Pages

Saturday, April 09, 2005

இருப்பும் இழப்பும்

நாவாந்துறை டானியல்ஜீவாசு10ரியனைத் தொலைத்த

நாட்களில்

இருள் இருப்பாய் இருந்தபோது…பரவைக்கடலில்

அலைஎறியும்

ஓசை@

அடங்கிக்கிடந்தது.ஓய்வின்றி

ஒய்யாரமாய் வீசிய......

உப்புக்காற்று

உறங்கிக்கிடந்தது.பனைக்கும்

தென்னைக்கும்-கீழ்

படுத்திருந்து@

காற்றுவாங்கும் மனிதர்கள்

காணமல் போனர்கள்.வெண்மணல் விரவிய

கடற்கரை அழகிழந்து

சோகமாய்…..

துப்பாக்கி மட்டுமே

துருப்பிடிக்காமல்

தொழில் புரியும்

தேசத்தில்@

காலைப்பரிதியின்

ஒளித்தெறிப்பு

சுட்டெரித்தது.ஏனோ

அன்று....

அழுதகண்ணீர்

சுமந்து நின்றது@

சித்திரை வெய்யிலில்

கானல்நீh.....நிலாவீசும் இரவில்

இருளின் நீட்சி;

நிட்சயமற்ற

மனித இருப்பில்

நெளிகின்றது

வீதியெல்லாம்

பிணவாடை.....என் மனதில்பூத்த

காதல் வாசனைக்காய்

வீதியில்

காத்திருந்தேன்.அவ்வேளைதான்.......

அகிம்சையை

கையிலேந்தி

அண்டை நாட்டிலிருந்து

வந்தவர்கள்

ஆயுத பாணியாய்

நடந்து வந்தார்கள்....பொற்கோயிலுக்குள்

புகுந்து....

சொந்தச்சகோதரங்களின்

இரத்தச்சிதறல்களில்

வெற்றிகண்டவர்கள்நான் எனது வீதியில்

நின்றதைத் தவிர
எந்தக்குற்றமும்

அறியாதவன்என்னைக் கைது செய்து

பொம்மைவெளி

வதை முகமுக்கு

கொண்டு சென்றார்கள்.என்னொடு பதினெட்டு

எள்ளிநகையாடும்

புன்னைகைப் பூக்கள்

சிப்பாய்கள் முகங்களில்

இரத்தக் கறை படிந்த

சுவர்கள்…நெஞ்சிலிருந்து

உயிர் பிடுங்கும் வலிஏதோ புரியாத

மொழியில்

தங்களுக்குள்

பேசிக்கொண்டார்கள்.பின்.....அரைகுறைத்தமிழில்

என்னிடம்

கேட்டான் ஒருவன்

..........................

நான்அறியேன்

என்றேன்நான் அருளப்பரல்ல

மூன்று முறை

மறுதலிக்க......

நான் தமிழன்

ஒருமுறையே

மறுதலித்தேன்.மீண்டும்

அடி உதை

சாப்பாத்துக் கால்களின்

பதிவுகள்......

என்முகத்திலும்

முதுகிலும்நான் என்ன

செய்வேன்

அழுவதைத் தவிர.......ஒளியிழந்த

வாழ்வில்

ஒப்பாரி ஓலங்கள்

மீதியாய்கேட்கும்

அந்தப்பொழுதுகளில்

என்னைப்போல்

உயீர் மீண்டவர்கள்

சிலர்.......

மையிருட்டில்

மறைந்து போனோர்.........?

பலர்........

நெய்தல் நிலத்துக்காரி டானியல்ஜீவா-


கொழும்பில் நான் தங்கியிருந்த காலத்தில் ஒரு சிங்கள வீட்டில் தான் நானும் வரதனும் ரமேசும் சாப்பாடு எடுத்து சாப்பிடுவது வழக்கம். இன ஐக்கியத்தை ஏற்படுத்தவது அல்ல எங்கள் நோக்கம். அல்லது சாப்பாடு சிங்களவர்கள் ருசியாக சமைப்பார்கள் என்பதற்காக அல்ல. 'கிராண்பாஷ்' வீதியில் உள்ள அந்த வீட்டுக்குப் போய் சோத்துப் பார்சல் எடுப்பதன் நோக்கம் நிறையச் சோறும்; கறியும். அடுத்து மிக விலை குறைவானதுமே. இந்த வீட்டை எனக்கும் வரதனுக்கும் அறிமுகப்படுத்திய பெருமை ரமேசையை சேரும். அவன் நன்றாக சிங்களம் பேசக்கூடியவன் அத்தோடு ஆங்கிலமும் ஒரளவு இலக்கண முறைப்படி பேசக்கூடியவன். புனித பெனடிக் கல்லூரியில் வர்த்தகப்பிரிவில் படித்த பின் யாழ்ப்பாணப் பக்கமே வராமல் கொழும்பிலேயே தங்கிவிட்டான். வரதன் உயர்தரம் கணிதப் பிரிவில் யாழ் மத்திய கல்லூ¤யில் படித்தவன். நான் வைதீஸ்வரா கல்லூரியில் உயர்தரம் கலைப்பிரிவில் கல்வி கற்றவன். மூன்றுபெருமே மனதளவில் படித்து பட்டம் பெறவேண்டும் என்ற ஆசையை வளரத்;தவர்கள்தான். அது நிறைவேறாமல் போனதால் வெளிநாடு செல்லும் எண்ணத்தோடே யாழ்ப்பாணத்தை விட்டு நானும் வரதனும் கொழும்பு வந்து சேர்ந்தோம்.இங்கு வந்த நாட்களில் இருந்து மூவரும் சாப்பாட்டு பார்சலை எடுத்து எங்கையாவது வைத்து சாப்பிடத் தொடங்கினால் நடைமுறை வாழ்க்கையில் இருந்து நாவாந்துறை நெய்தல் நிலத்து வாழ்க்கை வரை பேச்சு நீண்டு சிதறி விரியும். அனேகமாக ரமேஸ் எங்கள் இருவரில் இருந்தும் ஒரு வகையாக சமகால வாழ்வை, வாழ்வு கொள்கின்ற நெருக்கடிகள்,சமூக ஏற்றத் தாழ்வுகள்,சாதிப்பிரச்சனை, மதப்பிரச்சினை பற்றி எல்லாம் காரசாரமாக கதைக்கும் போது ரமேஸ் மௌனமாக இருந்தாலும் சில வேளைகளில் ஏதேனும் சொல்வதற்காக அவனிடம் இருந்து வார்த்தைகள் உதிர்ந்தால் அவை நானும் வரதனும் கதைப்பதற்கு எதிர்மாறாகவே இருக்கும.; சமூக நெருக்கடிகளுக்கு எப்போதும் அவனுடைய சமரசப் பார்வையையே முன் வைப்பான்.அறிவில் கொஞ்சம் எங்களை விட உயர்ந்தவன் என்றாலும் இந்த சமூக அமைப்பின் நௌ¤வு சுழிவுகளை சரியாக பூ¤ந்து கொண்டவன். இந்த விடயத்தில் வரதன் ஓரளவு என்றாலும் ரமேசின் பாசையில் என்னைச் சொல்லப் போனால் பிழைக்கத் தெரியாவதன் போக்கு. இப்படித் தான் ஒரு முறை மூன்று பேரும் சோத்துப் பார்சலை எடுத்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது ரமேஷ் கேட்டான் வரதனிடம்

'

'வரதன் இரவுச் சாப்பாடு என்ன மாதிரியடா...?'


'இரவுச் சாப்பாட ராமேஸ்! சாப்பிடுவதை நினைத்தாலே இப்ப சாப்பிட்ட சாப்பாடும் உடனே செமிக்குமடா'


நாங்க மூவருமே விழுந்து விழுந்து சிரித்தோம். கொஞ்சம் நகைச்சுவை உணர்வு கலந்த போக்கிலேயே வரதன் எப்போதும் கதைப்பது வழக்கம். மீண்டும் ரமேசே ஒரு கேள்வியை வேணுமென்றே போட்டான்.


'என்ன வரதன் உங்கட கொப்பர் வாத்தியாராக இருந்து கொண்டு உங்களையும் படிக்க வைத்து ஆளாக்கியிருக்கிறார் அதோட அவரும் சட்டக் கல்லூ£¤யில் படித்துக் கூட முடித்து விட்டார். நீ மட்டும் ஒரு முன்னேற்றம் இல்லாமல்... உன்னை நான் முதல்ல பார்த்த மாதிரியே இப்பவும் இருக்கிறாய் எப்ப தான் உன்ர வாழ்க்கையில முன்னேற்றம் வருமடா?'


வரதன் புன்னகைத்துக் கொண்டு 'உங்களோடு நான் திரிந்தால் எப்படியெடா உருப்படுவன் ஏதோ நீயோ சிவாவோ முன்னேற்றத்தின் உச்சியில் இருந்து கதைப்பது போல் அல்லவா உன்ர கேள்வி கிடக்கிறது?'


நான் மௌனித்து விட்டேன். மௌனத்தின் ஆழத்தில் இருந்து கொழும்பு நகா;ப்;புற வாழ்;வு மனதில் நகா;ந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள கரையோர நகரப்பகுதியான நாவாந்துறையில் இருந்து புறப்பட்டு வந்த காலத்தில் இருந்து கொழும்பில் லொட்சில் தங்கியிருக்கும் காலம் வரை வெறுப்பும் விரக்தியும் வறுமையும் கூடவே என் வாழ்வின் மீது கவிந்து கிடந்தாலும் என்னால் ஊருக்கு திருப்ப முடியாத மனவிறுக்கம். விரும்பியோ விரும்பாமலோ மனதில் வா¤த்துக் கட்டிக்கொண்டு விட்டேன்.லொட்சில் வெறும் விறாந்தையில் தூங்குவதற்கு மட்டும் நாற்பது ரூபாய். அறை எடுத்து தங்குவதாக இருந்தால் இருநூறுக்கும் அதிகமாகும். உழைப்புப் பிழைப்பு இல்லாமல் இருத்தலில்; இந்தச் செலவீனத்தை எப்படித் தாங்கமுடியும். இதற்கிடையில் வீட்டில் இருந்து வேறு காசு கேட்டு கடிதம் வரும் தங்கச்சியடம் இருந்து. ஒரு தடவை கோபத்தில் கடிதம் ஒன்று தாறுமாறாய் பேசி எழுதிவிட்டேன். பின்னர் தான் யோசிச்சன் அப்படி எழுதியது தவறு என்று. இப்படித் தான் வீட்டில் இருக்கும் போது சில வேளை கோபத்தில் பேசிவிட்டு மனதால் புழுங்கிச் சாவேன். கோபம் வருவதற்கு காரணமோ அன்றில் காரணமற்றோ எழும்வேளையில் சினந்து கடிந்து கொள்வேன். பின்னர் ஓய்வில் மனம் உறங்கும் போது அதற்கான காரணத்தை ஓடவிட்டு பிடிக்கும் போது அதற்குள் அற்பத்தனமான விடயமே மலிந்து கிடக்கும்.


கொழும்பு நகர வாழ்க்கையை என் வாழ்நாளில் எப்போதுமே நான் கண்டது கிடையாது. இந்த வாழ்க்கையை வாழ்நாளில் அனுபவிச்சவனும் இல்லை. அதனால் நகர நாகாPகத்தை அடியோடு என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது தவித்தேன். அதற்கு என்னொரு காரணம் என்னுடைய இயல்பான சுபாவமும் தான். சூ£¤யனும் நிலவும் எந்தளவு ஒளியைக் கொடுத்தாலும் அவை எட்டாதா தூரத்தே நிற்பது போல் தான் என் காலைச் சாப்பாடும் இரவுச் சாப்பாடும். வாய்க்குழிக்கு வரமறுக்கும். அந்த நினைவோடு நின்றுவிடும். இதை விட கொழும்பில் எப்பபோதுமே தமிழனுக்கு பதட்டமான சூழ்நிலை தான். அதுவும் வடக்கு கிழக்கில் இருந்து வெளிநாடு செல்வதற்காகவோ அல்லது உறவினர்களிடம் வெளிநாட்டில் இருந்து பணம் வாங்குவதற்காகவோ வந்து தங்கி நிற்பவர்கள் சொல்லொணாத் துயரம் அனுபவிப்பார்கள். அடிக்கடி இரவில் பொலிஸ் வந்து பாய்வதும், விசாரணை என்ற பெயா¤ல் பொடியலை பிடித்துக் கொண்டு போவதுமான நிலையில் மனம் நிம்மதி அற்று ஒவ்வொரு இரவும் பீதியில் நிறைவுறும். இன்றிரவு பொலிஸ் வருவானோ நாளை இரவு வருவானோ என்றெல்லாம் மூச்சுத் தினறும். பெற்ரா பொலிஸ் நிலையத்தில் இருந்து விசாரணைக்காக கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களின் கதை கேட்டால் கண்ணீரிலே என் இதயம் ஈரமாகிவிடும்.


மரணப்பீதி நான் சுமந்து வாழ்ந்த காலத்தில் வாழ்வு கா¤கியும் தேய்ந்தும் உறங்கிக் கிடந்தது.எதுவுமே நிரந்தரமில்லையென்ற எண்ணம் நெஞ்சுக்கு புலப்பட்டு நெடுநாட்களாகி வி;ட்டது. எனக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கையின் எல்லையைத் தாண்டி ஒரு நிமிடம்கூட என் உடலிருந்து உயிர் இருக்க முடியாது என்பதை அம்மாவின் இழப்பினுடாக கிடைத்த அனுபவம் என்று சொல்வதிலும் பார்க்க இதுதான் நியதி என்று நிம்மதி கொண்டேன்.என் வாழ்வின் நோக்கென்ன....? அதைக் கண்டடைய வேண்டுமென்று என்னையறியாமலேயே எனக்குள் எப்போதும் ஒரு உறுத்தல் அதனால் ஒவ்வொரு நிமிட இருப்பையும் இனிமையாக்க வேண்டுமென்ற முனைப்பு. ஆயினும் இப்போது மனசு வலித்தது.என் கண்களில் மேகத்திரள் கருக்கட்டியது. இருட்டைக்கிழிக்கும் ஒளியொன்று எழத்தான் வேண்டும். எழும் என்ற நம்பிக்கை உண்டு. அது காலத்தின் கட்டாய தேவை என்பதை மனம் அடிக்கடி முணுமுணுத்தாலும் தற்போதுள்ள வாழ்க்கையை எப்படி வெற்றி கொள்வது என்பதே என் முன் கேள்விக் குறியாக உள்ளது. என்று மனதுக்குள் வார்த்தைகளைப் போட்டு பிசைந்து கொண்டு இருந்த வேளைதான் ரமேசின் காட்டுச் சத்தம் என் நினைவைச் சிதறடித்தது. ரமேஸ் வரதனைப் பார்த்துக் கொண்டு


'என்னடா வரதன் இவனுக்கு நான் சொன்ன வார்த்தை சுட்டுப்போட்டுது போல' என்றான்.


நான் சிரித்துக் கொண்டு....

'எனக்கு அப்படி ஒன்றும் சுடவில்லையடா... வீட்டிலேயே எவ்வளவோ திட்டை வாங்கிக் கொண்டுதான் வாழ்ந்தனான். இது பொ¤ய பேச்சாடா?'


“இல்லையென்றால் அப்படியென்னடா யோசனையில் லயத்திருந்தனி? ஒரு வேளை காதல் தந்த கடும் தழும்புகள் நினைவில் வந்து விட்டதோ?”


“நமக்கெல்லாம் காதலா...? அப்படித்தான் காதல் வந்தாலும் 'முனியப்பதாசன'; சொன்னது போல் 'ஒரு நிமிடப் பூக்கள்'தான்”.


“நீ முனியப்பதாசன் என்று சொல்லத்தான் ஒரு விசயம் ஞாபகத்தில் வருகுதடா...”


“என்னடா ரமேஸ!; என்னை எக்கச் சக்கமாக யோசிக்க வைக்காமல் சட்டனச் சொல்லன்டா”


“சிவா நீ ஆனா யேசுராசாவின் அறியப்படாதவர்கள் நினைவாக கவிதைத் திரட்டை கேட்டயல்ல?”


“ஓம் அதுக்கென்ன?”


“அதுக்கென்னவாஸ?நானும் உன்னைச் சந்திக்க வரும் போது ஒவ்வொரு முறையும் மறந்து போய்விடுகிறன்....”.


“இப்பயென்ன நாம மூவரும் நடந்தே உன்ர அறைக்குப் போய் எடுத்து வந்தால் போச்சு...”


“உனக்கு என்ன சொன்னனான்.... நினைவில்லையோ”


“என்னடா..?”


“சிங்களச் சனம் அறையை வாடகைக்குத் தரும் போதே எழுதப்படாத கொண்டிசன் போட்டவங்க என்று ஒன்று சொன்னனே ஞாபகம் இருக்காஸஸ.அதிகம் ஆட்களை கூட்டிக்கொண்டு வரக்கூடாது என்று சொன்னவையல்ஸ.?”


“...ஊம் இது பற'றி சொன்னனீதான் ஆனா மறந்து போய்ற்றன்”;.


“நல்ல சனம் ஆன பொலிஸ் கிளிஸ் எண்டு வந்தால் பயப்பிடுங்கள் அதுகள் ஒரு சோலி சுறட்டில்லா சனம”;.


“அப்ப என்ன செய்யலாமடா?”


“பக்கத்திலதான்டா என்ர அறை நடந்து போய்ற்றே வாறன்.... நீங்க இங்கேயே இருங்கடா.”


“நானாவது வரவாடா?”என்று வரதன் கேட்டான்.ரமேஸ் சற்று யோசித்துவிட்டு

“சரி வா வரதன”; என்றான.;


“நான் இந்த இடத்திலேயே இருக்கிறன் நீங்கள் போய்ற்று வாங்க” என்று சொல்ல

சரி என்று தலை அசைத்துக் கொண்டு ரோட்டை கடந்து வீட்டைத் தேடி இருவரும் நடந்தார்கள். நான் போகும் திசையை நோக்கி கண்களை மேய விட்ட படி மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தேன். அவர்களின் உருவம் மறைந்து போக மெதுவாக எனது தனிமை உணர்வு உள்ளத்தில் உறைந்து மீதியாய்த் தேங்கி நிற்கும் நினைவுகள் மெல்ல மனிதில் இருந்து கசிந்தது.


பா¤மளா! அவள் நெய்தல் நிலத்துக்கா£¤. இடுப்புடைய இடர் வந்து நொந்தாலும் நோய்யென்று படுக்கையில விழுந்தது கிடையாது. நெருப்பைச் சுமந்து நிழல் தேடும் அவள் மனம். ஆயிரமாயிரம் தடவை அழுது கண்ணீர் விட்டு பரலோக மாதாவிடம் மண்டியிட்டு ஒவ்வொரு கோரிக்கைகைளாய் ஒப்பிவித்த போதும் இன்று வரை மிஞ்சியிருப்பது அவள் வடித்த கண்ணீர் மட்டும் தான். நாவாந்துறையில் இருந்து கொஞ்சம் வெட்டி எறிந்த துண்டுபோல பொம்மை வெளி. இந்த குடியேற்றத்திற்கு போவதற்கு குறுக்காக நடைபாதை வழி இருக்கிறது. பொம்மைவெளியோடு ஒட்டி நிற்கும் குடியேற்றத்திட்டம் தான் சூரியவெளி. சூரியவெளிக்கும், பொம்மைவெளிக்கும் இடைப்பட்டு ஒரு வயல்வெளி அந்த வயல் வெளியில் பலர் சொந்தமாக காணிவாங்கி வீடு கட்டினார்கள். பொம்மைவெளி, சூரியவெளி என்ற வரிசையோடு கவிதை நடையிலேயே இந்த வயல் வெளி 'அறுகுவெளி'யாய் பெயர் மாறியது. பரிமளா இந்த அறுகுவெளிக்குள்ளேயே காணிவாங்கி குடிசையொன்று போட்டு வாழ்ந்து வந்தாள். சூரியவெளியையும், பொம்மைவெளியையும் ஒட்டினால் போல் காரைநகருக்குப் போவதற்குரிய பிரதான ரோட்டுப் பாதையுண்டு. இந்த ரோட்டைக் கடப்பதற்கு முன் ஒரு வெள்ளை வீடு ஓன்று தனித்து இருக்கின்றது. நாங்கள் ரோட்டைக் கடந்து நெல்லுப் பிடுங்குவதற்காக செல்கின்றபோது இந்த வெள்ளை வீட்டுக்குப் பக்கமாக போய்வருவோம். இந்த வீட்டில் ஏதோ பேய் உலாவுவதாகவும் கதைகள் உண்டு. அந்த வெள்ளை வீட்டின் சுவரின் மேல் ஏறி ஒரு நாள் எங்கே பேய் நிற்கின்றது என்று கூடப் பார்த்தோம். அங்கு பேயில்லை. அது இருண்டு பாழ்ழடைந்த மண்டபம் போல் தோன்றியது. இப்போது அந்த வெள்ளை வீட ஒரு பள்ளிவாசலாக மாறிவிட்டது.

பா¤மளத்தின் மூத்த மகள் பொன்னு கொஞ்சம் சுறு சுறுப்பானவள். நெல்லுப் பிடுங்கிற காலத்தில் வயலுக்குச் சொந்தக்காரன் கூப்பிடு போட்டு வருவதற்குள் பை நிறைத்துவிட்டு ஓடிவிடுவாள். சில வேளை நான் மட்டும் பிடிபடுவேன். அப்படி பிடிபடாடத நேரங்களில் பிடுங்கிய நெல்லோடு வீடு திரும்புவோம். வீட்டிற்கு வந்தால், அம்மா நெல்லை உரலில் போட்டு குத்தி சீனிச்சோறு சமைத்துத் தருவா. அன்றிரவு அரை வயிற்றோடு தூங்கிவிடுவோம்.


பாய் விரித்த வள்ளம் ஓட்டும் ஓடத்திற்கு சொந்தக்காரன் தான் பா¤மளாவின் கணவன் அந்தோணி. ஆனா ஆவன்னாவை எழுத்துக் கூட்டி வாசிக்கத் தெரியாத பாமரன.; என்றாலும் பகுத்தறிவாளன். பண்பில் சான்றோரைவிட உயர்ந்தவன்.தன் குடும்பத்திற்கென்று எந்தச் சொத்துக்களையும் சேர்த்து வைக்காதவன். கடலில் காற்றுத் திசையறிந்து நீர் நிலை கணக்கிட்டு தொழில் திறம்பட செய்வதில் அவனொரு அறிஞன். மிக கெட்டித்தனமாக களங்கண்ணி பாய்வதிலும் அவனுக்கு நிகர் அவன்தான். அவதானிப்பு உலக ஞானம், புத்திக்கூர்மை, சமூகநேசிப்பால் ஊரில் நல்ல பெயரோடு வாழ்பவன். பழுப்புமேவிய பற்கள் எப்போதும் வெற்றிலையை அரைத்த படியே இருக்கும். சுருட்டையும் சுகமாய் இழுத்து சுவாசிப்பதில் ஒரு சுகம் காணுவான் அந்தோணி. அந்தோணிக்கு இழகிய இதயம.; நெஞ்சில் நிறையக் கனவுகள.; ஆசைப்பட்டதுகள் அதிகம். அதில் ஒன்று கூட வாழ்நாளில் கிடைக்காகமல் போனது அவன் விதியல்ல. பல மீனவர்கள் பாடு இப்படித்தான் நகர்ந்து முடிவுற்றிருக்கிறது. அந்தோணிக்கும் பரிமளாவிற்கும் இரண்டு பெண்கள். இரண்டும் இருவிழிகள் போல் அவர்களுக்கு கறுத்தத் தங்கங்கள். ஒருவாறு ஒன்றைக் கரைசேர்த்ததே ஒரு பெரிய விடையம் போல இன்ப நினைவில் மிதந்த வேளையில்தான் அவனுடைய இயல்புநிலை ஒடுக்கப்பட்டு படுக்கையில் விழுந்தான். முற்றத்தில் நின்ற முரங்கை மரம் செல்லடித்து சிதறியதுபோல் பா¤மளாவின் வாழ்வும் பா¤தாபமாகியது. திடீரென வந்த பக்கவாத நோய் தாக்கி இடது பக்கம் முழமையாக செயல் இழந்து இயல்பு நிலையை முடமாக்கி விட்டது. படுக்கையில் கிடந்த படியே கொன்னத் தமிழில் மட்டுமே கதைப்பான். மலம் சலம் என்றாலே படுத்த படுக்கையில் கிடந்த படி கழிக்க வேண்டிய நிலை. சிலவேளை பா¤மளா கொஞ்சம் நிமிர்த்து வைத்து சாப்பாடு ஊட்டி விடுவாள். அப்படி அவனுக்கு ஊட்டுவதில் அவளுக்குள் ஒரு இன்பம். ஓடியாடித் திரிந்த மனிசன் ஒடுங்கிக் கிடக்கிறாரே என்று மனதளவில் அழுது தொலைவாள். பா¤மளாவின் முகத்தில் ஏதேனும் வாட்டம் கண்டாலே அவன் அதை உணர்ந்தவன் போல் தன் கைகளால் அவளுக்கு புரியும் படி கவலைப்படாதே எல்லாத்துக்கும் பரலோகமாதா இருக்கிறா என்று சொல்லுவான். கணவனின் உழைப்பும், தன் வியாபாரத்தில் கிடைக்கும் வருமானமும் குடும்ப பொருளாதாரச் சுமையை ஓரளவு சமாளித்துக் கொண்டிருந்த பரிமளாவிற்கு அவன் படுக்கையில் விழுந்தபோது குடும்பவருமானமும் குறைந்து, குடும்பச் சுமை அதிகரித்தது. இந்த நிதி நெருக்கடிக்யை ஈடுசெய்ய எத்தனையோ வழிமுறையை அவளின் மனத் தேடலிலஒன்;று மட்டும் சட்டென ஓடிவந்து குறுக்கிட்டது. அது வேறு ஒன்றுமில்லை அவள் செய்யும் தொழிலான மீன் வியாபாரத்தில் தான். மீன் வியாபாராம் தொடங்குவதற்கு முதல் கடலில் இருந்து மீனவர்கள் பிடித்துவரும் மீன், றால், கணவாய், போன்றவற்றை அவர்களிடம் வாங்கி அவர்களுக்கு முன்னால் சுளகில் போட்டு விற்கிற வியாபாரியாகவே இதுவரை இருந்து வந்தாள். மீனோ றாலோ கணவாயோ விற்ற பிறகு மீனவர்கள் கொடுக்கின்ற பணத்தை மட்டும் வாங்குவாள். சிலர் பணம் கூடக் கொடுக்காமல் போய்விடுகின்ற சம்பவங்களும் சிலவேளைகளில் நடக்கத்தான் செய்கிறது. இதற்குமேல் ஒரு படி உயர்ந்தே அவள் சிந்தனை முளைத்தது. அதாவது மொத்தமாக கூறியான் ஏலத்தில் போட்டு கூறிவிக்கும் போது அதை மொத்தத்தில் வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக மீன் விற்கிற கல்லில் போட்டு விற்கவேண்டும் என்கின்ற எண்ணமே.அந்த கனவை நனவாக்க ஆகக் குறைந்தது இரண்டாயிரம் ரூபாய்யாவது சொந்தமாக கையில் இருக்கவேண்டும். அந்தப் பணத்தை பெறுவதற்கும் பலவகையான உறவுக்காரரை மனத்திரையில் போட்டுப் பார்த்தாள். அங்கொன்றாய் இங்கொன்றாய் சில மனதில் வந்து தோன்றினாலும் அவர்களிடம் மண்டியிட்டுப் பணம் கேட்க அவளின் சுயகௌரவம் விட்டுக் கொடுக்கவில்லை. அத்தோடு பணம் வாங்கினால் உறவில் வி£¤சல் சில வேளை வந்துவிடும் என்றும் நினைத்தால் சற்று நிதனமாக யோசித்துவிட்டு தயக்கத்தை துரத்த@ துணைக்கு வந்தது வீட்டிலிருக்கும் நகைபற்றிய நினைப்பு.வீட்டிலுள்ள மொத்த நகைகளைச் சேர்த்து அடைவு வைத்தால் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய் கிடைத்து விடும்.அந்த கசிந்த நினைவோடு பா¤மளா இளைய மகள் மா¤யாவுக்கு பக்கம் வந்தால்.


“மா¤யாஸ.!”


“என்னன்ன அம்மா?”என்று கேட்டுக் கொண்டு மா¤யாதை கலந்த அன்போடு பா¤மளத்தை நிமிர்ந்து பார்த்தாள்.


மா¤யாவின் முகத்தை பார்த்ததும் அவளுக்கு மனசு வலித்தது.நாட்கள் தவறாது நாற்க்கடகம் சுமந்து மின் விற்றுப் பிழைத்தலில் குடும்பத்தின் வயிற்றை மட்டும்தானே நனைக்க முடிந்தது.ஆனா மா¤யாவிற்கு வாழ்க்கைத் துணையொன்றைக் தேடிக் கொடுக்க வக்கற்றறுப் போனேன் என்று உள்ளுக்குள் உணர்வுகள் பிசுபிசுக்க குற்ற உணர்ச்சியால் கூனிப்போனாள்.


“மா¤யா எப்படி மோன இருக்கிறாய்ஸ..?”கவலை கலந்த குரலில் கேட்டாள்.


“என்னயம்மா .உனக்கு என்ன ஆய்ச்சு?விடிஞ்ச பொழுது பட்டால் வீட்டுக்குள்ள உன்ர காலடியிலேயே கிடக்கிறன். பிறகு எப்படியிருக்கிறாய் என்று கேட்கிறீயின.”


“இல்ல மோன.”தயங்கித் தயங்கி குரல் தவழ்ந்து வர மா¤யாவின் குரல் குறுக்கிட்டு அவள் வார்த்தையை நிறுத்தியது.


“என்ன அம்மா சொல்லன எனக்குத் தொ¤யாமல் எதையோ மறைக்க நினைக்கிறயன”


“இத்தினை வருச குடும்ப வாழ்க்கையில உனக்குத் தொ¤யாமல் என்னத்த மோன மறைச்சனான்”


“அப்ப என்னன்டுதான் சொல்லன்..”


“மோன இப்பிடியே எத்தினை நாளுக்குத்தான் கஸ்டப்பட்டு வாழ்கிறது.கொஞ்சமாவது நம்முடைய குடும்பத்திற்கு வெளிச்சம் கிடைக்காத எண்டும் உன்னையும் இப்பிடியே வைச்சுக்கொண்டிருந்தால் ஊ£¤ல நாலு சனம் என்னன்னோவெல்லம் கதைக்குங்கள்.கால காலத்தில குமர் கரைசேர்றதுதான் எங்களுக்கும் நல்லது உனக்கும் நல்லது.அதுக்காகத்தான் ஒரு முடிவுக்கு வந்துட்டன்.இவர் படுக்கையில் விழுந்த பிறவு நாம அனுபவிச்ச கஸ்டதுன்பங்கள் கொஞ்ச நெஞ்சமில்ல அப்படியிருந்தும் ஆ£¤ட்டயும் பல்லுக் காட்டாமல்தான் இவ்வளவு காலமும் மீன் வியாபாரத்தில கிடைக்கிற வருமா£னத்தைக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கம்.எல்லாம் கடவுள் சித்தம் கடவுள் பா£த்துக் கொள்வார் என்று அக்கைறை இல்லாமலிருந்தால் என்னும் வறுமையிலதான் நம்ம குடும்பம் சீரழியும்.என்னதான் இருந்தாலும் நம்மட முயற்சியும் இருக்க வேண்டுமல்ல மோன"


“அதுக்கென்னம்மா நான் செய்யவேணும்..?நானும் உன்கூட மீன் விற்க்க வரட்டுமா”


“அதுதான் ஒன்டு குறையாய் இருந்தது அதையும் செய்துவிடு”


“அப்ப என்னதான் செய்ய வேண்டுமென்டு சொல்லன நான் செய்யிறன்”


“காலையில மீன் சந்தையில மீன் கூறெக்கில மொத்தமாக வாங்கி சுளகில போட்டு விக்க வேணுமென்டு யோசிச்சு இருக்கிறன் அதுக்கு ஒரு இராண்டாயிரம் ரூபாயாவது வேண்டுமெல்ல அதுதான் காலையிலயிருந்து அந்த யோசினையில இருக்கிறன்.”


“அம்மா அப்பிடியென்ட நம்ம சின்னமாக்கிட்ட சாடை மாடையாய் பேச்சு கொடுத்து கடனாய்க் கேட்டுப்பாரன்ஸ”


“உன்ர சின்னமாக்கிட்டியஸ.என்ர தங்கச்சிய உன்ன விட அவள எனக்கு நன்றாகத் தொ¤யும்புள்ள.அவள் எச்சிக்கைய்யாலயும் காகம் திரத்த மாட்டளடி என் புருஷன் படுக்கியில விழுந்தண்டு வந்தவள்தான் அதுக்குப் பிறவு ஒரு நாள் கூட என்ன ஏதேன்டு எட்டிப்பாக்காதவள்; நம்மட குடிசைப்பக்கம் வந்தாள் நம்மட கஸ்டத்தில ஏதும் காசு கிசு கேட்டுவிட்டிருவோம் என்டதற்காக இங்காலப் பக்கம் வராதவள் நம்மட பரலோக மாதா கோயிலுக் ஒவ்வொரு நாளும் பூசைக்கு மட்டும் ஒழுங்க போயிருவஸதூஸ.இவளும் மனுசியென்டு உலகத்தில வாழ்றலேஸ. அவளட்டிய போயும் போயும் காசு கேட்கஸநீ கோவிக்க மாட்டியன்ட எனக்க ஓரு யோசினை தோன்றுது அதைச் சொல்லட்ட மோன.?”


“ம் சொல்லன அம்மா...”என்று சொன்னதும் பா¤மளாவின் முகம் சுருங்கியது.கண்கள் கலங்கியது.


மா¤யா குழம்பிப் போனாள்.பா¤மாள சொல்வதற்கு தயங்கினாள்.ஏதோ நினைப்பு அவளுக்குள் தோண்ற யோசிக்க ஆரம்பிச்சாள்.


“அம்மா நீ யோசிக்கிறதுக்குள்ள விடிஞ்சு போயிருமன..”


“இவளுக்கு அதுக்குள்ள பகிடி.”என்று சொல்லிக் கொண்டு..


“மோன வீட்டில இருக்கிற நகைகளை கூட்டிப் பார்த்தால் ஒரு மாதி£¤ இரண்டாயிரம் ரூபாய்க் அடைவு வைக்கலம் அதுதான் உன்னட்ட ஒருவார்த்தை கேட்;டுப்போட்டு செய்யலாமென்டு யோசிச்சனனான்”


“அதுக்கு என்னம்மா. நீ முடிவெடுத்தால் அதுசா¤யாய்த்தானே இருக்கும்..”


“சா¤ புள்ள நான் அறைக்குள்ள இருக்கிற நகையை எடுத்துக் கொண்டு வாறன்.”என்று சொல்லிக் கொண்டு பா¤மாள குடிசைக்குள்ளிருந்த அறைக்குள் சென்றாள்.

மா¤யா தாயின் வரவிற்காக வெளிமுற்றத்தில் காத்துக்கொண்டிருந்தாள்.


காற்று மெல்ல வீசிக்கொண்டிருந்தது.மா¤யாவின் தேங்காயெண்ணைய் வைத்து நேர்த்தியாக வா£¤விடப்பட்ட கருங்கூந்தலுக்குள் காற்று நுழைந்து சிதிலமாகி சிறகசைத்து பறந்தது. உருண்ட தசைத்திரட்சி கொண்ட முகத்தில் மேகக்கிளைகள் படர்ந்து அசைந்தாட தென்றலி;ன் சுகம் தேனாக அவளுக்கு சுவைத்தது. முற்;றத்தில் படர்ந்திருந்த பூசனி குறோட்டன்கன்டு முருங்கை மரத்தின் மரக்கினுக்கிடையில் மசுக்குட்டிகளின் வீடிருக்கும் வீதியென்று அவள் அடிக்கடி கண்களால் அளந்து விட்டு பின் அவள் நித்தம் நேசிப்போடு தண்ணீர் ஊற்றி அக்கறையாய் வளர்க்கும் செம்பரத்தமரத்தை பார்த்த போது அவளுக்கு அவளின் அக்காவின் நினைவு நெஞ்சில் முட்ட கண்களில் நீர்; கோர்த்தது.


“கண்ணைக் கட்டிக்கிட்டு பாழுங்கிணத்தில தள்ளி விடுகிற மாதி£¤ இருக்குதடி எனக்கு அம்மா பேசின கல்யாணம் நீயாவது அம்மாக்கிட்ட சொல்லி நிப்பாட்டமாட்டியாடி”என்று அக்கா கண்ணீர் விட்டு கல்யாணத்திற்கு முதல் நாள் சொன்ன போது இவள் அம்மா சொன்னாள் என்று “வலிய வந்த சீதேவியை காலால் எட்டி உதைஞ்ச மாதி£¤யெல்ல உன்ர அக்காவின்ர கதை கிடக்கு.” என்று அம்மா சொன்னதென்று அக்காவிடம் சொன்ன வார்த்தை திரும்பத் திரும்ப நினைவில் வந்து சொல்லொண சித்திரவதை பண்ணியது. அந்த நினைவை அடியோடு மறக்கலாமென்றுதான் பல முறை முனைந்தால்.ஆனால் அது அடிமனதில் அடைகாத்திருந்து தலைகாட்ட அவள் மனசு விசும்பியது.கண்களில் நீர்; கோர்த்து நின்ற கண்ணிர் மெல்ல கன்னத்தில் வடிந்தது. உடல் முழுக்க நடுங்கி வியர்த்தது.

அக்கா எட்டாம் வகுப்பு வரை படித்ததே அம்மாவிற்கு பொ¤ய படிப்பு போல நினைத்தாள். அக்கா அடுப்படியைத் தவிர அயல்வீடேயே அறியாதவள். நிலபுலமற்ற நம்ம குடும்பத்திற்கு நம்மைப் போல் நம்மை புரிந்து கொண்ட ஒருவனேயே திருமணம் செய்து கொண்டால் தான் நம்ம குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும் எண்டு அவள் அக்கா சொன்னாலும், எவனோ ஒரு குடிகாரன் தங்கள் குடும்பத்துக்குள் வந்து வீழ்ந்து, குடும்பம் இரண்டாக உடையும் எண்டு மா¤யா கனவில் கூட நினைக்வில்லை. பொன்னுவின் வாழ்விற்குள் திருமணத்தின் பின் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டது. திருமணம் செய்து பொன்னுவும், கணவனும் பரிமளாவின் வீட்டில் ஆரம்பத்தில் வாழ நேர்ந்தது. அந்த குடிசைக்குள் வாழ்கின்ற காலத்தில் இரவெல்லாம் போதையிலேயே பொன்னுவின் கணவன் வருவான். எந்தக் காரணம் இன்றியும் பொன்னுவின் மாமியாரால் ஏவப்பட்ட வார்த்தைகள் அவள் கணவனூடாக பொன்னுவின் மீது பாய தேவையற்ற தர்க்கத்தில் தொடங்கி குடும்பம் பல நெருக்குதலுக்குள் கொண்டுபோய் விடும். பெரும்பாலும் சீதனம் தரவில்லை, தன்னை சரியாகக் கவனிக்கவில்லை என்று தான் பொதுவாக பிரச்சினைகள் ஆரம்பமாகும். அந்த பிரச்சினையின் பின்புலமாக இருந்து பொன்னுவின் கணவனை ஆட்டி வைப்பது பொன்னுவின் மாமிதான் என்பதை பா¤மளா குடும்பத்திற்கு தௌ¤வாக தெரிந்தபோதும் அவற்றை வெளிக்காட்டாமலேயே அவர்கள் நாகரிகமாக நடந்து கொண்டார்கள். அவற்றையும் மீறி ஒரு இரவு பொன்னுவின் கணவனின் அடக்குமுறையை ஒரு நாள் இரண்டு என்று பொறுத்துக்கொண்டிருந்த பரிமளாவின் குடும்பத்திற்கு அன்றைய சம்பவம் பொறுமையை இழக்க வைத்தது. பொன்னுவின் தாலியை விற்பதற்காக அவள் கணவன் அடம்பிடித்து சண்டை போட்டுக்கொண்டிருந்த போதே பரிமளாவும்,மா¤யாவும் ஏவம்கேட்டுப் போனதே பிரச்சினையை உச்சத்திற்கு கொண்டுபோய் விட்டது.அந்த இரவோடு இரவாய் பொன்னுவை கூட்டிக்கொண்டு தன் தாயின் வீட்டுக்குக் போனவன் தான். இன்று வரை பரிமளாவின் வீட்டுப் பக்கமே வருவதில்லை. அவன் தான் வருவதில்லையென்றாலும், அவள் பொன்னுவைக் கூட அவள் தாய்வீட்டுக்கு சென்று வர அவன் அனுமதி கொடுக்கவில்லை.


முற்றத்தில் நின்ற செம்பரத்தைச் செடியை பார்த்த போது அவள் அக்காவின் நினைவுவில் நிலைத்திருந்த எண்ணத்தை விலக்கி அம்மா சென்ற இடம் நோக்கி பார்வையை வி£¤த்தாள்.


தாய் கையில் சில நகைகளோடு மா¤யாவை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.


“புள்ள இவ்வளவு நகைக்கும் அவள் ராசாத்;தி இரண்டாயிரம் தரமாட்டாள்.அவள் நகையே உரசிப்பார்த்து பித்தளையா தங்கமா என்டு பார்த்துத்தான் அடைவை புடிக்கிறவள்.அவளட்ட போய் இதுக்கு இரண்டாயிரம் ரூபா கேட்டாள் நல்லாத்தான் தருவாள்.”


“வேறயென்ன செய்யிறது.. அப்ப இந்தக் காதில கிடக்கிற தோட்டை கலட்டித் தரட்டான .”என்று காதின் பின் பக்கமாக தோட்டின் சுரை மீது கையை அழுத்தியபடி அவள் கேட்டாள்.


“நானும் அதைப் பற்றித்தான் நினைத்தனான் அதுக்குள்ள நீயா கேட்டிட்டஸ..”என்று சொன்னதுதான் தாமதம் ஒன்னும் பேசமால் பறையாமல் அவள் தோடடைக் கலட்டி அம்மாவின் கையில் வைத்தாள்.தாய் வாங்கிய கையோடு ஏதோ யோசனை திடீரென தோன்ற மா¤யா முந்திக் கொண்டு..


“னேய் அம்மா...இந்தப் போராட்டம் ஆனானப்பட்ட சம்மாட்டிமாரையே ஆட்டம் கான வைச்சிருக்கு நாங்க இம்மாத்திரமா....”


“மோன காதில இருந்து தோட்டக் கழற்றிய பிறகு முகமே ஒரு மாதிரி இருக்கு...”


“அதுக்குத் தானே அம்மா நம்மப்போல பெண்களுக்காகவே கெலிட்டுத் தோடு செய்கிறாங்களே”


“அது வாங்கிறது எண்டாலும் ஐம்பது ரூபாய் காசு வேணுமே? அதுக்கு யாரிட்ட போறது....”.


“அதைப்பற்றி ஏன் அம்மா கவலைப்படுறிய தலைமுடியால் காதை மறைத்தால் போச்சு..”

என்று சொல்லிக் கொண்டு மழிச்சு வாரிவிடப்பட்ட காதிற்குப் பக்கமாக இருக்கும் தலைமுடியை கீழ்நோக்கி இழுத்து காதை மறைத்தாள். அதுவும் மரியாவிற்கு ஒரு அழகாய்த்தான் இருந்தது.


“மோன ஏதும் பழம்சோறு கறியிருந்தால் போட்டுக்கொண்டு வாவன் சாப்பிட்டுப்போட்டு ராசாத்தியிட வீட்டுக்குப் போய் நகையை அடைவு வைச்சுப்போட்டு வாறன்.”

எல்லாவற்றையும் மண்தரையில், பாயில் கிடந்த படி பார்த்துக்கொண்டிருந்தான் அந்தோணி. அவனால் எதுவுமே பேசமுடியாமல் ஊமைநிலவாய் இருந்தாலும், அவரகள் பேசிக்கொண்டவற்றையெல்லாம் உள்ளுக்குள் விளங்கிக் கொண்டான். குசுனிப்பக்கம் போன மா¤யா பழைய சோறையும் கறியையும் போட்டுக்கொண்டு வெளியே வர பரிமளம் நெஞ்சைப் பொத்திய படி சோகமே உருவாகி வாடி வதங்கி மரத்தூணோடு சாய்திருந்தாள். நெஞ்சு வலி தாங்க உள்ளுக்குள் துடித்தாள். மா¤யா பரிமளத்தைக் கண்டதும் விக்கித்துப்போனாள். பாய்ந்து விழுந்து ஓடிவந்தாள். ஓடிவந்த கையோடு, பரிமளத்திற்குப் பக்கமாக உக்காந்து விட்டாள். நெஞ்சில் பரிமளம் அழுத்தி வைத்திருந்த கையைப் பிடித்த படி,

“என்ன அம்மா செய்து..?” என்று அழுது கொண்டு கெஞ்சும் குரலில் கேட்டாள்.


“ஒண்டும் இல்ல மோன இப்ப கொஞ்ச நாளா இப்படித்தான் இருக்கு. இதற்கு முதல் இரண்டு தடவை கடுமையாக வலிச்சது. இது மூன்றாவது தடையாய் நெஞ்சு வலிக்குது. பெரிய பாறாங் கல்லை. நெஞ்சில் வைத்து அழுத்துற மாதிரி இருக்குதுமோன.ஒருக்கால் மூத்தவள் பொன்னுவை பார்க்க வேணும் போல இருக்கு.” பரிமளம் சோகத்தோடு சொல் மா¤யா கூச்சல் இட்டு அழத்தொடங்கினாள்.


“அம்மா ஏனென இரண்டு தடவையும் நெஞ்சு வலி வந்தபோதும் எனக்குச் சொல்லல்ல?”


“நான் சொன்னா அதேயே நீ நினைச்சு நினைச்சு கவலைப் பட்டுக்கொண்டிருப்ப எண்டுதான் அதை மறைச்சனான்”.


“இப்ப ஆஸ்சுப்பத்திரிக்கு போவமாண?”


“வேணாம் மோன...தண்ணீ விடாய்க்;குது கொஞ்சம் தண்ணி கொண்டு வா...”. மா¤யா

பதகளித்து குசுனிப் பக்கமாக அவள் ஓடிப்போய் தண்ணி எடுத்துக்கொண்டு திரும்பி வருவதற்குள் பரிமளாவின் உடலில் இருந்து உயிர் பிரிந்து மரணித்துப் போனாள். மரியாவின் அழுகுரல் ஊரை நிரப்பியது. சாவுமணி பரலோக மாதா கோவிலில் இருந்து அடிக்கப்பட்டது. கோவில் மணிச்சத்தம் கேட்டு ஊரே பரிமளத்தின் வீட்டின் முற்றத்தை நிரப்பியது. உயிரோடு இருக்கும் போது பார்க்க வராதவர்கள் உயிரற்ற உடலைப் பார்ப்பதற்காக வந்திருந்தார்கள். இவர்களோடு பொன்னுவும் கணவனும் வந்திருந்தார்கள்.


பரிமளாவின் மரணம் நினைவில் இருந்து விலகிச் செல்ல வீதியைக் கடப்பதற்காக ரமேசும் வரதனும் நிற்பதைக்கண்டு விட்டேன். இருவரும் இனம்புரியா சந்தோசத்துடன் கதைக்துக் கொண்டு நிண்டார்கள். சென்ற இரு வாரத்திற்கு முன்னர் தான் நாங்கள் ஜேர்மனிக்குப் போவதற்காக பம்பாய், கென்யா, தான்சானியா வழியாக ஜெர்மன் போவதற்கு முயற்சி எடுத்த போது மூவரும் பிடிபட்டு திருப்பி அனுப்பி விட்டதன் பின் ஏஜென்சிக்காரன் இப்ப கென்யா றூட் அடிபட்டுப் போய்டு இன்னும் ஒரு வாரத்தில் புது றுரட் கண்டு பிடிச்சிடுவோம். அதற்குப் பிறகு மூன்று பேரையும் ஜேர்மனிக்கு அனுப்புவதாக எங்களை திருப்பி அனுப்பி விடப்பட்டு கொழும்பு விமான நிலையத்தில் வந்திறங்கிய போது ஏஜென்சிக்காரன் சொன்னது ஒரு கணம் நினைவிற்கு வந்தது. அவன் சொன்னபடி, புது றூட்டை ஏஜென்சிக்காரன் கண்டுபிடித்து வீட்டிற்குப் போனபோது, வீட்டில் ஏதாவது தகவல் கொடுத்துவிட்டுப் போயிருப்பான். அந்த தகவலைக் கேட்டுவிட்டுத்தான் இப்படி ஏகப்பட்ட சந்தோசத்துடன் வந்துகொண்டிருக்கிறான்களோ தெரியல...? ஏன் மண்டை காய யோசிக்க வேண்டும். இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் இருக்கும் இடத்திற்கு வந்து விடுவார்கள் என்று மனசு ஒரு கணம் முணுமுணுத்தது.


“சிவா நீ வெளிநாட்டிற்குப் போனாலும் ஊர ;நினைப்போடுதாண்டா இருப்ப அது உன்ர உடலோட ஊறிய சுபாபம் என்ன..? என்று ரமேஸ் கேட்க...


“என்னைத் தூக்கி வளர்த்த ஊரை எப்படியெடா மறப்பேன்?” என்று ரமேசிற்குச் சொன்னது ஒரு கணம் நெஞ்சிற்குள் முட்டியது.

காயப்பட்ட அகதியின் கண்ணீர்க் கசிவு....

நாவாந்துறை டானியல் ஜீவா

என் உள்ளம்
தூங்குகின்றது...
உடல் அசைகின்றது.
நிசப்தம் கலைய
நிற்கிறேன்.
இயந்திரத்தின்
முன்னால்

பஞ்சுக்கட்டை இரண்டால்
காதைஅடைத்து விட்டு
என்ன சத்தமடா
யாழ்ப்பாணத்தில்
கெலிவருவது போல்....
என்று நினைத்தபடி

சின்னஞ் சிறுவயது
அண்ணன்மார்
அதிகா¤த்ததால்
அவ்வப்போது
பொறுப்பற்று
பொழுதுபோன வாழ்வு....
பிறப்பென்;று சொல்லிக்கொள்ள
என்னைப் போல்
இடிந்து போன
எனது ஊர்....

காலைக்கதிரவன்
கண்விழித்தானோ என்னவோ
பிறப்போடு எனக்கு
இருளானது.

பருவங்கள்
மாறிவிலகிச்செல்ல
ஒவ்வொரு தேசமாய்
என் இருப்பு....
எனக்கேது முகவா¤..?

இயக்கமின்றி
இயங்கும்
என் வாழ்வின் துயா¤ல்
ஒவ்வொரு கணமும்
போ£¤டும் மனவிறுக்கம்

என் மனவீதியில்
பால்நிலாவொன்று
பரவசமாய் வி£¤கின்றது
அந்தக்கணமே
வண்ணாத்திப்பூச்சி போல்
திசை தொ¤யாமல் மனம்;....

மிதிபடுகின்றது
என் கனவுகள்....
அழுகையோடு
அம்மாவின் நினைவுகள்.

என்னுள் வேரோடி
என் மனதை
அழுத்திக்கொண்டிக்கின்றது
ஒருவார்த்தை
மனித நேசிப்பு
இப்பூமியில்
எப்படி சாத்தியப்படும்
என்ற வினாவெழுப்பியபடி

அச்சம் ஊடறுத்து
உயிர்த்தெழுதல்
சாத்தியப்படதா போதும்
பிலாத்துவைப் போல்
கைகழுவ
ஈரமான இதயம்
இடங்கொடுக்க மறுக்கிறது

என்ஜீவனத்திற்கு£¤
உயீர்....
எத்தனை
நெருக்குதலுக்குள்

என்னால்
தனித்து வாழமுடியாது
என்பதை
இந்தக்கணப்பொழுதில்
உணர்கிறேன்....

பகல் முழுவதும்
தூங்குவதே
கடமையாயின@
இரவு வேலையே
என் இருப்பை
அடையாளப்படுத்துகின்றது.

இயந்திரத்தின்
மேலே
வலப்பக்கமாக....
நிலாபோன்ற
வெள்ளை நிற
மின் விளக்கு
அந்த வெளிச்சத்தை தேடி
தும்பி போன்ற பறவை
பறந்து கொண்டிருந்தது

என் பார்வையை
விலக்காமல்
பார்த்துக் கொண்டிருந்தேன்
ஒரு நொடிப் பொழுதுதான்
சுருண்டு சுருண்டு
கீழ் நோக்;கி வந்து
என் காலடியில்
விழுந்தது....
சூட்டு காயங்களுடன்
வீதியில் வீசப்பட்ட
என் தோழனின்
உடல் போல்....

நிலவோடு நீ வருவாய்

நாவாந்துறை டானியல் ஜீவா

நீ விழித்திருக்கும் போது

நான் தூங்கிறேன்

நீ தூங்கும் போது

நான் விழித்திருக்கிறேன்நீயொரு தேசமாய்

நானொரு தேசமாய்

ஆயினும்

கனவில் கூட

உன்

கண்கள்தான்?ஓ வென்று அழுதாலும்

சீ என்று சினந்தாலும்

மனதில் நிலையாய்

நிற்பது

உன் வா£த்தைகள்

மட்டும்தான.;?..!நீயிருக்கும் போது

என் இதயம்

இடிபோல

சுமைகளும்

சுகமாய் சுமக்கும்நீயில்லா

என்னிடம்@

இளவம் பஞ்சுக்

கனம் போல்

நெஞ்சில்

இறங்கினாலும்

நெருப்பில் விழுந்த

புழுவைப் போல்

நெகிழ்கிறேன்?.தெருவில்

இறங்கினால்

நிலவோடு

நீ வருவாய்?நான்

வேலைக்குச் சென்றால்

என் உடையோடு

நீ ஒட்டிக் கொள்கிறாய்?வீடு திரும்பி

தூங்க@

துணைக்கு

நீ வருகிறாய்என் உடலே

உனக்காக

உருவெடுத்திருக்கின்றது.

என் விழிகள்

விழித்தாலே

உன் நினைவோடு

நீர்த்திவலைஆயினும்?..?கடந்த கால வாழ்க்கை

என்னைப் பக்குவப்படுத்தியதினால்

நான்

எனக்கான

விடுதலையை

வெல்ல வேண்டுமென்றென்....

நீ

உன்னால் அதுவரை

காத்திருக்க முடியாதென்றாய்நம் நெருக்கம்

நோ;கோட்டில்

நகர மறுக்க

முறிந்தது

நம் உறவு?உன்னைப் பி£¤ந்தது

துயரமா??

அது சொல்லி

மாளத் துயரம்குற்ற உணர்ச்சி

கூனிப்போக

மனசு வலித்தது.

வெகு நாளாய்

தூக்கம் வரல...

நீ பி£¤ந்த போதே

என் உயிரும்

பி£¤ந்திருக்க வேண்டும்....

எதற்காக இன்னும்

என் உடலில் உயிர்?..?

....

பனிப்புலத்து

பட்டமரமொன்று

தனக்குள் தன்னுயூரை

தேக்கி வைத்திருப்பது போல்....


----
உன்னில் உறைந்து போனேன்...
நாவாந்துறைடானியல்ஜீவா

ஊசிக் குளிர்

வந்தென்னை

உரசித் தாக்க

உறை நிலைப் படலமாய்

நீ எந்தன்

நெஞ்சில்..வாழ்வு

வறுமையின்

கரு முகிலாய்

உன் திருவுருவம்

மனத்திரையில்

தோன்றும் வேளை...

வெண்ணிலவாய் மாறும்


இடுப்புடைய

இடர்வந்து

நொகுமெந்தன்

மெய்யில்

என் நிழல் பார்க்க

எனக்கேது நேரம்....


இன்னும்

எனக்குள்

உன் வாசனை...


நீயும் நானும்

வெயில் சாய

வீதியில் நடந்தோம்.


கவிதையில்

பகிடி பண்ண

காற்றோடு உன் சிரிப்புதிர

எச்சி முறிகள்

என் முகத்திற்கு

சொந்தமாகும....


குளிர் காற்றும்

கொழுத்தும் வெயிலும்

கவி சொல்லும்

கனத்த மழையும்

நம் மகிழ்விற்காய்

வசப்படுத்தினோம்


வெள்ளம் வர முன்

வள்ளம் கரை சேரும்;

வீடு வந்ததும்

உன் தெருவுக்கு

ஓடி வருவேன்.


காற்றில்

கடிப்புதற

சாதாளையோடு

சுங்கான் மீன் கிடந்து

சுள்ளென்று குத்த

உன் புன்னகையை

ஒரு கணம் நினைத்தால்

விண்ணென்ற நோவெல்லாம்

விரல்களிருந்து

விடுதலையாகும்


அன்றொரு நாள்

பின்னிரவும்

பேசாமல்

புலர்ந்துபோனது.

உன் வரவிற்காக

என் உயிர்த்தீ

உருக்குலைந்து

காத்துக்கிடந்தது.


தொடும் தூரம்

நின்ற நீ

இன்று

நெடும் தூரம்

சென்று விட்டாய்


நீ நினைத்தாலே

உன் வேலிச்சிறகு

வி£¤ந்து கொடுக்க

காதல் உட்புகுந்து

உள் சதைவரை பாயும்


நானோ

ஒரு மழையின்

வருகைக்காக

வெண் பனித் தூறலில்

காத்துக்கிடக்கிறேன்


ஆயினும்

உன் உதடு தந்த

ஈரத்தை

எப்படி உலர வைக்கமுடியும்.

தனிமை

நாவாந்துறை டானியல்ஜீவா-


தனித்து விடப்பட்ட
தீவில் நான்
ஒரு வசந்தத்தின்
தேடலுக்காக....

உண்மையான
உலகத்தைத்தேடி
பொய்யான முகங்களிற்குள்
புதைந்து போனேன்.

சொல்லிதயங்களெல்லாம்
நல்லிதயங்களில்லாதல்
நளிந்தும்....
மெலிந்தும் போனேன்.

விரக்தி என்னிடம்
விடாப்பிடியாய்;
என் கூடவா ....
தங்கிவிடப் போகிறது.

அதுவரை
கவிதையோடு
கைகுலுக்குவேன்
வாழ்தலுக்காய்
விழிப்பாயிருந்து
பூமியை
பண்போடு நேசிப்பேன்.

என்னில்
எதைச்சுமத்தினாலும்
யேசுவைப்போல்
சிலுவை சுமப்பேன்.

கண்களில் கண்ணீர்
வடிந்தாலும்
என் உடல் காயப்பட்டு
ஊரெங்கும் வீசுகின்ற
காற்றில் பதிவானாலும்
கனத்தால்
என் தோல்கள்
வலி எடுத்தாலும்
என்னொருவரிடம்
என் சுமையை
இறக்காமல் இருப்பேன்.

தென்றல் தாலாட்ட
மறந்தாலும்
மேகம் என்னைப்பார்த்து
மட்டம் தட்டினாலும்
சூரியன் கொஞ்சம் கூட
இரக்கமின்றி
சுட்டெரித்தாலும்
வெண்ணிலா
என்னை வெறுத்தாலும்
நான் வாழ்தலுக்காக
வரித்துக் கொண்ட
கொள்கையில்
வரிகூட விலகாமலிருப்பேன்.

பூருவம்....
வெருவின்றி
இடியோடு வந்திறங்கினாலும்
சுக்கிலமிக்கவன்
சாக்கடையாகன்.

புயல் வந்து
என் தேகத்தை
பயம்கொள்ள வைக்க
நினைத்தாலும்
கூளான் அல்ல
குப்பறப் படுப்பதற்கு
வைரமான கரும்பாறை.

மின்னுக்குள்
என் உயிர்
பொசுகும் வரை....
வாழ்க்கையை நேசிப்பேன்
அது எப்படியிருந்தாலும்
பரவாயில்லை.

உயிர் தொலைத்தல்

நாவாந்துறைடானியல்ஜீவா
வெண்பனித் துகள்கள்
வந்திறங்கும் இரவில்
நம் காதல்
காத்திருக்க காலமற்று
கரைந்து போனது....
வெட்டித் தெறித்த
மின்னலைக் கோடுகளாய்
உன் நினைவு மட்டும்....
முறிந்த இடம்
இன்னும்
மூடுபனி போல்....
தொலைந்தலுக்கான
காரணம்....
இன்று வரை
தொடுவானம் போல்
நீ கழட்டிய
காதல் காயும் முன்னரே
இன்னொரு விழிக்குள்....
துடுப்பே ,இல்லாதவனுக்கு
இனி எதற்கு தோணி....?
நம் நேசம்
ஏன் கண் மூடிக் கொண்டது....?
என் விசும்பலில்
ஒரு வினாமட்டும்
அடிக்கடி வந்து போகுது
ஏழை....
உனக்கேன் காதல்....!
உனக்காக....
என் தேடல்
நேற்று வரை
நிலைத்திருந்தது....
இன்று
என் உடல் ஓய்வெடுக்க
முன்னிரவில் உன் முகம்
ஏனோ நினைவுக்குள்....
உன் மெல்லியகுரல்
காதில் விழும்
நேரமல்லவா...
அதனால்தான்
காய்ந்து போன பி£¤வுக்குள்
ஈரம் வந்து ஒட்டிக்கொண்டது.
நீ நிலவாக
குளிர் வாயென்றுதான்
நினைத்திருந்தேன்
அது என் தவறுதான்
அதற்காக இந்த மண்ணுக்கேயு£¤ய
குளிரைப்போல் ,ருக்கலாம...?
நான் தேவனுமில்ல
நீ மோ¤யுமில்ல
ஆனால்....!
என்னுள் நீ
வேர் கொண்டது
வெறும் பேச்சல்ல
அது முடிவிலியான
ஒரு நினைவு...

அம்மா

நாவாந்துறைடானியல்ஜீவா

இரவில் இயங்கும் மனிதம்: விடிந்ததும் ஓயாது பறிபார்க்கப் போவார். நிலத்தில் வாழ்கின்ற நேரத்தைவிட வள்ளத்தில் வாழ்கின்ற காலமே அதிகம். குளிர் தாங்கும் உடைகூட உடலில் அணியாத ஒரு விறைச்ச மனுஷன். எந்தப் பனியானாலும் மழையிலும்ää தட்டம் தனிய வள்ளம் தாங்கிää தனிய வலை இழுத்து வருகின்ற சீவன். இப்படி அப்புவை பற்றி எல்லோரும் கதைத்துக் கொள்வார்கள்.
இப்போது அப்புவால் எழுந்துகூட நிற்க முடியாத நிலை.... வாழ்நிலம் வெறுமை போர்த்திய சுடுகாடு. காலம் காயம் பட்டு அப்புவின் மேல் அப்பிக் கொண்டது. மாமியின் வீட்டின் நடுத் திண்ணையில் உள்ள கட்டிலில் மரணத்தோடு போராடிக் கொண்டு இருக்கிறார். மரணம் நிமிடக் கணக்கில் எண்ணப்பட்டபடி. எனக்கு அப்பு என்றால் உயி;. நானும் அம்மாவும் தான் அப்புவை பார்ப்பதற்காக மாமியின்ரை வீட்டிற்கு வந்தோம். சுவாமி ‘அவஸ்தை ப10சை’ கொடுத்துட்டப் போறார் என்ற செய்தி காதில் விழும்வரை ஐயா ஒன்றும் புரியாத நிலையில தான் இருந்தார். ஆனால் அம்மா அதையும் மீறி என்னைக் கூட்டிக் கொண்டு வந்துவிட்டா. வீட்டிற்குள் நுழைந்தவுடன் ஓர் அரண்மனைக்குள் போவது போல் உள்ளுக்குள் ஒரு கூச்ச உணர்வு. மஞ்சள் நிற குறோட்டன் செடி என் சிந்து போல் சிரித்துக் கொண்டு நின்றது. மல்லிகையின் கிளைகள் விரிந்து யன்னல் கம்பிகளுக்குள் சுருண்டு மணம் பரப்பிக் கொண்டிருந்தது. முன் அறையின் கதவு திறந்து கிடந்தது. மேசையிலிருந்து ஏதோ சிந்து எழுதிக் கொண்டிருந்தாள். எல்லோர் முகமும் வாடியும்ää விழியின் கசிவன் பதிவுகள் கன்னத்தில். அவர்கள் தங்களுக்குள் ஏதோ முனகிக் கொண்டிருந்தார்கள். முன் விறாந்தையின் சுவரைச் சுற்றி கலர் கலரில் போட்டோக்கள் மாட்டப்பட்டு இருந்தன. எல்லாம் மாமியின்ரை மூத்த மகள் வெளிநாட்டிலை இருந்து அனுப்பிய போட்டோக்கள் தான். எவ்வளவு கலரா அழகாக இருக்கிறது. வெளிநாட்டை கனவில் கூட நினைக்க முடியாத எனக்கு இந்தப் போட்டோக்களை பார்த்தவுடன் வெளிநாட்டில் இருப்பதுபோல் ஒரு மாயை தோன்றிமறைந்தது.
ராசா மாமா எங்களை கண்டவுடன் ‘வா மூத்தது இப்பதான் என்ர வீடு தெரிந்ததோ’ என்றார். மாமா இப்படிச் சொல்லும் போதே மனசுக்குள் ஏதாவது அர்த்தம் வைத்துத்தான் சொல்லுவார் என்று எனக்குத் தெரியும்.

சிந்துவின் பார்வை என்மீது விழுந்தது. சிந்துவை நாட்கணக்கில் பார்த்துக் கொண்டிருந்தால் என் வாழ்விற்கு எதுவுமே தேவைப்படாது போல் தோன்றும். இன்று நெருங்க முடியாத நிலையிலிருந்தாலும் அவள் என்றென்றும் எனக்கு சொந்தமாகத் தான் போகிறாள் என்பதில் அசையாத உறுதியொடு இருக்கிறேன். மாமா. . . ? சந்தனம் ப10சிக் கொள்ளும் சாக்கடைக்கு இப்பயொரு பிள்ளையா.. . .? நல்ல நிலத்தில் விழுந்த விதைபோல் . . . முன்னர் அப்புவை பார்க்கப் போவதாக பொய் சொல்லிவிட்டு சிந்துவை பார்க்கப் போகலாம்ää ஐயா பேசியதிலிருந்து அப்படியும் போக முடியாமல் போய்விட்டது. அதனால் சந்திப்பின் இடைவெளி நீண்டுவிட்டது.

அம்மாவின் முந்தானையைப் பிடித்தபடி அப்பு படுத்திருக்கும் கட்டிலுக்கருகில் உட்கார்ந்து விட்டேன். அப்புவின் மூச்சின் இழுவை கொஞ்சம் கொஞ்சமாக கூடிக் கொண்டிருந்தது. கண்கள் Nமுலே செருகின் கொண்டு போனது. அம்மாவைப் பார்ப்பது போல் எனக்குத் தெரிந்தது. அந்தப் பார்வையின் அர்த்தம் எனக்கு மட்டும் தான் புரிந்தமாதிர் ‘புள்ள இனியாவது ஒற்றுமையாக இருங்கள்’ என்று கெஞ்சிக் கேட்பது போல் இருந்தது. அம்மாவுக்கு அழுது. . . அழுது கண்கள் வீங்கிவிட்டன. பின் விறாந்தையின் பக்கமாக இருந்து மாமா முன்விறாந்தைக்கு வந்தார். மாமா அடிக்கடி முன்னுக்கு வருவதும்ää பின்னுக்குப் போவதுமாக இருந்தார். சிந்து சொன்னது போல் இப்போது கள்ளுத் தவறணைக்கு போவதில்லையோ? வீட்டில் எடுத்து வைச்சுத்தான் குடிக்கிறார் போல் இருக்கிறது.

ஒவ்வொரு தடவையும் குசினிப்பக்கம் இருந்;து முன்விறாந்தைக்கு வரும்போதும் ஒரு சூடான ‘நக்கல்’ அம்மாவுக்கு சொல்கிறார் மாமா. அம்மாவும் அதுக்கு பதில் சொல்வதாக தெரியவில்லை. நக்கல் ஒவ்வொன்றும் நெஞ்சை சுட்டெரிக்கிறமாதிரி. . . அம்மா அனலில் விழுந்த புழுவைப் போல்மனதுக்குள் துடித்துக் கொண்டிருக்கிறா. வீட்டிலும் பிரச்சனை எழுகினற போதெல்லாம் மனதுக்குள் மூடி வைத்துää சாப்பிடாமல் யோசித்து அழுது கரைவதூன் அம்மாவின் பழக்கம். வெண்மை போர்த்திய மனதில் எத்தனை கனவுகள். கனவின் நோக்கு கைகூடமாமலே கானல் வரிகளாய் போகும். அம்மா உலகத்திலே வித்தியாசமான உறவு. எந்த குற்றத்தையும் மன்னிக்கும் மனப்பாங்கு தாயுள்ளத்தில்தால் எப்போதும்
தேங்கிக்கிடக்கும். எங்களை வளர்ப்பதற்காகவே அம்மா எவ்வளவு கஷ்டப்பட்டாள்.எங்கள் நெஞ்சுஅந்தக் கொடும் துயரை சுமந்தபடிதான இன்றுவரை..... அரிசி வித்து: அப்பம் சுட்டுää பிட்டு அவிச்சு நெருப்பைச் சுமந்து எங்கள் நிம்மதிக்காக தன்னையே உருக்கியவள். என் அம்மாவின் கருணை மனசை எங்க மாமாவுக்கு புரியப் போகுதா?.

ஊரில் மாமா என்றால் தனிமரியாதை. நல்லதுää கெட்டதற்கெல்லாம் முன்னுக்கு நிப்பவர். தன்னுடைய சொந்தப் பணத்தைக் கூட பணமாக பார்க்காமல்ää முன்விட்டு செயலில் இறங்குவபவர். ஊர்ச் சங்கத்தின் தலைவராக்க கூட இருக்கிறார். மாமா ‘ஒரு வெள்ளையடித்த கல்லறை’ என்றது எனக்கு மட்டும் தான் தெரியுமென்றல்ல. சிலருக்கு தெரிந்திருந்தாலும் வெளிப்படையாக காட்டிக் கொள்வதில்லை.

அம்மா ஒருநாள் என்னோடு கதைத்துக் கொண்ட இருக்கும்போது தலையைச்சுற்றி விழுந்திட்டா. அதை இப்போ நினைத்தாலும் அழுகைதான் வரும். அன்று காலை பள்ளிக்கூடத்துக்கு போகும்போது அம்மா ஒருமாதிரியாக சமாளித்து என்னை அனுப்பிட்ட ‘தம்பி இண்டைக்கு எப்படியும் சமைப்பனடா நீ மாஸ்ரரிட்டை கேட்டுப் போட்டு இடையில் வாடா. . . இல்லையெண்டால் பள்ளிக்கூடம் முடிஞ்சபிறகு வா. . . ராசா . . . என்ர புள்ளையல்லலை. இந்தத் nதுத்தண்ணியை குடிச்சுப் போட்டு போமோனே. . .’ நீ இப்படித்தான் சும்மா சொல்லுவää இதே மாதிரித்தான் ராத்திரியும் சொன்னீ. ‘படடா அண்ணன் அட்டைக்கு போயிற்று வந்தாப்பிறகு ஏதாவது கொண்டு வந்தானண்டால் நான் உன்னை எழுப்பிச் சாப்பாடு தருவேன் என்று சொன்னனீயல்ல. . .’ ‘பாவமடா அண்ணனும் நேற்றும் சாப்பிடாமல் தான் அட்டைக்கு போனவன்.’’ அம்மா சொல்லும்போது குரல் உடைந்தது. வாhத்தை என் இதயத்தில் நெருப்புடன் இடியாய் இறங்கியது.

வகுப்பறையில்; பாடம் மூளைக்கு ஏறுவதாக தெரியவில்லை. அம்மா அடிக்கடி சொல்கிற வார்த்தைகள் தான் என் நினைவுக்கு வந்தன. ‘அண்ணன்தான் தன்ர படிப்பை பாழாக்கிப் போட்டு கடலுக்குப் பொறான். . . . நீயாவது நல்லாப் படிக்கணும். இந்த சமூகத்தில் நாங்களும் தலை நிமிர்ந்து வாழணும்’ மனதிற்குள் அடிக்கடி வந்து Nமுhதிக் கொண்டிருந்தது. குடும்ப வறுமைக்காக ஐயா உழைக்கிறார். அவருக்கு உதவியாக அண்ணன் தொழிலுக்குப் போறான். நானும் தொழிலுக்கு போனால் எங்கள் பட்டினிக் கொடுமை தீர்ந்துவிடுமா? இதற்கு அதுதான் தீர்வாக இருக்க முடியுமா? இல்லை இதை தமாற்ற வேறு வழி ஏதாவது உண்டா? நெஞ்சிற்குள் கேள்வியாய் நிமிர்கிறது.

பாடசாலை முடிந்து வீட்டைத் தேடி நடந்து வருகின்றபோது தஎப்போதும் குசினிப் பகுதியின் மேல் கூரையை அவதானித்துக் கொண்டு வருவேன். கூரையின் மேல் பகுதியில் புகையெழுப்பினால் அம்மா சமைத்துக் கொண்டிருக்கிறதாக அர்த்தம் கொள்வேன் அப்படி இல்லையெண்டால் பட்டினியென்று நினைத்துக் கொள்வேன். அப்படி இல்லையெண்டால் பட்டினியென்று நினைத்துக் கொள்வேன். இன்று குசினிப் பக்கமாக புகையெழும்பலில்லை. . ஊர் வெளிச்சத்திற்குள் தொலைந்து போன இருண்டவீடு. அடுப்பரண்கள் இருந்தும் சுடர்விடாது ப10னைக்கு மட்டும் சொந்தமாகி போனதோ? நம்பிக்கை உணர்வுகள் நடுவழியில் நலிந்து போகிறது. ஒவ்வொரு கால் பதிவுகளும் தடுமாற்றத் தடங்களாக பதிகின்றன.
வீட்டிற்குள் நுழைந்தவுடன் அம்மா என் பண்ணில் எத்துப்பட்டா. . . இந்த நிலா முகம் கருமுகிலுக்குள் காணாமல் போய்ää வெளிச்சத்திற்கு வரும் தூரம். தொடும் தூரமா. . .? தொலை தூரமா. . .? அம்மா. . . வாழ்வின் சுகம் என்பதே இல்லாமல் போராடி போராடி அலுத்துப்போய். . . நம்பிக்கை மட்டும் உறைநிலைப் படலமாய் எப்போது உருக நிலையாகுமோ. . . புத்தகக் கட்டை தோளிலிருந்து கீழே இறக்கி வைத்துவிட்டு அம்மாவுக்குப் பக்கத்தில் இருந்த ‘மரவள்ள்pக் கிழங்குள்ள சிரட்டையை’ தூக்கிப் பார்த்தேன். ஒரு முறிக்கிழக்கில் யாரோ பாதி சாப்பிட்டபடி இருந்தது. ‘அம்மா யாரெணை பாதிக் கிழங்கு சாப்பிட்டது?’ நீ கத்துவாய் என்று சொல்லவும் கேட்காமல் அவன் தான் மூத்தவன் எடுத்துட்டு ஓடிவிட்டான். நான் வந்த பசிக்கு இதாவது கிடைத்திட்டு என்று நினைத்துக் கொண்டு சாப்பிடத் தொடங்கினேன். ஒரு பாதி சாப்பிட்ட பின்னர் அம்மாவை நிமிர்ந்து பார்த்தேன். அம்மா அவிச்ச கிழங்கு முடிஞ்சிதோ? இல்லையடா மோனை நான் ஒன்றும் செய்யல. . . அப் இது ஃ பக்கத்து வீட்டு ராசம்மாட்டை வாங்கினது. நீ பசியில வந்து கத்துவாய் என்பதற்காக. . . அப்ப ஒருதரும் சாப்படல்லையோ. . .!

இல்லை மோனை. . . சொல்லிக் கொண்டிருக்கும் போது கண்ணிலிருந்து கண்ணீர் கசிந்தது. தூணில் சாய்ந்து கொண்டிருந்த அம்மாää தலை சரிந்துகொண்டுவர அப்படியே கீழே விழுந்திட்டா. நான் ஒவென்று கத்திவிட்டேன். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரலெல்லாம் ஓடி வந்தார்கள். மயங்கிய நிலையிலிருந்த அம்மாவுக்கு தண்ணீர் தெளித்து எழுப்பினார்கள்.

மாமாவின் காட்டுச் சத்தம் என் நினைவைக் கலைத்தது. ‘இவர் என்ன ஊர்ச் சண்டியன் என்ற நினைப்போ. ஒருவாய் சதையில்லை அதுக்குள்ள அவருடைய நினைப்பு’ என்று மனதிற்குள் முனகினேன். மாமா பெரிய சத்தமாக ‘மூத்தது உன்ர பிள்ளைக்கு கட்டிக் குடுக்க எனக்கு விசரே. . . என்ர பிள்ளை ராசாத்தி போல இந்த கல்வீட்டில் கட்டிலில் படுக்கிறவளுக்கு உன்ர ஒழுக்கு வீட்டிலேää கெலித்தோட்டிற்கும் வழியில்லாத உன்ர வீட்டிலை நான் என்ர புள்ளையை முடிச்சுக் குடுக்க என்ர தகுதி என்னாகிறது?
அப்பு படுத்திருக்கும் கட்டிலின் இரு பக்கத்திலும் மெழுகுதிp கொழுத்தினார்கள். சிந்து மெல்ல என்னைப் பார்த்தாள். அவளின் பார்வையில் தன்னுடைய ஐயா பேசியதற்கெல்லாம் மன்னிப்புக் கேட்பது போல் இருந்தது. அப்புவின் மூச்சு திடீரென நின்றுவிட்டது. மாமி உட்பட எல்லோரும் அழுதார்கள். வீட்டின் ‘இரும்புக் கேற்’ திறந்த சத்தம் என் காதில் விழுந்தது. திரும்பிப் பார்த்தேன். என்னுடைய ஐயாதான் கதவைத் திறந்து வாசலில் கால் வைப்பதற்குள். . . சோத்துக்கு வழியில்லாதவன் இப்பத்தான் வாறான் என்றார் மாமா. iயா ஒன்றும் பேசாமல் உள்ளே வந்தார்.

பிரேதம் அடக்கம் செய்துவிடடு வீட்டுக்கு வந்து கொண்டிருந்த வேளையில் மனிதர்களை விழுங்கும் புத்தரின் பக்தர்கள் வான்வீதியில் வலம் வந்தார்கள். கோட்டையை பெடியள் பிடிக்கப் போறான்களாம் அதுதான் ஒரே வெடிச்சத்தமாக இருக்குது என்று ஊர்வலத்தில் வந்தவர்களி; ஒருவர் மற்றவர்களுக்குச் சொல்கிறார். கணப்பொழுதில் எல்லோரும் பொட்டலங்களோடு அடுத்த ஊர்களுக்கு செல்வதற்காக வீதியில் இறங்கினார்கள். ஓட்டை வீடுää கல்வீடுää மாடிவீடு என்ற வேறுபாடு மறந்து எல்லோரும் வீதிக்கு வந்துவிட்டார்கள்.

(முற்றும்)

ஒரு தேசம் முகமிழந்து....

-நாவாந்துறைடானியல்ஜீவா-

மனோரம்மியமான மாலை வேளை பால் நிலவின் ஒளியை பண்ணை வீதியில் நடைப் பயணத்தில் அனுபவித்தோம். மதியின் அழகில் வாசமிழந்தோம். காற்றின் சுகந்தம் கண்களை மூடவைத்தது. வாடை பெயர்ந்துபோக மகிழ்ச்சியின் வரவில் சோளகம்.
உதிரப் புனல் ஓடும் வீதியில் கடந்துபோன வருடங்களில் அவ்வப்போது ஒரு இடைவெளியும்ää சிறுமாற்றமும் வைகறையாய் எட்டிப் பார்த்தபோதும் நிரந்தர வெளிச்சம் இன்னும் நெடுந்தூரம்தான். வசந்த காலம் வாசலில் வந்ததாக மக்கள் மகிழ்ந்திருந்த வேளையில்தான் அந்த யுத்தம் தொடங்கியது.

அந்தக் கிராமத்திலிருந்து குடும்பம் குடும்பமாக இடம் பெயர்ந்து வேலணைக்கும்ää யாழ்ப்பாண இந்துக் கல்லூpக்கும் போய்விட்டார்கள். சில குடும்பங்கள் மட்டும் ‘’நீக்கிலாரே’’ தஞ்சம் என்று கோயிலுக்குள் இருந்து விட்டனர். கோட்டையை பிடிப்பதற்காக காக்கை தீவுப்பாதையால் வந்த இந்திய இராணுவம் கடற்கரை வீதியால் முன்னேறிச் சென்றபோது கோயிலுக்குள் இருந்தவர்கள் சிறைக் கைதிகளானார்கள். காலையில் குறிப்பிட்ட நேரம் வரை வீட்டைப் பார்ப்பதற்காக வெளியில் விடுவார்கள். மிகுதி நேரம் முழுவதும் கோயில் வளவைச் சுற்றியே வாழ்க்கை. கோயிலின் முன்பாக சீக்கிய இராணுவம் எந்நேரமும் காவலில் நிற்கும்.
சீக்கிய இராணுவம் என்றதும் சின்ராசாவுக்கு மதுரையில் கூடல்நகர் அகதி முகாமில் 85ம் ஆண்டு இருந்தபோது நடந்த நிகழ்வுகள்தான் அவன் நினைவுக்கு வருகின்றன. அங்கு வாழ்ந்த காலத்தில் பல கசப்பான அனுபவங்களை உள்வாங்கினான். அவற்றில் இந்திரா காந்தி கொல்லப்பட்டபோது கிடைத்த அனுபவம் அவனுக்கு ஒரு வகையானது. ஒரு சீக்கிய இராணுவம் சுட்டதற்காக அப்பாவி சீக்கியர்கள் கொல்லப்பட்டார்கள். அப்போதெல்லாம் கவலைப்படான்ää கண்ணீர் வடித்தான் இப்போது இந்தச் சீக்கிய இரானுவத்தின் அடாவடித்தனத்தை நினைத்து ஆத்திரம் கொண்டான். குப்பென்று வந்த கோபத்தில் உடல் உறைந்தது.

சின்ராசாவுக்கு மனைவியின் இழப்பால் மனசு சிதிலமடைந்து போனது. முறுக்கிய மீசையும் தேர்வடம் போல் கழுத்தைச் சுற்றியபடி கிடக்கும் தங்கச் சங்கிலியும்ää மோதிரம் நிறைந்த விரல்களும்ää கம்பீர நடையும்ää நெடும்பனை உயரமும் கொண்டää அந்த கிராமத்து மக்களால் அதிகம் நேசிக்கப்படுகின்ற மனிதன்தான் சின்ராசா. அவனுடைய பெயருக்கு பொருத்தம்போல் அவன் ஒரு ‘’சின்ன’’ராசாவாகத்தான் ஒருகாலத்தில் இருந்தான். விடுவலை வள்ளத்திலும் ஒருதரும் அவனை குறைசொல்வது கிடையாது. தொழிலை நடத்துவதே அவனது தனித் திறமையால்தான்.

இப்போது சின்ராசா என்ன செய்வதென்ற புரியாத நிலமையில்... மெலிந்துபோன உடல் தோற்றமும்ää கிழிந்து போன வலையைப் போல் அவனது உடலை ஒட்டிக் கொண்டிருக்கும் பெனியனும் முகமே வெண்மை வேளாண்மை விதைத்தது போல். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற ஏக்கப் பெருமூச்சோடு காற்று காவிவரும் கொடுமையை கன்னத்தில் இரு கைகளையும் ‘’மரக்கினுக்கா’’ முண்டு கொடுத்தபடி உதட்டில் ஒட்டு பீடியை குடித்துக் கொண்டு யோசித்துக் கொண்டிருந்தான்.

“இந்த மனுசனுக்கு சொன்னாலும் கேக்காது…. காலையிலிருந்து சொல்லிக் கொண்டுதான் இருக்கிறன் அவங்களுக்கு ஆக்கள் இல்லையென்டதற்காக இந்தாலை பிடிச்ச பிடியாக நிற்கிறாங்க….. என்னன ஜயா சொல்லனன நான் வரமாட்டேனென்டு” சின்ராசாவைப் பார்த்தபடி இளைய மகள் சொன்னாள்.
“எல்லாமே போய்ச்சுது உயிரத்தானும் காக்க சாப்பிவேண்டாமா…….? நேற்றுக் குடித்த தேத்தண்ணீயோடு நீயும் குழந்ததைகளும்ää நான்தான் கட்டையிலே பொறவன் இந்தப் பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் செய்ததுகள் இப்படி உத்தரிப்பதற்கு……”என்றான் சின்ராசா.

சின்ராசாவுக்கு இரண்டு பெண்கள். மூத்தவள் முத்துமணியை கரைய10ரில் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டான். இளையவள் சின்னமணியை ஊரோடு மாப்பிளையாக இருக்க வேண்டுமென்பதற்காக யோசேப்பின்ர மகனுக்கு கல்யாணம் செய்து வைத்தான். சின்ராசாவின் மனைவி இறந்த நாளிலிருந்து சின்னமணியோடுதான் சாப்பாடும்ää இருப்பும். தொழிலுக்கு போவதும் பேரப் பிள்ளைகளோடு விளையாடுவதிலும் நேரம் போய்விடும். சின்னமணியின் மூத்த மகன் ஏழாம் வகுப்பு படிக்கிறான். இரண்டு வருடங்களுக்கு முன்தான் தன் கணவனை இழந்தாள் சின்னமணி. வறுமையில் அனுபவிக்கிற வேதனையை விட அவளுடைய கணவனை இழந்த துயர்தான் அவளுக்கு இன்னும் மறக்க முடியாமல் இருக்கிறது. அவள் கண்முன்னே அவன் நினைவு தோன்றியது. மனசு ஒரு கணம் சஞ்சலப்பட்டது. மனசை சரி செய்து ஒரு நிலைக்குக் கொணடு;வர முடியாமல் அவன் நினைவே மீண்டும் மீண்டும் வந்தது.நெஞ்சு சோகத்தால் முட்டியது. கண் முன்னே அவன் தோன்றினான்.
ஒரு நாள் கடலுக்கு போயற்று வந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் மூத்தவனின் அழுகைச் சத்தம் கேட்டது.
“என்னடி சின்னமணி புள்ளே ஏன் அழுகுதென்டு கேளன்” என்றான்.
“இன்டைக்கு காலையிலே பள்ளிக் கூடத்திலே ‘’தமிழ்ப் புத்தகம்’’ வாங்கிக் கொண்டு வரலேயென்டு அடிச்சிட்டாராம் வாத்தி அதான் அழுது கொண்டு நிற்கிறான். நான் சொன்னாலும் கேட்கிறான் இல்லை”
“அழ வேண்டாமென்டு சொல்லு. நான் சாப்பிட்டுப்போட்டு ரவுனுக்கு போய் வாங்கிக் கொண்டு வாறன்….” என்றான். சாப்பிட்டது அரையும் குறையுமாக கடல் வெக்கையோடு ப10பாலசிங்கம் புத்தகசாலைக்கு போனவன்தான் இன்றுவரை வீடு திரும்பவில்லை. யாரோ அவனை மறித்து மினிவானில் ஏற்றிக் கொண்டு போனவங்களாம் அவளும் இன்றுவரை அவனுக்காக கசிந்துää உருகி… கடலுக்குள் கரைந்து போன மீனவனுக்காக எங்க ஊர்ப் பெண்கள் காத்திருப்பது போல் காத்திருக்கிறாள்.
சின்னமணி கடவுள் பக்தி அதிகம் உள்ளவள.; அகதி வாழ்வில் கூடுதலான நேரத்தை கோயிலுக்குள்ளேயே செலவு செய்வாள். ஓவ்வொரு செவ்வாயும் பாசைய10ர் அந்தோனியார் கோயிலுக்கு தவறாமல் போய் வருவாள். இப்ப எப்படித்தான் அவளால் போக முடியும்…..?
கந்தப்பு சம்மாட்டியும் சின்ராசாவை விட்டபாடில்லை.
“சின்ராசா மேவலைக்கு ஒருத்தர்தான் குறையுது நீ வந்தால் சரியாய் போய்விடும்” என்றான.; சின்ராசாவின் குடும்பத்தின் மேலுள்ள அன்பினால் அல்ல தன்னுடைய தொழிலை நன்றாக நடத்தக் கூடியவன் என்ற ஒரே நோக்கத்திற்காகவே
“நாங்கள் பாஸ் எடுக்க எவ்வளவு பாடுப்படனாங்கள் தெரியுமோ சின்ராசா….? மூன்று மணித்தியாளங்கள் தந்தவங்க….அதுவும் கொண்டிசனோட…. முனங்குக்கு அங்காலே கொட்டடி பக்கம் போகாமலும் இங்கால காக்கை தீவுப்பக்கமும் போகாமல் துறைக்குள்ளேயே விடு வலையை வைக்க வேண்டுமாம்…... ஐஞ்சு ரூபா பங்குக்கு கிடைச்சாலும் ஆருதரப் போறாங்க…..”கெஞ்சும் குரலில் சம்மாட்டி கேட்டான். சின்ராசாவிற்கு கோபம் கலந்த பெருமூச்சை விட்டுக் கொண்டு@
“இவங்கள ஆரு வரச்சொன்னது….. எங்கட சனத்தை ஏன் சுட வேண்டும்….?” கந்தையா குறுக்கிட்டு
“எங்கட பொடியன்கள் சுட்டதால்;த்தான் அவங்களும் சுடத் தொடங்கினாங்க….” என்றான்.
“ம்.. அதற்கு சுட்டவங்கள பார்த்து சுடவேண்டியதுதானே…. அப்பாவிச் சனங்கள் என்ன செய்ததுகள்…? அவையட நாட்டிலேயே இமயம் முதல் குமரிவரை ஆயிரத்தெட்டு பிரச்சனை அந்தப் பிரச்சனைகளை தீர்க்க வழியக்காணல….இங்க வந்திருக்கினமாம் எங்கட பிரச்சினை தீர்க்க….”என்று சொல்லிக் கொண்டே இடுப்பில் செருகி வைத்திருந்த மடிப்பெட்டியை எடுத்தான் சின்ராசா.
சம்மாட்டி சரியென்று ஏற்றுக் கொள்வதுபோல் மௌனமாக நின்றான்.
“சின்ராசாவின் விசர்க் கதையை பாரேன்… அங்காலே அவங்க நிற்கிறான்கள் கேட்டாலும் கொண்டாலும்”என்றாள் கந்தையாவின் மனைவி. இவர்கள் கதைத்துக் கொண்டிருந்தவை எல்லாவற்றையும் கோயிலி;ன் முகப்பை சுற்றி போடப்பட்டிருந்த கம்பியை பிடித்துக் கொண்டிருந்த ஆனந்தன் அவதானமாக கேட்டுக் கொண்டிருந்தான்.இந்த விவாதங்கள்சூடுதணிய எல்லோரும் கடலுக்கு போவதற்கு ஆயத்தமானர்கள்.
சின்ராசாவின் மடுப்பெட்டிக்குள் வெ;றிலைää பாக்குää சுண்ணாம்புää புகையிலைää ஆர்.வி.ஜி பீடி போன்றவற்றை வைத்து கடல் தண்ணீரில் நனையாதவாறு பொலித்தீன் பையினால் மூடி வைத்திருப்பது வழக்கம்.ஆயினும் இப்போது பீடியைத் தவிர வேறு ஒன்றுமில்லை. பீடியை எடுத்து வாயில் வைத்தபடி….
“கந்தையாண்ணே கடலுக்கு போவமா?” என்றான் சின்ராசா.
‘அம்மையா’ என்று அழுதபடி சின்னமணியின் இளையவள் ஓடிவந்தாள். சின்ராசா தன் உடலோடு அனைத்து இரண்டு கன்னத்திலுமிருந்து வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு அவளது கன்னத்தில் மெல்ல முத்தமிட்டான். அவளது அழுகை நின்றுவிட்டது.
குண்டுகள் துளைக்காதபடி கடல் தொழிலாளர் வள்ளத்தை கடலுக்குள் அமுக்கி விட்டிருந்தார்கள்.விடுவலைக்கு பெரிய வள்ளம் ஒன்றும்ää தொடுவைக்கென்று சிறிய வள்ளமும் பாவிப்பது வழக்கம். பெரிய வள்ளத்திற்குள் நிறைந்து கிடந்த தண்ணீரை பட்டையாலும்ää வாளியாலும் அள்ளி ஊத்திக் கொண்டிருந்தார்கள்.சின்ன வள்ளத்தையும் தாட்டு வைத்திருந்ததால் அதற்குள் கிடந்த தண்ணீரை ஏற்கனவே இறைத்து விட்டார்கள்.
கந்தையாவும்ää சின்ராசாவும் கடற்கரையை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.
அரைமணித்தியாலத்திற்குள் எல்லாவற்றையும் விரைவாக முடித்துக் கொண்டு ஏலேலோ பாடலோடு தோணிகள் தொழிலாளர்களை சுமந்து கொண்டு காற்றின் எதிராய் கடல் அலைகயைக் கிழித்துக் கொண்டு நகர@ உவர்நீர் வெண்நுரை கக்கியது.
எம் சொந்தகங்களின் செங்குருதிகள் இக்கடலோடு தானே கரைந்துபோனது அல்லவா….? காற்றினில் கறை சேற்றினில் பிணம் ஆயினும் மீனவன் வாழ்வின் மீது தீராத காதல் கொள்வான். நலிந்த வாழ்விலும் நெஞ்சினில் நளைய வாழ்வுக்கான நம்பிகை விதை… கடற்கரை வெளியில் கனவுகள் விரியும். அவனது விழிகளின் உயிர்ப்பெல்லாம் கடல்தான்.

தொழிலாளர்களை அனுப்பிவிட்டு கடலையே பார்த்துக் கொண்டிருந்த கந்தப்புää தொடுவை வள்ளத்திற்குள் நின்றவர்கள் ஓலைக் கயிற்றை வளைத்த வேகத்தை கண்டு ஏதோ வள்ளத்தில் நின்றவர்களுக்கு நடந்ததுபோல் உணர்ந்தான். பதட்ட நிலையில் அங்கும் இங்குமாக ஓடிக்கொண்டிருந்தான். விழிகள் பிதுங்கியது. கொஞச நேரம்கூட நிதானமாக நிக்க முடியாத நிலை அவனுக்கு.. சில நிமிடங்களுக்குள் கோயிலில் நின்றவர்களுக்கு சம்பவ் காற்றாய்ப் பறந்தது.

ஆலமரத்திற்கும் சிறுவர் பாடசாலைக்கும் இடையில் இருக்கும் கல்லறை ஆண்டவர் சுருபத்திற்கு முன்னாள் முழந்தாலில் இருந்து கொண்டு சின்னணி
“ஆண்டவனே ஏன் எங்களுக்கென்று இந்தச் சிலுவையை தந்தாய் மண்ணில் மனிதனாய் பிறந்து தெங்வமானாய். வேதனை நிநை;த துயர நாட்களை ஏன் தொடரவிடுகிறாய். இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே வாழ்வது?” சின்னமணியின் விழிகளில் இருந்து கண்ணீர் கசிந்தது. வேர்த்துக் களைக்க வந்த கந்தையாவின் மனைவி
“அடியே சின்னமணி உங்கட ஐயாவுக்கு விடுவலை வள்ளத்தில ஏதோ நடந்திட்டாமென்னு எல்லோரும் கடக்கரைக்கு ஓடியினம். நீயென்ன இதிலே இருந்து அழுது கொண்டிருக்கிறாய்” சின்னமணி விக்கித்துப் போனாள். கடைசிப் பிள்ளையை கையில் தூக்கி கொண்டு ஓட்டமும் நடையுமாக கடற்கரையை நோக்கி போனாள்.

கடல் பெருக்கில்லாததால் மெல்லிய அலைகள் மட்டுமே கரையில் வந்து மோதிக் கொண்டிருந்தன. யுத்தகால அனர்த்தங்களை கடற்கரை கவ்வியிருந்தது. ஊதல் காற்றும் ஓயாது வீசிக் கொண்டிருந்தது. கடற்கரையை ஒட்டியிருந்த வீடுகள் சிதைவடைந்தும்ää ஓலைக் குடிசைள் எரிந்த குறையிலும் காணப்பட்டன. தென்னை மரங்கள் கூடஷெல் பட்டு சோகமே உருவாகி நின்றன.
வள்ளம் வந்த வேகத்தில் அணியத்தின் முன்பகுதி கரைக்கு மேலே ஏறிவிட்டது. யப்பான் மீன்ää கெழுறுகளின் சலசலப்பு தண்ணீரில்.சேற்றினில் புதையுண்டுபோன கால்களோடு வள்ளத்தைச் சுற்றி அழுத விழிகயோடு சிலர் நெஞ்சில் அடித்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தார்கள். சின்னமணி வள்ளத்திற்கு அருகே சென்று தலையை கீழே குனிந்து நடுப்பலகைக்கு பக்கமாக கிடந்த உடலை பார்த்தாள் கண்டதும் ஒ வென்று கத்தினாள். “ஐயா இவ்வளவு தெதியிலே விட்டிட்டு போயிட்Nடுங்களே….”அலை ஓசையையும் மீறி விண்ணைத் தொட்டது அழுகை ஒலி. சின்னமணியின் சிறு விழிகள் சிவந்து விட்டன. ஆனந்தன் ஆட்களின் நெரிசலுக்கிடையில் நுழைந்து வள்ளத்தை எட்டிப்பார்த்தான் விக்கித்துப் போனான் அவனுள் ஒரு வித வைராக்கியம் மனதில் எழுந்தது. இழந்ததற்கான தேடல் கண்களில்;…. மறுகணமே இடத்தை விட்டு விலகி விட்டான்.
ஐம்பது வயது நிரம்பிய மனிதர் அன்றாடம் ஜீவனுக்காக அயராது போராடுகின்ற ஏலோலோ பாடகன் எதற்காக செப்புக் குண்டுக்கு இரையானான்? மரக்கோல் பிடித்து மரத்துபோன கைகள் உப்புக் கரைசலில் ஊறித் திரண்ட உடல் அந்நிய மிருக வெறிக்கு இரையாகி கோவணத்துணியோடு கிடக்கிறது. கூட்டத்தில் நின்றவர்களில் ஒருவன் “கோயிலடியில் நின்ற சீக்கியன் போகச் சொல்லிப்போட்டு காக்கை தீவில் நின்றவன் சுட்டுப்போட்டான் என்றான். வள்ளம் முழுவதும் இரத்தக் கட்டிகளாய்… உடலிருந்து பெருக்கெடுக்கும் இரத்தத்தை கட்டுப்படுத்த நாலு முழு வேட்டியால் இறுகக் கட்டினார்கள். நின்றவர்களில் ஐந்து பேர்
சேர்ந்து தூக்கினார்கள். உடலிலிருந்து இரத்தத் துளிகளாய் வழிந்தது. சின்னமணியின் வீட்டிற்கு தூக்கிக் கொண்டு போனார்கள். இன்று சின்னமணியின் வீட்டில் மட்டுமல்ல ஒப்பாரி ஓலம்.எமது தெருவெல்லாம்தான்.
அன்று முழுவதும் அழுகைகளோடும்ää அடக்கம் செய்வதிலும் ஈடுபட்டுக் கொண்டு இருந்தவர்கள் ஆனந்தனை மறந்து விட்டார்கள். இரவு எட்டு மணியாகியும் ஆனந்தன் வீட்டிற்கு வரவில்லை. சின்னமணி ஆனந்தனை தேடத் தொடங்கினாள்..
(முற்றும்)

உள் முகம்

டானியல்ஜீவா
வள்ளத்திலிருந்து வானத்தைப் பார்த்தோம். வானவில்லின் அழகிi; வாசமிழக்கவில்லை;;. வாழ்க்கை அழகாய் இருந்து. நிலாக்காயும் நேரம் கடலேரியில் நீந்தி விளையாடினோம்;;. ஏனோ இங்கு வந்ததிலிருந்து இந்த வாழ்நிலை எனக்கு ஒட்டாமல் ஒதுங்குகிறது.; மீனும் கூட: எங்கட ஊர்க் கடலில் எங்கள் கைகளால் மீன் பிடித்து. குழம்பு ஆக்கி உண்பதில் ஒரு தனிச்சுவைதான். அந்தப் பொமுது இன்னெருமுறை வராதா என்று என்னைபN;பால் ஏக்கத்தோடு இந்த மண்ணில் எத்தனையோ பேர் வாழ்ந்து கொணடிருக்கிறார்கள். நலிந்த நம்பிக்கை மட்டுமே மிஞ்சிக் கிடக்கும் என் சொந்த வாழ்விi; நிம்மதி மூச்சுவிட றெடுற்தூரமா...? தொடும் தூரமா...?

விடிகாலைப் பொமுதில் எமுந்து. தேறீர்;; குடிப்பதற்காகத் தண்ணீர் றிரப்பிய கேற்றிரலை அடுப்பில் வைத்துவிட்டுக் கதிரையில் இருக்கும்பொமுது எள் மனம் எங்கேயோ விரிந்து பரவுகிறது. இப்படித்தான்
ஒவ்வொரு நாளும் ஏதேனும் எண்ணம் வந்து என் மனத்தைக் குழப்பும்;;. மனமோ நெருப்பைச் சுமந்த நிழல் தேடுகிறது. என் வீட்டில் ஏதேனும் பிரச்சனைகள் அர்த்தமற்று ஆரம்பிக்கிறது. அடிப்படையில் அம்மா கொஞ்சம் வயதாகி விட்டா. அந்த வயதிற்குரிய தன்மை மேலெழூந்து நிற்கிறது. அதை என் மனைவி ஏற்க மறுக்கிறாள்.

எத்தனை நாட்கள்தான் இப்படியே வாழ்வது....? நேற்றுக்கூட கென்னடி சப்வேயில் நின்றபோது. றெயில் தண்டவாளத்துக்குள்ளே விழூந்து சாகலாம்போல் இருந்தது. ஆனால் என் மனம் தற்கொலையைத் தடுத்தது. தள்ளாடுகிற வயதில் என் தந்தை;;;;;. கண்ணிழந்த அம்மர்;. அப்பா... அப்பா என்று அடிக்கொருதடவை என்னை அழைக்கும் பிள்ளைகள். என்னை நேசிக்கவில்லையென்றாலும் நான் நேசிக்குட் என் மனைவி சுஜி. எல்லாவற்றையும் நினைத்து...

சொந்த மண்ணிலிருந்து வேரோடு வெளியேறி கொழூம்பில் வந்திருந்த. என் பெற்ரோரை நான்
தான் ஒரு வருடத்திற்கு முன்பு இங்கு எடுத்தேன். என் அம்மாவைக் கண்டவுடன் என் மனைவி. தன் தாயின்
சாயலில் வந்த தெய்வம் என்றாள். தெய்வம் இப்பமட்டும் சனியனாய் தெரியுது அவளுக்கு. வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை வீட்டிற்குள் அடக்கி வைத்திருந்தால் போதுமென்று அவளிடம் அவ்வப்போது சொல்வதுண்டு. அதையும் மீறி அயலோடு தொலைபேசியில் முணுமுணுப்பதால் அக் கதைகள் என் காதில் விமுந்து என் மனதைக் குழப்புகின்றது. அமைதியும். பண்பும். நல்ல பழக்கமும் நிறைந்தவள் என்றுதான் அவளை நினைத்தேன் ஆனால் அவளோ விளங்காத வெளிச்சம்;: புரியாத மனிதப் பிறவி;: மற்றவர்களின் உணர்வுகளோடு சீண்டி விளையாடுகிறவள்.

என் வேலைச்சுமை. அதனால் ஏற்படும் அமுத்தங்கள் அதையும் விட வீட்டில் எமும் பிரச்சனைகள்
இவற்றையெல்லாம் தீர்ப்பதற்குள் என் உயிர் போய்விடும். என்னதான் இருந்தாலும் தாய் என்பது உலகத்தில் எல்லோரும் விரும்பும் வித்தியாசமான உறவு. பகுத்தறிவுள்ள எந்த மனிதனும் நேசிக்கும்
உடல்;. அம்மாவையும் அப்பாவையும் வெளியேற்றி விட்டு எப்படி என்னால் வாழமுடியும்...? நான் தான் முடித்த குற்றத்திற்காகச் சுமையை சுமக்க வேண்டும்….? விண்ணில் ஓடும் வெண்ணலவை மண்ணில் வாழும் என் மனைவிக்கல்லவா ஒப்பிட்டேன். அது கவிதைக்கு அழகாய் இருந்தது. ஆனால் வாழ்க்கைக்கு...?

சின்னவளின் விணுங்கல் முன்னறையிலிருந்து வந்தது. அம்மா எமுந்து வோஸ்றூம் போய்க் கொண்டிருக்கையில். என் மனைவி எமுந்து குசினிப்பக்கமாக நானிருக்கும் இடத்திற்கு வந்தாள். இன்று
சனிக்கிழமை என்றதால் மூத்தவளுக்கு ஸ்கூல் இல்லை;;. அதனால் கொஞ்சம் லேட்டாகத்தான் எமும்புவால். சின்னவள் என் மடியிலிருந்து விட்டாள்;. அப்படியிருந்து கொண்டே ஒவ்வொருத்தரும் கதைப்பதை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருப்பாள். மூத்தவனைவிட சின்னவளே என்னோடு அதிக நேரம் இருப்பாள.; சில வேலையில் என் மடியில் இருப்பதற்குச் சண்டை பிடிப்பார்கள்.

கேற்றில் சத்தம் போட்டது. எழூந்து. அடுப்பை நிறுத்திவிட்டு;. தேநீர்; போடலாம் என்றால் பிள்ளை எமும்ப விடமாட்டாள் போல் இருந்தது. அதற்குள் சுஜி கேற்றிலை அடுப்பிலிருந்து எடுத்து விட்டு. தேத்தண்ணி போடுவதற்காக எதையோ தேடுகிறாள். பால் ஆகத்தான் இருக்கவேண்டும். பால் முடிந்தது கூட எனக்குச் சொல்லவில்லை. சொல்லியிருந்தால் வேலை முடிந்து வரும்போது வாங்கி வந்திருப்பேன். பிறிட்சைத் திறந்து கொண்டிருந்த சுஜி தீடீரென என்னைப் பார்த்தாள். அவள் கண்களிலிருந்து தீபு;Nபுர்றுPபுளு; தெறித்து என் நெஞ்சை தொட்டன. ஏதோ பிரச்சனை தொடங்கப்போகுதுபோல் தெரிந்தது.

ராத்திரி கொஞ்ச பால்தான் இருந்தது. விடிய பிள்ளைக்கும் உங்களுக்கும் தேத்தண்ணி போடக் காணும். நாளைக்கு வாங்கலாமெண்டு நினைக்க... அந்த கிழடி எடுத்துக் குடிச்சிட்டாள். நேரத்துக்கு நேரம்சாப்பாடு. அது போதாதெண்டு பாலையும் எடுத்துக் குடிச்சிட்டுது என்று வார்த்தைகளை அள்ளி வீசினாள். சுஜியின் சுயரூபம் வெளியில் வந்தது. நான் மௌனித்து இருந்தேன்.
அம்மா வோஸ் றூமிலிருந்து வெளியே வந்தா. சுஜிக்கு பதில் சொல்வதற்காகத்தான் வெளியில் வந்திருக்க வேணும். உன்னோடு மல்லுக்கட் என்னால் ஏலாது. நான் ஒண்டும் சும்மா இருக்கேல்ல.றூமுக்கும் சாப்பாட்டுக்கும் காசு குடுத்துத்தான் இருக்கிறன். அம்மா சொன்ன சொற்கள் அவளுக்குச் சுட்டது. அவளின் அசைவில் தெரிந்தது. எப்போதும் கோபப்படும்போது அவளுடைய உள்ளத்திலும் உடலிலும் நிறைய மாற்றம் நிகழ்ந்து விடும். விளக்கெண்ணெய் குடிச்ச கோழி போலத் திரிவாள். அந்த வேளையில் யார் என்ன சொன்னாலும் காதில் விழாது. இருக்கிற தளபாடங்களோடு தன் கோபத்தைக் காட்டுவாள். இல்லையென்றால் காரணமில்லாமலே விள்ளையை அடிப்பாள். அப்படிக் கோபம் வரும்போது நான் பேசாமல் ஒதுங்கிவிடுவேன். ஒதுங்கலாம் என்றுதான் மௌனமாக இருந்தேன். ஆனாலும் என் மனம் ஏதாவது சொல்லவேணும்போல் தூண்டியது.

சுஜி கொஞ்சம் வாயைத்தான் குறையேன் என்றேன். ஓம்...ஓம்... அம்மாவுக்கு வக்காளத்து வாங்க வந்திட்டார். எனக்கு முதலே தெரியாமல் போயிற்று: உன்ர குணம் தெரிந்திருந்தால் செய்திருக்க மாட்டேன். என்ர சாதி. சமயம். அந்தஸ்து பாராமல் உன்னை முடிச்சதுதான் பிழையாய் போயிற் என்று அவள் என் காது கிழியத் கத்தினாள்.
.;
என் மனமோ கடந்த மாத நிகழ்வுக்குள் ழூழ்கியது. சுஜியின் சொந்தச் சகோதரனின் மனைவி கொழூம்பிலே நின்று எத்தனை பேரிடம் சொல்லியிருப்பாள்... ஒருக்கா சுஜியை எடுக்கச் சொல்லுங்கோ
என்று. சுஜி கடைசிவடை ரெலிபோன் எடுக்கவேயில்லை. பாவம் அந்த அக்கா. கண்ணிலே ஏதோ சுகமில்லையெண்டு ஒப்பிரேசன் செய்ய கொமும்புக்கு வந்தவ என்று இங்கு இருக்கிற சுஜியின் சொந்தக்காரர்கள் சொன்னார்கள். நானும் சுஜிக்கு சொல்ல வேண்டுமென்பதற்காக ~~சுஜி உங்கட அண்ணி கண்ணல சுகமில்லையாமென்று கொமும்புக்கு வந்திருக்கிறா. நம்மால முடிஞ்சதைக் குடுப்பம~~; என்றேன். பதிலுக்கு அவள் ~~உழைச்சுத் தந்த திறத்தில காசு என்னட்ட இருக்குதாக்கும். அவ இப்ப கண்ணெங்குவா... என்னொரு மாதத்தாலே காதைவச் சாட்டிக்கு கொண்டு வருவா குடுத்துக் கொண்டிரன். நீ முதல்ல ~நைட்வேலை~ ஒண்டு பாரு~~ என்றாள்.

~~சுஜி நான் தானே ஏமுநாளும் வேலை செய்யிறன். வெள்ளியும். சனியும். ஞாயிறும் இரவு பன்னிரண்டு மணியாகுது வேலை முடிஞ்சுவர. இதைவிட இரண்டு வேலை பாரெண்டால் நானென்ன மனிதனா... மாடா? இரண்டு கிழமைக்கொருக்கா சம்பளச் செக்கை உன்னட்டத்தான் தாறன். நீ காசை என்ன செய்யிறாய் எண்டுகூட எனக்குத் தெரியாது. அந்தக் காசல் மிச்சம் ஏதாவது பிடிச்சென்றாலும். கொமும்புக்கு வர்ற பிறத்தியாக்களைத்தான் விடு@ உங்கட சொந்தக்காரருக்காவது குடுக்கலாம் தானே. கொஞ்சம் கூட உண்ர்வில்லாமல் நடந்து கொள்ளுறாய்~~ என்று சொல்லி முடிப்பதற்குள்... சுஜி புருவம் உயர்த்தி ஒருதடவை என்னைப் பார்த்தாள். முகம் சட்டென மாறியதை அவதானித்தேன். சுஜி முழங்கத் தொடங்கினாள். நெஞ்சு வெடிக்க வார்த்தைகளைக்கொட்;டினாள்.

~~உன்ர அம்மா கொமும்பிலிந்து காசு அறுத்து முடிஞ்சுது. இப்ப இவியள் தொங்கிட்டினம். எங்களை விட்டதியாய் இருக்க விடுறாய்களில்ல. ரெண்டு பிள்ளையையும் தெருவிலா விடுறது. கார் எடுக்க. வீடு வாங்க காசுக்கு யாரிட்ட போறது... அல்லதுஅதுக்காக யாரையும் வச்சிருக்கவா~~ என்றாள்.

விக்கித்துப் போனேன். திக்குமுக்காடினேன்... அதற்கு மேல் எதுவும் கதைக்கவில்லை. கணப்n;பாழூதிற்குள் கடந்தமாத நிகழ்விலிருந்து மனம் விடுபடடது.

சின்னவள் மடியிலிருந்து இறங்கி சுஜியிடம் போனாள். அம்மாவின் முகம் வாடிக் கிடந்தது. அப்பா இன்னும் அறையை விட்டு எழூந்து வெளியில் வரவில்லை;. சில வேலையில் எழூம்பியிருந்தாலும் சண்டையின் சத்தம் கேட்டு கேட்டு வெளியில் வரமாட்மார். பயத்தினால் அல்ல. மரியாதைக்காக ஒதுங்கிக்கொள்வார். அம்மா கொஞ்சம் வாயென்றாலும் அம்மாவின் வார்த்தைகளுக்கு அடக்கமாக அப்பா பதில் சொல்வார். அப்பா எப்போதாவது கோபப்பட்டதை நான் கண்டதில்லை. அம்மாவோடு சண்டைகூடப் பிடிப்பதில்லை. என்னுடைய பழக்கவழக்கங்களில் அரைவாசிக்கு மேல் அப்பாவிடம் கற்றுக்கொண்டதுதான். என்ன பிச்சனையென்றாலும் அவர்தான் புத்திமதி கூறுவார். நான் பொறுமையோடு வாழ்வதற்கெல்லாம் அப்பா சொல்லித்தந்தவைதான் காரணம். மொத்தத்தில் அப்பாதான் என் வாழ்கையின் வழிகாட்டி.

~~தம்பி எங்க இரண்டு பேரையும் ஊருக்கு அனுப்பிவிடு மோனை. அவள் சின்னவள் விஜியாவோடு
கஞ்சியைக்; கூழக் குடிச்சு மரியாதையோடு வாழலாம். இஞ்சயிருந்து ஒவ்வொரு நாளும் குட்டுப்பட்டுக் கொண்டு இருக்கேலாது...~~

~~அம்மா என்ர உயிர் போனாலும் உங்களை ஊருக்கு அனுப்பமாட்டேன். விஜியாவை இங்க எடுக்கலாமெண்;டுதான் நினைச்சேன். அதுகூட சரிசரல்ல. அவள் வரும் வரைக்காவது எங்களோட இரன்... அம்மா நீங்கள் எங்களை எப்படி வளத்தீங்கள் என்று எனக்குத்தான் தெரியும். ஆனால் உன்ர மருமகளுக்கு அது தெரியாது. அப்படித்தான் என்ர சுஜி ஏதும் பிழையாய் கதைச்சா என்னை மன்னிச்சு கொள்ளன்.~~

~~எட மோனை உன்ர குணத்திற்கு இப்படியொரு பொம்பிளைகிடைச்சிருக்கே... அதை நினைச்சாத்தான் கவலையாக இருக்குது...~~

~~ஓம்... ஓமோம்... எனக்கில்லாத கவலை உனக்குத்தான் வந்திருக்கோ! முடிக்கேக்கு முதல் தான் உனக்கு சொந்தம் இப்ப எனக்குத்தான் சொந்தம்~~ என்றாள் சுஜி. அடம்பிடிப்பதும் அவசரத்தில் வார்த்தைகளை அள்ளி வீசவதும் அன்றாட வாழ்க்கையாகப் போயிற்று. அப்படிப் பிழை விட்டாலும் அதற்காக ஒருதடவையேனும் மனதார கவலைப்படுவதும் கிடையாது. என்ன செய்தாலும் சொன்னாலும் தன்னுடைய பக்கமே சரியென்று நினைப்பாள். அவளுடைய மனத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகப் பலதடவை முயற்வித்தேன். முடியாமல் போயிற்று. அவளுக்கென்றொரு கொள்கையை வைத்துக்கொணடு வாழ்ந்து வருகிறாள். என் நினைவு. கனவு எல்லாம் அவவைப் பற்றியதுதான். எங்களுக்குள் ~பிரிவு~ என்றொரு நிகழ்வு நிக்ழ்ந்து விடக்கூடாது. சிலவேவையில் மனமுடைந்து தந்கொலையே செய்யலாம்போல் தோன்றி மறையும். இன்னொரு வைகறைக்காக ஏங்கும் எமது மண்ணில் இவ்வளவு தூரம் பிச்சனைகள் எமுவதில்லை. அப்படி எமுந்தாலும் மறுபொழூதோடு மறைந்து போய்விடும். அந்த மண்ணோடு ஒட்டிய வாழ்வை இப்பொழூது நினைத்தாலும் சிலவேளை கவலைப்படுவேன். ளெ;ளாப்போடு எழூந்து விடுவலைக்குப் போயிற்று வரும் தொழிலாளர்களோடு ஒருவனாய் ஒரு காலத்தில் கைகுலுக்கி வாழ்ந்தேன். வறுமை எங்களைப்போர்த்தியபோதும் வாழ்நிலம் வெறுமை போர்க்கவில்லை. நெஞ்சினில் கனவுகளைச் சுமந்தபோதும் கண்கள் ஏனோ கலங்குவதில்லை. கவலை என்ற சொல்லுக்கே இடமில்லை. இங்க வாழ்கின்ற ஒவ்;வொரு பொழூதும் இணக்கம் காணமுடியாத பிரச்சனைகள் எழூகின்றன.
ஆயினும் நானைய வாழ்வுக்காக நம்பிக்கையை விதைக்கிறோம்

~~சுஜி அப்படியென்றால் நான் அம்மாவுக்காக வக்காளத்து வாங்குகிறேன் என்றே வைத்துக்கொள். உன்ர பிடிவாதத்திலிருந்து ஒருதளியும் இறய்கி வருவதாகத் தெரியேல்ல: அப்ப என்னண்டுதான் இந்தப் பிரச்சனைக்கு தீர்;வு காண்பது...? உன்னட்ட ஏதாவது ஜடியா இருந்தா சொல்லு~~ என்றேன். நான் சொன்னதைக் கேட்டு மௌனமாக நின்றாள். ஏதோ மனத்துக்குள் நினைத்துக் கொண்டு கண்ணை மேலேயும் கீழேயுமாக உருட்டிப் பார்த்துத்துக்கொண்டிருந்தாள்.

நான் சின்னவளை மடியிலிருந்து இறக்கிவிட்டேன். வேலைக்கு நேரமாயிற்று: முனுச ஓரவுPது சுஞசலத்தோடு விடைபெற முயல்கின்றது. யக்கற்றையும் சூவையும் போட்டுக் கொண்டு வெளியே இறங்கினேன். திடீரென ஓடிவந்தாள். வந்த வேகத்தில் அவளுடைய மூச்சுக் காற்று என்னில் விழுந்து சிதறியது. அவள்முகத்தில் ஆனந்தம் களைகட்டியது. என்றுமில்லாதவாறு பளிச்சென்று இருந்தது அவள் கன்னம்.

~~இங்கெரப்பா நான் கேட்கிறேன் என்று குறை நினைக்காதைங்க. நம்மட குடும்பத்தில் பிரச்சனை வராத மாதிரிக்கு ஒரு ஜடியா இருக்கு. அதை நீங்க நினைச்சா செய்யலாம்~~ என்றாள் சுஜி.

என்ன சொல்லப்போறாள் சுஜி... இவ்வளவு நாளும் என் மூளைக்கு எட்டாமல் போய்விட்டதைக் கண்டுபிடித்து விட்டாளோ...?ஆழமாய் யோசித்து முடிவெடுத்தவள்போல் நின்றாள்.

~~இங்கெரப்பா நாள் சொல்றன் எண்டு குறை நினைக்க வேண்டாம்@ நான் என்ர மனசில் பட்டதை சொல்றன்........இங்க கிடக்ககிற இரண்டு கிழடுகளையும் வெளியில் கலையுங்க ....ஒரு பிரச்சினையும் வராது என்றாள்.நான் விக்கித்துப்போனேன். யாரைச்சொல்றியல்........ ? என் அப்பாவையும் அம்மாவையும் அனாதைகளைப்போல வெளியில அனுப்ப நினைக்கிறீயா? சரி உனக்காக அதையும்; விட்டுத்தாறன் நான்வேலையால் வந்தவுடன் என்ர சினேகிதன் சக்தியின்ர வீட்டில் அம்மாவையும் அப்பாவையும் கொண்டு விடுறன் என்றன். சிக்ஸ்போட்நையின் விழுந்த சந்தோசம் அவள்முகத்தில் படர்ந்தது.

Saturday, April 02, 2005

திரேசா

நாவாந்துறைடானியல்ஜீவா
நள்ளிரவு இரண்டு மணியைக் கடந்தும் தூக்கம் வராமல் தூரத்தே செல்ல@ என் கால கநர்வில் கடந்து சென்ற ஐந்தாண்களுக்கு முன் முற்றுப்பெற்று விட்ட அந்த மனிதத்தின் நினைவு எனக்குள் ஓடத்தொடங்கியது.வயதெல்லை தாண்டி வார்த்தைகள் வலுவிழந்து மானிடமே ஒவ்வொரு கணமும் மரணித்துக் கொண்டும் மரணத்தினுடாக வாழ்வைத்தேடுகின்ற மைந்தர்களில் திரேசாவின் இழப்பு ஆயிரத்தில் ஒன்றாக மறைந்து போயிருக்கலாம். ஆனால் என் கண்முன்னே கணப்பொழுதில் சிதைந்து போன அவளது உடல் என் இதயத்தில் ஆழமாய் பதிவாகிவிட்டது. அவளது மரணம் நேற்று நிகழ்ந்தது போல இன்னும் என்னும மனத்திரையிலிருந்து விலகாது ஒட்டுக்கொண்டிருக்கின்றது. என்னில் எழுந்து பின் மறைந்து போகின்ற நிகழ்வுகளைப்போல் அல்லாது என் இதயமே வெடித்திடும் போல் இருக்கின்றது. என் வாழ்வில் முடிந்து போன சோகங்களில் முற்றுப்பெறாத கவிதை வரிகளுக்கு கருப்பொருளானள். . . .

திரேசாவின் மரணம் அந்த மீனவகிராமத்தே வியப்பில் ஆழ்திய நிகழ்வுதான். அன்று எல்லோர் முகங்களிலும் சோகம் கவிழ்ந்து கிடந்தது ஊர் எங்கும் வீசிய உப்புக்காற்றுக் கூட இழப்பைத் தாங்கிக் கொள்ளும் முடியாமல் சோகத்தை சுமந்த படி சென்றது. மண்ணுக்குள் நேர்ந்த மாரடைப்பi நிணைந்து என் செஞ்சே தீப் பிளம்பானது. இருள் விலகிடாப் ப10மியில் இன்னுயிர் ஈந்தும் முடிவவுறாத சோகங்களுமே சொந்தமாயின. அடிவானத்தைக் கடல் குடிக்க உயிர்களை இரும்பு உண்ணும். வைகறையின் சத்தம் அதிகாலை ஆறு மணியை நினைவு படுத்திக்கொண்டிருக்கும்.

தொழிலாளர்களும் காக்கை தீவு செல்கின்ற மீன் வியாபாரிகளும் நாவந்துறை மீன் சந்தைக்கு முன்பாக கூடுவார்கள். நாவாந்துறை சந்தை நாவலர் வீதியும் காரைநகர் வீதியும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. யாழ்ப்பாணத்தில் உள்ள மீன் சந்தைகளில் ஓலளவு வசதியாக உள்ள சந்தைகளில் நாவந்துறை மீன் சந்தையும் ஒன்று. இறைச்சி வகைகளும் மரக்கறி வகைகளும் உட்பட விற்பனை செய்யப்படுகின்றன. இச் சந்தையில் இருந்து காக்கை தீவுச் சந்தை ஒன்ரரை மைல் தொலைவில் உள்ளது. விடியற்காலை ஏழு மணியில் இருந்து பதினொரு மணி வரை கூடி பின்னர் கலையும். நாவாந்துறைச் சந்தை பன்னிரண்டு மணிக்குத் தொடங்கி பிற்பகல் வரை நீடிக்கும்.

இரண்டு மீன் சந்தைகளிலும் வியாபாரம் செய்பவர்களில் திரேசாவு; ஒருத்தி சந்தைக்கு முன்பாக தேனீர்க் கடையும் இருக்கின்றன. பின்பக்கமாக அழகிய கடற்கரை இருக்கின்றது. இந்தக் கடலை நம்பியே இங்குள்ள மீனவர்கள் வாழ்கிறார்கள். கரையோர்தில் மேவப்பட்ட வெண்மணல் புதிய அழகை கொடுத்துக் கொண்டிருந்தது. காலப்போக்கில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குடிசைகள் முளைக்கத் தொடங்கின.

திரேசா தேனீர்க் கடை வாசல் படியில் நின்ற படி
‘’கடகத்தை கொஞ்சம் இறக்குமோன’’ என்று விடுவலை வானைப் பார்த்துக் கொண்டிருந்த ரவியிடம் சொன்னாள். இறக்கிய கையோடு கப10ர் காக்காவிடம் க10டான தேனீர் போடச் சொன்னாள். கப10ர்க்காக்காவின் தேத்தண்ணிக் கடையில் வாடிக்கையாளர்களில் திரேசாவும் ஒருத்தி. காலையில் காக்கை தீவு மீன் சந்தைக்கு போவதற்கு முதல் கப|ர்க்காக்காவிடம் ஒரு பிளேன் ரீ சுடச்சுட குடித்துப் போட்டுத்தான் கால் நடையாக காக்கை தீவுக்கு போவது வழக்கம். தனக்காக எதையும் சேர்த்து வைக்காது பிள்ளைகளின் வாழ்விற்காக உழைத்து ஓடப் போனவள் நீண்டு நெடுத்த உடல்கட்டும் ஒன்று இரண்டு கறுப்பைத்தவிர வெண் நாரையின் நிறம் போல் தலைமுடி வெளுத்துப்போன சீத்த ச் சட்டையும்ää பச்சை நிற நூல் சேலையும்ää இடுப்பினில் துணிப்பையும்ää அதன் பக்கமாக செபமாலையும் இதுதான் அவளது வெளித்தோற்றம். அனால் அவளது மனசு கடலைப்போல் எல்லையற்றுää பரந்து விரிந்து கிடக்கின்றது. மனித நேயம் மடியினில் அடைகாத்து வைப்பாள் வாழ்வின் ஒவ்வொரு நெருக்கடியையும் தன் அறிவுக்கேற்ப்ப வெற்றி கொண்டு வாழ்பவள். காலை எழுந்ததும் தேத்தண்ணீக்கடைää காக்கை தீவுச் சந்தை ää நாவாந்துறைச் சந்தை வீ திரும்பியதும் கோடிப் பக்கமாக கடகத்தையும்ää சுளகையும் கழுவி வைத்து விட்டுää சின்னத்தூக்கம். அழுந்ததும் கிழவிகளோடு ஊர்க்கதை பின்னர் ஓலைக் குடிசையில் ஒட்டுத்தூவாரத்தில் உறைவிடம் மீன்டும் அடுத்த நாள் காலை காக்கை தீவை நோக்கி இப்படியோ அவளது பத்து வருடமும் ஓடியது. இந்த மீன் வியாபாரத்திற்கு வருவதற்கும் அவளுக்குள் ஒரு சோகம் ஒளிந்து கடந்ததை மறக்கமுடியாது.
ஒவ்வொரு ஆவணி பதினைஞ்சும் இங்கு பரலோகமாதா திருவிழா நடைபெறும் ஒன்பது நாள் நோவினையும் ஒரு நாள் பாடல் ப10சையுடன் திருவிழாவை சிறப்பிக்க நாட்டுக் கூத்தும் நடைபெறும். இம்முறை கலைக்கவி நீ. எஸ்தாக்கி எழுதி பெலிக்கான் அண்ணாவியாரால் நெறிப்படுத்தப்பட்ட தென்மோடி நாட்டுக் கூத்தான செபஸ்தியார் நாட்டுக் கூத்து நடந்து கொண்டிருந்தது. கிறிஸ்த்தவ மதத்திற்காக தங்கள் உயிரை இன்னுயிர் ஈந்தவர்களில் செபஸ்தியாரும் ஒருவர். இவரின் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டதே செபஸ்தியார் நாட்டுக்கூத்து.

திரேசா அவளது கணவர் அருளர்ää பிள்ளைகள் எல்லோருக்கும் நாட்டுக்கூத்தென்றாள் உயிர். வறுத்த சோளகம் கொட்டையும்ää கச்சானும் ää சுடுதண்ணிப் போத்தலில் தேத்தண்ணியோடும்
மேடைக்கு முன்னால் உட்காந்திருவார்கள்.கடசிசெபத்தியாரின் கட்டத்தை பார்த்துவிட்டு@வலை இலுக்கப் போகலாம் என்ற முடிவெடுத்து காத்திருந்தார் அருளார். இரவு மூன்று மனியாகிவிட்டது.
பனி உதிர்ந்து கொண்டிருந்தது.நட்சத்திரங்கள்வான்வெளியில் விரவிக்கிடந்தன குளிர்நிலாவில்
திரேசாவின்தலைஈரமாகியது.கூத்தும் நடுப்பகுதியை நெருங்கிக்கொண்டிருந்தது வழமை போல்
கடசிப்பகுதியில் வரும் செபத்தியார் வேடத்தை அண்ணவியார் பெலிக்கான் அவர்களே ஏற்று
நடிக்கிறார்.கடசியில் வரும் யோகன் இராசாவும் வந்திட்டார்@ இனிக்கடசி செபத்தியார் வரப்போகிறாhர்
என்ற ஆவலோடு அருளாரின் கண்கள் அகல விரிந்தன. திரேசாவின் பார்வையும்தான்.
இயேசுவின் மறுஉருவம்போல் சித்திரவதை செய்யப்பட்ட உடல்காயயங்களோடு சிகப்புநிறஆடை உடலோடு
இறுக்கப்பட்டு@மேடையில் தோன்றினார் அண்ணாவியார் பெலிக்கான்.காத்திருப்பின் அர்த்தம் உள்ளத்தில் இன்பஉணர்வலையை மீட்டிய கணமே தொழிலுக்கும் போகவேண்டிய கடமை உணர்வும்
அவனுள் எழுந்தது.தொழிக்கு போகவில்லையென்றாள் பிள்ளைகள் பட்டினியாய் கிடப்பார்கள் என்று
மனதிற்குள் நினைத்துக்கொண்டு தொழிக்கு ஆயுத்தமானன்.
திரேசா நான்போயிற்று வாறேன் என்றார் அருளார். நாட்டுக்கூத்தையே கண்வெட்டாமல் பார்த்துக்
கொண்டிந்த திரேசா ஒரு கணம் அருளாரை திரும்பிப்பார்த்து
ஏனணன இன்னும் கொஞ்சம் தானே இருக்குது தொழிக்கு போகமல் பார்க்கலாம்தானே என்று ஒரே
மூச்சில் சொன்னாள்.
இங்கெரப்பா இண்;டைக்கு மங்களம் பாடமாட்டாங்க..... ஏனென்றாள் அடுத்த சனிக்கிழமை நிலவு
வந்துவிடும் தொழிக்கு போகத்தேவையில்லை விடிய விடிய பார்க்கலாம் என்று சொல்லிக்கொண்டே
புறப்பட்டார் அருளர்.
கடலில் நீந்தியும்ääசுழியோடியும் களம்கட்டிவளைத்தும்ääபுயலோடும்ääஅலையோடும் போரடச்சென்ற அருளர்
இன்று வரை வீடுதிரும்பவில்லை.மண்டைதீவிலிருந்து வீசிய செல்லுக்கு இரையாகி கடலில் தொலைந்து போனான். அன்று கூத்தும் கும்மாளமுமாய் ஊறிக்கிடந்த மனிதர்களின் முகத்தில் இனம்
புரியாத சோகம் கவ்வியது.அருளர் இறந்து முப்பத்தொராம் நாள் முடிய நார்க்கடகமும் சுளகமும்
சுமக்கத்தொடங்கியவள் இன்றுவவரை சுமக்கிறாள்;;.
கடலில் நீந்தியும் சுழியோடியும் களம்கட்டி வளைத்தும் புயலோடும் அலையோடும் போரடச்சென்ற அருளர் இன்று வரை வீடு திரும்பவில்லை மண்டைதீவிலிருந்து வுpசிய செல்லுக்கு இரையாகி கடலில் தொலைந்து போனான். அன்று கூத்தும் கும்மாளமுமாய் ஊறிக்கிடந்த மனிதர்களின் முகங்களில் இனம் புரியாத சோகம் கவ்வியது.அருளர் இறந்து முப்பத்தோரம் நாள் முடிய நார்க்கடகமும் சுளகும் சுமக்கத் தொடங்கியவள் தான் இன்றுவரை சுமக்கத்தொடங்கியவள் இன்று வரை சுமக்கிறாள்
திரேசா தேத்தண்ணீயை ஒரு முறடு குடித்து விட்டு வானத்தை அண்ணார்ந்து பார்த்தாள்.அடிவானம் சிவந்து இரவு நிலா குறுகிக் குறிகி கடலுக்குள் கரைந்து கொண்டிருந்தது. அப்போதுதான் காக்கை தீவு போகாமல் நிற்பதை திரேசா உணர்ந்தாள். வெள்ளாப்புக் கொடுத்து விடிவதற்குள் காக்கைதீவு போச்சேர்ந்து விடவேண்டும் என்ற நோக்கில் விறுவிறுப்பாக நடக்கத்தொடங்கினாள். வழமையான நடையைவிட இன்று வேகமாகத்தான் நடக்கிறாள். சொந்த வாக்கையிலும் கூட திரேசா ஒரு நாளோ இருநாளோ நடக்கவில்லை. கிட்டத்தட்ட ஆறு வருடமாக நடதே பழக்கப்பட்டவள்.

மொத்தமாக ஆறு பிள்ளைகள் ஐந்து பெண்களும்ää ஒரு பையனும். ஐந்து பெண்களுக்கும் தன்னால் முடிந்ததைக் கொடுத்து சீரும்சிறப்புமாக திருமணம் செய்து வைத்தாள். கடைசி மகன் தாசனை பி. ஏ வரை படிக்க வைத்தாள். படித்து முடிந்ததும் கொழும்பில் உத்தியோகத்தோடு திருமணம் செய்து கொண்டான். ஊர்ப்பக்கமே திரும்பிப் பார்ப்பது கிடையாது. நன்றி கெட்டவனாக இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறான். அவன் கூட இவ்வளவு வயது வந்தும் ஆச்சி காக்கைதீவு போய் கஸ்ரப்பட வேண்டுமா என்று ஒரு கணம் கூட சிந்திப்பதில்லை. தானும் தன் குடும்பமும் என்று கொழும்பில் உல்லாச வாழ்க்கை.

செபமாலை சொல்லிக் கொண்டு வந்த திரேசா வசந்தபுரத்தைத் தாண்டி காக்கைதீவை நெருங்கி விட்டதை உணர்ந்தாள். கடசிக் காரணிக்கத்தை விரைவாக சொல்லி முடித்தாள். நேற்றும் ஓடா நீராம் மச்சச் சாதி ஒன்றையும் காணல எங்களுக்குத்தான் சுனை நீர்ää ஓடா நீர் வெள்ளிக் கிழமை நிலவு என்று தனக்குள் முனுமுத்தபடி நடந்தாள்.

வாடைக்காற்று வந்தால் சோர்ந்து கிடக்கும் மீனவர்கள் விழிப்பார்கள். நல்ல மீன் சாதிகள் பிடிபடும். களங்கண்ணியில் வெள்ளை இறால் பாட்டு இறால் என்று பிடிபடும். மீனவர்கள் குடும்பம் செல்வச் செழிப்பில் சிரித்து விளையாடும். திரேசாவும் அப்படித்தான். ஏனென்றாள் அவர்களை நம்பித்தான் அவளது வாழ்க்கை.
என்றும் இல்லாதாவாறு அறியப்படாத அன்னியமுகங்களால் காக்கைதீவு மீன் சந்தை நிரம்பி வழிந்தது. கோட்டையில் இருந்து ஆமி செல்லடிக்கிறாங்கள் என்றதால் யாழ்ப்பாணத்துச் சந்தைகள் இயங்காமல் போய்விட்டது. அதனால் மீன் வாங்குவதற்காக புதிய புதிய முகங்கலெல்லாம் சந்தையில் கூடிவிட்டது.

வள்ளத்தில் இருந்து கூறி விற்கும் கூறியான் அந்தோனியின் குரல் வானத்தைத் தொடும்போல் எதிரொலித்துக் கொண்டிருந்தது. மீன் வாங்க வந்தவர்கள் அங்குமிங்குமாக ஓடித்திரிந்தார்கள் எங்கு மலிவான விலையில் மீன் விற்பார்கள் என்பதற்காகவோ தெரியவில்லை. கரையைத் தட்டிக்கொண்டிருந்த வள்ளங்களில் தொழிலாளர்கள் மீன் பொறுக்கிக் கொண்டிருந்தார்கள். இறால் வியாபாரி முருகேசு தராசு படியோடு ஓரமாக நின்று கொண்டிருந்தார். கனிபாவின் பாயாச அடுப்பைச் சுற்றி பக்கத்தில் இருக்கும் வடைக்கார கிழவியை முற்றுகையிட்டபடி இளவட்டங்கள்.

திரேசா அவசர அவசரமாக தான் கொண்டு வந்த கடகத்தை தலையில் இருந்து இறக்கினாள். கடகத்துக்குள் இருந்த பலகையை எடுத்து தனக்கு வசதியாக வைத்துவிட்டு உற்காந்தாள். வள்ளத்தில் இருந்து வந்த வாசு மீனை ஒரு சுளகிலும்ää இறாலை ஒரு சுளகிலும் போட்டான். அந்தக் கணமே தென் திசையில் இருந்து இரைச்சலோடு ஹெலி வந்துகொண்டிருந்தது. ஹெலிச் சத்தத்தைக் கேட்டு ஒரு சிலர் ஹெலி வருகுது சுடப்போகிறார்கள் என்று சொல்லிக் கொண்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு போனார்கள். தாழப்பறந்து வந்த ஹெலி சுடத்தொடங்கியது. வானத்திற்கும் ப10மிக்கும் இடையில் மனித நாகரிகத்திற்கு அப்பால் ஓசை எழுப்பிக்கொண்டிருந்தது. எல்லோரும் பாதுகாப்பான இடத்திற்திற்கு சிதறி ஓடினார்கள். பின்னர் இடியோடு வந்த புயல் மழை ஓய்ந்து விட்டது. ஹெலியின் சத்தம் குறைந்தது. திரைப்படங்களில் காணப்படும் அழிவுகளின் காட்சியாக காக்கை தீவு சீரழிந்து கிடந்தது. மரங்களில் ஹெலி சுட்ட காயங்களின் தழும்புகள் இந்துமா சமுத்திரத்தையும் தாண்டி எங்கள் அழுகுரல் உலகம் எங்கள் பக்கம் விழிக்கவில்லை. மையான அமைதி. வயதான திரேசா எழும்பி ஓடுவதகுள் வேட்டுக்கள் தீர்ந்து விட்டது. சிதறிப்போய்க் கிடந்த மீன்களுக்கிடையில் திரேசா இரத்த வெள்ளத்தில கிடந்தாள்.

என் கட்டிலில் அருகில் இருந்த மணிக்கூடு எலாம் அடிக்கத் தொடங்கியது. என் நினைவுகளெல்லாம் கலைந்தது. நான் இன்னும் தூங்கவில்லையே? நேற்றிரவு கழுவித் துடைத்த சட்டிகள் நினைவிற்கு வந்தது. ஓடு ஓடு வேலைக்கு ஓடு என்று என் மனம் சொல்லியது.

வாழ முற்ப்படுதல்....

(சிறுகதை)
நாவாந்துறைடானியல்ஜீவா

“ஏனுங்க விடிய எழும்பி வேலைக்கும் போகாமல் அழுதுகொண்டு இருக்கிறியள்....?”
அழுதுகொண்டு இருந்த சாந்தனைப் பார்த்து கனிமொழி உடைந்த குரலில் கேட்டாள். அப்போது தான் கனிமொழியும் பிள்ளையும் எழும்பியதைக் கண்டான்.
“ஒன்றுமில்லை கனிமொழி” என்றான்.
“இப்படித்தான் ஒன்றுமில்லை ஒன்றுமில்லை என்று எத்தனை நாளைக்குத் தான் இந்த அரியண்டத்துக்குள்ள வாழ்வது. இரவு பகலாய் கண்விழித்து மாடாய் உழைத்தும் உங்களுக்கு இந்த நிலை... ஒரு நாள் இரண்டு நாள்ளெண்டல்ல நித்தமும் இதே கூத்தாகத்தான் இருக்கு. ஏன் நீங்க அழுகிறீங்க எண்டு எனக்குத் தெரியாதோ.... நேற்று உங்கடஜயா பேசினதை நினைச்சுத்தான் கவலைப்பட்டு அழுகிறியள்.....”

“இல்லையம்மா...”

கனிமொழியை சாந்தன் அம்மாவென்று தான் அழைப்பது வழக்கம். அவள் ஆழ்மனதில் ஆழமாக பதி
வாகிய எண்ணங்களுக்குள் சுழன்றடித்தது மனம்....ஒவ்வொரு நிகழ்வாய் மலர்கோத்து மகிழ்ந்தது. தன்னை அம்மா என்று அழைத்ததை நெஞ்சில் பசுமை நினைவுகளால் நிறைத்தாள்.
“என்னை அம்மா என்று ஏன் அழைக்கிறீயள.;..?”
கனிமொழி அடக்கமான குரலில் அன்று கேட்டதற்கு
சாந்தன் சொன்னான்.
“நான் உங்களை என் அம்மாவுக்கு நிகராக நினைக்கிறேன்;அதனால்தான்;....
உங்களைப்பிரியவேண்டி வந்தால் என்னால் உயிர்வாழ முடியாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் உங்களைப் பிரிந்த வாழ்வு எனக்கு வாழ்வாய் இருக்காது. அது ஏதோ உயிரற்ற உடலாய் இருக்கும”;.
“நானும் அதே போல்;தான் நான் உங்களை அத்தான் என்றே அழைக்கிறேன். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அம்மாää அப்பாää கடவுள் எல்லாம் நீங்கள் தான்...”.
கனிமொழி சொல்லும் போதே கண்களில் ஈரக்கசிவுகள். அன்றொரு நாள் கதைத்த அந்நிகழ்வை இதயத்தில் இருப்பாய் இருத்திவிட்டாள்.

தன் கணவன் சாந்தன் எவ்வளவு முரண்பாடுகளும் தங்கள் பெற்றோருடன் ஏற்பட்டபோதும் தன்மீது கொண்ட அன்பில் சிறு மாற்றமும் இல்லாத வாழ்வை நினைத்து பெருமைப்பட்டாள். அவள் சாந்தனைப்பற்றி கோர்;த்து வந்த வாழ்வு நிறைவாகத் தான் அவளுக்குக் கிடைத்தது. இன்னும் சொல்லப்போனால் அவள் எதிர்பார்த்ததை விட@ ஆயினும் தன் கணவரை சுடுசொல்லால் கொடுமைப்படுத்துவதைத் தான் அவளால் தாங்க முடியவில்லை.
கொழும்பில் வருடக்கணக்கில் நிற்கும் வரை லொட்சுக்கு காசும் சாப்பாட்டக்கு பணமும் பிள்ளை தான் அனுப்ப வேண்டும். ரெலிபோன் எடுக்காட்டியா அவர் வாங்குகின்ற பேச்சு கொஞ்சநெஞ்சமா? சரி மாமா படிக்கவைத்தார். பிள்ளையை வளர்த்தார் இல்லையெண்டு சொல்லேல. அதற்காக பிள்ளையை இப்படியுமா கஸ்ரப்படுத்தவேண்டும். குடிக்கிறததுக்கு காசு கொடுக்கேல்லை எண்டால் வெல்பெயாருக்கு அடிப்பனடா எண்டும்ää தொட்டதற்கும் பட்டதற்கும் தன்னைப்பார்ப்பதில்லை எண்டும் தான் குறை. நான் வந்து மூன்று மாதத்திலேயே என்னென்ன காரணமெல்லாம் சொல்லி வெல்பெயார் எடுக்கத்தொடங்கிட்டாங்க. இனியாவது பாவம் அவங்க இளம் குடும்பம் வாழட்டும் எண்டு விடுவதும் கிடையாது.போகவர ஒவ்வொரு குத்தல் கதை சொல்லி அழவச்சிடுவாங்கள். கனிமொழி மனதால் நினைத்து திட்டித்தீர்த்தாள்.
“கனிமொழி! யென்னம்மா..?
சாந்தனின் அமைதியான குரல் கேட்டு சோகம் தேங்கிய விழியோடு நிமிர்ந்தாள். கண்குவளைக்குள் இருந்து கண்ணீர்த் துளிகள் சித்திரம் வரைந்தது. கெஞ்சும் கண்கள் பரிதாபமாய்ப் பார்த்து
“என்னதான் இருந்தாலும் உங்கடஐயா இப்படி பேசியிருக்கக் கூடாது.... தண்ணீ மூக்கு முட்ட போட்டா காரணமற்ற கொழுவல் போடுவது உடலோடு ஊறிப்போயிற்று உங்கட ஐயாவுக்கு..”. சொல்லிக் கொண்டு கனிமொழி அழுதாள்.
சாந்தன் மனதைத் தேற்றுவதற்காக கனிமொழி பக்கத்தில் நெருங்கி கண்ணீரைத் துடைத்தான். அவள் சாந்தன் மார்பில் சாய்ந்து தேம்பித்தேம்பி அழுதாள்.
“அழகைதான் வாழ்க்கையா....?”
அவன் வலக்கரம் கொண்டு தலையை தடவிக்கொடுத்து குழம்பியிருந்த மயிர்களை நீவி விட்டான். அவனுள்ளும் அழுகை தேங்கி நின்றது. ஆயினும் அவன் அழவில்லை. தன் மனதை தேற்றினான்.
“அத்தான் நீங்கள் என் நெஞ்சோடு சாயும் போது ஒரு சுகம் எனக்கு வருமே அந்தச் சுகம் எப்போதும் என்கூடவே இருக்க வேண்டும். என் மார்பில் உங்கள் தலை புதைத்து என் முகத்தை அண்ணார்ந்து பார்ப்பீர்களே.......அந்த பார்வை எப்போதும் என்கூடவே இருக்க வேண்டும். நான் உயிரோடு இருக்கும் வரையில் உங்களை கண்கலங்க விடமாட்டேன். எனக்கு எல்லாம் நீங்கள் தான் எண்டு தான் கனடா வந்திருக்கிறன். அதே போல் தான் உங்களுக்கு எல்லாமே நான் தான் என்று நினைக்கிறேன். உங்களுக்கு ஒரு காய்ச்சல் வந்தால் கூட என்மனம் தாங்காமல் தவிக்கிறது. அந்த காய்ச்சல் எனக்கு வந்திருந்தாலும் பரவாயில்லை என்று கூட நினைப்பேன். சில வேளைகளில் உங்கள் மனம் படும் வேதனையை என்னால் பார்த்து சகிக்க முடியாமல் இருக்கிறது”.
“கனிமொழி.....”.
“என்னுங்க...?”
“இப்படி பெரியவர்த்தையெல்லாம் சொல்லி என்னைக் கொல்றீங்களே.......”
ஒரு கணம் கனிமொழியின் முகத்தை கீழ்நோக்கி பார்த்தபோது@ அவளின் கீழ்த்தாடையோடு மோதுண்டு நின்றது சாந்தனின் முகம்.

“உங்க மூக்கு அழகாயிருக்கு......”. அவன் எதையோ சொல்ல நினைத்து இப்படியொரு வார்த்தையைப் போட்டான். கனிமொழியின் மனதை மகிழ்ச்சிப்படுத்துவதற்காகவே அப்படிச் சொல்லியிருக்கலாம். ஆயினும் அவள் எந்தவித அசுமாத்தமும் இல்லாமல் அவள் முகம் வாடிக் கிடந்தது.
கனிமொழி நீங்க கொழும்பில் நிற்கும்போது ரெலிபோனில் ஒரு நாள் சொன்னது நினைவிருக்கா........?

“எதைப்பற்றியுங்க...?” நிறைய நீங்க கதைச்சனீங்க. எதுவெண்டு தெரியல..?”
“நம் குழந்தையை என்னால் சுமக்கமுடியுமென்டால் நானே சுமப்பேன் என்று சொன்னேனே நினைவிருக்கிறதா?”
“ஓமொம்..... அதையேன் இப்ப நினைவுபடுத்திறீங்க?”
“நீங்க சொன்னேங்க பெண்குழந்தை எண்டால் ஐந்து மாதம் நீங்கள் சுமப்பதாவும் ஐந்து மாதம் என்னையும் சுமக்கச்சொன்னீங்க. ஆண் குழந்தையென்றால் பத்து மாதமும் நீஙகளே சுமப்பதாக சொன்னீங்க. ஆனால் பெண்குழந்தை தான் நமக்குப் பிறந்திருக்கு ஆயினும் நீங்க தான் பத்து மாதமும் சுமந்து பெற்றுருக்கிறீங்க. அப்பவே கேப்பமென்டு மறந்து போனேன்.ஏன் பெண் குழந்தை பிரியம்மில்லிய? சீதனம் கொடுக்கவேண்டும் என்டதற்காகவா?”
“அப்படி நான் நினைக்கேலேயங்க.எனக்கு உங்களைப் போல குணத்தோடு ஒரு ஆண் குழந்தை முதலில் வேண்டும் பிறவு எப்படிப் பிறந்தாலும் பருவாயில்லங்க.”
“ஏனுங்க உங்களைப் போல் பெண்@ உங்களைப் போல குணத்தோடு பிறந்தால் சரியில்லையாங்க?”
சற்றும் எதிர்பாரத பதிலை கேட்டு அவள் முகத்தில் மந்தகாசம் பத்தது.
“இப்படியே கதையைச் சொல்லி சொல்லி என்னை சிரிக்க வைச்சு விடுவீங்க... நான் தான் உங்கள் மனக்கவலையைத் தீர்க்க மருந்து என்னும் கண்டுபிடிக்கவில்லையே?” என்றாள்.
“வலைலக்கு போவதற்கு முதல் உங்களுக்கு வேண்டியதை எல்லாம் செய்துவிட்டு வேலைக்கு அனுப்பின பின்தான் நான் தேனீர் கூட குடிப்பேன். நீங்க வேலைக்கு போன பிறகு நான் நானக இருப்பதிலை.எப்போது நீங்;க வருவீங்க என்று எதிர்பார்த்தபடியே என் மனம் துடித்துக் கொண்டிருக்கும். என் கண்காண உங்க கண்ணில் தூசி கூட விழவிடமாட்டேன். அந்தளவு உங்கள் மீது கண்ணும் கருத்துமாக இருப்பேன்.”
“மெய்தானா.......?”சாந்தன் கேட்டான்.
“ஓமுங்க.... உங்களை நம்பித்தானே கனடாவே வந்தனான்.உங்களைத்தவிர எனக்கு யாரு இருக்கிறாங்க....?உங்களைச் சுத்தித்தானே என்னுடைய உலகத்தை வளைச்சுப் போட்டிருக்கிறேன்.”
சாந்தன் மெல்லிய குரலில்
“என்னால் முடிந்தவரை உங்களுக்கு வாழ்க்கைத் துணையாய் இருப்பேன். அதேபோல் நீங்கள் என் வாழ்க்கைத் துணையாக இருக்கவேண்டும். அதைவிட்டுட்டு எனக்கு வேலைக்காரியாக இருப்பதை நான் விரும்பமாட்டேன். அப்படி உன்மனதில் இருந்தால் அதை அடியோடு வெட்டியெறிந்து விடும். குடும்ப வாழ்வுக்கு அடிப்படை புரிந்துணர்வுதான். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை”.
“ஏதோ பெண்விடுதலை என்றெல்லாம் கதைப்பாங்க அதையா நீங்க சொல்லிறியள்?”
“எனக்கு அது பற்றி எதுவுமே தெரியாது. ஆனால் எனக்குச் சமமாக நீ இருக்கவேண்டும். என் உயிர் நீதான் ஆனால் இந்தச் சொத்துடமைச் சமூதாயத்தில் நீ எனக்கென்று எழுதப்பட்ட சொத்தாக நான் நினைக்கல... எந்த நிலையிலும் நீ சுயமாக என்னோடு வாழ்வது பற்றி முடிவெடுக்கலாம்”
சாந்தனின் அப்பழுக்கற்ற மனதின் வெளிப்பாட்டை ஆமொதிப்பது போல் தலையசைத்தாள்.

வைகறைப்பொழுதில் கண்சிவக்கச் சிவக்க எழும்பி அரையும் குறையுமாக அவசரப்பட்டு வேலைக்கு ஓடி அந்த வேலை முடிந்தவுடன் அடுத்த வேலைக்கு பஸ் எடுத்து ஓடி உடலைத் திண்ணும் இரவு ஓய்ந்து உறங்க கனவெல்லாம் சிதையும் வாழ்வு கரையும். சாந்தனுக்கு கனிமொழியின் இருப்புத்தான் அவன் மனதின் காயங்களுக்கு செப்பனிட்டது. அவளின் வருகையால் தான் தாய் மண்ணில் வேரோடிய காதல் கொடி கனடாவில் ப10த்துக் குழுங்கியது.கனிமொழியை பார்க்கும் போது ஒரு ரோஜாவனத்தைப் பார்க்கின்ற அழகு சாந்தனுக்குள் எழும். ஏதேனும் கதைத்துக் கொண்டிருக்கும் போது கூட சாந்தனை உதாரணமாய் சொல்லிக் கொள்வாள். கனிமொழி என்ற பெயருக்கு நூறு வீதமும் பொருத்தமானவள். தன்னைப்போலவே மற்றவர்களையம் மதித்து நடப்பவள். பச்சத்தண்ணி அப்பாவி எண்டெல்லாம் சாந்தனால் சொல்லப்படுபவள். சாந்தனின் பெற்றோருக்காக காதலையே தள்ளிவைத்து முதலில் அவர்கள் இங்கு வந்த பின் தன்னை ஸ்பொன்னசர் பண்ணச் சொல்லி வாக்கறுதி கொடுத்து@ அதன்படி அவள் நடந்தும் கொண்டவள்.சிறு பிராயம் தொட்டு கனிமொழியின் கண்களில் விழுந்து உள்சதை வரை ஊடுருவிப் பாய்ந்தவன். ஆயினும் சாந்தன் கனடா வந்து ஆறுவருடத்தின் பின்னரே கனிமொழியியை ஸ்பொன்சர் பண்ணி எடுத்தான்.

அவன் மனச் சுமை இறக்கமுடியாமல் நெஞ்சு பிசைந்து நீண்ட கனம். இருவரிலும் அடர்த்தியானமௌனம் செல் அடித்து ஒய்ந்து கிடக்கும் எனது மண்போல...அவன் இதயம் இருண்டு விசாரப்பட்டது. கண்களில் ஏதோ இனம் புரிந்த சோகம் அவனில்@ நினவுச்சு10ழல் ஊருக்கு போனது...

கனிமொழி!அவன் உயிரில் எழுதிய ஓவியம். கண்களின் பார்வை காதலின் முதல் விதையல்லவா! அன்று தான் சாந்தனும் கனிமொழியும் நேரில் பேசியதாக ஞாபகம் சாந்தனுக்கு. ஒரே ஊர் ஒரே பாடசாலைää ஒரே தெரு சிறு வயது முதல் முளைத்த பார்வை என்றாலும் அன்று தான் முதல் பார்வை. வகுப்பறையில் கணிதபாடத்தில் ஏற்பட்ட சிக்கலைத் தீர்ப்பதற்காக சாந்தனிடம் கேட்க முயன்று காதல் வலையில் சிக்குண்டாள். பகல் இடைவேளை எல்லோரும் வெளியில் போய்விட்டார்கள். வகுப்பறையில் சாந்தனும் கனிமொழியும் தான். தூரத்தை விலக்கி மேசைதான் இருந்தது. மெல்ல எழுந்து கனிமொழி நடந்து வந்தாள். நிலா பகலில் வந்து ஒளிதெறித்ததுபோல். அவள் நிலவா? அல்லது நிலாதான் அவளா?
ஒரு புன்னகை மலரோடு சாந்தனுக்குப் பக்கத்தில் வந்தாள்.

கனிமொழிதான்.......
மெய்மறந்து நிமிர்ந்தான்.
“என்ன கனிமொழி” என்றான்.
வெக்கத்தால் நாணம் சிவந்த பார்வை வீச்சுக்கள். ஒரு கணம் தான்.
“சாந்தன்.... கணித பாடத்தில் ரீச்சர் சொன்னது விளங்கேல அது தான் உங்ககிட்ட கேட்கலாமெண்டு வந்தனான்...”
தயங்கித்தயங்கி உடைந்த குரலில் கேட்டாள்.
“ஏன் கனிமொழி..... விளங்கேலேயண்டால் ரீச்சர் கிட்ட கேட்டிருக்;லாம் தானே?”
எடுத்தறிந்து பேசுவது போல் சாந்தன் சொன்னான். ஒரு மயான அமைதி அவளில். தன் மனதில் இருக்கும் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்கு முன்மொழிதல் தருவான் என்று வனப்புடன் இருந்த மனசு வாடிப்போனது. உள்ளம் உடைந்து@ கண்கள் உருகிக் கலங்கின.
“என்ன கனிமொழி ஒரு மாதிரியாப் போச்சீங்க.?”
“ஒண்டுமில்ல.......”
“ஒரு சிக்கல் கேட்க வந்த எனக்கு முகத்திலே அடிச்சமாதிரி பதில் சொல்லிவிட்டீங்க ஒரு பெண்ணை புரிந்து கொள்கின்ற பக்குவநிலை உங்களிடம் இருக்கெண்டு....” சொல்லி முடிப்பதற்குள்...
“சரி... சரி... என்ன சொல்லிப் போட்டேன். கொஞ்சம் பகிடியா பேச வேண்டு மெண்டதற்காக அப்படிச் சொன்னேன். அதற்குள்ளே இவ்வளவு தவறான புரிதல் உங்கள் மனதில் எழுந்து விட்டது. ஏதும் புண்பட சொல்லிவிட்டேன் என்றால் மன்னித்துக் கொள்ளுங்கள்.”
“நான் உங்களை மன்னிக்கிறதா...? என் மனதில் தெய்வமாய் வைத்து நினைத்து வணங்கிக் கொண்டிருக்கிறேன். நானா உங்களை மன்னிக்கிறது.”
அடுத்த வார்த்தை சாந்தனிடம் இருந்து வருவதற்குள் வகுப்பறையை இடைவேளை மணி நிரப்பியது.அது தான் அவர்கள் இருவரும் பேசிக்கொண்ட வார்த்தைகள்.அன்று தொடக்கம் தன் மனதை பறிகொடுத்து காதல் அவனில் விழித்தது. அவன் உற்றுப்பார்க்கிற இடமெல்லாம் அவன் உழைப்பே வியாபித்துக் கிடக்கிறது. தொடர்மாடிக் குடியிருப்பில் வாடகைக்கு எடுக்கப்பட்ட இரு அறைகொண்ட வீடு தான் ஆயினும் அவன் இரவும் பகலும் உழைத்தவையெல்லாம் தன் தாய்ää தகப்பன்ää சகோதரர்கள் என்றே கரைந்து போன கனேடிய டொலர் ஒவ்வொன்றும் அவன் மனதுக்குள் முண்டியடித்து முண்டியடித்து நேற்று நிகழ்ந்தது போல் பின்னல் கொடியாய் படர்ந்தது. இடி மின்னலாய் நெருப்புடன் நெஞ்சில் இறங்கியது.
இரவு கண்விழித்து@ விழிப்பின் அசதி அவனில்..........சற்று கனிமொழியின் மடியில் கண்மூட
“டொக்...டொக்.....டொக்....”என்று கதவு தட்டும் சத்தம் கேட்டது.கனிமொழியின் மடியிலிருந்து எழுந்தான்.
“கனிமொழி ஒழும்பி கதவைத்திறந்து விடுங்கோ”
அவள் கேட்டும் கேளாதது போல் இருந்தாள்.
“யாருமா...? உங்கட ஜயாவும் அம்மாவும்தான். கோயிலுக்கு போயிற்று வருவினம். அவயிட்ட திறப்பு இருக்குத்தானே திறந்து வரட்டும்..ஜக்கட்டுக்குள்ள இருக்கிற துறப்பை எடுத்து திறக்க பஞ்சியாக்கும்...”
மீண்டும் டொக்..டொக்.. என்ற சத்தம் கேட்டது.
கனிமொழி எழுந்து கதவைத் திறக்கவில்லை. அவர்களே திறந்து உள்ளே வந்தார்கள்.உள்ளே வந்த வேகம் வித்தியாசமாக இருந்தது.நடையில் புதிய தென்பு முளைத்தது சாந்தனின் அம்மாவிற்கு.மனதை அழுத்திக் கொண்டு கண்களில் தீ பரவ முகத்தில் கோபத்தின் கீறல்கள். ஏதோ சாந்தனின் அம்மா முனகினாள்.....
அவ்வளவும்தான்@ கனிமொழிக்கு நெஞ்சிலிருந்து நெருப்பாறு பீறிட்டு எழுந்தது போல் என்று மில்லாதவாறு கோபம் வந்தது. ஆயிரம் ஆயிரம் கனவுகளின் சிதிலங்கள் அவள் மனதில் இருந்து உடைந்து@ பனிப்படலமாய் உறைந்து இறுகியது.என்றெனும் இல்லாத போக்கில் அவள் தன்னை மாற்றிக்கொண்டாள்.
இது தற்சயலாக எழுந்த நிகழ்வா? இல்லை தானாக உள்ளுக்குள் விதையாகி மலர்ந்ததா?
எப்படியோ அவள் கோபம் கொண்டாள்.
“மாமி நீங்க நினைக்கிற மாதிரி என்ர புரசன் நோஞ்சாண்டியில்ல. அவர் வெட்கத்திற்காக வாயயை மூடிக்கொண்டிருக்கிறார். உங்கட எளியந்தனமான வார்த்தையெல்லாம் கேட்டு எங்களுக்கு வாழவேண்டிய தலையெழுத்தல்ல வீட்டுப்பிரச்சினைகள் வெளியில் தெரிந்தால் வெட்கம் என்டதற்காக மெனமாய் வாழ்கிறோம்;;.இனிமேல் அவரைப் பற்றி ஏதேனும் கதைத்தால் நடக்கிறதே வேற~~என்றாள் கனிமொழி
அவ்வளவும்தான்.. வந்தவர்கள் வாயடைத்துப்போய் நின்றார்கள்.