Pages

Thursday, March 31, 2005

இப்போதுஉனக்காக...

-நாவாந்துறைடானியல்ஜீவா-
கனவுருகும்
காலைப் பொழுதில்..
அவள் வந்து போவள்.. ..
நானிருக்கும் தேசம்@
நீண்ட இருளில்
மூழ்கும் போது...
காதல் எப்படி
என்னுள்...
எழுச்சிகொள்ளும்..

எழுதுவதற்கும்
எழும்புவதற்கும்..
சோம்பறித்தனத்தில்
கண்களை மூடிக் கொண்டு
கட்டிலில்
உடலைத்தளரவிட்டேன்.

ஓசையற்று@
உறங்கிக் கிடந்த
எனது ஊரில்
அந்நிய முகங்களைக்கண்டு
அவசரமாய்@
நாய்கள்; ஊளையிட
ஊரெவிழித்தது.
இன்று மட்டுமல்ல@
எங்கள் வாழ்வே
இப்படியாகிவிட்டது..

எலிக்காது போல்@
என்காதுகளும்
மனக்கண்களும்
விழித்தன...

எங்கோ..
எழுந்த அழுகுரலோடு
பின்னால் துப்பாக்கி வேட்டு@
தப்பிக்காமல்
தலையை குறிபார்த்திருக்கலாம்.

அதன் பின்
வாகனம்..
இரைச்சலோடு
புறப்பட்ட வேக ஒலியைத்தவிர
அந்தப்பின்னிரவு
அடங்கிப்போனது.


விடிந்ததும்
முகம் கழுவ
முகத்தோடு பலர்..
நானும் அவர்களில்@
ஒருவன.;
காலை விழிப்போடு
காற்றும் வாங்கும்
காலம்@
காலவரையற்று
காணமல் போய் விட்டது.

யாருபெற்ற பிள்ளையோ
நானறியேன்..
வெட்டிப்பிளந்து
வேடிக்கை பார்ப்பதற்காகவ
போசக்குணவுண்டு
பத்து மாதம் சுமந்தாய்
உன் மகனை...

இந்த மண்ணை நேசித்த
இந்முகத்த உன்மகன்
சுக்குநூறாய்
சுருங்கிப் போவதற்காகவ
சுடு மணலில்
நார்க்கடகம் சுமந்து
நாளாந்தம்
மீன் விற்றாய்.

புனிதப் படுகையில்
போர்த்துக்கிடந்த
வெள்ளை மனங்கள்
வெளுத்துப்போனது
எப்படி?

வாயிருந்தும்
வார்த்தையிழந்து..
எனது வீதியில்
நடைப்பிணமாய்
நான் அலைந்ததை
உனக்குத்தெரியுமா?

இப்போது
உனக்காக எதைச்செய்வேன்@
அழுவதைத்தவிர...

No comments: