Pages

Tuesday, April 18, 2006

எனக்கு பிடித்த கதைகள்-டானியல்ஜீவா-

வளைந்து போன வீரவாள்
-செழியன்-

மார்கழி மாத விடுமுறை விடவும் மாமா வந்து இறங்கவும் சரியாக இருந்தது. மார்கழி மாத விடுமுறையில் பெரிய பெரிய வசதிகள் எல்லாம் இருக்கின்றது. முப்பது நாட்களுக்கும் குறையாமல் வருகின்ற மிகப் பெரிய பள்ளிக்கூட விடுமுறை இது என்பதால் பள்ளிக்கூடம் போகாதவர்களுக்கும் கூட முக்கியத்துவம் வாய்ந்த விடுமுறை இது. இறுதிப் பரீட்சை முடிந்ததின் பின்னர் வருவதால் "புத்தகத்தை எடுத்துப் படியடா" என்கின்;ற வன்முறைகள் எதுவுமே கிடையாது. அன்டை நாட்டுக்கு எதிரான பெரும் படையெடுப்புக்குத் தயாராவது போல, அடுத்த கட்டப் பயிர்ச்செய்கைக்காக ஒட்டுமொத்த யாழ்ப்பாணமும் தயாராகின்ற காலகட்டம் என்பதால் "மிளகாய்ப் பழம் பிடுங்க வாடா", "கத்தரிக்காயை கழுவிச் சாக்கில் கட்டு" என்கின்ற சிறுவர் கள் மீதான கொடுமைகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுவிடும். "தம்பியின் கொப்பிப்பேப்பரை கிழித்து விதம் விதமாகக் கப்பல் செய்து விடுவது", "முழங்காலை நனைத்துக் கொண்டு நின்று, தெருவில் ஓடி வருகின்ற வெள்ளத்தை கரிகாலன் பாணியில் அணை கட்டி வெடிவாணரின் வளவுக்குள்ளை விடுகின்றது" போன்ற வித்தைகளைக் கற்றிருந்தால் இந்த மார்கழி மழை கூட ஒரு பெரிய பிரச்சனை கிடையாது. ஒட்டுமொத்தமாகக் கூறுவது என்றால் இடை இடையே வந்து போகின்ற பேச்சுவார்த்தைக் காலகட்ட குதூகலம் போல மார்கழி விடுமுறை இருக்கும். இதிலே வசதி என்னவென்றால் இந்த கண்காணிப்புக் குழு போன்ற பிரச்சனை ஒன்றுமே கிடையவே கிடையாது. வழமைபோல ஒரு பழைய ச+ட்கேசுடன் மாமா வந்து இறங்கினார். அதற்கு இரண்டு ப+ட்டு போட்டுப் ப+ட்டி வைத்திருப்பார். சூட்கேசுக்குள் முகச்சவரம் செய்வதற்கான சவர அலகு, சின்னக் கண்ணாடி மற்றும் தட்டுமுட்டுச் சாமான்களுடன் ஒரு கால்சட்டையும் இரண்டு மூன்று சட்டைகளுடன் ஒரு கிழிந்த பெனியனும் இருக்கும். நிச்சயமாக சாரம் மற்றும் துவாய் வைத்திருக்க மாட்டார்;. இரண்டு நாளைக்கு ஒரு தடைவை நாங்கள் தான் அவற்றை அவருக்கு "சப்ளை" செய்ய வேண்டும். இந்த சமாசாரங்களுக்கும் அப்பால் ஒரு புத்தம் புதிய கத்தி அல்லது புது மண்வெட்டி, வாள் அல்லதும் போனால் கூர்மையான ஒரு கோடாலி நிச்சயமாய் சூட்கேசுக்குள் வைத்திருப்பார். பழைய சிங்களப் பேப்பர் ஒன்றில் மிகக் கவணமாகச் சுற்றப்பட்டு, அடிப் பெட்டிக்குள் இது பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். யாராவது இதைப் பார்த்தால் மாமா ஏதோ பெரிய சண்டியர் என்று நிச்சயமாக நம்புவார்கள். பதினாறு வயதில் அப்புவிடம் அடிவாங்கிக் கொண்டு வீட்டை விட்டு ஓடிப்போனவர்தான் இந்த மாமா. "முற்றத்துக் கொடியில் காய்ந்து கொண்டிருந்த அப்புவின் கோமணத்தில் முடிந்திருந்த இருபது ரூபாயைக் களவெடுத்துக் கொண்டு ஓடிப் போய்ட்டான்"- ஆச்சி அலுக்காமல் அடிக்கடி இதைச் சொல்லுவா. டிக்கட்டும் எடுக்காமல் இரயில் ஏறிப் போனவர் சிங்களம், இங்கிலீஸ் எல்லாம் அளவாகப் படித்து இன்றைக்குப் பெரிய ஒரு அரசாங்க உத்தியோகத்தர். இப்போ அநுராதபுரத்தில் இருந்து இருபது மைல் தூரத்தில் இருக்கின்ற ஒரு சிங்களப் பகுதியில் "பெரும் தெருக்கள் திணைக்களத்தில்" ஸ்டோர் கீப்பராக வேலை செய்கிறார். அடிக்கடி வேலை காரண நிமிர்த்தம் அவருக்கு இட மாற்றங்கள் கிடைக்கும். விடுமுறைக்கு வந்து போகிறபோது தவறாமல் புதுக் கத்தி, கரண்டி, கோடரி என்று விதம் விதமாய்க் கொண்டு வந்து அம்மா, பெரியம்மா, சின்னம்மாவுக்கு கொடுத்து, பதிலாக உடைந்து முறிந்த பழைய சாமான்களை அள்ளிக் கொண்டு போய் கணக்குக் காட்டுவதில் ஆள் ஒரு பெரிய கிள்ளாடி. அவருடைய இந்த சேவைக்காக யாழ்ப்பாணம் வரும் போதெல்லாம் மேலதிக உபசரிப்புகள் எப்போதும் அவருக்கு உண்டு. இது மட்டுமல்லாது "தடியன்;", "எருமையன்", "குத்தியன்" என்று அப்பா, பெரியப்பா மற்றும் சின்னய்யாவை, அவர்கள் இல்லாத சமயமாகப் பார்த்து மாமா திட்டுவதைப்பற்றி மூன்று பெண்களும் கண்டு கொள்வதும் இல்லை. மாமா வந்தால் எங்களுடைய வீட்டில் தான் தங்குவார். அந்த இரண்டு மூன்று கிழமைக்குள் மாமா நடத்துகின்ற தர்ப்பாரில் அம்மா மனம் கிழிந்து, இட்டிலி அவிக்கின்ற துணிபோல நொய்ந்து போய்விடுவாள். "இவருக்குத் தான் ஏதொ ஒரு பெரிய குறு நில மன்னன் என்ற நினைப்பு." ஆத்திரத்தில் அம்மா ஒரு தடைவை வாய் விட்டுக் கூறினாலும் இது மாமாவுக்கு கேட்டு விட்டதோ என்று பயந்து போனாள். நல்ல வேளை அது எனக்கு மட்டும் தான் கேட்டது. ஆனால் எனக்கு மாமாவைப் பார்க்கின்ற போதெல்லாம் குறுநில மன்னனைப் போலத் தோன்றியதே இல்லை. கல்கியின் தொடர் கதையில் வருகின்ற வீர பாண்டியனின் நினைவுதான் வரும். வீரவாளை இழந்து விட்ட பின்னரும் கம்பீரமாகக் குரல் எழுப்பிப் பாட்டுப் பாடிக் கொண்டு திரிகின்ற சுந்தர பாண்டியன். கல்கியின் கதையில் ஒரு வசதி இருக்கிறது. ஆரசன் பிடிபட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலும் பிரச்சினை முடிந்து போவதில்லை. இந்த மணிமுடியையும், வீரவாளையும் மட்டும் எங்காவது ஒளித்து வைத்துவிட்டால் போதும். பிறகு சமயம் பார்த்து அந்த வீரவாளையும், முடியையும் யாராவது தூக்கிக் கொண்டு மறுபடி ஆட்சியைப் பிடித்துவிடலாம். நல்லகாலம் இந்த வசதி இப்பபோது கிடையாது. இருந்தால் யாருடைய துப்பாக்கியை யார் எடுத்துக் கொண்டு வந்து நிற்பார்கள் என்று சொல்ல முடியாது. மாமா வீரவாளை வெகு பவுத்திரமாக எங்கோ ஒளித்து வைத்திருப்பதாகவே எனக்குத் தோன்றும். எங்களுக்கும் இந்த மாமாவினால் பெரிய ஆக்கினை. ஏதோ ஆபத்து சமயத்துக்கென்று தயாராக வைத்திருப்பதைப் போல அவர் வைத்திருக்கும் ஒரே பெனியனையும் ஐட்டியையும் நானும் தம்பியும் தோய்த்துக் கொடுக்கவேண்டும். கை படாமல் அதைத் தோய்த்து எடுத்து அலசிக் காயப்போடுவது Nயுளுயு வின் புது முயற்சி போன்ற ஒரு அப+ர்வமான வேலை. இதை விட அவருடைய சாப்பாட்டுக் கோப்பை, தேத்தண்ணிக் கோப்பைகளைக் கழுவுவது, கடைக்குப் போய் அவர் சொல்லுற சாமான்கள் வாங்கிக் கொண்டு வருவது, சைக்கிளின் பின்னால் அவர் இருக்க, வேர்வை வழிய வழிய சைக்கிள் மிதிப்பது, வழியில் திடீரெனச் சைக்கிளை விட்டுக் குதித்து யாருடனாவது வம்பளக்கும் போது மிகப் பொறுமையாக காத்திருப்பது என்று பல விதமான வேலைகளும் எமக்கு இருக்கும். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு விடுவோம். மாமா கடைசியாய் யாழ்ப்பாணம் கூட்டிக் கொண்டு போய்க் காட்டுகின்ற படத்துக்குக்காகவும், மலாயன் கடை வடை, தேத்தண்ணிக்காகவும் இன்னும் எத்தனை வந்தாலும் தாங்கிக் கொள்ளலாம். "மாமாவுக்கு ஏன் மாமி இல்லை" என்று மிக நீண்ட காலமாக எனக்குள் குடைந்து கொண்டிருந்த கேள்வியை ஒரு நாள் பொறுக்க முடியாமல் அம்மாவிடம் கேட்டு விட்டேன். ஒரு தடைவ என்னை முறைத்துப் பார்த்தாள். " உனக்கு என்னத்துக்கடா?" என்று முறுகல் முறுகி விட்டு " மாமி செத்துப் போய்விட்டார்" என்று அம்மா சொல்லியதை நான் நம்பவில்லை. அம்மாவும் பெரியம்மாவும் குசு குசுக்கின்ற போது மிகத் தந்திரமாக ஒட்டுக் கதை கேட்டுத் தம்பி தான் விசயத்தை ஒரு நாள் கூறினான். ஒட்டுக் கதைகள் கேட்டு ஆளுக்கு ஆள் பிரச்சனைகள் உண்டு பண்ணுவது, இவனுக்கு கில்லி விளையாட்டுப் போல ஒரு விளையாட்டு. இவனைப் பார்த்தால் ஒட்டுக் கதை கேட்கின்றான் என்று யாருமே நம்ப மாட்டார்கள். அயன்ஸ்டீனின் ஏதோ ஒரு கொள்கையை எடுத்து பரீட்சித்துப் பார்ப்பதைப் போல பரபரப்பாக ஏதோ செய்து கொண்டிருப்பான். கைகள் கிறு கிறுவென வேகமாக வேலை செய்யும். நெற்றியையும் கண்களையும் அடிக்கடி சுருக்கியும் விரித்தும் தன்னுடைய மூளை அந்த இடத்தில் இல்லை என்று காட்டிக் கொள்வான், சில சமயம் தன்னுடைய பாட்டில் ஏதோ புலம்புவான். காதுகளை மட்டும் தன்னுடைய இந்த வேலைகளோடு எதுவும் சம்பந்தம் இல்லாமல் தள்ளி வைத்துக் கொள்வான். அதை எத்தனை பாகையில் சரியாக சரித்து வைத்துக் கொள்வது என்பது அவனுக்கு மட்டும் தெரிந்த கலை. "மாமி எப்பவோ ஓடிப்போய்டா." எனக்குக் கண்ணீர் வந்தது. பாவம் மாமி எவ்வளவு பொறுமையாய் இருந்திருப்பாள். மூவேந்தர்களுக்குள் இருந்திருக்கக் கூடிய அறிவு குறைந்த ஒரு மூட வேந்தனைப் போல் மாமா போட்ட மிக மட்டமான அட்டகாசங்களை எல்லாம் பொறுத்துக் கொண்ட வாயில்லாப் ப+ச்சி. அடிக்கடி மாமி கிணற்றுக் கட்டில் குந்தி இருந்து கண் கலங்குகின்ற காட்சி எனக்குள் வந்தது. அவள் கண்ணீர் கலந்த தண்ணீரைத்தான் ச+ழ இருந்த இந்த எல்லாக் குடும்பங்களுக்கும் குடித்திருக்கும். ஆனால் மாமியின் மீது எந்த ஒரு கருணையும் காட்ட மறுக்கின்றது. "மாமி ஓடிப் போயிருக்க மாட்டா, மாமா தான் துரத்தி விட்டிருப்பார்." நான் இப்படிச் சொன்னதையும் கேட்டு வைத்துக் கொண்டான் தம்பி. நேராக பெரிம்மா வீட்டுக்குப் போனான். போனவன் சின்னக்காவிடம் போட்டுக் கொடுத்து நல்ல பிள்ளை என்ற பட்டத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டான். தெருவில போன ஓணானை மடியில பிடிச்சுக் கட்டிவைச்ச மாதிரித்தான் என்னுடைய தம்பி. ஒரு மாதிரியான நிலையில் தான் தம்பியுடனான எனது வாழ்கை போய்கொண்டிருந்தது. அடிக்கடி என் காலை வாரிவிட்டு விடுவான். "வர வர உன்னுடைய பழக்கங்கள் சரியில்லை ஒரு இத்துனியாய் இருந்து கொண்டு பெரிய விசயங்களுக்கை தேவையில்லாம் மூக்கை நுளைக்கின்றாய். குஞ்சப்பாட்;டை சொல்லட்டே" சின்னக்கா மிரட்டினாள். அவள் லேசில சொல்லமாட்டாள். சொன்னால் அவள் தாற கடிதங்களைக் குடுக்க இனி வேற ஆளத்தான் அவள் பார்க்க வேண்டும். மாமியால் தாங்க முடியாத மாமாவின் அட்டூழியங்களை எல்லாம் என்னுடைய அம்மா என்ன வென்று தலைக்கு மேல்;; தாங்குகிறாள் என்பது எனக்கு அதிசயமாய் இல்லாவிட்டாலும், அது அற்புதங்களில் ஒன்றாக ஆவது இருக்கக் கூடியது என்று தோன்றியது. ஒட்டுக் கதை மன்னன் இதையும் கண்டு பிடித்துச் சொல்லி விட்டான். எங்களுடைய புது வீட்டைக் கட்டி முடிக்க வட்டியே இல்லாமல் இருபது ஆயிரம் ரூபாய் மாமா கொடுத்த கதை தெரிந்த பின்னர், அம்மா மிகவும் நியாயமாய் நடப்பதாகவே எனக்குத் தோன்றியது. நீதி நியாயங்கள் தெரிந்தவள். மாமா இந்த முறை வரும் போது எப்படியாவது எங்களுடைய ரேடியோவைக் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு நானும் தம்பியும் இருந்தோம். ஆனால் அவர் வழமை போல கொண்டுவரவில்லை. எனக்கும் தம்பிக்கும் சரியான கோபம் வந்தது. அவருக்கு முன்னால் காட்டிக்கொள்ளவில்லை. அது சாத்தியமான விடயமும் இல்லை. இந்த ரேடியோப் பிரச்சனை ஒரு நீண்ட காலப்பிரச்சனை. அப்பாவிடம் ஒரு பழைய பிலிப்ஸ் ரேடியோ இருந்தது. ஆறு மாதத்துக்கு ஒரு தடைவ அதற்கு மிகப் பெரிய பற்றி வாங்கிப் போடுவது கட்டுப்படி ஆகாது என்பது கூட பிரச்சனையாக இருந்ததில்லை. வாரத்துக்கு இரண்டு தடைவை மாமரத்துக்கும் புளிய மரத்துக்கும் இடையில் தொடுத்து கட்டியிருந்த ஏரியல் அறுந்து விழ விழ மறுபடியும் ஏறிக் கட்ட வேண்டும் என்பது பெரிய பிரச்சனை. ஒரு தடைவ மாமரத்தில் ஏறும் போது அப்பா சறுக்கி விழுந்தும் விட்டார். "இந்தக் குத்தியனுக்கு ஏன் இந்த வேலை?" என்று அம்மாவிடம் மாமா செல்லமாகத் திட்டினார். அம்மா இதுகளையெல்லாம் காதில் விழுந்த மாதிரியே காட்டிக் கொள்வதில்லை. "இந்த ரேடியோவை நான் முதியான்சேயிடம் கொடுத்து டிரான்சிஸ்டர் ரேடியோவாக மாற்றிக்கொண்டு வருகிறேன்" என்று கூறிக் கொண்டு போனவர் தான் இரண்டு வருடமாயும் திருப்பிக் கொண்டு வரவில்லை. ஒவ்வொரு முறையும் வரும் போது அடுத்த முறை கொண்டுவருவதாக சளைக்காமல் கூறுவார். "கழுவிக் காயப் போடும் போது மாமாவின் கோவணத்துக்குள் காஞ்சோண்டி இலையைப் ப+சி விடவேண்டும்." தம்பி கண்ணி வெடி வைப்பதற்குத் திட்டம் போட்டது போல திட்டம் போட்டான். இவனுடன் சேர்ந்து திட்டம் போடுவது காஞ்சோண்டி இலையை நானே ப+சிக் கொள்வதை விட மோசமான நிலைமைக்கு என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடும். இது எனக்குத் தெரியும். அதனால் அவனுடைய திட்டம் பிடித்திருந்தாலும் எடுத்த எடுப்பிலேயே நிராகரித்து விட்டேன். "சமாதான ரீதியான ஏதாவது திட்டம் போட்டால் தான் சரி" என்று நான் கூறியதை தம்பி சற்று சந்தேகத்துடனேயே பார்த்தான். சற்றும் எதிர்பாராமல் அம்மாவே ஒரு திட்டம் போட்டுக் கொடுத்தாள். "டேய் நீங்கள் இரண்டு பேரும் மாமா போகிற போது அவரோடையே போய், வரும் போது ரேடியோவையும் எடுத்துக் கொண்டு, மாமா வாங்கித் தாற அரிசியையும் கொண்டு வாங்கோவன்டா." மாமாவுக்கும் இந்தத் திடீர்த் திட்டம் பிடித்துக் கொண்டது ஏன் என்று பிறகு தான் எனக்கும் தம்பிக்கும் தெரிய வந்தது. அவர் சில மூட்டைகளை அநுராதபுரத்திற்கு கடத்தல் செய்ய என்னையும் தம்பியையும் நம்பி முழு ஏற்பாடுகளையும் செய்து முடித்தார். புது வருடம் முடிந்ததும் மாமாவின் விடுமுறையும் முடிவுக்கு வந்து விட்டது. வெங்காயம், செத்தல் மிளகாய், பாணிபோட்ட போயிலை சகிதம் இணுவில் ஸ்டேசனுக்குச் சென்று ரெயின் எடுப்பதற்காக நாங்கள் வெளிக்கிட்டோம். வேலிக்குப் பின்னால நின்று சர சர என்று சத்தம். பெரியம்மா அவரமாய் ஆனால் பதுங்கிப் பதுங்கி வந்தாள். பெரியம்மா முன் வாசல் வழியால் எங்கட வீட்டுக்கு வந்ததை ஒரு நாளும் நான் கண்டதேயில்லை. எப்பவும் அவள் பொழுது விழுந்ததுக்கும் பிறகு: வேலியைப் பொத்துக் கொண்டு, கிணத்தடிப் பக்கமாய் நின்று, திடீரென்று ஒரு மரத்துக்குப் பின்னாலை அல்லது ஆட்டுக் கொட்டிலுக்குள் பதுங்கி இருந்து அதிரடியாய் வந்து தரிசனம் தருவாள். அவளுக்கு என்ன பாதுகாப்புப் பிரச்சனை என்று கரிசனையாய் கேட்டறிய யாருமே யோசித்ததில்லை. கையில் கட்டுக் கிளுவம் இலையோட வந்த பெரியம்மா தம்பியின்ட காதுக்குள்ளை சொன்னாள் "ஆளுக்கொரு மூட்டையோடை வந்திடுங்கோடா." அநுராதபுரம் ஸ்டேசனில இறங்கி மாமாவின் குவாட்டசுக்கு போவதற்கான பஸ்சில் ஏறும் வரை பட்டவேதனைகளை சொல்ல முடியாது. என் தம்பிக்கு கை வீங்கியே விட்டது. இரகசியமாய் அழுதிருப்பான் போலவும் தோன்றியது. குவாட்டசுக்கு அருகிலேயே பஸ் நின்றது. இறங்கியதுமே மாமாவை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல லொக்கு பண்டா எங்களடிக்கு வந்து விட்டான். அவன் தான் அந்தக் குவாட்டசுக்கு காவல்காரன். இவனுக்கு காவலுக்கு இரண்டுபேரைப் போட வேண்டும் போல எனக்கிருந்தது. "ஐயா" என்று சிங்களத்தில் பணிவாக அழைத்தவன் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை மாமாவுக்கு தெரிவித்தான். மாமாவும் பதிலுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். லொக்கு பண்டா எங்களை ஆச்சரியமாகப் பார்த்தான். எங்களை மாமா சிங்களத்தில் அறிமுகம் செய்து வைத்தார். "ஓ.." என்று இழுத்தவன் "ஸ்கூல் எல்லாம் லீவு தானே இப்ப" என்று தமிழில் எங்களைப்பார்த்துக் கூறினான். மூட்டைகளை வெகு அனாயாசமாகத் தூக்கிக் கொண்டு வந்து இறக்கி வைத்தான். மாமாவின் இருப்பிடம் எனக்கு மிக்க அசௌகரியமாக இருந்தது. "எங்களுடைய ஆட்டுக் கொட்டில் இதைவிடப் பெரிசு" தம்பி குசு குசுத்தான். அவனுடைய காலில் நான் ஒரு மிதிமிதிக்க அமைதியாகி விட்டான். லொக்கு பண்டா காலையில் வருவதாகக் கூறி புறப்படும் போது "பெரிய மாத்தையா வந்து விட்டாரா?" என்று மாமா கேட்டார். "மாலையிலேயே வந்து விட்டார்" என்று கூறியபடி இருட்டுக்குள் போய் மறைந்துவிட்டான். "மாமா ரேடியோ எங்கே?" லொக்கு பண்டா போனதுமே ஆவலாய் கேட்டேன். அதை ஒரு தடவையாவது பார்த்துவிட்டால் பட்ட கஸ்டங்கள் நீங்கி விடும் போல இருந்தது. "இப்ப படுங்கோடா. அதையெல்லாம் காலையில பார்க்கலாம்" என்று கடுமையாகக் கூறினார். ஒரே ஒரு மரக்கட்டில் இருந்த அந்த இடத்தில் எப்படி படுப்பது என்று தீவிரமாகத் தம்பி யோசித்தான். மாஐpசியன் சர்க்காரைப் போல மாமா ஒரு இடத்தில் கைவைத்து இரண்டு சாக்குகளை எடுத்து தந்தார். "இதிலை படுங்கோ. சாராத்தாலை போர்த்துக் கொள்ளுங்கோ" எனக்கும் தம்பிக்கும் நித்திரை வரவில்லை. மாமாவின் குறட்டை சத்தம் கேட்டதும் தம்பி துள்ளி எழுந்தான். அந்த இருட்டுக்குள் பரபரப்பாக எதையோ தேடினான். கள்ள நாய். இவன் மாமாவின் காசை ஏதும் களவெடுக்கின்றான் போல. எனக்கு ஆத்திரம் வந்தது. "மாமாவை எழுப்பிச் சொல்லுவமோ" என்று நான் நினைக்க, மறுபடியும் என்னருகில் வந்து படுத்தான். மெல்ல என்னை சுரண்டினான். நான் ஆத்திரத்தில் பேசாமலே இருந்தேன். "ரேடியோ இருக்கிறது" என்று கூறினான். நான் திரும்பவே இல்லை. ஆனால் மனதுக்கு சந்தோசமாக இருந்தது. நின்மதியாக நித்திரை வந்தது. பரபரப்பாக காலையில் எழுந்த மாமா "இரண்டுபேரும் வெளிக்கிடுங்கோ" என்று அவசரப்படுத்தினார். எங்கு எதற்;கு என்ற எந்த விபரமும் மாமா வழமையாக கூறுவதில்லை. பாணிபோட்ட போயிலை மூட்டையில் இருந்து நல்லதாய் இரண்டு போயிலை கட்டுகளைத் தேடி எடுத்துக் கொண்டார். யாரையோ முக்கியமாக சந்திக்கப்போகின்றார் என்று நினைத்தேன். அந்த குவாட்டசை விட்டு வெளியேறி இன்னொரு குச்சு ஒழுங்கை வழியாக சிறிது தூரம் நடந்தோம். ஒரு சிறு கல் வீட்டுக்கு முன் நின்றார். எங்கள் இருவரையும் பார்த்தார். "ஒரு பிரச்சனையும் இல்லாமல் அமைதியாய் இருக்கவேண்டும்" என்று மிரட்டல் தொனியில் கூறினார். இப்படியான சந்தர்ப்பங்களில் என்னுடைய தலை எனக்கும் தெரியாமல் தானாகவே ஆடிவிடும். தம்பி யோசித்துத் தான் ஆட்டுவான். "பின்னாலேயே வாங்கோ" மூங்கிலால் செய்த படலையை திறந்து கொண்டு மாமா அந்த வீட்டு வளவுக்குள் காலடி வைத்தார். எனக்கு ஒரே பரபரப்பாக இருந்தது. சிங்கள மாமியைத் தான் சந்திக்கப் போகின்றோமோ? வீட்டுக் கதவைத்தட்ட ஒரு பெண்மணி கதவைத்திறந்தாள். அழகான பெண்மணிதான். மாமியா ஏற்பதற்கு எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை நான் தயார். "நோனா" சிங்களத்தில் மாமா கூறினார். "ஓ! யாப்பண இரிந்து வந்ததா?.... உல்லுக்கு வந்தி கொஞ்சம் இரிங்க." அந்தப் பெண் உள்ளே சென்று விட்டார். நானும் தம்பியும் ஒருவரை ஒருவர் கண்களால் பார்த்துக் கொண்டோம். தம்பியின் முகத்தில் பெரும் விசமம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. மாமா போயிலையை இரண்டு கைகளாலும் ஏந்தி ஒரு வீரனைப்போல தயாராக நின்று கொண்டிருந்தார். இரண்டு நிமிடத்தில் யாரோ வரும் காலடிச்;சத்தம் கேட்க மாமா பரபரப்பாகினார். வெறும் மேலுடன், கண்ணாடியும் சாரமும் அணிந்த ஒரு மனிதர் வர தடாலென்று மாமா சரிந்து விழுந்தார். மாமாவுக்கு என்ன? நான் திடுக்கிட்டேன். "மாத்தையா! புத்தாண்டு வாழ்த்துக்கள்" மாமாவின் குரல் பாதாளத்தில் இருந்து கரகரப்பாக கேட்டது. "ஓ. கே. நட்ராஐh" மாத்தையா கட்டைக் குரலில் கூறினார். அவர் தான் மாமாவின் மேலதிகாரி. ஏதோ ஒரு வளையில் மாட்டிக் கொண்ட கரடியைப் போல், மிக மெல்லமாக, கஸ்டப்பட்டு எழுந்த மாமா, சளைக்காமல் தனது முதுகை வளைத்து குனிந்து மாத்தையாவிடம் பாணிப் போயிலையை நீட்டினார். பாணிப்போயிலையைக் கண்டதும் மாத்தையாவின் விரிந்த முகம் அகலப்பக்கமாக இன்னமும் விரிந்தது. தம்பியைப் பார்த்தேன். காணக் கூடாததைக் கண்டதைப் போல் அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தான். மறுபடி அநுராதபுரம் புகையிரத நிலையத்தில் இருந்து, இரயில் வண்டி புறப்படும் வரை எதைப்பற்றியுமே அவன் மூச்சே திறக்கவில்லை. இப்போதெல்லாம் மாமாவைப் பார்க்கின்ற போது எனக்கு பாண்டியனின் நினை வருவதேயில்லை. வளைந்து போன ஒரு வாளின் நினைவு மட்டும் மறுபடி மறுபடி வந்து தொலைக்கின்றது. (ஜேர்மன் "பூவரசு" இதழ் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பசிசு பெற்றது)

எனக்கு பிடித்த கதைகள் 2 -டானியல்ஜீவா-

உயிர் விளையாட்டு
- மைக்கேல் -

அவனும் அவளும் ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்கள். முதியவர்களுக்கான பூங்காவுக்குள் வழிதவறி நுழைந்தவர்கள் போல வரவேற்பறையில் டாக்டரின் அழைப்புக்காக அவன் காத்திருக்க, "உங்களுக்கு ஒண்டுமே இருக்காது இந்த சிகரெட் இழவைக் கொஞ்சம் குறைச்சால் எல்லாம் சரியாயிடும். எனக்காக இல்லாவிட்டாலும் இவன் பாரதிக்காகிலும் விட்டுத் துலையுங்கோ" என்னும் புத்திமதியும், மனஉளைச்சலுமாக, வியர்வை பூத்திருந்த மூக்கைத் துடைத்து விட்டு, உள்ளே இருக்கும் குழந்தையைத் தடவும் வாஞ்சையுடன், வளர்ந்து சரிந்திருந்த வயிற்றைச் செல்லமாகத் தடவினாள். குனிந்து வயிற்றைப் பார்த்து "நௌ¤யுறான்" என்றாள். அவன் அவள் கூறுவது எல்லாவற்றையும் கேட்டபடி, திரும்பி அவளது வயிற்றைப் பார்த்தான். பிந்தித்தான் போய்விட்டது. திருமணமாகி ஏழு வருடங்கள் கழித்து, சந்தோசம் ஒன்று ஐனித்து வளர்கிறது மனைவியின் வயிற்றில். இது பிறந்து, வளர்ந்து, பாடசாலை போகும்போது கிழட்டு அப்பாவைத்தான் பார்க்க நேரிடும். இளமையிலேயே ஊடுநரை பிடித்துவிட்டது. இன்னும் பதினைந்து வருடங்களில் தலையெங்கும் நரைத்த மல்லிகை பூத்துக் குலுங்கும். ஆயினும் சந்ததி கிளைத்துவிட்டது. பாபுவும் தேவியும் ஆலம்விதையொன்றை இந்த மண்ணில் ஊன்றிவிட்டனர். அது வேர்விட்டு வளர்ந்து, விழுது அனுப்பி, தோள் கொடுத்து, சிலபோதுகளில் கவிதை எழுதி மானுஷீகம் பேசி, தான் வாழ்ந்த முத்திரையாய் இந்தப் பூமியில் இன்னொரு விதையை நட்டுவிட்டுச் செல்லும். பனித்துச் சொரியும் வர்ணவாணங்களாக சந்ததிக்கொடி பரவிப் படரும். மின்னும் மறையும், பின் இன்னொன்றாய் நிலைக்கும். நெஞ்சு மீண்டும் இறுகியது. கொடிய ராட்ஷசன் தன் முரட்டுக்கரங்களால் இறுக்கி நொறுக்குவது போல, இடப்பக்கம் நெஞ்சு வலிக்கிறது. மூச்சுத் தடுமாறி அதன் இசைவை இழக்கிறது. நிமிர்ந்திருக்க முடியாமல் முன்வரிசைக் கதிரையில் தலையைச் சாய்த்தான். வலி குறையவில்லை. உரசி உரசி எரிகிறது தசைக்கோளங்கள். அவள், அவனது நெஞ்சைத் தடவியவாறு "சிகரெட் சளியாத்தான்" இருக்கும் என்று புலம்புகிறாள். அவனால் கதிரையில் வாட்டமாக இருக்கமுடியவில்லை. பாதத்தால் குளிர் ஊடுருவுவதை உணர்கிறான். உறைந்த நீரில் பாதத்தை அமிழ்த்தியதுபோல காற்பெருவிரலில் இருந்து தேகமெங்கும் வியாபிக்கிறது குளிர். தலைமயிர்க்கால்களில் வேர்வை துளிர்த்து நனைக்கிறது. இதென்ன முரண் என்று குளம்பிப் போனான். குளிரும் வேர்வையும் எதிரெதிர் திசையிலிருந்து இதயத்தை நோக்கி நகர்ந்து வருகிறதே? வலி மேலும் மேலும் உச்சநிலையடைகிறது. தீக்கற்றை ஒன்றை இடப்பக்க மார்பில் அழுத்தித் தேய்த்தது மாதிரி தசைநார்கள் கொதிக்கின்றன. மூளைக்குள் யாரோ கல் எறிந்திருக்கிறார்கள். எண்ணங்கள், பயங்கள், வேதனைகள், எல்லாம் தளும்பி வழிகிறது தலையில் சொரியும் வேர்வையுடன். "கூப்பிடுகிறார்கள்" என்றாள். "ஜந்தாம் நம்பர் அறைக்குக் கூப்பிடுகிறார்கள். நானும் கூட வரட்டா?" என்றாள். அவன் ஓமென்று தலையாட்டினான். அவனால் நடக்கமுடியவில்லை. இதயப்பாரத்தைத் தாங்க முடியாது கால்கள் துவள்கின்றன. அவளில் சாய்ந்து கொண்டு அறையை நோக்கி நடந்தான். "இந்தப்பக்க நெஞ்சு வலிக்கிறது" என்று டாக்டருக்கு தனது இடப்பக்க மார்பைத் தொட்டுக்காட்டினான். அவனைப் படுக்கையில் சாய்த்துவிட்டு தன் ஸ்தெதஸ்கோப்பை வலிக்கும் பகுதிக்கு வைத்து உற்றுக் கேட்டார். "இரவு படுத்தபிறகுதான் வலிக்க ஆரம்பித்தது." அவன் சொன்னதற்கு தலையை ஆட்டியபடிக்கு, இதயத்துடிப்பை அளந்து கொண்டிருந்தார் டாக்டர். "மூச்சை இழுத்து விடு!" முயன்று பார்த்தான். சுவாசக்குழாயுக்குள் காற்றுத்திரண்டு திண்மமாகி விட்டது. விலாவெலும்பும் விரிய மறுத்தது. இயலாமையால் தலையை அசைத்தான். வயதைக்கேட்டார். அவனுக்கு இருக்கும் வியாதிகளின் தொகுதியை அலசிப்பார்த்தபின் அவனிடம் சொன்னார். "ஆடாமல் அப்படியே படுத்திரு! உனக்கு ECG எடுத்துப் பார்ப்போம்." சார்ட்டில் எழுதி வைத்துவிட்டு, அகன்று போனார். மனைவி அவனருகே நகர்ந்து வந்தாள். கலவரமுற்றிருக்கிறாள் என்று முகம் சொல்லியது. படுத்திருந்தபடியே வலக்கையை நீட்டி, அவளது வயிற்றைத் தடவினான். தடவுவதற்கு வாட்டமாக அருகில் வந்தாள். "இப்ப எப்பிடி இருக்கு?" என்றாள் "சுகமாயிருக்கு" என்று சொன்னான். சொல்லும்போதும், வலி, மார்புத்தசைகளை ஊடுருவி உடலெங்கும் பரந்தது. ECG இயந்திரத்தை தள்ளுவண்டியில் வைத்து உருட்டி வந்தாள் நர்ஸ். பாதங்களிலும், இருகைகளிலும், மார்பின் பலபகுதிகளிலும், வயர்களை இணைத்தபின், "ஆழமூச்சிழுத்து அடக்கி வைத்திரு" என்றாள். தம்பிடித்தபடி நர்சைப் பார்த்துக் கொண்டிருந்தான். ஓயாது புன்சிரிப்பை ஒட்டியிருந்த செந்தளித்த முகம். கன்னக்குழியிலிருந்து மேலெழும்பியது ஒரு கோடாக வடு. நிகக்காயமாக இருக்கலாம். அல்லது கவிஞன் கீட்ஸ் சொன்னதுபோல, காலம் தன் விபரீதக் கோலங்களுக்கான, ஆயத்தப்புள்ளியை போட ஆரம்பிக்கிறதாகக் கூட இருக்கலாம். கிரீச்சிட்டபடி ECG இயந்திரம், ரிசல்ட்டை அச்சடித்துக் கொண்டிருந்தது. ரிசல்ட் வெளிவந்து கொண்டிருக்கும்போதே, குனிந்து பார்வையால் கணித்துக் கொண்டிருந்தாள் நர்ஸ். அவளது வெள்ளைச்சட்டையின் மார்புப்பகுதியில் மரியம் என்ற பெயர்த்தகடு தொங்குகிறது. அவன் ஏக்கத்துடன் தாதியின் முகமாறுதலைத் தேடி உன்னிப்பாகப் பார்த்தபடி இருந்தான். தாதியின் முகம் எவ்வித மாறுதலுமற்று, அதே புன்சிரிப்பும், செந்தளிப்பும், நீண்டவடுவாகவும், ஓவியமாக இருந்தது. "ரிசல்ட் எப்படி?" கேட்டான் அவன். "சாதாரணம்தான். கவலைப்படாதே! ரிசல்ட் சாதாரணந்தான். ஆனால் உடம்பை ஆட்டாதே! அப்படியே படுத்திரு. டாக்டர் வருவார்" "உனக்கு நன்றி!" என்றான். இயந்திரத்தைத் தள்ளியபடிக்கு வெளியேறும்போது "எத்தனை மாதம்?" என்று அவனது மனைவியைக் கேட்டாள். பதில் கிடைத்தது. "எல்லாம் நன்மையாகட்டும்" என்று வாழ்த்திவிட்டு, அதே சித்திரச்சிரிப்புடன் அகன்று போனாள். ரிசல்ட்டை உயர்த்திப் படித்தவாறு உள்நுழைந்தார் டாக்டர். அவன் படுக்கையில் இருந்து எழும்ப முயன்றான். விரைந்து வந்து அவனைத் திரும்பவும் படுக்க வைத்த டாக்டர், "உடம்பை அசைக்காதே, உனக்கு உடலெங்கும் சீராக இரத்தோட்டம் பாயவில்லை. உனது இதயம் சரியாக இயங்கவில்லை. மாரடைப்பு தாக்கியிருக்கிறது என்று நினைக்கிறேன்." என்று சொன்னார் டாக்டர். அவன் தலையைத் திருப்பி மனைவியைப் பார்த்தான். அவளது கன்னங்கள் மேலுயர்ந்து துடிப்பது தெரிந்தது. அழுதுவிடுவாளோ என்று பயமாக இருந்தது. அவன் அவளது முகத்தில் தன் பார்வையை வைத்திருந்தபோது கண்ணீர் குமிழியாகத் திரண்டு கன்னத்தில் தொடராக விழுவதைப் பார்க்க முடிந்தது. "உடனடியாகச் சிகிச்சை ஆரம்பிக்கவேண்டும். உன்னை வார்ட்டில் அனுமதித்திருக்கிறேன். தாதி வந்து வார்ட்டுக்கு கொண்டு போவார். சிலநாட்கள் ஆஸ்பத்திரியில் தங்க நேரிடலாம். உனது மனைவியைப் போகச் சொல்லு" என்றார் டாக்டர். எல்லாவற்றையும் எழுதி வைத்துவிட்டு "காலையில் இருதயநிபுணர் உன்னை வந்து பார்ப்பார்" என்று கூறி, விடைபெற்றுச் சென்றார் டாக்டர். டாக்டர் அறையை விட்டு சென்றதும் "என்னங்கோ" என்றபடி மீதி வார்த்தைகள் கிளம்பாமல், வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள் மனைவி. அவன் அருகே இழுத்து, அவளது இடுப்பை அணைத்தபடி "ராக்ஷி பிடித்து போகமுடியுமா?" என்றான். "நானும் உங்களோட நிக்கிறன்" என்றாள் அழுகையோடு. புதிய பெட்டொன்றை தள்ளிக் கொண்டு இரு தாதிமார் உள்ளே நுழைந்தனர். "மன்னிக்கவேண்டும். இவள் கர்ப்பமாக இருக்கிறாள். நேரமும் அகாலமாக இருக்கிறது. இவளைத் தனியேஅனுப்பமுடியாது. நானும் இவளுடன் கூடச்சென்றுவிட்டு, நாளைவந்து ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகுகிறேனே?" என்று அவர்களிடம் கேட்டான் அவன். "முடியவே முடியாது. நீ இப்போதுள்ள நிலைமையில் உன் கையைக் காலைக்கூட அசைக்கக்கூடாது. நாங்கள் எப்படி உன்னை நடக்க அனுமதிக்கமுடியும்?" என்றாள் அவனது கையில் ஆஸ்பத்திரி அடையாளத் துண்டைக் கட்டிக் கொண்டிருந்த தாதி. அவனை பெட்டில் வைத்து உள்ளே கொண்டு போகும்வரைக்கும் அவனது கையைப் பிடித்தபடி நின்றாள் மனைவி. அவன் தலையை அசைத்து விடை தந்தவாறு உள்ளே போகிறான். இப்போதும் சிரிக்கிறான்... அவளுக்காக...! ************************ வீதிக்கு வந்தாள். ஆஸ்பத்திரி வலயத்ததைத் தவிர, எங்குமே இருள் கவிந்து அமைதியாய்க் கிடந்தது. அகாலம் வேறு. தனிமையில் அச்சம் தரும் நிஷ்டூர அமைதியைக் குலைத்தது அவளது சப்பாத்துச் சத்தம். அவனில்லாமல் வீட்டுக்குப் போய் எப்படி உறங்குவது..? மையிருள் கசியும் கோடைகால இரவு வானத்தின் கீழே, அவள் நடந்து போய்க் கொண்டிருந்தாள். அவளுடைய மனம் அவளது இதயத்தில் தங்கியிருக்கவில்லை. அது அவனைப் பரிபாலிக்க, கடவுளர்களின் வீடு தேடி அலைந்தவாறு எங்கோ சென்றுவிட்டது. வயிறு இப்போது ஒரு பிண்டமாக, கல்லைக்கட்டி வைத்திருப்பது போல பாரமாக, உயிர்ப்பற்று இருந்தது. கண்ணீரின் ஓயாத ஓட்டம் தலையிடியாக முளைத்திருக்க, தனியனாக அந்தக் கர்ப்பிணி நடந்தபடி இருந்தாள். ஒவ்வொரு லைட்கம்பத்தின் ஒளிப்பரப்பிலும் தெரிந்து, பின் இருளுக்குள் புகுந்து, அவளது நடையின் முகம் வீட்டை நோக்கி இருந்தாலும், அவள் தன் நினைவில் பின்னேறி அவனிடமே வந்தவாறு இருந்தாள். ********************************** அவனைச் சூழ்ந்து நின்று இரண்டு கைகளிலும் துளைபோட்டு, மருந்து ஏற்றுவதும், இரத்தம் எடுப்பதுமாக அவசரப்பிரிவுக்கேயுரிய வேகத்துடன் இயங்கினர் தாதிகள். மருந்து உடலில் ஏற ஏற இரத்தஅழுத்தம் கூடிக் கொண்டே போனது. எலெக்ரிக்ஷொக் கொடுக்கும் இயந்திரத்தை இழுத்து வந்து அவனருகே நிறுத்தினர். மரணத்திற்கான தடையரண்களைப் பார்த்துக் கொண்டிருந்த அவனது கால்கள் நடுங்கத் தொடங்கின. பல்லுக்கிட்டி ஒன்றையொன்று மோதித் தந்தியடித்தன. அவனைச் சுற்றி அந்தகாரம் படர்ந்தது. "ஏலி ஏலி லாமா சபக்தானி..!" "இறைவனே இறைவனே ஏன் என்னைக் கைவிட்டீர்..!" கொல்கொதா மலைக்குன்றை நோக்கிய முள்ளடர்ந்த பாதையில் அவனைத் துரத்திக் கொண்டு செல்கின்றனர். எருசலேம் தேவாலயத்தின் திரைச்சீலை மேலிருந்து கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிய, இன்றோ நாளையோ எல்லாம் முடியும். வாழ்ந்ததற்கும் மூச்சு விட்டதற்கும் அடையாளமே இல்லாமல் அவனுக்கான மேட்டுநிலத்துடன் ஜக்கியமாகி விடுவான். மரணம் இந்த முப்பத்திமூன்றாம் வயதில், அவனை முதுகிலே ஈட்டி எறிந்து கொன்று வீழ்த்தப் போகிறது. "சிஸ்டர்.. சிஸ்டர்... நான் சாகப்போகிறேனா..? இது...என்னஇது என்னத்துக்கு இந்த மெஷின்?" எலெக்ரிக்ஷொக் கொடுக்கும் இயந்திரத்தைச் சுட்டிக் காட்டியபடி பதகளித்தான் அவன். "ரிலாக்ஸ், ரிலாக்ஸ், நீ குணமடைந்து விடுவாய். இது இன்னொரு தடவை மாரடைப்பு வந்தால் தடுப்பதற்கான முன்னேற்பாடே தவிர, பயப்படும்படி ஒன்றுமில்லை." அவனை ஆறுதல்ப் படுத்தினாள் அருகே நின்ற தாதி. "இல்லை சிஸ்டர் நான் சாகக்கூடாது. என் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள். அது ஆண்குழந்தை. நான் அதைப் பார்க்கவேண்டும்." "மனதை அலட்டாதே! உனது இரத்தத்தை திரவமிளக்கி, உடலெங்கும் பாய்வதற்கு மருந்து செலுத்துகிறோம். இனிமேல் உனக்கு ஒரு ஆபத்துமில்லை." அவனுக்கு அன்பாக விளக்கமளித்து அவனது கையைத் தடவிக் கொடுத்து ஆறுதல்ப்படுத்தினாள் தாதி. அவனால் மனதை ஒருமைப்படுத்த முடியவில்லை. அது அலைபாய்ந்து கொண்டிருந்தது. பிறக்கப் போகும் கவலையறியாச் செல்லக்குட்டிக்கு அப்பா இல்லாத துரதிர்ஸ்டம் வாய்க்குமே? அத்துடன் "தேப்பனைத்தின்னி" என்று எங்காவது ஒன்றுக்குப் பத்து நாக்குகள் நௌ¤யுமே? அவனது நிழலின் பின்னே இன்னொரு நிழலாய், இந்த ஏழுவருடங்களும் அடியொற்றி நடந்து, கதைத்துக் காதல் புரிந்து, முயங்கிச் சிரித்து, அவ்வப்போது அவனுக்கு ஏமாளி என்று பட்டம் கொடுத்து, வாழ்வின் திரும்புதிசைக் கெல்லாம் நெம்புகோலில் வைத்து, அவனை நெம்பி மடைமாற்றி, அப்போதும் பணப்பயிர் விளையாமல் போக, விதியே என்று சமாதானப்படும் தேவமலரின் வாழ்வு அவனுக்குப் பின்னே என்னவாகும்? இந்தப் பூமிப்பந்தின் பாரத்தை சமனப்படுத்தி, கூட்டலையும் கழித்தலையும் தீர்மானிக்கும் அந்தக் கொடியவன் யார்..? அவனால் மூச்சு விடமுடியவில்லை. ஆட்காட்டி விரலில் மாட்டியிருந்த ஒட்சிசன் அளக்கும் கருவி கீச்கீச் என்று அவசரஒலி எழுப்புகிறது. நெஞ்சை இறுக்கி, உயிர்ப்பாலைப் பிழிகிறது ஏதோ ஒரு வலிய கரம். தலையெங்கும் வியர்வை வளிகிறது. வியர்வைதான் மாரடைப்பின் கடைசிச் சின்னமாம். உயிர் அவனை விட்டு அகலப் போகும் பச்சைக்கொடி காற்றில் ஆடுகிறது. சாகக்கூடாது. நான் என் குழந்தையைப் பார்க்கவேண்டும். நான் சாகக்கூடாது. எனக்கு இன்னும் வாழ்க்கை வேண்டும். கடவுளே உன் கையிலிருந்து நழுவி விழப்போகும் என்னை இறுக்கி அணைத்துப்பிடி..! தெய்வங்களே!! எதைக்கூப்பிடுவது? அம்மாவின் அந்தோனியாரைக் கூப்பிடுவதா? ஜயாவின் வயிரவரைக் கூப்பிடுவதா? ஏன் நீங்கள் இரண்டு பேருமே கரம்கோர்த்து என்னை து£க்கி அணைத்து, இந்தப்பூமியில் நிறுத்தக்கூடாது. கடவுளர்களே கைவிட்டு விடாதீர்கள்.... "சிஸ்டர் சிஸ்டர் நான் சாகப் போகிறேனா?" ECG இயந்திரத்தின் வயர்களை அவனது மார்பில் இணைத்துக் கொண்டு சிரிக்கிறாள் மரியம். "நாலு நாளாக இதே கேள்வியா? இதோ உனது இதயம் சரியாக இயங்குகிறது என்று ரிசல்ட் சொல்லுகிறது. நீதான் உன்னை வீணாக அலட்டிக் கொள்கிறாய். பேசாமல் உறங்கு!" நேச வசீகரம் தந்து, அரவணைக்கும் தாயைப் போன்ற அதே சிரிப்புடன் தாதி மரியம் சொல்கிறாள். அவனால் எப்படி உறங்கமுடியும்? உறக்கத்தையெல்லாம் எங்கோ இழுத்துச் சென்று பாதாளத்தில் எறிந்து விட்டது மரணபயம். ஓயாது அவனது பார்வை இதயத்துடிப்பை அளக்கும் கருவியின் திரையிலே ஒட்டிப் போய்க் கிடக்கிறது. அவனது ஏக்கம் கூடக்கூட இதயம் வேகங் கொண்டு பாய்கிறது நீர்வீழ்ச்சியின் ஆவேசத்துடன். உடலெங்கும் கேட்கிறது விடைபெறப் போகும் உயிரின் சத்தம். டாக்டர் அவனைத் தட்டி எழுப்பினார். திடுக்கிட்டு விழித்ததும் அவனையறியாமல் பார்வை இதயத்துடிப்பு அளக்கும் இயந்திரத்தின் திரைக்கு ஓடியது. "உனது நாடி நாளங்களை பரிசோதிப்பதற்காக வேறு ஆஸ்பத்திரிக்கு நாளைகாலை போகிறாய். ஏனெனில் உனக்கு குடலில் பக்ரீறியா தொற்று ஏற்பட்டிருக்கிறது இந்த நெஞ்சுவலி தொற்றின் காரணமாகவா, மாரடைப்பாலா என்று நாளை தெரியவரும். உறங்கு" டாக்டர் ஏதோ எழுதி வைத்துவிட்டுப் போகிறார். அவன் மீண்டும் அலைபாயத் தொடங்கினான். ஒன்றைமேவி இன்றொன்றாக புதிய புதிய சந்தேக அலைகள் மோதி எறிந்து கலக்கின மனதை. *************************** "காலைவணக்கம் பாபு! இன்று உனக்காக பூவொன்று கொண்டு வந்தேன்." ECG இயந்திரத்தைத் தள்ளிக் கொண்டு அவனிடம் வருகிறாள் மரியம். அவளது கையில் அழகான மஞ்சள் நிறப்பூவொன்று தெரிகிறது. அன்று பூத்ததாக இருக்கலாம் இனி வாடிவிடும் என்று அவனது நினைப்பு ஓடியது. "நன்றி மரியம்! நான் குணமாகி வந்தால் உனக்காக ஒரு கவிதை எழுதுவேன்" "கண்டிப்பாக. இப்போதே நீ குணமாகி விட்டாயே! எங்கே எனக்கு ஒரு கவிதை சொல்லு!" "இல்லை மரியா இன்றுதான் எனக்கான நியாயத் தீர்ப்புநாள். இதயப்பரிசோதனைக்காக என்னை வேறு ஒரு இடம் கொண்டு செல்கிறார்கள். அதன் பிறகுதான் தெரியும் உனக்கு கவிதையா... அல்லது........." அவனது உடலுக்குள் கம்பியைச் செலுத்த உடல் உஷ்ணமாகிக் கொண்டு வந்தது. பாரியநாடி தோறும் கம்பியைச் செலுத்தி இரத்தப்பாதையை படம் பிடித்தார்கள். இறுதியில் இதயத்திற்குக் கிட்ட கம்பி செலுத்தப்படும் போது, அவனது உணர்வுகள் சிலிர்த்து வந்தது. இதயத்துடிப்பு இறங்குமுகமாகியது. சுவாசக்குழாயின் வாசல்கதவைத் தட்டுகிறது உயிர்க்காற்று. ஆனாலும் கம்பியூட்டர் திரையை கவனித்தவாறே இருந்தான். "மிஸ்டர்! உனக்கு நு£று ஆண்டுகள் ஆயுசு! உனது இருதயம் குதிரையினது போல வலுவாக இருக்கிறது." அவனது காதில் பரிசோதனை டாக்டரின் குரல் விழுந்தது. அவனுக்கு இந்தச் சந்தோசச் செய்தியை உடனே மனைவிக்குச் சொல்ல வேண்டும் என்ற துடிப்பாய் இருந்தது. நான்கு மணியாகி விட்டது. இதோ இன்னும் ஜந்து பத்து நிமிசத்தில் வந்து விடுவாள். மனம் கிடந்து அலை பாய்ந்து கொண்டிருந்தது. ECG மெஷினின் தள்ளுவண்டியைத் தள்ளிக் கொண்டு பக்கத்து பெட் நோயாளியை பரிசோதிக்க வந்தாள் மரியம். "வணக்கம் மரியம்." அவன் குது£கலத்துடன் அவளை அழைத்தான். அவளது முகத்தில் புன்சிரிப்பைக் காணவில்லை. என்றும் இல்லாதவாறு முகம் கூம்பிப் போய்க் கிடந்தது. "உனக்கு இனிமேல் ECG எடுக்கத் தேவையில்லை" என்று சுரத்தில்லாமல் சொன்னாள் மரியம். ஆக, எனக்கு இருதயவருத்தம் இல்லை என்று அவளுக்கு முன்னரே தெரிந்திருக்கிறது. ஆனால் ஏன் சோகமாக இருக்கிறாள். "உனக்கு என்ன நடந்தது மரியம். உனது முகம் வாடிப்போய் இருக்கிறதே" என்று கேட்டபடி அவன் மரியத்தின் முகத்தைப் பார்த்தான் அவள் அழுததற்கான சுவடுகளாக கண்கள் சிவந்து போய் வீங்கியிருந்தன. "எனக்கு இன்று ஒரு சோகம் நிகழ்ந்துவிட்டது." "என்ன நடந்தது." அவன் தனது சந்தோசத்தை உள்ளடக்கிவிட்டு மரியத்திடம் கேட்டான். "அவள் இறந்துவிட்டாள். எவ்வளவு அழகானவள். சாம்பல் நிறமும் சடையுமாய். அவளுக்கு என்னில் நிரம்ப அன்பு. இன்றுகாலை நான் படுக்கையால் எழும்பி வர, வாசலில் இறந்துபோய்க் கிடக்கிறாள்." சொல்லும்போதே மரியத்தின் உதடுகள் துடித்தன. "யாரது உனக்கு மிக வேண்டியவரா?" "ஆமாம். என் செல்லப்பூனை." மரியத்திற்கு துக்கம் பீரிட்டுப் பொங்கியது, கண்ணீர் விழுந்து, அவளது முகத்து வடுவீனு£டாக கோடாக இறங்கியது.

Sunday, April 16, 2006

வலை நாவாந்துறை டானியல் அன்ரனி


நிலம் முற்றாக இன்னும் வெளுக்க வில்லை. அந்த வெள்ளாப்பிலேயே நேற்று பொழுது சாயும் மைம்மல் இருட்டில் கடற்கரையில் நடந்துவிட்ட அந்தச் சம்பவம் ஊர் முழுவதும் பரவி ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியிருந்தது.
எப்பொழுதுமே அவ்வேளையில் ஊமை அமைதியுடன், கடலை அண்டிப் பரந்து கிடந்த வளவில் நீண்டு நெடுப்பாக வளர்ந்து நிற்கும் தென்னை மரங்களிடையே தனித்து நிற்கும் பூவரச மரத்தடியில் நின்று கொண்டு, பலர் நடந்துபோன அந்தச் சம்பவத்தைப் பற்றி ஆவேசமாகவும், உரத்த தொனியிலும் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டு நின்றனர்.
வாடை அன்று பெயர்ந்தது. வேகமாக அள்ளுண்டு வந்த காற்றில் தென்னங்கீற்றுகள் வெறி பிடித்து ஆடின. கடல் கறுத்துக் குழம்பிக் கிடந்தது. வடுமாறி வெள்ளம் நுகைக்கத் தொடங்கியது.
கடல் முழுவதும் மிதந்து கொண்டிருந்த தோணிகளின் 'சள சள" ஓசையின் சலனங் களினால் 'களங் கண்டி" வலைகள் பாய்ந்திருந்த தடிகளில் குந்தியிருந்த வெண்கொக்குகள் நீலவானத்தில் எழுந்து பறந்து செல்வதும் நிலை கொள்ளாமல் மீண்டும் நீர்ப் பரப்பில் இறங்கி கூரிய அலகுகளினால் எதையோ கொத்திச் செல்லும் முனைப்பில் போராடிக் கொண்டிருந்தன.
கடலை அண்டிய காரைதீவு வீதியில் ஆனைக்கோட்டைக்கு அப்பாலிருந்து அங்கு வரும் இழுப்பு வலைக்காரார் இழுத்து வந்த மீன்களையும், இறால் வலைகளையும் வீதியில் பரத்திப் போட்டுக் கடற்பாசிகளிலும், தாழை களிலும் இருந்து அவற்றைப் பிரித்து எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
அவர்களும் அவ்விடத்தைவிட்டு விரை வில் சென்று விட வேண்டுமென்று பரபரத்தாலும், சுற்றி நின்று காது செவிபடக் கத்திக் கொண் டிருந்த காக்கைக்கூட்டங்கள் அவர்களை விடுவதாயில்லை.
வில்லூன்றிச் சுடலையைத் தாண்டி வடக்கால் காக்கைதீவுச் சந்தையை நோக்கி ஓடிக்கொண்டிருந்த தோணியின் அணியத்தில் நின்ற சைமன் தூரத்தில் வரும்போதே கடற்கரை வளவில் பெரும் கூட்டம் ஆரவாரப்பட்டுக் கொண்டு நிற்பதைக் கண்டு கொண்டான்.
அற்ப சம்பவங்களைக் கூட பெரிது படுத்தி உணர்ச்சி வசப்பட்டவர்களாய் உரத்து விவாதிப்பதும் விவாதம் முற்றி கைகலப்பாக மாறி தங்களுக்குள்ளே அடிபட்டுக் கொள்வதும் அந்த ஊர் மக்களுக்கு பரிச்சயமாகிப் போன ஒன்று என்பது பிரசித்தம்.
சைமன் ஒரு தினுசானவன். ஊர்ச் சோலிகள் எதுவானாலும் கண்டுக்காமல் இருக்கமாட்டான். அதிலும் தொழிலாளிகள் வி~யம் என்றால் உரத்தே குரல் எழுப்புவான். இவனைப்பற்றி வேறு மாதிரியான கதை ஊரில் இருந்தாலும் ஊர் வி~யங்களில் இவன் கொள்ளுகின்ற அபிப்பிராயங்கள் பற்றி சனங் களுக்கு மதிப்பு இருந்தது.
'டேய் சவிரி, அங்க கவனியடா, வளவில் ஒரே சனக்கூட்டமா இருக்குது. ஊரில் ஏதாவது நடந்து போச்சுதோ...."
தோணியின் நடுத்தளத்திலிருந்து மீன்களைத் தெரிந்து பறிக்குள் போட்டுக் கொண்டிருந்த சவிரியும், சைமன் சுட்டிக்காட்டிய பக்கம் தலையை நிமிர்த்திப் பார்த்தான்.
'ஓம் அண்ண, ஏதோ நடந்துதான் போச்சுது போல இருக்கு. நேற்று இவன் பொன்ராசாதான் தண்ணியைப் போட்டுவிட்டு மச்சினனோட கொழுவிக் கொண்டு நின்றான்."
'நான் நினைக்கயில அப்படி யிருக்குமெண்டு. கூட்டத்தைப் பார்த்தால் வி~யம் வேறபோல கிடக்கு. கொஞ்சம் கரையைத் தள்ளிப் பார்த்துப் போட்டுப் போவம்."
சைமன் தாங்கிக் கொண்டிருந்த மரக்கோலை தோணியின் இடப்புறம் போட்டு வேகத்தைக் கட்டுப்படுத்தினான்.
சவிரி காக்கைத்தீவுச் சந்தையைப் பார்த்தான். பொழுது நல்லா ஏறிவிட்டது. கூட்டம் கலைந்து கொண்டிருந்தது.
'அண்ண, சந்த கலையுது. நேரஞ் செண்டா அவளவை நாறல் மீனைக்கேக்கிற விலைக்கு கேப்பாளவயள்".
சைமன் மீண்டும் மரக்கோலை வலப்புறம் போட்டுக் கரையை நோக்கித் திருப்பினான்.
'சவிரி வலை இழுக்கயுக்கேயே வெள்ளப்பா போயிற்று. இண்டைக்கு நம்மட சந்தையில விப்பம். மீனும் அவ்வளவு இல்லத்தானே...."
சவிரி மீண்டும் மீன்களைப் பொறுக்கு வதில் மௌனமாகி விட்டான். சைமன் கரையை நோக்கி வேகமாகத் தோணியைத் தாங்கினான். தோணி நீரைப் பிளந்து கொண்டு சீறிப்பாய்ந்து கரையை அடைந்தது.
'சவிரி, தோணியைக் கட்டிப்போட்டு மீன்களைச் சந்தைக்கு கொண்டுபோ. நான் என்னெண்டு கேட்டுப்போட்டு வாறன்".
சைமன் தோணியிலிருந்து மெதுவாக இறங்கினான். தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து கடல் உவர்ப்பில் காய்ந்து போயிருந்த 'சொறசொற"த்த முகத்தையும், மீன் செதில்கள் ஒட்டிக்கிடந்த உடலையும் துடைத்துவிட்டு, இடுப்பில் கட்டியிருந்த கச்சையை அவிழ்த்துப் போட்டுவிட்டு துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டான்.
வளவில் நின்று முகம் சிவந்துபோக உதடுகள் துடிக்க முகத்தில் விழுந்து புரண்டு கொண்டிருந்த செம்பட்டையான சுருட்டை மயிர்களை ஒரு கையால் ஒதுக்கியபடி மறு கையை அடிக்கடி உயர்த்தியபடி நியாயம் கதைத்துக் கொண்டிருந்தான் மரியதாசன். மண் மேட்டிலேறி வளவை நோக்கி வந்து கொண்டிருந்த சைமனும் இவனைக் கண்டு கொண்டான்.
கூடி நின்றவர்கள் எல்லோர் பார்வையும் வளவைத் தேடி வந்து கொண்டிருந்த சைமன் பக்கம் திரும்பியது.
'என்னடாப்பா, ஏன் இப்படி விடியக்கு முன்னமே கூட்டம் கூடி கத்திக் கொண்டு நிக்கறீங்க,"
சற்று எரிச்சலுடன் வெளிவந்த சைமனின் வார்த்தைகளைக் கேட்டதும் நடந்துபோன சம்பவத்தை இன்னும் அவன் அறியவில்லையென்பதைக் கூடி நின்றவர்கள் ஊகித்துக் கொண்டார்கள்.
'என்னண்ணை, உங்களுக்கு வி~யம் தெரியாதா? நம்மட சூசைக்கிழவனுக்கு அவன் யோணும் அவன்ர ஆக்களும் அடிச்சு மண்டையை உடைச்சுப் போட்டாங்க. மனுசனுக்கு இழுக்குது." சைமன் இதைக் கேட்டதும் சற்று நேரம் மௌனமாக நின்றான்.
'ஏன் கிழவனுக்கு அடிச்சவங்க....?"
'கிழவன் விடுவலைக்கு வாறன் எண்டுபோட்டு யோணட்ட ஆயிரம் ரூபா முற்காசு வேண்டினவராம். சுகமில்லாமல் திருக்க முள்ளு அடிச்சுக் கிடந்ததினால் இனிமேல் தொழிலுக்கு வர ஏலாதெண்டு சொல்லிப் போட்டாராம் கிழவன். காசை உடன வைக்கச் சொல்லித்தான் இந்தச் சண்டித்தனம்". மரியதாசன் உணர்ச்சி வசப்பட்டவனாக மீண்டும் உரத்துக் கத்தினான்.
'சம்மாட்டிமாரட்ட முற்காசு வாங்கிப் போட்டு தொழிலுக்கு வாறன் எண்டு சம்மதிச்சுப் போட்டா தொழிலுக்கு போகவேணும். இல்லாட்டியா அவங்கட காசு திருப்பிக் கொடுக்கவேணும். இதுதானே ஊர் வழக்கம். யோணும் பலமுறை காசக் கேட்டுப்பார்த்தார். குடுக்காமல் கிழவனும் வெறியில் அவங்களைப் பேசிப்போட்டார்".
யோணின் விடுவலையில் மன்றாடியாக தொழில் நடத்திச் செல்லும் சற்று வயதான சந்தியோ மீண்டும் சம்மாட்டியின் பக்கம் பரிந்து பேசியதைக் கண்ட மரியதாசனும் அவனோடு கூட நின்ற யேசுராசனும் கொதித்தனர். அவர்களும் யோண் வலையில் தொழிலுக்குப் போகிறவர்களாக இருப்பினும் யோணும் அவனுடைய ஆட்களும் செய்தது அநீதி என்பது அவர்களுடைய திடமான நம்பிக்கை.
'சந்தியோ அண்ணைக்கு சம்மாட்டி மாரட்ட நக்கிற புத்தி இன்னும் போகயில்ல." மரியதாசன் திடீரென வீசியெறிந்த சுடு சொல்லை எதிர்பாராத சந்தியோ அதிர்ந்து போனார்.
'தம்பி மரியாதையாகப் பேசும், இல்லாட்டி...."
'இல்லாட்டி.... என்ன செய்து போடு வீங்க." மரியதாசன் மு~;டியை உயர்த்திக் கொண்டு சந்தியோவை நோக்கி நெருங்கினான். இவ்வளவு நேரமும் அமைதியாக அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு நின்ற சைமன் நடந்துபோனவற்றை ஒருவாறு ஊகித்துக் கொண்டாலும் விவாதம் இப்போது வேறு திசையில் திரும்புவதைக் கண்டதும் நிலைமையைச் சமாளிக்க நினைத்தான்.
'இஞ்ச பாருங்க, நீங்ளேன் உங்களுக்குள்ள சண்டை பிடிக்கிறீங்க. பின்னேரம் சனங்களைக் கூப்பிடுவம். சம்பந்தப் பட்டவர்களையும் கூப்பிடுவம். அதுக்குப் பிறகு பாப்பம். இப்ப எல்லோரும் பேசாமப் போங்க".
கூடி நின்ற எல்லோரும் முணுமுணுத்த படி மெல்ல மெல்ல அவ்விடத்தை விட்டு நகரத் தொடங்கினர்.
மரியதாசனும் யேசுராசனும் மாத்திரம் உரத்துப் பேசிச் செல்வது சைமனின் காதுகளுக்குக் கேட்டது. 'சம்மாட்டிமாற்றை கொழுப்பை இதோட அடக்க வேணும்."
'சைமனின் இதயத்திலும் இனம் தெரியாத துடிப்பு. பல தலைமுறையாக ஏதோ ஓர் அடிமை முறையில் இவர்கள் நடத்தப்பட்டு வரும் முறைபற்றி இவனுக்கு நீண்ட நாட்களாக மனதில் ஒரு உறுத்தல் இருந்து வந்தது. ஆயினும் சரியான சந்தர்ப்ப சூழ்நிலை உருப்பெறாமல் தள்ளிப்போய் கொண்டிருந்த காரணத்தினால் அவனுடைய எண்ணங்களை வெளிக் கொணர முடியாமல் இருந்தது. தொழிலாளர்களின் உணர்ச்சிகளை தற்காலிகமாகவேனும் செம்மைப்படுத்த இப்பொழுது அதற்குச் சரியான நேரம் வந்துவிட்டதாக அவன் உள்மனம் உணர்த்தியது. நீண்ட நேரமாக கலகலத்துக் கிடந்த அந்த வளவு இப்போது வெறிச் சோடிக்கிடந்தது. சைமன் சிந்தனை வசப் பட்டவனாக வளவைத் தாண்டி மண் ஒழுங்கையில் இறங்கி வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தான்.
ஊர்க்கூட்டம் தொடங்க சரியாக நாலு மணிக்கு மேலாகிவிட்டது. ஊரில் உள்ள சம்மாட்டிமாரில் சிறில் ஏதோ வேலை காரணமாக கரையூர் சென்றதனால் அவரைத் தவிர எல்லோரும் கூடியிருந்தனர். கூட்டம் கூடி பத்து நிமிடங்கள் கழியத்தான் தனது சதை பருத்த தேகத்தையும் தூக்க முடியாமல் நசினல் சட்டைக் குள்ளே இரட்டை வடம் பவுண் சங்கிலி சகிதம் சம்மாட்டித் தனத்தின் செருக்கும், திமிரும் முகத்தில் பிரதிபலிக்க அரக்கி அரக்கி வந்து பின்வாங்கில் குந்திக் கொண்டார் யோண் சம்மாட்டி. தலைமை வகித்த பெரியார் சுருக்கமாக பிரச்சினைகளை எடுத்துக் கூறினார். கூட்டம் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. மரியதாசன் எழுந்தான்.
'சம்மட்டியார் யோணும் அவங்கட ஆக்களும் செய்த செயல் மிகப்பிழை. கிழவனட்டை மன்னிப்புப் கேக்க வேணும்."
'பிழையெண்டால் நியாயம் காட்ட வேணும்."
சவிரிமுத்துச் சம்மாட்டி குறுக்கே குரல் கொடுத்தார். 'பணம் கொடுக்குமதியாக இருந்தால் மரியாதையாகக் கேட்டு வாங்க வேண்டியது தான். அதற்காகத் தொழிலாளிகளை அடிமை களாக நினைத்துக் கண்டபடி பேசுவதும் அடிப்பதும் எங்களால் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது."
'தொழிலுக்கு வாறன் எண்டு கடன் பட்டால் தொழிலுக்கு வரவேண்டியதுதான் கடமை. இல்லாட்டி காசைத் திருப்பித் தர வேண்டியதுதான்."
'அதுக்காக இருபது வரு~த்துக்கு மேலாக வெயிலெண்டும் குளிரெண்டும் பாராமல்,
உங்களுக்கு உழைத்துத் தந்த மனுசன் என்றும் பாராமல், கை நீட்டி அடிக்கிறதா? எங்கட உழைப்பிலை தானே நீங்க வீடும் வாசலுமாக இருக்கிறீங்க. அதுக்கென்ன அந்த ஆயிரத்தையும் அவங்களுக்கே விட்டால்...."
யேசுராசன் எழுந்து நின்று குரல் கொடுத்தான்.
'நாங்க இவ்வளவு பணம் பொட்டு தொழில் நடத்துறம். அவங்களுக்கு பங்குக்காசு கொடுக்கிறம்.... இதைவிட என்னத்தை அவங்க உழைச்சுத் தந்திட்டாங்க. சாமத்திய வீடெண்டாலும்....செத்த வீடெண்டாலும் எங்கட்டத்தானே ஓடி வருவினம். ஐஞ்சோ பத்தோ கொடுத்து நாங்க தானே உதவி செய்யிறம்".
யோணின் பேச்சு தலைமை வகித்துக் கொண்டிருந்த பெரியவருக்கும் கோபத்தையும், எரிச்சலையும் கொடுத்தது.
சைமன் எழுந்தான்.
'சம்மட்டியார் ஏதோ தொழிலாளர்களுக்கு அள்ளிக் கொடுப்பதாகக் கூறினார். அவர் இறால் போட்டு சுறாப்பிடிக்கும் கெட்டித்தனம் எங்களுக்கு இப்ப விளங்காது என்ற எண்ணம் போல கிடக்கு. ஒரு வருசத்தில கமிசனுக்கு எண்டு ஒரு தொழிலாளியிட்ட ஆயிரம் ரூபாவுக்கு மேல் கழிக்கிறீங்க. ஆனால் அவங்களுக்குக் கொடுக்கிறது என்ன இருநூறு, முந்நூறு.,ஒரு சாராயப் போத்தல். உழைக்கிறதில தோணிக்கு, வலைக்கு என்று எவ்வளவத்தை தள்ளி நீங்க எடுத்துக் கொள்ளுறீங்க. இதெல்லாம் எங்களுக்கு விளங்காததல்ல."
எல்லோரும் சைமன் பேசியதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தனர். சிலர் சம்மாட்டிமாரைத் ரகசியமாகக் கிண்டல் செய்யத் தொடங்கினர்.
மரியதாசன் மீண்டும் எழுந்தான். 'நாங்க இனி மேல் இவங்கட தொழிலுக்கு போவதாக இருந்தால் எங்களுடைய பங்குப் பணத்தைக் கூட்டித்தரவேணும். 'கமிசன்' பணம் சரியாகக் கணக்குப் பாக்க வேணும். சூசைக்கிழவனிடம் மன்னிப்புக் கேக்க வேணும். இல்லாவிட்டால் கடலில வலை இறங்காது."
சம்மாட்டிமாரிடையே முணுமுணுப்பு ஏற்பட்டது. யோண் எழுந்தார். எல்லோரையும் நன்றாகப் பார்த்தார். கனத்த குரலை ஒருமுறை செருமிவிட்டுக் கொண்டார். 'இஞ்ச நாங்க ஒண்டும் பயந்தாக்களல்ல. எங்களை யாராலும் வெருட்டேலாது. உங்கட உழைப்பு வந்துதான்
சாப்பிடப் பொறமா? எத்தனை நாளைக்கு சுருண்டு கிடக்கப் போறீங்க? பற நாய்கள் எங்கட காலிலதான் வந்து விழுவிங்க....அப்ப பாப்பம்." யோண் கூறிவிட்டு கூட்டத்தைவிட்டு விறுவிறு என்று வெளியேறினார். அதைத் தொடர்ந்து எல்லாச் சம்மாட்டிமாரும் வெளியேறினர்.
கூட்டம் அல்லோலகல்லோலப் பட்டது. யோணின் திமிரான வார்த்தைகள் கூடியிருந்து கேட்டுக் கொண்டு இருந்தவர் களுக்கு சினத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
தலைவர் எல்லோரையும் சமாதானப் படுத்தினார். மீண்டும் கூட்டம் ஒழுங்குக்கு வர நிமிடங்கள் சென்றன.
'சைமன் அண்ணே....சைமன் அண்ணே...."
விறாந்தையில் விரித்துப்போட்டு நண்டு சப்பியும் நைந்தும் போனதால் விரிசல் கண்டுவிட்ட பழைய வலைகளை அரிக்கன் இலாம்பின் மங்கிய வெளிச்சத்தில் வைத்து வெட்டி வெகு லாவகமாக பொத்திக் கொண்டிருந்த சைமன் நிமிர்ந்து பார்த்தான். படலைக்கு மேல் பல தலைகள் nதிந்தன. இருட்டில உழைப்பு வந்துதான் சாப்பிடப் போறமா? எத்தனை நாளைக்கு சுருண்டு கிடக்கப் போறீங்க? தெரு நாய்கள் எங்கட காலிலதான் வந்து விழுவிங்க....அப்ப பாப்பம்." யோண் கூறிவிட்டு கூட்டத்தைவிட்டு விறுவிறு என்று வெளியேறினார். அதைத் தொடர்ந்து எல்லாச் சம்மாட்டிமாரும் வெளியேறினர்.
கூட்டம் அல்லோலகல்லோலப் பட்டது. யோணின் திமிரான வார்த்தைகள் கூடியிருந்து கேட்டுக் கொண்டு இருந்தவர்களுக்கு சினத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
தலைவர் எல்லோரையும் சமாதானப் படுத்தினார். மீண்டும் கூட்டம் ஒழுங்குக்கு வர நிமிடங்கள் சென்றன.
'சைமன் அண்ணே....சைமன் அண்ணே...."
விறாந்தையில் விரித்துப்போட்டு நண்டு சப்பியும் நைந்தும் போனதால் விரிசல் கண்டுவிட்ட பழைய வலைகளை அரிக்கன் இலாம்பின் மங்கிய வெளிச்சத்தில் வைத்து வெட்டி வெகு லாவகமாக பொத்திக் கொண்டிருந்த சைமன் நிமிர்ந்து பார்த்தான். படலைக்கு மேல் பல தலைகள் தெரிந்தன. இருட்டில ஒன்றும் தெளிவாகத் தெரியாவிட்டாலும், அது மரியதாசின் கனத்த குரல் என்பதை ஊகித்துக் கொண்டான்.
இவ்வளவு நேரமும் படலையடியில் சுருண்டு படுத்துக் கிடந்த சைமனின் 'கறுவல்' பலமாகக் குரைத்தது.
'ஆர் மரியதாசா? ஏன் வாசலில் நிக்கிறீங்க. படலையைத் திறந்து கொண்டு உள்ள வாங்களன். நாய் ஒண்டும் செய்யாது".
சைமன் லாம்பை எடுத்து முற்றத்தில் வெளிச்சம் விழக்கூடியதாக தூக்கிப் பிடித்தான்.
யேசுராசா, மரியதாசன், சவிரி, செபமாலை, சூசை முத்து, தெற்குத் தெரு பர்னாந்து நிரைத்து வந்து சைமனைச் சூழ ஆசுவாசத்துடன் குந்திக் கொண்டார்கள்.
சைமன் மீண்டும் மடவலைப் பகுதியை கால்களின் பெருவிரல்களுக்குள் மாட்டிப் பொறுக்கப் பிடித்துக் கொண்டு வேகமாகக் கிழிசல்களைக் பொத்திக் கொண்டே அடுக்களைக்குள் இருந்த மனைவிக்குக் குரல் கொடுத்தான்.
'இஞ்ச.... பிலோமினா, வந்திருக்கிறவங்களுக்கு தேத்தண்ணி போட்டுக் கொண்டு வா. குறை நினைக் காதீங்கடாப்பா, கூப்பன் சீனி எப்பவோ முடிஞ்சு போச்சுது. சக்கரைதான்...."

'உங்கட வீட்டில மாத்திரமில்ல அண்ண, எல்லாற்ற வீட்டிலயும் இந்த நிலைதான். காசு கொடுத்து வெளியில சீனி வாங்க ஆரட்ட காசு இருக்கு".
மரியதாசன் இருண்டு கிடந்த முற்றத்தைப் பார்த்துக் கொண்டே பதில் சொன்னான். மரியதாசன் முகத்தில் தெம்பு இல்லை. கூட வந்திருந்த எல்லோர் முகத்திலும் ஏதோ ஓர்வித சோர்வுக்களை அப்பிக் கொண்டிருந்ததைச் சைமன் அவதானித்து விட்டான்.

'என்னடாப்பா ஒரு மாதிரியாக இருக்கிறிங்க.... ஏதாவது விசே~ம் உண்டா?"
சைமன் கேள்வியைக் கேட்டதும் யேசுராசனும் மரியதாசனும் ஒருவரையொருவர் பார்த்தனர்.
'என்ன நடந்தது என்று சொல்லுங்க. ஆராவது சம்மாட்டிமாற்ற தொழிலில ஏறிவிட்டாங்களா....?"
சைமன் வார்த்தைகளில் சூடு ஏறியது.
'நாளைக்கு எல்லா சம்மாட்டிமாற்ற விடுவலைகளும் கடலில இறங்கப் போகுதுகள் போல இருக்கு. சம்மாட்டிமார் தொழிலாளிகளை விலைக்கு வாங்கிப் போடு வாங்க போல இருக்கு".
சைமன் அதிர்ச்சியுடன் மரியதாசனைப் பார்த்தான். மரியதாசன் நிதானமாகப் பதில் சொன்னான்.
'சாமிநாதர் விடுவலைக்குப் போறதுக்கு சம்மதிச்சுப் போட்டார்".
'ஏன்?"
'விடுவலைகள் நின்று போனதால் தொழிலாளிகள் எல்லாம் படுப்பு வலைக்கும் களங்கட்டி வலைக்கும் தூண்டலுக்குமாக போய்விட்டார்கள். ஆனால் பாவம் சாமிநாதன் மூன்று நாளாக தொழிலுக்குப் போகயில்ல. போறதுக்கு வேறு தொழிலும் கிடைக்கயில்ல. வீட்டில பட்டினி பொறுக்க முடியாமல் யோண் சம்மாட்டியிட்ட போய் கடன் கேட்டிருக்கிறார். அவன் விடுவலைக்கு வந்தால் கடன் தாரன் என்று சொல்லியிருக்கிறான். சாமிநாதரும் சம்மதிச்சுப் போட்டார்".
சைமனின் முகம் சுருங்கிக் கறுத்துவிட்டது. இப்படி ஒரு நிலையை இவன் எதிர்பார்க்கவில்லை. பல தலைமுறையாக இருந்துவரும் இந்தவித அடிமைப் போக்குகளை தகர்த்தெறிவது என்பது இலகுவான காரியம் இல்லை என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டான். சைமன் சற்று நேரம் அமைதியாக இருந்தான்.
'அண்ணே, சம்மட்டிமார் நாளைக்காலம விடுவலைகளை எப்படியும் கடலில இறக்கிப் போட வேணும் எண்டு இன்னும் ஆக்களைப் பிடிக்கிறதுக்கு வலைபோட்டுத் திரியிறாங்க. இப்டியே விட்டுவிட்டால் சாமிநாதர் போல ஒவ்வொருத்தராகப் போய்ச் சோந்துவிடுவாங்க".
குசினிக்குள் இருந்த பிலோமினா தேநீர்க் கோப்பைகளையும், சக்கரைக் குறுகல்களையும் கொண்டுவந்து கூடியிருந்தவர்கள் முன் வைத்து விட்டு கதை கேட்கும் ஆவலில் அறைக்கதவு அருகே போய் சாய்ந்தபடி நின்று கொண்டாள்.
தேநீர் உறிஞ்சப்பட்டு கோப்பைகள் வெறுமையாகிக் கொண்டிருந்தன. சைமனின் சிந்தனையில் பல சம்பவங்கள் திரண்டு வந்தன. 'எத்தனை நாளைக்கு இப்படிச் சுருண்டு கிடப்பீங்க? தெரு நாய்கள், எங்கட காலில தான் வந்து விழுவீங்க". யோணின் பேச்சு இவன் நினைவில் வந்து மோதியது. உடல் ஒரு கணம் சிலிர்த்து அடங்கியது. பொத்திக் கொண்டுடிருந்த வலைகளையும் அப்படியே விட்டுவிட்டு விறுக்கென்று எழுந்தான். காது மடிப்புக்குள் செருகி வைத்திருந்த புகையிலைத் துண்டை எடுத்துச் சப்பிக் கொண்டே கனத்த குரலில் பேசினான்.
'இவங்கட வலைகள் கடலில இறங்கிற கெட்டித் தனத்தைப் பார்ப்பம். மரியதாஸ்! நீ சவிரியையும், யோசேப்புவையும் கூட்டிக் கொண்டு சாமத்தில தெற்குத் தெருவுக்குப் போ. யேசுராசா! நீ சூசைமுத்து, செபமாலையோட கோயில் ஒழுங்கையைக் கவனி. நான் பெர்ணாந்தையும் சிலுவைதாசனையும் கூட்டிக் கொண்டு நடுத்தெருவுக்குப் போறன். ஆர் ஆக்கள் வெள்ளாப்பில வந்து தொழிலாளிகள அரட்டிறாங்க எண்டு பார்ப்பம்".
'ஓம் அண்ணே! அதுதான் சரி".
மரியதாசன் பதில் சூடாக வெளிவந்தது. எல்லோரும் எழுந்து கொண்டனர். சைமன் வளையில் சொருகியிருந்த துண்டை எடுத்துக் தோளில் போட்டுக் கொண்டே படலையைத் தேடி நடந்தான்.
பிலோமினா பயத்துடன் படலையைப் பார்த்தாள். முற்றத்தில் கிடந்த கறுவல் மறுபடியும் குரைத்தது. அவர்கள் படலையைத் திறந்து வெளியேறி இருளுக்குள் மறைந்தனர். தெருநாய்கள் ஆக்ரோசத்துடன் குரைத்தன.
வெகுதூரத்துக்கு அப்பாலும் அவர்களது அழுத்தமான காலடி ஓசை கேட்டுக் கொண்டிருந்தன.

Sunday, April 02, 2006

உயிர் தொலைத்தல்

-நாவாந்துறைடானியல்ஜீவா

வெண்பனித் துகள்கள்
வந்திறங்கும் இரவில்
நம் காதல்
காத்திருக்க காலமற்று
கரைந்து போனது....
வெட்டித் தெறித்த
மின்னலைக் கோடுகளாய்
உன் நினைவு மட்டும்....
முறிந்த இடம்
இன்னும்
மூடுபனி போல்....
தொலைந்தலுக்கான
காரணம்....
இன்று வரை
தொடுவானம் போல்
நீ கழட்டிய
காதல் காயும் முன்னரே
இன்னொரு விழிக்குள்....
துடுப்பே ,இல்லாதவனுக்கு
இனி எதற்கு தோணி....?
நம் நேசம்
ஏன் கண் மூடிக் கொண்டது....?
என் விசும்பலில்
ஒரு வினாமட்டும்
அடிக்கடி வந்து போகுது
ஏழை....
உனக்கேன் காதல்....!
உனக்காக....
என் தேடல்
நேற்று வரை
நிலைத்திருந்தது....
இன்று
என் உடல் ஓய்வெடுக்க
முன்னிரவில் உன் முகம்
ஏனோ நினைவுக்குள்....
உன் மெல்லியகுரல்
காதில் விழும்
நேரமல்லவா...
அதனால்தான்
காய்ந்து போன பி£¤வுக்குள்
ஈரம் வந்து ஒட்டிக்கொண்டது.
நீ நிலவாக
குளிர் வாயென்றுதான்
நினைத்திருந்தேன்
அது என் தவறுதான்
அதற்காக இந்த மண்ணுக்கேயு£¤ய
குளிரைப்போல் ,ருக்கலாம...?
நான் தேவனுமில்ல
நீ மோ¤யுமில்ல
ஆனால்....!
என்னுள் நீ
வேர் கொண்டது
வெறும் பேச்சல்ல
அது முடிவிலியான
ஒரு நினைவு...

Sunday, December 04, 2005

பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன...

நாவாந்துறைடானியல் அன்ரனி
மதியம் கடந்து விட்டது. அப்படியிருந்தும் வெயில் தணியவில்லை. சவிரிமுத்தர் ஓட்டமும் நடையுமாக வந்து கொண்டிருந்தார். அவருடைய கையில் ஒன்று வழுக்கை விழுந்த தலையில் இருந்தது. முன்னோக்கிப் பெருத்திருந்த தொந்தி பெருஞ்சுமையாகக் கனக்க மூச்சு இரைக்க இரைக்க பிரதான ஒழுங்கையில் திரும்பினார். எதிரே ஜீப் வண்டியொன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. ஜீப்பைக் கண்டதும்

மரநிழலில் ஒதுங்கும் பாவனையில் கானோரத்தில் நின்ற பூவரச மரத்தடியில் நின்று கொண்டார்.

ஜீப் வண்டி அவரைக் கடந்து எதிர்த்திசையை நோக்கி வேகமாக விரைந்து கொண்டிருந்தது. கடந்து செல்லும் வேகத்திலும் கூட சவிரிமுத்தர் அவனைப் பார்த்து விட்டார்.

இரு பொலிஸ்காரர்களுக்கிடையில் பெருமாள் இருந்துகொண்டிருந்தான். அவனுடைய பெரிய கண்கள் சவிரிமுத்தரைக் கண்டு கொண்டதும் எதையோ அவசரத்துடன் கேட்க எத்தனிக்கும் வேளையில் வண்டி வெகுதூரம் சென்றுவிட்டது.

அவனுடைய கண்கள். அவை பார்த்த பார்வை. சவிரிமுத்தரின் மனதில் ஏதோ ஒரு உறுத்தல்.உடலில் ஒரு கணசிலிர்ப்பு. இனம்புரியாத இரைச்சல்கள். சோர்வுடன் நடந்தார்.

ஒழுங்கை நிறைய சனங்கள். படலை வாசல்களிலும் வேலிகளுக்கு மேலாலும் இன்னும் பலர். ஜீப் வண்டி சென்ற திசையை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். தங்களுக்குள் எதையோ பேசி விமர்சித்துக் கொண்டு அனுதாபப் பட்டுக்கொண்டிருந்தனர். எதையுமே கண்டுகொள்ளாதவராக சவிரிமுத்தர் நடந்து கொண்டே இருந்தார்.

வெய்யிலில் நடந்து வந்த களைப்பில் உடம்பு வேர்வையால் நனைந்திருந்தது.
அணிந்திருந்த மேற்சட்டையை களைந்து போட்டுவிட்டு சரு சருவென சடைத்து ரோமங்கள் வளர்ந்திருந்த வெறும் உடம்பை ஆசுவாசத்துடன் அங்கிருந்த ஈசிச்செயரில் சாய்த்துக் கொண்டார்.

கழுத்தில் இரட்டை வடம் சங்கிலி கனத்தது. விரல்களில் கற்கள் பதித்த மோதிரங்கள்.கருங்காலித் தடிக்கு ப10ண் போட்டது போல் மினுமினுத்துக் கொண்டிருந்தன.

ஆனாசி... ஆனாசி.... இவன் செல்லையா வந்தவனோ?

சவிரிமுத்து போட்ட சத்தத்தில் குசினிக்குள் இருந்தவள் வெளியே வந்தாள்.

ஏன் இப்பிடி சத்தம் போடுறீங்க. இப்பதான் அவன் கொண்டுவந்து வச்சிற்றுப் போறான். சாருக்குள்ளதான் இருக்கு...

அதை எடுத்துக் கொண்டு வா....

ஆனாசி விசுக்கென்று சாருக்குள் சென்றாள். வரும்போது அவள் கையில் இருந்த போத்தல்களில் கள் நிரம்பியிருந்தது. சவிரிமுத்தரின் காலடியில் வைத்துவிட்டு இவள் மறுபடியும் குசினிக்குள் போய்விட்டாள்.

சவிரிமுத்தர் கோப்பையில் சிறிது கள்ளை வார்த்து பக்கத்தில் வைத்துவிட்டு புகையிலையைக் கிழித்து சுருட்டத் தொடங்கினார். அவருடைய சிந்தனை எதிலோலயித்திருந்தது.

என்னங்க ஒரு விஷயம் கேள்விப் பட்டீங்களோ. நம்மளோட தொழிலுக்கு நிண்ட பெருமாளையல்லோ பொலிஸ்காரங்கள் பிடித்துக்கொண்டு போறாங்க. குசினிக்குள் இருந்து ஆனாசியின் சத்தம் கேட்டது.


நானும் வழியில பார்த்துக் கொண்டுதான் வாறன். என்ன நடந்ததாம்.... சவிரிமுத்தர் உணர்ச்சியின்றிப் பேசினார்.

அவன் கள்ளத் தோணியெண்டு யாரோ பொலிசுக்கு பெட்டிசம் போட்டிட்டாங்களாம். அதுதான் அவனை

வந்து இழுத்துக் கொண்டு போறாங்கள். ஏனெண அவன இனிமேல் விடமாட்டாங்களா....

ஆனாசி வெளியே வந்து சவிரிமுத்தருக்குப் பக்கத்தில் நின்று கொண்டாள். சவிரிமுத்தர் மனைவியை ஒரு தடவை நிமிர்ந்து பார்த்தார். மௌனமாக கோப்பையிலிருந்த கள்ளை எடுத்து ஒருதடவை உறிஞ்சினார். அந்த மூச்சிலே கோப்பை முழுவதும் காலியாகி விட்டது.

ஆனாசிக்கு அதிசயமாக இருந்தது. இவ்வளவு பெரிய செய்தியைச் சொல்லியும் புருஷன் அக்கறைப் படுத்துவதாக தெரியவில்லை.

ஏனெண உங்களுக்கு பொலிசில இருக்கிற பெரியவங்களத் தெரியுந்தானே. ஓருக்காய்ப் போய் என்னெண்டுதான் பாத்திட்டு வாங்கோவன்....

சவிரிமுத்தர் மறுபடியும் கள்ளை வார்த்து ஒரு முறடை உறிஞ்சி விட்டு கள்ளில் தோய்த்து விட்ட பெரிய மீசையை தடவி விட்டுக் கொண்டார்.

பேச்சி இதுகள் ஒண்டும் உனக்கு விளங்காது. என்னமாதிரித்தான் தெரிஞ்சவங்களெண்டாலும் லேசில இந்தமாதிரி விசயங்களை விடமாட்டாங்கள்.

ஆனாசி அதற்கு மேல் எதுவும் பேசாமல் போய்விட்டாள். சவிரிமுத்தர் சுற்றிவைத்திருந்த சுருட்டை எடுத்து பற்ற வைத்துக் கொண்டே சிந்தனையில் ஆழ்ந்தார். ஆனாசி கேட்டதற்காக ஏதோ சொல்லி வைத்தார். ஆனால் அவருடைய மனதில் பெருமாளின் விடயம் உறுத்திக் கொண்டிருந்தது. கண்களை மூடிக்கொண்டார்.

சவிரிமுத்தருக்கு நன்றாக நினைவிருந்தது. பத்து வருடங்களுக்கு முன் ஒரு வெள்ளிக்கிழமையாய் இருக்கவேண்டும்.... தோணிக்காசுக்கு கொழும்புத்துறைக்குப் போவதற்காக யாழ்ப்பாண பஸ் ஸ்டாண்டில் நின்றுகொண்டிருந்தார். அப்பொழுதுதான் பெருமாளை சந்தித்தார்.

அவனுக்கு அப்போது பத்து வயதிருக்கும். கறுத்த மேனி. ஊதி மினுமினுப்புடன் இருந்த வயிறு. சிக்குப் பிடிக்காத தலைமயிர். காவி படிந்து முன்னோக்கி மிதந்து கொண்டிருந்த பற்கள். பெரிய கண்கள். பீத்தல் விழுந்த துண்டை இடுப்பில் சுற்றிக் கொண்டு பஸ் கிய10வில் நின்றவர்களிடம் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அவனைக்கண்டதும் சவிரிமுத்துக்கு ஆனாசியின் நினைவு வந்தது. வெகுநாட்களாகவே வீட்டு வேலைக்கு ஒருவர் வேண்டுமென்று நச்சரித்துக் கொண்டிருந்தாள். இவருடைய வலைக்கும் ஆள் பற்றாக்குறையாக இருந்தது.

~தம்பி.... இஞ்சால உன்னத்தான். இஞ்ச வா....

பெருமாள் திரும்பிப் பார்த்தான். அவன் முகத்தில் என்ன வென்று விரித்துரைக்க முடியாத பாவம். அவன் சவிரிமுத்தர் அருகே வந்தான்.

~தம்பி உன்ரை பேரென்ன...

~பெருமாளுங்க...

~எந்த ஊர் மோன உனக்கு

~பதுளையிங்க...

~அப்ப வாச்சுப் போச்சு என்று

மனதிற்குள் நினைத்தபடி சவிரிமுத்தர் தொடர்ந்தார்.

~அப்பா.... அம்மா.... இல்லையோ?

~அப்பா.... செத்துப் போட்டாரு. அம்மா தங்கச்சி தோட்டத்திலே வேலை செங்சிக்கிட்டு இருக்கிறாங்க..

~ஏன் உனக்குத் தோட்டத்திலே வேலை செய்யப் பிடிக்கேல்லையா?

~என்னோட வீட்டுக்கு வாறியா...? உனக்கு சாப்பாடு தந்து உன்ர வீட்டுக்கும் காசு அனுப்பிறன்

- தயக்கம்.

~ம்... சொல்லன்

சரியிங்க....

அவன் சம்மதித்து விட்டான்.

பெருமாள் வீட்டுக்கு வந்த போது சம்மாட்டி சவிரிமுத்து சாதாரண சவிரிமுத்துவாகத்தான் இருந்தார். பெருமாள் வீட்டில் எடுபிடி வேலைகளைக் கவனித்ததுடன் வலையில் பிடித்து விற்றதுபோக ஐஸ் போட்டு வைத்தல் போன்ற வேலைகளையும் கூட இருந்து செய்வான்.

அந்தத் தெருப்பிள்ளைகள் எல்லாரும் அவனுக்குச் சினேகிதர். அவனுடைய வயதுக்கு மூத்த அனுபவ அறிவும், அதனால் அவன் பேசும் பெரிய விசயங்களையும் ஆச்சரியத்துடன் கேட்பார்கள், கூட விளையாடும் சிறுவர்கள். எப்போதாவது அவர்களுக்குள் சண்டை மூழும். அவனைப் பார்த்து ~கள்ளத்தோணி என்று பட்டம் சொல்லுவார்கள். ஆனால் அவன் அந்த வார்த்தையின் அர்த்தத்தைப்புரிந்து கொள்ளாதவன் போல உண்மையில் அவனுக்குப் புரியாமல் கூட இருக்கலாம்.- பேசாமல் இருப்பான். ஆனால் ~கரிக்கோச்சி என்று மட்டும் அவனை யாரும் பேசி விட்டால் போதும் கோபம் தலைக்கேற, மூர்க்கத்துடன் - சொன்னவனை வளைத்துப் பிடித்து முதுகில் ஒரு அறை கொடுக்காமல் அடங்கமாட்டான். பற்களை ~நறநற வெனக் கடித்துக் கொண்டு பெரிய விழிகளைப் பயங்கரமாக உருட்டுவான். வாயில் வந்த து}சண வார்த்தைகளை எல்லாம் கொட்டிக்கொள்வான். சிலவேளைகளில் துண்டு பீடிகளைப் பொறுக்கி வீட்டுக் கொல்லைப் புறத்தில் நின்று குடிப்பதைச் சவிரிமுத்தர் கண்டிருந்தாலும் எதுவும் சொல்லுவதில்லை. ஏதாவது ஏசினால் ஓடிப் போய்விடுவான் என்றபயம். அவருக்கு அவனது சுறுசுறுப்பும் பிடித்திருந்தது.

சிலநாட்களில் பெருமாள் சவிரிமுத்துவுடன் கடலுக்குப் போகத் தொடங்கி விட்டான். தோணியில் பெருமாள் கால் வைத்தவேளை ~விடுவலையில் கயல் மீன்அள்ளிச் சொரிந்தது. சில வருடங்களிலேயே சவிரிமுத்து பல லட்சம் பெறுமதியான தோணிகளுக்கும், நைலோன் வலைகளுக்கும் அதிபதியாகி ஊரில் பெரிய சம்மாட்டி ஆகிவிட்டார்.

மலைப்பாறையில் பிறந்து கடல் உவரில் ஊறிய பெருமாளின் உடல் உருண்டு திரண்டு தசைக்கோளங்கள் புடைத்து நிற்கும் பருவத்தை எட்டிவிட்டான் பெருமாள் அவன் உழைத்த பத்து வருடங்களிலும் வயிறு நிறையச் சாப்பாடு. ஒரு நாளைக்கு இரண்டு கட்டு பீடி, ஞாயிற்றுக் கிழமைகளில் சினிமா பார்க்கக் காசு ... இவைதான் அவன் உழைப்புக்குக் கிடைத்தவை.

பத்து வருடங்களாக தாய் சகோதரியை காணாமல் மறந்திருந்த பெருமாளுக்கு சில நாட்களுக்கு முன் திடீரென ஏனோ ஊருக்கு போக வேண்டுமென்று மனம் பேதலித்தது. வேட்கை கொண்ட மனதின் விருப்பத்தை சம்மாட்டியாரிடம் வெளியிட்டு, ஐநு}று ரூபா காசு கேட்டான். சுரண்டிப் பிழைத்து சொகுசு அனுபவித்துப் பழக்கப்பட்டுவிட்ட சவிரிமுத்துவுக்கு இது பேரிடியாகிவிட்டது. பெருமாள் செய்யும் வேலையின் பழு, அவனை இழந்தால்... அவன் திரும்பிவராவிட்டாலும்...? அதை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. இதனால் பல நாட்களாக கடத்தி வந்தார்.ஓவ்வொரு நாளும் பெருமாளின் ஊமை முணுமுணுப்பு இரைச்சலாகி வெடித்தது. ஒருநாள் ஊதியம் எதுவுமின்றியே வெளியேறிவிட்டான்.

அடுத்த நாள் சவரிமுத்துவின் பரம விரோதி பேதுருவின் நைலோன் வலையில் சேர்ந்து விட்டான் என்ற செய்தியை சவிரிமுத்து அறிந்தபோது அதிர்ந்தே போய் விட்டார்.

- அந்தப் பெருமாள் இப்பொழுது பொலிசில்.

~என்ன சம்மாட்டியார் கனக்க யோசிச்சுக் கொண்டிருக்கிறீங்க.

அப்பொழுதுதான் வாசல் படியைத் தாண்டி வந்து கொண்டிருந்த குத்தகைக்காரன் யோணின் இன்னொரு கோப்பைக்குள் ஊற்றி அதைக் குத்தகைக்காரனிடம் நீட்டினார். ... ....


~என்ன வி~யம் குத்தகை... இந்த மத்தியான நேரத்தில சவிரிமுத்து வினவினார்.

~ஒண்ணுமில்லை சம்மாட்டியார்... நேற்று சுவாமியார் கூப்பிட்டு இந்த முறை பெருநாள் நல்ல முறையில கொண்டாட வேணும் எண்டு சொன்னார்.

~ஓ... அதுக்கென்ன... சிறப்பாகச் செய்வம்....

சொல்லிக் கொண்டே சவிரிமுத்து கோப்பை முழுவதையும் காலி செய்துவிட்டு, மறுபடியும் கோப்பையை நிரப்பினார்.

குத்தகைக்காரர் மீண்டும் தொடர்ந்தார்.

~இந்த முறை வழமைபோல் கோயில் சோடினைகள், வெடி, மத்தாப்பு எல்லாம் உங்க பொறுப்பு.... குத்தகைக்காரர் இப்போது தானே போத்தலை எடுத்து நிரப்பிக்கொண்டார்.

~அதுக்கென்ன இந்தமுறை வாற ஒரு கிழமை உழைப்பை அப்படியே ஒதுக்கிவிடுறன்.

கோப்பையை நிரப்புவதும் வெறுமையாக்குவதுமாய் சில நிமிடங்கள். சவிரிமுத்துவுக்கு சற்று ஏறிவிட்டது. குத்தகைக்காரர் நிதானத்துடன் பேசினார்.

~ஒரு விஷயம் கேள்விப்பட்டியளோ... உங்களை விட்டுப்போட்டு பேதுருவட வலைக்குப்போன அவன் தான்... பெருமாள், அவனைக் கள்ளத்தோணியெண்டு பெட்டிசம் போட்டு பொலிசட்டைப் பிடிச்சுக் கொடுத்துப் போட்டாங்களாம் ஆரோ... ~ஓம் ஓம்... நானும் வழியில பாத்தன். பாவம் பெருமாள். நல்ல பெடியன். சவிரிமுத்து அரைமயக்கத்துடன் அனுதாப வார்த்தைகளைக் கொட்டினார்.

~அப்ப நான் வரப்போறன் சம்மாட்டி என்று கூறிக்கொண்டே குத்தகைக்காரர் எழுந்து மெதுவாக நடந்தார்.

சவிரிமுத்து ஒரு நமட்டுச் சிரிப்புடன் அண்ணாந்து பார்த்தார். பருந்துகள் எதையோ தேடிப்பறந்து கொண்டிருந்தன.
முற்றும்.

இழப்பு நாவாந்துறை டானியல் அன்ரனி



கருக்கலின் மென் இருட்டு. கனத்த மௌனத்தைக் கிழித்துக் கொண்டு காகக்கூட்டங்கள் கத்தின. தெரு நாய்கள் ஊளையிட்டன. எங்கேயோ பட்டமரப் பொந்திலிருந்து கிளிக்குஞ்சு ஒன்று எதையோ பார்த்துப் பயந்து கீச்சிட்டுக் கத்தியது.
சரசுவுக்கு விழிப்புக் கண்டது. கண்ணுக்குள் என்னவோ உருளுவது போல் கச....முசவென்று எ£¤ந்தது. தேகம் முழுவதும் அடித்துப் போட்ட சோர்வு. கிடுகு வா¤ச்சுக்களால் பகல் உள்ளே வந்தது.
“அதுக்குள்ள விடிஞ்சு போச்சா....” அவள் அலுத்துக் கொண்டாள். எப்போதும் அவளுக்கு அப்படித்தான், து£க்கத்திலிருந்து எழுந்து கொள்வதே பெரும் கவலைபோல, நேற்று அம்மன் கோயில் கடைசித் திருவிழா. ஸ்பீக்கரும் சினிமாப்பாட்டும் அந்த அயல் முழுவதும் கலகலத்துப் போயிருந்தது. இரவு வழமைபோல் குட்டித் தம்பியின் சங்கிலியன் கூத்து. திருவிழாவின் உச்சம். இரவு முழுவதும் வெற்றிலையைப் போட்டு அரைத்துக் கொண்டே கொட்டக் கொட்ட விழித்திருந்து பார்த்துவிட்டு சற்று நேரத்திற்கு முன்தான் தனது பா¤வாரங்களுடன் வந்து படுக்கையில் சா¤ந்திருந்தாள் சரசு.
குட்டித் தம்பியா¤ன் பாட்டு இப்பொழுதும் காற்றினில் கிணு....கிணுத்தது. முகம் கூட முன்னுக்கு வந்து கண்ணுக்குள் நின்றது. சரசுவுக்கு அப்படி ஒரு பி£¤யம் அவன் பாட்டில்.
அவள் எதையோ நினைத்தாள். எதற்காகவோ சி£¤த்தாள்.
“ஊ£¤ல் உள்ளவர்களெல்லாம் என்னமோ....என்னமோ.... எல்லாந்தான். வாயிலை வச்சுப் பேசுறாங்க. அது என்ன இழவோ.... அப்படி ஒரு பிரியம் எனக்கு....என்ர புருசனில் வச்சிருந்தமாதி£¤.”
பக்கத்திலே குழந்தை முலைக்காம்பைச் சப்பியபடி உறங்கிப்போயிருந்தது. அதன் கடைவாயைத் துடைத்துவிட்டு சட்டையை இழுத்துச் சா¤செய்து கொண்டே எழுந்தாள். குழந்தையின் மூத்திரத்தால் சேலை நனைந்திருந்தது. பிழிந்துவிட்டுக் கொண்டாள். கிழியல் இல்லாத பக்கமாக புரட்டிப் பார்த்து சீராக உடுத்துக் கொண்டாள். “எடி....பொன்னு....எழும்படி....நல்லா நேரம் போட்டுது....”
பொன்னுவை எழுப்பினாள். அவள் என்னென்னவோ முணுமுணுத்தாள். பக்கத்தில் கிடந்த சின்னவள் தலையை நிமிர்த்திப் பார்த்துவிட்டு மறுபக்கம் திரும்பி சா¤ந்து கொண்டாள். நாகராசா, சின்னராணி மூலைக்கு ஒருத்தராய் முறுகிப் போய்க் கிடந்தனர்.
“எடி, எழும்படியென்றால்.... அங்கால பார் எல்லோரும் அவதிப்பட்டு ஓடுகினம். எழும்பு புள்ள....”
“போண....நான் இண்டைக்குப் போகல.... உம்.... உம்....”
“ஏனடி புள்ள.. திங்கட்கிழமையும் அதுவுமா.... பிழைப்புக் கிடைக்கிற நாளில.... சுறுக்கா எழும்பி வெளிக்கிடு....”
“ஒரே அலுப்பா இருக்குதண. இராவுக்கும் ஒண்டும் தரேல்ல. எனக்குச் சா¤யாகப் பசிக்குது....”
பொன்னு அழுதுவிடுவாள் போலிருந்தது. சரசுவுக்கு நினைவு இருந்தது. மத்தியானம் பாண் வாங்கிக் கொடுத்தது. அதற்குப் பின் இரவு! இரவு என்ன? முடிச்சில் கூத்துச் செலவுக்கு என்றே பிடித்து வைத்திருந்த ஒரு ரூபாக்குத்தி. அது கடலை வாங்கிக் கொடுத்ததோடு சா¤. கூத்து ரசிப்பில் எல்லாவற்றையும் தான் மறந்து விட்டாள்.
“என்ர குஞ்செல் ல....நீ போனால்தானடி நான் அடுப்புப்பத்த வைப்பன்.... நான் புள்ளைக்கு விசாலாட்சிக் கிழவி வந்தோடன கிழங்கும் சம்பலும் வாங்கி ஒருத்தருக்கும் குடுக்காம ஒழிச்சு வைப்பன்....”
“....உம் இப்பிடித்தான் நேத்துக் காலம் புறமும் சொன்னனி”
“என்ர வைரவராணை வேண்டி வைப்பன்”.
சரசு தலையில் தொட்டு வைத்தாள். பொன்னு மறுபடியும் அம்மாவை நம்பினாள். எழுந்து பாயில் குந்திக்கொண்டாள். சிக்குப் பிடித்த தலையை பற....பற....வென்று சொறிந்தாள். மறுபடியும் கண்களை மூடினாள். மீண்டும் விழித்தாள்.
சரசு குடிசை வாசலுக்கு வந்தாள். சோளகம் பிய்த்து வாங்கியது. முகட்டுக் கிடுகுகள் வா¤சைவிட்டு எம்பி....எம்பிக் குதித்தன. அப்படி ஒரு வேகம், இப்படித்தான் ஒரு நாள் சோளகம் அமர்க்களப்பட்டுக் கொண்டிருந்தபோது கணபதி இவளைத் திட்டிக் கொண்டே வடக்குப் பக்கமாகப் போனான். காற்றில் இரைச்சலுக்குள் அப்படியே அமுங்கிப் போனதில் இவளுக்கு எதுவும் கேட்கவில்லை.
அவன் அதற்குப்பின் இந்தப் பக்கமே வரவில்லை. கணபதி “வகுப்புத் தொழில்”தான் செய்து வந்தவன். அலுப்பாந்திக்கு வரும் வத்தைகளிலிருந்து மூடைகளை இறக்கி ஏதோ நாலு காசு சம்பாதிக்கச் செய்தான். மாட்டுடன் வண்டில் ஒன்றை வாங்கினான். அதற்குப் பின்தான் ஏனோ நிறையக் குடிக்கத் தொடங்கினான்.
இரவில் வருவான். நிறைவெறியில் மூர்க்கத்தனமாக சரசுவை அடிப்பான். அவளும் ஏதாவது கையில் கிடைத்தால் எறிந்து தனது இயலாமை, த்திரம் எல்லாவற்றையும் தீர்த்துக் கொள்வாள். பிள்ளைகள் கூக்குரல் வைக்கும். கணபதியை அறிந்த அயலவர்கள் ஏன் வரப்போகிறார்கள்? அடுத்த நாளும்....அதற்கு அடுத்த நாளும்....தாக்குதல்கள், தற்காப்புத் தாக்குதல்கள்....கூக்குரல்கள் தொடரும்.“போடா வேசயடமோனே.... விட்டுவிட்டுப் போடா குடிகார து£மமோன்....போடா....” இது சரசுவின் வாய்ப்பாடு.
கணபதி பலமுறை விட்டுவிட்டுப் போனவன்தான். தொடர்ந்து இரு இரவுகள் எப்படியோ எங்கேயோ கழித்து விடுவான். அப்புறமாக சமரசம் நடந்து கொள்ளும். இவ்வளவு அமளிக்குள்ளும் சரசு நசுக்கிடாமல் ஜந்தைப் பெற்றுப் போட்டுவிட்டாள்...
இந்த முறை கணபதி திரும்பவில்லை. ஒருநாள், இரண்டு நாள், ஒருவாரம்.... ஒரு மாதம், ஒரு வருஷம்....அவன் திரும்பவேயில்லை. இது சரசுவிற்கு ச்சா¤யமாகத்தான் இருந்தது. அவனுடைய “சா¦ரபலவீனத்தை” அறிந்து வைத்திருந்த அவளுக்கு அவனுடைய வைராக்கியம் ஒருவிதத்தில் அதிர்ச்சியாகக் கூட இருந்தது. அவளுக்கும் அப்படித்தான். ஒருநாள்.... இரண்டு நாள், ஒருவாரம்....ஒரு மாதம்.... ஒரு வருஷம்....அப்புறம் கணபதி என்ற “மனிதனை” மறந்தே போய் விட்டாள். அதற்காக துக்கப்படுவதையும் நிறுத்திக் கொண்டாள்.
சில நாட்களுக்கு முன்தான் குட்டித் தம்பியர் கதைவாக்கில் சொல்லி வைத்தார். கணபதி காங்கேசன் துறைக்கு வரும் கப்பல்களிலிருந்து மூடை இறக்குகிறானாம். அங்கேயே குடியும் குடித்தனமும் மறுபடியும் கிப் போய்விட்டதாம்.
காற்று ஒரு கணம் சுழன்றது. பக்கென்று மண்ணைத் து£வி முகத்தில் அடித்தது. சரசு கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
து£ரத்தில் வயல் வெளி தொ¤ந்தது. கூத்துக் கொட்டகையை நின்று சிலர் பி£¤த்துக் கட்டிக் கொண்டிருந்தனர். குட்டித்தம்பியரும் சிலவேளை அங்குதான் நிற்பார்.
குட்டித்தம்பியர் களையானவர், காசு உள்ளவர், வெற்றிலையும் வாயுமாய் எல்லோருடனும் சி£¤க்கச் சி£¤க்கப் பேசுவார். ராசகூத்துக்கு குட்டித்தம்பியரை அசைக்கவே முடியாது. பாட்டு அப்படி. வேஷப்பொருத்தம் அப்படி. அவருடைய இளைய பெண்ணுக்கு மூன்று பிள்ளைகள். இப்படி எல்லாம் இருந்து கொண்டும்தான் சரசுவிடம் வந்து போய்க் கொண்டிருந்தார் குட்டித்தம்பியர்.
பக்கத்துக் குடிசைகளிலும் உரத்த பேச்சுக்குரல். கடற்கரைக்குப் போவதற்கு பலர் யத்தமாகிக் கொண்டிருந்தனர்.
பொன்னு வேலி மூலைக்குள் “ஒண்டுக்கு” குந்திக் கொண்டிருந்தாள். சரசு கூரைக்கு மேல் காயப்போடடிருந்த உமலை எடுத்தாள். ஏற்கனவே கிழிந்து போயிருந்த மூலைகள் இன்னும் பொ¤தாகியிருந்தன. ஓலை எடுத்து கிழிவுகளைப் பொத்திப் போடவேண்டும் என்று நேற்று நினைத்திருந்தவள், திருவிழாச் சந்தடியில் மறந்தே போய்விட்டாள்.
உமலை வி£¤த்துப்பார்த்தாள். செதில்களும் செத்த குஞ்சுமீன்களுமாய் வெடில் பக்கென்று மூஞ்சியில் அடித்தது. வயிற்றைக் குமட்டுவது போல்.
பொன்னு இப்போ பானையைத் துளாவிக் கொண்டிருந்தாள். ஏதோ சொட்டு நீர் கைகளை நனைத்தது. முகத்தில் தடவிக் கொண்டாள். கண் பீளையையும், எச்சில் காய்ந்திருந்த கடைவாயையும் பாவாடையால் துடைத்துக் கொண்டாள். அந்தப் பாவாடை எப்படியெல்லாமோ கிழிந்து போயிருந்தது. மேல் உடம்பில் அம்மாவின் பொ¤ய சட்டை தொள தொளவென்றிருந்ததை இறுக்கி, வயிற்றுடன் முடிந்திருந்தாள்.
சரசு அவளுடைய தலையைக் கையால் நீவிவிட்டாள். அழுக்குத்துண்டு ஒன்றினால் மயிரைச் சேர்த்து சிலும்பாமல் கடடிவிட்டாள்.
“அம்மா எனக்கு....ஒரு சட்ட தைச்சு தாவண.... இதத்தானே நெடுகிலும் போடுறன். கடற்கரைக்கு வாறபொடியன் எல்லாம் எனக்கு நொட்ட சொல்லிகினம்....”
“பொறு புள்ள, சின்னாச்சி அக்காவோட நான் சீட்டு பிடிச்சிருக்கிறன். விழுந்தோடன உனக்கு சீத்தையில ஒருகவுண் தச்சுத்தருவன்....”
பொன்னு உமலைத் து£க்கிக் கொண்டாள். எப்போதாவது இவளோட கூடிப்போற சின்னவியும் எழுந்து வந்துவிட்டான்.
“கவனம் புள்ள....காத்துக்குள்ள....கார் வாறது கூடக்கேக்காது....சின்னவிய கவனமாக கையில புடிச்சுக் கூட்டிக்கொண்டு போ....”
அவர்கள் போய்விட்டார்கள். இவள் பெருமூச்சு விட்டுக்கொண்டே உள்ளே வந்தாள். குழந்தை அழுது கொண்டிருந்தது.
மூலையில் விளக்கு சா¤ந்து கிடந்தது. அதை எடுத்து நிமிர்த்தி வைத்தாள். தீப்பெட்டியை உரசிக் கொளுத்தினாள். சடக்கென்று ஒளி நிமிர்ந்தது. அத்துடன் பக்கென்று மறுபடியும் அணைந்தது.
இப்போது குழந்தை இன்னும் வீறிட்டது. தேநீராவது வைக்கலாம் என்று நினைத்தவள், புஸ்பராணியைத் தேடினாள், அங்கு ஒருவருமே இல்லை. அந்த விடிகாலையிலேயே.... எங்கேயோ ஓடிவிட்டனர். எங்கே போவார்கள். கடற்கரை குப்பை மேட்டில் எதையாவது பொறுக்கிக் கொண்டிருப்பார்கள்.
அவள் வெளியில் வந்து குரல் கொடுத்தாள்.
“எடி புஸ்பராணி....இங்க வந்து புள்ளையைத் து£க்கி வைச்சிரடி....”
வெகு அண்மையில் ஏதோ பாட்டின் முணுமுணுப்புக் கேட்டது. குட்டித்தம்பியர்தான் வந்து கொண்டிருந்தார்.
சரசு தேநீர் வைப்பதற்காக குசினிக்குள் புகுந்து விட்டாள்.
அவர் வரும் வேளைகளில் அவளுக்கு சந்தோஷந்தான். இருந்தாலும் அடிமனக் கிடக்கையில் ஏதோ துரு....துருவென்று முடக்குவாதம் செய்தது. பு£¤யாத என்னவோ ஒன்று.
“என்ன சரசு தேத்தண்ணி வைக்கிறியா.... எனக்கும் கொஞ்சம் கொண்டா சுடச்சுட.”
குட்டித்தம்பியர் வழமையாக உட்காரும் மரப்பெட்டியில் குந்திக் கொண்டார். தலைக்குமேல் பூவரசுநிழல் விழுந்திருந்தது. வெயில் சற்று எட்டித்தான் நின்று கொண்டிருந்தது. இன்னும் அரைமணி நேரத்திற்காவது அதில் இருக்கலாம். அப்புறம் அந்த இடத்தில் இருக்க இயலாது. உள்ளே போக வேண்டும் அல்லது வெளியே போகவேண்டும்.
சரசு தேநீர் க் கோப்பையையும் சர்க்கரைக் குறுகலையும் கொண்டு வந்து வைத்தாள். குட்டித்தம்பியர் செழுமையான அவள் உடலை ஒரு தடவை கண்களால் ஸ்பா¤சித்தார். அவளும் கவனிக்காமல் என்ன....உதட்டைப் பிதுக்கிக் கொண்டு ஒருக்களித்துப் பார்த்தாள்.
கொடுப்பிற்குள் வைத்திருந்த வெற்றிலைச் சப்பலை து£....து£வென்று துப்பிவிட்டு செம்பிலிருந்த நீ£¤னால் நன்றாக கொப்பளித்துக் கொண்டார். இதற்காகவே வந்தவர் போல் தேநீரை ருசித்துக் குடித்தார்.
அவருடைய முகத்தில் இரவு பூசிய பூச்சு இன்னும் அழியவில்லை. மழுங்க விழித்திருந்த முகத்தில் மீசையிருந்த இடத்தில் ஏதோ அழிந்துபோன கறுப்புக் கோட்டின் மெல்லிய தழும்பு. கண்களில் நித்திரையின் கனப்பு. அந்தக் கோலத்தில் அவரைப்பார்க்க சற்று வேடிக்கையாக இருந்தது. இவரா இரவு சங்கிலியனாக வீரத்தோடு பொ¤ய மீசையைத் திருகிக் கொண்டு வந்தவர்? “என்ன புள்ள, இரவு கூத்துப் பார்த்தியா.... எப்படி இருந்தது....?”
“என்ன....ஏதோ....காணாத ளாட்டம். முன்னுக்குத்தானே இருந்தனான்....பார்த்துப் பார்த்து பல்லைக் காட்டிப்போட்டு....”
குட்டித்தம்பியர் விநயமாய் சி£¤த்தார். அவரது சின்னத் தொந்தி சற்றுக் குலுங்கியது.
“அது கிடக்கட்டும் புள்ள.... என்ர படிப்பு எப்படி....?”
“பின்கூத்து நீங்க வந்த பிறகுதான் வலு எழுப்பமாக இருந்தது எண்டு எல்லோரும் பறஞ்சு கொண்டு வந்தினம்....”
குட்டித்தம்பியருக்கு வலு சந்தோஷம். தேநீர் முழுவதையும் ஒரே மூச்சில் உறிஞ்சுவிட்டு கோப்பையை வைத்தார். மடிக்குள் செருகி வைத்துக் கொண்டு வந்த சிறிய “பார்சல்” ஒன்றை அவளிடம் நீட்டிக் கொடுத்தார்.
அவள் பவிசாகச் சி£¤த்துக் கொண்டே வாங்கி வி£¤த்துப் பார்த்தாள். அது பூ விழுந்த சட்டைத்துண்டு அந்தக் கணத்தில் பொன்னுவைத்தான் நினைத்துக் கொண்டாள் சரசு. இன்னும் அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. அவர் எப்போதாவது இப்படித் தருவது தான். னாலும் அதற்காக ஏங்கி இருந்தவளல்ல....
இருவருமாக என்னவோ எல்லாம் பேசினர். வெளியில் யாரோ வரும் சத்தம் கேட்டது. இருவருமே ஏக காலத்தில் திரும்பிப் பார்த்தனர். பொன்னு நன்றாக நனைந்துபோய் வந்து கொண்டிருந்தாள். அவள் முகத்திலும் கைகால்களிலும் சேறு அப்பியிருந்தது. அவள் அழுதிருக்க வேண்டும். முகம் வேறு வீங்கியிருந்தது. பக்கத்தில் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு வடக்குத் தெருக்கிழவி மோ¤. அவள் தலையில் மீன் விற்கும் கடகமும், சுளகும். பின்னால் சின்னவி. கேவி....கேவி இன்னும் அழுது கொண்டுவந்தான். சரசு ஒருகணம் அப்படியே திகைத்து நின்றாள். அடுத்த கணம் குரல் எடுத்து எட்டு வீட்டுக்கு கேட்க கத்தினாள்.
“என்ன நடந்தது? என்ர புள்ளைக்கு என்ன நடந்தது? சின்னவி அடக்கி வைத்திருந்து வெடித்துச் சிதறியதுபோல் பெரும் குரல் எடுத்து அழுதான்.
“அக்கா புறக்கி வைத்திருந்த மீனை அந்த னக்கோட்டைப் பொடியன் களவெடுத்துப் போட்டான்.... அக்கா அவன அடிச்சா, அவன் அக்காவை கடலுக்க தள்ளிப் போட்டான்....உம்....உம்...”
மோ¤க்கிழவி அப்போது தான் குட்டித்தம்பியர் முற்றத்தில் இருப்பதைக் கவனித்தாள். முகம் சுறுக்கென்று உள் இழுத்துக் கொண்டது. வெறுப்பு டன் விசுக்கென்று முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
“இந்தா சரசு புள்ளயக் கூட்டிக்கொண்டு முதலில உள்ள போ....எல்லாத்தையும் நான் சொல்லுறன்.”
சரசுவுக்கு விளங்கி விட்டது. பொன்னுவை மெதுவாக அழைத்துக் கொண்டு உள்ளே போனாள். மோ¤க் கிழவியும் தொடர்ந்து போனாள். உள்ளே கிழவியின் மெல்லிய குரல் வெகுநேரம் கேட்டது. “இந்தா சரசு நான் சொல்லுறத கவனிச்சிக் கேள். விலைபோகிற குமர் வீட்டுக்கு வந்திருக்கு. இனி எண்டாலும் இந்த அறுதலிமோன அண்டப் பிடிக்காத....”
மோ¤க் கிழவி வெளியே வந்தாள். இறக்கி வைத்திருந்த கடகங்களைத் தலையில் து£க்கி வைத்துக் கொண்டாள். குட்டித்தம்பியர் இருப்பதையே கவனியாதவளாய் விடு... விடுவென நடந்தாள்.
குட்டித்தம்பியார் எதுவும் பு£¤யாதவராய் முற்றத்து மரப்பெட்டியில் இன்னமும்தான் இருந்தார். வெயில் மரப்பெட்டிக்கு அருகே வந்துவிட்டது. இனி அதில் இருக்க இயலாது. கண்கள் வேறு சுழற்றி அடித்தது. ஒரு கண் நித்திரை கொண்டுதான் தீர்க்க வேண்டும். சரசுவைப்பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று நினைத்தார். வெகுநேரம் சரசு வெளியில் வரவே இல்லை. சரசு ஏன் வெளியில் வரவில்லை....?
“சரசு அப்ப நான் போட்டு வாறன்....”
அவர் எழுந்து கொண்டார். தோளில் கிடந்த துண்டினால் முகத்தை அழுத்தித் துடைத்தார். வீட்டை நோக்கி விளங்காத தீவிரத்துடன் நடக்கத் தொடங்கினார்.
சரசு வெளியில் வந்தாள். குட்டித்தம்பியர் கொண்டு வந்த துணிப்பார்சல் வி£¤த்தபடிதான் முற்றத்தில் கிடந்தது.
“குட்டித்தம்பியரும் கிழவி சொன்னதைக் கேட்டிருப்பாரோ....”
அவள் மறுபடியும் கணபதியை நினைத்துக் கொண்டாள். பொன்னு இனி மீன் பொறுக்க வெளியில் போக மாட்டாள். குட்டித்தம்பியரும் இனி வரமாட்டார். அப்படித்தான் அவள் நினைத்தாள். அவ்வாறே நடக்க வேண்டும் என்றும் விரும்பினாள்.
அவள் எல்லோரையும் இழந்துதான் விட்டாள். னாலும் என்ன? எதையும் இழந்துவிடாத நெஞ்சுறுதி. அவளுக்கு அப்படி ஒரு மனப் பயிற்சி எப்படியோ ஏற்பட்டுவிட்டது.

கட்டுகள்

டானியல் அன்ரனி

வானொலியில் ஏதோ சினிமாப்பாடல் இரைந்து கொண்டிருந்தது. அந்தப்பாட்டோடுகூட தானும் முணுமுணுத்துக் கொண்டிருந்தாள் தங்கச்சி பத்மா.
“ஏ.... பத்மா.... கொஞ்சம் குறைச்சுவை ரேடியோவை. அது குளறுகிறது பத்தாம இவ வேற பாடுறா.”
சாப்பிட்டுவிட்டு கைகளைத் துடைத்துக் கொண்டே அடுக்களையிலிருந்து வெளியே வந்தவன் எ£¤ச்சலுடன் சத்தம் போட்டான்.
அவனுடைய உரத்த சத்தம் கேட்டதும் பாட்டு திடீரென தணிந்தது. மழை அடித்து ஓய்ந்த அமைதி. மறுபடியும் மெல்லிய முணுமுணுப்பு.
“விடிஞ்சா பொழுதுபட்டால் ரேடியோவுக்கு பக்கத்திலேதான் படுத்துக்கிடக்கிறாள். வேல வெட்டிக்குச் சொன்னாத்தான் அதுக்க நோகுது.... இதுக்க பிடிக்குது என்று சாலம் காட்டுகிறாள். ஒருக்கா இவளை கொஞ்சம் உறுக்கி வை மோன.”
அம்மா அடுக்களைக்குள் இருந்தபடியே முறையிட்டாள். இவன் எதுவும் பேசவில்லை. “ஹாங்க”£¤ல் கொழுவிக்கிடந்த சேட்டை எடுத்துப்போட்டுக் கொண்டான். வாசலில் கிடந்த செருப்பை கால்களில் செருகிக்கொண்டே விறாந்தையை விட்டு இறங்கினான்.
சாப்பாடு வயிற்றுக்குள் இறங்கியதும் உதடுகளில் வழமைபோல் ஏற்படும் அ£¤ப்பு. “எப்படியாவது ஒரு சிகரட் வாங்கிப் பற்றவைத்து விட வேண்டும்” என்ற மனத்தவிப்புடன் படலையை நோக்கி நடந்தான்.
“தம்பி! மறுபடியும் மழை வரும்போல இருக்கு. குடையை எடுத்துக்கொண்டு போ மோன....” உரத்துக் கூறிக் கொண்டே அடுக்களைக்குள் இருந்து எழுந்து வெளியே வந்த அம்மா அவனை நெருங்கி வந்து மெதுவாகக் குசுகுசுத்தாள்.
“....தம்பி.... அக்காவிட வி~யமாக ஐயாவாக்கள் பேசப் போயிருக்கினம். இப்ப வந்து விடுவினம். துலைய போகாம சுறுக்கா வந்துவிடு மோன....”
அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. மௌனமாகப் படலையைத் திறந்து கொண்டு வெளியே வந்தான். வீதி முழுவதும் இருண்டு கிடந்தது. சற்று நேரத்துக்கு முன் பெய்து ஓய்ந்த மழையினால் மின்சாரத்தில் எங்கேயோ பழுது ஏற்பட்டிருக்க வேண்டும். வீதி விளக்குகள் முழுவதும் அணைந்திருந்தன. மை இருளில் வெள்ளை இராட்சதா;களாய் விளக்குக்கம்பங்கள் பயமுறுத்தின.
வானத்தை நிமிர்ந்து பார்த்தான். மறுபடியும் மேகங்கள் திரண்டு கொண்டு வந்தன. திடுமென மழை வந்துவிடும்போல பயமுறுத்தின. துமி ஒன்று காதுப்பொருத்தில் விழுந்து ஜில்லிட்டது.
அவன் நடையைத் தூ¤தப்படுத்தினான். “அம்மா சொன்னதுபோல குடையைக்கொண்டு வந்திருக்கலாம். விசர் வேலை பாத்திற்றன். இப்ப மழை வந்திற்றால் என்ன செய்யிறது....”
ஒரு கணம் மனம் அங்கலாய்த்தது. மறுகணமே அதை நிராகா¤த்தது. தன்னைத்தானே மறுபா¤சீலனை செய்துகொண்டு விட்டதுபோல் வெட்கப்பட்டது.
பொ¤ய மழை பெய்த போதும்கூட விறுமன்களாட்டம் கோவில் வளவில் நின்று நாள் முழுவதும் கால் பந்து விளையாடிக் கொண்டிருந்த அவன் இந்தத் துமியைக் கண்டதும் குடையை நினைத்துக் கொண்டதை நினைத்து தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை வியந்தான். அதற்குக் காரணமான அந்த வாழ்வையும் எண்ணிக் கொண்டான்.
அவன் தேகம் புல்லா¤த்தது. அவன் கொழும்பு பொ¤ய தபாற்கந்தோ£¤ல் “ரெலிபோனிஸ்ட்” டாக உத்தியோகம் ஏற்று ஆறு மாதங்கள்தான் கடந்திருந்தன. அந்த ஆறு மாத காலத்துக்குள் அவனுக்குள் ஏதோவொன்று இருந்துகொண்டு அவனை மாற்றுகின்ற அந்தா¤ப்பு. அதற்கு எதிராக அவன் போராடுவது போன்ற முனைப்பு. அது குடும்பம் முழுவதையும் பரவிப் பாதித்திருந்தது.
இம்முறை ஊருக்கு இரண்டாவது தடவையாக லீவு எடுத்துக்கொண்டு வந்திருந்தான். அதுவும் அவனுடைய அக்காவின் திருமண வி~யமாகப் பேசி முடிவு செய்ய வேண்டியிருப்பதாக உடன் வரச்சொல்லி ஐயா கடிதம் எழுதியிருந்தார்.
இதில் தன்னிடம் கேட்பதற்கு எதுவும் இருப்பதாக அவனுக்குத் தொ¤யவில்லை. அக்கா ஏற்கனவே விரும்பிய இடம்தான். ஐயாவும், அம்மாவும் சம்மதப் பட்டால் செய்து கொடுக்க வேண்டியதுதான். முன்னம் இப்படியெல்லாம் அவனுடைய அபிப்பிராயத்தை அறிந்து கொள்ள அவர்கள் முயன்றதில்லை. முன்னுக்கு நின்று சொன்னாலும் வீட்டில் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில்லை.
இப்போது மாத்திரம் ஏன் இந்த நிலைமை? அவன் இப்போது அரசாங்க உத்தியோகஸ்தனாகி விட்டதில் புதிதாக எந்தக் கொம்பும் முளைத்துவிட வில்லையே?
அவனுக்கு உடம்பு முழுவதும் பற்றி எ£¤வது போல் எ£¤ச்சல் எ£¤ச்சலாக இருந்தது.
அந்த வீட்டில் அவனுக்குக் கிடைக்கும் உபசி£¤ப்பு மா¤யாதை ஊ£¤ல் உள்ளவர்களின் திடீர் கவனிப்பு. அடிக்கொருதரம் குசல விசா£¤ப்பு. ஆறு வரு~ங்களாக அலைந்து வீதிகளில் வேலையில்லாமல் தி£¤ந்த போது....
அந்த வாழ்க்கை. அதில் அனுபவித்த நரகவேதனைகள். சொந்த வீட்டிலேயே அந்நியனாக, புறக்கணிக்கப்பட்ட நிலை. ஓ! அந்த நரகம்....அது வரவே வேண்டாம்.
அவன் தனக்குள்ளே பெருமூச்சு விட்டுக் கொண்டான். அவனுக்குள் யாரையோ எதற்காகவோ பழி வாங்க மூண்டெழும் நெருப்பு.
வீதியில் தண்ணீர் தேங்கி நின்ற குழிக்குள் ஒரு கால் 'சளக்'கென்று இறங்கிவிட்டது. ஒரு கணம் தடுமாறி விழப்போனவன் சமாளித்துக் கொண்டே நீருக்குள் அமிழ்ந்து விட்ட ஒரு காலை 'அவக்'கென்று எடுத்தான்.
ஒற்றைச் செருப்பு அறுந்துவிட்டது. இரண்டு செருப்புக்களையுமே சுழற்றி வேலிக்கு அப்பால் வீசி எறிந்தான். வெறும் கால்களுடனேயே அந்த நனைந்த வீதியில் 'காயாக' நடந்தான்.
கால்களில் செருப்புகள் அணியாமல்தானே இந்த ஊ£¤லுள்ள கல் ஒழுங்கைகளிலும்.... முள்ளுப் புதா;களிலும்.... சேற்று நிலங்களிலும் நடந்து தி£¤ந்தவன். இப்போது என்ன வந்துவிட்டது.
சற்று தூரத்தில் அந்த வீதி மிதக்கின்ற சந்தியில் இருக்கும் மணியண்ணா¤ன் கடை திறந்துதான் கிடந்தது. கடைக்கு முன்னால் கொழுவியிருந்த அ£¤க்கன் லாம்பின் வெளிச்சத்தில் சிலர் சாமான்கள் வாங்கிக் கொண்டு நிற்பது தொ¤ந்தது.
அவன் எதி£¤ல் சைக்கிளில் யாரோ இருவர் வந்து கொண்டிருந்தனர். அதில் பின்னால் 'கா¤யா¤ல்' குந்தியிருந்தவன் கேட்டான், 'என்ன நேரம் அண்ணே இருக்கும்?'
இவன் நேரத்தைக் கவனிப்பதாக மணிக்கட்டைப் பார்த்தான். அப்பொழுதுதான் கைக்கடிகாரம் கட்டிக் கொண்டு வராதது நினைவுக்கு வந்தது. அதனால் என்ன “இப்ப எட்டரை மணி இருக்கும். படம் தொடங்கியிருக்காது. கெதியாப்போனா £¤க்கற் எடுக்கலாம்”.
இவன் அவர்கள் கேட்காத கேள்விக்கும்கூட பதில் அளித்துவிட்டு வெறுமையாகக் கிடந்த மணிக்கட்டில் பதிந்திருந்த கைக்கடிகாரத்தின் வடிவத்தை அழுத்தித் துடைத்துக் கொண்டான்.
கடைக்கு முன் அவனைக் கண்டதும் மணியம் அண்ணர் காவிப்பற்கள் தொ¤ய சி£¤த்தார். சற்று நேரம் வரை சாமான் வாங்க வந்து நின்றவர்களுடன் சள்....சள்....என்று எ£¤ந்து விழுந்து கொண்டிருந்தவர் அவர். “என்ன தம்பி எப்ப கொழும்பால வந்தனி.... அங்கேயும் மழை நல்லாப் பெய்யுதோ....?”
அவர் வழமையாகக் கேட்கும் கேள்விதான். அதில் எந்தவித வாஞ்சையும் இல்லை. ஒப்புக்காக ஏதாவது சொல்லி வைக்க வேண்டும் என்று நினைத்தவன் அடுத்த கணம் எதையோ நினைத்துக் கொண்டவனாய் மௌனமாகிவிட்டான்.
சின்ன வயதில் எப்போதோ ஒரு நாள் அரை றாத்தல் பாண் வாங்கச் செல்ல வந்துபோது ஒரு சதம் குறைந்துவிட்டது என்பதற்காக....வீட்டுக்குத் திரும்பி அனுப்பி வீதியில் இருட்டில் கிடந்த நாய்மேல இடறுப்பட்டு, அதன் கூ£¤ய பற்கள் அவன் தொடையில் பதிய.... அம்மா....அம்மா.... என்று குளறிக் கொண்டு வீட்டைத் தேடி ஓடிய ஓட்டம்....
“அக்காவுக்கு கல்யாணப் பேச்சு நடக்குது போல் இருக்கு.... அதுவும் கனகாலமாக வீட்டோட இருக்கு குமர் காரி யத்தை வசதி வரும்போதே செய்து போட வேணும். பொடியனும் நல்ல குணமுள்ளவன். சோலி சுரட்டுக்குப் போகாத குடும்பம்.... தம்பி இந்தச் சம்பந்தத்தை விட்டுடாதீங்க”.
மணி அண்ணன் கதைத்துக்கொண்டே தன் அலுவலில் கண்ணாக இருந்தார். அடிக்கொரு தரம் வெற்றிலையைக் கிள்ளி பாக்குச்சீவலை கொடுப்புக்குள் திணித்துக் கொண்டிருந்ததைக் கண்டதும் அவனுக்கு அருவருப்பாக இருந்தது.
பைக்குள் கிடந்த ஒரு ரூபா குற்றியை எடுத்து மணி அண்ணனிடம் நீட்டிக்கொண்டே “இரண்டு பிறிஸ்டல் தா அண்ணே” என்று கேட்டான்.
மணி அண்ணர் அவனை அதிசயமாகப் பார்த்தார். இவன் சிகரட் பற்ற வைத்ததை அவர் ஒரு போதும் கண்டதில்லை. அவர் என்ன, அந்த ஊ£¤லேயே ஒருவரும் கண்டிருக்க முடியாது.
மூன்று மாதத்திற்கு முன் 'நைற் சிவ்ட்" செய்து கொண்டிருந்தபோது நித்திரை விழிக்க உதவும் அந்த மருந்தைப்பற்றி, கூட வேலை செய்துகொண்டிருந்த நண்பன் வற்புறுத்தியதின் போ¤ல் அதைத் தொடக்கி வைத்தான்.
'நாலு பேரோடு.... நாலு இடத்தில பழகிறனீங்க இது எல்லாம் குடிக்கத்தானே வேணும்....இதில் என்ன குறையிருக்கு தம்பி".
மணி அண்ணர் தனக்குள் எழுந்த கேள்விக்குத் தானே வியாக்கியானத்தைக் கூறிக் கொண்டு இரண்டு சிகரற்றுகளையும் மிகுதிச் சில்லறைகளையும் கொடுத்தார்.
அவன் ஒரு சிகரட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டான். மேசையில் கிடந்த காகிதத்துண்டை எடுத்துப் பக்கத்தில் எ£¤ந்து கொண்டிருந்த குப்பி விளக்கில் பிடித்து மற்ற சிகரட்டைப் பற்ற வைத்துக்கொண்டே வீட்டை நோக்கித் திரும்பி நடந்தான்.
அவன் வீட்டுக்கு நாலு வீடு தள்ளி முன்னுக்கு இருக்கும் அமொ¤க்கன் பெ~ன் வீடுதான் பொ¤யதம்பியருடையது. அந்த வீட்டுக்கு முன்வரும் போதெல்லாம் நெஞ்சில் ஒரு படபடப்பு. இதயத்தின் அசைவில் இயந்திர வேகம்....அன்று ஒரு நாள் இருட்டில் குதிரை உயரத்துக்கு வளர்ந்த அந்த நாயின்மேல் இடறுப்பட்டு.... அந்த சனியன் கேற்றுக்குள் சுருண்டு கிடந்து அவனையே உற்றுப் பார்ப்பதுபோல்....
அவன் இப்போது பயம் கொள்ளவில்லை. தொடையில் அழுத்தமாகப் பதிந்திருந்த அவற்றின் வடுக்களை மாத்திரம் சாரத்துக்கு மேலால் பார்த்துக் கொண்டான்.
தூரத்தில் குள்ளமான ஒருவன் கைகளை உயர்த்தி வீசி தனக்குள் எதையோ உரத்துப் பேசி பாவனை செய்துகொண்டு வந்தான். கையில் வைத்திருந்த சிரட்டை வாயில் வைத்து ஒரு தடவை தம் பிடித்து இழுத்துவிட்டு விரல் இடுக்கில் ஒளிப்பொட்டு தொ¤யாமல் மறைத்துக்கொள்ள நினைத்தவன், மறுகணம் தன்னுடைய செய்கைக்காக வெட்கப்பட்டான்.
'எனக்கு நியாயம் என்று படுகிறதை செய்யிறதுக்கு மற்றவர்களுக்காக ஏன் பயப்பிடவேணும், ஒளிக்கவேணும்?"
தூரத்தில் வந்தவனை இனம் கண்டுகொண்டான். அவனுடைய சிநேகிதன் ஆனந்தன், புதிய நாடகம் ஒன்றின் ஒத்திகையை வீதியிலேயே தனிமையில் செய்து கொள்கிறான். அப்படி ஒரு பழக்கம் அவனுக்கு. அந்த வழக்கத்துக்காக அவனை 'பனியன்" என்று ஏளனமாக முதுகுப்புறம் நின்று பலர் நகைப்பதும் அவனுக்குத் தொ¤யும். அதற்காக அவன் எப்போதுமே கவலைப்பட்டதில்லை. அது தன்னுடைய கலை ஆர்வம் என்று பெருமைப்பட்டுக் கொள்வான். ஊ£¤லிருந்த போது இருவரும் சேர்ந்தே பல நாடகங்களை மேடையேற்றி யிருக்கின்றனர்.
'என்ன மச்சான்....புது நாடகத்துக்கு ஒத்திகை நடக்குதோ"? 'ஓம்.... மச்சான்.... இந்த மாதம்.... புது நாடகம் அரங்கேத்திறம், சிலம்பு - புதுமையாக இருக்கும்".
இவன் தனக்குள் சி£¤த்துக் கொண்டான். சிலம்பில் என்ன புதுமை செய்யப்போகிறான்?
இருவரும் சில நிமிடங்கள் தங்கள் பழைய வாழ்க்கை களைப் பற்றி நினைவு மீட்டுக் கொண்டனர். பல புதிய தகவல்களைப் பா¤மாறிக் கொண்டனர். ஆனந்தன் வேலை கிடைக்காததைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டான். இவன் அலுத்துக் கொண்டான்.
'அப்ப போறதுக்கு இடையில வீட்ட வந்திற்றுப் போ மச்சான். அம்மா கூட நீ வீட்ட வருவதில்லை என்று குறை நினைக்கிறா...."
அவன் நண்பனிடம் விடை பெற்றுக்கொண்டு வீட்டை நோக்கி நடையைத் தூ¤தப்படுத்தினான்.
அக்கா உள் அறையில் இருந்து பீடி இலை வெட்டிக் கொண்டிருந்தாள். பத்மா வீட்டுக்குள் இருந்து கொண்டு சுற்றி யிருந்த சின்னஞ் சிறுசுகளுக்கு தான் சமீபத்தில் பார்த்த தமிழ் சினிமாப் படத்தின் கதையைப் பாவத்துடன் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அம்மா திண்ணையில் தூண் அருகில் குந்திக் கொண்டு வாசலைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.... அம்மா வாசலில் யாரை எதிர்பார்த்துக் காத்திருக்கிறாள் என்பது அங்குள்ள சகலருக்கும் தொ¤யும்.
ஐயா வீட்டை விட்டு அம்மான் வீட்டுக்குப் போய் ஒரு மணித்தியாலம் கடந்திருக்கும். அவ்வளவு நேரமும் அங்கு என்ன பேசுவதற்கு இருக்கு என்று அவனுக்கு விளங்கவில்லை.
அவன் வரும்போது புகையிரதத்துக்குள் படிப்பதற்காக வைத்திருந்த நாவலை மீண்டும் கையில் எடுத்துப் பி£¤த்துப் படிக்கத் தொடங்கினான். அது அலுப்புத் தட்டுகிற அழுகுண்ணிக் காதல் கதை.
வாழ்க்கையின் சாராம்சத்தை அதன் சிக்கல்களை அவனால் அதில் தா¤சிக்க முடியவில்லை.
அவன் எப்போதாவது இப்படிப்பட்ட கதைகளைப் படிக்க நோ;ந்திருக்கிறது. அவற்றையே விழுந்து விழுந்து படிப்பவர்களையும் அவனுக்குத் தொ¤யும்....
ரேடியோ இருந்த மேசைக்குப் பின்னாலும், அவை போல் சில புத்தகங்களும் அவன் கண்ணுக்குத் தட்டுப்பட்டன....
அது தங்கச்சியின் வேலையாகத்தான் இருக்க வேண்டும் என்று அவன் ஏற்கனவே ஊகித்துக் கொண்டான். அவன் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு வெள்ளைத் தாள் ஒன்றைக் கிழித்து எடுத்து அறை நண்பன் ஏரம்பமூர்த்திக்கும், கந்தோ£¤ல் வேலை செய்யும் ரஞ்சினிக்கும் காகிதம் எழுத வேண்டும் என்று நினைத்தவனாக பேனாவைத் தேடினான்.
அவன் சேட் பையில் குத்தியிருந்த பேனாவை யாரோ எடுத்துவிட்டமை அப்போதுதான் அவனுக்குத் தொ¤ந்தது.
'சேட் பொக்கற்றில் இருந்த பேனையை யார் எடுத்தது? மா¤யாதையாகச் சொல்லிப் போடுங்க"
அவன் குளறியது வீடு முழுவதும் அதிர்ந்தது. அம்மா பதறிப்போய் திரும்பிப் பார்த்தாள்.
சின்னவன் பேனாவைக் கையில் வைத்துக் கொண்டு சுவர் அருகே மசந்திக்கொண்டு நின்றான். செய்யாத குற்றத்திற் காக தண்டனை அனுபவிக்கக் காத்திருக்கும் அப்பாவியின் மிரட்சி. 'ஆரடா....இது எடுத்தது? நீயா எடுத்தனி?"
அவன் இல்லை என்பதுபோல் தலை அசைத்தான். வாய் எதையோ முணுமுணுத்தது.
'அக்காவா எடுத்தவ?"'ஆங்.... அண்ண...."
'என்னட சாமான்களை ஒருத்தரும் தொடக்கூடாது என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறன்".
அவன் சத்தம் போட்டுவிட்டு முதலில் நண்பன் ஏரம்பமூர்த்திக்குக் கடிதம் எழுதத் தொடங்கினான்.... மழை திடீரெனப் பலத்தது. யாரோ படலையைத் திறந்து கொண்டு மழையில் நனைந்தபடி உள்ளே வருவது தொ¤ந்தது.... அது ஐயா தான். அம்மா ஆவலுடன் குந்தில் இருந்து எழுந்து கொண்டாள்.
கத்தா¤க்கோலுக்கு இடையில் நறுக்....நறுக்....கென்று பீடி இலை அறுபடும் ஓசை நின்றுவிட்டது. அக்காவும் வெளித் திண்ணைக்கு வந்துவிட்டாள். பரீட்சை முடிவை எதிர்பார்த்திருக்கும் ஐயா நினைத்துக் கொண்டு போனதற்கு மாறாக அம்மான் வீட்டில் நடந்திருக்கலாம் என்று மட்டும் அவனுக்குப் பூ¤ந்தது. அவன் இன்னும் அமைதியாக எழுதிக் கொண்டுதான் இருந்தான். அங்கு நடக்க இருப்பதைப் பற்றி அவனுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லாதவன் போல்....
சில நிமிடங்கள் வரை ஐயாவும் அம்மாவும் என்னவோ குசுகுசுத்தார்கள். எந்தவித வாக்கியங்களும் தௌ¤வாக அவனுக்குக் கேட்கவில்லை. அவனுடைய பெயர் மாத்திரம் அங்கு அடிக்கடி பாவிப்பதை கிரகித்துக் கொண்டான். ஏரம்பமூர்த்திக்கு கடிதம் எழுதி முடித்துவிட்டு ரஞ்சினிக்கு எழுதத் தொடங்கியபோது தான் அம்மா அருகே வந்து நின்றாள்.
'தம்பி அக்காவட கல்யாணம் குழம்பிப்போய்விடும் போல இருக்கு". அம்£வின் குரல் தழதழத்தது. அம்மா சின்ன விசயத்திற்கும் மூக்கைச் சீறி அழுபவள் தான்.
'ஏன் அக்காவும் அவரும் ஒருத்தரை ஒருத்தா; கன காலமாக விரும்பி இருந்தவங்கதானே....வீட்டிலும் விருப்பம் தானே.... அவையளுக்கு என்ன வந்திற்று, சீதனம் ஏதும் கூட எதிர்பர்க்குவினமோ...."
'இல்லை மோன, எல்லாத்துக்கும் ஓம் எண்டு தான் இவ்வளவு நாளும் இருந்தவிய. இப்ப....திடீரென பதில் மாப்பிளை தந்தால் தான் செய்வினம் எண்டு நிக்குவினம்".
அவன் அதிர்ச்சியுடன் அம்மாவை நிமிர்ந்து பார்த்தான். அவன் முகம் கறுத்து இறுகிக் கிடந்தது. அந்தக் கண்களில் தொ¤வது கோபமா....பா¤தாபமா.... இன்னதென இனம் கண்டுகொள்ள முடியாத ஏதோ ஓர் உணர்வு. அம்மாவால் தொ¤ந்து கொள்ள முடியவில்லை.
'எல்லாம் திட்டம் போட்டுத்தான் என்னைக் கொழும்பில் இருந்து காயிதம் எழுதிக் கூப்பிட்டிருக்குவினம்".
அவன் விறுக்கென்று கதிரையை அரக்கிக் கொண்டு எழுந்தான். வளையைப் பிடித்துக் கொண்டு நின்றபடி இருண்டு கிடந்த சூனியத்தை உற்று நோக்கினான். ஒரு கணம் வெறுமை அவன் இதயத்தை அ£¤த்தது. மறுபடியும் கதிரையில் வந்து குந்திக் கொண்டு மேசையில் முகம் கவிழ்ந்தான். மீண்டும் தலையை நிமிர்த்தி அம்மாவைப் பார்த்தான்.
ஐயா....அக்கா....தம்பி....தங்கைகள். அவன் வாயிலிருந்து விடுதலை பெறப்போகும் வார்த்தைக்காகக் காத்து நிற்கின்றனர்.
;அதுக்கு.... இப்ப.... நீங்க என்ன செய்யப் போறீங்க...."
'நீ ஒம் எண்டு ஒரு வார்த்தை சொன்னால் சா¤ தம்பி. உன்னத்தான் பதில் மாப்பிள்ளையாக கேக்குவினம். அந்தப் புள்ளயும் நல்ல குணமானவள் மோன".
அவன் இப்போது அதிர்ச்சியடையவில்லை. அவனுக்கு அம்மா, ஐயா, அக்கா, தங்கச்சிமார்....மாமன், மாமி....மாப்பிள்ளை இந்த சமூகம் எல்லாவற்றிலுமே எ£¤ச்சல் எ£¤ச்சலாக வந்தது.
அக்காவுக்கு அவன் பிணை நிற்கவேண்டும். அவனைத் தொடர்ந்து வருகின்ற தங்கைமாருக்கு இவ்வாறு பிணை நிற்க எத்தனை தம்பிமார்கள் தயாராக இருக்கிறார்கள். அவனுக்கு என்று தனிப்பட்ட ஆசைகள்....விருப்பு வெறுப்புகள் அவன் எதிர்கால வாழ்வு பற்றி ஏன் இருக்கக்கூடாது? அத்தனையும் குடும்ப....உறவுகள் என்ற கட்டுக்குள் அடங்கவேண்டியவை தானா....?
அவன் மௌனமாகத் தலையை மேசையில் கவிழ்த்துப் போட்டுக் கொண்டு கிடந்தான். அம்மாவுக்குப் பொறுமை இல்லை. 'தம்பி....என்ன முடிவு மோன சொல்லுற....?"
அவன் மீண்டும் தலையை நிமிர்த்திப் பார்த்தான். அம்மாவைப் பார்க்க அவனுக்கு இப்போது பா¤தாபமாகத்தான் இருந்தது. எல்லாத் துயரங்களுமே அவள் முகத்தில் சாசுவதமாகிவிட்ட இறுக்கம்.
அவன் அமைதியாக பதட்டமில்லாமல் சொன்னான். 'அம்மா....இனிமேல் யாருக்கும் கல்யாணம் பேசப்போறதாக இருந்தால் பதில் மாப்பிள்ளை கேட்காத இடமாகப் போங்க".
அம்மா அவன் பேச்சைக் கேட்டதும் அப்படியே அலமந்து போய் நின்றாள்.
----

Saturday, June 04, 2005

எஸ்.சிவஞான சுந்தரம்(நந்தி) காலமானார்

யாழ்.பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியரும் மூத்த எழுத் தாளரும் சமூக மருத்துவத்துறை நிபுணருமான எஸ்.சிவஞான சுந்தரம்(நந்தி) நேற்றுக் காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 75. அண்மைக்காலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், நேற்று மதியம் யாழ்.போதனா வைத்தியசாலையில் மரணமானார்.அன்னாரின் ப+தவுடல் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இலக்கிய ஆர்வலர்கள், பல்கலைக்கழக சமூகத்தினர், பொது மக்கள் எனப் பெரும் எண்ணிக்கையானவர்கள் அவருக்குத் தமது அஞ்சலிகளைச் செலுத்தி வருகின்றனர். அவரது ப+தவுடல் நாளை முற்பகல் 10 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு யாழ். மருத்துவபீடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும். அஞ்சலியின் பின் ப+தவுடல் செம்மணி மயானத்தில் தக னஞ்செய்யப்படும்.

Sunday, May 22, 2005

வெறும் கூடு டானியல்ஜீவா-சிறுகதை



சற்று முன்புதான் திருந்தாசி மணியடித்து ஓய்ந்தது.முன்பெல்லாம் நள்ளிரவு மூன்றோ நான்கோ மணிக்கெல்லாம் விழித்து தொழிலுக்கு போவதுதான் தொழிலார்களின் வழக்கம்.அந்தோணியும் இதற்கு விதிவிலக்கல்ல.இப்போதெல்லாம் அப்படி நடப்பதில்லை.திருந்தாசி மணி ஆறு மணிக்கு கோயிலிருந்து அடித்த பின்னர்தான் தொழிக்கு போக வேண்டிய கட்டாய சூழ்நிலை. இந்திய இராணுவம் சனசமூக நிலைய கட்டிடத்திற்குள் முகாமிட்ட பின்னரே இந்தக் கால வரையறை கட்டாயநிலைக்கு வந்துவிட்டது.பொதுவாக இந்தச்சூழல் மீனவர்களுக்கு உடன்பாடில்லையென்றாலும் அவற்றை மீறி நடந்து கொள்ள எவருக்கும் துணிச்;சல் வரவில்லையென்று சொல்வதிலும் பார்க்க துப்பாக்கிச் சூடு வாங்கத் தயார் என்றால் அந்த முடிவை எடுக்கலாம் என்று சொல்வதுதான் பொருத்தமாயிருக்கும். காலையில் இராணுவத்தின் காவல் அரணுக்கு சென்று தொழிலுக்கு போகிற மீனவர்கள் வரிசையில் நின்று தமது அடையாள அட்டையை கொடுத்து பதிவேட்டில் பதிந்த பின் அடையாள அட்டையை அவர்களிடம் ஒப்படைத்து விட்டு கடலுக்கு போனால் வரும் போது அந்த காவல் அரண்ணுக்குச் சென்று வாங்கிக் கொண்டு வீட்டிற்கு போவர்கள்.இராணுவம் கட்டிடத்திற்குள் இருந்தாலும் அந்த வளவுக்குள்ளேயே ஒரு மூலையை ஒட்டி மண்மூடைகள் அடுக்கி ஒரு சிறிய கூடுபோல் காவல் அரண் போட்டிருந்தார்கள்.சிலமணித்தியாலத்திற்கு ஒரு முறை மாறி மாறி காவல் புரிவார்கள்.இதேபோல் கடற்கரையை பார்த்தபடியிருக்கும் கட்டிடத்தின் பின் பக்கமாக என்னெரமும் துப்பாக்கி சகிதம் உலாவித் திரிவார்கள.; முன்னரங்கில் மட்டுமல்ல கடல்பக்கமாக இருந்தும் வந்து தாக்குதல் தொடுக்கலாம் என்ற எச்சரிக்கையோடு மிகவும் அவதானமாக காவலிருப்பார்கள்.உள்ளுக்குள் ஒருவித பயமோ அல்லது பயமற்றோ இருக்கும் அந்த இருப்பில் காவல் அரணை கடந்து செல்கின்ற ஒவ்வொரு மனித முகத்தையும் உன்னிப்பாய் கவனிக்காமல் விடுவதில்லை.சிலர் தங்கள் கண்ணுக்குள் இதுவரையில் புலப்படாத முகமாய் இருந்தால் அவர்ளை மறித்து அடையாள அட்டையை பார்ப்பதோடு அவர்கள் பற்றிய முழுமையான விபரத்தை அறிந்து கொள்வார்கள். சந்தேகத்தின் பேரில் யாரும் கைது செய்யப்பட்டாள் அவர்களை எங்கு கொண்டு செல்கிறார்கள் அவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பது பற்றி அநதோணிக்கோ அந்த ஊரைச்சேர்ந்த யாருக்குமே தெரியாத விடயம்.
அந்தோணி தொழிலுக்குப் போவதற்கு தயாராகிக் கொண்டான். இன்று சனிக்கிழமை என்ற படியால் மாறனுக்கு பாடசாலை விடுமுறை. மகனையும் எழுப்பி விட்டான், தொழிலுக்குப் கூட்டிக் கொண்டு போவதற்காக. அறைக்குள் படுத்திருந்த மேரியின் இருமல் சத்தத்துடன் அந்தோணியின் மனைவி எலிசபேத்து தூக்கம் கலைந்து விழித்து விட்டாள். படுத்த படுக்கையில் கிடந்தபடியே... “இஞ்சேருங்க தேத்தண்ணி போட்டுத் தரட்டாங்கோ?” என்று கேட்ட போது எலிசபேத்தின் நினைவு அந்தோணியின் நெஞ்சில் முட்டியது. நேற்றிரவே அவனுக்கு எலிசபேத் சாப்பாடு போட்டு கொடுக்கும் போதே அவள் கொஞ்சும் குரலில் செல்லமாய் பலவற்றை சொன்னாள். அனேகமாக இருவரும் சாப்பிடும்போது தான் பல விடையங்கள் பற்றி பரஸ்பரம் புரிந்துணர்வுடன் கதைத்துக் கொள்வது வழக்கம். எப்போதாவது எந்தக் கருத்து நிலையில் முரன்பாடு எழுந்தாலும் அவர்கள் தங்களுக்குள் அன்றைய பொழுதே பேசித்தீர்த்துக் கொள்வார்க்ள். நேற்றைய பொழுதில் எலிசபேத் சொன்ன வார்த்தைகள் அவனைச் சுற்றிச் சுழன்று வந்துகொண்டிருந்தது. “இங்கேரப்பா நமக்கெண்டு இருக்கிற தொழில் கடலத்தொழில் தான். அதையும் இந்த பாழ்பட்டுப்போவார் வந்த பிறகு நேரக் கட்டுப்பாடு போட்டிட்டாங்க. இதால வலை இழுக்கப் போறதற்குள்ள விடிஞ்சுபோய் மீன,; றால் எல்லாம் வலைக்குள்ள இருந்து மீண்டு போய்விடுதுங்க. எத்தனை நாளுக்குத் தான் இப்படி வலை இழுக்கப்போய் வெறுங்கையோட வாறது. ஒருக்கா ஆமிக்காரன்கிட்ட கதைச்சு நேரத்தோடு தொழிலுக்கு போக வழிபண்ண மாட்டிங்களா..?”“எலிசபேத் நான் என்ன செய்ய முடியும். அவங்க என்ன தான் இருந்தாலும் ஆமிக்காரன்கள். அவங்க தங்கட மேலிடத்து ஓடரைத்தான் செய்வாங்க.”“உங்களோடதானே அந்த ஆமிக்காரன்கள் நல்லா கதைப்பாங்கள் எண்டு சொன்னீங்கயல்ல........ அவங்கட்டயாவது சொல்லிப் பாருங்கவன். அப்படி கேட்டு சரிவந்தால் மெத்தப்பெரிய உபகாரமாக இருக்கும் நம்ம ஊருக்கு. எனக்கு உடபெல்லாம் என்னவோ செய்யிறமாதிரி இருக்குது. நாரி வேற உழைவாய்யிருக்கு. காச்சல்கீச்சல் வருகிறமாதிரி போல இருக்கு. நான் தூங்கப்போறன்.” என்று எலிசபேத் சொல்ல,“அப்ப இரண்டு ‘டிஸ்பிறின்’ வாங்கிக் கொண்டு வரவாங்க போட்டுட்டு படுத்தா கொஞ்சம் சுகமாக இருக்குமல்ல.” என்று அந்தோணி கேட்டான்.“வேணாப்பா.... நாளைக்கும் இதேமாதிரி இருந்தா காலையில பார்த்துக் கொள்ளலாம். இப்ப நான் தூங்கப்போறன்.” என்று தூங்கப் போனவள் தான் இப்ப எழும்ப இசக்கம் இன்றி வார்த்தைகள் வந்த போது அந்தோணிக்கு எலிசபேத்தின் நினைவு அனிச்சையாக வெளிப்பட்டு விலகிச் சென்றது.“இங்கேரப்பா நான் கேட்டதக்கு ஒண்டும் பறையாமல் கொள்ளாமல் நிக்கிறையள். என்ன நடந்தது...?”மின்விளக்கு போடப்படாத இருள் சூழ்ந்த அறையில் இருந்து குரல் அந்த அமைதியை கிழித்துக்கொண்டு அந்தோணியின் காதில் விழுந்தது. அந்தோணி கோடிப்பக்கமாக மின்விள்க்கின்; வெளிச்சத்தில் ‘கடிப்பைத்’ தேடிக் கொண்டிருந்தான். “எழும்பி தேத்தண்ணி போட்டுத்தரவாங்க..?”மீண்டும் ஒடுங்கிய குரலில் எலிசபேத் கேட்டாள். “இந்த நேரத்தில எதுக்கு உனக்கு சிரமத்த கடலுக்கு போகேக்க சந்தியிலிருக்கிற அப்துல்லா காக்ககிட்ட குடிச்சுப்போட்டு போறன்” என்றான் அந்தோனி. எலிசபேத்து நேற்று தன் உடல் நிலை பற்றி சொன்னதை நினைவு வைத்துத்தான் இதைச் சொல்லியிருக்கலாம். “சில்லறைக்காசு உங்கட்ட கிடக்கோ...?” “இல்லையப்பா...”“என்ர பச்ச வைல் சீலை மூலையில முடிஞ்சு வைச்சிருக்கிற சில்லறைக் காசை எடுத்துக்கொண்டு போங்க...”. “சரியென எடுத்துக்கொண்டு போறன். நீங்க தூங்குங்க...” என்று சொல்லிக் கொண்டு மாறனையும் கூட்டிக்கொண்டு கடலுக்கு போவதற்கு புறப்பட்டார்கள்.
மங்கலான வெளிச்சத்தில்வீதி விறைத்து கிடந்தது.துயரத்தில் தோய்ந்த இருப்பின் ஈடாட்டத்தை இரவு சுமந்து கிடந்தது. கடற்கரையின் மெல்லிய அலையசைவு இராணுவம் தங்கியிருக்கும் கட்டிடத்தின் பின்பக்க கரையை மோதிக்ககொண்டிருந்தது. ஊதல்காற்றின் வீச்சில் ப+மி குளிர்ந்திருந்தது. காவல் அரண்களில் லாம்பின் வெளிச்சத்தில் கடல் செல்வதற்காக காத்திருக்கும் மீனவர்கள் நேர் வரிசையில் நின்றார்கள். ஒவ்வொருவரிடம் இராணுவம் அடையாள அட்டையை வாங்கி பதிவு செய்தபின் காவல் அரணுக்குள் இருக்கும் ஒரு சிறிய பெட்டிக்குள் அடிக்கி வைத்தார்கள். அந்தோணி அடையாள அட்டையை கொடுத்து பதிவு செய்து விட்டு கடற்கரைக்கு வந்து தோணியில் ஏறி மரக்கோலால் தாங்கத் தொடங்கினான். அந்தோணி கடையால் பக்கமாக நின்று தாங்க, மாறன் அணியப் பக்கத்தில் வங்கில் இடது காலை பிடிப்பாக வைத்துக்கொண்டு வள்ளத்தைத் தாங்கினான். அந்தோணி கடையால் பக்கதில் நின்று வள்ளத்தை தாங்குவதோடு வள்ளம் போகும் திசையை கவனமாக செலுத்தினான். சிலர் குறுக்குமறுக்காக களங்கண்ணி வலையை துறையால் பாஞ்சதால் அந்த வலைகளை அறுத்துக்கொண்டு போகாமல் அவதானமாக தாங்கிக் கொண்டு போனர்கள்.
களங்கண்ணி வலைகள் பல வெள்ளை பறிந்து கிடந்தது. நிலவுகாலம் நெருங்குகின்றது. இனிமேல் தான் எல்லோரும் வலையைப் பிடுங்கி துவர்ப்பட்டை போட்டு அவிச்சு மீண்டும் இருட்டு வந்தவுடன் கடலில் புதைப்பார்கள். அந்தோணி கொஞ்சம் வித்தியாசமாகச் செய்வான். களங்கண்ணி வலை இரண்டு கடலில் நிற்கும் போது வீட்டில் எப்போதும் இரண்டு களங்கண்ணி வலையை பொத்தி, அவிச்சு, காயப்போட்டு மேலதிகமாக வைத்திருப்பான். நிலவு காலம் வந்தால், வெள்ளை பறிந்த வலையை பிடுங்கி வீட்டுக்கு கொண்டு வந்து விட்டு, வீட்டில் இருக்கும் வலையை அடுத்த நாளே கடலில் புதைச்சு விடுவான். நிலவு காலத்தில் இறால் பிடிபடாவிட்டாலும், சில மீன் சாதி வலைக்குள் அகப்படும் என்பதற்காக.
கிழக்கால் வெள்ளாப்புக் கொடுத்துக் கொண்டிருந்தது. முனங்குப் பக்கம் இருந்து கொண்டல் காற்று விடாமல் மூசிக்கொண்டிருந்தது. களங்கண்ணி வலையை அந்தோணியின் வள்ளம் நெருங்கிக்கொண்டிருந்தது. கடல் காகங்கள் கடலுக்குள் விழுந்து விழுந்து மீனைக் கொத்திக்கொண்டு மேல்நோக்கி பறப்பதும், மீண்டும் கடலுக்குள் மூழ்குவதுமாக இருந்தது. வள்ளத்தை விரைவாக தாங்கினார்கள். கடல் சாதாளையை கிழித்துக்கொண்டு வள்ளம் வேகத்தில் முன்நோக்கி பாய்ந்து, பாய்ந்து போனது. மாரி காலம் என்பதால் துறைக்கரை கூட கொஞ்சம் ஆழமான கடல் பகுதி போல் இருக்கும். கடலின் நீர்ப்பரப்பில் வெண்ணாரைகள் தென்றல் போல் அசைந்து கொண்டு போனது. மாரிகாலங்களில் தான் அநேகமாக ‘சுணைநீர்’ மீனவர்களுக்கு பிடிப்பது வழக்கம். ‘சுணைநீர்’ தொழிலாளிகள் மீது மெல்லப் பட்டாலும், உயிரைக் கொல்லும் அளவிற்கு உடலை வருத்தி பாடுபடுத்தி விடும். அப்படி யாருக்கும் சுணைநீர் பட்டால் அடுத்த நாள் வரை அந்த வலி தாங்க முடியாமல் தவிப்பார்கள்;. கொஞ்சம் வசதி உள்ளவர்கள், யாழ்ப்பாண பிரதான வீதியில் உள்ள டொக்டர் பிலிப்பிடம் போனால், அவர் கொடுக்கிற மருந்துடன் அந்த வலி மறைந்து போய்விடும். இந்தச் சுணைநீர் எப்படி கடலில்...?அதுவும் மாரி காலத்தில் தான் திடீரென தோன்றுகின்றது என்றால், யாழ்ப்பாணப் பெரியாஸ்பத்திரியில் இருந்து இரசாயணக் கழிவுக் கூறுகள், கழிவுக் குழாய்கள் வழியாக பண்ணைப் பக்கமாக கடலோடு கலக்கின்றது. இந்தக் கழிவு நீர்தான் கடலில் கலந்து மாரிகாலத்தில் ஒரு வகையான இரசாயன பதார்த்தம் போல் கடலின் நீரின் மேற்பரப்பில் கண்ணுக்குப் புலப்படாமல் மிதந்து செல்லுகின்றது. தற்செயலாகவே தொழிலாளிகள் மீது பட்டுவிடுகிறது. இது காலம் காலமாய் இருந்து வந்ததா என்று பார்த்தால் அதுவும் கிடையாது. ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்னர் தான் இந்த ‘சுணைநீர் பிடிச்சது’ என்ற வார்த்தைப் பிரயோகம் புளக்கத்தில் வந்தது. இதை நிவர்த்தி செய்ய எவரும் முன்வரவில்லை.சுனை நீர் உடலில் படும்போது அது வழுக்குண்டு போய்விடும் என்பதால். அந்தோணியின் வள்ளத்துக்குள் எப்போதும் ஒரு போத்தலில் தேங்காய்யெண்ணை நிரப்பி வைத்திருப்பார்.
அந்தோணி வள்ளத்தை வலையோடு அணைத்துக் கட்டினான். போத்தலோடு இருந்த தேங்காய்யெண்ணையை எடுத்து அந்தோணியும், மாறனும் உடம்பு முழுக்க ப+சிக் கொண்டு, கடிப்போடு வலைக்குள் இறங்கும் போது கடல் தண்ணியைத் தொட்டு அந்தோணி பிதாச் சுதன் போட்டு விட்டு இறங்க அதன் பின் மாறனும் அதேமாதிரிச் செய்து கொண்டு கடலில் இறங்கினான். முதல் இழுப்பை இழுத்து மாட்டி வள்ளத்துக்குள் போட்டார்கள். மீண்டும் அடுத்த இழுப்பிற்காக மாறன் கடிப்பின் ஒரு பக்கத்தை கையால் வலையின் வாசல் பக்கத்தை மறைத்த படி நிற்க அந்தோணி சுற்றி இழுத்துக் கொண்டு வந்தான். சிறகு வலைக்குள் கிடக்கின்ற, கடல் உணவுகள் அனைத்தும் கடிப்பைப் போட்டு இழுப்பதன் மூலம் அகப்பட்டு விடும். சில வேளை, கடிப்பை வளைத்து இழுக்கும் போது மீனோ, றாலே கழிந்து போய்விடும். அதற்காகத் தன் ஒரு முறை மட்டும் இழுக்காமல் இரண்டு அல்லது மூன்று முறை இழுப்பது வழக்கம்.மூன்றாவது முறையாகவும் வலை இழுத்;துவிட்டு கடிப்பை வள்ளத்திற்குள் வைத்து விட்டு வள்ளத்திற்குள் மாறன் எறினான்.வலை வெள்ளை பறிந்து போய் விட்டதால் வீட்டில் துவர்வைத்து காயப் போட்டு கட்டிவைத்திருக்கும் வலையை நாளை கொண்டு வந்து புதைப்பதற்காக அந்தோணி வலையை புடுங்கத் தொடங்கினான்.
மாறன் வள்ளத்திற்குள் இருந்து கொண்டு மீனை தனியாகவும் றாலைத் தனியாகவும் தெரிவு செய்து அத்தாங்கிற்;குள் போட்டுக் கொண்டிருந்தான்;.உப்பிய வயிறோடு உயிரோடு வள்ளத்தின் நடுவங்குப் பக்கமாக கிடந்த பேத்தை மீனை எடுத்து நண்டுத் தொழிலுக்கு போறவர்களுக்கு கொடுப்பதற்காக கடையால் பக்கமாக வீசி எறிந்தான்.வீசிய பேத்தைமீன் கடையால் பக்கமாக கிடந்த தண்ணீருக்குள் விழ வள்ளத்தின் உட்ப்பரப்பில் உப்புத்தண்ணீ சிதறியது.
“மாறன்”என்று அந்தோணி கூப்பிட வள்ளத்திற்குள் குனிந்து கொண்டிருந்த மாறன் தலையை நிமிர்த்தி தந்தையை பார்த்தான்.“என்னப்பா கூப்பிட்டியலோ.....?”“ஒம் மாறன்......கம்புகுகளை கடலில விட்டிட்டு போவமா...?”“ஏனப்பா யாரவது களவெடுத்துக் கொண்டு போகமாட்டாங்கள....?”“என்னத்த புடுங்கிக் கொண்டு போகப் போறாங்க.....நாளைக்கு காலையிலேயே வீட்டில இருக்கிற துவர் வைச்ச வலையைக் கொண்டு பாய்யிறதுக்கிடையில...கம்பையும் புடுங்கிக்கொண்டிருந்தால் உனக்கு ரீயுசனுக்கு போறதுக்கு நேரம் போய்விடும்”“அப்பா!கம்பில கொட்டலசு இல்லையோ...?”“இல்லையட மாறன்..”“அப்பா!அப்ப புடங்காமல் கம்பை கடலிலேயே விட்டிட்டு போவம்....”“ம்....மாறன்.மீனையையும் றாலையும் தெரிஞ்சு போட்டிட்டு நடுப்பலகை பக்கமாக நின்டு கொண்டு வலையில அப்பிக்கிடக்கிற சொளியை வள்ளத்தில அடிச்சுப்போட்டு வள்ளத்திற்குள் ஏத்து மாறன்......”“ஓமப்பா....தெரிஞ்சுட்டன்.அத்தாங்கை கடையாலுக்குள்ள வைச்சுப் போட்டு வலையை ஏத்துறனப்பா” என்றான் மாறன்.“மாறன் முதலில்ல சிறகை அடிச்சுப்போட்டு ஏத்து.....அதுக்குப் புறவு நிலவலையை ஏத்தி ஒரு வங்குக்குள்ளே கிடக்கக் கூடிய மாதிரி போட்டு விடு” என்றான் அந்தோணி..“ஒம் அப்பா”என்று சொல்லிக் கொண்டு நடுப்பலகை பக்கமாக வந்து வலையை வலது கையால் பிடித்து வள்ளத்தின் பலகையின் வெளிப்பரப்பில் அடிப்பதும் பின் கடலில் தோய்த்து வள்ளத்திற்குள் வலையை ஏத்தத் தொடங்கினான் மாறன்.
வானம் மப்பும் மந்தாரமுமாய் இருந்தது.மழை வருவதற்குரிய சாத்தியக் கூறுகள் அதிகமாய் காணப்பட்டது.இடி மின்னல் என்று அடிக்கடி எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தது.கருமேகம் திரட்சியாய் வானத்தில் தோண்றிய போதும் வெண்மேகமும் அங்கொன்றாய் இங்கொன்றாய் வியாபித்துக் கிடந்தது
“அளப்புளு”கடலின் நீர் மட்டத்தில் சில மிதந்தும் சில கடல்மட்டத்தில் தாண்டும் கிடந்தன.அளப்புளு ஒரு மீன் வகை அல்ல ஆனால் அது பூ வடிவில் அழகாய் இருக்கும்.அதைத் தொட்டால் ஒருவகை கடி தோண்றும்.அதுவும் கொஞ்ச நேரம் மட்டும்தான். பரவைக் கடலில் மட்டுமே இது காணப்படும். கெலுறுமீன்,யப்பான்மீன் போன்ற மீன்களும் மிக ஆழம் குறைந்த சதுப்பு நிலம் கொண்ட துறைப் பகுதியிலே காணப்படும்.சாதளை என்றொரு செடி வகையும் இப்பகுதியில் வளர்ந்து நீட்டி நிமிhந்து கிடக்கும்.கடலில் நடக்கும் போது சாதளை கால் கைகளை வெட்டிக் கிழித்து விடும். இதைவிட “ஆர்க்கு”என்று ஒரு சிப்பி வகையும் சில இடங்களில் ஆவெண்டு கடலின் நிலமட்டத்தில் விளைந்து கிடக்கும். மீனவர்கள் நடக்கும் போது கால் இதன்மீது தடுமாறி வைத்தால் பெரிய கத்தியால் வெட்டியது போன்றுஆழமான வெட்டுக் காயத்தை உண்டுபண்ணி விடும்;.நரிச்சுங்கான் என்றொரு மீன்வகை உண்டு இது அழகாக வரிக் குதிரைகளில் விழுந்திருக்கும் கோடுகள் போல் உடல் முழுதும் கொண்டிருக்கும்.இது சில மனிதர்கள் வெளித் தோற்றத்திற்கு நல்லவர்கள் போல் நடித்துக் கொண்டு உள்ளே விசத்தை சுமப்பவர்கள் போல் இருக்கும். பார்ப்பதற்கு மிக அழகாய் இருக்கும் சுங்கான்மீன் மீது கை தடுமாறி உடலின் மேற்ப் பரப்பில் இருக்கும் முள்ளின் மீது பட்டால் உயிர் போக வலி எடுக்கும் இது கடலின் மேற்ப்பரப்பில் ஒரு கூட்டமாகவே நீந்தித் திரியும்.களங்கண்ணி வலைக்குள் கூட ஒரு கிளையாகத்தான் மாட்டிக கொள்ளும். இவையெல்லாம் கடலில் கிடந்து மீனவர்களை துன் புறுத்திய போதும் கடல்தான் அவர்களுக்கு கடவுள் போல....
வதவதவென்று வலையை வள்ளத்தில் அடித்துக் கொண்டு சிந்தனையில் நின்ற மாறன் திடீரென ஏதோ தோண்ற....“அப்பா” என்று கூப்பிட்டான்.“என்ன மாறன்”என்று பதிலுக்கு அந்தோணி கேட்டான்.“அப்பா...!உங்களுக்கெனப்பா அந்தோணி என்டு அப்பு பெயர் வைச்சவா.;..?”“அப்பு அந்தோணியார் மீது அதிகம் பற்றுள்ளவர் அதனால் அந்தோணி என்று எனக்கு பெயர் வைத்தவர்.ஆனா நான் தமிழ் பற்றுள்ளவன்.அதனால் மாறன் என்ற பெயரை உனக்கு வைத்தனான். “அப்பா! அப்புவட காலத்தில தமிழ் பற்றுயில்லையோ...?”“இல்லையெண்டு சொல்ல முடியாது......நாற்பத்தெட்டுக்கு முதல் நம்மள வெள்ளையன்தான் ஆட்சி செய்தான்.அப்ப மொழிப் பற்று நம்ம சனத்தட்ட இருந்தாலும் என்ர ஜயாவுக்கு இருந்த மாதி தெரியல...அவருக்கு கிறிஸ்த்தவ மதத்தை தவிர பெரிசாக எதிலும் பற்றற்வராகத்தான் சாகும் வரையில் இருந்தவர்.நம்மட மூதாதையர் கிறிஸ்தவர்களாக இருந்ததற்கான எந்தச் சாத்தியக் கூறுகள் எதுவும் கிடையாது.ஒல்லாந்தர் போத்துக்கீசர் இங்குவந்த பிறவுதான் கிறிஸ்தவம் பரப்பப்பட்டது. பெரும்பாலும் கரையோரப் பிரதேசத்தை அண்டியே பரப்பப்பட்டு நன்றாக வளர்ந்திருக்குது....” அந்தோணி வைத்த பிரசங்கத்தை பேசாமல் பறையாமல் மாறன் வள்ளத்தில் நின்று கேட்டுக்கொண்டு நின்றான.;
அந்தோணி நிலவலையைப் பிடுங்கிக்கொண்டு;;...நிலவலையோடு கட்டப்பட்ட “றால் கூட்டை” வலையிலிருந்து பிடுங்கி றால்கூட்டின் முன் பக்கமாக வட்ட வடிவில் வலைக்குள் கோர்த்திருக்கும் இரும்புக் கம்பியை இடது கையால் பிடித்துக் கொண்டு வலது கையால் அந்தோணி வளைத்தான். நீண்டு வட்ட வடிவில் பிண்ணப்பட்ட றால் கூட்டு வலை.. றால் பிடிப்பதற்காக பிரத்தியேகமாக களங்கண்ணி வலையில் வைக்கப்படுவது. றால்கூட்டை வளைத்துக் கொண்டு வந்த அந்தோணி அடிப்பக்கமாக எல்லா றாலும் சேர்ந்து கிடக்கும் என்ற நம்பிக்கையோடு “தூர்ரை” கையால் வளைத்து பிடிக்க றால் கூட்டுக்குள் ஓரு மச்சசாதியிம் இல்லாமல் கிடந்ததைக் கண்டு அந்தோணி விக்கித்துப் போனான்.அந்தோணி வள்ளத்திற்குள் நின்ற மாறனை பார்த்து.....“மாறன் றால் கூட்டில ஒரு மச்சசாதியையும் இல்ல...யாரோ வெள்ளனத்தோடு வந்து தட்டிக் கொண்டு போய்விட்டாங்க” என்றான் அந்தோணி.“அப்பா வெறும் கூடுதான இருக்கு...”“ஓம் மாறன் வெறும் கூடுதான் என்ர கையில இருக்கு...இது மட்டுமல்ல வெறுங் கூடு.... அங்க பார் என்று சொல்லிக் கொண்டு கையை பரலோகமாத கோயிலுக்கு முன்பாக இருக்கிற சனசமூக நிலையக் கட்டிட வளவுக்குள் இருக்கிற இந்திய ஆமிக்காரனின் காவல் கூட்டை காட்டிக் கொண்டு... “இந்தக் காவல்கூட்டினால் நாங்கள் படும்துன்பம் கொஞ்ச நெஞ்சமில்ல... ஒருநாள் நம்மட பொடியல் அவங்கள அடிச்சு கலைச்சு விடுவாங்க அப்ப அதுவும் வெறும் கூடாய்த்தான் இருக்கும்...”என்று அந்தோணி சொல்லமாறன் உன்னிப்பாய் அந்தோணி சொன்னதைக் கேட்டுக் கொண்டு நின்றான்.
(முற்றும்)

Saturday, May 21, 2005

செம்பியன்செல்வன் காலமானார்!

இலங்கையின் மூத்த எழுத்தாeரும் இலக்கிய வாதியுமான ஆ.இராஜ கோபாலன் (செம்பியன் செல்வன்) நேற்றுக் கொழும்பில் காலமா னார். இறக்கும் போது அவருக்கு வயது62. நாவல், சிறுகதை, நாடகம் உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை, மேடைப் பேச்சு, ஆன்மீகம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்ட இவர், ஆசிரியராக, அதிபராகப் பணியாற்றி யாழ். கோட்டக் கல்விப் பணிப்பாளராக ஓய்வுபெற்றார். மிக இளம் வயதிலேயே எழுத்துத் துறையில் பிரவேசித்த இவர், விவேகி, புவியியல், நுண்ணறிவியல், ஆகிய சஞ்சிகைகளின் இணை ஆசிரியராகவும் அமிர்தநங்கை, கலைஞானம், ஆகிய சஞ்சிகை களின் ஆசிரியராகவும் பணியாற்றினார். வாடைக்காற்று திரைப்படத்திற்கு திரைக்கதை வசனங்களை இவர் எழுதியிருந்தார். Thanks for Uthayan (Jaffna)