-நாவாந்துறைடானியல்ஜீவா-
வானம் கறுத்து திரட்சியாய் இருண்டு கிடந்தது .வீதியில் மின் விளக்கு ஒளியிழந்து போய் பல மாதங்களாகி விட்டன சில வீடுகளில் மண்ணெண்ணைய் விளக்கிளிலிருந்து ஒளி தெறித்துக் கொண்டிருந்தன.
வானம் கறுத்து திரட்சியாய் இருண்டு கிடந்தது .வீதியில் மின் விளக்கு ஒளியிழந்து போய் பல மாதங்களாகி விட்டன சில வீடுகளில் மண்ணெண்ணைய் விளக்கிளிலிருந்து ஒளி தெறித்துக் கொண்டிருந்தன.
நான் இன்று எப்படியும் எங்களுடைய வீட்டை பார்க்க வேணும் எண்டு அம்மாவிடம் விடாப்பிடியாக காலையில் சொல்லி விட்டேன் . பொம்பர் அடிக்காத நேரம் பார்த்து போய்ப் பார்த்து விட்டு வாட என்று அம்மாவும் அனுமதி தந்து விட்டா.. பகல் நேரத்தில் அதிகமாக கெலியும் பொம்பரும் வந்து சுடுவதும் குண்டு போடுவதுமாக இருப்பதால் வீட்டிற்கு போய் தங்கி விட்டு காலையில் ஆனைக்கோட்டை கோயில் வளவுக்கு வந்து விடலாம் என்ற நினைப்போடு சயிக்கிளில் ஆறுகால்மடத்தை தாண்டி தட்டாதெரு சந்தியை நெருங்கிக் கொண்டிருந்தேன்.
யாழ்ப்பாணப் பிரதேசம் முழுவதும் விடுதலைப் புலிகளின் காட்டுப்பாட்டில் இருந்தது.கோட்டைக்குள் இலங்கை இராணுவம் இருந்தது.கோட்டையை சுற்றி வளைச்சு விடுதலைப் புலிகள் காவல் அரண்போட்டு இராணுவம் வெளியில் வராமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.பகலில் கோட்டையில் இருக்கும் இராணுவத்திற்கு சாப்பாடு போட கெலியும் பொம்பரும் வரும்போது பொடியலின் காவல் அரண்மீது பொம்பர் அடித்துக் கொண்டு உணவுப் பொதிகளை கோட்டைக்குள் போடுவார்கள். பொடியலும் மாறி காவல் அரணிலிருந்து துப்பாக்கி வேட்டுக்களை மேல் நோக்கி தீர்ப்பார்கள்.இண்டைக்கோ நாளைக்கோ கோட்டையை பொடியல் பிடித்து விடுவார்கள் என்ற செய்தி யாழ்ப்பாணம் முழுவதும் கதையாய் இருந்தது.
கம்மெண்டு இருண்டு கிடந்த வீதியில் ஒரு மாதிரி சயிக்கிளில் ஒடிக்கொண்டு வீடு சோக்கி வந்து கொண்டிருந்தேன்.அம்மா போட்டுத்தந்த இரவுச் சாப்பாடு சயிக்கிளின் பின் கரியலில் இருந்தது.நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது.அடிக்கடி பொம்பர் வந்து யாழ்ப்பாண நகரை அண்டிய பொதுமக்கள் வாழும் பகுதியில் தொடர்ந்து குண்டு போட்டு அழிப்பதால் எங்ககுடும்பமும் வெளியேறி ஆனைக்கோட்டை அடைக்கலநாயகி கோயில் வளவிற்கு வந்;து விட்டோம்.எங்கள் ஊரில் நாங்கள் மட்டுமல்ல நாய்களும் இடம் பெயர்ந்து ஊரே அமைதியாய்க் கிடந்தது.
நீண்ட நாட்களின் பின் இரவு நேர சயிக்கிள் பயணம் என்பதால் மனதளவில் அவ்வப்போது ஒரு வித அச்ச உணர்வு என்னையும் அறியாமல் அழுத்தியது.வீதி ஆள் அரவமற்று வெறிச்சொடிக் கிடந்தது.ஏக்கப் பெருமூச்சுடன் இருண்டு கிடந்த நிலப்பரப்பை நோக்கி கண்கள் தேடின...எதனை நான் தேடுகிறேன்?இந்த இருண்டு வாழ்வு தந்த வரலாற்றையா....?அல்லது ஆட்சியில் இருக்கும் அரசின் பௌத்த சிங்கள பேரினவாத போக்கின் தொடக்கத்தையா...? நினைவுகள் நிலையற்றலைந்தது. எண்பதுகளின் தொடக்கத்திலிருந்து தமிழின அழிப்பு உச்சத்தை தொட்டு எங்கள் வாழ்வு துயராய் மாறியது.வாழ்வு பல பரிமாணமாய்மாறி சொந்த மண்ணிலேயே அகதியானோம். இருத்தலுக்கான இருப்பில@; நம்பிக்கையை நாள் தோறும் இழந்து கொண்டிருந்தோம்.இந்த சோகத்தையெல்லாம் மனதில் சுமந்து கொண்டே இழந்த வீட்டை ஒரு முறைபார்த்து வருவதற்காகவே இன்றைய இரவுச் சயிக்கிள் பயணத்தை தொடங்கினேன்.1967 இல் ஜே.வி.பி.எனும் அமைப்புத் தோற்றம் பெற்று 1971 ஜனவரியில் ஜே.வி.பி.இயக்கம் அயுதமயப்படுத்தும் வேலையில் முழுமையாக ஈடுபடத் தொடங்கின.அப்போது ஈவிரக்கமின்றி 15000க்கு மேற்ப்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.பின் கிளர்ச்சி இந்தியாவின் உதவியோடு அடக்கப்பட்டது.இக்காலப் பகுதியிலேயே தமிழ் இளைஞர் மனதில் தமிழ்த் தேசிய உணர்வு எழுந்து சாத்வீக வழியிலிருந்து தனித்துவமாக கௌரவமாக தமிழர் வாழ்வதற்கான தனித்தேசத்தை நோக்கி ஆயுதப் போரட்டம் வடிவம் பெற்றது.எண்பதுகளின் எற்ப்பட்ட எல்லா நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வாழப் பழகிக் கொண்ட போதும் நாட்டின் விடுதலைக்கான போரட்டத்தில் எந்தவிதமான பங்களிப்பும் இல்லாமல் நானும் எனது படிப்பும் என்று வாழ்ந்து கொண்டிருந்தேன்.இது ஒரு வகையில் என்னுடைய சுயநலம் என்று என்று ஒப்புக் கொண்டாலும் எங்களுக்கு தமிழ்ப்; படிப்பிக்கும் மாஸ்டரை நினைத்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வரும்.எங்கள்; வகுப்பில் தமிழ் மட்டுமல்ல தமிழ் உணர்வையையும் ஊட்டுவதோடு இயக்கத்திற்கும் போகுமாறும் சொல்லிக்; கொண்டிருந்த மாஸ்டடரின் மூத்த மகன் ஓரு நாள் இயக்கத்திற்கு ஓடிப்;போக மாஸ்டர் பொடியலோடு எப்பிடியோ கதைச்சு மகனை மீட்டு வந்து உடனடியாகவே கனடாவுக்கு அனுப்பி வைத்து விட்டார்.மாஸ்டரின் நினைவில் தோய்ந்து சிரித்துக் கொண்டு சயிக்கிளில் ஒடிவந்த நான் வீதியில் கிடந்த சிறிய பள்ளத்திற்குள் சயிக்கிள் வீழ்ந்து எழும்பிய போது இடுப்பில் வந்த வலியோடு சுய சிந்தனைக்கு வந்து விட்டேன்.சயிக்கிளுக்கு வேறு காத்து இல்லாமல் றிம்மில் ஓடுகின்றது.காலையில் மானிப்பாய் சந்திக்கு போகும் போது சயிக்கிளுக்கு காத்தடிக் வேண்டுமெண்டுதான் நினைத்துக் கொண்டுதான் போனனான்;. ஆனால் அவசரத்தில் ஏனோ மறந்து விட்டேன். என்னுடைய கீரோ(ர்நுசுழு)சயிக்கிள் வாங்கி கிட்டத்தட்ட ஆறு அல்லது ஏழு வருடம் இருக்கும் அவ்வப் போது ஏற்ப்படுகிற பழுதுகளை உடனே திருத்தி விடுவது என்னுடைய வழக்கம். ஆனால் இப்போதுள்ள யுத்த கால நெருக்கடியில் சாப்பாட்டிற்கே வழியற்ற வாழ்க்கைக்குள் சயிக்கிளை திருத்துவது எப்படி? ஏப்படியான நிலமை நேர்ந்திருந்தாலும் இன்று காலை சயிக்கிளுக்கு காத்தடிக்க மறந்தது என் ஞாபக சக்தியில் ஏற்ப்பட்ட தவறுதான்.அதனால் நீயுட்டனின் இரண்டாவது விதி என்னைத் தாக்கும் என்று எள்ளவும் நினைக்கல.
பள்ளத்தில் வீழ்ந்த பின் விளைந்த உடல் வலி ஒரு சில நிமிட வரை நீண்ட போதும் என் சயிக்கிளின் வேகம் இன்னும் குறையவில்லை.குறையவும் விடவில்லை.ஏனென்றால் எனது வீடு பார்க்ப் போகும் கனவு இன்னும் ஈரமாய்.என் சிந்தனையின் போக்கில் ஏனோ இன்னும் இழப்புகளின் தொடர்ச்சியில் மீதி உறை நிலைப் படலமாய் ஊரும் உறவும் வீடும் வீட்டின் மேல் அடர்த்தியாய் படர்ந்திருக்கும் கடதாசிப்பூக்களின் மேல்;தான்.
சில நிமிடத்திற்குள் ஓட்டுமடத்து சந்தியைத் தாண்டி வலது பக்கமாக திரும்பி காரைநகரை நோக்கிய பதையால் திரும்பி இடது பக்கமாக ஒஸ்மோனியாக் கல்லூரி வீதியால் சயிக்கிளை ஓட்டினேன். பின் கரியலில் இறுக்கப்பட்ட சாப்பாட்டுப் பெட்டிக்குள்ளிருக்கும் சோறும் மாட்டு இறைச்சிக் கறியும் ஒரு கணம் மின்னலாய் மூளையில் வெட்ட ஒரு தடவை ஓடிக்கொண்டே இடது கையால் சாப்பாட்டு பெட்டியை தடவிப் பார்த்தேன். அம்மா அன்போடு போட்டுத் தந்த சோத்;தின் சுவையை மனதளவில் உணர்ந்து கொண்டு வீட்டிற்கு போனவுடன் முதல் வேலையாய் சாப்பிட வேண்டும் மெண்டு நினைத்துக் கொண்டேன் நாலு முச்சந்தியில் இருக்கும் பள்ளி வாசல் முலையிலிருந்து என்னை யாரோ இருட்டுக்குள்ளிருந்து அழைக்கும் குரல் கேட்டு அதிர்ந்து போனேன். என் சயிக்கிளின் வேகத்தை சடுதியாக நிறுத்தி விட்டேன்.இருட்டுக்குள் நின்ற ஒருவரின் கையிலிருந்த டொச்சிலைற்றிலிருந்து என்னை நோக்கி ஒளி பாய்ந்தது. அச்சம் படர்ந்த உணர்வோடு ஒளி வந்த திசை நோக்கி என்கண்கள் மேய்ந்;தன. நெஞ்சம் இன்னும் புலப்படதா புலனாய்வில்…திசையெட்டும் கேட்க உரத்து கத்த வேண்டும் போல் மனம் வெந்தழுதது.நெஞ்சங் கூட்டிற்குள் ஏதோ முட்டி நின்று முன்னகர மறுக்கின்றது.என்னுடல் உறைந்து போக உருவம் என்னை நோக்கி மெல்ல சயிக்கிளை உருட்டிக் கொண்டு வந்த போது என் மன ஆய்வின் முடிவு அவன் ஒரு இயக்கத்தை சேர்ந்தவன் என்பதை நிறுவி விட்டது. நொடிப் பொழுதுதான் “என்னோடு வா” என்று அவன் என்னை அழைத்த போது நான் நினைத்தது நிஜமென்று நிர்ணயம் செய்தது. நான் இடிந்த குரலில் “ஒரு அகதியென்றும் வீடு பார்ப்பதற்காகவே போகிறேன”; என்றும் தெளிந்த சிந்தனையோடு ஓப்பாரி வைத்தேன்.அதற்கு அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை சில நொடியின் பின் ஒப்பாரி வைக்கத் தொடங்கிய குரலை தடுத்து நிறுத்தியது.“எனக்கு பின்னால் வா”என்ற வார்த்தை.அவர்சொல்லிக் கொண்டே சயிக்கிளில் ஏறி சயிக்கிளை ஓட்டத் தொடங்கினார்.நான் பேசாமல் பறையாமல் அவருக்கு பின்னால் தொடர்ந்தேன்.அவன் டொச்சுலைற்றின் வெளிச்சத்தை முன்னால் பாய்ச்சிக் கொண்டு சென்றார்.நானும் அந்த வெளிச்சத்தில் மிக நிதனாமாகவும் மெதுவாகவும் சயிக்கிளை ஓட்டிக் கொண்டு போனேன்.
நானும் எனக்கு முன் சென்ற சயிக்கிளும் லைடன் சந்தியில் வந்து வலது பக்கமாக திரும்பி பின் வில்லுன்டி மாயனத்தையும் தாண்டி நாங்கள் கொட்டடியை நோக்கி போய்க் கொண்டிருந்தோம்.
நான் சிறுவனாக இருந்த காலத்தில் நடந்தவையெல்லாம் நினைவுக்கு மீண்டது.வில்லுண்டி மாயனத்தை ஒட்டியபடி கேணி இரண்டு இருந்தது.அதற்குப் பக்கத்தில் ஒரு சிறிய இந்துக் கோயில் இருந்ததாக் ஞாபகம். கோயிலோடு ஒரு இளைப்பாறு மடமும் இருந்;;;;;;;;;;;;;;தது. நாங்கள் பொடியலாய்ச் சேர்ந்து காற்று வாங்கிக் கொண்டு இந்தமடத்தில்தான் தூங்குவோம்.இந்த இரண்டு கேணியில் நாங்கள் ஒரு கேணியில் மட்டும்தான் குளிப்பது வழக்கம். மற்றையது வெறும் சேற்று நிலப்பரப்பாய்; இருப்பபதால் யாரும் அதற்குள் குளிப்பதில்லை.எங்க ஊரிலிருந்து நாங்கள் மாட்டின் அணையால் நடந்து வந்து கண்ணாப்பத்தையினுடாக ஒடுங்கிய ஒற்றையடி மணற்தரை பாதையினால் இந்தக் கேணிக்கு வருவோம். அது ஒரு ஆனந்தாக் காலம்.உண்மையில் இந்தக் கேணி வில்லுண்டி மயானத்தில் பிணத்தை எரித்து விட்டு வருபவர்கள் குளிப்பதற்காக கட்டப்பட்டதாக சொல்வார்கள். ஆனால் நாங்கள் பந்து விளையாடி விட்டு குளிப்பதற்காக பயன்படுத்தி வந்தோம். கேணியைச் சுற்றி கண்ணாப்பத்தைகள் நிறைந்திருக்கும்.இப்ப போது கண்ணாக் காடய் அழித்து கேணிக்குள்ளும் குப்பையை போட்டு நிரவி நிலத்தை செப்பனிட்டு ஒரு குடியேற்றமாய் மாற்றி விட்டார்கள்.சிறு வயது முதல் பழக்கப்பபட்ட இடமென்றாலும் மக்கள்; இடம் பெயர்ந்து போய் விட்டதால் ஒரு திக்குத் தெரியாத காட்டிற்குள் அகப்பட்டதைப் போல பய உணர்வு மனதில் உறைந்தது.கொட்டடியை அண்டிய வீடுகள் எல்லாம் செல்லடியில் சிதைந்து கிடந்தன.யாருமே இந்தப் பக்கம் வருவதே கிடையாது போல் கிடந்தது இந்த இயக்கப் பொடியன் என்னையேன் இந்த இருட்டுக்குள் கூட்;டிக் கொண்டு போக வேண்டும்..? மனதிற்குள் கேள்வியெழுப்பிக் கொண்டே மனம் பதகளிப்பில் கிடந்தது .
கொட்டடி முத்தமிழ் சன சமூக நிலையத்திற்கு முன்பாக உள்ள பொம்பர் அடித்து இடிந்து போய்க்கிடக்கும் வீட்டிற்கு வந்து விட்டோம்.சயிக்கிளை ஓரு சுவர் கரையோடு பூட்டி வைத்து விட்டு அவன் பின்னால் யாழ்ப்பாணக் கோட்டைக்கு முன்னால் இருக்கும். தொலைத் தொடர்பு கோபுரம் இருந்த இடம் நோக்கி சிறிய வாய்க்கால் போல் வெட்டப்பட்ட ஒடுக்கமான ஒரு பாதை வழியாக மெல்ல மெல்ல ஆழம் கூடிக் கொண்டு போகும் பதையால் வந்து ஒரு பெரிய பங்கருக்குள் வந்து விட்டோம். பின் என்னைக் கூட்டிக் கொண்டு வந்தவர் மாயமாக மறைந்து போய்விட்டார்.பதுங்கு குழியிலிருந்து அண்ணாந்து யாழ்ப்பாண கோட்டையை நோக்கி பார்ததேன். சிறிய மின் விளக்கின் வெளிச்சத்தில் மங்கலாய் இலங்கை இராணுவத்தின் காவல்அரண் கண்ணுக்குப் புலப்பட்டது. நான் நிற்கிற இடத்திற்கு பக்கமாக இடியுண்டு போய்க் கிடக்கின்ற கட்டிடத்திற்குள் பொடியல் ஆயுதம் ஏந்தியபடி எப்போதும் தாக்குதலை எதிர் கொள்ளக் கூடிய வகையில் வியூகம் வகுத்து நின்றார்கள்.
நான் பதுங்கு குழி வெட்டுகின்ற வேலை செய்வதற்காகவே அழைத்து வரப்பட்டேன் என்பதை இங்கு வேலை செய்து கொண்டிருந்த இளைஞர்களின் சுறு சுறுப்பில் உணர்ந்து கொண்டேன்.ஒரே பயமாக இருந்ததுபயமென்றால் என் வாழ்க்கையில் இதுவரையில் வராத பயம்.மனம் இனம் புரியாத அதிர்ச்சிக்குள் அகப்பட்டு தவித்தது.என் உயிரின் யாசிப்பு மரணத்தின் வாசலை அடிக்கடி எட்டிப் பார்த்தது.
நீண்ட இரும்பு ரெயில் தண்டவாளக் கேடர்கள் என் தோளில்.சில இளைஞர்களோடு சுமந்து பதுங்கு குளிக்குள் கொண்டு வந்;து ஒவ்வொன்றாய் அவர்கள் சொல்கிற இடத்தில் மெதுவாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தோம். தோளில் இரும்புக் கேடர் கிழித்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது சற்றும் இரக்கமில்லாமல் என்னிடம் வேலை வாங்குகிறார்களே என்று மனதிற்குள் முணுமுணுத்தேன். உடல் வலிதாங்க முடியாமல் தவித்தேன்.
நெடுத்த வானப் பெருவெளியில் ஊமைநிலவு.. விண்மீன்கள் விரவிக் கிடந்தன.நிலவே நீ நித்தம் யாருக்காக காய்கிறாய்..? எனது தேசத்தின் சோகம் என்னைப் போல் உன்னைக் கொல்லவில்லையா? மனதிலிருந்து அழுகுரல் இடியோடு nருருப்பாய் நிலவின் மீது எரிந்து விழுந்தது.சூரியனை தொலைத்த இந்த நீண்ட இருள் கவிந்த வெறுமையான வாழ்வை வெற்றி கொள்ள ஒரு வெளிச்சக் கீற்று எப்போது வரும்...?
என் உடல் இன்னும் சோர்ந்து போனது. தூக்கம் மெல்ல துவைத்தது.முன்னிரவு மூட்டு வலியோடு முணு முணுத்து நகர்ந்து போய்க் கொண்டிருக்கும் போதுதான் கோட்டையின் மேல் இருந்த காவல் அரண்னில்லிருந்து எங்களை நோக்கி சரமாரியாக வெடிகள் தீர்க்கப்பட்டன.நாங்கள் இரும்புக் கேடர்கள் அடுக்குகிற சத்தம் கேட்டுத்தான் அந்த வெட்டுச் சத்தங்கள் தீர்க்கப் பட்டிருக்கலாம்.பதிலுக்கு இடிஞ்ச கட்டிடத்திற்குள் நின்ற பொடியல் பதில் தாக்குதல் தொடுத்தார்கள்.ஜந்தோ அல்லது பத்தோ நிமிடத்துடன் நிறைவுக்கு வந்த இந்த சிறிய யுத்தம் எந்த உயிர் இழப்பின்றி முடிவுக்கு வந்தது.பங்கருக்குள் குந்திப் பிடித்துக் கொண்டிருந் நாங்கள் மீண்டும் வேலையைத் தொடங்கினோம்.பின் இராணுவ அரணிலிருந்து சுற்று வரை என்ன நடக்கின்றது என்று தெரியக் கூடிய வகையில் மின் விளக்கொன்றை போட்டார்கள். அது பிரகாசமடமாக ஒளியை பரப்பிக் கொண்டிருந்துத நாங்கள் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தோம்.அந்த நேரம் பாhத்துத்தான் எ.கே.47 னுடன் ஒருவர் எனக்கு பக்கமாக குனிந்து கொண்டு மெதுவாக நடந்து வந்தார். நான் விக்கித்துப் போனேன்.எங்கைய்யோ பார்த்து பழகிய ஞாபகம் என் இறந்த கால நினைவுக் கட்டுக்குள் இழுத்துச் சென்றது.உருவத்தை வைத்து ஊகித்து முடிவுக்கு வந்தவுடன்”நீ அந்தோனியல்ல…?என்று கேட்பதற்குள் அவன் விரல்லால் வாயில் குறுக்காக வைத்துக் கொண்டு குறியீட்டு வடிவில்”மௌனமாய் இரு”என்று காட்டி விட்டு:’என் பெயர் அருள்’என்றான்.நான் பதிலுக்கு மௌனத்தை காணிக்கையாக்கினேன்.
“இங்க எப்படி வந்தனீ”என்று காதும் காதும் கேட்ப்பது போல் கேட்க நான்:“பங்கர் வெட்டுவதற்காக என்னை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாஙக்” என்று சொன்னேன். “எத்தனை மணிக்கு வந்தனீ”“எழுமணியிருக்கும்.நான் வீட்ட போகவேணும் என்ன விடமாட்டங்களா…?”என்றேன். “நான் விடியற்காலையில் சென்றி மாற வரும் போது உன்னைக் கூட்டிக் கொண்டு நீ சயிக்கிள் வைத்து விட்டு வந்த இடத்தில் கொண்டு வந்து விட்டால் சரிதானே…” என்று சொன்னான்.என் மனம் மகழ்சிக் கடலில் மிதந்தது நாளை எனது வீடு போய்ப் பார்ப்பேன் என்ற கனவின் மீது நம்பிக்கை விழுந்தது.
அந்தோனி! அவன் நினைவில்லா இறந்த காலமா…? நினைச்சே பார்க்க முடியாது.அவன் வீட்டு முற்றத்தில் நின்று கிட்டி விளையாடி பொலையடிக்காத நாட்கள் இல்லையென்றே சொல்லலாம்.நானும் அவனும் ஒரே பாடசாலையில் முதலாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தேன்.நான் உயர் கல்விக்காக வேறு கல்லூரிக்கு சென்ற பின் அந்தோனியை ஊரில் நான் க்hனவேயில்லை.நாவாலியில் அவனுடைய குடும்பத்தோடு குடியேறி விட்டான் என்று காற்று வழியாய் காதில் வந்த செய்தி.அதன் பின் இப்போது அந்தோனியை ஒரு தமிழ்ப் போராளியாக நான் பார்க்கும் போது என் உடலில் இனம் புரியாத சோகம் அப்பிக் கொண்டது.
ஜிம்முக்கு போய்; உடற் பயிற்சி செய்து உருண்டு திரண்ட உடல் கட்டுப் போல்@.அப்படியே இன்னும் கட்டுக் குலையாமல்.சின்ன வயதில் உடல் முழுவதும் ஒரு வித ‘சதைக்காய்’கள் படர்ந்திருந்தது. அது இன்று வரை ஏனோ உடலோடு ஒட்டியபடியே கிடக்கின்றது. அவனிடம் எனக்கு பிடித்த விடயம் பொய்யென்பதே வாயில் வராத கடவுள் பக்தியுள்ள நல்ல மனிதன்.சுருக்கமாக சொன்னால் ஒரு நேர்மையான காந்தியவாதி.
அவன் நினைவிலிருந்து விடுபட்டு அந்தோனி மீது ஆச்சரியத்தோடு பார்வையை செலுத்திக் கொண்டு மெதுவாக “இயக்கத்தில் இருந்து போராடி சாகவ போறாய்..?” அவன் முகத்தை கடுமையாக்கிக் கொண்டு@”இது எங்கட நிலமடா!எப்படிப் போராடியும் வெல்ல வேண்டுமடா…நான் என்னுடைய இழந்த மண்ணை மீட்க்க என் உயிரைத்தான் கொடுக்க வேண்மெண்டால் அதற்காக ஒரு துளியும் கவலைப் படமாட்டேன்.அந்த உயீர் தொலைப்பு அர்த்தமுள்ளது.அது ஆழமமான அர்த்தமுள்ள மண் மீது காதல் கொண்ட உணர்வு.என்னோடு மடிவதில்லை.அது ஆயிரம் உயீhப்பின் வேர்களை பதியம் போட்டுச் செல்லும். இதெல்லாம் உனக்கெங்கயட புரியப் போகுது…”அவன் சொல்லும் போதே என்னையும் அறியாமல் கண்ணீர் கசிந்தது. “போய்ற்று வாறன்” என்று சொல்லி விட்டு இடத்தை விட்டு நகர்ந்தான். ”இது எங்கட நிலமடா!எப்படிப் போராடியும் வெல்ல வேண்டுமடா..”அந்த வார்த்தையே மீண்டும் மீண்டும் என் நெஞ்சிற்குள் வந்து நெருப்பை மூட்டியது.
ஏங்கே போனானோ தெரியல்ல ஆனா சொன்னபடி குறித்த நேரத்திற்கு வந்து சேர்ந்தான்.என்னைக் கண்டதும் சைகையால் தன்னோடு வரும்படி கூப்பிட்டான்.நான் அவன் பின்னால் வெட்டப்பட்ட ஒடுங்கிய வாய்க்கால் வழியாக் கொட்டடியை நோக்கிப் போனேன்.கொஞ்ச நேரத்திற்குள் சயிக்கிளை நான் விட்டுட்டு வந்த வீட்டடிக்கு கூட்டிக் கொண்டு வந்து என்னை விட்டுட்டு ஒன்னும் பேசாமல் பறையாமல் போய் விட்டான். நான் விடிவதற்கு முதலே வீட்டிற்கு வந்து தூங்கிவிட்டேன்.மறுநாள் மதியம் பன்னிரன்டு வரை படுத்திருந்து விட்டு அதன் பின் எழுந்து கினற்றடியில் குளித்து விட்டு வீட்டை பார்த்த சந்தோசத்தோடு சயிக்கிளை எடுத்துக் கொண்டு மீண்டும் நாங்கள் அகதிகளாய் இருக்கின்ற ஆனைக்கோட்டை மாதகோயிலை நோக்கி பயணத்தை தொடங்கினேன். சயிக்கிளில் கொஞ்சத் தூரம்தான் வந்திருப்பேன் நாலுசந்தியில் ஒட்டப்பட்ட மரண அறிவித்தல் போஸ்டரை பார்த்ததும் விக்கித்துப் போனேன். யாருமல்ல அருள் என்ற இயக்கப் பெயர் கொண்ட அந்தோனிதான்.என் இதயம் இயங்காமல் மரணித்தது. என் கண்களிலிருந்து என்னையும் அறியாமல் கண்ணீர் கசிந்து அவன் பாதங்களில் அஞ்சலி செலுத்தியது.
(முற்றும்)
No comments:
Post a Comment