Pages

Saturday, April 09, 2005

காயப்பட்ட அகதியின் கண்ணீர்க் கசிவு....

நாவாந்துறை டானியல் ஜீவா

என் உள்ளம்
தூங்குகின்றது...
உடல் அசைகின்றது.
நிசப்தம் கலைய
நிற்கிறேன்.
இயந்திரத்தின்
முன்னால்

பஞ்சுக்கட்டை இரண்டால்
காதைஅடைத்து விட்டு
என்ன சத்தமடா
யாழ்ப்பாணத்தில்
கெலிவருவது போல்....
என்று நினைத்தபடி

சின்னஞ் சிறுவயது
அண்ணன்மார்
அதிகா¤த்ததால்
அவ்வப்போது
பொறுப்பற்று
பொழுதுபோன வாழ்வு....
பிறப்பென்;று சொல்லிக்கொள்ள
என்னைப் போல்
இடிந்து போன
எனது ஊர்....

காலைக்கதிரவன்
கண்விழித்தானோ என்னவோ
பிறப்போடு எனக்கு
இருளானது.

பருவங்கள்
மாறிவிலகிச்செல்ல
ஒவ்வொரு தேசமாய்
என் இருப்பு....
எனக்கேது முகவா¤..?

இயக்கமின்றி
இயங்கும்
என் வாழ்வின் துயா¤ல்
ஒவ்வொரு கணமும்
போ£¤டும் மனவிறுக்கம்

என் மனவீதியில்
பால்நிலாவொன்று
பரவசமாய் வி£¤கின்றது
அந்தக்கணமே
வண்ணாத்திப்பூச்சி போல்
திசை தொ¤யாமல் மனம்;....

மிதிபடுகின்றது
என் கனவுகள்....
அழுகையோடு
அம்மாவின் நினைவுகள்.

என்னுள் வேரோடி
என் மனதை
அழுத்திக்கொண்டிக்கின்றது
ஒருவார்த்தை
மனித நேசிப்பு
இப்பூமியில்
எப்படி சாத்தியப்படும்
என்ற வினாவெழுப்பியபடி

அச்சம் ஊடறுத்து
உயிர்த்தெழுதல்
சாத்தியப்படதா போதும்
பிலாத்துவைப் போல்
கைகழுவ
ஈரமான இதயம்
இடங்கொடுக்க மறுக்கிறது

என்ஜீவனத்திற்கு£¤
உயீர்....
எத்தனை
நெருக்குதலுக்குள்

என்னால்
தனித்து வாழமுடியாது
என்பதை
இந்தக்கணப்பொழுதில்
உணர்கிறேன்....

பகல் முழுவதும்
தூங்குவதே
கடமையாயின@
இரவு வேலையே
என் இருப்பை
அடையாளப்படுத்துகின்றது.

இயந்திரத்தின்
மேலே
வலப்பக்கமாக....
நிலாபோன்ற
வெள்ளை நிற
மின் விளக்கு
அந்த வெளிச்சத்தை தேடி
தும்பி போன்ற பறவை
பறந்து கொண்டிருந்தது

என் பார்வையை
விலக்காமல்
பார்த்துக் கொண்டிருந்தேன்
ஒரு நொடிப் பொழுதுதான்
சுருண்டு சுருண்டு
கீழ் நோக்;கி வந்து
என் காலடியில்
விழுந்தது....
சூட்டு காயங்களுடன்
வீதியில் வீசப்பட்ட
என் தோழனின்
உடல் போல்....

No comments: