Pages

Monday, November 08, 2010

வெளியீட்டு விழா

வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட படங்களில் இன்னொரு பகுதி 3


எழுத்தாளர் தேவகாந்தன்.


கவிஞர் செழியன்.




Sunday, November 07, 2010

படங்களில் இன்னொரு பகுதி-2

இன்று சனிக்கிழமை,நவம்பர் 06,2010 மாலை02.30 மணியளவில்
MID SCARBOROUGH COMMUNITY CENTRE
(Don Montgomery CRC)
2467 Eglinton Ave East (@Kennedy)
நடைபெற்ற தேவகாந்தனின்
இரண்டு நாவல்கள்(விதி,லங்காபுரம்)
வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட படங்களில் இன்னொரு பகுதி-2





Saturday, November 06, 2010

இன்று சனிக்கிழமை,நவம்பர் 06,2010 மாலை02.30 மணியளவில்
MID SCARBOROUGH COMMUNITY CENTRE
(Don Montgomery CRC)
2467 Eglinton Ave East (@Kennedy)
நடைபெற்ற தேவகாந்தனின்
இரண்டு நாவல்கள்(விதி,லங்காபுரம்)
வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட படங்கள்











Saturday, October 30, 2010

தேவகாந்தனின்
இரண்டு நாவல்கள்
வெளியீடு


விதி
முதல் பதிப்பு வெளிவந்தபோது வாசகப் பரப்பிலும், விமர்சனத் தளத்திலும் காத்திரமான இடம்பெற்றுக்கொண்ட தேவகாந்தனின் இந் நாவல் ஓர் அகதியின் கதையைக் கூறுவது.

லங்காபுரம்
ராவண கதையின் மறுவாசிப்பு. சுமார் மூவாயிரமாண்டுப் பழைமையான லங்காபுரத்தின் கதையை நவீன ஆய்வுகளினதும், புதிய சரித்திர காலக் கணிப்பீடுகளினதும் பின்னணியில் பொருத்தி புனைவும் வரலாறுமாக முன்னெடுக்கிறது லங்காபுரம் நாவல்.


காலம்:சனிக்கிழமை,நவம்பர் 06,2010 மாலை02.30 மணி
இடம்: MID SCARBOROUGH COMMUNITY CENTRE
(Don Montgomery CRC)
2467 Eglinton Ave East (@Kennedy)

மேலதிக தொடர்புகளுக்கு
தேவகாந்தன்:416-458 9426
டானியல்ஜீவா:416-500 9016

Monday, May 24, 2010

சதுரக் கள்ளி

எனக்குப் பிடித்தகதைகள் 3
சதுரக் கள்ளி –
தேவகாந்தன்
அன்று சனிக்கிழமை. தூக்கம் கலைந்தும் உடம்பு சுறுசுறுப்புக்குத் திரும்பாத காலை வேளை. யோசிக்க எவ்வளவோ இருந்தன. இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தம் இருந்தது. கனடாவில் கொடுக்க வேண்டிய வங்கிக் கடன் பிரச்சினைகள் இருந்தன. இருந்தும் மீண்டும் மீண்டுமாய் அவனுக்கு அந்த முட்செடியின் நினைவுதான் ஏனோ எழுந்துகொண்டிருந்தது. போன கிழமையில் ஒருநாள் உயர்ந்து வளரும் அந்த முட்செடியின் மேல்பாகம் வேலிக்கு மேலால் வளர்ந்து நின்றுகொண்டிருப்பதான கனவு தோற்றமாகியிருந்தது. பற்கள்போன்ற முட்கள் தெரியும்படியான ஒரு அசுரச் சிரிப்போடு அவனை நோக்கி அது தலையசைப்பதுபோன்ற காட்சி. எண்ணாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து அவனைத் திடுக்கிட்டு எழும்பவைக்கிற காட்சியாகவிருந்தது அது. அவன் அலறிக்கொண்டும் எழுந்திருக்கலாம். ஏன் ஏதாவது கெட்ட கனவு கண்டீர்களா? என்று காலையில் அவனது மனைவிகூடக் கேட்டாளே. அதுவும் ஒரேநாள்தான். கனவா, நினைவின் தடம் புரள்வா என்றுகூட அதுபற்றி இன்னும் தெளிவிருக்கவில்லை அவனுக்கு. அந்தக் கனவின் பின்தான் அந்த நிலைமை ஏற்பட்டதோ? இருக்கலாம். அது அவனது நினைவுகளின் முக்கியமான கூறினைக் கொண்டிருந்த இடமாயே இருந்ததை அவன் எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் யாழ்ப்பாணத்தில் தன் வீடு சென்றிருந்தபோதே உணர்ந்திருந்தான். வாழ்வை வழி நடத்தும் மூலாதார உணர்வுகளுக்குக் காரணமான சில சம்பவங்கள், பெரும்பாலும் மேலெழுந்தவாரியான நினைவுகளில் படாமலே இருந்துவிடுவதை அனுபவம் அவனுக்கு காட்டிக்கொடுத்திருக்கிறது. அந்தப் பயணம் அவனுக்கு அதிமுக்கியமான ஒன்று. வழி தெரியாதிருந்தது. திசைமூலம் மட்டுமே அன்று தன் வீட்டை அவன் அடையாளம் கண்டு சென்றடைய முடிந்திருந்தான்.
அவனது ஊரிலே ஒரு வயல் இருந்தது. அதன் மத்தியில் ஒரு தாமரைக் குளம். குளத்தோரத்தில் மருதமரம் ஒன்று. சூழலில் பசுமை கொஞ்சம் குறைந்த மாதிரித் தென்பட்டதே தவிர, அந்த அடையாளத்தில் மாற்றமெதுவும் பெரிதாக நிகழ்ந்திருக்கவில்லை. அதன் முன்னால் பிரதான சாலையிலிருந்து குத்திட்டாய்ப் பிரிந்து ஒரு தார் றோட்டு சென்றிருக்கும். நண்பனிடம் சைக்கிளை இரவல் வாங்கிக்கொண்டு அந்த இடத்தை ஒரு மாலையில் வந்தடைந்த விவேகானந்தன், திகைத்துப் போனான். அந்த வயற் குளத்திற்கு முன்னால் இருந்திருக்கக் கூடிய தார் றோட்டுக்கு என்னானது? அது இருந்த இடத்தில் ஒரு வெண்கோடு மட்டுமே ஓடியிருந்தது. இரண்டு பக்கங்களிலும் ஆளுயரத்திற்கு வானஞ்சம்பும், ஒட்டொட்டியும். கண்டதோ கேட்டதோ இல்லை, புல் பூண்டுகள் எந்த ஊரிலும் அந்தளவு உயரத்துக்கும், அந்தளவு செழிப்போடும் முளைக்கக்கூடுமென்பதை. அந்த வழிதான் முன்பு இருந்த தார் றோட்டின் எச்சமென்பதை, ஓரத்தில் மின்சாரமும், அதைத் தாங்கி வந்திருந்த எஃகு கம்பிகளும் அற்று நின்றிருந்த பழைய மின்சாரத் தூண் உறுதிப்படுத்த அவன் மேலே சென்றான்.
பிரதான சாலையிலிருந்து சற்றொப்ப இரு நூறு யார் தூரத்தில் அவனது வீடு முன்பு இருந்தது. அப்போது இருநூறு யாருக்கு மேலே வந்திருந்தும் அவனுக்கு தனது வீடு தென்படவில்லை. எங்கே அவனது வீடு என்று யாரையாவது விசாரிக்கலாமெனில் யார் கண்ணில் தட்டுப்பட்டார்கள்? எங்கோ தொலைவில் யாரோ கதைத்துக் கேட்டது. எங்கோ தொலைவில் ஒரு வயற் குருவி கத்திக்கொண்டு ஓடியது. அவ்வளவுதான் அந்த ஊர் கொண்டிருந்த வாழ்வியக்கத்தின் சத்தங்கள்.
விவேகானந்தன் மேலும் மனத்தில் அதிர்வுகொள்ள, சற்றுப் பின்னால் அறிகையானான் தான் அப்0போது நின்றுகொண்டிருந்த இடத்துக்கு முன்னாலேதான் இருக்கிறது தன் நிலமும், வீடும் என்பதை.
விவேகானந்தன் இன்னும் எச்சமாய் நின்றிருந்த வேலி மரத்தில் சைக்கிளைச் சரித்துவிட்டு உள்ளே சென்றான். படி, விறாந்தை, விறாந்தையோடிருந்த காம்பறா, பெரிய அறை, சின்ன அறை, சமையலறையெல்லாம் அந்நந்த இடத்தில் அந்தந்தப்படியேதான் இருந்தன. ஆனால் சீமெந்து, கல் தவிர வேறு எதுவும் இல்லாததாய் ஒரு செட்டை உரித்த கோழிமாதிரி நின்றுகொண்டிருந்தது வீடு. நிலைகள், ஜன்னல்களெல்;லாம் மிக்க அழகாகப் பெயர்த்தெடுக்கப்பட்டிருந்தன. மிக நிதானமாகச் செய்யப்பட்ட வேலை. மிகுந்த கைத்தேர்ச்சி பாவிக்கப்பட்டிருந்தது. ஒரு நிலை அல்லது ஜன்னல பெயர்க்கப்பட்ட இடத்தில் அதே உயரம் அகலமான நிலையையோ ஜன்னலையோ வைத்து சிறிது சாந்து குழைத்து அப்பிவிட்டால் அப்படியே பொருந்திப்போகிற மாதிரியான பெயர்ப்புக்கள். அந்தளவு கைத்தேர்ச்சியடைய அந்தக் கைகள் எத்தனை பெயர்ப்புக்களை அதுபோல் செய்திருக்கவேண்டும்! விவேகானந்தன் கண்களில் நீர் தளும்ப எண்ணி வியந்தான்.
வானம் மெல்லிய வெளிச்சம் காட்டி மேலே விரிந்து கிடந்தது. முன்பெல்லாம் அவ்வாறு தெரிந்து விடாது. மாமரங்கள், பலாக்கள், வேம்புகள், மஞ்ஞவுண்ணாக்கள் என சோலைபத்திக் கிடந்த வளவு அது. இருள்வது பிரக்ஞையாகாமல் விறாந்தையிலேறி விவேகானந்தன் சின்ன அறைப் பக்கம் வந்தான்.
அதுதான் சின்ன வயதில் அவனுடைய அறையாக இருந்தது. தெற்குப் பக்கமாய்ச் சுவரோரத்தில் மேசை. அதன்மேல் பள்ளிக்கூடப் புத்தகங்கள், கொப்பிகள்.
ஆனந்து என்று அம்மா நீட்டி அழைப்பாள். அவன் படித்துக்கொண்டிருந்த ஆழ்ச்சியில் கேட்கமுடியாது போய்விடுவான். அல்லது கேட்டாலும் ‘ஓ’யென்று பதில் தர இயல்பூக்கம் அற்றிருந்திடுவான். அம்மா வாசலில் வந்துநின்றுதான் பிறகு பேசுவாள்;. கடைக்குப் போய்வர, குழையொடிக்க அல்லது அப்படி ஏதாவதொன்றுக்குக் கேட்பாள். ஆனந்து நல்லபிள்ளை. மறுப்பதில்லை.
அப்போது அந்த வளவுக்குள் நடுவேலி இருக்கவில்லை. ஆனந்தன் பார்வை திரும்பினால் பட்டுக்கொண்டிருந்தது பாக்கியம் மாமி வீடுதான். பாக்கியம் மாமிக்கு ஆனந்தன்மீது நல்ல பிரியம். அவனுக்கும் மாமிமீது நல்ல வாரப்பாடு. பின்வேலி பாக்கியம் மாமியாக்களுக்கு உரித்தானது. அறிக்கையாக அடைக்கப்பட்ட வேலிதான். ஆனாலும் அதில் ஒரு பொட்டு எப்படியோ வந்துவிடும். பொட்டு வைக்கிறது முதலில் கோழி. பிறகு ஆட்டுக் குட்டிகள். பிறகு ஆனந்தன்தான்.
பாடசாலைக்கு விடுதலையானாலோ, சனி ஞாயிறுகளிலோ பொழுதுபட்டவுடன் படிக்கச்சொல்லி வீட்டிலே பெரும்பாலும் கரைச்சல் இருப்பதில்லை. படிப்பு அந்நாட்களில் அவனது இ‘;டபூர்வமான வி‘யம். ஆனந்தன் பாக்கியம் மாமி வீட்டுக்குப் போவான். மாமி குளிக்க கிணற்றடிக்குப் போனால் லாம்புகொண்டுபோய் வைத்;;;திருப்பது அவன்தான். குளிக்கும்போது தண்ணீர் தெறித்து லாம்புச் சிமிலி உடைந்துவிடுமென்று மாமிக்குப் பயம். மாமி குளித்து முடிந்து ஈரம் துவட்டி வந்ததும் ஆனந்தனைக் கட்டிப் பிடித்து நல்லபிள்ளையென்று கொஞ்சுவாள். முலைகள் பட அவள் கொடுக்கும் அந்த அணைப்பு ஆனந்தனுக்கு வெகு சந்தோ‘மாயிருக்கும். பாக்கியம் மாமி ஐயா அளவுக்கு உயரம் பருப்பமானவள். பெரிய பெரிய முலைகள் அவளுக்கு. அந்த முலைகளில் அவனுக்குத் தனிக் கவனம் இருந்தது அந்த வயதிலேயே.
எப்படியோ அந்த இரண்டு வீட்டாருக்குமிடையில் இருந்த அன்னியோன்யம் ஒருபோதில் தெறித்துப்போனது. பொட்டும் அடைபட்டுப் போனது. ஆனந்தன் அடைந்துவந்த இனம்புரியாத இன்பமும் இல்லாது போய்விட்டது. ஆனந்தனுக்கு குடும்பப் பிளவின் காரணம் தெரியவில்லை. ஆனால் அது ஒருவரையொருவர் பார்க்க பேச பிடிக்காத அளவுக்கு வன்மமாக இருந்ததை மட்டும் அவன் அறிந்திருந்தான். அதுபோதும் அவனுக்கு. அதேயளவுக்கு அவனும் அவர்களைப் பார்க்கப் பிடிக்காமலும், பேசப் பிடிக்காமலும் இருக்கப் பழகிக்கொண்டான்.
பாக்கியம் மாமி இரவிலே அப்போதும்தான் குளிக்கிறாள். லாம்பு கிணற்றடி மறைப்பு வேலியில் தொங்கிக்கொண்டிருக்கிறது. ஆனந்தன் சின்ன அறையிலிருந்து கண்டுகொண்டிருக்கிறான் எல்லாம்.
அதற்கும் ஒருநாள் முற்றுப்புள்ளி விழுந்தது. ஐயா ஒரு சனிக்கிழமை தன்கீழ் வேலைசெய்யும் உதவிமேசன்கள், முட்டாள் வேலைசெய்வோரை அழைத்து வந்து வளவுக்குள் நடுவேலியொன்று போட்டுவிட்டார். முகமறைப்புக்கு மூன்று வரி கிடுகும் கட்டப்பட்டாயிற்று.
ஒரு மழைக்காலம் முடிந்த நாளில் தற்செயலாக நடுவேலிப் பின்புறத்தில் ஒரு பசிய முட்செடித் தாவரத்தைக் கண்டான் ஆனந்தன். கொடுவாக் கத்தி எடுத்துவந்து அதை வெட்டப்போனவனைத் தடுத்து ஐயாதான் கொண்டுவந்து முளைக்க வைத்ததாக அம்மா சொன்னாள். ஏனென்று கேட்டதற்கு, பாக்கியம் வீட்டாரின் எரிச்சல், பொறாமைகளை மட்டுமில்லை, அவர்கள் செய்துவிடக்கூடிய செய்வினைகளையும், ஏவிவிடக்கூடிய பில்லி சு+னியங்களையும்கூட அந்த சதுரக்கள்ளி மந்திர மகத்துவத்தோடு நின்று தங்களைக் காக்குமென்றாள்.
எப்படியோ மெல்லிய அச்சமொன்று ஆனந்தன் மனத்தில் விழுந்துவிட்டது. பரவசம் விளைத்த முலைகளசைய பாக்கியம் தன் பெரிய ஆகிருதியோடு தங்களைக் கெட்டுப்போக வைக்க சிவந்த கண்ணும், துடிக்கும் வாயும், விரித்த தலைமயிருமாய் வேலியில் வந்துநின்று பார்த்துக்கொண்டிருப்பதுபோல் ஒரு நினைவு ஆனந்தனுக்கு எப்போதும் இருந்து வந்தது.
மந்திர சக்தி கொண்டதான சதுரக்கள்ளிதான் அவ்வாறு அவள் தங்களது வீட்டை நெருங்குவதைத் தடுத்துக்கொண்டிருப்பதாக அப்போது அவன் மெய்யாலுமே நம்பிக்கொண்டிருந்தான்.
சதுரக் கள்ளி பசளையிட்டு வளர்த்ததுபோல் கிசுகிசுவென வளர்ந்தது. வேலி உயரத்தில் வர ஐயா வெட்டிவெட்டி விடுவார். வெட்டப்பட்டு விழுந்த துண்டங்களும் வேர் பிடித்து முளைத்து நெடிதாக வளர்ந்தன.
ஐயா ஒருநாள் திடீரென்று செத்துப்போனார். அவர் செத்தபோது வாயிலே ரத்தக் கறை இருந்ததாம்.
அம்மாவின் சோகம் பெரிதாக இருந்தது. தன் சகல பிடிமானமும் அழிந்துபோனதாய் சொல்லிச் சொல்லி அழுதாள். அம்மா முற்றத்தில் புரண்டு புழுதி உழுதபடி அழுதரற்றியதைப் பார்த்துப் பார்த்துத்தான் ஆனந்தனுக்கும் அழுகைமேல் அழுகையாக வந்தது. சதுரக்கள்ளி தன் தந்தையைக் காப்பாற்றாமல் விட்டுவிட்டதே என்று நினைத்தபோது அவனால் தாங்கமுடியாமல் இருந்தது.
மூன்று நாட்களுக்குப் பிறகு ஐயாவின் சிறிய தகப்பன் கதிர்காமர் செத்தவீட்டுக்கு வந்தார். கண்டிக்கு பொயிலைகட்டப் போயிருந்ததாகச் சொன்னார். என்ன நடந்தது என்று அழுத அம்மாவை தணியவைத்துக் கேட்க, அம்மா எதுவுமே தனக்குத் தெரியாதென்றாள். மாயமாய் எல்;லாம் நடந்துவிட்டதென்று சொன்னாள். கதிர்காமர் வீட்டுக்குப் பின்னால் போனார். நடுவேலியைப் பார்த்தார். பின் சதுரக்கள்ளியை நிமிர்ந்து நிமிர்ந்து பார்த்தபடி நின்றார். சிறிதுநேரத்தில் அம்மாவை அழைத்துக் காட்டினார். ‘இது அடங்கி நின்றால்தான் செய்வினைகளைத் தடுக்கும். இல்லாட்டி இதுவே ஆளைக் கொன்றுபோட்டுவிடும். எப்போதும் வீட்டு ஆளுயரத்துக்கு மேலே இதை வளரவிடக்கூடாது. சாமியைவிட இரண்டு அடி உயரத்துக்கு இது வளர்ந்திருக்கிறதைப் பார்த்தியா? இதுதான் சாமியைக் கொன்றது’ என்றார்.
எந்தவொரு சிறுதுண்டிலும் உயிர்கொள்ளும் அதன் ராட்சத வளர்ச்சியின் விசைமீதிருந்த பிரியமும், அதன் கொடுஅழகும் அன்றுதான் ஆனந்தனுக்குக் கெட்டன. பிரியம் கெட்டது மட்டுமில்லை, ஒரு வெறுப்பும் கூட வளரலாயிற்று.
அதன் பசிய நிறம் ஒருகாலத்தே அழகானதாய்த்தான் இருந்தது அவனுக்கு. அப்போது அவலட்சணமாய், வெறுப்பாய், பயங்கரமாய்…எப்படியென்று சொல்ல…இவையெல்லாம் கலந்த ஒரு கலவையுணர்வாய் வளர ஆரம்பித்துவிட்டது.
உடம்பு மிகமிக நொய்மை கொண்டது அது. தன் தசைகளை நடுவடத்திலிருந்து நான்கு திசைகளுக்கும் நீட்டிக்கொண்டிருக்கும். மஞ்சள் நிறமாயிருக்கும் அதன் முட்கள். ஒரு புள்ளியிலிருந்து இடைவெளியற்றதாய் மூன்று நான்கு முட்கள் அந்த நான்கு திசை சதைத் திரட்சிகளிலும் நீட்டிக்கொண்டிருக்கும். கற்றாழை, நாகதாளி போன்ற கள்ளி இனக் குடும்பத்தைச் சேரந்ததுதான் சதுரக் கள்ளியும். வறள் நிலத் தாவரம். எஸ்;.எஸ்.சி.க்கு தாவரவியலை ஒரு பாடமாய்ப் எடுத்தபோது இவையெல்லாம்பற்றி விரிவாகப் படித்திருக்கிறான் விவேகானந்தன். ஆனால் அதன் மந்திரத் தன்மைபற்றி எந்தப் பக்கத்திலும் ஒரு வரியேனும் இருந்திருக்கவில்லை. இருந்தும் சதுரக் கள்ளி ஒரு மாயம் நிறைந்த செடியான கற்பிதம் அவன் மனத்திலிருந்து அகலவேயில்லை.
ஜன்னல் வெளியினூடு பார்க்க பின் வளவு தெரிந்தது. நடுவேலி மரங்கள் போய்விட்டிருந்தன. மரங்களின் இடத்தில் நெருக்கமாய் அடைத்தபடி அந்த முட்செடி. இன்னும் வளவின் இரண்டு மூன்றிடங்களிலும் அந்தச் செடி ஓரலாய் நெடிய வளர்ந்திருந்தது தெரிந்தது.
விவேகானந்தன் அவசரமாய் விறாந்தையிலிருந்து இறங்கி பின்னால் சென்றான். சதுரக் கள்ளிகள் தலையுயரத்துக்கு மேல் வளர்ந்திருந்தனபோன்றே அந்த இருளினுள் நின்று பார்த்தபோது அவனுக்குத் தென்பட்டது. அதன் தலையில் வெண்ணிறப் பூபூத்திருப்பதாயும்கூட அவன் கருதினான். ‘இதை நீங்கள் தலை உயரத்துக்கு மேல் வளர விட்டிருக்கக் கூடாது’ என கதிர்காமர் அம்மாவுக்குச் சொல்வது போல ஒரு மாய ஒலி காற்றில் ஒலிக்கிறதா? விவேகானந்தன் ஒரு நிமிடம் மேற்கொண்டு அந்த இடத்தில் தாமதிக்கவில்லை. ஊர் நல்லபடி அமைதிக்குத் திரும்பட்டும், அப்ப வீடு வளவை என்ன செய்வது என்பதுபற்றி யோசிக்கலாம் என அறுதியாய் எண்ணமிட்டபடி சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்துவிட்டான். அந்தத் தடுதாளியில் பாக்கியம் மாமி வீட்டைப் பார்க்கிற நினைவு ஒரு துண்டுக்குக்கூட அவனிடத்தில் எழவில்லை.
வானொலியிலும், தொலைக் காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வன்னியில் மக்கள் கொத்துக்கொத்தாய் செத்துக்கொண்டிருப்பதாகச் செய்திகள் வருகின்ற காலமாய் இருந்தது அது. அந்தமாதிரியான மனிதாபிமானமற்ற இனப்படுகொலையை எந்தவொரு வல்லரசு நாடாவது தடுத்துநிறுத்தக் குரல் கொடுக்காதா என எல்லோர் மனமும் நாளெல்லாம் பிரார்த்தனை செய்தது. அன்றைய கவனயீர்ப்பு ஊர்வலத்தில் கலந்துகொள்ள அந்தக் கொண்டோவிலிருக்கும் சில தமிழர்கள் அவசரஅவசரமாக வெளிக்கிட்டு போய்க்கொண்டிருந்தார்கள். அவன் இன்னும் படுக்கையில் எழும்பாதபடியே.
திடீரென விவேகானந்தனுக்கு மனமெல்லாம் நிறைத்து ஒரு பிரமாண்டமான காட்சி விரிகிறது. வன்னியில் காட்டெருமைகளும், காட்டுப் பன்றிகளும், மான்களும், மரைகளும் பாம்புகளும்கூட மனிதர்களைவிட அதிகமாயிருந்த காலமொன்றிருந்தது. போக்கும் வரத்தும் கால்நடையாய் இருந்த காலமும் அதுதான். அந்தக் காலம்போல அப்போது வன்னி மாறியிருக்கிறது. நிலமெல்லாம் ஆளுயரத்துக்கும் மேலாக அதீத வளர்ச்சியடைந்த சதுரக் கள்ளிகள் முளைத்து நிற்கின்றன. இருட் பச்சையாய், நான்கு திசைகளும் தன் சதைத் திரட்சி விரித்து, அதன் உள் காத்து முனையில் தவிட்டு நிறமும் மேனியில் மஞ்சளும் கொண்ட முட்கள் நெருக்கமாய் ஒவ்வொரு புள்ளியிலும் இரண்டு மூன்றாய் நீட்டியபடி.
அப்போது, வன்னியில் அம்பதாயிரம் மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஒரு தொலைக் காட்சியில் செய்தி போய்க்கொண்டிருந்தது.

Friday, May 21, 2010

குட்டான்

டானியல்ஜீவா


“இம்முறை காலம் இதழில் சினேகிதனை தொலைத்தவன் என்ற பொ. கருணாமூர்த்தியின் கதையும் குட்டான் என்ற டானியல் ஜீவாவின் கதையும் எனக்கு பிடித்துள்ளன. இதழை முற்றாக வாசித்து முடிக்காத நிலையில் மற்ற ஆக்கங்கள் பற்றி விமர்சனம் செய்ய முடியவில்லை. ஆனால் ஜீவாவின் கதையில் கனடாவில் பெரும்பாலான புலம்பெயர்ந்தவர்கள் அனுபவித்திருக்க கூடிய ஒரே வீட்டில் பலர் சேர்ந்து குடியிருப்பதும் அதனால் வரும் சிக்கல்களும் காட்டப்படுகின்றன. கதையில் சாந்தா என்ற பாத்திரம் தன் வீட்டில் குடியிருக்கும் குட்டானை பற்றி தன் மாமியார் எல்லை மீறி பேசி வீட்டைவிட்டு வெளியேற சொல்லும்போது அதற்கு தன் எதிர்ப்பை காட்டுகின்றது. இதனை எதிர்கொள்ளாத மாமியார் குட்டானை நீ வச்சிருக்கிறாயா என்று கேட்பதுடன் கதை நிறைவேறுகிறது, எம் மனம் அரட்டப்படுகின்றது. பெண்களின் முதல் எதிரிகள் பெண்கள்தான் என்று அனேகமாய் எல்லா ஆண்களும் சொல்வது உண்மையாகக் கூட இருக்கலாம்.”
நன்றி: அருண்மொழிவர்மன்
http://solvathellamunmai.blogspot.com-(இனையத்தளத்திலிருந்து)

குட்டான்
டானியல்ஜீவா
விடிகாலை 6மணிக்கு எழுந்து வேலைக்கு நான் போனால் பின்னேரம் எப்பிடியும் வீடு வர ஒன்பது மணியாகிவிடும்.சில வேளையில் பிசி இல்லையென்றால் நேரத்தோடு அனுப்பி விடுவார்கள்.நான் இருக்கும் இந்த வீட்டிற்கு வந்து கிட்டத்தட்ட ஐந்து வருடங்களாகி விட்டன.வீடு இருக்கும் வீதி தமிழர்களால் நிறைந்திருக்கும். யாழ்ப்பாணத்தில் இருக்கின்ற உணர்வே மனதில் மேல் ஓங்கும்.நான் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி இந்த மார்கழியோடு பதினைந்து வருடம் நிறைவு பெறுகின்றது.நான் இருக்கும் வீட்டுக்காரர் இரு வீடுகள் சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார்கள்.ஸ்கபரோவில் இருக்கும் வீட்டில்தான் நான் இருக்கிறேன்.அடுத்த வீடு மார்க்கம் ஏரியாவில் தமிழர்கள் இல்லாத இடம்பார்த்து வாங்கியிருக்கிறார்கள்.இந்த வீட்டில் தெரிந்த தமிழ்ச் சனத்தை குடியமர்தியிருக்கிறார்கள்.அவர்களிடம் இருக்கும் இந்த இரு வீடு பற்றி கணவனும் மனைவியியும் புளுகித் தள்ளுவதில் தங்களது ஓய்வு நேரங்களைத் தொலைத்துக் கொண்டிருந்தார்கள்.நான் அவை எல்லாவற்றுக்கும் மறுப்புச் சொல்லாமல் “ம்” போடுவதை எனது போர் உத்திகளில் ஒன்றாகக் கருதினேன்.

வீட்டின் அறையில் நான் குடித்தனம் செய்ய வரமுன் இந்த அறையைப் பற்றித் தமிழ் பத்திகையில் “தளபாடத்துடன் கூடிய அறையொன்று வாடகைக்கு” என்றுதான் விளம்பரம் போடப்பட்டிருந்தது.அறையை வாடகைக்கு எடுத்ததிலிருந்து ஒவ்வொரு நாளும் “மரமஞ்சள்” அவிச்சு குடிக்க வேண்டிய நிலையென்று சொன்னால் நீங்கள் நம்பமாட்டியல்.கட்டிலின் நான்கு பக்கங்களிலிலும் கறல் கட்டிய கம்பியால் பிணைத்துக் கட்டப்பட்டிருந்தது.சேர்த்துக் கட்டப்பட்டிருந்த கம்பியின் சிறிய பகுதிகள் வெளித்தள்ளப்பட்டு காணப்படும்.இந்த கம்பியிலேயே என் கால்களில் அடிக்கடி தட்டுப்பட்டு காயக் கீறல்களு; ஏற்ப்பட்டுக் கொண்டேயிருந்தது. மெத்தையில் என் உடல் சாய்ந்தால் ஏதோ ஒரு பள்ளத்திற்குள் தொப்பென விழுவது போன்ற ஒரு உணர்விலிருந்து என்னால் தப்பவே முடியவில்லை.
ஓரு கால் முறிஞ்ச பழைய மேசை, ஒரு பழைய கதிரை, சின்ன ரீப்போ இவைகளைத்தான் கனடாவில் தளபாடத்துடன் அறை வாடகைக்கு விடப்படும் என்று விளம்பரப்படுத்துவது வழக்கமாய்ப் போய்ச்சுதோ.

நான் இங்கு வந்த போது இருந்த மன நிலை படிப்படியாக மாறி இந்த வீட்டின் சொந்தக்காரர் குமார் எனக்கு நெருக்கமான நண்பராகிவிட்டார்.ஒவ்வொரு வெள்ளியிரவும் குடிப்பதிலேயே குமாருக்குஅந்த இரவு அழிந்து விடும்.நான் ஒரு அறையில்,அடுத்த அறையில் இன்னொரு பொடியன்.அவனும் காலப்போக்கில் எனக்கும் குமாருக்கும் நண்பனாகி விட்டான்.அவனுடைய பெயர் விநாயக மூர்த்தி.ஆனால் நானோ குமாரோ அல்லது குமாரின் வீட்டுக்காரரோ அவனை அப்படி அழைப்பதில்லை. மாறாகா “குட்டான்” என்றுதான் நாங்கள் எல்லோரும் அவனை அழைப்பது வழக்கம்.அவன்; மிகவும் குள்ளமாக இருப்பதே அவனை அப்படி அழைப்பதற்கு மிக முக்கியமான காரணமாய் இருக்கும்.அவனை ஆரம்பத்தில் குட்டான் என்று நாங்கள் அழைத்த போது அவன் கொஞ்சம் சங்கடப்பட்டாலும் காலப்போக்கில் அவன் விரும்பியோ விரும்பமாலோ அந்தப் பெயரே நிலைத்தது.

குமாரின் இரண்டு பிள்ளைகளும் சுறுசுறுப்பான சுபாவம் கொண்ட பிள்ளைகள்.தங்களுக்குள் ஆங்கிலத்திலேயே கதைத்துக் கொள்வார்கள்.அப்படி அவர்கள் கதைப்பது குமாரின் மனைவிக்கு பெருமையாக இருக்கும்.குமாரின் மனைவி சாந்தாவை நாங்கள் சாந்தாக்கா என்றுதான் அழைப்போம்.சாந்தாவிற்கு அவ்வளவாக ஆங்கிலம் பேசவோ எழுதவோ தெரியாவிட்டாலும் அரை, குறையாக ஆங்கிலத்தில் பிள்ளைகளோடு பேசுவதை எப்போதும் பெருமையாக நினைப்பாள்.வீட்டில் மொத்தமாக நான்கு அறைகள்.ஒர் அறையில் நானும,; மற்றைய அறையில் குட்டானும், இன்னொரு அறையில் குமாரின் அப்பாவும் அம்மாவும் மற்றைய அறையில் குமார் குடும்பமுமாய் அந்த வீடு
“கொழும்பு ஐலண்ட்” லொட்ச்சுப் போல இருக்கும்.
நான் சாப்பாட்டோடு நானூறு டொலர் மாதம் கொடுக்கிறேன். அது போல் குட்டானும் கொடுப்பான் என்றுதான் நினைக்கிறேன்.குமாரின் பெற்றோர் சமூக கொடுப்பனப் பணத்தில் சீவித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் குமாருக்கு மாதம் எவ்வளவு அவர்கள் கொடுக்கிறார்கள் என்பதைப் பற்றி இன்றுவரையும் எனக்கு தெரியவில்லை.

குமாரின் அம்மாவுக்கு கிட்டத்தட்ட அறுபது வயது இருக்கலாம்.ஆனால் நவநாகரீக மங்கை போலவே தோற்றம்.இரண்டு கைகளிலும் தங்க வளையல் அடுக்கப்பட்டிருக்கும்.மோதிரங்கள் மூன்று எப்போதும் விரல்களில் அலங்கரித்திருக்கும்.கண்களில் அஞ்சனம் அழகாய் இல்லாவிட்டாலும் ஒவ்வொரு நாளும் பூசுவதை மட்டும் மறப்பதில்லை. உதட்டில் சாயம் எப்போதும் உட்காந்திருக்கும்.உடையில் மேலேத்தேய நாகரீகம் தூக்கலாய் இருக்கும.;அடிக்கடி கண்ணாடி முன் நின்று சரிபார்க்கும் குமாரின் அம்மாவிற்கு நிறம் மட்டும் கறுப்பாக இருப்பதாக கவலை.ஆனாலும் வெளிப் பார்வைக்கு அவள் தன்னுடைய குறையாக அந்த நிறப் பிரச்சனையை என்றும் காட்டிக் கொள்வதில்லை.

இன்று வெள்ளிக்கிழமை நாள். வழமையான நாட்களிருந்து எங்களுக்கு இந்தநாள் வேறுபட்டே இருக்கும்.ஏனென்றால் இன்றுதான் வீட்டிலிருக்கும் எல்லோரும் ஒன்றாய் சந்திக்கும் நாள்.குமாரின் பெற்றோர்கள் நடுவிறந்தையில் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் இருக்கும் “இத்தாலியன் லெதர் சோபா”வில் உட்கார்ந்து விட்டார்கள்.குமார் வேலை முடிந்து வருவதற்கு இன்னும் அரை மணித்தியாலம்தான் இருக்கின்றது.குட்டான் வேலை முடிந்து வந்து குளித்து விட்டு அவனுடைய அறைக்குள் ஏதோ செய்து கொண்டிருந்தான்.சாந்தா நல்ல வாசம் மூக்கைத் துளைக்கிற மாதிரி கறி சமைத்துக் கொண்டு குசினிக்குள் நின்றாள்.பொதுவாக நான் சாப்பிடுவதற்காக நடு விறாந்;;தைக்கு வரும் போது சாந்தா சோபாவில் இpருந்தால் குமாரின் பெற்றோர்கள் சாந்தாவுக்கு முன்னால் வந்து உட்க்கார மாட்டார்கள்.

நான் நேற்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த போது வீட்டில் சாந்தாவைத் தவிர வேறு யாரும் வீட்டில் இருக்கவில்லை.அந்தச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சாந்தா தன் நெஞ்சுக்குள் அடுக்கடுக்காய் சேமித்து வைத்த பிரச்சினைகளை வாய் விட்டுத் கொட்டித் தீர்த்தாள்.சாந்த எனக்குத் தன்னுடைய மாமா மாமி பற்றிச் சொன்ன குற்றச் சாட்டுக் கெல்லாம் “ம்” போட்டபடியே இருந்தேன்.சில பிரச்சினைகள் பற்றி கதைக்கும் போது குறுக்காக சாந்தாவிற்கு நோகாமல்; சில கேள்விகளையும் தொடுத்தேன்.பொதுவாக சாந்தாவின் உப்புச்; சப்பில்லாத நொண்டிச் சாட்டுகளில் எனக்கு உடன்பாடில்லை.நேற்று கேட்ட சில கேள்விகளுக்கு சாந்தா சொன்ன பதில்கள் வேடிக்கையோடு என் மனதில் இழையோடியது.

“அக்கா.. இங்கை மூதியோரை ஸ்பொன்சர் பண்ணி எடுத்தவங்க அவர்கள் வந்த பின் பொதுவாக கொடுமைப்படுத்துறங்க என்டுதான் பரவலாய் கதையிருக்கு. ஆனா நீங்க சொல்றதப் பார்த்தா உங்கட மாமி மாமாதான் உங்களை கொடுமைப் படுத்துவது போல இருக்கே..?என்று கேட்டதற்கு,
‘ம்’ பேந்தென்ன தம்பி..நீ இன்னம் கல்யாணம் பண்ணேலெயெண்ட அது உன்ர சொந்தப் பிரச்சினை அதேயேன் உன்னட்ட தோண்டித் தோண்டித் கிளறவேணும் இதிலயிருந்து அவங்கட குணத்தை நாங்க அறியேலாதா..?

சில வேள அவங்களுக்கு என்னுடைய வாழ்க்கையில அக்கறையிருக்கலாம்தானே...?
அவையளுக்கு உங்கட வாழ்க்கையில அக்கறையா..?இது மெய்யாத்தான் இருக்குமோ.. அது அவியட நடிப்பு..தன்ர சொந்தப் பிள்ளை படுகிற கஸ்டத்தையே உணராமல் இருக்குவினம்.அதுக்குள்ள உங்கட வாழ்க்கை பிரச்சினையிலையா அக்கறை வந்திருக்கும்.அவங்க சுபாப் புத்தியே மற்றவங்கட பிரச்சினையை தோண்டித் தோண்டித் கேட்கிறதுதான்... என்னைப் பாருங்களேன்.வேலை முடிஞ்சு வந்துசும்மா சோபாவில இருந்தால் குசினிக்குள் ஏதோ செய்யிற மாதிரி நிண்டு கொண்டு குத்தலாய் கதைப்பாள்…எத்தினை நாளைக்கெண்டுதான் நானும் பொறுத்துக் கொள்ள…அதென்ன தம்பி இந்த வயசிலேயேஅவியள் பட்டப் பகலியே அறையை பூட்டிக் கொண்டு புதுசாக கல்யாணம் செய்தவியள் மாதிரி ஆட்டம் போடுகினம் பேரப்பிள்ளையை கண்ட காலத்திலேயே இப்படியெண்டால் அந்தக் காலத்திலே எப்படி சோக்குப் பண்ணியிருப்பினம்?இதுக்குமேலே இரண்டு பேரும் குடியும் கும்மாளமும்...ச்சீ... எங்கட பரம்பரையிலேயே பொம்பிளைகள் குடிச்சதாய் இதுவரைக்கும் வரலாறு கிடையாது. இவையளுக்கு வெக்கம் மானம் ரோசம் கிடையாது.என்ர மனுசனையும் சேர்த்து வைச்சுக் கொண்டு குடிக்கினம்.இதன்ன அறுந்த குடும்பம்.தெரியாமல் வந்து விழுந்திட்டேன்.

ஒரு அடைமழை பெய்து ஒய்வெடுத்தது போல அவளுடைய வாயிலிருந்து வார்த்தைகள் தெறித்து அமைதியானள்.ஏன் அமைதியானல் என்பது எனக்கு புரியவில்லை.என்னைக் கதைக் விடமால் தானே வெடு வெடுத்துக் கதைத்துக் கொண்டிருந்தவள் ஏன் திடிரென உறை நிலையானள்.?ஒற்றைப் பின்னல் கூந்தல் மார்ப்பிக்கிடையில் நெளிந்து அழகுகிறிக்கிடந்தது.நெற்றியல் சிவப்பு நிலா..இரண்டு காதோரமும் முடி நீண்டு சுடுண்டு மடிந்து கிடந்தது.அது விரல்களால் சுருட்டி விடப்பட்டிருக்க வேண்டும். இப்படி சுருட்டி விடுகிற பழக்கம் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் பிரபல்யம்.களுத்தில் தங்கத் தாலி அதன் மேல் முத்தமிட்டபடி மல்லிகை மொட்டு சங்கிலி கிடந்தது.மௌனம் போர்த்திக் கிடந்த முகத்தை எறிட்டு பார்த்தேன்.விக்கித்துப் போனேன்.கண்கள் சிவத்து மெல்ல மெல்ல கண்ணீர்; சிறு ஒடையாய் ஒடியது.

ஏன் சாந்த அக்கா அழுகிறியேள்..?
‘……..’
ஒன்னும் பதில் சொல்லாமலே இன்னும் விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.
நான் மீண்டும் கெஞ்சும் குரலில்
“என்னண்டு சொல்லிப் போட்டுத்தான் அழுங்கலன் அக்கா......?”என்றேன்.
அவள் எதுவும் பேசுவதாக தெரியவில்லை.நான் இதற்கு மேல் கதைக்காமல் என்னுடைய அறைக்கு போய் விட்டேன். கணணிக்கு முன்னால் நான் இருந்து இலங்கைச் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த போதுதான் நேற்று நடந்த இந்த நினைவும் வந்து தொலைந்தது

அறைக்குள் இருந்து நான் விறாந்தைக்கு வரவும் குட்டானும் வெளி விறாந்தைக்கு வரவும் சரியாக இருந்தது. நான் குட்டானை பார்த்துக் கொண்டு,
“என்னடா குட்டான் முகமெல்லாம் அதைச்சுப் போய்க்கிடக்கு…ஏன்ரா இரவெல்லாம் முழிச்சிருந்து தமிழ் நாடகங்கள் பார்த்தனீயோ..?”
“இல்லையடா மச்சான் இரவில இப்ப நெத்திரை வாறது குறைவாயிருக்கு..இப்ப புதுசா சேர்ந்த இரண்டாவது வேலை சரியான கஸ்டமட அதுதான் இரவில கொஞ்சம் நெத்திரை வரப்பஞ்சிப்படும்.அதாலாதான் மூஞ்சி அதைச்சுப் போய்க்கிடக்குது..என்ன செய்யிறது இங்க உழைக்கத்தனே வந்தனாங்க.உடம்பு ஏலும் மட்டும் அடிப்போம்…எங்கட கஸ்டத்தை மற்றவங்களுக்கு சொன்னாப் போல தரவா போறாங்க.”என்று சொல்லிக் கொண்டு பக்கத்தில் இருந்த சோபவில் உட்காந்தான்.
நான் சோபாவிற்கு பக்கத்தில் நின்று கொண்டிருக்க குமாரின் அம்மா என்னைப் பார்த்து@
“கொஞ்சம் இரன்தம்பி சோபவில்”என்று சொல்லவும் நான் சோபவில் உட்காந்து கொண்டேன்.
இஞ்ச பார்த்தீயளா குட்டான்ர கதையை நாங்க என்ன கேட்ட உதவி செய்ய மாட்டோமா?”
அவளுடைய இயல்பான கேளியும் கின்டலும் கலந்த குரலில் மனமுருகி கேட்பது போல் குமாரின் அம்மா கேட்டாள்.குட்டானுக்கு கோபம் வந்ததோ என்னவோ ஒரு குத்தலாக கதையைப் போட்டான். “நீங்களே பிச்சை எடுத்துக் கொண்டுருக்கிறீயள் அதுக்குள்ள எனக்கு உதவி செய்யப் போவினயம்.கொஞ்சம் உள்ளுக்குள்ள போனவுடனே என்ன கதைக்கிறதென்டு தெரியாமல் வாயில் வந்ததெல்லாத்தையும் கொட்டுறியள்.”என்றான்.குமாரின் அம்மாவுக்கு முகத்தில் செருப்பால் அடித்தது போல் இருந்தது வலியும் அவமானமும் கொதிப்புமாய் உயர்ந்தது உடலில்..கோபக் குவியாலாய் முகம் இறுகி கனத்து செவ்வானம் போல் சிவந்திருந்தது .டெய் பொன்னையான்! நாங்க வெல்வாயர் எடுத்து சீவித்தால் உனக்கு என்னடா செய்யுது.நாலு சல்லிக்கு பெறாத நாய் எங்களைப் பார்த்து கதைக்கிறியோ..?எங்கட குடுபத்தின்ர கௌரவம் என்ன..எங்கட ஊருலயே எங்கட்டத்தான் மெத்தை வீடு இருக்குது…வீட்டில் ஒன்னுக்கு இரண்டு வேலைகாரர் நீயெல்லாம் எங்கட கால் தூசிக்கு வரமாட்டாய் அதுக்குள்ள வாயைப் பார்…?”
குட்டானும் விடமால்,
“பேந்தென்ன குடும்ப கௌரவத்தை சொல்ல வேண்டும் பொஞ்சாதியும் புருசனும் புள்ளையும் சேர்ந்து குடிக்கிற இலட்சணத்தில”
அது எங்கட நாகரீகம்…எங்கட விருப்பம் அதுல உனக்கு என்ன செய்யுது…?”


அப்ப உன்னைப் போல பொன்னையன் மாதிரி முலைக்குள் கிடக்கவ சொல்லிறியல் விடிஞ்சா பொழுது பட்டால் வேலை வேலையெண்டு திரியிற நாய்…குடிக்கத் தெரியாது சிகரட் பத்தத் தெரியாது நாலு இடத்திக்கு போகத்தெரியாது நாலு பேரோட பழகத் தெரியாது நீயெல்லாம் ஆம்புளையா..?பொன்னையன்…பொன்னையன்…”
ஆண்மை பற்றி அவள் கொண்டிருந்த கோட்ப்பாடு கோபத்தோடு வெளிப்பட்டது.
மாயனா அமைதி விறாந்தையில் நிலவியது.

குசினிக்குள் நின்று நடக்கிற விடயங்களை அவதானித்துக் கொண்டு ஏதோ செய்து கொண்டிருந்த சாந்த கையில் இரண்டு கப்பு தேத்தண்ணீயைக் கொண்டு வந்து எனக்கும் குட்டானுக்கும் தந்துவிட்டு மீண்டும் குசினிப்பக்கம் போய்விட்டாள். இவ்வளவு நேரமும் குசினிக்குள் நின்ற சாந்த திடீரென ஏன் விறாந்தைக்கு வரவேனும்...? ஏதேனும் காரணத்திற்காகத்தான் அவள் தேத்தண்ணீயை தருவது போல் விறாந்தைக்கு வந்து போயிருக்க வேண்டுமென்று என் மனதிற்குள் மின்னலாய் வெட்டியது.ஆனால் சாந்த விறாந்தைக்கு வரும் போது அவளுடைய முகத்தில் கடுப்பான எரிச்சல் கவிந்து கிடந்ததை அவதானித்தேன்.
அவள் வாழ்வின் ஒவ்வொரு நிமிடத்தையும் குடும்பச் சுமை தின்று தீர்க்க@ மூச்சு விட நேரமற்று ஓடித்திரிவாள்.அன்பான கணவனும்@ அம்மா..அம்மா..என்று அன்பால் நனைக்கும் பிள்ளைகளும் அவள் இதயத்தை இதமாக வைத்திருந்தாலும் வீட்டில் இருப்பவர்களால் அவ்வப்போது ஏற்ப்படும் பிரச்சினைகளால் தூக்கம் இன்றி துக்கத்தில் ஆழ்ந்து போய்விடுவாள்.அப்படி எற்ப்படும் துயரத்தில் இருந்து உடனடியாக அவள் மீழவும் மாட்டாள்.சில வேளை ஒரு மாதத்துக் கூட நீண்டு போய் விடும்.அந்த நேரத்தில் யாருடனும் முகம் விட்டு பேசாமல் தனக்குள்ளேயே எல்லாவற்றையும் பூட்டி மனதிற்குள் மறைத்து வைத்து கடுப்பான எரிச்சலோடு உருகிச் செத்துக் கொண்டிருப்பாள்.அவளுடைய இயல்பே அப்படித்தான் என்பதை உணர்ந்த குமார் அதற்கேற்ப்ப வளைந்து கொடுப்பான்.

சுவரில் மாட்டப்பட்ட மணிக்கூடு ஒரு பறைவையின் சத்தம் போல் ஒலியெழுப்பி இரவு எழுமணியைக் காட்டிக் கொண்டு ஓய்ந்தது இளவேனிற் காலம் என்பதால் எழுமணியாகியும் இன்னும் இருட்டவில்லை.சூரியனின் மஞ்சள் நிற ஒளிக்கதிர்கள் வீட்டின் முன்பக்கத்திலுள்ள கண்ணாடியில் விழுந்து தெறித்துக் கொண்டிருந்தன.குமார் வழமையாக ஆறு மணிக்குள் வீட்டிற்கு வந்து சேருவான்.ஆனால் இன்று ஏழுமாணியாகியும் இன்னும் வரவில்லை.இன்று வெள்ளியரவு என்பதால் சில வேளை குடிவகை வாங்கப் போயிருக்கலாம். விறாந்தையில் நிலவி;க்கொண்டிருந்த அமைதியை கிழித்துக் கொண்டு ஏதேனும் சொல்ல வேண்டும் என்று மனம் கிளற,
“குட்டான் நடந்ததெல்லாம் மறந்து போட்டு வா சாப்பிடுவோம் என்று கூப்பிட்டுக் கொண்டு குமாரின் அம்மாவின் மீது என் பார்வை திரும்பியது.
“அம்மா என்னதான் இருந்தாலும் குட்டான் உங்களுடைய வயதுக்காவது மதிப்புக் குடுத்து கதைச்சிருக்க வேணும் அவன் அப்படி கதைக்காதது அவனுடைய பிழைதான் நான் ஒத்துக் கொள்கிறன்.அது போல நீங்களும் கொஞ்சம் நாகரீகமாக அவனோட கதைத்திருக்கலாம்.”நான் சொல்லி முடிப்பதற்குள்
ஏரிகின்ற நெருப்பில் எண்ணைய் ஊற்றியது போல் என் வார்த்தை இன்னும் அவள் கோபத்தை கிளறி விட்டுது போல..,
“இந்தக் குட்டானோட நாகரீகமாய் கதைக்கிறதா..?இப்பவே பெட்டியைக் கட்டிக் கொண்டு வீட்டை விடடுப்போகணும்..இல்லையெண்டால் நடக்கிறது வேற..”
குட்டான் ஒன்னும் பேசாமல் பறையாமல் இருக்க…குசினிக்குள் நின்ற வசந்தா டக்கென வெளிவிறந்தைக் விறு விறு என நடந்து வந்தாள்.முகத்தில் உணர்ச்சிக் குவியல் குமாரின் அம்மா சொன்ன வார்த்தையை உள்வாங்கி கடுப்பாகிப் போனாள்.மனம் இருப்புக் கொள்ள முடியாமல் கொந்தளித்தது. சூரியனையே சுட்டுப் பொசுக்கும் விழிகளின் பார்வை..நான் இந்த வீட்டின் அறைக்கு வந்த நாட்களிலிருந்து இப்படி வசந்த கோபம் கொண்டதை இது வரையில் நான் பாhத்ததே இல்லை.
“குட்டான்!எங்கட வீட்டிலே வாடகைக்கு இருக்கிறவன்..அவனை வீட்டை விட்டு வெளிய போகச் சொல்ல மாமி உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.அவங்க தாற வாடகையில்தான் வீடடுக்கு வாங்கிய கடன் கட்டுறம் அவங்க வீட்டை விட்டு போனால் எனக்குத்தான் அந்த கஸ்டம் தெரியும்.அவன் தானொன்டு தன்ர வேலையென்டு தன்ர பாட்டில இருக்கிற பொடியனை..”என்று நீட்டி முழங்கிக் கொண்டிருந்த வார்த்தைகள் முற்றுப் பெறுவதற்குள் குமாரின் அம்மா முந்திக் கொண்டு சீறிப் பாய்ந்தாள்.
“நீயேன்ரி அவனுக்காக வாக்காளத்து வாங்கிக் கொண்டு வாற..ஆட்டக்காறி..வாயைத்திறந்திட்டாள்.எனி வாய் குடுத்து தப்பயேலாது.”
“எனக்கு மற்ற ஆட்களைப் பற்றி கவலையில்லை..குட்டான் எங்களோடுதான் இருப்பான்.”
குமாரின் அம்மாவுக்கு கோபம் கொப்பளித்துக் கொண்டு வந்தது
“அப்ப…இவள் அவனை வைச்சிருக்கிறாளாக்கும்”
அதன் பின் யாரும் எதுவும் கதைக்கவில்லை.விறாந்தை முழுவதும் அமைதி அப்பிக்கிடந்தது.
யன்னல் வெளியினுடே வானம் இருன்டு கொண்டு வந்தது.வெளிப்பக்கமாக கார் வந்து தரித்து நிற்க குமார் இறங்கி உள்ளே நடந்து வந்தான்.
(முற்றும்)
நன்றி:காலம்

Monday, May 17, 2010

கல்லறையிலிருந்து ஒரு குரல்

டானியல்ஜீவா
நான் சேர வேண்டிய
இடத்திற்கு வந்து விட்டேன்.
நீ தான் இன்னும்
வரவில்லை

நீ என்னிடம்
இல்லை யென்பதை
ஏற்றுக் கொள்ள
என் மனசு மறுக்கிறது.

நள்ளிரவுக் கதவை
மூர்க்கமாய்த் தட்டும்
காமம்…
திரும்பிப் பார்த்தால்
நீயிருக்கவில்லை.

சிறகு முளைத்த கணமே
பயணித்தேன்;
நான் வீழ்ந்த கதை
உனக்கு
தெரியாமலே
போய் விட்டது.

தீயின் கீழிருந்த
என் வீட்டிலிருந்து
புறப்பட்டேன்
பனிமுடிய நதியைக் கடந்து

தனிமையில்
தனித்திருந்தேன்
முடியாமலிருந்தது.
உன்னோடு இருந்தேன்
இறப்பின் ரகசியம்
என்னோடு இருந்தது

உன்னால்
என் உயிர்
கொஞ்சம் கொஞ்சமாய்
இறந்து கொண்டிருந்தது
அப்போதும்
நீ வருவதாக இருந்தது
ஆயினும் வரவில்லை

மனசுடைந்து நதியில்
வீழ்ந்தேன்.
மரித்தோரிடமிருந்து
உயிர்த்தெழ மாட்டேன்
ஏனென்றால்
நான் மரித்து விட்டேன்.
நன்றி:கூர்2010

கல்லறையிலிருந்து ஒரு குரல்

டானியல்ஜீவா
நான் சேர வேண்டிய
இடத்திற்கு வந்து விட்டேன்.
நீ தான் இன்னும்
வரவில்லை

நீ என்னிடம்
இல்லை யென்பதை
ஏற்றுக் கொள்ள
என் மனசு மறுக்கிறது.

நள்ளிரவுக் கதவை
மூர்க்கமாய்த் தட்டும்
காமம்…
திரும்பிப் பார்த்தால்
நீயிருக்கவில்லை.

சிறகு முளைத்த கணமே
பயணித்தேன்;
நான் வீழ்ந்த கதை
உனக்கு
தெரியாமலே
போய் விட்டது.

தீயின் கீழிருந்த
என் வீட்டிலிருந்து
புறப்பட்டேன்
பனிமுடிய நதியைக் கடந்து

தனிமையில்
தனித்திருந்தேன்
முடியாமலிருந்தது.
உன்னோடு இருந்தேன்
இறப்பின் ரகசியம்
என்னோடு இருந்தது

உன்னால்
என் உயிர்
கொஞ்சம் கொஞ்சமாய்
இறந்து கொண்டிருந்தது
அப்போதும்
நீ வருவதாக இருந்தது
ஆயினும் வரவில்லை

மனசுடைந்து நதியில்
வீழ்ந்தேன்.
மரித்தோரிடமிருந்து
உயிர்த்தெழ மாட்டேன்
ஏனென்றால்
நான் மரித்து விட்டேன்.
நன்றி:கூர்2010



Monday, April 26, 2010

திறனாய்வுத் துறையும் "கலாநிதி' க. கைலாசபதியும்


தமிழிலக்கியத்தை மார்க்சிய அணுகுமுறையில் திட்ப நுட்பத்துடன் ஆராய்ந்து பல முடிவுகளை முன்வைத்தவர்; ஒப்பியல் நோக்கையும், சமூகவியல் பார்வையையும் தமது ஆய்வின் அடிப்படையாகக் கொண்டவர்; "கலை கலைக்காக' என்னும் கோட்பாட்டை வன்மையாக மறுத்தவர்; இலக்கியத்துக்கு சமூகப்பணி உண்டென்று திடமாக நம்பிச் செயல்பட்டவர்; சமூகப் பொருளாதார ஏற்றதாழ்வுகளுக்கு எதிரான முற்போக்கு இலக்கிய வளர்ச்சிக்கு முனைப்புடன் பாடுபட்டவர்; தமிழர்களின் சமூக, பண்பாட்டு வரலாற்று நெறியை அறிவு நிலைக்குப் பொருந்தும் வகையில் இனங்கண்டு காட்டியவர்; ஈழத் தமிழ் இலக்கியமும், கலையும் சர்வதேசத் தரத்திற்கு வளர்க்கப்பட அயராது உழைத்தவர். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைமை நாயகராகவும், சிறந்த கல்வியாளராகவும் விளங்கியவர்; யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைக் கட்டியெழுப்பியவர்; இலக்கியமே தமது உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர்; இத்தனை பெருமைக்கும் உரியவர் "ஈழம் தந்த கொடை' கலாநிதி க.கைலாசபதி.

மலேசியாவிலுள்ள கோலாலம்பூரில் இளைய தம்பி கனகசபாபதி-தில்லைநாயகி நாகமுத்து தம்பதிக்கு 1933-ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி பிறந்தார். தொடக்கக் கல்வியைக் கோலாலம்பூரில் பயின்றார். தந்தை புலம் பெயர்ந்து குடும்பத்துடன் இலங்கைக்கு வந்ததால், உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும், கொழும்பு ராயல் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் இலங்கைப் பல்கலைக் கழகத்தில் பி.ஏ. (ஆனர்ஸ்) பட்டப்படிப்பில் சிறப்பிடம் பெற்றுத் தேர்ச்சி பெற்றார்.

பல்கலைக்கழகக் கல்வி முடிந்தபின், தமிழ் நாளிதழ் ஒன்றில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர், இலங்கைப் பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகவும், கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களில் தமிழ் இந்து நாகரிகத்துறைத் தலைவராகவும் பணி புரிந்தார்.

பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, உயர் கல்விக்கான விடுப்பில் இங்கிலாந்து சென்று, பெர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் ஜார்ஜ் தாம்ஸனிடம் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். "தமிழில் வீரயுகப் பாடல்கள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து "கலாநிதி' (முனைவர்) பட்டம் பெற்றார். கைலாசபதி தமது ஆய்வுத் தரவாக அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பத்துப்பாட்டு முதலிய தமிழிலக்கியங்களை எடுத்துக் கொண்டார். சங்க இலக்கியத்தைக் கிரேக்க, ஐரிஷ் முதலிய இலக்கியங்களோடு ஒப்பிட்டு அதை வீரயுகப் பாடல்கள் என அழுத்தமுறக் கூறினார். வீரயுகம், வீரயுகச் சமூகம், வீரயுகப் பாடல்களின் இயல்பு, பாடுவோர், கேட்போர் ஆகிய தன்மைகள் குறித்தும் ஆராய்ந்தார்.

"தமிழில் வீரயுகப் பாடல்கள்' என்ற இவரது ஆராய்ச்சி நூலை 1968-ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுச் சிறப்பித்தது. கோட்பாட்டு நெறிகளில் பிரிட்டன் நெறிமரபினைத் தழுவிச் செல்லும் இந்த நூல், தமிழ்க் கல்வியுலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

தமது ஆராய்ச்சிப் படிப்பின்போது சர்வமங்களம் என்பவரைத் தமது வாழ்க்கைத் துணையாக ஏற்றார்.

ஆராய்ச்சிப் படிப்பு முடிந்தபின், மீண்டும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தார். இலங்கைப் பல்கலைக்கழகத்தில் யாழ்-வளாகத் தலைவராக இருந்து பல்கலைக்கழக வளர்ச்சிக்குப் பாடுபட்டார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக மூன்று ஆண்டுகள் செயல்பட்டார்.

அமெரிக்காவிலுள்ள "அயோவோ பல்கலைக்கழகத்திலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் சிறப்புப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். இறுதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத் தலைவராகச் செயல்பட்டார். அமெரிக்க அயோவோப் பல்கலைக்கழகம் "புதியதைப் படைக்கும் எழுத்துகளுக்குரியர்' என இவரைப் பாராட்டிச் சிறப்பித்தது.

யுனெஸ்கோவுக்கான தேசிய துணைக்குழு, இலங்கை, பாடநூல் ஆலோசனைக்குழு, இலங்கைப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு ஆய்வுக்கழகம், இலங்கை வானொலி தமிழ் நிகழ்ச்சி ஆய்வுக்குழு, இலங்கைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியக் குழு, நாட்டியக் குழு முதலிய பல்வேறு அமைப்புகளில் உறுப்பினராகவும், தலைவராகவும் செயல்பட்டு அரும்பணி ஆற்றினார்.

""இலக்கியம் காலத்துக்குக் காலம் சமூக அரசியல் பொருளாதாரச் சூழலுக்கேற்ப மாறக்கூடியது; இதை மனதில் கொண்டே ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்; அந்த ஆய்வும் பல்துறைசார் ஆய்வாக இருத்தல் வேண்டும்'' என்பதை கைலாசபதி வலியுறுத்தினார்.

""கலை, இலக்கியம் முதலியற்றை அவற்றுக்குரிய வரலாற்றுப் பின்னணியிலும், சமுதாயச் சூழலிலும் வைத்தே ஆய்வு மேற்கொள்ள வேண்டும்; சமூகவியலை பற்றுக்கோடாகக் கொள்ளவேண்டும்; ஒப்பியல் ஆய்வு அறிவியல் அடிப்படையில் இருக்க வேண்டும்'' என்பதை, இலக்கிய ஆய்வுக்கான அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்தார். ""உண்மை நிலைக்குப் புறம் போகாமல் வாழ்க்கை நிகழ்ச்சிகளைத் தனது கதையில் அமைப்பவனே சிறந்த எழுத்தாளன்'' என எழுத்தாளனுக்குரிய இலக்கணத்தை வரையறை செய்துள்ளார்.

""உணர்ச்சி வழி நின்று செயல்படுவதை விட அறிவு வழி நின்று செயல்படுவது மொழி வளர்ச்சிக்கு உதவும், திராவிட இயக்கங்கள் உணர்ச்சி வழி மொழியைப் பார்த்ததால், சில பின்னடைவுகள் அதனால் ஏற்பட்டன; இன்றும் சில அமைப்புகள் ஆங்கில, இந்தி எதிர்ப்பில் கவனம் செலுத்துகின்றன. ஒரு மொழி உரிய முறையில் வளர்த்தெடுக்கப்பட்டால் பிறமொழி எதிர்ப்புத் தேவையில்லை'' என மொழி வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், தமிழ் நாவல் இலக்கியம், ஒப்பியல் இலக்கியம், அடியும் முடியும், இலக்கியமும் திறனாய்வும், கவிதை நயம், சமூகவியலும் இலக்கியமும், நவீன இலக்கியத்தின் அடிப்படைகள், திறனாய்வுப் பிரச்சினைகள், பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும், இலக்கியச் சிந்தனைகள், பாரதி ஆய்வுகள், ஈழத்து இலக்கிய முன்னோடிகள், இரு மகாகவிகள், சர்வதேச அரசியல் நிகழ்வுகள் முதலிய நூல்களைத் திறனாய்வுத் துறைக்கு அளித்துள்ளார்.

இலங்கையில் இருந்து வெளிவந்த, தொழிலாளி, தேசாபிமானி, செம்பதாகை, ரெட்பானர் முதலிய பொதுவுடைமை இயக்க இதழ்களில் கட்டுரைகள் வடித்துள்ளார். பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கத்தின் இளங்கதிர் இதழிலும், இலக்கிய இதழான மல்லிகையிலும் இவரது அரிய படைப்புகள் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. தமிழ்நாட்டு இதழ்களான தாமரை, சாந்தி, சரஸ்வதி, செம்மலர், தீக்கதிர், ஜனசக்தி, ஆராய்ச்சி முதலியவற்றிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

இலக்கியத்துக்கும் சமுதாயத்துக்கும் இடையே உள்ள உறவு பற்றிய மிக முக்கியமான, தத்துவார்த்த நூல், கைலாசபதியின் "தமிழ்நாவல் இலக்கியம்'. தமிழில் வெளிவந்த இலக்கியம் பற்றிய நூல்களுள் இது சிறப்பிடம் பெறுகிறது.

கல்வித்துறை நிபுணர், இதழாளர், எழுத்தாளர், ஆய்வாளர், கட்டுரையாளர், விமர்சகர், பேச்சாளர் எனப் பன்முகத் தன்மையுடன் விளங்கினார் கைலாசபதி.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியை உயிர்மூச்சாகக் கொண்டு இயங்கிய கலாநிதி கைலாசபதி 49 வயதில் 1982-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இயற்கை எய்தினார்.

தமிழ்கூறு நல்லுலகம் அறியுமாறு ஈழ நாட்டிலிருந்து எழுதிய அவர், பல ஈழ எழுத்தாளர்களையும், கவிஞர்களையும், திறனாய்வாளர்களையும் தமிழ் மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர். தமிழகத்து அறிஞர்கள் பலரைத் தமிழ் இலக்கிய உலகுக்கு எடுத்துக்காட்டிய பெருமையும் அவருக்கு உண்டு. தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறையில் கலாநிதி கைலாசபதி, மங்காத ஒளிவிளக்காக என்றென்றும் விளங்குவார்!


By: பி. தயாளன்
தினமணி - ஆனி 28, 2009

Thursday, April 22, 2010

இரவு எரிந்து கொண்டிருக்கிறது

-டானியல்ஜீவா-

எங்கையோ
வெறித்துக் கொண்டிருக்கிறது
என் கடந்த கால
காயங்களுக்கான
மன்னிப்பு.

என் பார்வையின் மீது
வாழ்கையின் எரிச்சல்ககோடு
தீப்பிடித்து
எரிந்து கொண்டிருக்கிறது

என் இரவுகளில்..
உறக்கமற்று அலையும்
கனவுகளில்;
தீர்ந்து போகாத
விரக்தி
கால் முளைத்து
மரண வாசனையுடன்
என்னைக் கடந்து
செல்லும்.

வெளிச்சக்கோடு
இருட்டாயும்
பெரும் காட்டின்
அடர்ந்திருக்கும் இருள்
ஒளியாகவும்
ஏன் முரண்பட்டு
என் உயீர்க்கூடு
சுமக்கிறது..?

என்னிடம்
எதுவும்மில்லாத போதும்
சாவின் வலி மட்டும்
நீண்டு..
மீண்டும் மீண்டும்
உறை நிலையில்.

விளங்கிக் கொள்ள முடியாத
வாழ்க்கைக்குள்
எத்தனை முடிச்சுகள்
அவிழ்ந்தும் அவிழாமலும்.

நான் கண்ணீராய்
கரைந்து
மெல்ல மெல்ல
தீர்ந்து போகிறேன்.
--------
நன்றி:கூர்2010

Saturday, April 03, 2010

திருப்பாடுகளின் குறிப்புகள்



துயர் இறங்கி வரும் அகதியாய்
சுற்றும் முற்றும் இழந்து
அண்ணன் குடும்பத்தோடு
வீதியில் நடந்து கொண்டிருந்தேன்.

மேலே வானில் கெலியும் பொம்பரும்
கீழே எங்கனும் கண்ணி வெடி
விதைக்கப்பட்டிருக்கலாம் என்ற
மனப்பயத்துடன் மெல்ல மெல்ல..
தோலில் சுமையுடன்

ஏதற்க்காக என் வீட்டையிழந்து
தெருத் தெருவாய் அலைய வேண்டும்..?
எப்போதும் எனக்குள்ளிருக்கும்
இக் கேள்விக்கு
இது வரை
விடைகிடைக்கவேயில்லை

காலம் காலமாய்
அழுது அழுது
கண்களில் ஒளியிழந்த அம்மா
நேற்று வரை வீடு
திரும்பாத மகனுக்காக
காத்திருந்து களைத்துப் போய்
அழுத விழியோடு
எங்களுக்கு முன்னரே நடந்து
அகதி முகாம் சென்று விட்டாள்.

தங்கச்சி விதவை
தனியே நடக்கப் பயப்படுவாள்
ஆனாலும் குழந்தைகளோடு
முன்னோடி முகமுக்குள்
இடம் பிடித்து விட்டாள்.

அண்ணனின் முதுகில்
புத்தகப் பெட்டி
எந்த நேரத்திலும்
எங்கள் மீது குண்டுகள் வீழ்ழலாம்
இந்த நேரத்திலும்
இதைச்சுமந்து வரவேண்டுமாவென்ற
பார்வை;
அண்ணியின் விழிகளில்...

கொஞ்சமும் பொறுமையற்ற நான்;
எப்படித்தான் இவ்வளவு துயரையும்
பொறுத்துக் கொள்கிறேனோ தெரியவில்லை?

முச்சந்தி கடக்க
எனது ஊரான் சுட்டு வீழ்த்தப்பட்ட
செய்தி அறிந்தேன்.

என்ன வாழ்கை எங்களுக்கு
யாரால் விதிக்கப்பட்டது?
பெருமூச்சோடு கண்களில் நீர்த்திவலை

அகதி முகம் நெருங்க நெருங்க
தற்காலிக ஆறுதல் கிடைக்குமென்ற
அற்ப ஆசை

நேற்றிய பொழுதிலும்
வான்படை வந்து
வெளிச்சம் போட்டு
கெலியிலிருந்து சுட்டார்கள்

சுவரில் காய்ந்து கிடந்தது
போரின் முகம்

இன்றைய பொழுதும்
இப்படியே கழிகிறது
நாளைய பொழுதெனும்..

நலிந்த நம்பிக்கையோடு
நிலத்தில் தெறித்த என் பார்வை
பொம்பரின் சத்தத்துடன்
நிமிர்ந்து பார்த்தேன்.
அதிர்ந்து உயிர் ஓடுங்கி
ஒரு வீட்டின் ஒரமாய்
ஒதுங்கினோம்
குண்டுகள் வீழ்ந்தது
அகதி முகாம் மீது...
இனி..

நன்றி :காலம்

Monday, March 15, 2010

இரவு எரிந்து கொண்டிருக்கிறது...

இரவு எரிந்து கொண்டிருக்கிறது...

கனடா கலை இலக்கியத் தொகுப்பு வெளியீடும்,கலாபூசணம் செ.டானியலின் இயக்கதில் வெளிவந்த ‘புனிதவதி’ (தென்மோடிக் கூத்து) ஒளிப் பேழைக் காட்சியும்.
கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினர்.







கூர்-2010தொகுப்பு வெளியீடும்,கலாபூசணம் செ.டானியலின் இயக்கதில் வெளிவந்த ‘புனிதவதி’ (தென்மோடிக் கூத்து) ஒளிப் பேழைக் காட்சியும்.





Sunday, March 07, 2010

டானியல் அன்ரனி

-சசி கிருஷ்ணமூர்த்தி-

வலை’ எறிந்தும் ‘சமர்’ புரிந்தும் கடந்த கால் நூற்றாண்டுகளாக ஈழத்து இலக்கியத்தோடு பரிச்சயம் கொண்டிருந்த டானியல் அன்ரனி என்ற படைப்பாளி யாரும் எதிர்பாராத வகையில் அண்மையில் காலமானார். அப்போது அவருக்கு வயது 47.
கலை இலக்கிய முயற்சிகள் அனைத்தும் ஓர் புதிய வாழ்கைக்கான மாபெரும் போராட்;ட த்தின் ஒரு பகுதி என்பதில் நம்பிக்கை கொண்ட டானியல் அன்ரனி, அந்த நம்பிக்கையை தனது படைப்புக்களில் வெளிப்படுத்தும் வாழ்வுக்கு விசுவாசமாகவும் இருந்தவர். எழுத்தாள னாக, பத்திரிகை ஆசிரியனாக, விமர்சகனாக இயங்கி வந்த இவரிடம் ஈழத்து இலக்கிய உலகம் இன்னும் எதிர்பார்த்திருந்த வேளையில் தான் இந்த அதிர்ச்சி தரும் நிகழ்வு நடந்திருக்கிறது.
ஆரம்பத்தில் எழுத வேண்டும் என்ற ஆவல் உந்த, மிகச் சாதாரண சிறுகதைகளை ராதா, சிந்தாமணி, சுந்தரி போன்ற பத்திரிகைகளில் எழுதி வந்த டானியல் அன்ரனி காலப்போக்கில் முற்போக்கு இலக்கியத்தின் தாக்கத்தினாலும், நல்ல இலக்கியங்களில் ஏற்பட்ட பரிச்சயம் காரணமாகவும் சமூகப் பார்வையோடு கூடிய சிறுகதைகளை எழுதத் தொடங்கினார். பொதுவாக தான் வாழ்ந்த கடல் சார்ந்த மக்களின் வாழ்வை அந்த வாழ்வில் அவதானித் த முரண்பாடுகளை அவரது சிறுகதைகள் வெளிப்படுத்தின. மல்லிகை,வீரகேசரி,சிரித்திரன், கணையாழி போன்ற பத்திரிகைகளில் இவை பெரும்பாலும் வெளிவந்தன. கலைத்துவ நோக்கில் இச்சிறுகதைகளில் சில நெருடல்கள் இருந்தாலும் அவை புறந்தள்ளக் கூடிய வை அல்ல.
டானியல் அன்ரனி பற்றிய இந்த அஞ்சலிக் குறிப்பை எழுதும் போது அவர் இலக்கியப் பயணம் தொடங்கிய காலத்தில் அவரோடு பயணித்த அனுபவம் செஞ்சில் நிழலாடுகின்ற து. வாழ்வின் சுமையறியாத காலத்தில், இலக்கியக் கனவுகளுடனும், தேடலுடனும் கழி ந்த நாட்கள் டானியல் அன்ரனியை நினைவு கூரக்கூடியன.
‘சிரித்திரன்’ காரியாலயம் அப்போது நாவலர் வீதியில், மனோகராத் தியேட்டருக்கு அரு கில் இருந்தது. அதற்கு அருகில் தான் ராதேயன் வீடும். ராதேயன் வீட்டிற்கு அப்போது பல இலக்கிய நண்பர்கள் வந்து போவார்கள். சிறுகதைகள் எழுதி வந்த டானியல் அன்ர னியையும், கவிதைகள் எழுதி வந்த பாலகிரியையும் இங்கே தான் சந்திக்க முடிந்தது. சிரித்திரன் காரியாலயத்தில் சுந்தரின் பத்திரிகைக் கலை அனுபவங்களும்,ராதேயன் வீட்டு இலக்கிய நண்பர்களின் சந்திப்பும் அன்றைய மாலை வேளைகளை அர்த்தமாக்கின.
அப்போது காணப்பட்ட வியட்நாம் போரின் உணர்வுகளும், யாழ்ப்பாணத்தில் சாதிப் போரா ட்டத்தின் தாக்கமும், மாஓவின் புகழோங்கிய நிலையும், முற்போக்கு இலக்கியத்தின் உர த்த குரலும் எங்களைப் பாதிக்கத் தவறவில்லை. சமூகமாற்றம், சோசலிஷம் ஆகியவற் றைப் புரிந்து கொள்வதற்கும், அதனை அடைவதற்கும் கலை இலக்கியங்களின் பங்குப் பணியில் பெரிதும் ஆர்வம் கொண்டவர்களாக இருந்தோம். இந்த ஆர்வம் எமது கலை இலக்கிய ஈடுபாட்டை மென்மேலும் விசாலிக்கச் செய்தது.
சமூக நோக்குடைய நல்ல இலக்கியங்களைத் தேடிப் படிப்பதும், நல்ல திரைப்படங்களை ரசிப்பதும் எமது தேடல்களாக இருந்தன. அப்போது தான் நாங்கள் ஏன் ஒரு இலக்கிய அமைப்பினை தோற்றுவிக்கக் கூடாதென்ற எண்ணம் எமக்கேற்பட்டது. எண்ணம் செயற்பட செம்மலர் இலக்கிய வட்டம் உருவானது. (ஏறக்குறைய 1970களாக இருக்கலாம்) இதன் உருவாக்கத்தில் ராதேயன் பாலகிரி, டானியல் அன்ரனி ஆகியோர் தான் முக்கியமானவர்கள். அதன் தலைவராக துடிப்புடன் செயற்பட்டவர் டானியல் அன்ரனி. இலக்கிய கலந்து ரையாடல், நூல் விமர்சனம் என அடிக்கடி நடைபெறும். இவ்விலக்கிய வட்டத்தின் செய ற்பாடுகள் பரவலாகத் தெரிய வரலாயிற்று. அப்பொழுது இலக்கியப் பயணத்தை மேற்கொ ண்டிருந்த பலரும் இவ்வட்டத்துடன் நெருக்கமுறலாயினர். வ.ஜ.ச.ஜெயபாலன், நந்தினி சேவியர், பூனகர் மரியதாஸ், ஞாயிறு கையெழுத்துப் பிரதிகளுடன் கூட்டங்களுக்கு வந்து போன சேரன்,மற்றும் பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையில் அப்போது கல்வி பயின்ற திக்குவல்லை கமால், அன்பு ஜவகர்ஷா, கலைவாதி கலீல் ஆகியோர் இவர்களுள் குறிப் பிடத்தக்கவர்கள்.
செம்மலர்கள் இலக்கிய வட்டத்தின் நடவடிக்கைகள் எமக்கு உற்சாகமூட்டவே, நமது வட் டம் ஏன் ஒரு சஞ்சிகையை வெளியிடக் கூடாதென்று தீவிரமாக யோசித்தோம். அதைச் செயல்படுத்தவும் முனைந்து விட்டோம். ‘அணு’ என்ற பெயரில் ஒரு சஞ்சிகையை வெளி யிடுவதென்று முடிவாகியது. இச்சஞ்சிகையின் வேலைகள் தொடங்கிய போது தான் அதி லுள்ள நடைமுறைச் சிக்கல்கள் எங்களுக்குப் புரியத் தொடங்கின. எனினும் ஒரு இதழ் மிகவும் சிரமத்தின் மத்தியில் கொண்டு வரப்பட்டது. இதன் வெளியீட்டு விழா யாழ் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஒரு இதழுடன் நின்றிருக்க வேண்டிய ‘அணு’ டானியல் அன்ரனியின் விடா முயற்சியினால் மேலும் இரண்டு இதழ்கள் வெளிவந் தன. அதன் பின்னர் கால நகர்வில் நாங்களும் திசைக் கொருவராகச் செல்ல செம்மலர் கள் இலக்கிய வட்டமும் தன் இலக்கிய வாழ்வை முடித்துக் கொண்டது.
‘அணு’ ஏற்படுத்திய தாக்கம் தான் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்குப் பின்னர் டானியல் அன்ரனியை ‘சமர்’ வெளியிடத் தூண்டியது. நவீன கலை இலக்கியம் மற்றும் மாக்ஸிஸ அழகியல் தான் வளர்த்துக் கொண்ட ஈடுபாட்டை வெளிப்படுத்தும் தளமாக அமைத்துக் கொண்ட ‘சமர்’ எட்டு இதழ்கள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கவை. ஒரு தனி மனிதனைப் பொறுத்த வரையில் எட்டு இதழ்களைக் கொண்டு வந்தமை சாதனை தான். க.கைலாசப தி, சேரன், எம்.ஏ.நுஹ்மான், வ.ஜ.ச.ஜெயபாலன், முருகையன், சாந்தன், கே.எஸ்.சிவகுமா ரன், பே.சண்முகலிங்கம் ஆகியோரின் எழுத்துக்கள் ‘சமரில்’ வெளிவந்திருந்தன. ‘சமர்’ வெளிப்படுத்திய கருத்துக்கள், பார்வைகள் பல இன்று மீள் பரிசீலனைக்கு உட்படக் கூடி யன. ஆயினும் இதன் வருகை ஈழத்து சஞ்சிகை உலகில் குறிப்பிடத்தக்கது. இதை மீண் டும் கருத்து பார்வை மாற்றங்களுடன் வெளிக் கொணர வேண்டும் என்பதில் டானியல் அன்ரனிக்கு கடைசி வரையும் விருப்பம் இருந்தது. ஆனால் அந்த விருப்பம் நிறைவேறா மல் போய்விட்டது.
டானியல் அன்ரனியின் கடைசி நாட்கள் மிகவும் சோகமானவை. இன ஒடுக்கு முறையின் குரூரம் அவரையும் விட்டு வைக்கவில்லை. தொழில் பார்த்த நிறுவனம் குலைந்து போக, நிரந்தர வேலையின்மை, குடும்பப் பாரத்தின் அழுத்தம் இவற்றுக்கிடையே தான் இவரைக் கொடிய நோய் பற்றிக் கொண்டது. ஆரம்ப நிலையில் அந்த நோயின் தன்மை கண்டு பிடிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவர் மீண்டிருக்கக் கூடும். நோய் முற்றிய நிலையில் மிகவும் அச்சந் தரும் பணயத்தை மேற்கொண்டு கொழும்பு சென்றும் அவரால் மீள முடியாது போய் விட்டது.
டானியல் அன்ரனி ஒரு ‘மனிதன்’ என்ற விழிப்புடன் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் உண ர்வுடன், இலக்கியத்தை நேசித்தவர். இலக்கிய உறவினரைப் பேணியவர். இலக்கியத்துக்கு அப்பாலும் சமூக சேவை, விளையாட்டுப் போன்ற தொடர்புகளின் ஊடேயும் தான் வாழ்ந்த சமூகத்துடன் உறவு கொண்டவர். அவரது வாழ்வுப் பயணம் நண்பர்களோடு முடிவடைந்து விட்டாலும் அவர் பதித்த சுவடுகள் லேசில் அழிபட்டுப் போகாதவை.

Thursday, March 04, 2010

உழைக்கும் வர்க்கத்தின் நண்பன்

டொமினிக் ஜீவா (மல்லிகை ஆசிரியர்)


நண்பன் டானியல் அன்ரனி பிறந்தது நாவாந்துறைப் பிரதேசம். ஒரு சாதாரண உழைப் பாளர் குடும்பத்தில் உதித்தவர் அவர். அந்தப் பிரதேசம் தொழில் சார்ந்த உடலுழைப் புக் கொண்ட மக்கள் அதிகமாக வாழும் பகுதியாகும்.
இவர் இந்தப் பிரதேசத்தில் மூன்று தளங்களில் நின்று தனது செயல்பாட்டை தொடாந்து நடத்தி வந்தார். ஒரு தளம் சமூக முன்னேற்றம். இன்னொரு தளம் விளையாட்டுத் துறை. பிறிதொரு தளம் இலக்கியக் களம். இவை மூன்றையும் தனது ஆளுமையைக் கொண்டு செழுமைப்படுத்தி வந்துள்ளார்.
இலக்கியப் பாதையை இவர் தெளிவாகவே தேர்ந்தெடுத்துக் கொண்டார். எதிர்கால இலக் கியப் போக்கு உழைப்பாளி மக்களின் இதயக் குரலை எதிரொலிக்க வேண்டும். அதுதான் நிலையான ஆக்க இலக்கியக் கோட்பாடாக அமையும் எனத் திட்டமாகவே நம்பி, கடைசி வரையும் அதன் ஊடாகவே செயற்பட்டு வந்துள்ளார்.
தான் பிறந்து வளர்ந்த நாவாந்துறையையும் அங்கு உழைத்து வாழும் மக்களையும் அவர் மறக்கவேயில்லை. கடைசி வரையும் நேசித்தார். தனது படைப்புக்களில் கூட,அந்தப் பிர தேசத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை அபிலாஷைகளைத் தான் அடிச்சாரமாகக் கொண்டு படைத்தார். அந்தப் பிரதேசத்து மக்களின் வாழ்க்கைச் சிரமங்களை,கஷ்டங்களை, முர ண்பாடுகளை முன்நிறுத்தி,அவர் சிருஷ்டித்த இலக்கியங்கள் நூலுருப் பெற்றுத் திகழ்கின்றன.
ஓயாமல் உழைத்தவர் அவர் தனது பிரதேசத்து மக்களின் சிரமங்களைக் குறைக்க இடை விடாது பாடுபட்டவர். இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நாவாந்துறையை முன்னேற்ற வேண் டும் என அடிகடி கூறிவந்த இவர் அதற்கு முன் உதாரணமாக தானே முன்நின்று உழை த்து வழிகாட்டியவர். உழைப்பவர்கள் உணர்ந்து முன்னேற வேண்டும் என்பதே இவரது இதய தாகமாகும்.
படைப்பாளியாக இருந்த இவர் காலக்கிரமத்தில் ஒரு சஞ்சிகையின் ஆசிரியராகவும் பரிண மித்தார். “சமர்” என்ற சஞ்சிகையை இவர் ஆரம்பித்து நடத்திய போது தான் பலர் இவரை ஆச்சரியம் கலந்த பார்வையுடன் திரும்பிப் பார்க்கத் தொடங்கினர். சொற்ப காலம் தான் “சமர்” சிற்றிலக்கிய ஏடு வெளிவந்தது. அந்த சொற்ப காலத்துக்குள்ளேயே “சமரின்” இல க்கிய வீச்சுப் பலரால் பின்னர் வியந்து பேசப்பட்டதாகும். “சமரின்” இலக்கியப் பார்வை ஒரு புதிய பரபரப்பையே இந்த மண்ணில் ஏற்படுத்தி விட்டது. தரமான இலக்கிய விமர்சகர்கள், எழுத்தாளர்கள் எல்லோரும்”சமரில்” தமது எழுத்துக்களைப் பதிய வைத்துள்ளனர்.
டானியல் அன்ரனி தோழமையுடன் பழகத்தக்கவர். அதிலும் எழுத்தாளர் என்றாலே இவரது பழகும் தன்மை கனிவு நிறைந்தவையாக அமையும். கடைசி வரையும் மக்கள் தொண்ட னாகவே வாழ்ந்து மறைந்தவர் இவர். இவரிடம் ஒளிவு மறைவு என்பதே கிடையாது. மன சில் பட்டதை வெகு இயல்பாக வெளியே சொல்லிவிடும் தன்மை நிறைந்த இவரிடம் தெ ளிவான கருத்து நிலை இருந்தது. அந்தக் கருத்து நிலை இவரது படைப்புக்களில் வெகு வாகத் தெரிந்தது.
இவரது படைப்புக்களில் ஒரேயொரு நூல் தான் வெளிவந்துள்ளது. இவரது முழு ஆளு மையையும் நாம் புரிந்து கொள்வதற்கு இது மாத்திரம் போதாது. அவரது சிருஷ்டிகள் முழுவதும் நூலுருப் பெறும் போது தான் டானியல் அன்ரனியின் முழுக்கருத்து ஆளுமையும் உழைக்கும் மக்களுக்குப் புரியும்.

இரு துருவங்கள்! அ.யேசுராசா

(1974 மார்கழி)
அப்போது நான் பேராதனையில் கடமையாற்றிக் கொண்டிருந்தேன். தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் என்ற எனது சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு விழாவை, எனது சொந்த ஊரான குருநகரில் நடாத்த ஒழுங்குகள் செய்து கொண்டிருந்தேன். எனது வயதை ஒத்த எனது கலை இலய்கியங்களுடன் முரண்படும் அணியைச் சோ.ந்த- இளந்தலைமுறை இலக்கியவாதி ஒருவரும் அவ்விழாவில் நூல் விமர்சனம் செய்ய வேண்டுமென்பது எனது எண்ணம். எனவே யாழ்ப்பாண நண்பர்களுடன் தொடர்பு கொண்டேன். ஒரு பிரச்சாரப் பீர ங்கி எனக் குறிப்பிட்டு, டானியல் அன்ரனியையே பலரும் சிபார்சு செய்தனா.. நண்பா.கள் மூலம் அவரை அக்கூட்டத்தில் பேச ஒழுங்கு செய்தேன்.
நான் கல்வி கற்ற சென் ஜேம்ஸ் பாடசாலையில் வெளியீட்டு விழா மிக எளிமையான முறையில் நடைபெற்றது. கவிஞர். மு.பொன்னம்பலம் தலைமை தாங்க குப்பிளான் ஐ.சண்முகன், மு.புஸ்பராஜன் ஆகியோர் உரையாற்றினா.. டானியல் அன்ரனி காரசாரமாக நூலை விமர்சித்தார். அன்று தான் அவருடன் எனது முதற் சந்திப்பு, அதன் பின் அவருடன் நல்ல பழக்கம் ஏற்பட்டது.
1976ல் நான் இடமாற்றம் பெற்று யாழ்ப்பாணம் வந்த பின்னர். அடிக்கடி அவரைச் சந்திக்க முடிந்தது. நான் கடமையாற்றிய சுண்டுக்குளி அஞ்சலகத்துக்கும் இடையிடையே அவர் வருவார். கலை, இலக்கியம், அரசியல் எனப் பல விடயங்களைப் பற்றியும் கதைத்துக் கொள்வோம்.
அன்ரனியின் பல கருத்துக்களுடனும் எனக்கு உடன்பாடு இருக்கவில்லை. இந்த முரண்பாடுகள் அன்று எமது நட்பைப் பாதிக்கவுமில்லை. சில நண்பர்கள் இணைந்து “அலை” என்ற இரு திங்கள் ஏட்டை 1975 கார்த்திகையிலிருந்து நடத்திக் கொண்டிருந்தோம். 1979 சித்திரையிலிருந்து “சமர்.” என்ற ஏட்டை அன்ரனி வெளியிடத் தொடங்கினார். இவ்விரு ஏடுகளும் கருத்து நிலையில் இருதுருவங்களாக இருந்தன. கலை, இலக்கியச் செயற்பாடுகளி லுள்ள முரண்பாடுகள் கூர்மையடைந்த சூழலில், எம்மிருவடையிலான தொடர்பு அறுந்து போயிற்று. கருத்து முரண்பாடு உள்ளவர்கள் நேரில் வெளிப்படையாகக் கதைத்து- உறவு களைப் பேணும் சூழலை கலை தான் பொறுப்பேற்க வேண்டும்.
டானியல் அன்ரனியைப் பற்றி நினைக்கையில் இருவிடயங்கள் தூக்கலாக எனக்கு நினைவுக்கு வருகின்றன.
முதலாவது யாழ்ப்பாணத்தில் ஓரளவு பின்தங்கிய பகுதிகளாகச் சொல்லப்படும் கரயோரப் பகுதியைச் சேர்ந்த ஓர் ஊரிற்கு- நாவாந்துறைக்கு- தனது “சமர்” இதழ் வெளியீடு மூலமும், ஏனைய கலை இலக்கிய செயற்பாடுகள் மூலமும் சிறப்பு அடையாளத்தைப் பெற்றுக் கொடுத்தார். (குருநகரிலிருந்து அலை வருகிறதா! என வியப்புடன் பலர். கேட்ட அனுபவம் எமக்கு முண்டு. குருநகரும் இக்கடலோரப் பகுதியைச் சேர்ந்ததே).
இரண்டாவது, இலக்கியக் கூட்டங்களிலும்,கருத்தரங்குகளிலும் துணிவாகக் கருத்துக்களை வெளிப்படுத்தும் அவரது தன்மை, அபிப்பிராயம் சொல்ல வேண்டிய இடங்களில் மௌனப் பண்பாட்டைப் பேணிய இலக்கிய உலகில், இது கவனத்திற் கொள்ளப்பட வேண்டிய முக் கிய செயற்பாடேயாகும்.
குறைந்த வயதில்- எதிர்பாரா முறையில்- அன்ரனி மரணமடைந்தது, பலரைப் போல் எனக் கும் அதிர்ச்சியை தந்தது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆறுதல் வார்த்தைகள்.

Tuesday, February 23, 2010

கூர்-2010


இரவு எரிந்து கொண்டிருக்கிறது...
,கனடா கலை இலக்கியத் தொகுப்பு,
தொகுப்பு வெளியீடும்,கலாபூசணம் செ.டானியலின் இயக்கதில் வெளிவந்த ‘புனிதவதி’ (தென்மோடிக் கூத்து) ஒளிப் பேழைக் காட்சியும்.

இடம்:scarborough civic centre
காலம்: பங்குனி -06-2010,
சனி மாலை 3 மணி

மேலதிக தொடர்புகளுக்கு
தேவகாந்தன்-416 458 9426 டானியல் ஜீவா-416 500 9016

Friday, November 20, 2009

கூத்துக்கலை குறைந்து கொண்டே போகிறது


மூத்த அண்ணாவியார் செ.டானியல்(பெலிக்கான்)


கலைவடிவங்கள் ஒரு இனத்தினுடைய அடிநாதமாக விளங்குகின்றன. நாடுகளிற்கு அப்பால் மனிதர்களை ஒன்றிக்கச்செய்யும் அற்புதத் தொடர்பு சாதனங்களாகக் கலை உருக்களைக் கருதமுடியும்.
சமூகத்தினுடைய அடையாளமாக அவர்களால் ஆடப்படுவதும் பேணப்படுவதுமான தனித்தனிக் கலைகளும் உள்ளன. தமிழர் தம் பாரம்பரியங்களை வெளிக்கொணரும் அதேவேளை நாட்டுக்கூத்து பாரம்பரிய கலைவடிவமாகவும் எம்மவர்களால் தொண்டுதொட்டு ஆளப்பட்டு வருகின்றது.
கலைஞர் உள்ளத்தில் தோன்றும் கருத்தை வெளியிட வேண்டுமென்றால் அதனை கவிதையாக, கட்டுரையாக, நாடகமாக வெளிக்காட்டுவதுபோல கூத்தாகவும் வெளிக்கொணரலாம். கலைஞரின் மாறுபட்ட சிந்தனை வெளிப்பாடுகளினால் கலைவடிவங்கள் பல்வேறு கோணங்களில் முன்வைக்கப்படுகின்றன. இதன் ஒரு அங்கமாகவே தென்மோடி நாட்டுக்கூத்தை ஆடிவருகிறோம் எனக் குறிப்பிடுகின்றார் தென்மோடி நாட்டுக்கூத்துக் கலைஞரும் மூத்த அண்ணாவியாருமான செபஸ்தியாம் பிள்ளை டானியல் பெலிக்கான்.
நாட்டுக்கூத்து கலையை மிக நுணுக்கமாக கற்று வலுநேர்த்தியாக ஆடிவருகின்றார். கலைஞர் நாட்டுக் கூத்துக்கலை தொடர்பாக பகிர்ந்து கொண்ட கருத்துக்களை வாசகர் முன் வைக்கிறோம்.

நாம்: கூத்துக்கலைக்குள் உள் நுழைந்தமை...
பெலிக்கான்: இயல்பாக எமது பகுதியில் பல கூத்துக்கலைஞர்கள் தோற்றம் பெற்றனர். அவர்களில் என் தந்தையான செபஸ்தியாம்பிள்ளையும் ஒருவர். இவர்களால் ஆடப்படும் சுத்துக்களை சிறுவயதில் இருந்தே பார்த்து மகிழ்ந்தது போக நானும் பாட வேண்டும், ஆட வேண்டும் என்ற மனநிலையை வளர்த்துக் கொண்டேன். இதன் பயனாக ஒன்பதாவது வயதில் “ஏழுபிள்ளை நல்லதங்காள்’‘ நாடகத்தில் ஏழு பிள்ளை நல்லதங்காளாகக் கூத்துகலையில் கால்வைத்தேன்.
தொடர்ந்து பல்வேறு பாத்திரங்களில் நடித்து எமது கிராமத்திற்கு அப்பாலும் பலரது பாராட்டைப் பெற்றேன். வில்லன், ராஜபாட், இஸ்திரி, புனிதர் என என்பங்களிப்பை இத்துறைக்கு வழங்கிவருகிறேன் என பதிலளித்தவரிடம்.
நாம்: கலைஞராக இருந்த நீங்கள் நெறியாளராக.....
பெலிக்கான்: இன்றுவரை 40இற்கு மேற்பட்ட கூத்துக்களில் நடித்த போதிலும் இயல்பாகவே என்னிடமிருந்த குரல்வளமும் எந்தப் பாத்திரத்தையும் உடனே செய்யக்கூடிய திறமையை வளர்த்துக் கொண்டமையும் என்னுடன் இணைந்து நடித்தவர்களின் விருப்புடனும் நாட்டுக் கூத்துக்கலை பழக்கத் தொடங்கினேன். பல இளம் கலைஞர்களை உருவாக்கிய போதிலும் ஒரு சிலரே தொடர்ந்தியங்கி வருகின்றனர். முழுவதும் இளம் பெண்களைக் கொண்டு “புனிதவதி’‘ என்ற கூத்தையும் மேமையேற்றியுள்ளேன்.
செபஸ்தியார், சஞ்சுவான், வீரத்தளபதி, கருங்குயில், கொன்றத்தின் கொலை, சங்கிலியன், விஜயமனோகரன், ஞானசௌந்தரி, ஏழுபிள்ளை நல்லதங்காள், கெனோவா, அலங்காரரூபன் இவை நான் நெறியாள்கை செய்த நாட்டுக்கூத்துக்களில் குறிப்பிடும் படியானவை என சிறுபுன்னகையுடன் இருந்தவரை....
நாம்: நாட்டுக்கூத்தில் பெண்களை ஈடுபடுத்துகின்றமை....
பெலிக்கான்: விஜயமனோகரி, புனிதவதி போன்ற கூத்துக்களில் பெண் பாத்திரங்கள் கூடுதலாகவுள்ளன. இதற்கு அக்கால இளைஞர்களை ஒன்றுசேர்த்து (எல்லோருமல்ல) கூத்தைப் பழக்குவது ஆகாதகாரியம்.... குறித்த நேரத்திற்கு ஒழுங்காக ஒத்திகைகளில் பங்குபற்றினாலே நிறைவான படைப்பை வெளிக்கொணரலாம். எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி முழுவதும் பெண் பிள்ளைகள் நடிக்கின்ற விஜயமனோகரி கூத்தைப் போடவுள்ளேன்.
நாங்கள் நடித்த ஆரம்பகாலங்களில் பெண் பாத்திரங்களில் பெண்களைப் போடுவதில்லை. சமூகம் ஏற்றுக் கொள்ளாமையும் அவர்கள் முன்வராமையுமே காரணங்களாகும். இப்பொழுது அந்த நிலை மாறியுள்ளது. இந்நிலை இனிவரும் காலங்களிலும் தொடரவேண்டுமென ஆதங்கப்பட்டவரிடம்....
நாம்: நாட்டுக்கூத்தின் இன்றைய நிலை தொடர்பாக.....
பெலிக்கான்: கடந்த பத்து வருடங்களிற்கு முன்பிருந்த நிலை இன்றில்லை. கூத்துக்கலை குறைந்து கொண்டே போகின்றது. நாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதங்களும், நிம்மதியற்ற வாழ்க்கையுமே காரணமாகின்றன. நல்ல திறமையான கூத்துக்கலைஞர்களை இழந்ததுடன் பலர் சிதறி பல்வேற இடங்களிலுள்ளனர். கூத்துக்கலை அருகி வருவதற்குக் காரணமாக இருந்தாலும் தொலைக்காட்சிகளின் அதிகரித்த பாவனையும், இளைஞர்கள் இலத்திரனியல் ஊடகங்களில் பெருமளவான நேரத்தை செலவிடுவதுமே எமது கலை வடிவத்தில் சிறுதொய்வு ஏற்பட்டுள்ளதெனலாம் எனக் கூறியவரிடம்.....
நாம்டு கூத்துக் கலைக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சிகள் எதனையும்.....
பெலிக்கான்: கடந்த ஐம்பது வருடங்களிற்கு மேலாக கூத்துக் கலைஞராக இயங்கிவருகின்றேன். கூத்தை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டுமென்றால் கிராமரீதியாக நாடகமன்றங்களை அமைக்க வேண்டும். இதனுள் கலைஞர்களை உள்வாங்கி, கலை ரீதியான பயிற்சிகளைக் கொடுப்பதுடன் கலைஞர்கள், கலைவடிவங்கள் தொடர்பான நூல்கள் வெளியீடுகளையும் இளைஞர்கள் பார்க்கும் வகையில் மன்றங்களில் வைக்க வேண்டும்.
ஒரு வருடத்தில் நான்கு கூத்தையாவது போடவேண்டும். இதன் ஊடாக பார்வையாளர்களை உள் இழுப்பதுடன் புதிய கலைஞர்களையும் உருவாக்க முடியும். நவீன பாணியில் அமையக்கூடிய கூத்துக்களைப் போடுவதினால் இளையோரைக் கவரலாம் என பதிலளித்தவரிடம்.....
நாம்: தந்தையாரின் வழிவந்ததாகக் கூறும் நீங்கள் உங்களிற்குப் பின்னால்.....
பெலிக்கான்: என் புதல்வகள் கூத்துக் கலைக்குள் உள்வரவில்லை. இருந்தாலும் எழுத்துத்துறையிலும், நாடகத்துறையிலும் இயங்கிவருகின்றனர். அமரர் டானியல் அன்ரனி, டானியல் சௌந்தரம், டானியல் ஜீவா மூவருமே எழுத்தாளர்களாக நாடக ஆசிரியர்களாகவுள்ளனர். எனது பேரப்பிள்ளைகள் (சௌந்தரத்தின் மகள்) என் உறவினர்கள் எனப் பலர் பாடுகின்றனர். இருந்தாலும் என் வழியில் நின்று எனது பெயரைச் சொல்லக் கூடியவகையில், கூத்துக் கலையில் புதல்வர்கள் நாட்டம் கொள்ளவில்லையென தன் நிலையை விபரித்தவரிடம்.....
நாம்: மூத்த கூத்துக் கலைஞர்களுடன் இன்றைய கலைஞர்களை ஒப்பிடுவீர்களா.......
பெலிக்கான்: ஒப்பிட முடியாது.... ஒலி, ஒளி வசதி இல்லாத போதும் தம் திறமையால் இரண்டு இரவுகள் தொடர்ந்துபாடி ஆடியவர்களும் உள்ளனர். புகுந்தான் ம. ஜோசப், சில்லாலையூர் செல்வராஜா, பக்கீரி, அண்ணாவியார் வின்சன்டிபோல், புலவர் நல்லையா, ஏஸ்தாக்கி எனப் பல திறமையான அற்புதக் கலைஞர்கள் இருந்தனர். சிலர் இருக்கின்றனர். இவர்களைப் பொறுத்தவரை கூத்துக் கலைக்காகவே தோற்றம் பெற்றதாகக் கருதுகிறேன். போதிய வசதி வாய்ப்புக்கள் இல்லாத போதும் தாம் ஏற்கும் பாத்திரங்களை மிகத்திறமையாக வெளிப்படுத்தி கதைக்குரிய நாயகர்களை ஞாபகப்படுத்துவர். இன்றுள்ளவர்களை நீங்களே பார்க்கின்றீர்கள் தானே.... நான் எண்ணத்தை..... என நசூக்காக பதிலளித்ததுடன் தன் கருத்துக்களையும் நிறைவு செய்தார்.
அண்ணாவியார் டானியல் பெலிக்கான் சிறந்த கலைஞர் என்பதற் அப்பால் சிறந்த விளையாட்டு வீரன், சமூக சேவையாளன், நாட்டுக் கூத்தையே தன் மூச்சாகக் கொண்டு இயங்கிவரும் அண்ணாவியார் பெண்பாத்திர மேற்றமைக்காக (எஸ்தாக்கியர் - மனைவி) “நாட்டக்கூத்து மாமேதை’‘ என்ற விருதையும் கிராம மக்களால் “பொற்கிளி’‘ வழங்கியும் கௌரவிக்கப்பட்டார். பல இடங்களில் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டுள்ளார். 72 வயதில் தொடங்கிவரும் அண்ணாவியாரின் நெறியாள்கையில் உருவான “சஞ்சுவான்|ஷ, “அலங்காரரூபன்’‘ ஆகிய 4த்துக்கள் வீடீயோப்படமாக்கப்பட்டுள்ளன. இதனூடாக அண்ணாவியாரின் திறமையான பதிவை நாம் காண முடியும்.
பாரம்பரிய கலைவடிவமான கூத்துக் கலையானது கரையோரக் கிராம மக்களாலேயே பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இதற்குப் பல உதாரணங்களைக் கூறமுடியும். தான் பயின்ற கலையை தன்னைச் சார்ந்தவர்களிற்கு பயிற்றுவித்து அதனூடாகத் தானும் தன் சார்ந்தவர்களும் நிறைவு பெறும் அரிய பணியை செய்து வருகிறார் பெலிக்கான். ஈழத்துக்கூத்துத்துறைக்கு பெரும் பங்காற்றியவர்களில் அண்ணாவியாரும் ஒருவர் என்பது குறிப்பிடப்பட வேண்டியதொன்று.

பெண் பாத்திரம் ஏற்று நான் நடித்த நாடகங்கள் பெரும் புகழை ஈட்டித்தந்தன!


நாட்டுக்கூத்து மாமேதை செ.டானியல் பெலிக்கான்


யாழ்பாணத்திலே நாட்டுக்கூத்து கலை மரபுகளைப் பேணிப்போற்றி வளர்க்கின்ற இடங்களுள் ஒன்றாக நாவாந்துறை விளங்குகின்றது. பல நாட்டுக்கூத்து கலைஞர்களையும், புலவர்களையும், எழுத்தாளர்களையும், கவிஞர்களையும் உருவாக்கித் தந்த பெருமை இக்கிராமத்தைச் சேர்ந்தது.
நாவாந்துறை வடக்குப் பகுதியிலே வசித்து வருகின்ற நாட்டுக்கூத்துக் கலைஞர் அண்ணாவியார் செ. டானியல் அவர்களைச் சந்தித்து அவரது கலை அனுபவங்களையும், அவருக்கு இக்கலையிலுள்ள ஈடுபாடு பற்றியும் அறியும் முயற்சியே இச்சந்திப்பின் நோக்கமாகும்.
கலைக்குடும்பம்
அண்ணாவியார் டானியல் அவர்களைச் சந்திக்க நான் அவரது வீட்டிற்குச் சென்றிருந்த சமயம் அவர் நாடக விடயம் சம்பந்தமாகவே பல கலைஞர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். என்னை நான் முதலில் அவருக்கு அறிமுகம் செய்து கொண்டு வந்த நோக்கத்தையும் தெரிவித்தேன். முகம் மலர வரவேற்ற அண்ணாவியார் கூட இருந்த நாட்டுக்கூத்து கலைஞர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி வைத்தார்.
அண்ணாவியார் டானியல் அவர்கள் ஒரு உயர்ந்த கம்பீரமான மனிதர், 62 வயதிலும் நாட்டுக்கூத்தின் மீத தீராத ஆர்வம் உள்ளவராக இருக்கின்றார். இவர் ஒரு சிறந்த கலைஞர் மட்டுமல்லாது சிறந்த விளையாட்டு வீரராகவும் யாழ்ப்பாணத்தில் விளங்கியவர். சமூகசேவையிலும் ஈடுபாடு கொண்டவர்.
ஒன்பது வயதிலே முதன் முதலாக ஷஷஏழு பிள்ளை நல்ல தங்காள்|| என்ற பெண் பாத்திரம் ஏற்று நடித்ததில் இருந்து இத்துறையில் ஈடுபாடு கொண்டு உழைத்து வருகிறார். அண்ணாவியார் டானியல் குடும்பம் ஓர் கலைக்குடும்பம். இவரது தந்தையார் திரு. செபஸ்தியாம் பிள்ளை ஒரு நாட்டுக்கூத்துக் கலைஞராகவும், இசைப்பிரியராகவும் விளங்கியவர். இவர் தான் தனது மகனுக்கு ஆர்வத்தைக் ஊட்டி, வழிகாட்டி நெறிப்படுத்தியவர். அதன்பிறகு புலவர் சூசைப்பிள்ளை, ஷகலைக்கவி| நீ எஸ்தாக்கி, ஷபுகுந்தான்| ம. ஜோசப் ஆகியோர் இவரது கலை ஆர்வத்திற்கு பக்கத்துணையாக நின்றவர்களாவர். அண்ணாவியார் டானியல் அவர்களது பிள்ளைகளான டானியல் அன்ரனி, டானியல் சவுந்திரன், டானியல் ஜீவா ஆகியோரும் எழுத்தாளர்களாகவும், கவிஞர்களாகவும், நாடக ஆசிரியர்களாவும் விளங்கி வருகின்றார்கள்.
இவர் ஓர் சிறந்த நாட்டுக்கூத்து கலைஞராக இருந்த போதிலும் எதுவிதமான பெருமையோ, பெருமிதமோ இவரிடம் இல்லை என்பதனை நேரடியாக அவதானிக்க முடிந்தது. இவரது தம்பியார் திரு. எஸ். மைக்கல் ராஜா என்பவரும் சிறந்த நாட்டுக்கூத்துக் கலைஞராக விளங்குகின்றார்.

நடிப்பும் பாட்டும்
அண்ணாவியார் டானயில் அவர்கள் ஈழத்திலே வாழ்ந்து, அத்துடன் தற்பொழுது வாழ்ந்து வருகின்ற புகழ் பூத்த பல அண்ணாவிமார்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர். அவர்களுடன் பல்வேறு நாட்டுக்கூத்துக்களை ஆடி வந்தவர். கொழும்பில் பல நாடகங்களை மேடையேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கொழும்பு சரஸ்வதி மண்டபத்தில் மேடையேற்றப்பட்ட ஷஷசங்கிலியன்|| நாட்டுக்கூத்தில் ஷஷபுகுந்தான் ஜோசேப்|| சில்லையூர் செல்வராஜன் போன்றோருடன் நடித்ததை நினைவு கூர்ந்தார். வடபகுதி எங்கும் இவரது நாட்டுக்கூத்துக்கள் மேடையேற்றப் பெற்றன. இலங்கை வானொலியில் இவரது நாட்டுக்கூத்துப் பாடல்கள் ஷஷநாடகமேடைப்பாடல்கள்|| நிகழ்ச்சியில் ஒலிபரப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வானொலியில் எல்லாமாக ஐந்து நாட்டுக்கூத்துக்கள் ஒலிபரப்பப்பட்டன. அவற்றுள் வீரத் தளபதி செபஸ்தியார், மத்தேஸ்மகிறம்மா, கருங்குயில் குன்றத்தில் கொலை என்பன குறிப்பிடத்தக்கன. இவரது சிறந்த நாட்டுக்கூத்துக்களில் ஒன்றாக செபஸ்தியார் நாட்டுக்கூத்து விளங்குகின்றது. அண்ணாவியார் அவர்கள் செபஸ்தியார் நாட்டுக்கூத்தில் செபஸ்தியாராக நடித்துள்ளார். இதுவே இவரது சிறந்த நாட்டுக்கூத்து எனக் கருதுகிறார். ஒரு கட்டப்பாடல் வருமாறு:
ஷஷகட்டிக்கள்ளி நட்டணையாய்
துட்ட வேடர்தான் - வில்லில்
தொட்டு நெஞ்சை பூட்டி அம்பை
எய்யப் போறாரோ||
இவர் இதை தனது கணீரென்ற குரலில் பாடியபோது நானே இசையில் வசமானேன்.
நமது நாட்டுக்கூத்து மரபுகளைப் பேணுகின்ற நல்நோக்குடன் அவர் தனிப்பட்ட ரீதியிலும், மன்றத்தினூடாகவும் இணைந்து பல வருடங்களுக்கு முன்னர் தமது ஊரிலே உள்ள சென்மேரிஸ் முத்தமிழ் மன்றத்தில் கலையரங்கத் தலைவராக இருந்து அரும் கலைப்பணியாற்றி இருக்கிறார். பல நாடகங்களை சென்மேரீஸ் முத்தமிழ் மன்றத்தின் சார்பாகவும், தனிப்பட்ட வகையிலும் மேடையேற்றி வந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. அண்ணாவியார் ஷஷஅலசு|ஷ நாட்டுக்கூத்தின் அலசுவாக பாத்திரமேற்று பாடி, நடித்ததை பலர் பாராட்டியுள்ளார்கள்.
அண்ணாவியார் சிறந்த நாட்டுக்கூத்து nநிறப்படுத்துனராகவும், ஒப்பாரிபாடுவதில் சிறந்த இசைஞானம் கைவரப் பெற்றிருக்கின்றார். இவரை நாட்டுக்கூத்து கலையில் ஈடுபடச் செய்வதற்கு காரணங்களில் ஒன்றாக இருந்தது இவருக்கு இயல்பாகப் பாடுகின்ற திறமையே ஆகும். தங்களது ஊரிலே யாரும் இறந்து விட்டால் இரவில் இறப்பு வீட்டிலும் பின்னர் வீட்டில் இரந்து சேமக்காலைவரை ஒப்பாரிப்பாடல்களை பாடுவதாக அவர் கூறினார்.

தயாரிப்பும் நெறிப்படுத்தலும்
அண்ணாவியார் டானியல் அவர்கள் ஏறக்குறைய முப்பத்தைந்து நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளார். பல நாடகங்களைத் தானே தயாரித்து, அந் நாடகங்களைத் தானே தயாரித்து, அந் நாடகங்கள் பலவற்றில் முக்கிய பாத்திரங்களை ஏற்றும் நடித்துள்ளார். தற்பொழுது பல நாடகங்களைத் தயாரித்தும், நெறிப்படுத்தியும் வருகின்றார். தற்பொழுது ஷஷஏழு பிள்ளையும் நல்ல தங்காளும்|| என்னும் நாட்டுக் கூத்தையும், பூநகரி குமுளமுனை கலைஞர்களுக்காக ஷஷசஞ்சுவான்|| நாட்டுக்கூத்தையும் நெறிப்படுத்தி வருகிறார். நாட்டுக்கூத்துக் கலையில் கொண்டுள்ள ஆர்வமும் ஈடுபாடுமே தன்னை இத்துறைக்கு மென்மேலும் இட்டுச் செல்ல உதவியது என அவர் கூறினார். இந்நாட்டுக்கூத்து கலை மூலம் எதுவிதமான வருமானத்தையும் எதிர்பாராது ஒரு கலைச் சேவையாகவே இவர் செய்வது குறிப்பிடத்தக்கதாகும். நாட்டுக் கூத்துக் கலையை வளர்ப்பதில் அரசினரின் ஆதரவு கிடைப்பதில்லை என வருத்தப்பட்டதுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்களான கலாநிதி சி. மௌனகுரு, கலாநிதி அ. சண்முகதாஸ், கலாநிதி இ. பாலசுந்தரம், கலாநதி இ. சவரிமுத்து அடிகளார் போன்றோர் ஆர்வத்துடன் உழைப்பதை பாராட்டினார்.
அண்ணாவியார் டானியல் அவர்கள் நெறிப்படுத்திய நாடகங்களுள் வேதசாட்சிகள், விஜயமனோகரன், ஜெனோவா, மத்தேசு மசிறம்மா, சங்கிலியன், ஞானசவுந்தரி, கருங்குயில் குன்றத்தில் கொலை, நல்லதங்காள், சஞ்சுவான் என்பன குறிப்பிடத்தக்கன.

நாவாந்துறை கலைஞர்கள்
தனது ஊராகிய நாவாந்துறையில் பல்வேறு கலைஞர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் சிறந்த நாட்டுக்கூத்து தயாரிப்பாளர்களாகவும், புலவர்களாகவும், கவிஞர்களாகவும் இருந்தார்கள். இவர்களது முயற்சியினால் தான்பல நாட்டுக்கூத்துக்கள் இயற்றப்பெற்று, கையெழுத்துப் பிரதிகளாக எழுதப்பட்டிருந்தன. இவர்களது கையெழுத்துப் பிரதிகளைத்தான் தான் பயன்படுத்தி பல்வேற நாட்டுக் கூத்துக்களை தயாரித்தும், நெறிப்படுத்தியும், நடித்தும் வருவதாகக் கூறினார். இப்பகுதியில் வாழ்ந்து மறைந்த மூன்று புலவர்களின் நாடகப் பிரதிநிதிகள் தான் தனக்குப் பெரிதும் பயன்பட்டன எனக் கூறினார். அவர்களுள் புலவர் மரியாம்பிள்ளை, புலவர் நல்லையா, அதிபர் கலைக்கவி நீ எஸ்தாக்க ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் என்றார்.
நாட்டுக் கூத்துக்களை பொதுவாக திருவிழாவின் போதும் மற்றும் பொதுவான கொண்டாட்டங்களும் மேமையேற்றுவது வழக்கமாக உள்ளது. வருடத்தின் ஒவ்வொரு ஆவணி மாதத்தில் தான் பரலோக மாதா கோயிலில் வருடாந்த திருவிழா நடைபெறும் இக்காலங்களிலே கோவிலுக்கு முன்பாக அமைந்திருக்கும் மேடையிலே பல்வேறு நாட்டுக் கூத்துக்கள் நடைபெறும். இரவு தொடங்கினால் அடுத்த நாள் காலை வரைக்கும் விடிய விடிய நடைபெறுவது வழக்கம்.
அண்ணாவியாருடைய நாட்டுக் கூத்துக்கள் பல மேடையேற்றப்பட்டன. குறைந்தது ஒரு நாட்டுக் கூத்து எட்டு மணித்தியாலங்கள் வரை நடைபெறும்.

நாட்டுக்கூத்து மாமேதைப் பட்டம்
அண்ணாவியார் டானியல் அவர்கள் நாட்டுக் கூத்திலே பெரும்பாலும் கதாநாயகன் பாத்திரம் ஏற்று நடித்து வருகின்றார்.
பெண் பாத்திரங்கள் தாங்கி நடித்த நாடகங்கள் தான் தனக்கு பெரும் பாராட்டைத் தேடித் தந்ததாக கூறுகின்றார். யாழ். மேற்றாசனக் கோயிலின் கட்டிடநிதிக்காக நடாத்தப் பெற்ற எஸ்தாக்கியார் நாட்டுக் கூத்திலே எஸ்தாக்கியாரின் மனைவியாக ஏற்று நடித்தார்.
இவருடைய நடிப்புத் திறனைப் பாராட்டி வண. தியாகுப்பிள்ளை தலைமையில் டாக்டர் பலி அவர்களால் பொன் ஆடை போர்த்திக் கௌரவித்து ஷஷநாட்டுக்கூத்து மாமேதை|| என்ற பட்டத்தையும் வழங்கியமை இவரது திறமைக்கு ஓர் சாட்சியாகும். இவர் பழக்கி நடித்த ஷஷஅலங்கார ரூபன்|| என்ற நாட்டுக் கூத்து அண்மையில் வீடீயோப் படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கூடுதலான இளம் பெண்கள் நடிக்கின்ற ஷஷசஞ்சுவான்|| நாட்டுக் கூத்து இவராலேயே பழக்கப்பட்டு பின்னர் வீடீயோ படமாகவும் தயாரிக்கப்பட்டது.
நாவாந்துறையில் சென்ற வருடம் நடைபெற்ற கலை விழாவிலேயே ஈழத்தின் சிறப்பாக வடபகுதியில் உள்ள மூன்று முதுபெரும் நாட்டுக் கூத்துக் கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டார்கள். இவர்களுள் அண்ணாவியார் டானியலும் ஒருவராவார். எனையவர்கள் அமரர். அண்ணாவியார் வி.வி. வைரமுத்து, அண்ணாவியார் வின்சன்டிபோல் ஆகிய இருவராவர். இம்முவருக்கும் இவ்வூர் மக்கள் பொன்ஆடை போர்த்தி பொற்கிழி வழங்கிக் கௌரவித்தார்கள்.
-----------------------------------------------------------------------