Pages
Saturday, April 09, 2005
நெய்தல் நிலத்துக்காரி டானியல்ஜீவா-
கொழும்பில் நான் தங்கியிருந்த காலத்தில் ஒரு சிங்கள வீட்டில் தான் நானும் வரதனும் ரமேசும் சாப்பாடு எடுத்து சாப்பிடுவது வழக்கம். இன ஐக்கியத்தை ஏற்படுத்தவது அல்ல எங்கள் நோக்கம். அல்லது சாப்பாடு சிங்களவர்கள் ருசியாக சமைப்பார்கள் என்பதற்காக அல்ல. 'கிராண்பாஷ்' வீதியில் உள்ள அந்த வீட்டுக்குப் போய் சோத்துப் பார்சல் எடுப்பதன் நோக்கம் நிறையச் சோறும்; கறியும். அடுத்து மிக விலை குறைவானதுமே. இந்த வீட்டை எனக்கும் வரதனுக்கும் அறிமுகப்படுத்திய பெருமை ரமேசையை சேரும். அவன் நன்றாக சிங்களம் பேசக்கூடியவன் அத்தோடு ஆங்கிலமும் ஒரளவு இலக்கண முறைப்படி பேசக்கூடியவன். புனித பெனடிக் கல்லூரியில் வர்த்தகப்பிரிவில் படித்த பின் யாழ்ப்பாணப் பக்கமே வராமல் கொழும்பிலேயே தங்கிவிட்டான். வரதன் உயர்தரம் கணிதப் பிரிவில் யாழ் மத்திய கல்லூ¤யில் படித்தவன். நான் வைதீஸ்வரா கல்லூரியில் உயர்தரம் கலைப்பிரிவில் கல்வி கற்றவன். மூன்றுபெருமே மனதளவில் படித்து பட்டம் பெறவேண்டும் என்ற ஆசையை வளரத்;தவர்கள்தான். அது நிறைவேறாமல் போனதால் வெளிநாடு செல்லும் எண்ணத்தோடே யாழ்ப்பாணத்தை விட்டு நானும் வரதனும் கொழும்பு வந்து சேர்ந்தோம்.இங்கு வந்த நாட்களில் இருந்து மூவரும் சாப்பாட்டு பார்சலை எடுத்து எங்கையாவது வைத்து சாப்பிடத் தொடங்கினால் நடைமுறை வாழ்க்கையில் இருந்து நாவாந்துறை நெய்தல் நிலத்து வாழ்க்கை வரை பேச்சு நீண்டு சிதறி விரியும். அனேகமாக ரமேஸ் எங்கள் இருவரில் இருந்தும் ஒரு வகையாக சமகால வாழ்வை, வாழ்வு கொள்கின்ற நெருக்கடிகள்,சமூக ஏற்றத் தாழ்வுகள்,சாதிப்பிரச்சனை, மதப்பிரச்சினை பற்றி எல்லாம் காரசாரமாக கதைக்கும் போது ரமேஸ் மௌனமாக இருந்தாலும் சில வேளைகளில் ஏதேனும் சொல்வதற்காக அவனிடம் இருந்து வார்த்தைகள் உதிர்ந்தால் அவை நானும் வரதனும் கதைப்பதற்கு எதிர்மாறாகவே இருக்கும.; சமூக நெருக்கடிகளுக்கு எப்போதும் அவனுடைய சமரசப் பார்வையையே முன் வைப்பான்.அறிவில் கொஞ்சம் எங்களை விட உயர்ந்தவன் என்றாலும் இந்த சமூக அமைப்பின் நௌ¤வு சுழிவுகளை சரியாக பூ¤ந்து கொண்டவன். இந்த விடயத்தில் வரதன் ஓரளவு என்றாலும் ரமேசின் பாசையில் என்னைச் சொல்லப் போனால் பிழைக்கத் தெரியாவதன் போக்கு. இப்படித் தான் ஒரு முறை மூன்று பேரும் சோத்துப் பார்சலை எடுத்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது ரமேஷ் கேட்டான் வரதனிடம்
'
'வரதன் இரவுச் சாப்பாடு என்ன மாதிரியடா...?'
'இரவுச் சாப்பாட ராமேஸ்! சாப்பிடுவதை நினைத்தாலே இப்ப சாப்பிட்ட சாப்பாடும் உடனே செமிக்குமடா'
நாங்க மூவருமே விழுந்து விழுந்து சிரித்தோம். கொஞ்சம் நகைச்சுவை உணர்வு கலந்த போக்கிலேயே வரதன் எப்போதும் கதைப்பது வழக்கம். மீண்டும் ரமேசே ஒரு கேள்வியை வேணுமென்றே போட்டான்.
'என்ன வரதன் உங்கட கொப்பர் வாத்தியாராக இருந்து கொண்டு உங்களையும் படிக்க வைத்து ஆளாக்கியிருக்கிறார் அதோட அவரும் சட்டக் கல்லூ£¤யில் படித்துக் கூட முடித்து விட்டார். நீ மட்டும் ஒரு முன்னேற்றம் இல்லாமல்... உன்னை நான் முதல்ல பார்த்த மாதிரியே இப்பவும் இருக்கிறாய் எப்ப தான் உன்ர வாழ்க்கையில முன்னேற்றம் வருமடா?'
வரதன் புன்னகைத்துக் கொண்டு 'உங்களோடு நான் திரிந்தால் எப்படியெடா உருப்படுவன் ஏதோ நீயோ சிவாவோ முன்னேற்றத்தின் உச்சியில் இருந்து கதைப்பது போல் அல்லவா உன்ர கேள்வி கிடக்கிறது?'
நான் மௌனித்து விட்டேன். மௌனத்தின் ஆழத்தில் இருந்து கொழும்பு நகா;ப்;புற வாழ்;வு மனதில் நகா;ந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள கரையோர நகரப்பகுதியான நாவாந்துறையில் இருந்து புறப்பட்டு வந்த காலத்தில் இருந்து கொழும்பில் லொட்சில் தங்கியிருக்கும் காலம் வரை வெறுப்பும் விரக்தியும் வறுமையும் கூடவே என் வாழ்வின் மீது கவிந்து கிடந்தாலும் என்னால் ஊருக்கு திருப்ப முடியாத மனவிறுக்கம். விரும்பியோ விரும்பாமலோ மனதில் வா¤த்துக் கட்டிக்கொண்டு விட்டேன்.லொட்சில் வெறும் விறாந்தையில் தூங்குவதற்கு மட்டும் நாற்பது ரூபாய். அறை எடுத்து தங்குவதாக இருந்தால் இருநூறுக்கும் அதிகமாகும். உழைப்புப் பிழைப்பு இல்லாமல் இருத்தலில்; இந்தச் செலவீனத்தை எப்படித் தாங்கமுடியும். இதற்கிடையில் வீட்டில் இருந்து வேறு காசு கேட்டு கடிதம் வரும் தங்கச்சியடம் இருந்து. ஒரு தடவை கோபத்தில் கடிதம் ஒன்று தாறுமாறாய் பேசி எழுதிவிட்டேன். பின்னர் தான் யோசிச்சன் அப்படி எழுதியது தவறு என்று. இப்படித் தான் வீட்டில் இருக்கும் போது சில வேளை கோபத்தில் பேசிவிட்டு மனதால் புழுங்கிச் சாவேன். கோபம் வருவதற்கு காரணமோ அன்றில் காரணமற்றோ எழும்வேளையில் சினந்து கடிந்து கொள்வேன். பின்னர் ஓய்வில் மனம் உறங்கும் போது அதற்கான காரணத்தை ஓடவிட்டு பிடிக்கும் போது அதற்குள் அற்பத்தனமான விடயமே மலிந்து கிடக்கும்.
கொழும்பு நகர வாழ்க்கையை என் வாழ்நாளில் எப்போதுமே நான் கண்டது கிடையாது. இந்த வாழ்க்கையை வாழ்நாளில் அனுபவிச்சவனும் இல்லை. அதனால் நகர நாகாPகத்தை அடியோடு என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது தவித்தேன். அதற்கு என்னொரு காரணம் என்னுடைய இயல்பான சுபாவமும் தான். சூ£¤யனும் நிலவும் எந்தளவு ஒளியைக் கொடுத்தாலும் அவை எட்டாதா தூரத்தே நிற்பது போல் தான் என் காலைச் சாப்பாடும் இரவுச் சாப்பாடும். வாய்க்குழிக்கு வரமறுக்கும். அந்த நினைவோடு நின்றுவிடும். இதை விட கொழும்பில் எப்பபோதுமே தமிழனுக்கு பதட்டமான சூழ்நிலை தான். அதுவும் வடக்கு கிழக்கில் இருந்து வெளிநாடு செல்வதற்காகவோ அல்லது உறவினர்களிடம் வெளிநாட்டில் இருந்து பணம் வாங்குவதற்காகவோ வந்து தங்கி நிற்பவர்கள் சொல்லொணாத் துயரம் அனுபவிப்பார்கள். அடிக்கடி இரவில் பொலிஸ் வந்து பாய்வதும், விசாரணை என்ற பெயா¤ல் பொடியலை பிடித்துக் கொண்டு போவதுமான நிலையில் மனம் நிம்மதி அற்று ஒவ்வொரு இரவும் பீதியில் நிறைவுறும். இன்றிரவு பொலிஸ் வருவானோ நாளை இரவு வருவானோ என்றெல்லாம் மூச்சுத் தினறும். பெற்ரா பொலிஸ் நிலையத்தில் இருந்து விசாரணைக்காக கைது செய்யப்பட்டு விடுதலையானவர்களின் கதை கேட்டால் கண்ணீரிலே என் இதயம் ஈரமாகிவிடும்.
மரணப்பீதி நான் சுமந்து வாழ்ந்த காலத்தில் வாழ்வு கா¤கியும் தேய்ந்தும் உறங்கிக் கிடந்தது.எதுவுமே நிரந்தரமில்லையென்ற எண்ணம் நெஞ்சுக்கு புலப்பட்டு நெடுநாட்களாகி வி;ட்டது. எனக்கு கொடுக்கப்பட்ட வாழ்க்கையின் எல்லையைத் தாண்டி ஒரு நிமிடம்கூட என் உடலிருந்து உயிர் இருக்க முடியாது என்பதை அம்மாவின் இழப்பினுடாக கிடைத்த அனுபவம் என்று சொல்வதிலும் பார்க்க இதுதான் நியதி என்று நிம்மதி கொண்டேன்.என் வாழ்வின் நோக்கென்ன....? அதைக் கண்டடைய வேண்டுமென்று என்னையறியாமலேயே எனக்குள் எப்போதும் ஒரு உறுத்தல் அதனால் ஒவ்வொரு நிமிட இருப்பையும் இனிமையாக்க வேண்டுமென்ற முனைப்பு. ஆயினும் இப்போது மனசு வலித்தது.என் கண்களில் மேகத்திரள் கருக்கட்டியது. இருட்டைக்கிழிக்கும் ஒளியொன்று எழத்தான் வேண்டும். எழும் என்ற நம்பிக்கை உண்டு. அது காலத்தின் கட்டாய தேவை என்பதை மனம் அடிக்கடி முணுமுணுத்தாலும் தற்போதுள்ள வாழ்க்கையை எப்படி வெற்றி கொள்வது என்பதே என் முன் கேள்விக் குறியாக உள்ளது. என்று மனதுக்குள் வார்த்தைகளைப் போட்டு பிசைந்து கொண்டு இருந்த வேளைதான் ரமேசின் காட்டுச் சத்தம் என் நினைவைச் சிதறடித்தது. ரமேஸ் வரதனைப் பார்த்துக் கொண்டு
'என்னடா வரதன் இவனுக்கு நான் சொன்ன வார்த்தை சுட்டுப்போட்டுது போல' என்றான்.
நான் சிரித்துக் கொண்டு....
