Pages

Saturday, April 09, 2005

இருப்பும் இழப்பும்

நாவாந்துறை டானியல்ஜீவா



சு10ரியனைத் தொலைத்த

நாட்களில்

இருள் இருப்பாய் இருந்தபோது…



பரவைக்கடலில்

அலைஎறியும்

ஓசை@

அடங்கிக்கிடந்தது.



ஓய்வின்றி

ஒய்யாரமாய் வீசிய......

உப்புக்காற்று

உறங்கிக்கிடந்தது.



பனைக்கும்

தென்னைக்கும்-கீழ்

படுத்திருந்து@

காற்றுவாங்கும் மனிதர்கள்

காணமல் போனர்கள்.



வெண்மணல் விரவிய

கடற்கரை அழகிழந்து

சோகமாய்…..





துப்பாக்கி மட்டுமே

துருப்பிடிக்காமல்

தொழில் புரியும்

தேசத்தில்@

காலைப்பரிதியின்

ஒளித்தெறிப்பு

சுட்டெரித்தது.



ஏனோ

அன்று....

அழுதகண்ணீர்

சுமந்து நின்றது@

சித்திரை வெய்யிலில்

கானல்நீh.....



நிலாவீசும் இரவில்

இருளின் நீட்சி;

நிட்சயமற்ற

மனித இருப்பில்

நெளிகின்றது

வீதியெல்லாம்

பிணவாடை.....



என் மனதில்பூத்த

காதல் வாசனைக்காய்

வீதியில்

காத்திருந்தேன்.







அவ்வேளைதான்.......

அகிம்சையை

கையிலேந்தி

அண்டை நாட்டிலிருந்து

வந்தவர்கள்

ஆயுத பாணியாய்

நடந்து வந்தார்கள்....



பொற்கோயிலுக்குள்

புகுந்து....

சொந்தச்சகோதரங்களின்

இரத்தச்சிதறல்களில்

வெற்றிகண்டவர்கள்



நான் எனது வீதியில்

நின்றதைத் தவிர
எந்தக்குற்றமும்

அறியாதவன்



என்னைக் கைது செய்து

பொம்மைவெளி

வதை முகமுக்கு

கொண்டு சென்றார்கள்.



என்னொடு பதினெட்டு

எள்ளிநகையாடும்

புன்னைகைப் பூக்கள்

சிப்பாய்கள் முகங்களில்

இரத்தக் கறை படிந்த

சுவர்கள்…



நெஞ்சிலிருந்து

உயிர் பிடுங்கும் வலி



ஏதோ புரியாத

மொழியில்

தங்களுக்குள்

பேசிக்கொண்டார்கள்.



பின்.....



அரைகுறைத்தமிழில்

என்னிடம்

கேட்டான் ஒருவன்

..........................

நான்அறியேன்

என்றேன்



நான் அருளப்பரல்ல

மூன்று முறை

மறுதலிக்க......

நான் தமிழன்

ஒருமுறையே

மறுதலித்தேன்.



மீண்டும்

அடி உதை

சாப்பாத்துக் கால்களின்

பதிவுகள்......

என்முகத்திலும்

முதுகிலும்



நான் என்ன

செய்வேன்

அழுவதைத் தவிர.......



ஒளியிழந்த

வாழ்வில்

ஒப்பாரி ஓலங்கள்

மீதியாய்கேட்கும்

அந்தப்பொழுதுகளில்

என்னைப்போல்

உயீர் மீண்டவர்கள்

சிலர்.......

மையிருட்டில்

மறைந்து போனோர்.........?

பலர்........

No comments: