Pages

Saturday, May 21, 2005

செம்பியன்செல்வன் காலமானார்!

இலங்கையின் மூத்த எழுத்தாeரும் இலக்கிய வாதியுமான ஆ.இராஜ கோபாலன் (செம்பியன் செல்வன்) நேற்றுக் கொழும்பில் காலமா னார். இறக்கும் போது அவருக்கு வயது62. நாவல், சிறுகதை, நாடகம் உருவகம், குறுங்கதை, திரைப்படம், சஞ்சிகை, மேடைப் பேச்சு, ஆன்மீகம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடு கொண்ட இவர், ஆசிரியராக, அதிபராகப் பணியாற்றி யாழ். கோட்டக் கல்விப் பணிப்பாளராக ஓய்வுபெற்றார். மிக இளம் வயதிலேயே எழுத்துத் துறையில் பிரவேசித்த இவர், விவேகி, புவியியல், நுண்ணறிவியல், ஆகிய சஞ்சிகைகளின் இணை ஆசிரியராகவும் அமிர்தநங்கை, கலைஞானம், ஆகிய சஞ்சிகை களின் ஆசிரியராகவும் பணியாற்றினார். வாடைக்காற்று திரைப்படத்திற்கு திரைக்கதை வசனங்களை இவர் எழுதியிருந்தார். Thanks for Uthayan (Jaffna)

4 comments:

வசந்தன்(Vasanthan) said...

செம்பியன் செல்வனுக்கு எம் அஞ்சலிகள்.

இளங்கோ-டிசே said...

வருத்தமான செய்தி :-(

ஈழநாதன்(Eelanathan) said...

மிகவும் வருத்தம் தரும் செய்தி.அண்மைக்காலமாக தெரிதலில் அவர் எழுதும் கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன்.ஈழத்தின் பெறுமதி மிக்க இலக்கிய ஆளுமை.

suratha yarlvanan said...

ஈழநாதன் கூறியது போல மிக ஆளுமையானஇலக்கியக்காரர்.ஆரம்பகாலங்களில் 50-60 களில் யாழ்ப்பாணத்தில் தமிழ்நாட்டு சஞ்சிகைகளிற்கு ஈடாக விவேகி என்றொரு வார சஞ்சிகை நடாத்திக்காட்டியவர்.

யாழ் இலக்கியவட்டத்தின் செயற்பாட்டாளர்.அமைதியின் இ(சி)றகுகள் என்றொரு புத்தகம் 70 களில் வெளியிட்டதாக ஞாபகம்.

பல வருடங்களாக இவரது எழுத்துக்களை வாசிக்க கிடைக்கவில்லை.

எல்லாவற்றையும் விட யாழ் இந்துக்கல்லூரியில் எனது முன்னாள் ஆசிரியர்.

தீவைத்தாண்டி இவர்களது ஆளுமைமிக்க எழுததுக்கள் அறியப்படாது போனது தூரதிர்ஸ்டமே..

செய்திப் பகிர்வுக்கு நன்றி