Pages

Sunday, March 06, 2005

பனி தூங்கும் இரவில்


காலப் பெருவெளியல்
கரையாத நினைவுகள்
விரிகின்ற போது
கனவு சுமந்தகாலம் ஒவ்வொன்றாய்
ஒட்டிய வயிறோடு
உறக்கமின்றியலைந்த
நாட்களின்தான்
உன் முதல் மொழிஎன் காதில் விழுந்தது
அந்தக் கணப்பொழுதிலிருந்தே
உன்னையும் உன் வார்த்தைகளையும்
உண்மையிலும் உண்மையாக
என் நெஞ்சிற்குள்
நேசிக்கத் தொடங்கினேன்.
உன் வரவில்
உயிர்த்தெழுந்தது மட்டுமல்ல
என்னை எனக்குள்
கண்டும் கொண்டேன்.
அயல் வீட்டுக்காரனோடும்
அடுத்தவனோடும்
வெறுப்புணர்வு வர
காலம் துரத்த
கடல் கடந்துஇங்கு வந்தேன்.
நான் நிறப்பூக்களுக்குள்
நிஜத்தை தொலைக்க
மாலைப் பொழுது மயங்கும்…
முன்னிரவில்முரட்டு
மனிதர்களிடம் ஊழைப்பிற்காக
உயீர் ஒடுங்கும்
பின்னிரவில்
கானல் வரிகளாய் கனவு...
சிலவேளையில்
சிந்தனையில் மூழ்கும் வேளை
உன் நினைவு
மனசின் ஓரத்தில் வந்து
உட்காந்து கொள்ளும்.
தூக்கியெறிய முடியாமலும்
தேக்கி வைக்க முடியாமலும்
முரண்பட்டு;..
நான் இன்னும்
உயீர் மூச்செறிந்து
பனி தூங்கும் இரவில்
காலச்சுமையோடு..

No comments: