Pages

Tuesday, January 02, 2007

உன் உயிர்க் கூட்டுக்குள்




உன் பார்வை தொட்டு
விழி விரித்த கணப் பொறியில்
எனக்குள் விழுந்து
வேர் கொண்டது…
உன் உயிர் வாசம்.
என் காதலின் காலம்
திறந்தே கிடந்தது
நீ வருவதற்கு முதல்…
உன்னைக் காணும் வரையில்
என் காதல்
உணர்வுக்குள்ளிருந்த கணத்தை
உணராமலேயிருந்தேன்.
எனக்குள் நீயிறக்கிய
யுத்தம்பற்றி
மறுநாளேமுழுவதும்
மறைக்காமல்உனக்குள் நிரப்பிவிட்டேன்.
உன் நேசிப்பால்,
கசங்கி உடைந்து
இயங்காமல் இருந்த
இதயத்திற்கு..
புது உணர்வும்
புது ஒளியும்…
நீ மூச்சு விட்டாலும்
முடிஞ்சுவைக்கச் சொல்லுது
என் மனசு…
என் உடலின்
ஒவ்வொரு அசைவிலும்
நீதான்…
உன் வரவின்மீது
நிதம் நிதம்
நம்பிக்கை விதைத்துக் காத்திருப்பேன்;.
உன் உதட்டின் ஈரம்
உதடு வழிகசிந்த கவிதைகள்
உருண்ட முகத்தில்
ஊதாக் கலரில்ஓட்டுப் பொட்டு…
இன்னும் பிற…
நினைக்க நினைக்க
ழியிரண்டின் மடல்கள்
விரும்பியே மூடுகின்றன.
வெண் பஞ்சு மேகத்திற்குள்
நின்ற நிலவு
எட்டிப் பார்த்து
புன்னகைத்ததுபோல்
எனக்குள்நீ சொன்ன வார்த்தைகள்.
நெய்தல் நிலத்தில்
நிகழ்ந்த கொடும் துயரம்
தொலைந்ததுபோல்
என் சோகமெல்லாம்
தொலைத்தன
உன் ஆறுதல் வார்த்தைகள்.
இன்றோமூழ்குகிறேன்
ஏல்லாவற்றையும்
நினைந்தும் நெகிழ்ந்துமாய்
வாழ் நதியில்.
- டானியல் ஜீவா

No comments: