவதற்கான போராட்டம். படலை திறக்கும் சத்தம் கேட்டது. இவனுடைய தம்பிதான் வியர்த்து விறுவிறுக்க வந்து கொண்டிருந்தான். அவனுடைய கைகளில் சுருட்டப்படட போஸ்டர்கள். தகரப் பேணி, பிறஸ்....காகிதச் சுருள்களை அவசரமாக மூலையில் எறிந்து விட்டு கிணற்றடிப்பக்கம் சென்று நீரைவார்த்து கைகளை அழுத்தி உழக்கி கழுவிக்கொண்டிருந்தான்.கைகளில் இரத்த நிறத்தில் சாயம் நீருடன் கழுவுண்டு நிலத்தில் மண்ணுடன் கலந்து செந்நிறமாகி....அவன் படுக்கையிலிருந்து விறுக்கென்று எழுந்துபோய் காகிதச் சுருள்களை எடுத்து விாித்து ஒவ்வொன்றாக விளக்கு வெளிச்சத்தில் படித்துப்படித்துப் பார்த்தான்.'முதலாளித்துவக்கல்வி முறை முற்றாக ஒழிய வேண்டும். ''வெற்றுக்காகிதங்கள் வேலை தருமா ? ''தரப்படுத்துதல், இன ஒடுக்குதல். 'அவன் மனம் அந்த வெள்ளைத் தாள்களில் சிவப்பு எழுத்தில் பளிச்செனத்தொிந்த வாக்கியங்களின் அர்த்தங்களை முதல் முறையாக பிாியத்துடன் நினைத்துப் பார்க்கின்றது.இவன் சுமந்த வெற்றுக்காகிதங்கள், வீணான நாட்கள், 'சின்னத்தனமான ' அரசியல்வாதிகளின் பின்னே விவஸ்தை கெட்டு அலைந்துதிாிந்த அந்த நாட்கள். கசப்பான மாத்திரையை விழுங்கிக்கொண்டவன் போல் முகத்தைச் சுளித்துக் கொண்டான்.இந்த சமூகத்தை, வாழ்க்கையை, இந்தத் தேசத்தை அவனுக்கு முன்பே பூிந்துகொண்டுவிட்ட இவன் தம்பி இவனுக்கு இன்னும் புதிரானவனா....!தம்பி கிணற்றடியிலிருந்து கை கால்களைத் துடைத்துக் கொண்டே நிமிர்ந்து எழுந்தான். இவன் காகிதக் கட்டுக்களுடன் நின்று அவனை உற்றுப் பார்ப்பதை அவதானித்து விட்டவனாய் கொல்லைப்புறமாக மெதுவாக நகா;ந்தான்.முற்றத்தில் தந்தையின் மரக்கோல், சவள் பலகை, பறி.... நீர் கோலும் பட்டை....தங்கூசிப் பெட்டி.'இந்த ஆவணிக்கு தங்கச்சியின் கல்யாணத்தை எப்படியாவது முடிச்சுப் போடவேணும் '.அவன் அந்த நினைப்பிலிருந்து விடுபடவில்லை. ஒரு கணப்பொறிதான். தெரு நாய்கள் பலத்த சத்தத்துடன் குரைத்தன. அடங்கிப் போயிருந்த வெளிப்புற ஓசைகள், சனங்களின் விழிப்பும், நடமாட்டமும், ஒடுங்கிய குரல்களும் இவனைத் திடுக்கிட வைத்தன....தெற்குத் தெருவால் உறுமிக் கொண்டு வந்த ஜீப் ஒன்று படலைக்கு முன்னே 'சடின் பிறேக் 'குடன் நின்றது. ஜீப்பிலிருந்து 'தாம்தீம் ' என்று பூட்ஸ் கால்கள் நிலத்தில் குதித்தன. படலை திடாரெனத் திறந்தது.இரண்டு காக்கிச் சட்டைகள் முன்னே பாய்ந்து இவனைப் போஸ்டர்களுடன் இறுகப் பற்றிப்பிடித்துக் கொண்டன. பிடாியில் ஒருத்தனின் அ;டி ஓங்கி இறங்கியது. இரும்புக்குண்டால் அடித்தது போல். இன்னொருவனின் சப்பாத்துக்கால் சினத்துடன் முகத்தில் பதிந்தது. தாடையிலும், மூக்கிலும் வெடிப்பு. இரத்தம் கசிந்தது, நிலத்தில் முத்தமிட்டு எழுந்த அவன் முகத்தில் இரத்தத்துடன் அந்த மண்ணும் அப்பிக்கொண்டது.தரதரவென இழுத்துக் கொண்டு போய் ஜீப்பில் இவனை எறிந்தார்கள். உள்ளே இருந்தவர்களின் பூட்ஸ் கால்களுக் கிடையில் முகம் கவிழ்ந்து வீழ்ந்தான். 'போஸ்டர் ஒட்டுறது ? வடுவா றாஸ்கல்! செம்மையாகச் சாத்தினால் தான் திருந்துவீங்கள் '.தமிழ்க் குரல் உள்ளே இருந்து ஒலித்தது. இவன் மெல்ல எழுந்து 'அம்மா.... ' என முனகிக்கொண்டே இருக்கையில் அமர முயற்சித்தான். ஜீப் வண்டி வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. தூரத்தில் வீட்டோாின் அவலக்குரல்கள் கேட்டன. இப்போது நன்றாக உள்ளே இருந்தவர்களைப் பார்க்க முடிந்தது. சில முகங்கள் வீதிகளில் கண்டவை, உதட்டிலும், தாடையிலும் வழிந்துகொண்டிருந்த இரத்தத்தைக் கையால் அழுத்தித் துடைத்தான். இப்போது வீதியை நன்றாகப் பார்க்க முடிந்தது. நிலவு வெளிச்சத்தில் மதில் சுவர்களில் சிவப்பு மையினால் எழுதப்பட்ட சுலோகங்கள் பளிச்செனத் தொிந்தன. போஸ்டர்களும் தொிந்தன.இவன் தம்பியை நினைத்துக்கொண்டான். அந்த வேதனைக்குள்ளும் கூடவே சிாிப்பு வந்தது.(முற்றும்)

Wednesday, April 26, 2006

உன்னில் உறைந்து போனேன் நாவாந்துறைடானியல்ஜீவா -


ஊசிக் குளிர்
வந்தென்னை
உரசித் தாக்க
உறை நிலைப் படலமாய்
நீ எந்தன்
நெஞ்சில்..

வாழ்வு
வறுமையின்
கரு முகிலாய்
உன் திருவுருவம்
மனத்திரையில்
தோன்றும் வேளை...
வெண்ணிலவாய் மாறும்
இடுப்புடைய
இடர்வந்து
நொகுமெந்தன்
மெய்யில்
என் நிழல் பார்க்க
எனக்கேது நேரம்....
இன்னும்
எனக்குள்
உன் வாசனை...
நீயும் நானும்
வெயில் சாய
வீதியில் நடந்தோம்.
கவிதையில்
பகிடி பண்ண
காற்றோடு உன் சிரிப்புதிர
எச்சி முறிகள்
என் முகத்திற்கு
சொந்தமாகும....
குளிர் காற்றும்
கொழுத்தும் வெயிலும்
கவி சொல்லும்
கனத்த மழையும்
நம் மகிழ்விற்காய்
வசப்படுத்தினோம்
வெள்ளம் வர முன்
வள்ளம் கரை சேரும்;
வீடு வந்ததும்
உன் தெருவுக்கு
ஓடி வருவேன்.
காற்றில்
கடிப்புதற
சாதாளையோடு
சுங்கான் மீன் கிடந்து
சுள்ளென்று குத்த
உன் புன்னகையை
ஒரு கணம் நினைத்தால்
விண்ணென்ற நோவெல்லாம்
விரல்களிருந்து
விடுதலையாகும்
அன்றொரு நாள்
பின்னிரவும்
பேசாமல்
புலர்ந்துபோனது.
உன் வரவிற்காக
என் உயிர்த்தீ
உருக்குலைந்து
காத்துக்கிடந்தது.
தொடும் தூரம்
நின்ற நீ
இன்று
நெடும் தூரம்
சென்று விட்டாய்
நீ நினைத்தாலே
உன் வேலிச்சிறகு
விாிந்து கொடுக்க
காதல் உட்புகுந்து
உள் சதைவரை பாயும்
நானோ
ஒரு மழையின்
வருகைக்காக
வெண் பனித் தூறலில்
காத்துக்கிடக்கிறேன்
ஆயினும்
உன் உதடு தந்த
ஈரத்தை
எப்படி உலர வைக்கமுடியும்.

Monday, April 24, 2006

பனிநிலா நாவாந்துறைடானியல்ஜீவா
போன வருசம் இதே நாளில் தான் கலா கனடா வந்ததாக அவளுக்கு நினைவு. கலா ஏதோ கப்பல் கவுண்டது போல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். மனமெல்லாம் புண்னாய் வேதனை கொத்திக் கிழித்தது. சோபாவில் இருந்து தொலைக்காட்சியில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த கலா நாடகம் முடிந்தது கூட தெரியாமல் முன் விறாந்தையின் பக்கமாக உள்ள கண்ணாடியினுடே வெளியே கண்வெட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள்.
வானம் மூடு பனியால் போர்த்திக் கிடந்தது. வெண் பனித்திவலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன. அங்கும் இங்குமாய் மனிதர்களின் நடமாட்டம். நிலவு போன்ற மலர் முகத்தில் எப்படி கருமேகம் குடிகொண்டது ?
அவள் எப்படி ஒரு மனநிலையில் இருக்க முடியும் ?
கணவன் வெளியில் போய் விட்டார். கலாவின் மாமன் முன்னறையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாமாவைப் பற்றிய கவலைதான் கலாவுக்கு அதிகம். போன வருடம் இதே நாள் தான் இரவு பதினொருமணி அளவில் ரொரண்டோ விமான நிலையத்தில் வந்திறங்கினதிலிருந்து அவள் மனதை ஓர் ஆயிரம் நினைவுகள் அரித்துக்கொணகின்றன.
சொர்க்க பூமி என்று சுகம் தேடி வந்தவளா ? இல்லை சொந்தம் விடுபட்டுப் போகக் கூடாது என்பதற்காக வந்தவளா ?அல்லது இந்த நிலைக்கு அப்படி அவள் மாற்றப்பட்டாளா ?
விழி நீரைத் துடைத்தாள். எல்லாமே இழந்ததாக அவள் நினைக்கவில்லை. வாய்விட்டு அழுவதற்குக் கூட நாதி அற்ற நாடாய்ப் போய்விட்டதே என்பதை நினைக்கும் போதே அவள் மனதை கவலை நிறைக்கின்றது.
ஒரு வருடத்திற்கு முன் ஒரு நாள். . . .
“கலோ நான் கனடாவில் இருந்து கலாவின்ர மாமி கதைக்கிறன். ஒருக்காள் என்ர மருமோள் கலாவோட கதைக்கலாமா ?”
மறுமுனையில் இருந்து....
“ஐயோ அக்கா! அவ இவ்வளவு நேரம் நீங்க எடுப்பீங்க எண்டு இருந்திட்டு இப்ப தான் போறாங்க.
வேணுமெண்டா இன்னொரு அரை மணித்தியாலத்தால எடுப்பீங்கெண்டால் நான் அவவ கூப்பிட்டு விடுறன்.”
“ஓம் பிள்ள பிரச்சினை இல்ல நான் அரை மணித்தியாலம் கழிச்சு எடுக்கிறன். என்று சொல்லிக் கொண்டு ரிசீவரை வைத்தாள்.”
“அம்மா என்னவாமென ?” சுரேன் கேட்டான்.
“அவ இருந்துட்டு போய்ட்டாவாம். அவ்வளவு பொறுமையில்லாதவள் என்ணெண்டு தான் இங்க வந்து சமாளிக்கப் போறாளோ தெரியேல்ல ? உம். . . உம் என்ன செய்யிறது என்ர அண்ணையின்ர மகளாப் போய்ற்று எண்டு தான் சின்ன வயசிலேயே அவருக்கு சொல்லி வைச்சனான். இப்ப என்ன கேட்டுக்கொண்டிருக்கிறார். சரி போனா போகுதெண்டு அண்ணன்ர மகள் தானே எண்டு நினைச்சு உனக்கு கட்டிக் கொடுத்து விடலாமென்டால் கொஞ்ச கூட பொறுமை யில்லாதவளாய் இருக்கிறாளே இனி அரை மணித்தியாலயம் கழிச்சு எடுக்க வேண்டும். என்ன செய்யிறது என்ர தலை விதி.”
சுரேன் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு நின்றான். மாணிக்கத்தின் கண்கள் அகள விரிந்தன.
“அம்மா பிள்ளையாச்சே கேட்கத் தானே வேணும்”எண்டு.மாணிக்கம் முனுமுனுத்தான்.
கோபத்தை உள்வாங்கிய முகத்தோடு மாணிக்கம் மனைவியையும் சுரேனையும் ஒரு பார்வை பார்த்து விட்டு;
“எடி ராசாத்தி நீ சொன்ன நேரத்திற்கு அந்தப் பிள்ளை வந்துதானே நிண்டது. நீ வீட்ட நேரத்தோட வராதது உன்ர பிழைதானே ? அதை விட்டுட்டுஅந்தப்பிள்ளையபேசிக்கொண்டிருக்கிறாய”
என்றுமாணிக்கம் சொன்னார்.
அடர்த்தியான மெளனம்.... உள்ளுக்குள் மனப்புழுக்கம் பிசுபிசுத்தது. உப்புச் சப்பில்லாத வாழ்வில் உண்டு உறங்கியதை விட மிஞ்சி இருப்பது மூன்று பிள்ளைகள் தான் மாணிக்கத்திற்கு. மூத்தவன் சுரேன். இளையவன் ரமேஷ். கடைக்குட்டி கவிதா. எந்த வகையிலும் மாணிக்கத்தை மதிக்காத மனைவி இராசாத்தியுடன் இணைந்து வாழ்ந்ததில் கிடைத்த சுகம் இந்த மூன்று பிள்ளைகளோடும் சிரித்து வாழ்வதில் தான்.
கோபம் கலந்த பார்வையோடு இராசாத்தி....
“நீ சும்மா இரும். உனக்கு என்ன தெரியும் தமிழ்க் கடையில மீன் வெட்டப் போறதும் வந்து தூங்கிறதும் தானே உன்ர வேலை. வீட்டில என்ன நடக்குது ஏது நடக்குது என்டு உனக்குத் தெரியப் போகுதா... ?
“ஏன்டி நீ தானே எல்லாத்தையும் தலையில தூக்கி வைத்துக் கொண்டு இருக்கிறாய். என்னெட்ட காசு வைத்திருக்க விடுறியா ? எல்லாப் பொறுப்பையும் நீ தான் என்று எடுத்துக் கொண்டிட்டாய். பிறகென்ன கதைக்கிற. மீன் கடைக்கு வேலைக்குப் போற சம்பளம் மாதம் முடிய உன்ர கையிலேயே கொடுக்க வேண்டும். வெல்வெயார் காசு உன்ர கையில் தான் இருக்க வேண்டும். அதுவும் போதாமல் அவன் சுரேனின் சம்பளக் காசையும் வாங்கி வைக்கிறாய் எப்ப பார்த்தாலும் பஞ்சம் கொட்டிக் கொண்டு தான் இருக்கிறாய். திரும்ப என்னண்டு வீட்டு விசயத்தில் நான் தலை போடுறது நீ விட்டாத் தானே.
“இந்தாளோடு கதைச்சாள் நம்ம வாய்தான் உழையும். பேசாமல் இருந்திட்டால் பிரச்சினை இல்லை” எண்டு முனுமுனுத்தபடி இராசாத்தி சோபாவில் உட்கார்ந்தாள்.
“சுரேன்! ஒரு கோப்பி ஒண்டு போடு மோன” என்று சுரேனைப் பார்த்து இராசாத்தி சொன்னாள். சுரேன் குசினிப் பக்கமாகப் போனாள்.
“ஏன்டி இராசாத்தி நீ போட்டா என்ன குறைஞ்சா போய்யிடுவ..”. கொஞ்சம் அதட்டல் கலந்த தொனியில் மாணிக்கம் கேட்டார்.
“நான் வெளியில போற்று வந்த களையில இருக்கிறன்....”
“அப்ப சுரேனும் தானே உன்னோட வெளியில போய்ட்டு வந்தவன். அவன் தானே காரும் ஓடி வந்தவன். இதில இருக்கிற வெல்வெயார் ஒப்பீசுக்கு போய்ட்டு வந்தது உனக்கு களைப்பாய்ப் போய்ற்றுதோ.”
“பேசாமல் இரு.விசர்க் கதை கதைககாமல்”. என்று இராசாத்தி வெட்டொண்டு துண்டாய் வார்த்தைகளை போட்டாள்.
“அம்மா இந்தான கோப்பி” என்று சொல்லிக் கொண்டு இராசாத்திக்கு முன்னாள் நின்றான் சுரேன்.
“அம்மாவுக் ஏற்ற பிள்ளை” என்று ஒரு நளினம் கலந்த நக்கலாக மாணிக்கம் சொன்னார்.
மாணிக்கம் தலைக்கு மேலாக இருக்கின்ற சுவர்க் கடிகாரத்தை பார்த்துக் கொண்டு;
“எடிய இராசாத்தி அரை மணித்தியாலம் ஆகுதே எடென்ரி” என்றார்.
கதிரையில் இருந்த இராசாத்தி தொலைபேசிக்குப் பக்கமாய் போய் அதைக் கையில் எடுத்து நம்பரை அழுத்திளாள்.
“கலோ. . . நான் கனடாவில் இருந்து இராசாத்தி கதைக்கிறன். கலா வந்திட்டாங்களா ?”
மறுமுனையில் இருந்து....
“ஓம் வந்திட்டாங்க அவங்கிட்ட குடுக்குறன்க கதையுங்க.”
இராசாத்திக்குள் சூடு ஏறியது. எதையாவது மனசில் வைத்திருப்பது இராசாத்திக்குப் பழக்கம் இல்லை. சட்டென்று வரும் கோபத்தில் தன் நிதானத்தை இழந்து விடுவாள். பின் எப்போதும் தான் கோபப்பட்டதற்கான காரணத்தை உணர்ந்தாலும் அவள் அது பற்றி அக்கறைப் படுவதில்லை.
“யாரு கலாவா கதைக்கிறது.... ?”
வார்த்தை தீயாய்ப் பாய்ந்தது.
“நான் உன்ர மாமி இராசாத்தி கதைக்கிறன். எப்படி புள்ள சுகமாய் இருக்கிறியா ?” வார்த்தையை தேனாகக் கொடுத்தாள். எப்போதுமே அப்படித்தான் அவள் வார்த்தையை போடுவாள். இது இராசாத்தியின் கதையின் தந்திரம்.
“ஓமுங்கோ நீங்க எப்படி இருக்கிறியள் மாமி.. ? மாமா மச்சான் மச்சாள் எப்படி இருக்கினம் ?”
“ஓம் சுகமாய் இருக்கினம...புள்ள நான் முதல்ல எடுத்தனான். நீ வந்துட்டுப் போனதாக சொன்னவைய. கொஞ்சம் பொறுத்திருக்கக் கூடாதா ?” சூடேறியது வார்த்தையில்.
“மாமி நான் கனநேரம் காத்திருந்தனான். வீட்டுல சமைக்கிற நேரமாய்ச்சுதெண்டுதான்போனனான்.அம்மாவுக்குமுன்னமதிாி
ஓடியாடி வேலை செய்ய முடியாது தானே.கண்காணத தேசத்தில் போய் இருக்கப் போறாயே என்று நினைக்கத்தான் கவலையாய் இருக்கு எண்டு சொல்லிச் சொல்லி அழுவா.அவள் தங்கச்சியும் படிப்புப் படிப்பு எண்டு ஒரேயடியாத் திாியிறாள். நான் தானே வீட்டுல சமைக்க வேணும். அப்பாவுக்கு வேற அல்சர் இருக்கிறதாலா நேரத்திற்கு சமைத்துக் கொடுக்க வேண்டும். அப்பா தொழிலுக்குப் போய்ட்டு வரும்போது கிடைக்கின்ற மீன்சாதியில் சொஞ்சத்தை கொண்டு வருவார். இறால், ஏதேனும் மீன் பெரிதாகக் கிடைச்சுதெண்டால் குடாவிற்கு கொண்டு போய் விற்றுவிடுவார். சில வேளையில் குடாவிற்கு போகாமல் கிடைக்கிற மீன் சாதியை வீட்ட கொண்டு வருவார். நேரத்திற்கு சமைக்காவிட்டால் மீன் சிலநேரம் பழுதாய்ப் போய் விடும். அரிசிக்கு காசு இல்லையெண்டால் கிடக்கிற அரிசியைப் போட்டு புளிக் கஞ்சி குடிப்பம். இண்டைக்கு மீன் அப்பா கொண்டு வந்தவர். மீன் பழுதாய்ப் போய்விடும் எண்டதற்காகத் தான் காத்திருந்து விட்டு போய்டேன். மன்னிச்சுக் கொள்ளுங்க மாமி”
அவள் பேச்சில் இனிமை இருந்தாலும் வீட்டு வறுமை அப்படியே கொப்பளித்துக் கொண்டு வந்தது.
“சாப்புட்டாச்சா ? என்ன புள்ள இண்டைக்குச் சமையல் ?”
“புளிக் கஞ்சி தான் இண்டைக்கு காய்ச்சினது. அடுப்பில் இருந்து இறக்கிக் கொண்டிருக்கேக்க தான் இந்த வீட்டுக்கார புள்ள வந்து ரெலிபோன் வந்திருக்குது எண்டு சொன்னது. அதால குடிக்காமல் ஓடி வந்திட்டன்.”
“சரி புள்ள நான் சொன்னதெல்லாம் நினைவிருக்குதா ?”
“என்ன மாமி ?”
“இங்கிலிஷ் கிளாசுக்கும், கொம்பூட்டர் கிளாசுக்கும் போகச் சொன்னேனே மறந்திட்டாயா ?”
“நினைவிருக்குது மாமி....ஆனா படிக்கப் போறத்துக்கு காசு வேணுமே ? அன்றாடம் சாப்பாட்டுக்கே அப்பா நாயாய் அலைகிறார். அதுக்குள்ள படிப்புத் தேவை தானா ? ஓ எல் வரை அப்பா எப்படியோ படிப்பிச்சு விட்டார். அதுவே அவருக்கு சாகும் வரை நன்றியோடு நான் இருக்க வேண்டும்....”
அவ்வளவும் போதும் இராசாத்திக்கு மூக்குமுட்ட கோபம் வந்தது.
“சோத்துக்கு வழியில்லை எண்டாலும் கதையில உசத்தியாய் இருப்பீங்க உங்கட அப்பாவைப் போல...
சுரேணெட்டக் கொடுக்கிறன் கதை” எண்டு சுரேனிடம் ரிசிவரை இராசாத்தி கொடுத்தாள்.
வார்த்தைகள் தேளாய் குத்தியது கலாவுக்கு. சொல்லம்புகளால் சுக்குனுறாய்ப் போனாள். மனதில் சொற்கள் கீறிய வலி சொல்லெனாத் துயரமாய் ஆழ் மனதில் தேங்கியது.
“கலாவா எப்படி இருக்கிறாய் ?”
“அத்தான் நல்லா இருக்கிறன். நீங்க எப்படி இருக்கிறியள் ?”சந்தோஷத்தில் தவழ்ந்து வந்தது கலாவின் குரல்.
“நான் சுகமாய் இருக்கிறன்.”
“ஏன் அம்மா சூடா இருக்கிறா ?”
“அவங்க அப்படித்தான். அதைப் பெரிது படுத்தாதே.”
“உங்கட அப்பா எப்படி இருக்கிறார் ?”
“அப்பா பக்கத்தில் தான் இருக்கிறார். அவருக்கென்ன குறை.”
“கதைச்சு முடிவில அப்பாக் கிட்டையும் குடுங்க. மாமாவோடு கதைச்சு கனகாலம்.”
“சரியுங்க.”
“அத்தான் கடிதம் போட்டேன் கிடைச்சுதாங்க ?”
“ஓமுங்க கிடைச்சது. சின்ன வயதில் ஓடி விளையாடியது போலவே இப்பவும் மனம் மாறாமல் இருக்கிறாய். கடிதத்தை வாசிக்கும் போது சின்ன வயதில் சிரித்து உன் கூட பேசித்திரிந்தது தான் நினைவு வருகிகுது. எப்படியும் விசா இந்த மாதத்திற்குள் உனக்கு கிடைத்து விடும். அப்புறம் நேரில கதைப்பம் தானே.
“எத்தனை காலம் கடந்தும் உங்கள் அன்பில் மாற்றம் இல்லாமல் இருக்குது.அத்தான் என் அன்பு எப்போதும் மாறாது. காதல் என்றும் உயிரோடு வாழும். நான் உங்களில் இருந்து விலகி இருந்தாலும் உங்கள் வார்த்தைகள் சிறு வயதில் குறும்புச் செய்கைகள் எல்லாம் என் அடிமனதில் பதிவாகி பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன். எப்போதும் உங்க கூடவே வாழ்வதாக என் நினைவெல்லாம் இருக்கும்;” கலா கதைத்துக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டு....
“பதில் கடிதம் போடுறேன்.வேறு என்ன ரெலிபோனுக்கு காசு போகுது என்று அம்மா பேசப்போகுது. ரெலிபோனை வைக்கப்போகிறன் கலா.
“அத்தான் மாமா கிட்ட ஒருக்கா கொடுங்களன்”.
“அப்பா உங்களோடு கலா கதைக்கப்போகுதாம் கலாம்”
இராசாத்தியின் விசம் கலந்த பார்வை வீச்சுக்கள் சுரேன் மேல் விழுந்தது.
“பெல் கனடாவிற்கு ரெலிபோன் பில் ஏறப்போகுது என்று சொல்லிப்போட்டு வையடா சுரேன்.” சுரேனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழி பிதிங்கியபடி நின்றான்.
“என்ன அத்தான் சத்தத்த காணேல ?” கலா கேட்டாள்.
“கலா....ரெலிபோன் பில் கூடிப்போச்சு ரெலிபோனை வைக்கிறேன்”என்றுசொல்லிக்கொண்டு தொலைபேசியை வைத்தான்.
ஒரு வருடத்தின் முன் ஒரு நாள் நடந்த சம்பவத்தை வைத்தே மாமியின் குணத்தை இடைபோட்டு விட்டாள் கலா.மாமி எந்தளவிற்கு மாமாவை வைத்திருக்கிறார் என்பதையும் சுரேன் எப்படி தலையாட்டிப் பொம்மையாக இருப்பதையும் உணர்ந்து கொண்டாள். ஆயினும் சுரேனின் மேல் சிறு வயது முதல் கொண்டு வளர்ந்த புனிதமான உறவு மாறாத நிலையிலேயே கலா. அதேபோல் எந்த நிலையிலும் சுரேனும் அதே நிலையிலேயே கவனிப்பு, எண்ணம், சிந்தனை, செய்ற்பாடுகள் எல்லாம் அமைந்திருந்தது. மாமியின் அழுத்தமான தாய் பிள்ளை உறவுக்குள் சிக்கித் தினறுவதை அவள் மனதளவில் உணர்ந்து கொண்டாலும் சுரேனோடு எப்போது எந்த நிலையில் கதைப்பது என்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடியாத நிலையிலும் அதற்கான சூழலை எதிர்பார்த்த படி காத்திருந்தாள்.
வெளியில் வெண்பனித் தூவல் சற்றுக் குறைந்து விட்டது. பிற்பகல் ஐந்து மணியைத் தாண்டுவதற்கு முன் இருண்டு விட்டது. கலா கண்ணாடியின் ஊடே பார்த்துக்கொண்டிருந்த பார்வை சற்று விலகி சுய நினைவுக்கு வந்தாள். கொஞ்சம் வயிறு பசிப்பது போல் உணர்ந்து கொண்டாள். ஆயினும் அவள் சாப்பிடுவதற்குரிய மனம் அவளிடம் இல்லை. தேத்தண்ணி போட்டுக் குடிக்கலாம் என்ற எண்ணத்தோடு குசினிக்குள் போனாள். சற்று நேரத்துக்குள்ளேயே அவள் தேத்தண்ணியை போட்டுவிட்டாள். அப்ப தான் அவள் மனதுக்குள் ஒரு நினைவு தோன்றியது. மாமா முன்னறையில் தூங்குவது நினைவுக்கு வந்தது. மாமாவிற்கும் ஒரு தேத்தண்ணியை போட்டுக் கொண்டு கதவைத் தட்டினாள்.
மாணிக்கம் எழுந்து வந்து கதவைத் திறந்தார்.
“என்ன பிள்ள ?”
“தேத்தண்ணி மாமா..”
கையை நீட்டி தேத்தண்ணியை வாங்கிக் கொண்டு மாணிக்கம் வெளியே வந்தார்.கதிரையில் உட்காந்து கொண்டு முகத்தை லேசாக துடைத்தார்.
“என்னபுள்ள ஒருதரையும்காணல... ?”
“மாமியும் இவரும் சொப்பிங் செய்யப்போய்ற்றினம்.... மச்சானும்,மச்சாளும் கடையில படக்கொப்பி கொடுக்கப்போய்ற்றினம்....”
“அப்ப நீ! ஏன் புள்ள அவனோட போய்யிருகக்கலாம்தானே.... ?”
“எனக்கும் விருப்பம்தான்....ஆனால்....!”
“என்ன புள்ள ஆனா எண்டு சொல்ற....பூாியக்கூடியதாக சொல்லன்புள்ள.... ?”
“உங்களுக்குத் தொியும்தானே மாமா.... மாமியடகுணத்தை....மாமி இவரோட அவ்வளவு கதைக்க என்ன விடமாட்டாங்க இவரை நான் கெடுத்துப்போட்டிருவன் எண்டுதான்.... இவர்கூட என்னோடு சாியாய் கதைப்பதில்லை.”
“எனக்குத்தொியும் புள்ள நான் சொல்றன் என்று குறை நினைக்காதே.அவன்கிட்ட உங்கட மனத்திலுள்ள
பிரச்சினையைமனம்திறந்துகதையுங்கஅவன்ஏற்றுக்கொள்ளுவான்.ஏனென்றல் அவனைப்பற்றி எனக்கு நல்லாய்த்தொியும்.அவன்ஒரு நல்ல பொடியன் இந்த நாட்டிலே இந்தப் பழக்க வழக்கங்களோடு பொடியலை காண்பது அாிது. ஆனால் அவனை என்ர மனிசிதானே ஆட்டிப்படைக்கிறாள்.நீ சாியென்றாள் அவனை உன் வழிக்கு கொண்டுவரமுடியும்.”
கலா கேட்டுக்கொண்டே மெளனித்திருந்தாள்.

வெள்ளையடித்த கல்லறைகள் நாவாந்துறைடானியல்ஜீவா

என் அண்ணன் மகள் நீலாவுக்கு என் மீது விருப்பம் என்று சொல்வதிலும் பார்க்க என் சயிக்கிளில் ஏறித் தி£¤வதிலேயே விருப்பம் என்று சொல்லலாம் .அவ்வப் போது அவள் செய்யிற குழப்படியால் என்னிடம் அடியும் வாங்குவாள்.அடி வாங்கினாலும் சுனக்கட்டினவள் போல் என்னையே சுற்றித் தி£¤வாள். எப்படியும் காலையில் அவள் படிக்கும் பாடசாலைக்கு நான் எட்டு மணிக்கு முதல் ஏற்றிக் கொண்டு எட்டரைக்கு பள்ளிக்கூட வாசலில் விடவேண்டும் .மீண்டும் பதினொரு மணிக்கு அவளைக் கூப்பிடுவதற்காக போக வேண்டும். சயிக்கிளில் நடுபா£¤ல் இருந்து என்னொட வரும் போதே ஏதேனும் என்னுடன் கதைத்துக் கொண்டே வருவாள்.நீலா எப்போதாவது என்னிடம் கேள் வியெழுப்புவாள்.சில கேள்விகளைக் கேட்டபின் அவளின் புத்திக் கூர்மையைக் கண்டு வியந்து போய் விடுவேன்.வீட்டில் இரவில் து£ங்கும் போதும் நான்தான் பக்கத்தில் து£ங்க வேண்டும்.அவள் எனக்குப் பக்கத்தில் து£ங்கும் போது சித்தாப்பா ஒரு கதை சொல்லுங்க என்று கேட்டாள் நான் கதைக்கு பதில் அவளுடைய குறும்புச் செயலை வேறொரு பாத்திரமாக சித்தா¤த்து கதையை விடுவேன3 நான் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் கதையின் போக்கை கவனித்துக்கொண்டிருந்து விட்டு இடையிலே சொல்லுவாள்ளூ ” இந்தக் கதை என்னைப் பற்றித்தான்”என்று சொல்லி விடுவாள்.”என்னெண்டு உன்ர கதையெண்டு நீ கண்டு பிடிச்சனி” என்று நீலாவிடம் கேட்டாள் அவள் சொல்லுவாள்: ”சித்தப்பா நீங்கள் கதையைச் சொல்லேக்கில்லையே ஒரு ஊரில ஒரு ராசாவுக்கும் ராணிக்கும் இரண்டு குழந்தைகளாம். ஒரு ஆணும் மற்றது பெண்ணுமாம். ராசாவினுடைய மகள் எந்த நேரமும் அவரட சித்தப்பாவோடுதான் சைக்கிளில்ல திரிவாவாம். எந்த நேரமும் அவங்கட அண்ணாவோட சண்டை பிடிப்பாவாம் என்று நீங்கள் சொல்லேக்கிலேயே எனக்கு விளங்கிடும்.” என்று நீலா சொல்லுவாள்.அவள் காலையில் எழுந்து விட்டாள் என்றால், பாடசாலைக்கு போறதுக்கு து£ய வெள்ளைச் சட்டையை போட்டுக்கொண்டே வீட்டில் நடமாடுவாள். எனக்கு எப்போதும் காலை வெயில் உடம்பில் படும் வரை து£ங்குவதென்றால் பிடிச்ச விசயம். அம்மா விடிகாலையில் து£ங்குவதைக் கண்டால் ”மோன எழும்படா” என்று சொல்லுவா. நான் உடுத்திக் கொண்டு படுத்திருக்கும் சாரத்தால் மேலும் தலைமுட்ட இழுத்து போத்திக் கொண்டு திரும்பிப் படுத்திருவேன். நீலா என்னை எழுப்ப வந்தாள் என்றால் அவளுடைய அரியுண்டம் தாங்க முடியாமல் எழும்பி விடுவேன். எப்பவும் எனக்குப் பக்கத்தில் து£ங்குகிறவள் நேற்றிறவு என்னோடு து£ங்காமல் தங்களுடைய அம்மாவோடு து£ங்கி விட்டாள். நேற்று பகல் அவளை பள்ளிக் கூடத்திற்கு போய் சைகிளில் ஏற்றுவதற்காக காத்துக்கொண்டிருத போது நீலாவிற்கு படிப்பிக்கும் ரீச்சர் எதேச்சையாக என்னைச் சந்திக்க நேர்ந்தபோது நான் அந்த ரீச்சரோடு கதைத்துக் கொண்டு நின்றேன். அந்த நேரத்தில் தான் நீலா பள்ளி முடிந்து என்னைத் தேடி ஓடி வந்தாள். நான் கதைத்துக்கொண்டு நின்றதை என் அண்ணனிடம் சொண்டு மூட்டிக் கொடுத்திட்டாள். அண்ணன் நேற்று சாய்ந்தரமே என்னட்ட இந்த விடயம் பற்றி கேட்கும் போது நீலா சிரித்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடினவள். நான் அடிச்சுப் போட்டிடுவன் என்ற காரணத்தாலோ எனக்குப் பக்கத்தில் து£ங்க வரவில்லை. அதனால் எந்த அரியண்டமும் இல்லாமல் நேரத்தோடு நேற்று து£ங்கி விட்டேன். எப்படி இருந்தாலும் காலையில என்னை எழுப்பி ஆக வேண்டிய கட்டாய நிலை நீலாவிற்கு. நசுக்கிடாமல் பக்கத்தில் வந்து நீலா உக்காந்து கொண்டு ”சித்தப்பா... சித்தப்பா... பள்ளிக் கூடத்திற்கு நேரம் போய்ற்று எழும்புங்கோ....”என்று சொல்லிக் கொண்டு தனது வலது கையால் என்னுடைய உடம்பை அசைத்தாள். து£க்க அசதி விழிகளில் அப்படியே விலகாது இருந்தது. கண்ணைக் கசக்கிக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்தேன். எழுந்த கையோடு வந்த விசருக்கு அவளுக்கு செவிடுபறிய குடுக்க வேண்டும் போல் இருந்த கோபத்தை அடக்கிக்கொண்டு”ஏன்ரீ உங்கட அப்பாக்கிட்ட அண்டிக் குடுத்தனி..” என்று நான் கேட்க...”சொல்லித்தான் குடுப்பேன்... நீங்க என்ன சைக்கிளில் ஏத்திக்கொண்டு பள்ளிக் கூடத்தில இறக்கேக்கையும் பள்ளிக்கூடம் முடியும்போதும் ஒரு ரீச்சரோ மட்டும் நெடுக நெடுக நீங்கள் கதைக்கிறியள். அந்த ரீச்சர் எனக்கு அடிக்கிற ரீச்சர் என்று தெரியாதோ...? "”உனக்கு அந்த ரீச்சர் அடிக்கிறது என்றால் நான் கதைக்கக் கூடாது என்று உன்ர சட்டமோ...? நேற்றுப் பின்னேரமே உங்கட அப்பா என்னட்ட ரீச்சரோட கதைச்சதைப் பற்றி கேட்டவர்...”. அண்ணன் வேறு அர்த்தத்தோடு கேட்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டு நீலாவின்ர காதை என்னுடைய கையால் பிடிச்சு திருகினேன். நீலா கத்திக்கொண்டு அண்ணனைத் தேடி ஓடினாள். நான் எழும்பி பல்லைத் தீட்டிய படி குளிக்க கிணத்தடிக்குப் போனேன்.நான் குளிச்சிட்டு வெளிக்கிட்டுக் கொண்டு அறையை விட்டு வரவும் நீலா புத்தகப் பையை கையிலே மாட்டிக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. நீலா வெளிவாசலில் நில்லு நான் ஒன்றுக்கு இருந்துட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வாறன். என்று சொல்லிக் கொண்டு கிணற்றடிப் பக்கமாக இருக்கும் மலசல கூடத்தை நோக்கிப் போனேன். நீலா வீட்டை விட்டு இறங்கி எனக்காக காத்துக்கொண்டு நின்றாள். அண்ணன் இன்னும் வேலைக்குப் போகவில்லைப் போல. அண்ணனின் சத்தம் அறையில் இருந்து எனக்குக் கேட்டது. ஒன்னுக்கு இருந்து விட்டு சைக்கிளை எடுப்பதற்காக முன் விறாந்தையில் சுவரோடு சாத்தியிருந்த சைக்கிள் பக்கமாக வந்தேன். சைக்கிளின் முன் சில்லைப் பார்த்ததும் ஒரு கணம் இடிந்து போய்ற்றேன். சைக்கிளின் முன் சில்லில் காற்றுப் போய் றிம்மில் நின்றது. வீட்டு வெளிவாசல் அடியில் நின்ற நீலா”சித்தப்பா பள்ளிக்கு நேரம் போற்று கெதியாக வாங்கோ...” என்று என்னைக் கூப்பிட்டாள்.”நில்லடி நீலா நான் வாறன்" என்று சொல்லிக் கொண்டு சைக்கிளை உருட்டிக் கொண்டு வாசல் பக்கமாகப் போனேன். சைக்கிளைப் பார்த்ததும் நீலா விக்கித்துப் போனாள். எனக்கு அவளைப் பார்த்ததும் ஒரு பொய்க் கோபம் வந்தது. அவளை வெருட்டுவதற்காக”காத்தால இரண்டு முறை நீ வந்து என்னைச் சுற்றிச் சுற்றி பார்த்துக் கொண்டு திரியும் போதே நினைச்சிட்டன் நீ சைக்கிளுக்கு ஏதும் செய்து போட்டாய் என்று. இப்ப ஏதோ தெரியாத மாதிரி நடிக்கிற....நீயாடி காற்றுத் திறந்து விட்டனீ?” ஒரு அதட்டலாய் என் வார்த்தை சீறிப்பாய...”என்ர அம்மாவான... என்ர பரலோக மாதவறிய... இல்ல சித்தப்பா எனக்குத் தெரியாது! இப்பத்தான் உங்கட சைக்கிளைப் பாத்தனான். எனக்கென்ன கோபம் உங்களில சித்தப்பா?””என்ன கோபமா ரீச்சரோட கதைக்கிறன் என்று அண்ணன் கிட்ட நேற்று போட்டுக் கொடுத்தியல்ல....””அது ரீச்சரில இருந்த கோபம் சித்தப்பா. இப்ப பள்ளிக்கு நேரம் போய்ற்று வாங்க சித்தப்பா போவம்.”வீட்டுக்குள்ளே இருந்து வெளி வாசலுக்கு ஓடி வந்த அம்மாளூ ”மோன கவனம் ஆமிக்காரன், பொடியல் .... சுறுக்கா வந்திரு மோன...””ஓமன....” அம்மா என்று சொன்னேன்.அம்மா வீட்டுக்குள் போக நீலாவைப் பார்த்துக் கொண்டு ”சரி சரி வா எல்லாத்துக்கும் உன்னைக் கவனிக்கிறன். இப்ப போய் சையிக்கிளுக்கு காத்தடிக்க ஜந்து ரூபா சித்தப்பா தரட்டாம் என்டு சொல்லி உங்கட அப்பாக்கிட்ட வாங்கிற்று வா”. அவள் காதில் விழுத்திய கையோடு வீட்டிற்குள் ஓடினாள்.”துர்ராசாவின்ர கடையில காத்தடிக்க இருபத்தைஞ்சம் தானே வரும் அதுக்கேன் இவன் ஐஞ்சு ரூபா கேட்கிறான்.என்ன புள்ளய கூட்டிக் கொண்டு போறதுக்கு சம்பளமோ...?”நீலா நான் சொல்லி விட்டதை கேட்டிருப்பாள் போல....அண்ணனின் குரல் வெளியில் நின்ற எனக்கு காதில் விழுந்து வெடித்துச் சிதறியது அந்த வார்த்தை.எனக்கு என்ன பதில் சொல்வதென்று தொ¤யாமல் முழிச்சுக் கொண்டு நின்ஆறன3ஒரு கணம்தான் அந்த அச்சம் படர்ந்த உறைநிலை.திடிரென பொறி மின்னலாய்”நீலா....!நோர்வேச் சித்தப்பா காசனுப்பின பிறகு அந்த ஐஞ்சு ரூபாயும் தாறனென்டு சொல்லு....” என்று அண்ணனின் காதில் பலமாக விழக்கூடிய மாதி£¤ கத்தினேன்.”வேல வட்டியில்லாமல் தி£¤யிறான் என்ற உணர்வும் கிடையாது....குடும்பப் பொறுப்பும் கிடையாமல்தெருவில தி£¤யிறா£ன்....ஆனா கோபம் மட்டும் சுறுக்கென்டு மூக்கு முட்ட வந்திரும்...ஐஞ்சு ரூபாய்க் காசுக்கு நோர்வேயில இருக்கிற தம்பியைச் சாட்டுற வடிவப்பார்...இந்தாடி நீலா இந்த ஐஞ்சு ரூபாயையும் அவனட்ட குடடடி..”என் முகத்தில் அறைஞ்ச மாதி£¤ இருந்தது.என்ன செய்யிறது உழைப்பு பிழைப்பு இல்லாமல் வீட்டில ஓசியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டுதானே போகவேண்டும் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.நீலா காசை வாங்கிக் கொண்டு என்னைத் தேடி வெளியில் வந்தாள்.நானும் அவளுமாக சயிக்கிளை உறுட்டிக் கொண்டு கடைக்கு வந்து சேர்ந்தோம்.காத்தை அடிச்சு போட்டு ஐஞ்சு ரூபாயை துர்ராசா அண்ணனிடம் குடுக்க அவர் தன்னட்ட சில்லறை யில்லையென்று சொல்லி திரும்ப வரும் போது காசைத் தரச்சொன்னார்.இனியெங்க அவருக்கு குடுக்கிறது....இருபத்தஞ்சம் லாபம் எண்டு மனசுக்குள் நினைச்சுக் கொண்டு ஐஞ்சு ரூபாயையும் பையில் வைத்துவிட்டுளூநீலாவை சயிக்கிளின் நடுபாறில் குறுக்ககா இருத்தி விட்டு சயிக்கிளை மிதித்தேன்.இப்போ சயிக்கிள் நாலு சந்தியைத் தாண்டி சோனகதெருவால் போய்க் கொண்டிருந்தது.ஐஞ்சு சந்தியால் திரும்பி ”பிளவுஸ்” தேத்தண்ணீக் கடையை தாண்டும் போது வீதியோரத்தில் பொடியல் துவக்கொடு நின்றார்கள். ஓரு கணம் உயிர் உறைந்தது.ஜஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு விழுந்தவன் போல் உடலின் யாசிப்பு.மழையில் நனைந்த கோழி போல் கூனிக் குறுகி நடுங்கினேன்.”இண்டைக்கு என்ன இளவோ...!ஆற்ற கண்ணில முழிச்சேனோ தொ¤யாது...எல்லாம் துக்கறியாத்தான் கிடக்கு...” நேற்றும் இப்படித்தான் சந்தியில நிண்டு போற வாற பொடியல புடிச்சவங்களெண்டு எங்கட வீட்டில கதைச்சவங்க எப்படித்தான் இருந்தாலும் நீலாவுக்கு நல்ல பயிற்சி ஏற்கனவே கொடுத்திட்ட சந்தோசம் என்ர மனசின் ஒரத்திலிருந்து விழித்துக் கொண்டது.நீலா கெட்டிக்கா£¤ அப்படி யெதும் தட்டுத் தவறி நடந்து விட்டாள் அவள் அழுது குளறி ஊரையே கூட்டி என்னைக் காப்பாற்றி விடுவாள் எண்டு மனதளவில் நினைத்தாலும் நலிந்த நம்பிக்கையோடு சயிக்கிளை மெதுவாக ஓட்டினேன்.என்னவோ தொ¤யல அவங்க என்னக் கண்டு கொள்ள வேயில்ல.மூன்றாம் நாள் உயித்தெழுந்த யேசுவைப் போல் புதுப் பிறப்பெடுத்தேன்.ஒரு பெருமூச்சை விட்டுக் கொண்டு சீனியின்ர கடையைத் தாண்டி கச்சான் கடைச் சந்தியால் இடப்பக்கமாக சயிக்கிளை திருப்பி வைத்தீஸ்வராக் கல்லு£¤ வழியாக நாங்கள் போய்க் கொண்டிருந்தோம்.பொடியலின்ர பயத்தில நீலாவிடம் சொல்ல நினைத்த கா£¤யம் மறந்து போய் நீலாவின் முகத்தை பார்க்க நீலா என்னை திரும்பி பார்த்தாள்.”என்ன சித்தப்பா!இயக்க பொடியல கண்டுட்டு பயந்து போயீட்டேங்களா..?அதுக்குத்தானே உங்கட ஜடியா உடன எனக்கு வந்திருமே....என்ர அப்பாவை விடுங்க....விடுங்க...எண்டு கத்திக் குளறுவேனே...””எனக்கு ஏதும் நடந்தால் ஊரேயே கூப்பிடுவியெண்டு தொ¤யும்தான்.... அதை விடு நீலா அந்த £¦ச்சா¤ன்ர கதைக்கு வாறன்.£¦ச்சா¤ரை எனக்கு எப்பிடி தொ¤யுமெண்டு உனக்கு சொல்லுறன் இதுக்கு புறவாவது வீட்டில வந்து அண்டிக் கொடுக்கக் கூடாது....என்ன...?””ம்...சித்தப்பா....நீங்க இரவில கதை சொல்லுறனென்டு என்னப் பத்தி சொல்ற மாதி£¤யென்ட எனக்குச் சொல்ல வேண்டும்....””இல்லை இது உண்மையாய் நடந்ததை ஒளிவு மறைவில்லாமல் சொல்லுறன்””ஆரு சித்தப்பா...அப்பாவையும் தங்கச்சியையும் இந்தியன் ஆமிக்காரன் சுட்டதென்டு நீங்க என்ன பள்ளிக்கூடம் முடிய உரும்பிராய்க்கு கூட்டிக் கொண்டு போனேங்களே அந்தச் சினேகப் பொடியனைப் பற்றிய கதையாங்க...?இல்ல..இது முல்லைத் தீவைப் பிறப்பிடமாக கொண்ட என்ர சினேகிதப் பொடியன் பற்றிய கதை. அவனும் நானும் ஒ. எல் ஒன்றாக £¦யூசன் சென்ரலில படித்த போது பழக்கமானவன்.நல்ல பொடியன் சோதனை எடுத்து முடிஞ்சாப் பிறகு நான் வீட்டோட இருந்து விட்டேன்.பா¦ட்சை முடிவைப் பார்த்து மேற்கொண்டு ஏதாவது செய்யலாமெண்ட நோக்கத்தோடு. ஆனா இனியன் அப்பவே அவங் கட ஊர்ப்புள்ளய விரும்பித் தி£¤ஞ்சவன்.சோதினை எடுத்து முடிய அந்த பொட்டையை கூட்டிக் கொண்டு ஓடி திரும்ப கிறிஸ்தவ முறைப்படி கோயிலில அடுத்தாருக்கு முன்னாலே வைச்சு சுவாமி கைப்பிடிச்சு விட்டவர். இனியனுக்கு அதுக்கு பிறகு செல்வி, மாறன் என்று இரண்டு குழந்தைகள் பிறந்தது.மீன்பிடித்தொழிலுக்கு போய் வந்த இனியனுக்கு திடீரென வெளிநாட்டிற்கு போக வேண்டும் என்ற ஆசை வந்தது.அதை நான் பிழையென்று நினைக்கெல அவனுடைய நிலையிலுள்ள எல்லா இளைஞர்களுக்கும் வருகின்ற ஆசைதான்.வீட்டிலிருந்த நகைளையும் காணியையும் விற்றும் பணம் பத்தமால் சொந்தக் காரர்களிடம் கடனாய் பணம் வாங்கிக் கொண்டு கனடா போய்ச் சேர்ந்தான். உழைத்து கடனளித்து ஊ£¤ல் வீடும் கட்டிக் கொடுத்தான்.ஆனால் ஆசைப்பட்ட அவன் மனைவி பிள்ளைகளை எடுக்க முடியாத நிலை.அகதிமனு அவனுக்கு நிராகா¤க்கப்பட்டது. அந்த காலகட்டத்தில்தான் இனியனின் அந்தோனி என்ற நண்பன் அவன் குடும்பத்துக்கு உதவி செய்யத் தொடங்கி கடசியில் இனியனின் மனைவிக்கும் அந்தோனிக்கும் நெருக்கமான உறவு எற்ப்பட்டு கல்யாணத்தில் முடிந்தது.அந்தக் குழந்தை இரண்டையும் அன்பில்லாமல் தன்னுடைய வேலைக் காரர்களைப் போல நடத்தி வந்தாள். இந்த சம்பங்களை யெல்லாம் கனடாவிலிருந்து பொறுத்துக் கொண்டிருக்க முடியாமல் வெளிநாட்டு வாழ்கையே வேணாமென்டு ஊர் திரும்பி விட்டான். இனியன் நடந்த சம்பவமெல்லாத்தையும் ஒன்றும் மறைக்காமல் என்னிடம் ஒப்புவித்தான். யு£ரை எனக்கு குற்றம் சொல்வதென்று எனக்கு பு£¤யவில்லை.... ஒருவேளை நீயும் என்னுடைய வயதை ஒத்தவளாக இப்போது இருந்தால் உனக்குள் ஒரளவு விளங்கிக் கொண்டிருப்பாய்.நான் இந்தப் பிரச்சினையை விளங்கிக் கொண்டளவுக்கு உனக்கு சொன்னாலும் நீ கேட்கக்கூடிய பக்குவ நிலையிருப்பதாக எனக்குத் தொ¤யவில்லை.இங்க வந்தவுடன் அவனுடைய மனைவியிடம் பிள்ளைகள் இரண்டையையும் கேட்ட போது அவள் எந்த மறுப்பும் தொ¤விக்காமல் இனியனிடம் கொடுத்து விட்டாள். அவனுடைய இரண்டு பிள்ளைகளையும் கொணடு வந்து நீ படிக்கிற பாடசாலையில சேர்த்து அங்கேயே தங்கவும் ஏற்ப்பாடு செய்துவிட்டான். அவங்கட ஊ££¤லயிருந்து யாழ்ப்பாணம் வந்தால் என்னோடுதான் தி£¤வான்.பிள்ளைகளை பார்க்கப் போகும் போது நானும் அவன் கூடவே உங்கட பள்ளிக்கூடத்தில இருக்கிற கொஸ்டலுக்கு போறனான்.அப்படிப் போய் வருகிற போதுதான் உங்கட £¦ச்சரையும் தொ¤ய வேண்டி வந்தது.எப்ப உங்கட £¦ச்சர் என்னைக் கண்டலும் இனியனின் பிள்ளைகள் பற்றித்தான் கதைப்ப....அதைவிட எந்தக் கதையும் வைத்துக் கொள்வதில்லை.இப்ப விளங்கிற்ற நீலா..?””ஓம்....சித்தப்பா!பாவமென்ன அந்தப் புள்ளயல்....அவங்கட அம்மா அவங்களை பார்க் கிறதில்லையா?””இல்ல நீலா....அவங்கட அம்மா இனியனின் நண்பனைக் கல்யாணம் செய்த பிறகு தன்ர சொந்தப் பிள்ளைகளையை வெறுத்துப் போட்டா....””ஏன் சித்தப்பா...?””தொ¤யல....ஒரு வேளை நான் நினைக்கிறேன் தன்னுடைய இரண்டு பிள்ளைகளை விட அவ ஏதோ இனியனின் நண்பனட்ட கண்டுபிடிச்சிருக்கிற போல....””உம்””என்ன நீலா உம் போடுறாய்.?””இல்ல சித்தப்பா உங்கட நண்பற்ற கதையை கேட்க அழுகைதான் வருகுது...””நீலா உனக்கு அழுகை வருவுதோ என்னவோ எனிமேல் உங்களின்ர £¦ச்சரரோடு கதைக்கிறதை மட்டும் வீட்டில போய் சொண்டுரஞ்சக் கூடாது... என்ன?””ஓம் சித்தப்பா எனிமேல் அந்தக் கதையை கதைக்கவே மாட்டேன்”.என்றாள் நீலாஎன்னுடைய சயிக்கிள் இப்போது ஆஸ்ப்பத்தி£¤ வீதி வழியல் சென்று இடப்பக்கமாக சென்றது.நீலா என்ன காரணமோ தொ¤யவில்லை ஒன்றும் பேசாமல் சயிக்கிளில் இருந்தாள். சு¤ல வேளை நான் எ£¤ஞ்சு விழுவன் என்ற நினைப்பிலோ அல்லது இனியனின் கதையைக் கேட்ட பிறகோ அப்படி அமைதிச் சூழலில் இருந்த அவளிடம் பள்ளிக் கூடம் கிட்டவர சயிக்கிளின் ஒட்டத்தின் வேகத்தை குறைத்துக் கொண்டு நானே கதையைத் தொடங்கினேன்....”நீலா!இந்த நத்தாருக்கு என்ன வாங்கித்தர....?””சித்தப்பா நீங்க இப்படித்தான் நெடு நெடுக கேப்பீங்க ஆனா வாங்கித் தரமாட்டிங்க நீங்க கஞ்சல்....””நானே உங்கட அப்பம்மா கைச்செலவுக்கு தாற காசிலதான் என்ர காலமே போகுது....உனக்கு வாங்கித்தர ஆசையாக இருந்தாலும் கையில காசு இருக்கவேணுமே”சயிக்கிள் பள்ளிக்கூடத்தின் வாசலடிக்கு வந்து விட்டது.சயிக்கிளிலிருந்து நீலாவை என்னுடைய முழுப்பலத்தையும் வைத்து கைத்தாங்கலாய் து£க்கி கீழே இறக்கி விட்டேன்.அவள் எனக்கு போய்ற்று வாறேன் என்று சொல்லிக் கொண்டு பள்ளிக்கூடத்தை நோக்கி ஒடவும் இனியனின் இரு பிள்ளைகளும் எனக்கு பக்கம் ஒடிவரவும் சா¤யாக இருந்தது.”மாமா எங்கட அப்பாவைக் கண்டியல....?”என்று இனியனின் மூத்த மகன் வாஞ்சையோடு என்னிடம் கேட்ட போது முகம் வாடி கண்கள் உள்ளொடுங்கி வறுமையின் சுவடு இழைந்திருந்தது.ஒற்றை வார்த்தையில் பதிலைச் சொல்லி விட்டு நகர என்னால் முடியவில்லை.நான் வளர்ந்த விதம் அப்படி.என் கண்களில் மேகத்திரள்.நெஞ்சில் இனியனின் நினைவு சட்டென மின்னியது.ஒரு மாதத்திற்கு முதல் இனியன் மறுமணம் செய்து கொண்டு யாழ்ப்பாணம் வந்த போது தான் புதிதாக மணம் முடித்த விடயத்தையும் தன் மனைவியையும் அறிமுகம் செய்ததோடு கல்யாணி கிறீம் கவுஸ்சுக்கு கூட்டிக் கொண்டு போய் ஐஸ்கிறீமும் வாங்கித் தந்தான்.அதன் பின்னாடி ஒரு வாரத்திற்கு முதல் என்னைச் சந்திக்க வீட்டிற்கு வந்த போது தானும் தன் மனைவியும் இந்தியாவிற்கு அகதியாக போறதுக்கு படகுக்கு ஒழுங்குபடுத்தும்படி கேட்டான்.நான் பாசையூருக்கு இனியனையும் கூட்டிக் கொண்டு போய் இந்தியாவுக்கு அகதிகளை ஏற்றிக்கொண்டு செல்கிற போட்டுக்காரரை தேடிப்பிடிச்சு இனியனுக்கு அறிமுகப்படுத்தியும் விட்டேன்.அன்றிரவே பொழுதும் சாயும்வேளை கூட்டிக் கொண்டு போவதாகவும் தன்னுடைய வீட்டுக்கே வரும்படி போட்டுக்கார சம்மாட்டியார் சொன்னார். பொழுது சாயும் முன்னமே நான் ஒரு சயிக்கிளிலும் இனியனும் அவன் மனைவியும் ஒரு சயிக்கிளிலுமாக பாசையூருக்கு புறப்பட்டோம்.வரும் வழியிலேயே £¦சனில் படித்த காலத்தில் தி£¤ந்த இடங்களையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டு வந்தான்.பழைய நினைவுகளில் மூழ்குவது எனக்கு அலாதியாய் இருந்தது.சம்மாட்டியின் வீட்டிற்கு போகும் வழியிலே பாசையூர் அந்தோனியார் கோயில் இருந்ததால் இனியனும் மனைவியும் கோயிலுக்குள் போய் மன்றாடிப் போட்டு மெழுகுதி£¤யை கொழுத்திப் போட்டு வெளியில் வந்தார்கள்.நான் கோயிலுக்குள் போகவில்லை.நான் ஒரு இடதுசா£¤ப் போக்குள்ளவன் என்பது இனியனுக்கு தொ¤யுமென்பதால் அவன் என்னை வற்ப்புறுத்தவில்லை.சம்மாட்டி வீட்டிற்கு சென்று அங்கிருந்து கடற்கரைக்கு போய்ச் சேர்ந்தோம். இந்தியாவிற்கு படகில் அனுப்பிவைத்துவிட்டு கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்று விட்டு வீடு திரும்பினேன். ஏன்பாட்டிற்கு யோசனையில் மிதந்த போது பள்ளிக்கூட பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு போன மினிவானொன்று எழுப்பிய ஒலிச்சத்தத்தில் நினைவுடைந்து என் பக்கம் நின்ற இனியனின் பிள்ளைகளைப் பார்த்தேன்.என்னைப் பார்த்தபடி சிலையாய் நின்றார்கள்.ஏனக்குள் கருக்கொண்ட துயர இருள்....துயரமா...?அது சொல்லி மாளாத துயரம். இயேசுவை சிலுவையில் ஆணியால் அறைந்து போ
danieljeeva@rogers.com

Sunday, April 23, 2006

காத்திருப்பு டானியல்ஜீவா


நிலம் வேறாய் போனபோதும் நித்திரைகூட சிவாவிற்கு நிம்மதியற்றே போய் விட்டது.வேதனையில் விழியிலிருந்து கண்ணீர் வடிந்து தலையணையை நனைத்தது.சிவா கொழும்பிலிருந்து கனடாவிற்கு
வந்து ஒரு வாரம்தான். இன்னும் பேஸ்மன் அறையின் வாசலைத்தவிர வெளியில் என்ன நிகழ்கிறது என்று கூட தொியாமல் வாழவேண்டிய சூழலை அவன் வாிந்து கட்டிக்கொண்டிருக்கிறான். எப்போதும் கட்டிலில் முகம் புதைத்து@ அழுதபடியே கிடப்பான். அவன் நீண்டநாட்களாய் கண்ட கனவெல்லாம் நனவாகுமென்று வந்தவனுக்கு இப்படியொரு சோகமான நிலை உருவாகிவிட்டது.
யாழ்ப்பாணத்திலுள்ள கல்லூாி ஒன்றில் படிக்கின்ற காலத்தில் தான் சிவா-சசி காதல் அரும்பியது.இருவரும் ஒருவரையொருவர் நன்றாக மதித்து நடந்தார்கள்.நன்றாக படித்துக்கொண்டிருந்த சிவா காதல் வலையில் விழுந்து படிப்பில் அக்கறை குறைந்து தொடர்ந்து படிக்க முடியாமல் தொழிக்கு போக ஆரம்பித்தான்.ஒரு நாள் அவசரமாக தன்னை சந்திக்கும்படி சசியின் சினேகிதியிடம் ஒரு கடிதம் அவனுக்கு கொடுத்து விட்டாள்.கடித்தில் குறிப்பிட்ட இடம் வழமையாக சந்திக்கிற இடம்தான் சன நெருசடியற்ற அந்த கிராமத்தின் குச்சொழுங்கை நேரம் எட்டரை மணி ஒரு நாளும் இப்படி எழுதாதவள்...தனக்குள்ளே அவன் கேள்வி கேட்டான். அவளை சந்திப்பதற்கு முதல் அவன் விடைகாணமுயன்றான்..
முடியாவில்லை. எப்படித்தான் இன்றைய மாலை மயங்குமோ.... ?
“சிவா....உன்னை ஒருநாள் கூட விட்டுப்பிாியாதவள் நான் ....உனக்கும் அது தொியும்...”
“என்ன....என்ன....சொல்லன்கெதியாய்....”
“கனடாவில் இருக்கிற சித்தி எண்ண கொழும்புக்கு வரச்சொல்லி கடிதம் போட்டிருக்கிறா..”
ஏக்கம் கலந்த பெருமூச்சு அவனில்....”என்னத்துக்கு ... ?”
“கனடா எடுப்பதுக்குத்தான்.”
கணப்பொழுதில் பேசாமல் நின்றான்.கண்கள் கலங்கியது.அவனுக்கு மட்டுமல்ல அவளுக்கும்.
மெல்ல தனது கைகளை அகல விாித்தான்.அவளது தோளில் மீது பட்டது.ஒர் மெல்லிய அசைவு அவளில்....இரவு காதலுக்கு காணிக்கையானது.நிலா வெளிச்சம் குச்சொழுங்கையின் வேலியில் தெறித்து நிலத்தை நனைத்துக்கொண்டிருந்தது.சிவா தன்நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.அந்தக்கணமே கிடுகு வேலிக்குள் இருந்து ஓரு சத்தம்....
“யாரட இருட்டுக்குள்ளே.... ?”
அந்த ஓலி வந்தவேகத்தில் அவர்கள் மறைந்து போனர்கள். அதன் பின்னர் அவனால் அவளை நோில் பார்க்கமுடியவில்லை. விடிய கொழும்புக்குச் சென்று கனடா வந்து விட்டாள். இங்கு வந்தவுடன் நிரந்தர வேலை யொன்று அவள் சித்தி எடுத்துக்கொடுத்தாள். படிப்படியாக அவளுடைய வாழ்கை நிலையை உயர்த்திக் கொண்டாள்.சிவா ஏதோ ஒருஇயக்கத்தில் தியாக உணர்வில் இணைந்து செயல் பட்டான். வாழ்வின் எல்லாச் சுகங்ககையும் இழந்து தேசத்தின் விடியலில்தான் கல்யாணம் என்பதே தனக்கு வேண்டும் என்று நினைத்தான். ஆயினும் அவன் தவிர்க்கமுடியாத காரணத்தால் அமைப்பிலிருந்து விலகிறான்.மீண்டும் சசியைப்பற்றிய எண்ணங்கள் அவனில் விாிய அவன் கொழும்புக்கு வந்தான்.அவளோடு தொடர்புகொண்டான். சசி பொன்ச பண்ண இங்கு வந்து விட்டான்.
சிவா இங்கு வரும் வரை அவனால் இப்படியான ஒரு வாழ்வை கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாவில்லை. அவனது பழக்கம் வழக்கம் அப்பாவித்தனம் எல்லாம் விகடம் தொியாத கடலோடி போல....அவளால் அவனை பச்சாத்தபமாக பார்க்க முடியவில்லை. தன்னுடைய வேலைக்கும் நாகாிக மாற்றத்திற்கும் பொருத்தமாில்ல உறவு போல் அவள் உணரத் தொடங்கினாள். அவள்தான் என்னதான் செய்ய முடியும் சினேகிதியின் கணவன் புதுக்காாில் நேற்றுக் கூட சித்திரவை கூட்டிக்; கொண்டு வீட்டிற்கு வந்திட்டு போனாள். இவற்றையெல்லாம் பார்க்கின்ற போது அவளுக்கு@ மூலைக்குள் முடங்கிக் கிடக்கும் சிவா தன்;னுடைய ஆசைகளையும் எண்ணங்களையும் நிறைவேற்றும் கணவனாக இருப்பாான என்ற அச்சம் அவளுக்குள் எழுந்துவிட்டதோ....
சிவா பார்வைக்கு அழகற்ற உடல் தோற்றமாயினும் உள்ளம் பால் போல் வெண்மையானது.வாழ்வு வறண்ட போதும் முகம் மட்டும் எப்போதும் புன்னகை பூத்திருக்கும் ஆடம்பர வாழ்வை அடியோடு வெறுப்பவன். அதிகமாக யாருடனும் கதைக்காதபோதும் அவனுக்கென்று பிடித்தமானவர்களோடு உயிரைக் கொடுக்குமளவுக்கு அன்பு கொள்வான்.வார்த்தைகளில் வர்ண ஜாலமில்லாத ஒரு யதாத்தவாதி சிறு வயதிலிருந்தே வறுமை எனும் சிலுவை சுமக்கிறவன்.சிவா இங்கு வந்தவுடன் தனியாக பேஸ்மன் எடுத்துக் கொடுத்தாள்.அவள் தன் சித்தியோடு இருந்தாள். சசி அடிக்கடி சிவாவை வந்து பார்த்துவிட்டுப் போவள். சந்திக்கும் போதெல்லாம் வார்த்தைகளால் வலுத்து சண்டையிலே முடிந்துவிடும் சசியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வேதனைப்படுத்திய போதும் அவைகளை அவன் பொிது படுத்தாது.தனக்குள் குறுகிக் கொள்வான். அவளுடைய முகம் எத்தனை கனவுகளாய் அவனில் எழுந்து ஒவ்வொரு கணமும் கொல்லும் அவளோடு பழகிய நாட்கள் பேசிக்கொண்ட விடயங்கள் எல்லாம் கானல் வாிகளா.... ?
அவன் குப்புறக் கட்டிலில் படுத்தான்.உடலில் ஒரு வித சோர்வு அவனுள் குடிகொண்டு விட்டது. ஆயினும் அவன் கண்களுக்கு தூக்கம் வரமறுத்துக்கொண்டிருந்தது.அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது.ஓவென்று கத்தவேனும் போல் அவன் மனம் சொல்லியும் அவனால் அழமுடியவில்லை. அழுகைச் சத்தம் கேட்டாலே மேலேயிருக்கின்ற தமிழ்ச்சனங்கள் வந்திருவார்கள் என்பதற்காக....
மூன்று வருட மாற்றம் காதலுக்கு முக்காடு போட்டு விட்டதோ... ? வருடநகாவில் சசியில் இவ்வளவு மாற்றம் வந்து விட்டதோ ... ?
“தம்பி உங்களுக்கு போன்”மேலேயிருந்து வந்து வீட்டு உாிமையாளர் சொன்னார்.மேலே ஓடிப்போய் ரெலிபோனை எடுத்தான்.
“மறு முனையிலிருந்து ஹலோ....என்ன நெத்ரையோ....! இன்டைக்கு பின்னேரம் வேலை முடிய வருவேன் ஓக்கேய் பாய்....”தொலைபேசியின் மறுமுனை துண்டிக்கப்பட்டது.ஆசையோடு எதிர் பார்த்திருந்தவனுக்கு ஒரு ஜந்து நிமிடம் கூட ஆசையோடு பேசாதை நினைத்து தனக்குள் வெந்து சுருங்கினான்.ஆயினும் அவளின் வருகையை நினைத்து சந்தோஷப்பட்டன்.
இரவும் பகலும் மாறிய போதும் அவன் வாழ்வில் நெகிழ்சியற்ற இந்த இரண்டு கிழமையில் இன்றைய நாள் எல்லா வேதனைகளுக்கும் தகுந்த சன்மானம் வழங்குமென்ற நினைப்போடு அவன் காத்திருக்கிறான். எவ்வளவு நேரம் தங்குவாளோ அவ்வளவு நேரத்திற்குள்ளும் பேச வேண்டியவற்றை மனதில் இருத்தி வைத்தான்.
சொல்லியபடி தவறாது வந்துவிட்டாள். அவளைக் கண்டவுடன் அவனின் பார்வையின் வீச்சில் அவனில் வெறுமை விலகி புதுமை தோன்றியது. அஞ்சனம் அவள் கண்களுக்கு அழகற்றுக் கிடந்தது. வாசனைக் காற்று பேஸ்மன் முழுவதையும் அடைத்துக் கொண்டது.இதழில் கிடந்த உதட்டுச்சாயம் கடவாய்ப் பக்கமாக வழிந்து இருந்தது. அவன் சிதறிக் கிடந்த கடதாசித் துண்டுகளை வேகமாக புறக்கிக் காபேஜ் பாக்கில் போட்;டான்.தொங்க விடப்பட்ட கங்கரையும் ஒழுங்கு படுத்தினான்.
இருவருமே பேச முடியாத மெளனம்....சிவாவின் மனதில் தேக்கி வைதிருந்த சோகங்கள் கண்கள் வழிய கசிந்தது.கண்ணீரை துடைத்துக் கொண்டு சசியை பார்த்தான்.
“உன்னை என்னால் பூாிந்து கொள்ள முடியவில்லை. எதற்காக இப்படி நடந்து கொள்கிறாய் என்று விளங்கல....மணிப்புறா ஜோடி போல நம் காதல் மலர்ந்தது...வளர்ந்தது.இடையில் கனடா நம் இருவரையும் பிாிக்கின்ற பெரும் சுவராய்.... உன்னை என்னால் குற்றம் சொல்ல முடியவில்லை.மூன்று மாதத்திற்கு ஒரு தடவை கொழும்புக்கு வந்து காசு வங்குவதற்காக நீதான் உங்களுடைய குடும்பத்தை காக்கின்ற குல தெய்வமாக மாற்றி விட்ட உனதுபெற்றோர்....உன்னுடைய உலகமே வேலைதான் எண்டு நினைக்கும் மாயை....உனக்கு அருகில் நெருங்க முடியாத அளவுக்கு காசு செய்கின்ற மாயை....எல்லாத்தையும் நினைக்க ஆத்திரன்தான் வருகுது” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவளுடைய முகம் கன்றிச் சிவந்தது.
“கலாச்சாரம் விளங்காத ஆளயிருக்கியே..இன்னும் பிச்சைக்காரத்தனமாய் கதைக்கிறயே” என்றாள்.
இல்லை சசி.... அந்நிய நாட்டில் எங்களுடைய கலாச்சாரத்தில் நாங்கள் வாழ்வதுதான் எங்களுக்கு பெருமை”என்று சிவா முனு முனுத்தான்.
சசி வெடுக்கன முகத்தை திருப்பிக் கொண்டு....
“உன்ர இயக்கக் கதைகள் எனக்கு வேண்டாம்...வீடு தூங்கி தெருத் தெருவாக திாிந்த உன்னை எடுத்து விட்டதுதான் என் தவறு” என்றாள்.
“இல்லையென்று சொல்லல்லை.. வீடு வீடாய் தூங்கியதும் தெருத் தெருவாக திாிந்ததும் என் வயிற்றை நிரப்புவதற்காக அல்ல.. ஒரு தேசத்தின் எல்லையை தொடுவதற்காக சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக துன்பக் கேணியிலிருந்து மக்களை மீட்பதற்காகத்தான்.அது தவறாக உனக்குத் தொியலாம் என்னைப்பொறுத்த மட்டில் அது சாியாகத்தான் படுகுது உன்னளவில் அது பிழையாகத் தொிந்தால் அதற்காக நான் வருத்தப்படப் போவதில்லை.என்றேனும் ஒரு நாள் என்னை இழந்திட்டாய் என்று நினைத்து நினைத்து அழுவாய் என்ற நம்பிக்கை எனக்குன்டு” என்றான்.
அவள் மெளனமாய் நின்றாள்.எல்லாவற்றையும் விளங்கியும் விளங்காதவள் போல். கணப்பொழுதில் சிவாவின் முகத்தை கோபத்தோடு பார்த்தாள்.மூஞ்சி எட்டு முழத்தில் வீங்கியது. ஏதோ உள்ளத்தில் ஒரு வித உத்வேகம் எழுந்து உடல் நிலையில் ஒரு மாற்றத்தை அவளில் கொண்டு வந்தது.
“உனக்கு விசர் உன்னோடெல்லாம் கதைப்பதற்கு நேரமில்லை” என்று சொல்லிக் கொண்டு கோப்பி ரேபிலில் இருந்த லெதா பையை கையில் எடுத்து வலது பக்கமாக மாட்டிக்கொண்டாள்.தலையைக் குனிந்து சப்பாத்தை போட்டாள்.வெளியே போவதற்காக...
“சசி கொஞ்சம் பொறு...”
அவள் அசையாத சிலை போல் நின்றாள்.
“நான் நாளை மறுநாள் கொழும்புக்கு போறத்துக்குாிய ஏற்ப்படெல்லாம் செய்து விட்டன்.இப்போது ஒருமனிதனின்பெறுமதியைஉன்னால்உணரமுடியவில்லை.அந்தளவுக்கு உனது உள்ளத்தில் நான் என்ற இறுமாப்பு இருக்கிறது.உன்னுடைய உள்ளத்தில் உறைந்து கிடக்கிற அழுக்குகள் கழுவப்பட்டு ஒரு தூய மனதோடு என்னை உன் வாழ்கை துனையாக எப்போது ஏற்றுக் கொள்கின்ற பக்குவநிலை வருமோ அப்போது கடிதம் போடு.... இல்லையே கடல் கடந்து வா..அதுவரை உனக்காக காத்திருப்பேன்....”
அவள் பேசமல் பறையாமல் இடத்தை விட்;டு நகாந்தாள்.
அவன் முகத்தில் மந்தகாசம் தவழ்ந்தது.அமைதியான தூக்கத்திற்கு கட்டிலை நோக்கி போனான்.
(முற்றும்)
danieljeeva@rogers.com

Friday, April 21, 2006

தவிப்பு- நாவாந்துறைடானியல்ஜீவா

என்னெண்டு தெரியேலை நாரி போட்டு விண்விண்ணென்று குத்தி, உளைஞ்சு கொண்டு இருக்கு. கால்வேற தசை இறுகி நொந்து கொண்டிருக்கு. நேற்று வேலை தேடி அதிகம் அலைந்ததாலோ இந்த உடல் வலியோ... கொஞ்சம் நோ எடுபடுமெண்டு நினைச்சுத்தான் சுடு தண்ணீயில கொஞ்சம் பச்சத்தண்ணீ கலந்து குளிச்சுட்டு வந்தனான்.நல்ல வெக்கையாய் இருக்குது. குளிச்சிட்டு வந்தாலும் உடம்பு பிசு பிசுத்தபடி. அப்பாட்மென்கா£¤ கீற்றரை நல்லாக் கூட்டிப் போட்டாள் போல இருக்கு. அவ கூட்டினாப் போல என்ன எங்கட கீற்றரால குறைச்சால் சா¤யாய் போய்விடும் எண்டு நினைச்சுத்தான் குளிச்சிற்று வெளியில வரக்கில கீற்றரை நல்லாக் குறைச்சுப் போட்டு வந்தனான். அப்படியிருந்தும், இப்புடி வெக்கையாய் இருக்கு.... உடம்பிலே வேற சேட்டு போட்டிருக்க வேண்டிய நிலை. மாமி எந்த நேரமும் வீட்டில் இருக்கும் போது கொஞ்சம் கூச்சமாய் இருக்கும் அதனால் என்டில்ல, ஊ£¤ல இருக்கும்போது கூட அப்படித்தான் எந்த வெக்கையாய் இருந்தாலும் உடம்பில் இருக்கிற சேட்டை கழட்ட மாட்டேன். அது என்ர பரவனி புத்தியெண்டு அம்மா சொல்லுவ. இப்ப முப்பது வயதாகிட்டு, உடம் பெல்லாம் மசுக்குட்டி மயிர் படர்ந்து கிடக்கிறது போல. என் உடம்பு முழுவதும். அதுவும் கூச்சத்துக்கு காரணமாயிருக்கலாம். சீச்...சீ... அப்படியும் சொல்ல ஏலாது. நான் பிறப்பாலே கொஞ்சம் கூச்சப்பட்டவன் தான். ஒரு தாழ்வுச் சிக்கல் எண்டுகூட சொல்லலாம். என்ர மனசு தேவையில்லாமல் எதை எதை யோவெல்லாம் அலட்டிக்கொண்டு இருக்குது என்று என் மனம் சொல்லியது.தொங்கப் போடப்பட்ட என் தலையை மேலே து£க்கிக் கொண்டு சோபாவில் இருந்த மாமியை நோக்கி என் கண்களின் பார்வையை நிலை நிறுத்தினேன். ஏதோ ஆழ்ந்த யோசினையிலிருந்த மாமி என்னை நோக்கி பார்வை வீச்சால் ஒரு தடவை உலாவவிட்டுவிட்டு, ”தம்பி ஏதும் குடியுமென்?” என்று கேட்டாள்.”வேண்டாம் மாமி. காலையில எழும்பின கையோடு ஒரு தேத்தணீ போட்டுக் குடிச்சிட்டன். நேற்று ஸ்£¦ல் பக்கமாக வேலைக்கு அலைஞ்சதில கால் சாடையாய் நோகுது”.”நேற்று நீங்க வேலை தேடப் போய்ற்றேங்க எண்டுதான் சொன்னனான். அதுக்கு அவள் என்னைத் தீண்டு போட்டாள். நீங்க வேலை தேடப் போறதில்லையாம், ஊர் சுற்றிப் போட்டு சாப்பாட்டு நேரம் பார்த்து வாறியளாம் எண்டு கவிதா சொல்லுறாள். கல்யாண றெஐ¤ஸ்ரேசன் வருகிற திங்கக்கிழமை ஸ்காபரோ ரவுண் சென்ரலில பதிவு செய்கிறதாம். கல்யாணம் மா¤யகொறற்றி சேச்சிலை ஒழுங்கு பண்ணியிருக்கிறாளாம். கல்யாணக்காட்டு அடிக்கிறதுக்கு பரடைஸ் அச்சகத்தில குடுத்திட்டாளாம். என்னமோ எனக்கு பயமாக இருக்குது. தம்பி உன்ர போக்குக்கும் அவளின்ர போக்குக்கும் என்று சொல்லி முடிப்பதற்குள், நான் குறுக்கிட்டு,”இதெல்லாத்தையும் என்னோடு கதைச் சிருக்கலாம்தானே.... அவ ஏன் என்னோட முகம்விட்டு கதைக்கிறாவில்ல நான் என்ன அவவ திண்டா போடுவன்...?””தொண்ணு£று நாட்களில்ல ஏதாவது செய்தே ஆகனும். இல்லையென்றால் அது பொ¤ய சிக்கலில வந்து முடியும்.” மாமி சொல்லும் போதே கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது.அச்சம் படர்ந்த பார்வையோடு மாமியின் முகத்தைப் பார்த்தேன். பாவம் மனிசி. ஒரேயொரு பிள்ளை. நல்ல அழகான பெயர் கவிதா. நான் வந்து ஒரு மாதத்திற்கு மேலாகுது. ஒரு நாள் கூட குண்டி குத்தி இருந்து, என்கூட கதைச்சது கிடையாது. எங்கட வீட்டாரும், மாமியும் விரும்பித் தான் இந்தக் கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணினவிய, என்ன மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு வருடம்தான் இந்த உறவு தொடங்கி, எனக்கு நல்லாய் நினைவுகூட இருக்கு. மன்னா£¤லே பனங்கட்டிக் கொட்டிலில் அகதியாய் அம்மமாக்களோடு இருக்கக்கேல ஒரு நாள் இரவு ஒன்பது மணியிருக்கும் எண்டு நினைக்கிறேன். மாமி ரெலிபோன் எடுத்து அம்மாக்கிட்ட கல்யாணம் சம்மந்தமாக கேட்டா. அம்மா என்னட்ட கேக்காமலே ஓமெண்டு சொல்லிப்போட்டா.... வெளிநாட்டுச் சம்மந்த மல்ல! அதுமட்டுமல்ல அம்மா சொல்லுத் தட்டாத பிள்ளையல்ல. நான், எப்படியோஇங்க வந்து சேர்ந்துட்டன். வாழ்வுதான் திசை தொ¤யாமல்இருக்கிறது. கவிதாவை கல்யாணம் செய்வதா....? நினைக்கவே மனசு எ£¤ச்சல அடைகிறது. வாழ்வின் நௌ¤வு சுழிவு தொ¤யாத எனக்கு, வாழ்க்கைத் துணைவியாய் வருபவள்..? எந்தக கோணத்தில் பார்த்தாலும், அவளின் அந்நிய கலாச்சாரத்துக்குள் என் மனம் அடங்க மறுக்கிறது. நெஞ்சு நொந்து சுருங்குகிறது.”தம்பி என்ன மோன கடுமையாய் யோசிக்கிறியள்?” மாமி கேட்டதும் நினைவிலிருந்து சுயத்திற்கு வந்தேன்.”என்ன தம்பி எத்தனை நாளாய் போய்ச்சு....ஒருநாள் கூட மனம் திறந்து கதைச்சது கிடையாது. வேலைக்கு போறாள், வாறாள், சாப்பிறாள், தன்ர பாட்டில போய் நெத்திர கொள்ளுறாள். விடிய எழும்பினா வேலைக்கு போறாள். இதென்னெண்டு ஒண்டுமா பு£¤யல....? இங்க என்ன தம்பி....பொ¤ய மனுசங்க எண்டு யாரையும் மதிப்பதில்லை. எத்தனை தாய் தேப்பன்மார் பெத்துப்போட்ட பிள்ளைகளை நினைச்சு கண்ணீர் வடிக்கிறாங்க....நான் என்னால ஆனமட்டும் அவளுக்கு புத்திமதி கூறிப்போட்டேன் அவளும் கிறுங்கிற மாதி£¤ தொ¤யல....”சற்று மௌனித்து விட்டு மீண்டும் தொடங்கினா...”கல்யாணம் பேசும் போதே இவள் விருப்பமில்லையெண்டு சொல்லிந்தால் இந்தளவுக்கு வந்திருக்காது. இப்ப என்னண்டால் நீங்க வந்த பின்ன மூஞ்சியைக் காட்டிக் கொண்டு தி£¤யிறாள். என்ர இவர் இருந்திருந்தாலும் ஏதாவது சொல்லிக்கில்லி சா¤க்கட்டிப் போடுவார். அவரை கோதா£¤யில வீழந்து போன, பிரண்டு போன, ஆமிக்காரன் கடலுக்கு போய்விட்டு வரக்கில சுட்டுப் போட்டானுங்க. அதிலயிருந்து ஊரக்குள்ள இருக்கவே பிடிப்பில்லாமல் போய்ச்சுது. எனக்கு அப்பதான் கவிதா ஸ்பொன்சர் பண்ணி எடுத்தவள். வந்ததிலிருந்து ஒருதாய் எண்டு என்ன மதிச்சு நடந்தது கிடையாது. என்ன செய்யிறது. “..தென்னையைப் பெற்றால்இளநீரு, பிள்ளையப் பெற்றால் கண்ணீரு என்று தொ¤யாமல்தானா பாடினாங்க...” மாமியின் கண்கள் கலங்கியது. நான் கண் வெட்டாது, மாமியின் பேச்சையே உன்னித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்.கொஞ்ச நேரத்தால மாமி விம்மி....விம்மி அழத்தொடங்கினா. அழுது கொண்டே...”என்ர இவர் தங்கப்பவுண். நான் கல்யாணம் செய்யிறத்து முதல் அவர்கூட பேசியதே கிடையாது. ஒரு முறையில் பார்த்தால் அவர் சொந்தம் தான். எங்கட வீட்டுக்காரரும், அவங்கட வீட்டுக்காரரும் பேசித்தான் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சாங்க நான் கூட பொ¤சாப் படிச்சது கிடையாது. இவர் களங்கண்ணி வலைத் தொழில் சாகிற வரையும் செய்தவர். சிகரட் குடிப்பழக்கம் கிடையாது. வெத்திலை பாக்குக்கூட போடுறது கிடையாது. சா¤யாய் உங்களைப் போல தான் அவற்ற குணம். வலைஇழுக்க சாமத்தில போகக்கில என்ன எழுப்புங்கோ. நான் தேத்தண்ணீ போட்டுத் தாறன் எண்டு சொன்னா அவர் சொல்லுவார், “நீ ஏன்£¤ அந்தச் சாமத்தில எழும்பி உன்ர நித்திரையை குழப்பிறாய். நான் போகக்கில சந்தியில காக்கவட கடையில ஒரு தேத்தண்ணீ குடிச்சிட்டு போறனடி” எண்டு சொல்லுவார். நல்ல மனுசன். வீட்டில சும்மா எண்டு இருக்க மாட்டார். விறகு கொத்தித் தருவார். மிளகாய்த்து£ள் இடிச்சுத் தருவார், வலை பொத்துவார். நான் கொஞ்ச நேரம் கூட அவர விட்டிட்டு இருக்க மாட்டன். எங்கயும் வெளியால அவர் போனவரென்டால் எப்ப வருவார்.... எப்ப வருவார் எண்டு வாசலிலேயே பார்த்துக் கொண்டிருப்பேன். அவரும் அப்படித்தான் எங்கயும் போனால் நேரத்தமினக் கெடுத்தாமல் சுறுக்கென்று வந்துடுவார்.இதென்ன இந்தக் காலத்து புள்ளயல நினைச்சாலே கவலையாய் இருக்குது. இவள் கவிதாவிக்குப் புறகு எங்களுக்கு ஒரு புள்ளயும் பிறக்கேல அதால அவளை கொஞ்சம் செல்லம் கொடுத்து வளத்திட்டோம். மாமியின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டு வந்தது. கனத்த அழுகுரல் அடங்கிப் போகவும். தொலைபேசி கிணுகிணுக்கவும் சா¤யாய் இருந்தது. மாமி தொலைபேசி இருக்கும் இடம் தேடிப் போய் தொலைபேசியை எடுத்து “கலோ” என்று மாமி சொல்ல....மறுமுனையிலிருந்து ஏதோ குரல் வர....“ஆரு கவிதாவ?” என்று மாமி கேட்டா.இனியும் இந்தக் கதிரையில் தொங்கிக் கொண்டிருக்க மனம் இடம் கொடுக்கல. சடக்கென எழும்பி படுக்கை அறைக்குள் வந்தேன். இனம்பு£¤யாத சந்தேகம் இதயத்துள் குடிகொண்டது. குந்திதேவி கர்ணனைப் பெற்றதும் தன்மான உணர்ச்சி காரணமாய் தான் பெற்ற மகனேயே கங்கையில் விட்டது போல் கவிதாவையும் பிறந்தவுடன் அவள் குணத்தை மாமி அறிந்திருந்தால் கட்டையடி முனங்கால எறிந்திருப்பாளோ கவிதாவை....என்னுள் தேங்கிக் கிடந்த தேக அலுப்பும், வேதனையும் கண்ணீர் வழி கசிந்தது. உடலுழைப்பில் உரமேறிய உடலில் சந்தேக வலை மாயமாய் வந்து மடிந்து கொண்டது. கவிதாவின் வாழ்வின் மேல் இருந்த என் மதிப்பீடுகள் மங்கிப்போய் மாமியின் மீது சந்தேகம் படர்ந்தது.மாமி வேணு மெண்டு திட்டமிட்டு இந்தக் கதை கதைக்கிறவ...? அச்சம், அருவருப்புத் தன்மையோடு என்னுள் அ£¤யாசனம் ஏறியது.இவகாட்டும் பா¤வும் பாசமும் என்மீது எதற்காக....? ஆர்வத்தை நாசுக்காக புலப்படுத்தி தன்மனதில் இடம் பிடிக்கிற முயற்சியா?அறுபதோ, அறுபத்தெட்டோ தொ¤யல.இந்தக் கிழட்டு வயதுக்கு ஒரு பொடியன் தேவையாக்கும். தன்ர புருசன்ர குணம் மாதி£¤ எண்டு என்னைப் பார்த்து எந்தத் துணிவில சொல்லுவா? கனடாவில பொம்பிளையல் சா¤யில்ல எண்டு ஊ£¤ல இருக்கேக்க சொன்னவிய அது சா¤யாய்ப் போச்சு. நேற்று தலையிடிக்குது எண்டு சொன்னவுடன் பாஞ்சு விழுந்து ஓடிவந்து நெத்தியில விக்ஸ் தடவி விட்ட வடிவை பார்த்தாலே அவ வேற பிளான்னில என்ன மடக்கப் பாக்கிற போல. எனக்குள் இருந்த கோபம் ஐயமற்று மாமியில் முடங்கியது. இன்டைக்கு இரண்டில் ஒண்டு பார்க்கத்தான் வேணும் எண்டு நினைத்துக் கொண்டு கதவைத் திறந்து வெளியால் வருவதற்கும், திடீரென வந்த ஒப்பா£¤ச் சத்தத்துடன் நான் திறக்க வந்த கதவை மாமி தட்டவும் சா¤யாய் இருந்தது.”தம்பி....தம்பி....” என்று தலையில அடிச்சபடி நின்ற மாமியின் கோலத்தைக் கண்டதும், கொப்பளித்துக் கொண்டு வந்த கோபம் பெட்டிப் பாம்பாய் அடங்கியது. என்னங்க....என்னங்க.... என்னங்க நடந்துட்டெண்டு சொல்லிப் போட்டுத் தான் அழுங்களன்?அது ஏன் கேப்பான்..? அந்த தலையால தெறிச்சுப் போவாள், கவிதா யாரோ கயனாக் காரனோடு வேலை செய்யிற இடத்தில பழக்கமாம். அவனோடயே தான் இருக்கப் போறன் எண்டு சொல்லிப் போட்டுப் போறாள். குறுக்கால விழுந்து போவாள். பெத்து வளத்துவிட்ட நன்றியையும் மறந்துட்டு எளியன்தனமான வேலை செய்து போட்டாள். “..அவள் செத்துப் போய்ற்றாள்...அவள் செத்துப் போய்ற்றாள்....” என்று சொல்லி நெஞ்சில அடிச்சு அழுது கொண்டிருந்தா மாமி. நான் மலைத்துப் போனேன்....எதுவும் பேசாமல் ஊமையாய் நின்றேன். பிள்ளையைப் பி£¤ந்த பி£¤வு ரேகை முகத்தில் இழையோடியது .விழிகள் சிவந்து வீங்கியது . அழுகை நின்ற பாடில்லை, அவ அவமானப்பட்டது போல் துடித்து அழுதுகொண்டே பார்வை என்னில் நிலை நிறுத்திக் கொண்டு, “நான் செத்துப் போனால்.., கொள்ளி வைக்கிறது நீங்க தான். என்னுடைய பிள்ளை நீங்கதான். நான் லோயரோட கதைச்சு இங்கேயே இருக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணுறேன். நான் தனிக்கட்டையில்ல எனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்ற சந்தோசத்தில வாழந்து செத்துப் போவேன்.மாமி சொல்லும்போது என் மனக் கண்கள் என்னையறியாமல் அழுதது. என் தவறான கணிப்பு தகர்ந்து, கோபங்களெல்லாம் சிதிலமாகி.., கழிவிரக்கம் கொண்டது. நான் இழந்த தாயே என் முன்னால் நிற்பது போல் தோன்றியது. ஜயமும், அச்சமும் அகன்று அகல் விளக்கொளியொன்று என்னுள் படர்ந்தது.

Tuesday, April 18, 2006

எனக்கு பிடித்த கதைகள்-டானியல்ஜீவா-

வளைந்து போன வீரவாள்
-செழியன்-

மார்கழி மாத விடுமுறை விடவும் மாமா வந்து இறங்கவும் சரியாக இருந்தது. மார்கழி மாத விடுமுறையில் பெரிய பெரிய வசதிகள் எல்லாம் இருக்கின்றது. முப்பது நாட்களுக்கும் குறையாமல் வருகின்ற மிகப் பெரிய பள்ளிக்கூட விடுமுறை இது என்பதால் பள்ளிக்கூடம் போகாதவர்களுக்கும் கூட முக்கியத்துவம் வாய்ந்த விடுமுறை இது. இறுதிப் பரீட்சை முடிந்ததின் பின்னர் வருவதால் "புத்தகத்தை எடுத்துப் படியடா" என்கின்;ற வன்முறைகள் எதுவுமே கிடையாது. அன்டை நாட்டுக்கு எதிரான பெரும் படையெடுப்புக்குத் தயாராவது போல, அடுத்த கட்டப் பயிர்ச்செய்கைக்காக ஒட்டுமொத்த யாழ்ப்பாணமும் தயாராகின்ற காலகட்டம் என்பதால் "மிளகாய்ப் பழம் பிடுங்க வாடா", "கத்தரிக்காயை கழுவிச் சாக்கில் கட்டு" என்கின்ற சிறுவர் கள் மீதான கொடுமைகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுவிடும். "தம்பியின் கொப்பிப்பேப்பரை கிழித்து விதம் விதமாகக் கப்பல் செய்து விடுவது", "முழங்காலை நனைத்துக் கொண்டு நின்று, தெருவில் ஓடி வருகின்ற வெள்ளத்தை கரிகாலன் பாணியில் அணை கட்டி வெடிவாணரின் வளவுக்குள்ளை விடுகின்றது" போன்ற வித்தைகளைக் கற்றிருந்தால் இந்த மார்கழி மழை கூட ஒரு பெரிய பிரச்சனை கிடையாது. ஒட்டுமொத்தமாகக் கூறுவது என்றால் இடை இடையே வந்து போகின்ற பேச்சுவார்த்தைக் காலகட்ட குதூகலம் போல மார்கழி விடுமுறை இருக்கும். இதிலே வசதி என்னவென்றால் இந்த கண்காணிப்புக் குழு போன்ற பிரச்சனை ஒன்றுமே கிடையவே கிடையாது. வழமைபோல ஒரு பழைய ச+ட்கேசுடன் மாமா வந்து இறங்கினார். அதற்கு இரண்டு ப+ட்டு போட்டுப் ப+ட்டி வைத்திருப்பார். சூட்கேசுக்குள் முகச்சவரம் செய்வதற்கான சவர அலகு, சின்னக் கண்ணாடி மற்றும் தட்டுமுட்டுச் சாமான்களுடன் ஒரு கால்சட்டையும் இரண்டு மூன்று சட்டைகளுடன் ஒரு கிழிந்த பெனியனும் இருக்கும். நிச்சயமாக சாரம் மற்றும் துவாய் வைத்திருக்க மாட்டார்;. இரண்டு நாளைக்கு ஒரு தடைவை நாங்கள் தான் அவற்றை அவருக்கு "சப்ளை" செய்ய வேண்டும். இந்த சமாசாரங்களுக்கும் அப்பால் ஒரு புத்தம் புதிய கத்தி அல்லது புது மண்வெட்டி, வாள் அல்லதும் போனால் கூர்மையான ஒரு கோடாலி நிச்சயமாய் சூட்கேசுக்குள் வைத்திருப்பார். பழைய சிங்களப் பேப்பர் ஒன்றில் மிகக் கவணமாகச் சுற்றப்பட்டு, அடிப் பெட்டிக்குள் இது பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். யாராவது இதைப் பார்த்தால் மாமா ஏதோ பெரிய சண்டியர் என்று நிச்சயமாக நம்புவார்கள். பதினாறு வயதில் அப்புவிடம் அடிவாங்கிக் கொண்டு வீட்டை விட்டு ஓடிப்போனவர்தான் இந்த மாமா. "முற்றத்துக் கொடியில் காய்ந்து கொண்டிருந்த அப்புவின் கோமணத்தில் முடிந்திருந்த இருபது ரூபாயைக் களவெடுத்துக் கொண்டு ஓடிப் போய்ட்டான்"- ஆச்சி அலுக்காமல் அடிக்கடி இதைச் சொல்லுவா. டிக்கட்டும் எடுக்காமல் இரயில் ஏறிப் போனவர் சிங்களம், இங்கிலீஸ் எல்லாம் அளவாகப் படித்து இன்றைக்குப் பெரிய ஒரு அரசாங்க உத்தியோகத்தர். இப்போ அநுராதபுரத்தில் இருந்து இருபது மைல் தூரத்தில் இருக்கின்ற ஒரு சிங்களப் பகுதியில் "பெரும் தெருக்கள் திணைக்களத்தில்" ஸ்டோர் கீப்பராக வேலை செய்கிறார். அடிக்கடி வேலை காரண நிமிர்த்தம் அவருக்கு இட மாற்றங்கள் கிடைக்கும். விடுமுறைக்கு வந்து போகிறபோது தவறாமல் புதுக் கத்தி, கரண்டி, கோடரி என்று விதம் விதமாய்க் கொண்டு வந்து அம்மா, பெரியம்மா, சின்னம்மாவுக்கு கொடுத்து, பதிலாக உடைந்து முறிந்த பழைய சாமான்களை அள்ளிக் கொண்டு போய் கணக்குக் காட்டுவதில் ஆள் ஒரு பெரிய கிள்ளாடி. அவருடைய இந்த சேவைக்காக யாழ்ப்பாணம் வரும் போதெல்லாம் மேலதிக உபசரிப்புகள் எப்போதும் அவருக்கு உண்டு. இது மட்டுமல்லாது "தடியன்;", "எருமையன்", "குத்தியன்" என்று அப்பா, பெரியப்பா மற்றும் சின்னய்யாவை, அவர்கள் இல்லாத சமயமாகப் பார்த்து மாமா திட்டுவதைப்பற்றி மூன்று பெண்களும் கண்டு கொள்வதும் இல்லை. மாமா வந்தால் எங்களுடைய வீட்டில் தான் தங்குவார். அந்த இரண்டு மூன்று கிழமைக்குள் மாமா நடத்துகின்ற தர்ப்பாரில் அம்மா மனம் கிழிந்து, இட்டிலி அவிக்கின்ற துணிபோல நொய்ந்து போய்விடுவாள். "இவருக்குத் தான் ஏதொ ஒரு பெரிய குறு நில மன்னன் என்ற நினைப்பு." ஆத்திரத்தில் அம்மா ஒரு தடைவை வாய் விட்டுக் கூறினாலும் இது மாமாவுக்கு கேட்டு விட்டதோ என்று பயந்து போனாள். நல்ல வேளை அது எனக்கு மட்டும் தான் கேட்டது. ஆனால் எனக்கு மாமாவைப் பார்க்கின்ற போதெல்லாம் குறுநில மன்னனைப் போலத் தோன்றியதே இல்லை. கல்கியின் தொடர் கதையில் வருகின்ற வீர பாண்டியனின் நினைவுதான் வரும். வீரவாளை இழந்து விட்ட பின்னரும் கம்பீரமாகக் குரல் எழுப்பிப் பாட்டுப் பாடிக் கொண்டு திரிகின்ற சுந்தர பாண்டியன். கல்கியின் கதையில் ஒரு வசதி இருக்கிறது. ஆரசன் பிடிபட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலும் பிரச்சினை முடிந்து போவதில்லை. இந்த மணிமுடியையும், வீரவாளையும் மட்டும் எங்காவது ஒளித்து வைத்துவிட்டால் போதும். பிறகு சமயம் பார்த்து அந்த வீரவாளையும், முடியையும் யாராவது தூக்கிக் கொண்டு மறுபடி ஆட்சியைப் பிடித்துவிடலாம். நல்லகாலம் இந்த வசதி இப்பபோது கிடையாது. இருந்தால் யாருடைய துப்பாக்கியை யார் எடுத்துக் கொண்டு வந்து நிற்பார்கள் என்று சொல்ல முடியாது. மாமா வீரவாளை வெகு பவுத்திரமாக எங்கோ ஒளித்து வைத்திருப்பதாகவே எனக்குத் தோன்றும். எங்களுக்கும் இந்த மாமாவினால் பெரிய ஆக்கினை. ஏதோ ஆபத்து சமயத்துக்கென்று தயாராக வைத்திருப்பதைப் போல அவர் வைத்திருக்கும் ஒரே பெனியனையும் ஐட்டியையும் நானும் தம்பியும் தோய்த்துக் கொடுக்கவேண்டும். கை படாமல் அதைத் தோய்த்து எடுத்து அலசிக் காயப்போடுவது Nயுளுயு வின் புது முயற்சி போன்ற ஒரு அப+ர்வமான வேலை. இதை விட அவருடைய சாப்பாட்டுக் கோப்பை, தேத்தண்ணிக் கோப்பைகளைக் கழுவுவது, கடைக்குப் போய் அவர் சொல்லுற சாமான்கள் வாங்கிக் கொண்டு வருவது, சைக்கிளின் பின்னால் அவர் இருக்க, வேர்வை வழிய வழிய சைக்கிள் மிதிப்பது, வழியில் திடீரெனச் சைக்கிளை விட்டுக் குதித்து யாருடனாவது வம்பளக்கும் போது மிகப் பொறுமையாக காத்திருப்பது என்று பல விதமான வேலைகளும் எமக்கு இருக்கும். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு விடுவோம். மாமா கடைசியாய் யாழ்ப்பாணம் கூட்டிக் கொண்டு போய்க் காட்டுகின்ற படத்துக்குக்காகவும், மலாயன் கடை வடை, தேத்தண்ணிக்காகவும் இன்னும் எத்தனை வந்தாலும் தாங்கிக் கொள்ளலாம். "மாமாவுக்கு ஏன் மாமி இல்லை" என்று மிக நீண்ட காலமாக எனக்குள் குடைந்து கொண்டிருந்த கேள்வியை ஒரு நாள் பொறுக்க முடியாமல் அம்மாவிடம் கேட்டு விட்டேன். ஒரு தடைவ என்னை முறைத்துப் பார்த்தாள். " உனக்கு என்னத்துக்கடா?" என்று முறுகல் முறுகி விட்டு " மாமி செத்துப் போய்விட்டார்" என்று அம்மா சொல்லியதை நான் நம்பவில்லை. அம்மாவும் பெரியம்மாவும் குசு குசுக்கின்ற போது மிகத் தந்திரமாக ஒட்டுக் கதை கேட்டுத் தம்பி தான் விசயத்தை ஒரு நாள் கூறினான். ஒட்டுக் கதைகள் கேட்டு ஆளுக்கு ஆள் பிரச்சனைகள் உண்டு பண்ணுவது, இவனுக்கு கில்லி விளையாட்டுப் போல ஒரு விளையாட்டு. இவனைப் பார்த்தால் ஒட்டுக் கதை கேட்கின்றான் என்று யாருமே நம்ப மாட்டார்கள். அயன்ஸ்டீனின் ஏதோ ஒரு கொள்கையை எடுத்து பரீட்சித்துப் பார்ப்பதைப் போல பரபரப்பாக ஏதோ செய்து கொண்டிருப்பான். கைகள் கிறு கிறுவென வேகமாக வேலை செய்யும். நெற்றியையும் கண்களையும் அடிக்கடி சுருக்கியும் விரித்தும் தன்னுடைய மூளை அந்த இடத்தில் இல்லை என்று காட்டிக் கொள்வான், சில சமயம் தன்னுடைய பாட்டில் ஏதோ புலம்புவான். காதுகளை மட்டும் தன்னுடைய இந்த வேலைகளோடு எதுவும் சம்பந்தம் இல்லாமல் தள்ளி வைத்துக் கொள்வான். அதை எத்தனை பாகையில் சரியாக சரித்து வைத்துக் கொள்வது என்பது அவனுக்கு மட்டும் தெரிந்த கலை. "மாமி எப்பவோ ஓடிப்போய்டா." எனக்குக் கண்ணீர் வந்தது. பாவம் மாமி எவ்வளவு பொறுமையாய் இருந்திருப்பாள். மூவேந்தர்களுக்குள் இருந்திருக்கக் கூடிய அறிவு குறைந்த ஒரு மூட வேந்தனைப் போல் மாமா போட்ட மிக மட்டமான அட்டகாசங்களை எல்லாம் பொறுத்துக் கொண்ட வாயில்லாப் ப+ச்சி. அடிக்கடி மாமி கிணற்றுக் கட்டில் குந்தி இருந்து கண் கலங்குகின்ற காட்சி எனக்குள் வந்தது. அவள் கண்ணீர் கலந்த தண்ணீரைத்தான் ச+ழ இருந்த இந்த எல்லாக் குடும்பங்களுக்கும் குடித்திருக்கும். ஆனால் மாமியின் மீது எந்த ஒரு கருணையும் காட்ட மறுக்கின்றது. "மாமி ஓடிப் போயிருக்க மாட்டா, மாமா தான் துரத்தி விட்டிருப்பார்." நான் இப்படிச் சொன்னதையும் கேட்டு வைத்துக் கொண்டான் தம்பி. நேராக பெரிம்மா வீட்டுக்குப் போனான். போனவன் சின்னக்காவிடம் போட்டுக் கொடுத்து நல்ல பிள்ளை என்ற பட்டத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டான். தெருவில போன ஓணானை மடியில பிடிச்சுக் கட்டிவைச்ச மாதிரித்தான் என்னுடைய தம்பி. ஒரு மாதிரியான நிலையில் தான் தம்பியுடனான எனது வாழ்கை போய்கொண்டிருந்தது. அடிக்கடி என் காலை வாரிவிட்டு விடுவான். "வர வர உன்னுடைய பழக்கங்கள் சரியில்லை ஒரு இத்துனியாய் இருந்து கொண்டு பெரிய விசயங்களுக்கை தேவையில்லாம் மூக்கை நுளைக்கின்றாய். குஞ்சப்பாட்;டை சொல்லட்டே" சின்னக்கா மிரட்டினாள். அவள் லேசில சொல்லமாட்டாள். சொன்னால் அவள் தாற கடிதங்களைக் குடுக்க இனி வேற ஆளத்தான் அவள் பார்க்க வேண்டும். மாமியால் தாங்க முடியாத மாமாவின் அட்டூழியங்களை எல்லாம் என்னுடைய அம்மா என்ன வென்று தலைக்கு மேல்;; தாங்குகிறாள் என்பது எனக்கு அதிசயமாய் இல்லாவிட்டாலும், அது அற்புதங்களில் ஒன்றாக ஆவது இருக்கக் கூடியது என்று தோன்றியது. ஒட்டுக் கதை மன்னன் இதையும் கண்டு பிடித்துச் சொல்லி விட்டான். எங்களுடைய புது வீட்டைக் கட்டி முடிக்க வட்டியே இல்லாமல் இருபது ஆயிரம் ரூபாய் மாமா கொடுத்த கதை தெரிந்த பின்னர், அம்மா மிகவும் நியாயமாய் நடப்பதாகவே எனக்குத் தோன்றியது. நீதி நியாயங்கள் தெரிந்தவள். மாமா இந்த முறை வரும் போது எப்படியாவது எங்களுடைய ரேடியோவைக் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு நானும் தம்பியும் இருந்தோம். ஆனால் அவர் வழமை போல கொண்டுவரவில்லை. எனக்கும் தம்பிக்கும் சரியான கோபம் வந்தது. அவருக்கு முன்னால் காட்டிக்கொள்ளவில்லை. அது சாத்தியமான விடயமும் இல்லை. இந்த ரேடியோப் பிரச்சனை ஒரு நீண்ட காலப்பிரச்சனை. அப்பாவிடம் ஒரு பழைய பிலிப்ஸ் ரேடியோ இருந்தது. ஆறு மாதத்துக்கு ஒரு தடைவ அதற்கு மிகப் பெரிய பற்றி வாங்கிப் போடுவது கட்டுப்படி ஆகாது என்பது கூட பிரச்சனையாக இருந்ததில்லை. வாரத்துக்கு இரண்டு தடைவை மாமரத்துக்கும் புளிய மரத்துக்கும் இடையில் தொடுத்து கட்டியிருந்த ஏரியல் அறுந்து விழ விழ மறுபடியும் ஏறிக் கட்ட வேண்டும் என்பது பெரிய பிரச்சனை. ஒரு தடைவ மாமரத்தில் ஏறும் போது அப்பா சறுக்கி விழுந்தும் விட்டார். "இந்தக் குத்தியனுக்கு ஏன் இந்த வேலை?" என்று அம்மாவிடம் மாமா செல்லமாகத் திட்டினார். அம்மா இதுகளையெல்லாம் காதில் விழுந்த மாதிரியே காட்டிக் கொள்வதில்லை. "இந்த ரேடியோவை நான் முதியான்சேயிடம் கொடுத்து டிரான்சிஸ்டர் ரேடியோவாக மாற்றிக்கொண்டு வருகிறேன்" என்று கூறிக் கொண்டு போனவர் தான் இரண்டு வருடமாயும் திருப்பிக் கொண்டு வரவில்லை. ஒவ்வொரு முறையும் வரும் போது அடுத்த முறை கொண்டுவருவதாக சளைக்காமல் கூறுவார். "கழுவிக் காயப் போடும் போது மாமாவின் கோவணத்துக்குள் காஞ்சோண்டி இலையைப் ப+சி விடவேண்டும்." தம்பி கண்ணி வெடி வைப்பதற்குத் திட்டம் போட்டது போல திட்டம் போட்டான். இவனுடன் சேர்ந்து திட்டம் போடுவது காஞ்சோண்டி இலையை நானே ப+சிக் கொள்வதை விட மோசமான நிலைமைக்கு என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடும். இது எனக்குத் தெரியும். அதனால் அவனுடைய திட்டம் பிடித்திருந்தாலும் எடுத்த எடுப்பிலேயே நிராகரித்து விட்டேன். "சமாதான ரீதியான ஏதாவது திட்டம் போட்டால் தான் சரி" என்று நான் கூறியதை தம்பி சற்று சந்தேகத்துடனேயே பார்த்தான். சற்றும் எதிர்பாராமல் அம்மாவே ஒரு திட்டம் போட்டுக் கொடுத்தாள். "டேய் நீங்கள் இரண்டு பேரும் மாமா போகிற போது அவரோடையே போய், வரும் போது ரேடியோவையும் எடுத்துக் கொண்டு, மாமா வாங்கித் தாற அரிசியையும் கொண்டு வாங்கோவன்டா." மாமாவுக்கும் இந்தத் திடீர்த் திட்டம் பிடித்துக் கொண்டது ஏன் என்று பிறகு தான் எனக்கும் தம்பிக்கும் தெரிய வந்தது. அவர் சில மூட்டைகளை அநுராதபுரத்திற்கு கடத்தல் செய்ய என்னையும் தம்பியையும் நம்பி முழு ஏற்பாடுகளையும் செய்து முடித்தார். புது வருடம் முடிந்ததும் மாமாவின் விடுமுறையும் முடிவுக்கு வந்து விட்டது. வெங்காயம், செத்தல் மிளகாய், பாணிபோட்ட போயிலை சகிதம் இணுவில் ஸ்டேசனுக்குச் சென்று ரெயின் எடுப்பதற்காக நாங்கள் வெளிக்கிட்டோம். வேலிக்குப் பின்னால நின்று சர சர என்று சத்தம். பெரியம்மா அவரமாய் ஆனால் பதுங்கிப் பதுங்கி வந்தாள். பெரியம்மா முன் வாசல் வழியால் எங்கட வீட்டுக்கு வந்ததை ஒரு நாளும் நான் கண்டதேயில்லை. எப்பவும் அவள் பொழுது விழுந்ததுக்கும் பிறகு: வேலியைப் பொத்துக் கொண்டு, கிணத்தடிப் பக்கமாய் நின்று, திடீரென்று ஒரு மரத்துக்குப் பின்னாலை அல்லது ஆட்டுக் கொட்டிலுக்குள் பதுங்கி இருந்து அதிரடியாய் வந்து தரிசனம் தருவாள். அவளுக்கு என்ன பாதுகாப்புப் பிரச்சனை என்று கரிசனையாய் கேட்டறிய யாருமே யோசித்ததில்லை. கையில் கட்டுக் கிளுவம் இலையோட வந்த பெரியம்மா தம்பியின்ட காதுக்குள்ளை சொன்னாள் "ஆளுக்கொரு மூட்டையோடை வந்திடுங்கோடா." அநுராதபுரம் ஸ்டேசனில இறங்கி மாமாவின் குவாட்டசுக்கு போவதற்கான பஸ்சில் ஏறும் வரை பட்டவேதனைகளை சொல்ல முடியாது. என் தம்பிக்கு கை வீங்கியே விட்டது. இரகசியமாய் அழுதிருப்பான் போலவும் தோன்றியது. குவாட்டசுக்கு அருகிலேயே பஸ் நின்றது. இறங்கியதுமே மாமாவை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல லொக்கு பண்டா எங்களடிக்கு வந்து விட்டான். அவன் தான் அந்தக் குவாட்டசுக்கு காவல்காரன். இவனுக்கு காவலுக்கு இரண்டுபேரைப் போட வேண்டும் போல எனக்கிருந்தது. "ஐயா" என்று சிங்களத்தில் பணிவாக அழைத்தவன் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை மாமாவுக்கு தெரிவித்தான். மாமாவும் பதிலுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். லொக்கு பண்டா எங்களை ஆச்சரியமாகப் பார்த்தான். எங்களை மாமா சிங்களத்தில் அறிமுகம் செய்து வைத்தார். "ஓ.." என்று இழுத்தவன் "ஸ்கூல் எல்லாம் லீவு தானே இப்ப" என்று தமிழில் எங்களைப்பார்த்துக் கூறினான். மூட்டைகளை வெகு அனாயாசமாகத் தூக்கிக் கொண்டு வந்து இறக்கி வைத்தான். மாமாவின் இருப்பிடம் எனக்கு மிக்க அசௌகரியமாக இருந்தது. "எங்களுடைய ஆட்டுக் கொட்டில் இதைவிடப் பெரிசு" தம்பி குசு குசுத்தான். அவனுடைய காலில் நான் ஒரு மிதிமிதிக்க அமைதியாகி விட்டான். லொக்கு பண்டா காலையில் வருவதாகக் கூறி புறப்படும் போது "பெரிய மாத்தையா வந்து விட்டாரா?" என்று மாமா கேட்டார். "மாலையிலேயே வந்து விட்டார்" என்று கூறியபடி இருட்டுக்குள் போய் மறைந்துவிட்டான். "மாமா ரேடியோ எங்கே?" லொக்கு பண்டா போனதுமே ஆவலாய் கேட்டேன். அதை ஒரு தடவையாவது பார்த்துவிட்டால் பட்ட கஸ்டங்கள் நீங்கி விடும் போல இருந்தது. "இப்ப படுங்கோடா. அதையெல்லாம் காலையில பார்க்கலாம்" என்று கடுமையாகக் கூறினார். ஒரே ஒரு மரக்கட்டில் இருந்த அந்த இடத்தில் எப்படி படுப்பது என்று தீவிரமாகத் தம்பி யோசித்தான். மாஐpசியன் சர்க்காரைப் போல மாமா ஒரு இடத்தில் கைவைத்து இரண்டு சாக்குகளை எடுத்து தந்தார். "இதிலை படுங்கோ. சாராத்தாலை போர்த்துக் கொள்ளுங்கோ" எனக்கும் தம்பிக்கும் நித்திரை வரவில்லை. மாமாவின் குறட்டை சத்தம் கேட்டதும் தம்பி துள்ளி எழுந்தான். அந்த இருட்டுக்குள் பரபரப்பாக எதையோ தேடினான். கள்ள நாய். இவன் மாமாவின் காசை ஏதும் களவெடுக்கின்றான் போல. எனக்கு ஆத்திரம் வந்தது. "மாமாவை எழுப்பிச் சொல்லுவமோ" என்று நான் நினைக்க, மறுபடியும் என்னருகில் வந்து படுத்தான். மெல்ல என்னை சுரண்டினான். நான் ஆத்திரத்தில் பேசாமலே இருந்தேன். "ரேடியோ இருக்கிறது" என்று கூறினான். நான் திரும்பவே இல்லை. ஆனால் மனதுக்கு சந்தோசமாக இருந்தது. நின்மதியாக நித்திரை வந்தது. பரபரப்பாக காலையில் எழுந்த மாமா "இரண்டுபேரும் வெளிக்கிடுங்கோ" என்று அவசரப்படுத்தினார். எங்கு எதற்;கு என்ற எந்த விபரமும் மாமா வழமையாக கூறுவதில்லை. பாணிபோட்ட போயிலை மூட்டையில் இருந்து நல்லதாய் இரண்டு போயிலை கட்டுகளைத் தேடி எடுத்துக் கொண்டார். யாரையோ முக்கியமாக சந்திக்கப்போகின்றார் என்று நினைத்தேன். அந்த குவாட்டசை விட்டு வெளியேறி இன்னொரு குச்சு ஒழுங்கை வழியாக சிறிது தூரம் நடந்தோம். ஒரு சிறு கல் வீட்டுக்கு முன் நின்றார். எங்கள் இருவரையும் பார்த்தார். "ஒரு பிரச்சனையும் இல்லாமல் அமைதியாய் இருக்கவேண்டும்" என்று மிரட்டல் தொனியில் கூறினார். இப்படியான சந்தர்ப்பங்களில் என்னுடைய தலை எனக்கும் தெரியாமல் தானாகவே ஆடிவிடும். தம்பி யோசித்துத் தான் ஆட்டுவான். "பின்னாலேயே வாங்கோ" மூங்கிலால் செய்த படலையை திறந்து கொண்டு மாமா அந்த வீட்டு வளவுக்குள் காலடி வைத்தார். எனக்கு ஒரே பரபரப்பாக இருந்தது. சிங்கள மாமியைத் தான் சந்திக்கப் போகின்றோமோ? வீட்டுக் கதவைத்தட்ட ஒரு பெண்மணி கதவைத்திறந்தாள். அழகான பெண்மணிதான். மாமியா ஏற்பதற்கு எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை நான் தயார். "நோனா" சிங்களத்தில் மாமா கூறினார். "ஓ! யாப்பண இரிந்து வந்ததா?.... உல்லுக்கு வந்தி கொஞ்சம் இரிங்க." அந்தப் பெண் உள்ளே சென்று விட்டார். நானும் தம்பியும் ஒருவரை ஒருவர் கண்களால் பார்த்துக் கொண்டோம். தம்பியின் முகத்தில் பெரும் விசமம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. மாமா போயிலையை இரண்டு கைகளாலும் ஏந்தி ஒரு வீரனைப்போல தயாராக நின்று கொண்டிருந்தார். இரண்டு நிமிடத்தில் யாரோ வரும் காலடிச்;சத்தம் கேட்க மாமா பரபரப்பாகினார். வெறும் மேலுடன், கண்ணாடியும் சாரமும் அணிந்த ஒரு மனிதர் வர தடாலென்று மாமா சரிந்து விழுந்தார். மாமாவுக்கு என்ன? நான் திடுக்கிட்டேன். "மாத்தையா! புத்தாண்டு வாழ்த்துக்கள்" மாமாவின் குரல் பாதாளத்தில் இருந்து கரகரப்பாக கேட்டது. "ஓ. கே. நட்ராஐh" மாத்தையா கட்டைக் குரலில் கூறினார். அவர் தான் மாமாவின் மேலதிகாரி. ஏதோ ஒரு வளையில் மாட்டிக் கொண்ட கரடியைப் போல், மிக மெல்லமாக, கஸ்டப்பட்டு எழுந்த மாமா, சளைக்காமல் தனது முதுகை வளைத்து குனிந்து மாத்தையாவிடம் பாணிப் போயிலையை நீட்டினார். பாணிப்போயிலையைக் கண்டதும் மாத்தையாவின் விரிந்த முகம் அகலப்பக்கமாக இன்னமும் விரிந்தது. தம்பியைப் பார்த்தேன். காணக் கூடாததைக் கண்டதைப் போல் அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தான். மறுபடி அநுராதபுரம் புகையிரத நிலையத்தில் இருந்து, இரயில் வண்டி புறப்படும் வரை எதைப்பற்றியுமே அவன் மூச்சே திறக்கவில்லை. இப்போதெல்லாம் மாமாவைப் பார்க்கின்ற போது எனக்கு பாண்டியனின் நினை வருவதேயில்லை. வளைந்து போன ஒரு வாளின் நினைவு மட்டும் மறுபடி மறுபடி வந்து தொலைக்கின்றது. (ஜேர்மன் "பூவரசு" இதழ் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பசிசு பெற்றது)

எனக்கு பிடித்த கதைகள் 2 -டானியல்ஜீவா-

உயிர் விளையாட்டு
- மைக்கேல் -

அவனும் அவளும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்கள். முதியவர்களுக்கான பூங்காவுக்குள் வழிதவறி நுழைந்தவர்கள் போல வரவேற்பறையில் டாக்டரின் அழைப்புக்காக அவன் காத்திருக்க, "உங்களுக்கு ஒண்டுமே இருக்காது இந்த சிகரெட் இழவைக் கொஞ்சம் குறைச்சால் எல்லாம் சரியாயிடும். எனக்காக இல்லாவிட்டாலும் இவன் பாரதிக்காகிலும் விட்டுத் துலையுங்கோ" என்னும் புத்திமதியும், மனஉளைச்சலுமாக, வியர்வை பூத்திருந்த மூக்கைத் துடைத்து விட்டு, உள்ளே இருக்கும் குழந்தையைத் தடவும் வாஞ்சையுடன், வளர்ந்து சரிந்திருந்த வயிற்றைச் செல்லமாகத் தடவினாள். குனிந்து வயிற்றைப் பார்த்து "நௌ¤யுறான்" என்றாள். அவன் அவள் கூறுவது எல்லாவற்றையும் கேட்டபடி, திரும்பி அவளது வயிற்றைப் பார்த்தான். பிந்தித்தான் போய்விட்டது. திருமணமாகி ஏழு வருடங்கள் கழித்து, சந்தோசம் ஒன்று ஐனித்து வளர்கிறது மனைவியின் வயிற்றில். இது பிறந்து, வளர்ந்து, பாடசாலை போகும்போது கிழட்டு அப்பாவைத்தான் பார்க்க நேரிடும். இளமையிலேயே ஊடுநரை பிடித்துவிட்டது. இன்னும் பதினைந்து வருடங்களில் தலையெங்கும் நரைத்த மல்லிகை பூத்துக் குலுங்கும். ஆயினும் சந்ததி கிளைத்துவிட்டது. பாபுவும் தேவியும் ஆலம்விதையொன்றை இந்த மண்ணில் ஊன்றிவிட்டனர். அது வேர்விட்டு வளர்ந்து, விழுது அனுப்பி, தோள் கொடுத்து, சிலபோதுகளில் கவிதை எழுதி மானுஷீகம் பேசி, தான் வாழ்ந்த முத்திரையாய் இந்தப் பூமியில் இன்னொரு விதையை நட்டுவிட்டுச் செல்லும். பனித்துச் சொரியும் வர்ணவாணங்களாக சந்ததிக்கொடி பரவிப் படரும். மின்னும் மறையும், பின் இன்னொன்றாய் நிலைக்கும். நெஞ்சு மீண்டும் இறுகியது. கொடிய ராட்ஷசன் தன் முரட்டுக்கரங்களால் இறுக்கி நொறுக்குவது போல, இடப்பக்கம் நெஞ்சு வலிக்கிறது. மூச்சுத் தடுமாறி அதன் இசைவை இழக்கிறது. நிமிர்ந்திருக்க முடியாமல் முன்வரிசைக் கதிரையில் தலையைச் சாய்த்தான். வலி குறையவில்லை. உரசி உரசி எரிகிறது தசைக்கோளங்கள். அவள், அவனது நெஞ்சைத் தடவியவாறு "சிகரெட் சளியாத்தான்" இருக்கும் என்று புலம்புகிறாள். அவனால் கதிரையில் வாட்டமாக இருக்கமுடியவில்லை. பாதத்தால் குளிர் ஊடுருவுவதை உணர்கிறான். உறைந்த நீரில் பாதத்தை அமிழ்த்தியதுபோல காற்பெருவிரலில் இருந்து தேகமெங்கும் வியாபிக்கிறது குளிர். தலைமயிர்க்கால்களில் வேர்வை துளிர்த்து நனைக்கிறது. இதென்ன முரண் என்று குளம்பிப் போனான். குளிரும் வேர்வையும் எதிரெதிர் திசையிலிருந்து இதயத்தை நோக்கி நகர்ந்து வருகிறதே? வலி மேலும் மேலும் உச்சநிலையடைகிறது. தீக்கற்றை ஒன்றை இடப்பக்க மார்பில் அழுத்தித் தேய்த்தது மாதிரி தசைநார்கள் கொதிக்கின்றன. மூளைக்குள் யாரோ கல் எறிந்திருக்கிறார்கள். எண்ணங்கள், பயங்கள், வேதனைகள், எல்லாம் தளும்பி வழிகிறது தலையில் சொரியும் வேர்வையுடன். "கூப்பிடுகிறார்கள்" என்றாள். "ஜந்தாம் நம்பர் அறைக்குக் கூப்பிடுகிறார்கள். நானும் கூட வரட்டா?" என்றாள். அவன் ஓமென்று தலையாட்டினான். அவனால் நடக்கமுடியவில்லை. இதயப்பாரத்தைத் தாங்க முடியாது கால்கள் துவள்கின்றன. அவளில் சாய்ந்து கொண்டு அறையை நோக்கி நடந்தான். "இந்தப்பக்க நெஞ்சு வலிக்கிறது" என்று டாக்டருக்கு தனது இடப்பக்க மார்பைத் தொட்டுக்காட்டினான். அவனைப் படுக்கையில் சாய்த்துவிட்டு தன் ஸ்தெதஸ்கோப்பை வலிக்கும் பகுதிக்கு வைத்து உற்றுக் கேட்டார். "இரவு படுத்தபிறகுதான் வலிக்க ஆரம்பித்தது." அவன் சொன்னதற்கு தலையை ஆட்டியபடிக்கு, இதயத்துடிப்பை அளந்து கொண்டிருந்தார் டாக்டர். "மூச்சை இழுத்து விடு!" முயன்று பார்த்தான். சுவாசக்குழாயுக்குள் காற்றுத்திரண்டு திண்மமாகி விட்டது. விலாவெலும்பும் விரிய மறுத்தது. இயலாமையால் தலையை அசைத்தான். வயதைக்கேட்டார். அவனுக்கு இருக்கும் வியாதிகளின் தொகுதியை அலசிப்பார்த்தபின் அவனிடம் சொன்னார். "ஆடாமல் அப்படியே படுத்திரு! உனக்கு ECG எடுத்துப் பார்ப்போம்." சார்ட்டில் எழுதி வைத்துவிட்டு, அகன்று போனார். மனைவி அவனருகே நகர்ந்து வந்தாள். கலவரமுற்றிருக்கிறாள் என்று முகம் சொல்லியது. படுத்திருந்தபடியே வலக்கையை நீட்டி, அவளது வயிற்றைத் தடவினான். தடவுவதற்கு வாட்டமாக அருகில் வந்தாள். "இப்ப எப்பிடி இருக்கு?" என்றாள் "சுகமாயிருக்கு" என்று சொன்னான். சொல்லும்போதும், வலி, மார்புத்தசைகளை ஊடுருவி உடலெங்கும் பரந்தது. ECG இயந்திரத்தை தள்ளுவண்டியில் வைத்து உருட்டி வந்தாள் நர்ஸ். பாதங்களிலும், இருகைகளிலும், மார்பின் பலபகுதிகளிலும், வயர்களை இணைத்தபின், "ஆழமூச்சிழுத்து அடக்கி வைத்திரு" என்றாள். தம்பிடித்தபடி நர்சைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஓயாது புன்சிரிப்பை ஒட்டியிருந்த செந்தளித்த முகம். கன்னக்குழியிலிருந்து மேலெழும்பியது ஒரு கோடாக வடு. நிகக்காயமாக இருக்கலாம். அல்லது கவிஞன் கீட்ஸ் சொன்னதுபோல, காலம் தன் விபரீதக் கோலங்களுக்கான, ஆயத்தப்புள்ளியை போட ஆரம்பிக்கிறதாகக் கூட இருக்கலாம். கிரீச்சிட்டபடி ECG இயந்திரம், ரிசல்ட்டை அச்சடித்துக் கொண்டிருந்தது. ரிசல்ட் வெளிவந்து கொண்டிருக்கும்போதே, குனிந்து பார்வையால் கணித்துக் கொண்டிருந்தாள் நர்ஸ். அவளது வெள்ளைச்சட்டையின் மார்புப்பகுதியில் மரியம் என்ற பெயர்த்தகடு தொங்குகிறது. அவன் ஏக்கத்துடன் தாதியின் முகமாறுதலைத் தேடி உன்னிப்பாகப் பார்த்தபடி இருந்தான். தாதியின் முகம் எவ்வித மாறுதலுமற்று, அதே புன்சிரிப்பும், செந்தளிப்பும், நீண்டவடுவாகவும், ஓவியமாக இருந்தது. "ரிசல்ட் எப்படி?" கேட்டான் அவன். "சாதாரணம்தான். கவலைப்படாதே! ரிசல்ட் சாதாரணந்தான். ஆனால் உடம்பை ஆட்டாதே! அப்படியே படுத்திரு. டாக்டர் வருவார்" "உனக்கு நன்றி!" என்றான். இயந்திரத்தைத் தள்ளியபடிக்கு வெளியேறும்போது "எத்தனை மாதம்?" என்று அவனது மனைவியைக் கேட்டாள். பதில் கிடைத்தது. "எல்லாம் நன்மையாகட்டும்" என்று வாழ்த்திவிட்டு, அதே சித்திரச்சிரிப்புடன் அகன்று போனாள். ரிசல்ட்டை உயர்த்திப் படித்தவாறு உள்நுழைந்தார் டாக்டர். அவன் படுக்கையில் இருந்து எழும்ப முயன்றான். விரைந்து வந்து அவனைத் திரும்பவும் படுக்க வைத்த டாக்டர், "உடம்பை அசைக்காதே, உனக்கு உடலெங்கும் சீராக இரத்தோட்டம் பாயவில்லை. உனது இதயம் சரியாக இயங்கவில்லை. மாரடைப்பு தாக்கியிருக்கிறது என்று நினைக்கிறேன்." என்று சொன்னார் டாக்டர். அவன் தலையைத் திருப்பி மனைவியைப் பார்த்தான். அவளது கன்னங்கள் மேலுயர்ந்து துடிப்பது தெரிந்தது. அழுதுவிடுவாளோ என்று பயமாக இருந்தது. அவன் அவளது முகத்தில் தன் பார்வையை வைத்திருந்தபோது கண்ணீர் குமிழியாகத் திரண்டு கன்னத்தில் தொடராக விழுவதைப் பார்க்க முடிந்தது. "உடனடியாகச் சிகிச்சை ஆரம்பிக்கவேண்டும். உன்னை வார்ட்டில் அனுமதித்திருக்கிறேன். தாதி வந்து வார்ட்டுக்கு கொண்டு போவார். சிலநாட்கள் ஆஸ்பத்திரியில் தங்க நேரிடலாம். உனது மனைவியைப் போகச் சொல்லு" என்றார் டாக்டர். எல்லாவற்றையும் எழுதி வைத்துவிட்டு "காலையில் இருதயநிபுணர் உன்னை வந்து பார்ப்பார்" என்று கூறி, விடைபெற்றுச் சென்றார் டாக்டர். டாக்டர் அறையை விட்டு சென்றதும் "என்னங்கோ" என்றபடி மீதி வார்த்தைகள் கிளம்பாமல், வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள் மனைவி. அவன் அருகே இழுத்து, அவளது இடுப்பை அணைத்தபடி "ராக்ஷி பிடித்து போகமுடியுமா?" என்றான். "நானும் உங்களோட நிக்கிறன்" என்றாள் அழுகையோடு. புதிய பெட்டொன்றை தள்ளிக் கொண்டு இரு தாதிமார் உள்ளே நுழைந்தனர். "மன்னிக்கவேண்டும். இவள் கர்ப்பமாக இருக்கிறாள். நேரமும் அகாலமாக இருக்கிறது. இவளைத் தனியேஅனுப்பமுடியாது. நானும் இவளுடன் கூடச்சென்றுவிட்டு, நாளைவந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகுகிறேனே?" என்று அவர்களிடம் கேட்டான் அவன். "முடியவே முடியாது. நீ இப்போதுள்ள நிலைமையில் உன் கையைக் காலைக்கூட அசைக்கக்கூடாது. நாங்கள் எப்படி உன்னை நடக்க அனுமதிக்கமுடியும்?" என்றாள் அவனது கையில் ஆஸ்பத்திரி அடையாளத் துண்டைக் கட்டிக் கொண்டிருந்த தாதி. அவனை பெட்டில் வைத்து உள்ளே கொண்டு போகும்வரைக்கும் அவனது கையைப் பிடித்தபடி நின்றாள் மனைவி. அவன் தலையை அசைத்து விடை தந்தவாறு உள்ளே போகிறான். இப்போதும் சிரிக்கிறான்... அவளுக்காக...! ************************ வீதிக்கு வந்தாள். ஆஸ்பத்திரி வலயத்ததைத் தவிர, எங்குமே இருள் கவிந்து அமைதியாய்க் கிடந்தது. அகாலம் வேறு. தனிமையில் அச்சம் தரும் நிஷ்டூர அமைதியைக் குலைத்தது அவளது சப்பாத்துச் சத்தம். அவனில்லாமல் வீட்டுக்குப் போய் எப்படி உறங்குவது..? மையிருள் கசியும் கோடைகால இரவு வானத்தின் கீழே, அவள் நடந்து போய்க் கொண்டிருந்தாள். அவளுடைய மனம் அவளது இதயத்தில் தங்கியிருக்கவில்லை. அது அவனைப் பரிபாலிக்க, கடவுளர்களின் வீடு தேடி அலைந்தவாறு எங்கோ சென்றுவிட்டது. வயிறு இப்போது ஒரு பிண்டமாக, கல்லைக்கட்டி வைத்திருப்பது போல பாரமாக, உயிர்ப்பற்று இருந்தது. கண்ணீரின் ஓயாத ஓட்டம் தலையிடியாக முளைத்திருக்க, தனியனாக அந்தக் கர்ப்பிணி நடந்தபடி இருந்தாள். ஒவ்வொரு லைட்கம்பத்தின் ஒளிப்பரப்பிலும் தெரிந்து, பின் இருளுக்குள் புகுந்து, அவளது நடையின் முகம் வீட்டை நோக்கி இருந்தாலும், அவள் தன் நினைவில் பின்னேறி அவனிடமே வந்தவாறு இருந்தாள். ********************************** அவனைச் சூழ்ந்து நின்று இரண்டு கைகளிலும் துளைபோட்டு, மருந்து ஏற்றுவதும், இரத்தம் எடுப்பதுமாக அவசரப்பிரிவுக்கேயுரிய வேகத்துடன் இயங்கினர் தாதிகள். மருந்து உடலில் ஏற ஏற இரத்தஅழுத்தம் கூடிக் கொண்டே போனது. எலெக்ரிக்ஷொக் கொடுக்கும் இயந்திரத்தை இழுத்து வந்து அவனருகே நிறுத்தினர். மரணத்திற்கான தடையரண்களைப் பார்த்துக் கொண்டிருந்த அவனது கால்கள் நடுங்கத் தொடங்கின. பல்லுக்கிட்டி ஒன்றையொன்று மோதித் தந்தியடித்தன. அவனைச் சுற்றி அந்தகாரம் படர்ந்தது. "ஏலி ஏலி லாமா சபக்தானி..!" "இறைவனே இறைவனே ஏன் என்னைக் கைவிட்டீர்..!" கொல்கொதா மலைக்குன்றை நோக்கிய முள்ளடர்ந்த பாதையில் அவனைத் துரத்திக் கொண்டு செல்கின்றனர். எருசலேம் தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிய, இன்றோ நாளையோ எல்லாம் முடியும். வாழ்ந்ததற்கும் மூச்சு விட்டதற்கும் அடையாளமே இல்லாமல் அவனுக்கான மேட்டுநிலத்துடன் ஜக்கியமாகி விடுவான். மரணம் இந்த முப்பத்திமூன்றாம் வயதில், அவனை முதுகிலே ஈட்டி எறிந்து கொன்று வீழ்த்தப் போகிறது. "சிஸ்டர்.. சிஸ்டர்... நான் சாகப்போகிறேனா..? இது...என்னஇது என்னத்துக்கு இந்த மெஷின்?" எலெக்ரிக்ஷொக் கொடுக்கும் இயந்திரத்தைச் சுட்டிக் காட்டியபடி பதகளித்தான் அவன். "ரிலாக்ஸ், ரிலாக்ஸ், நீ குணமடைந்து விடுவாய். இது இன்னொரு தடவை மாரடைப்பு வந்தால் தடுப்பதற்கான முன்னேற்பாடே தவிர, பயப்படும்படி ஒன்றுமில்லை." அவனை ஆறுதல்ப் படுத்தினாள் அருகே நின்ற தாதி. "இல்லை சிஸ்டர் நான் சாகக்கூடாது. என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள். அது ஆண்குழந்தை. நான் அதைப் பார்க்கவேண்டும்." "மனதை அலட்டாதே! உனது இரத்தத்தை திரவமிளக்கி, உடலெங்கும் பாய்வதற்கு மருந்து செலுத்துகிறோம். இனிமேல் உனக்கு ஒரு ஆபத்துமில்லை." அவனுக்கு அன்பாக விளக்கமளித்து அவனது கையைத் தடவிக் கொடுத்து ஆறுதல்ப்படுத்தினாள் தாதி. அவனால் மனதை ஒருமைப்படுத்த முடியவில்லை. அது அலைபாய்ந்து கொண்டிருந்தது. பிறக்கப் போகும் கவலையறியாச் செல்லக்குட்டிக்கு அப்பா இல்லாத துரதிர்ஸ்டம் வாய்க்குமே? அத்துடன் "தேப்பனைத்தின்னி" என்று எங்காவது ஒன்றுக்குப் பத்து நாக்குகள் நௌ¤யுமே? அவனது நிழலின் பின்னே இன்னொரு நிழலாய், இந்த ஏழுவருடங்களும் அடியொற்றி நடந்து, கதைத்துக் காதல் புரிந்து, முயங்கிச் சிரித்து, அவ்வப்போது அவனுக்கு ஏமாளி என்று பட்டம் கொடுத்து, வாழ்வின் திரும்புதிசைக் கெல்லாம் நெம்புகோலில் வைத்து, அவனை நெம்பி மடைமாற்றி, அப்போதும் பணப்பயிர் விளையாமல் போக, விதியே என்று சமாதானப்படும் தேவமலரின் வாழ்வு அவனுக்குப் பின்னே என்னவாகும்? இந்தப் பூமிப்பந்தின் பாரத்தை சமனப்படுத்தி, கூட்டலையும் கழித்தலையும் தீர்மானிக்கும் அந்தக் கொடியவன் யார்..? அவனால் மூச்சு விடமுடியவில்லை. ஆட்காட்டி விரலில் மாட்டியிருந்த ஒட்சிசன் அளக்கும் கருவி கீச்கீச் என்று அவசரஒலி எழுப்புகிறது. நெஞ்சை இறுக்கி, உயிர்ப்பாலைப் பிழிகிறது ஏதோ ஒரு வலிய கரம். தலையெங்கும் வியர்வை வளிகிறது. வியர்வைதான் மாரடைப்பின் கடைசிச் சின்னமாம். உயிர் அவனை விட்டு அகலப் போகும் பச்சைக்கொடி காற்றில் ஆடுகிறது. சாகக்கூடாது. நான் என் குழந்தையைப் பார்க்கவேண்டும். நான் சாகக்கூடாது. எனக்கு இன்னும் வாழ்க்கை வேண்டும். கடவுளே உன் கையிலிருந்து நழுவி விழப்போகும் என்னை இறுக்கி அணைத்துப்பிடி..! தெய்வங்களே!! எதைக்கூப்பிடுவது? அம்மாவின் அந்தோனியாரைக் கூப்பிடுவதா? ஜயாவின் வயிரவரைக் கூப்பிடுவதா? ஏன் நீங்கள் இரண்டு பேருமே கரம்கோர்த்து என்னை து£க்கி அணைத்து, இந்தப்பூமியில் நிறுத்தக்கூடாது. கடவுளர்களே கைவிட்டு விடாதீர்கள்.... "சிஸ்டர் சிஸ்டர் நான் சாகப் போகிறேனா?" ECG இயந்திரத்தின் வயர்களை அவனது மார்பில் இணைத்துக் கொண்டு சிரிக்கிறாள் மரியம். "நாலு நாளாக இதே கேள்வியா? இதோ உனது இதயம் சரியாக இயங்குகிறது என்று ரிசல்ட் சொல்லுகிறது. நீதான் உன்னை வீணாக அலட்டிக் கொள்கிறாய். பேசாமல் உறங்கு!" நேச வசீகரம் தந்து, அரவணைக்கும் தாயைப் போன்ற அதே சிரிப்புடன் தாதி மரியம் சொல்கிறாள். அவனால் எப்படி உறங்கமுடியும்? உறக்கத்தையெல்லாம் எங்கோ இழுத்துச் சென்று பாதாளத்தில் எறிந்து விட்டது மரணபயம். ஓயாது அவனது பார்வை இதயத்துடிப்பை அளக்கும் கருவியின் திரையிலே ஒட்டிப் போய்க் கிடக்கிறது. அவனது ஏக்கம் கூடக்கூட இதயம் வேகங் கொண்டு பாய்கிறது நீர்வீழ்ச்சியின் ஆவேசத்துடன். உடலெங்கும் கேட்கிறது விடைபெறப் போகும் உயிரின் சத்தம். டாக்டர் அவனைத் தட்டி எழுப்பினார். திடுக்கிட்டு விழித்ததும் அவனையறியாமல் பார்வை இதயத்துடிப்பு அளக்கும் இயந்திரத்தின் திரைக்கு ஓடியது. "உனது நாடி நாளங்களை பரிசோதிப்பதற்காக வேறு ஆஸ்பத்திரிக்கு நாளைகாலை போகிறாய். ஏனெனில் உனக்கு குடலில் பக்ரீறியா தொற்று ஏற்பட்டிருக்கிறது இந்த நெஞ்சுவலி தொற்றின் காரணமாகவா, மாரடைப்பாலா என்று நாளை தெரியவரும். உறங்கு" டாக்டர் ஏதோ எழுதி வைத்துவிட்டுப் போகிறார். அவன் மீண்டும் அலைபாயத் தொடங்கினான். ஒன்றைமேவி இன்றொன்றாக புதிய புதிய சந்தேக அலைகள் மோதி எறிந்து கலக்கின மனதை. *************************** "காலைவணக்கம் பாபு! இன்று உனக்காக பூவொன்று கொண்டு வந்தேன்." ECG இயந்திரத்தைத் தள்ளிக் கொண்டு அவனிடம் வருகிறாள் மரியம். அவளது கையில் அழகான மஞ்சள் நிறப்பூவொன்று தெரிகிறது. அன்று பூத்ததாக இருக்கலாம் இனி வாடிவிடும் என்று அவனது நினைப்பு ஓடியது. "நன்றி மரியம்! நான் குணமாகி வந்தால் உனக்காக ஒரு கவிதை எழுதுவேன்" "கண்டிப்பாக. இப்போதே நீ குணமாகி விட்டாயே! எங்கே எனக்கு ஒரு கவிதை சொல்லு!" "இல்லை மரியா இன்றுதான் எனக்கான நியாயத் தீர்ப்புநாள். இதயப்பரிசோதனைக்காக என்னை வேறு ஒரு இடம் கொண்டு செல்கிறார்கள். அதன் பிறகுதான் தெரியும் உனக்கு கவிதையா... அல்லது........." அவனது உடலுக்குள் கம்பியைச் செலுத்த உடல் உஷ்ணமாகிக் கொண்டு வந்தது. பாரியநாடி தோறும் கம்பியைச் செலுத்தி இரத்தப்பாதையை படம் பிடித்தார்கள். இறுதியில் இதயத்திற்குக் கிட்ட கம்பி செலுத்தப்படும் போது, அவனது உணர்வுகள் சிலிர்த்து வந்தது. இதயத்துடிப்பு இறங்குமுகமாகியது. சுவாசக்குழாயின் வாசல்கதவைத் தட்டுகிறது உயிர்க்காற்று. ஆனாலும் கம்பியூட்டர் திரையை கவனித்தவாறே இருந்தான். "மிஸ்டர்! உனக்கு நு£று ஆண்டுகள் ஆயுசு! உனது இருதயம் குதிரையினது போல வலுவாக இருக்கிறது." அவனது காதில் பரிசோதனை டாக்டரின் குரல் விழுந்தது. அவனுக்கு இந்தச் சந்தோசச் செய்தியை உடனே மனைவிக்குச் சொல்ல வேண்டும் என்ற துடிப்பாய் இருந்தது. நான்கு மணியாகி விட்டது. இதோ இன்னும் ஜந்து பத்து நிமிசத்தில் வந்து விடுவாள். மனம் கிடந்து அலை பாய்ந்து கொண்டிருந்தது. ECG மெஷினின் தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு பக்கத்து பெட் நோயாளியை பரிசோதிக்க வந்தாள் மரியம். "வணக்கம் மரியம்." அவன் குது£கலத்துடன் அவளை அழைத்தான். அவளது முகத்தில் புன்சிரிப்பைக் காணவில்லை. என்றும் இல்லாதவாறு முகம் கூம்பிப் போய்க் கிடந்தது. "உனக்கு இனிமேல் ECG எடுக்கத் தேவையில்லை" என்று சுரத்தில்லாமல் சொன்னாள் மரியம். ஆக, எனக்கு இருதயவருத்தம் இல்லை என்று அவளுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது. ஆனால் ஏன் சோகமாக இருக்கிறாள். "உனக்கு என்ன நடந்தது மரியம். உனது முகம் வாடிப்போய் இருக்கிறதே" என்று கேட்டபடி அவன் மரியத்தின் முகத்தைப் பார்த்தான் அவள் அழுததற்கான சுவடுகளாக கண்கள் சிவந்து போய் வீங்கியிருந்தன. "எனக்கு இன்று ஒரு சோகம் நிகழ்ந்துவிட்டது." "என்ன நடந்தது." அவன் தனது சந்தோசத்தை உள்ளடக்கிவிட்டு மரியத்திடம் கேட்டான். "அவள் இறந்துவிட்டாள். எவ்வளவு அழகானவள். சாம்பல் நிறமும் சடையுமாய். அவளுக்கு என்னில் நிரம்ப அன்பு. இன்றுகாலை நான் படுக்கையால் எழும்பி வர, வாசலில் இறந்துபோய்க் கிடக்கிறாள்." சொல்லும்போதே மரியத்தின் உதடுகள் துடித்தன. "யாரது உனக்கு மிக வேண்டியவரா?" "ஆமாம். என் செல்லப்பூனை." மரியத்திற்கு துக்கம் பீரிட்டுப் பொங்கியது, கண்ணீர் விழுந்து, அவளது முகத்து வடுவீனு£டாக கோடாக இறங்கியது.

Sunday, April 16, 2006

வலை நாவாந்துறை டானியல் அன்ரனி


நிலம் முற்றாக இன்னும் வெளுக்க வில்லை. அந்த வெள்ளாப்பிலேயே நேற்று பொழுது சாயும் மைம்மல் இருட்டில் கடற்கரையில் நடந்துவிட்ட அந்தச் சம்பவம் ஊர் முழுவதும் பரவி ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது.
எப்பொழுதுமே அவ்வேளையில் ஊமை அமைதியுடன், கடலை அண்டிப் பரந்து கிடந்த வளவில் நீண்டு நெடுப்பாக வளர்ந்து நிற்கும் தென்னை மரங்களிடையே தனித்து நிற்கும் பூவரச மரத்தடியில் நின்று கொண்டு, பலர் நடந்துபோன அந்தச் சம்பவத்தைப் பற்றி ஆவேசமாகவும், உரத்த தொனியிலும் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டு நின்றனர்.
வாடை அன்று பெயர்ந்தது. வேகமாக அள்ளுண்டு வந்த காற்றில் தென்னங்கீற்றுகள் வெறி பிடித்து ஆடின. கடல் கறுத்துக் குழம்பிக் கிடந்தது. வடுமாறி வெள்ளம் நுகைக்கத் தொடங்கியது.
கடல் முழுவதும் மிதந்து கொண்டிருந்த தோணிகளின் 'சள சள" ஓசையின் சலனங் களினால் 'களங் கண்டி" வலைகள் பாய்ந்திருந்த தடிகளில் குந்தியிருந்த வெண்கொக்குகள் நீலவானத்தில் எழுந்து பறந்து செல்வதும் நிலை கொள்ளாமல் மீண்டும் நீர்ப் பரப்பில் இறங்கி கூரிய அலகுகளினால் எதையோ கொத்திச் செல்லும் முனைப்பில் போராடிக் கொண்டிருந்தன.
கடலை அண்டிய காரைதீவு வீதியில் ஆனைக்கோட்டைக்கு அப்பாலிருந்து அங்கு வரும் இழுப்பு வலைக்காரார் இழுத்து வந்த மீன்களையும், இறால் வலைகளையும் வீதியில் பரத்திப் போட்டுக் கடற்பாசிகளிலும், தாழை களிலும் இருந்து அவற்றைப் பிரித்து எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களும் அவ்விடத்தைவிட்டு விரை வில் சென்று விட வேண்டுமென்று பரபரத்தாலும், சுற்றி நின்று காது செவிபடக் கத்திக் கொண் டிருந்த காக்கைக்கூட்டங்கள் அவர்களை விடுவதாயில்லை.
வில்லூன்றிச் சுடலையைத் தாண்டி வடக்கால் காக்கைதீவுச் சந்தையை நோக்கி ஓடிக்கொண்டிருந்த தோணியின் அணியத்தில் நின்ற சைமன் தூரத்தில் வரும்போதே கடற்கரை வளவில் பெரும் கூட்டம் ஆரவாரப்பட்டுக் கொண்டு நிற்பதைக் கண்டு கொண்டான்.
அற்ப சம்பவங்களைக் கூட பெரிது படுத்தி உணர்ச்சி வசப்பட்டவர்களாய் உரத்து விவாதிப்பதும் விவாதம் முற்றி கைகலப்பாக மாறி தங்களுக்குள்ளே அடிபட்டுக் கொள்வதும் அந்த ஊர் மக்களுக்கு பரிச்சயமாகிப் போன ஒன்று என்பது பிரசித்தம்.
சைமன் ஒரு தினுசானவன். ஊர்ச் சோலிகள் எதுவானாலும் கண்டுக்காமல் இருக்கமாட்டான். அதிலும் தொழிலாளிகள் வி~யம் என்றால் உரத்தே குரல் எழுப்புவான். இவனைப்பற்றி வேறு மாதிரியான கதை ஊரில் இருந்தாலும் ஊர் வி~யங்களில் இவன் கொள்ளுகின்ற அபிப்பிராயங்கள் பற்றி சனங் களுக்கு மதிப்பு இருந்தது.
'டேய் சவிரி, அங்க கவனியடா, வளவில் ஒரே சனக்கூட்டமா இருக்குது. ஊரில் ஏதாவது நடந்து போச்சுதோ...."
தோணியின் நடுத்தளத்திலிருந்து மீன்களைத் தெரிந்து பறிக்குள் போட்டுக் கொண்டிருந்த சவிரியும், சைமன் சுட்டிக்காட்டிய பக்கம் தலையை நிமிர்த்திப் பார்த்தான்.
'ஓம் அண்ண, ஏதோ நடந்துதான் போச்சுது போல இருக்கு. நேற்று இவன் பொன்ராசாதான் தண்ணியைப் போட்டுவிட்டு மச்சினனோட கொழுவிக் கொண்டு நின்றான்."
'நான் நினைக்கயில அப்படி யிருக்குமெண்டு. கூட்டத்தைப் பார்த்தால் வி~யம் வேறபோல கிடக்கு. கொஞ்சம் கரையைத் தள்ளிப் பார்த்துப் போட்டுப் போவம்."
சைமன் தாங்கிக் கொண்டிருந்த மரக்கோலை தோணியின் இடப்புறம் போட்டு வேகத்தைக் கட்டுப்படுத்தினான்.
சவிரி காக்கைத்தீவுச் சந்தையைப் பார்த்தான். பொழுது நல்லா ஏறிவிட்டது. கூட்டம் கலைந்து கொண்டிருந்தது.
'அண்ண, சந்த கலையுது. நேரஞ் செண்டா அவளவை நாறல் மீனைக்கேக்கிற விலைக்கு கேப்பாளவயள்".
சைமன் மீண்டும் மரக்கோலை வலப்புறம் போட்டுக் கரையை நோக்கித் திருப்பினான்.
'சவிரி வலை இழுக்கயுக்கேயே வெள்ளப்பா போயிற்று. இண்டைக்கு நம்மட சந்தையில விப்பம். மீனும் அவ்வளவு இல்லத்தானே...."
சவிரி மீண்டும் மீன்களைப் பொறுக்கு வதில் மௌனமாகி விட்டான். சைமன் கரையை நோக்கி வேகமாகத் தோணியைத் தாங்கினான். தோணி நீரைப் பிளந்து கொண்டு சீறிப்பாய்ந்து கரையை அடைந்தது.
'சவிரி, தோணியைக் கட்டிப்போட்டு மீன்களைச் சந்தைக்கு கொண்டுபோ. நான் என்னெண்டு கேட்டுப்போட்டு வாறன்".
சைமன் தோணியிலிருந்து மெதுவாக இறங்கினான். தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து கடல் உவர்ப்பில் காய்ந்து போயிருந்த 'சொறசொற"த்த முகத்தையும், மீன் செதில்கள் ஒட்டிக்கிடந்த உடலையும் துடைத்துவிட்டு, இடுப்பில் கட்டியிருந்த கச்சையை அவிழ்த்துப் போட்டுவிட்டு துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டான்.
வளவில் நின்று முகம் சிவந்துபோக உதடுகள் துடிக்க முகத்தில் விழுந்து புரண்டு கொண்டிருந்த செம்பட்டையான சுருட்டை மயிர்களை ஒரு கையால் ஒதுக்கியபடி மறு கையை அடிக்கடி உயர்த்தியபடி நியாயம் கதைத்துக் கொண்டிருந்தான் மரியதாசன். மண் மேட்டிலேறி வளவை நோக்கி வந்து கொண்டிருந்த சைமனும் இவனைக் கண்டு கொண்டான்.
கூடி நின்றவர்கள் எல்லோர் பார்வையும் வளவைத் தேடி வந்து கொண்டிருந்த சைமன் பக்கம் திரும்பியது.
'என்னடாப்பா, ஏன் இப்படி விடியக்கு முன்னமே கூட்டம் கூடி கத்திக் கொண்டு நிக்கறீங்க,"
சற்று எரிச்சலுடன் வெளிவந்த சைமனின் வார்த்தைகளைக் கேட்டதும் நடந்துபோன சம்பவத்தை இன்னும் அவன் அறியவில்லையென்பதைக் கூடி நின்றவர்கள் ஊகித்துக் கொண்டார்கள்.
'என்னண்ணை, உங்களுக்கு வி~யம் தெரியாதா? நம்மட சூசைக்கிழவனுக்கு அவன் யோணும் அவன்ர ஆக்களும் அடிச்சு மண்டையை உடைச்சுப் போட்டாங்க. மனுசனுக்கு இழுக்குது." சைமன் இதைக் கேட்டதும் சற்று நேரம் மௌனமாக நின்றான்.
'ஏன் கிழவனுக்கு அடிச்சவங்க....?"
'கிழவன் விடுவலைக்கு வாறன் எண்டுபோட்டு யோணட்ட ஆயிரம் ரூபா முற்காசு வேண்டினவராம். சுகமில்லாமல் திருக்க முள்ளு அடிச்சுக் கிடந்ததினால் இனிமேல் தொழிலுக்கு வர ஏலாதெண்டு சொல்லிப் போட்டாராம் கிழவன். காசை உடன வைக்கச் சொல்லித்தான் இந்தச் சண்டித்தனம்". மரியதாசன் உணர்ச்சி வசப்பட்டவனாக மீண்டும் உரத்துக் கத்தினான்.
'சம்மாட்டிமாரட்ட முற்காசு வாங்கிப் போட்டு தொழிலுக்கு வாறன் எண்டு சம்மதிச்சுப் போட்டா தொழிலுக்கு போகவேணும். இல்லாட்டியா அவங்கட காசு திருப்பிக் கொடுக்கவேணும். இதுதானே ஊர் வழக்கம். யோணும் பலமுறை காசக் கேட்டுப்பார்த்தார். குடுக்காமல் கிழவனும் வெறியில் அவங்களைப் பேசிப்போட்டார்".
யோணின் விடுவலையில் மன்றாடியாக தொழில் நடத்திச் செல்லும் சற்று வயதான சந்தியோ மீண்டும் சம்மாட்டியின் பக்கம் பரிந்து பேசியதைக் கண்ட மரியதாசனும் அவனோடு கூட நின்ற யேசுராசனும் கொதித்தனர். அவர்களும் யோண் வலையில் தொழிலுக்குப் போகிறவர்களாக இருப்பினும் யோணும் அவனுடைய ஆட்களும் செய்தது அநீதி என்பது அவர்களுடைய திடமான நம்பிக்கை.
'சந்தியோ அண்ணைக்கு சம்மாட்டி மாரட்ட நக்கிற புத்தி இன்னும் போகயில்ல." மரியதாசன் திடீரென வீசியெறிந்த சுடு சொல்லை எதிர்பாராத சந்தியோ அதிர்ந்து போனார்.
'தம்பி மரியாதையாகப் பேசும், இல்லாட்டி...."
'இல்லாட்டி.... என்ன செய்து போடு வீங்க." மரியதாசன் மு~;டியை உயர்த்திக் கொண்டு சந்தியோவை நோக்கி நெருங்கினான். இவ்வளவு நேரமும் அமைதியாக அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு நின்ற சைமன் நடந்துபோனவற்றை ஒருவாறு ஊகித்துக் கொண்டாலும் விவாதம் இப்போது வேறு திசையில் திரும்புவதைக் கண்டதும் நிலைமையைச் சமாளிக்க நினைத்தான்.
'இஞ்ச பாருங்க, நீங்ளேன் உங்களுக்குள்ள சண்டை பிடிக்கிறீங்க. பின்னேரம் சனங்களைக் கூப்பிடுவம். சம்பந்தப் பட்டவர்களையும் கூப்பிடுவம். அதுக்குப் பிறகு பாப்பம். இப்ப எல்லோரும் பேசாமப் போங்க".
கூடி நின்ற எல்லோரும் முணுமுணுத்த படி மெல்ல மெல்ல அவ்விடத்தை விட்டு நகரத் தொடங்கினர்.
மரியதாசனும் யேசுராசனும் மாத்திரம் உரத்துப் பேசிச் செல்வது சைமனின் காதுகளுக்குக் கேட்டது. 'சம்மாட்டிமாற்றை கொழுப்பை இதோட அடக்க வேணும்."
'சைமனின் இதயத்திலும் இனம் தெரியாத துடிப்பு. பல தலைமுறையாக ஏதோ ஓர் அடிமை முறையில் இவர்கள் நடத்தப்பட்டு வரும் முறைபற்றி இவனுக்கு நீண்ட நாட்களாக மனதில் ஒரு உறுத்தல் இருந்து வந்தது. ஆயினும் சரியான சந்தர்ப்ப சூழ்நிலை உருப்பெறாமல் தள்ளிப்போய் கொண்டிருந்த காரணத்தினால் அவனுடைய எண்ணங்களை வெளிக் கொணர முடியாமல் இருந்தது. தொழிலாளர்களின் உணர்ச்சிகளை தற்காலிகமாகவேனும் செம்மைப்படுத்த இப்பொழுது அதற்குச் சரியான நேரம் வந்துவிட்டதாக அவன் உள்மனம் உணர்த்தியது. நீண்ட நேரமாக கலகலத்துக் கிடந்த அந்த வளவு இப்போது வெறிச் சோடிக்கிடந்தது. சைமன் சிந்தனை வசப் பட்டவனாக வளவைத் தாண்டி மண் ஒழுங்கையில் இறங்கி வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.
ஊர்க்கூட்டம் தொடங்க சரியாக நாலு மணிக்கு மேலாகிவிட்டது. ஊரில் உள்ள சம்மாட்டிமாரில் சிறில் ஏதோ வேலை காரணமாக கரையூர் சென்றதனால் அவரைத் தவிர எல்லோரும் கூடியிருந்தனர். கூட்டம் கூடி பத்து நிமிடங்கள் கழியத்தான் தனது சதை பருத்த தேகத்தையும் தூக்க முடியாமல் நசினல் சட்டைக் குள்ளே இரட்டை வடம் பவுண் சங்கிலி சகிதம் சம்மாட்டித் தனத்தின் செருக்கும், திமிரும் முகத்தில் பிரதிபலிக்க அரக்கி அரக்கி வந்து பின்வாங்கில் குந்திக் கொண்டார் யோண் சம்மாட்டி. தலைமை வகித்த பெரியார் சுருக்கமாக பிரச்சினைகளை எடுத்துக் கூறினார். கூட்டம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. மரியதாசன் எழுந்தான்.
'சம்மட்டியார் யோணும் அவங்கட ஆக்களும் செய்த செயல் மிகப்பிழை. கிழவனட்டை மன்னிப்புப் கேக்க வேணும்."
'பிழையெண்டால் நியாயம் காட்ட வேணும்."
சவிரிமுத்துச் சம்மாட்டி குறுக்கே குரல் கொடுத்தார். 'பணம் கொடுக்குமதியாக இருந்தால் மரியாதையாகக் கேட்டு வாங்க வேண்டியது தான். அதற்காகத் தொழிலாளிகளை அடிமை களாக நினைத்துக் கண்டபடி பேசுவதும் அடிப்பதும் எங்களால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது."
'தொழிலுக்கு வாறன் எண்டு கடன் பட்டால் தொழிலுக்கு வரவேண்டியதுதான் கடமை. இல்லாட்டி காசைத் திருப்பித் தர வேண்டியதுதான்."
'அதுக்காக இருபது வரு~த்துக்கு மேலாக வெயிலெண்டும் குளிரெண்டும் பாராமல்,
உங்களுக்கு உழைத்துத் தந்த மனுசன் என்றும் பாராமல், கை நீட்டி அடிக்கிறதா? எங்கட உழைப்பிலை தானே நீங்க வீடும் வாசலுமாக இருக்கிறீங்க. அதுக்கென்ன அந்த ஆயிரத்தையும் அவங்களுக்கே விட்டால்...."
யேசுராசன் எழுந்து நின்று குரல் கொடுத்தான்.
'நாங்க இவ்வளவு பணம் பொட்டு தொழில் நடத்துறம். அவங்களுக்கு பங்குக்காசு கொடுக்கிறம்.... இதைவிட என்னத்தை அவங்க உழைச்சுத் தந்திட்டாங்க. சாமத்திய வீடெண்டாலும்....செத்த வீடெண்டாலும் எங்கட்டத்தானே ஓடி வருவினம். ஐஞ்சோ பத்தோ கொடுத்து நாங்க தானே உதவி செய்யிறம்".
யோணின் பேச்சு தலைமை வகித்துக் கொண்டிருந்த பெரியவருக்கும் கோபத்தையும், எரிச்சலையும் கொடுத்தது.
சைமன் எழுந்தான்.
'சம்மட்டியார் ஏதோ தொழிலாளர்களுக்கு அள்ளிக் கொடுப்பதாகக் கூறினார். அவர் இறால் போட்டு சுறாப்பிடிக்கும் கெட்டித்தனம் எங்களுக்கு இப்ப விளங்காது என்ற எண்ணம் போல கிடக்கு. ஒரு வருசத்தில கமிசனுக்கு எண்டு ஒரு தொழிலாளியிட்ட ஆயிரம் ரூபாவுக்கு மேல் கழிக்கிறீங்க. ஆனால் அவங்களுக்குக் கொடுக்கிறது என்ன இருநூறு, முந்நூறு.,ஒரு சாராயப் போத்தல். உழைக்கிறதில தோணிக்கு, வலைக்கு என்று எவ்வளவத்தை தள்ளி நீங்க எடுத்துக் கொள்ளுறீங்க. இதெல்லாம் எங்களுக்கு விளங்காததல்ல."
எல்லோரும் சைமன் பேசியதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். சிலர் சம்மாட்டிமாரைத் ரகசியமாகக் கிண்டல் செய்யத் தொடங்கினர்.
மரியதாசன் மீண்டும் எழுந்தான். 'நாங்க இனி மேல் இவங்கட தொழிலுக்கு போவதாக இருந்தால் எங்களுடைய பங்குப் பணத்தைக் கூட்டித்தரவேணும். 'கமிசன்' பணம் சரியாகக் கணக்குப் பாக்க வேணும். சூசைக்கிழவனிடம் மன்னிப்புக் கேக்க வேணும். இல்லாவிட்டால் கடலில வலை இறங்காது."
சம்மாட்டிமாரிடையே முணுமுணுப்பு ஏற்பட்டது. யோண் எழுந்தார். எல்லோரையும் நன்றாகப் பார்த்தார். கனத்த குரலை ஒருமுறை செருமிவிட்டுக் கொண்டார். 'இஞ்ச நாங்க ஒண்டும் பயந்தாக்களல்ல. எங்களை யாராலும் வெருட்டேலாது. உங்கட உழைப்பு வந்துதான்
சாப்பிடப் பொறமா? எத்தனை நாளைக்கு சுருண்டு கிடக்கப் போறீங்க? பற நாய்கள் எங்கட காலிலதான் வந்து விழுவிங்க....அப்ப பாப்பம்." யோண் கூறிவிட்டு கூட்டத்தைவிட்டு விறுவிறு என்று வெளியேறினார். அதைத் தொடர்ந்து எல்லாச் சம்மாட்டிமாரும் வெளியேறினர்.
கூட்டம் அல்லோலகல்லோலப் பட்டது. யோணின் திமிரான வார்த்தைகள் கூடியிருந்து கேட்டுக் கொண்டு இருந்தவர் களுக்கு சினத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
தலைவர் எல்லோரையும் சமாதானப் படுத்தினார். மீண்டும் கூட்டம் ஒழுங்குக்கு வர நிமிடங்கள் சென்றன.
'சைமன் அண்ணே....சைமன் அண்ணே...."
விறாந்தையில் விரித்துப்போட்டு நண்டு சப்பியும் நைந்தும் போனதால் விரிசல் கண்டுவிட்ட பழைய வலைகளை அரிக்கன் இலாம்பின் மங்கிய வெளிச்சத்தில் வைத்து வெட்டி வெகு லாவகமாக பொத்திக் கொண்டிருந்த சைமன் நிமிர்ந்து பார்த்தான். படலைக்கு மேல் பல தலைகள் nதிந்தன. இருட்டில உழைப்பு வந்துதான் சாப்பிடப் போறமா? எத்தனை நாளைக்கு சுருண்டு கிடக்கப் போறீங்க? தெரு நாய்கள் எங்கட காலிலதான் வந்து விழுவிங்க....அப்ப பாப்பம்." யோண் கூறிவிட்டு கூட்டத்தைவிட்டு விறுவிறு என்று வெளியேறினார். அதைத் தொடர்ந்து எல்லாச் சம்மாட்டிமாரும் வெளியேறினர்.
கூட்டம் அல்லோலகல்லோலப் பட்டது. யோணின் திமிரான வார்த்தைகள் கூடியிருந்து கேட்டுக் கொண்டு இருந்தவர்களுக்கு சினத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
தலைவர் எல்லோரையும் சமாதானப் படுத்தினார். மீண்டும் கூட்டம் ஒழுங்குக்கு வர நிமிடங்கள் சென்றன.
'சைமன் அண்ணே....சைமன் அண்ணே...."
விறாந்தையில் விரித்துப்போட்டு நண்டு சப்பியும் நைந்தும் போனதால் விரிசல் கண்டுவிட்ட பழைய வலைகளை அரிக்கன் இலாம்பின் மங்கிய வெளிச்சத்தில் வைத்து வெட்டி வெகு லாவகமாக பொத்திக் கொண்டிருந்த சைமன் நிமிர்ந்து பார்த்தான். படலைக்கு மேல் பல தலைகள் தெரிந்தன. இருட்டில ஒன்றும் தெளிவாகத் தெரியாவிட்டாலும், அது மரியதாசின் கனத்த குரல் என்பதை ஊகித்துக் கொண்டான்.
இவ்வளவு நேரமும் படலையடியில் சுருண்டு படுத்துக் கிடந்த சைமனின் 'கறுவல்' பலமாகக் குரைத்தது.
'ஆர் மரியதாசா? ஏன் வாசலில் நிக்கிறீங்க. படலையைத் திறந்து கொண்டு உள்ள வாங்களன். நாய் ஒண்டும் செய்யாது".
சைமன் லாம்பை எடுத்து முற்றத்தில் வெளிச்சம் விழக்கூடியதாக தூக்கிப் பிடித்தான்.
யேசுராசா, மரியதாசன், சவிரி, செபமாலை, சூசை முத்து, தெற்குத் தெரு பர்னாந்து நிரைத்து வந்து சைமனைச் சூழ ஆசுவாசத்துடன் குந்திக் கொண்டார்கள்.
சைமன் மீண்டும் மடவலைப் பகுதியை கால்களின் பெருவிரல்களுக்குள் மாட்டிப் பொறுக்கப் பிடித்துக் கொண்டு வேகமாகக் கிழிசல்களைக் பொத்திக் கொண்டே அடுக்களைக்குள் இருந்த மனைவிக்குக் குரல் கொடுத்தான்.
'இஞ்ச.... பிலோமினா, வந்திருக்கிறவங்களுக்கு தேத்தண்ணி போட்டுக் கொண்டு வா. குறை நினைக் காதீங்கடாப்பா, கூப்பன் சீனி எப்பவோ முடிஞ்சு போச்சுது. சக்கரைதான்...."

'உங்கட வீட்டில மாத்திரமில்ல அண்ண, எல்லாற்ற வீட்டிலயும் இந்த நிலைதான். காசு கொடுத்து வெளியில சீனி வாங்க ஆரட்ட காசு இருக்கு".
மரியதாசன் இருண்டு கிடந்த முற்றத்தைப் பார்த்துக் கொண்டே பதில் சொன்னான். மரியதாசன் முகத்தில் தெம்பு இல்லை. கூட வந்திருந்த எல்லோர் முகத்திலும் ஏதோ ஓர்வித சோர்வுக்களை அப்பிக் கொண்டிருந்ததைச் சைமன் அவதானித்து விட்டான்.

'என்னடாப்பா ஒரு மாதிரியாக இருக்கிறிங்க.... ஏதாவது விசே~ம் உண்டா?"
சைமன் கேள்வியைக் கேட்டதும் யேசுராசனும் மரியதாசனும் ஒருவரையொருவர் பார்த்தனர்.
'என்ன நடந்தது என்று சொல்லுங்க. ஆராவது சம்மாட்டிமாற்ற தொழிலில ஏறிவிட்டாங்களா....?"
சைமன் வார்த்தைகளில் சூடு ஏறியது.
'நாளைக்கு எல்லா சம்மாட்டிமாற்ற விடுவலைகளும் கடலில இறங்கப் போகுதுகள் போல இருக்கு. சம்மாட்டிமார் தொழிலாளிகளை விலைக்கு வாங்கிப் போடு வாங்க போல இருக்கு".
சைமன் அதிர்ச்சியுடன் மரியதாசனைப் பார்த்தான். மரியதாசன் நிதானமாகப் பதில் சொன்னான்.
'சாமிநாதர் விடுவலைக்குப் போறதுக்கு சம்மதிச்சுப் போட்டார்".
'ஏன்?"
'விடுவலைகள் நின்று போனதால் தொழிலாளிகள் எல்லாம் படுப்பு வலைக்கும் களங்கட்டி வலைக்கும் தூண்டலுக்குமாக போய்விட்டார்கள். ஆனால் பாவம் சாமிநாதன் மூன்று நாளாக தொழிலுக்குப் போகயில்ல. போறதுக்கு வேறு தொழிலும் கிடைக்கயில்ல. வீட்டில பட்டினி பொறுக்க முடியாமல் யோண் சம்மாட்டியிட்ட போய் கடன் கேட்டிருக்கிறார். அவன் விடுவலைக்கு வந்தால் கடன் தாரன் என்று சொல்லியிருக்கிறான். சாமிநாதரும் சம்மதிச்சுப் போட்டார்".
சைமனின் முகம் சுருங்கிக் கறுத்துவிட்டது. இப்படி ஒரு நிலையை இவன் எதிர்பார்க்கவில்லை. பல தலைமுறையாக இருந்துவரும் இந்தவித அடிமைப் போக்குகளை தகர்த்தெறிவது என்பது இலகுவான காரியம் இல்லை என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டான். சைமன் சற்று நேரம் அமைதியாக இருந்தான்.
'அண்ணே, சம்மட்டிமார் நாளைக்காலம விடுவலைகளை எப்படியும் கடலில இறக்கிப் போட வேணும் எண்டு இன்னும் ஆக்களைப் பிடிக்கிறதுக்கு வலைபோட்டுத் திரியிறாங்க. இப்டியே விட்டுவிட்டால் சாமிநாதர் போல ஒவ்வொருத்தராகப் போய்ச் சோந்துவிடுவாங்க".
குசினிக்குள் இருந்த பிலோமினா தேநீர்க் கோப்பைகளையும், சக்கரைக் குறுகல்களையும் கொண்டுவந்து கூடியிருந்தவர்கள் முன் வைத்து விட்டு கதை கேட்கும் ஆவலில் அறைக்கதவு அருகே போய் சாய்ந்தபடி நின்று கொண்டாள்.
தேநீர் உறிஞ்சப்பட்டு கோப்பைகள் வெறுமையாகிக் கொண்டிருந்தன. சைமனின் சிந்தனையில் பல சம்பவங்கள் திரண்டு வந்தன. 'எத்தனை நாளைக்கு இப்படிச் சுருண்டு கிடப்பீங்க? தெரு நாய்கள், எங்கட காலில தான் வந்து விழுவீங்க". யோணின் பேச்சு இவன் நினைவில் வந்து மோதியது. உடல் ஒரு கணம் சிலிர்த்து அடங்கியது. பொத்திக் கொண்டுடிருந்த வலைகளையும் அப்படியே விட்டுவிட்டு விறுக்கென்று எழுந்தான். காது மடிப்புக்குள் செருகி வைத்திருந்த புகையிலைத் துண்டை எடுத்துச் சப்பிக் கொண்டே கனத்த குரலில் பேசினான்.
'இவங்கட வலைகள் கடலில இறங்கிற கெட்டித் தனத்தைப் பார்ப்பம். மரியதாஸ்! நீ சவிரியையும், யோசேப்புவையும் கூட்டிக் கொண்டு சாமத்தில தெற்குத் தெருவுக்குப் போ. யேசுராசா! நீ சூசைமுத்து, செபமாலையோட கோயில் ஒழுங்கையைக் கவனி. நான் பெர்ணாந்தையும் சிலுவைதாசனையும் கூட்டிக் கொண்டு நடுத்தெருவுக்குப் போறன். ஆர் ஆக்கள் வெள்ளாப்பில வந்து தொழிலாளிகள அரட்டிறாங்க எண்டு பார்ப்பம்".
'ஓம் அண்ணே! அதுதான் சரி".
மரியதாசன் பதில் சூடாக வெளிவந்தது. எல்லோரும் எழுந்து கொண்டனர். சைமன் வளையில் சொருகியிருந்த துண்டை எடுத்துக் தோளில் போட்டுக் கொண்டே படலையைத் தேடி நடந்தான்.
பிலோமினா பயத்துடன் படலையைப் பார்த்தாள். முற்றத்தில் கிடந்த கறுவல் மறுபடியும் குரைத்தது. அவர்கள் படலையைத் திறந்து வெளியேறி இருளுக்குள் மறைந்தனர். தெருநாய்கள் ஆக்ரோசத்துடன் குரைத்தன.
வெகுதூரத்துக்கு அப்பாலும் அவர்களது அழுத்தமான காலடி ஓசை கேட்டுக் கொண்டிருந்தன.