'எனக்கு அப்படி ஒன்றும் சுடவில்லையடா... வீட்டிலேயே எவ்வளவோ திட்டை வாங்கிக் கொண்டுதான் வாழ்ந்தனான். இது பொ¤ய பேச்சாடா?'
“இல்லையென்றால் அப்படியென்னடா யோசனையில் லயத்திருந்தனி? ஒரு வேளை காதல் தந்த கடும் தழும்புகள் நினைவில் வந்து விட்டதோ?”
“நமக்கெல்லாம் காதலா...? அப்படித்தான் காதல் வந்தாலும் 'முனியப்பதாசன'; சொன்னது போல் 'ஒரு நிமிடப் பூக்கள்'தான்”.
“நீ முனியப்பதாசன் என்று சொல்லத்தான் ஒரு விசயம் ஞாபகத்தில் வருகுதடா...”
“என்னடா ரமேஸ!; என்னை எக்கச் சக்கமாக யோசிக்க வைக்காமல் சட்டனச் சொல்லன்டா”
“சிவா நீ ஆனா யேசுராசாவின் அறியப்படாதவர்கள் நினைவாக கவிதைத் திரட்டை கேட்டயல்ல?”
“ஓம் அதுக்கென்ன?”
“அதுக்கென்னவாஸ?நானும் உன்னைச் சந்திக்க வரும் போது ஒவ்வொரு முறையும் மறந்து போய்விடுகிறன்....”.
“இப்பயென்ன நாம மூவரும் நடந்தே உன்ர அறைக்குப் போய் எடுத்து வந்தால் போச்சு...”
“உனக்கு என்ன சொன்னனான்.... நினைவில்லையோ”
“என்னடா..?”
“சிங்களச் சனம் அறையை வாடகைக்குத் தரும் போதே எழுதப்படாத கொண்டிசன் போட்டவங்க என்று ஒன்று சொன்னனே ஞாபகம் இருக்காஸஸ.அதிகம் ஆட்களை கூட்டிக்கொண்டு வரக்கூடாது என்று சொன்னவையல்ஸ.?”
“...ஊம் இது பற'றி சொன்னனீதான் ஆனா மறந்து போய்ற்றன்”;.
“நல்ல சனம் ஆன பொலிஸ் கிளிஸ் எண்டு வந்தால் பயப்பிடுங்கள் அதுகள் ஒரு சோலி சுறட்டில்லா சனம”;.
“அப்ப என்ன செய்யலாமடா?”
“பக்கத்திலதான்டா என்ர அறை நடந்து போய்ற்றே வாறன்.... நீங்க இங்கேயே இருங்கடா.”
“நானாவது வரவாடா?”என்று வரதன் கேட்டான்.ரமேஸ் சற்று யோசித்துவிட்டு
“சரி வா வரதன”; என்றான.;
“நான் இந்த இடத்திலேயே இருக்கிறன் நீங்கள் போய்ற்று வாங்க” என்று சொல்ல
சரி என்று தலை அசைத்துக் கொண்டு ரோட்டை கடந்து வீட்டைத் தேடி இருவரும் நடந்தார்கள். நான் போகும் திசையை நோக்கி கண்களை மேய விட்ட படி மறையும் வரை பார்த்துக் கொண்டே இருந்தேன். அவர்களின் உருவம் மறைந்து போக மெதுவாக எனது தனிமை உணர்வு உள்ளத்தில் உறைந்து மீதியாய்த் தேங்கி நிற்கும் நினைவுகள் மெல்ல மனிதில் இருந்து கசிந்தது.
பா¤மளா! அவள் நெய்தல் நிலத்துக்கா£¤. இடுப்புடைய இடர் வந்து நொந்தாலும் நோய்யென்று படுக்கையில விழுந்தது கிடையாது. நெருப்பைச் சுமந்து நிழல் தேடும் அவள் மனம். ஆயிரமாயிரம் தடவை அழுது கண்ணீர் விட்டு பரலோக மாதாவிடம் மண்டியிட்டு ஒவ்வொரு கோரிக்கைகைளாய் ஒப்பிவித்த போதும் இன்று வரை மிஞ்சியிருப்பது அவள் வடித்த கண்ணீர் மட்டும் தான். நாவாந்துறையில் இருந்து கொஞ்சம் வெட்டி எறிந்த துண்டுபோல பொம்மை வெளி. இந்த குடியேற்றத்திற்கு போவதற்கு குறுக்காக நடைபாதை வழி இருக்கிறது. பொம்மைவெளியோடு ஒட்டி நிற்கும் குடியேற்றத்திட்டம் தான் சூரியவெளி. சூரியவெளிக்கும், பொம்மைவெளிக்கும் இடைப்பட்டு ஒரு வயல்வெளி அந்த வயல் வெளியில் பலர் சொந்தமாக காணிவாங்கி வீடு கட்டினார்கள். பொம்மைவெளி, சூரியவெளி என்ற வரிசையோடு கவிதை நடையிலேயே இந்த வயல் வெளி 'அறுகுவெளி'யாய் பெயர் மாறியது. பரிமளா இந்த அறுகுவெளிக்குள்ளேயே காணிவாங்கி குடிசையொன்று போட்டு வாழ்ந்து வந்தாள். சூரியவெளியையும், பொம்மைவெளியையும் ஒட்டினால் போல் காரைநகருக்குப் போவதற்குரிய பிரதான ரோட்டுப் பாதையுண்டு. இந்த ரோட்டைக் கடப்பதற்கு முன் ஒரு வெள்ளை வீடு ஓன்று தனித்து இருக்கின்றது. நாங்கள் ரோட்டைக் கடந்து நெல்லுப் பிடுங்குவதற்காக செல்கின்றபோது இந்த வெள்ளை வீட்டுக்குப் பக்கமாக போய்வருவோம். இந்த வீட்டில் ஏதோ பேய் உலாவுவதாகவும் கதைகள் உண்டு. அந்த வெள்ளை வீட்டின் சுவரின் மேல் ஏறி ஒரு நாள் எங்கே பேய் நிற்கின்றது என்று கூடப் பார்த்தோம். அங்கு பேயில்லை. அது இருண்டு பாழ்ழடைந்த மண்டபம் போல் தோன்றியது. இப்போது அந்த வெள்ளை வீட ஒரு பள்ளிவாசலாக மாறிவிட்டது.
பா¤மளத்தின் மூத்த மகள் பொன்னு கொஞ்சம் சுறு சுறுப்பானவள். நெல்லுப் பிடுங்கிற காலத்தில் வயலுக்குச் சொந்தக்காரன் கூப்பிடு போட்டு வருவதற்குள் பை நிறைத்துவிட்டு ஓடிவிடுவாள். சில வேளை நான் மட்டும் பிடிபடுவேன். அப்படி பிடிபடாடத நேரங்களில் பிடுங்கிய நெல்லோடு வீடு திரும்புவோம். வீட்டிற்கு வந்தால், அம்மா நெல்லை உரலில் போட்டு குத்தி சீனிச்சோறு சமைத்துத் தருவா. அன்றிரவு அரை வயிற்றோடு தூங்கிவிடுவோம்.
பாய் விரித்த வள்ளம் ஓட்டும் ஓடத்திற்கு சொந்தக்காரன் தான் பா¤மளாவின் கணவன் அந்தோணி. ஆனா ஆவன்னாவை எழுத்துக் கூட்டி வாசிக்கத் தெரியாத பாமரன.; என்றாலும் பகுத்தறிவாளன். பண்பில் சான்றோரைவிட உயர்ந்தவன்.தன் குடும்பத்திற்கென்று எந்தச் சொத்துக்களையும் சேர்த்து வைக்காதவன். கடலில் காற்றுத் திசையறிந்து நீர் நிலை கணக்கிட்டு தொழில் திறம்பட செய்வதில் அவனொரு அறிஞன். மிக கெட்டித்தனமாக களங்கண்ணி பாய்வதிலும் அவனுக்கு நிகர் அவன்தான். அவதானிப்பு உலக ஞானம், புத்திக்கூர்மை, சமூகநேசிப்பால் ஊரில் நல்ல பெயரோடு வாழ்பவன். பழுப்புமேவிய பற்கள் எப்போதும் வெற்றிலையை அரைத்த படியே இருக்கும். சுருட்டையும் சுகமாய் இழுத்து சுவாசிப்பதில் ஒரு சுகம் காணுவான் அந்தோணி. அந்தோணிக்கு இழகிய இதயம.; நெஞ்சில் நிறையக் கனவுகள.; ஆசைப்பட்டதுகள் அதிகம். அதில் ஒன்று கூட வாழ்நாளில் கிடைக்காகமல் போனது அவன் விதியல்ல. பல மீனவர்கள் பாடு இப்படித்தான் நகர்ந்து முடிவுற்றிருக்கிறது. அந்தோணிக்கும் பரிமளாவிற்கும் இரண்டு பெண்கள். இரண்டும் இருவிழிகள் போல் அவர்களுக்கு கறுத்தத் தங்கங்கள். ஒருவாறு ஒன்றைக் கரைசேர்த்ததே ஒரு பெரிய விடையம் போல இன்ப நினைவில் மிதந்த வேளையில்தான் அவனுடைய இயல்புநிலை ஒடுக்கப்பட்டு படுக்கையில் விழுந்தான். முற்றத்தில் நின்ற முரங்கை மரம் செல்லடித்து சிதறியதுபோல் பா¤மளாவின் வாழ்வும் பா¤தாபமாகியது. திடீரென வந்த பக்கவாத நோய் தாக்கி இடது பக்கம் முழமையாக செயல் இழந்து இயல்பு நிலையை முடமாக்கி விட்டது. படுக்கையில் கிடந்த படியே கொன்னத் தமிழில் மட்டுமே கதைப்பான். மலம் சலம் என்றாலே படுத்த படுக்கையில் கிடந்த படி கழிக்க வேண்டிய நிலை. சிலவேளை பா¤மளா கொஞ்சம் நிமிர்த்து வைத்து சாப்பாடு ஊட்டி விடுவாள். அப்படி அவனுக்கு ஊட்டுவதில் அவளுக்குள் ஒரு இன்பம். ஓடியாடித் திரிந்த மனிசன் ஒடுங்கிக் கிடக்கிறாரே என்று மனதளவில் அழுது தொலைவாள். பா¤மளாவின் முகத்தில் ஏதேனும் வாட்டம் கண்டாலே அவன் அதை உணர்ந்தவன் போல் தன் கைகளால் அவளுக்கு புரியும் படி கவலைப்படாதே எல்லாத்துக்கும் பரலோகமாதா இருக்கிறா என்று சொல்லுவான். கணவனின் உழைப்பும், தன் வியாபாரத்தில் கிடைக்கும் வருமானமும் குடும்ப பொருளாதாரச் சுமையை ஓரளவு சமாளித்துக் கொண்டிருந்த பரிமளாவிற்கு அவன் படுக்கையில் விழுந்தபோது குடும்பவருமானமும் குறைந்து, குடும்பச் சுமை அதிகரித்தது. இந்த நிதி நெருக்கடிக்யை ஈடுசெய்ய எத்தனையோ வழிமுறையை அவளின் மனத் தேடலிலஒன்;று மட்டும் சட்டென ஓடிவந்து குறுக்கிட்டது. அது வேறு ஒன்றுமில்லை அவள் செய்யும் தொழிலான மீன் வியாபாரத்தில் தான். மீன் வியாபாராம் தொடங்குவதற்கு முதல் கடலில் இருந்து மீனவர்கள் பிடித்துவரும் மீன், றால், கணவாய், போன்றவற்றை அவர்களிடம் வாங்கி அவர்களுக்கு முன்னால் சுளகில் போட்டு விற்கிற வியாபாரியாகவே இதுவரை இருந்து வந்தாள். மீனோ றாலோ கணவாயோ விற்ற பிறகு மீனவர்கள் கொடுக்கின்ற பணத்தை மட்டும் வாங்குவாள். சிலர் பணம் கூடக் கொடுக்காமல் போய்விடுகின்ற சம்பவங்களும் சிலவேளைகளில் நடக்கத்தான் செய்கிறது. இதற்குமேல் ஒரு படி உயர்ந்தே அவள் சிந்தனை முளைத்தது. அதாவது மொத்தமாக கூறியான் ஏலத்தில் போட்டு கூறிவிக்கும் போது அதை மொத்தத்தில் வாங்கி கொஞ்சம் கொஞ்சமாக மீன் விற்கிற கல்லில் போட்டு விற்கவேண்டும் என்கின்ற எண்ணமே.அந்த கனவை நனவாக்க ஆகக் குறைந்தது இரண்டாயிரம் ரூபாய்யாவது சொந்தமாக கையில் இருக்கவேண்டும். அந்தப் பணத்தை பெறுவதற்கும் பலவகையான உறவுக்காரரை மனத்திரையில் போட்டுப் பார்த்தாள். அங்கொன்றாய் இங்கொன்றாய் சில மனதில் வந்து தோன்றினாலும் அவர்களிடம் மண்டியிட்டுப் பணம் கேட்க அவளின் சுயகௌரவம் விட்டுக் கொடுக்கவில்லை. அத்தோடு பணம் வாங்கினால் உறவில் வி£¤சல் சில வேளை வந்துவிடும் என்றும் நினைத்தால் சற்று நிதனமாக யோசித்துவிட்டு தயக்கத்தை துரத்த@ துணைக்கு வந்தது வீட்டிலிருக்கும் நகைபற்றிய நினைப்பு.வீட்டிலுள்ள மொத்த நகைகளைச் சேர்த்து அடைவு வைத்தால் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய் கிடைத்து விடும்.அந்த கசிந்த நினைவோடு பா¤மளா இளைய மகள் மா¤யாவுக்கு பக்கம் வந்தால்.
“மா¤யாஸ.!”
“என்னன்ன அம்மா?”என்று கேட்டுக் கொண்டு மா¤யாதை கலந்த அன்போடு பா¤மளத்தை நிமிர்ந்து பார்த்தாள்.
மா¤யாவின் முகத்தை பார்த்ததும் அவளுக்கு மனசு வலித்தது.நாட்கள் தவறாது நாற்க்கடகம் சுமந்து மின் விற்றுப் பிழைத்தலில் குடும்பத்தின் வயிற்றை மட்டும்தானே நனைக்க முடிந்தது.ஆனா மா¤யாவிற்கு வாழ்க்கைத் துணையொன்றைக் தேடிக் கொடுக்க வக்கற்றறுப் போனேன் என்று உள்ளுக்குள் உணர்வுகள் பிசுபிசுக்க குற்ற உணர்ச்சியால் கூனிப்போனாள்.
“மா¤யா எப்படி மோன இருக்கிறாய்ஸ..?”கவலை கலந்த குரலில் கேட்டாள்.
“என்னயம்மா .உனக்கு என்ன ஆய்ச்சு?விடிஞ்ச பொழுது பட்டால் வீட்டுக்குள்ள உன்ர காலடியிலேயே கிடக்கிறன். பிறகு எப்படியிருக்கிறாய் என்று கேட்கிறீயின.”
“இல்ல மோன.”தயங்கித் தயங்கி குரல் தவழ்ந்து வர மா¤யாவின் குரல் குறுக்கிட்டு அவள் வார்த்தையை நிறுத்தியது.
“என்ன அம்மா சொல்லன எனக்குத் தொ¤யாமல் எதையோ மறைக்க நினைக்கிறயன”
“இத்தினை வருச குடும்ப வாழ்க்கையில உனக்குத் தொ¤யாமல் என்னத்த மோன மறைச்சனான்”
“அப்ப என்னன்டுதான் சொல்லன்..”
“மோன இப்பிடியே எத்தினை நாளுக்குத்தான் கஸ்டப்பட்டு வாழ்கிறது.கொஞ்சமாவது நம்முடைய குடும்பத்திற்கு வெளிச்சம் கிடைக்காத எண்டும் உன்னையும் இப்பிடியே வைச்சுக்கொண்டிருந்தால் ஊ£¤ல நாலு சனம் என்னன்னோவெல்லம் கதைக்குங்கள்.கால காலத்தில குமர் கரைசேர்றதுதான் எங்களுக்கும் நல்லது உனக்கும் நல்லது.அதுக்காகத்தான் ஒரு முடிவுக்கு வந்துட்டன்.இவர் படுக்கையில் விழுந்த பிறவு நாம அனுபவிச்ச கஸ்டதுன்பங்கள் கொஞ்ச நெஞ்சமில்ல அப்படியிருந்தும் ஆ£¤ட்டயும் பல்லுக் காட்டாமல்தான் இவ்வளவு காலமும் மீன் வியாபாரத்தில கிடைக்கிற வருமா£னத்தைக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கம்.எல்லாம் கடவுள் சித்தம் கடவுள் பா£த்துக் கொள்வார் என்று அக்கைறை இல்லாமலிருந்தால் என்னும் வறுமையிலதான் நம்ம குடும்பம் சீரழியும்.என்னதான் இருந்தாலும் நம்மட முயற்சியும் இருக்க வேண்டுமல்ல மோன"
“அதுக்கென்னம்மா நான் செய்யவேணும்..?நானும் உன்கூட மீன் விற்க்க வரட்டுமா”
“அதுதான் ஒன்டு குறையாய் இருந்தது அதையும் செய்துவிடு”
“அப்ப என்னதான் செய்ய வேண்டுமென்டு சொல்லன நான் செய்யிறன்”
“காலையில மீன் சந்தையில மீன் கூறெக்கில மொத்தமாக வாங்கி சுளகில போட்டு விக்க வேணுமென்டு யோசிச்சு இருக்கிறன் அதுக்கு ஒரு இராண்டாயிரம் ரூபாயாவது வேண்டுமெல்ல அதுதான் காலையிலயிருந்து அந்த யோசினையில இருக்கிறன்.”
“அம்மா அப்பிடியென்ட நம்ம சின்னமாக்கிட்ட சாடை மாடையாய் பேச்சு கொடுத்து கடனாய்க் கேட்டுப்பாரன்ஸ”
“உன்ர சின்னமாக்கிட்டியஸ.என்ர தங்கச்சிய உன்ன விட அவள எனக்கு நன்றாகத் தொ¤யும்புள்ள.அவள் எச்சிக்கைய்யாலயும் காகம் திரத்த மாட்டளடி என் புருஷன் படுக்கியில விழுந்தண்டு வந்தவள்தான் அதுக்குப் பிறவு ஒரு நாள் கூட என்ன ஏதேன்டு எட்டிப்பாக்காதவள்; நம்மட குடிசைப்பக்கம் வந்தாள் நம்மட கஸ்டத்தில ஏதும் காசு கிசு கேட்டுவிட்டிருவோம் என்டதற்காக இங்காலப் பக்கம் வராதவள் நம்மட பரலோக மாதா கோயிலுக் ஒவ்வொரு நாளும் பூசைக்கு மட்டும் ஒழுங்க போயிருவஸதூஸ.இவளும் மனுசியென்டு உலகத்தில வாழ்றலேஸ. அவளட்டிய போயும் போயும் காசு கேட்கஸநீ கோவிக்க மாட்டியன்ட எனக்க ஓரு யோசினை தோன்றுது அதைச் சொல்லட்ட மோன.?”
“ம் சொல்லன அம்மா...”என்று சொன்னதும் பா¤மளாவின் முகம் சுருங்கியது.கண்கள் கலங்கியது.
மா¤யா குழம்பிப் போனாள்.பா¤மாள சொல்வதற்கு தயங்கினாள்.ஏதோ நினைப்பு அவளுக்குள் தோண்ற யோசிக்க ஆரம்பிச்சாள்.
“அம்மா நீ யோசிக்கிறதுக்குள்ள விடிஞ்சு போயிருமன..”
“இவளுக்கு அதுக்குள்ள பகிடி.”என்று சொல்லிக் கொண்டு..
“மோன வீட்டில இருக்கிற நகைகளை கூட்டிப் பார்த்தால் ஒரு மாதி£¤ இரண்டாயிரம் ரூபாய்க் அடைவு வைக்கலம் அதுதான் உன்னட்ட ஒருவார்த்தை கேட்;டுப்போட்டு செய்யலாமென்டு யோசிச்சனனான்”
“அதுக்கு என்னம்மா. நீ முடிவெடுத்தால் அதுசா¤யாய்த்தானே இருக்கும்..”
“சா¤ புள்ள நான் அறைக்குள்ள இருக்கிற நகையை எடுத்துக் கொண்டு வாறன்.”என்று சொல்லிக் கொண்டு பா¤மாள குடிசைக்குள்ளிருந்த அறைக்குள் சென்றாள்.
மா¤யா தாயின் வரவிற்காக வெளிமுற்றத்தில் காத்துக்கொண்டிருந்தாள்.
காற்று மெல்ல வீசிக்கொண்டிருந்தது.மா¤யாவின் தேங்காயெண்ணைய் வைத்து நேர்த்தியாக வா£¤விடப்பட்ட கருங்கூந்தலுக்குள் காற்று நுழைந்து சிதிலமாகி சிறகசைத்து பறந்தது. உருண்ட தசைத்திரட்சி கொண்ட முகத்தில் மேகக்கிளைகள் படர்ந்து அசைந்தாட தென்றலி;ன் சுகம் தேனாக அவளுக்கு சுவைத்தது. முற்;றத்தில் படர்ந்திருந்த பூசனி குறோட்டன்கன்டு முருங்கை மரத்தின் மரக்கினுக்கிடையில் மசுக்குட்டிகளின் வீடிருக்கும் வீதியென்று அவள் அடிக்கடி கண்களால் அளந்து விட்டு பின் அவள் நித்தம் நேசிப்போடு தண்ணீர் ஊற்றி அக்கறையாய் வளர்க்கும் செம்பரத்தமரத்தை பார்த்த போது அவளுக்கு அவளின் அக்காவின் நினைவு நெஞ்சில் முட்ட கண்களில் நீர்; கோர்த்தது.
“கண்ணைக் கட்டிக்கிட்டு பாழுங்கிணத்தில தள்ளி விடுகிற மாதி£¤ இருக்குதடி எனக்கு அம்மா பேசின கல்யாணம் நீயாவது அம்மாக்கிட்ட சொல்லி நிப்பாட்டமாட்டியாடி”என்று அக்கா கண்ணீர் விட்டு கல்யாணத்திற்கு முதல் நாள் சொன்ன போது இவள் அம்மா சொன்னாள் என்று “வலிய வந்த சீதேவியை காலால் எட்டி உதைஞ்ச மாதி£¤யெல்ல உன்ர அக்காவின்ர கதை கிடக்கு.” என்று அம்மா சொன்னதென்று அக்காவிடம் சொன்ன வார்த்தை திரும்பத் திரும்ப நினைவில் வந்து சொல்லொண சித்திரவதை பண்ணியது. அந்த நினைவை அடியோடு மறக்கலாமென்றுதான் பல முறை முனைந்தால்.ஆனால் அது அடிமனதில் அடைகாத்திருந்து தலைகாட்ட அவள் மனசு விசும்பியது.கண்களில் நீர்; கோர்த்து நின்ற கண்ணிர் மெல்ல கன்னத்தில் வடிந்தது. உடல் முழுக்க நடுங்கி வியர்த்தது.
அக்கா எட்டாம் வகுப்பு வரை படித்ததே அம்மாவிற்கு பொ¤ய படிப்பு போல நினைத்தாள். அக்கா அடுப்படியைத் தவிர அயல்வீடேயே அறியாதவள். நிலபுலமற்ற நம்ம குடும்பத்திற்கு நம்மைப் போல் நம்மை புரிந்து கொண்ட ஒருவனேயே திருமணம் செய்து கொண்டால் தான் நம்ம குடும்பம் சீரும் சிறப்புமாக இருக்கும் எண்டு அவள் அக்கா சொன்னாலும், எவனோ ஒரு குடிகாரன் தங்கள் குடும்பத்துக்குள் வந்து வீழ்ந்து, குடும்பம் இரண்டாக உடையும் எண்டு மா¤யா கனவில் கூட நினைக்வில்லை. பொன்னுவின் வாழ்விற்குள் திருமணத்தின் பின் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து விட்டது. திருமணம் செய்து பொன்னுவும், கணவனும் பரிமளாவின் வீட்டில் ஆரம்பத்தில் வாழ நேர்ந்தது. அந்த குடிசைக்குள் வாழ்கின்ற காலத்தில் இரவெல்லாம் போதையிலேயே பொன்னுவின் கணவன் வருவான். எந்தக் காரணம் இன்றியும் பொன்னுவின் மாமியாரால் ஏவப்பட்ட வார்த்தைகள் அவள் கணவனூடாக பொன்னுவின் மீது பாய தேவையற்ற தர்க்கத்தில் தொடங்கி குடும்பம் பல நெருக்குதலுக்குள் கொண்டுபோய் விடும். பெரும்பாலும் சீதனம் தரவில்லை, தன்னை சரியாகக் கவனிக்கவில்லை என்று தான் பொதுவாக பிரச்சினைகள் ஆரம்பமாகும். அந்த பிரச்சினையின் பின்புலமாக இருந்து பொன்னுவின் கணவனை ஆட்டி வைப்பது பொன்னுவின் மாமிதான் என்பதை பா¤மளா குடும்பத்திற்கு தௌ¤வாக தெரிந்தபோதும் அவற்றை வெளிக்காட்டாமலேயே அவர்கள் நாகரிகமாக நடந்து கொண்டார்கள். அவற்றையும் மீறி ஒரு இரவு பொன்னுவின் கணவனின் அடக்குமுறையை ஒரு நாள் இரண்டு என்று பொறுத்துக்கொண்டிருந்த பரிமளாவின் குடும்பத்திற்கு அன்றைய சம்பவம் பொறுமையை இழக்க வைத்தது. பொன்னுவின் தாலியை விற்பதற்காக அவள் கணவன் அடம்பிடித்து சண்டை போட்டுக்கொண்டிருந்த போதே பரிமளாவும்,மா¤யாவும் ஏவம்கேட்டுப் போனதே பிரச்சினையை உச்சத்திற்கு கொண்டுபோய் விட்டது.அந்த இரவோடு இரவாய் பொன்னுவை கூட்டிக்கொண்டு தன் தாயின் வீட்டுக்குக் போனவன் தான். இன்று வரை பரிமளாவின் வீட்டுப் பக்கமே வருவதில்லை. அவன் தான் வருவதில்லையென்றாலும், அவள் பொன்னுவைக் கூட அவள் தாய்வீட்டுக்கு சென்று வர அவன் அனுமதி கொடுக்கவில்லை.
முற்றத்தில் நின்ற செம்பரத்தைச் செடியை பார்த்த போது அவள் அக்காவின் நினைவுவில் நிலைத்திருந்த எண்ணத்தை விலக்கி அம்மா சென்ற இடம் நோக்கி பார்வையை வி£¤த்தாள்.
தாய் கையில் சில நகைகளோடு மா¤யாவை நோக்கி வந்து கொண்டிருந்தாள்.
“புள்ள இவ்வளவு நகைக்கும் அவள் ராசாத்;தி இரண்டாயிரம் தரமாட்டாள்.அவள் நகையே உரசிப்பார்த்து பித்தளையா தங்கமா என்டு பார்த்துத்தான் அடைவை புடிக்கிறவள்.அவளட்ட போய் இதுக்கு இரண்டாயிரம் ரூபா கேட்டாள் நல்லாத்தான் தருவாள்.”
“வேறயென்ன செய்யிறது.. அப்ப இந்தக் காதில கிடக்கிற தோட்டை கலட்டித் தரட்டான .”என்று காதின் பின் பக்கமாக தோட்டின் சுரை மீது கையை அழுத்தியபடி அவள் கேட்டாள்.
“நானும் அதைப் பற்றித்தான் நினைத்தனான் அதுக்குள்ள நீயா கேட்டிட்டஸ..”என்று சொன்னதுதான் தாமதம் ஒன்னும் பேசமால் பறையாமல் அவள் தோடடைக் கலட்டி அம்மாவின் கையில் வைத்தாள்.தாய் வாங்கிய கையோடு ஏதோ யோசனை திடீரென தோன்ற மா¤யா முந்திக் கொண்டு..
“னேய் அம்மா...இந்தப் போராட்டம் ஆனானப்பட்ட சம்மாட்டிமாரையே ஆட்டம் கான வைச்சிருக்கு நாங்க இம்மாத்திரமா....”
“மோன காதில இருந்து தோட்டக் கழற்றிய பிறகு முகமே ஒரு மாதிரி இருக்கு...”
“அதுக்குத் தானே அம்மா நம்மப்போல பெண்களுக்காகவே கெலிட்டுத் தோடு செய்கிறாங்களே”
“அது வாங்கிறது எண்டாலும் ஐம்பது ரூபாய் காசு வேணுமே? அதுக்கு யாரிட்ட போறது....”.
“அதைப்பற்றி ஏன் அம்மா கவலைப்படுறிய தலைமுடியால் காதை மறைத்தால் போச்சு..”
என்று சொல்லிக் கொண்டு மழிச்சு வாரிவிடப்பட்ட காதிற்குப் பக்கமாக இருக்கும் தலைமுடியை கீழ்நோக்கி இழுத்து காதை மறைத்தாள். அதுவும் மரியாவிற்கு ஒரு அழகாய்த்தான் இருந்தது.
“மோன ஏதும் பழம்சோறு கறியிருந்தால் போட்டுக்கொண்டு வாவன் சாப்பிட்டுப்போட்டு ராசாத்தியிட வீட்டுக்குப் போய் நகையை அடைவு வைச்சுப்போட்டு வாறன்.”
எல்லாவற்றையும் மண்தரையில், பாயில் கிடந்த படி பார்த்துக்கொண்டிருந்தான் அந்தோணி. அவனால் எதுவுமே பேசமுடியாமல் ஊமைநிலவாய் இருந்தாலும், அவரகள் பேசிக்கொண்டவற்றையெல்லாம் உள்ளுக்குள் விளங்கிக் கொண்டான். குசுனிப்பக்கம் போன மா¤யா பழைய சோறையும் கறியையும் போட்டுக்கொண்டு வெளியே வர பரிமளம் நெஞ்சைப் பொத்திய படி சோகமே உருவாகி வாடி வதங்கி மரத்தூணோடு சாய்திருந்தாள். நெஞ்சு வலி தாங்க உள்ளுக்குள் துடித்தாள். மா¤யா பரிமளத்தைக் கண்டதும் விக்கித்துப்போனாள். பாய்ந்து விழுந்து ஓடிவந்தாள். ஓடிவந்த கையோடு, பரிமளத்திற்குப் பக்கமாக உக்காந்து விட்டாள். நெஞ்சில் பரிமளம் அழுத்தி வைத்திருந்த கையைப் பிடித்த படி,
“என்ன அம்மா செய்து..?” என்று அழுது கொண்டு கெஞ்சும் குரலில் கேட்டாள்.
“ஒண்டும் இல்ல மோன இப்ப கொஞ்ச நாளா இப்படித்தான் இருக்கு. இதற்கு முதல் இரண்டு தடவை கடுமையாக வலிச்சது. இது மூன்றாவது தடையாய் நெஞ்சு வலிக்குது. பெரிய பாறாங் கல்லை. நெஞ்சில் வைத்து அழுத்துற மாதிரி இருக்குதுமோன.ஒருக்கால் மூத்தவள் பொன்னுவை பார்க்க வேணும் போல இருக்கு.” பரிமளம் சோகத்தோடு சொல் மா¤யா கூச்சல் இட்டு அழத்தொடங்கினாள்.
“அம்மா ஏனென இரண்டு தடவையும் நெஞ்சு வலி வந்தபோதும் எனக்குச் சொல்லல்ல?”
“நான் சொன்னா அதேயே நீ நினைச்சு நினைச்சு கவலைப் பட்டுக்கொண்டிருப்ப எண்டுதான் அதை மறைச்சனான்”.
“இப்ப ஆஸ்சுப்பத்திரிக்கு போவமாண?”
“வேணாம் மோன...தண்ணீ விடாய்க்;குது கொஞ்சம் தண்ணி கொண்டு வா...”. மா¤யா
பதகளித்து குசுனிப் பக்கமாக அவள் ஓடிப்போய் தண்ணி எடுத்துக்கொண்டு திரும்பி வருவதற்குள் பரிமளாவின் உடலில் இருந்து உயிர் பிரிந்து மரணித்துப் போனாள். மரியாவின் அழுகுரல் ஊரை நிரப்பியது. சாவுமணி பரலோக மாதா கோவிலில் இருந்து அடிக்கப்பட்டது. கோவில் மணிச்சத்தம் கேட்டு ஊரே பரிமளத்தின் வீட்டின் முற்றத்தை நிரப்பியது. உயிரோடு இருக்கும் போது பார்க்க வராதவர்கள் உயிரற்ற உடலைப் பார்ப்பதற்காக வந்திருந்தார்கள். இவர்களோடு பொன்னுவும் கணவனும் வந்திருந்தார்கள்.
பரிமளாவின் மரணம் நினைவில் இருந்து விலகிச் செல்ல வீதியைக் கடப்பதற்காக ரமேசும் வரதனும் நிற்பதைக்கண்டு விட்டேன். இருவரும் இனம்புரியா சந்தோசத்துடன் கதைக்துக் கொண்டு நிண்டார்கள். சென்ற இரு வாரத்திற்கு முன்னர் தான் நாங்கள் ஜேர்மனிக்குப் போவதற்காக பம்பாய், கென்யா, தான்சானியா வழியாக ஜெர்மன் போவதற்கு முயற்சி எடுத்த போது மூவரும் பிடிபட்டு திருப்பி அனுப்பி விட்டதன் பின் ஏஜென்சிக்காரன் இப்ப கென்யா றூட் அடிபட்டுப் போய்டு இன்னும் ஒரு வாரத்தில் புது றுரட் கண்டு பிடிச்சிடுவோம். அதற்குப் பிறகு மூன்று பேரையும் ஜேர்மனிக்கு அனுப்புவதாக எங்களை திருப்பி அனுப்பி விடப்பட்டு கொழும்பு விமான நிலையத்தில் வந்திறங்கிய போது ஏஜென்சிக்காரன் சொன்னது ஒரு கணம் நினைவிற்கு வந்தது. அவன் சொன்னபடி, புது றூட்டை ஏஜென்சிக்காரன் கண்டுபிடித்து வீட்டிற்குப் போனபோது, வீட்டில் ஏதாவது தகவல் கொடுத்துவிட்டுப் போயிருப்பான். அந்த தகவலைக் கேட்டுவிட்டுத்தான் இப்படி ஏகப்பட்ட சந்தோசத்துடன் வந்துகொண்டிருக்கிறான்களோ தெரியல...? ஏன் மண்டை காய யோசிக்க வேண்டும். இன்னும் கொஞ்ச நேரத்தில் நான் இருக்கும் இடத்திற்கு வந்து விடுவார்கள் என்று மனசு ஒரு கணம் முணுமுணுத்தது.
“சிவா நீ வெளிநாட்டிற்குப் போனாலும் ஊர ;நினைப்போடுதாண்டா இருப்ப அது உன்ர உடலோட ஊறிய சுபாபம் என்ன..? என்று ரமேஸ் கேட்க...
“என்னைத் தூக்கி வளர்த்த ஊரை எப்படியெடா மறப்பேன்?” என்று ரமேசிற்குச் சொன்னது ஒரு கணம் நெஞ்சிற்குள் முட்டியது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment