ஏதிர்வரும் யூன் மாதம் 15ம் தேதி ஞாயிறன்று பிற்பகல் 6.30 மணிக்கு எஸ்.பொ எழுதிய “கேள்விக்குறி” என்ற படைப்பாக்கம் தொடர்பான விமர்சன உரையாடல் Scarborough Malvern Community Centre இல் நடைபெற உள்ளது. நேர வசதியிருப்பின் தீவிர இலக்கிய ஈடுபாடு கொண்ட அனைவரையும் இவ்வுரையாடலில் கலந்து கொள்ளுமாறு அழைக்கின்றோம். கலந்து கொள்பவர்கள் அந்நூலை வாசித்திருத்தல் அத்தியாவசியமானது. இந்நூலை வாசிப்பதற்கான இணையத்தள முகவரி: http://noolaham.net/project/06/557/557.pdfஉரையாடலின் இறுதியில் நாட்டுக்கூத்து மாமேதை “கலாபூசண்” அண்ணாவியார் செ.டானியலின் “தென்மோடி” நாட்டுக்கூத்துப் பாடல்கள் அடங்கிய “குறுந்தட்டு” இலவசமாக வழங்கப்படும். இலக்கிய உரையாடல் சார்பான தொடர்புகளுக்கு டானியல் ஜீவா (416) 500-9016, மெலிஞ்சிமுத்தன் (647) 280-0527, ந.முரளிதரன் (647) 237-3619
Pages
Friday, June 13, 2008
Wednesday, December 05, 2007
வலை
நூல்: வலை (சிறுகதைத் தொகுப்பு)
ஆசிரியர்: டானியல் அன்ரனி
பதிப்பகம்: சுரபி பதிப்பகம், 267 நாவலர் வீதி, யாழ்ப்பாணம்
பதிப்பு: இரண்டாம் பதிப்பு ஜூன் 2005.

'வலை' பற்றி: ஈழத்துச் சிறுகதை உலகில் தனது குறுகிய கால வாழ்வில் தனது முத்திரையைப் பதித்துச் சென்றவர் எழுத்தாளர் டானியல் அன்ரனி. அவரது ஆளுமையின் வெளிப்பாடே 'வலை'யென்னும் இச்சிறுகதைத் தொகுப்பு. கடற்றொழிலாளர்களின் இருப்பியற் பிரச்சினைகளை, சமுதாய, அரசியற், பொருளியற் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் சிறுகதைகளிவை. ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையுலகில் எழுத்தாளர் டானியல் அன்ரனிக்கு முக்கியமானதோர் இடமுண்டு என்பதைப் புலப்படுத்தி நிற்கின்றன இச்சிறுகதைகள் டானியல் அனரனியின் 'வலை'!
சமர் இலக்கிய வட்ட வெளியீடாக 1987 ஜனவரியில் வெளிவந்த டானியல் அன்ரனியின் 'வலை' சிறுகதைத்தொகுதியின் இரண்டாம்
பதிப்பு தற்பொழுது வெளிவருகிறது. இத்தொகுதியில் வெளிவந்த சிறுகதைகளனைத்தும் அவ்வப்பொழுது பத்திரிகைகள், சஞ்சிகைகள்
என்பவற்றில் வெளிவந்தவை. வெறும் கற்பனையாகவில்லாது, நம்பகத்தன்மையும், வாழ்நிலைஅனுபவங்களின் வெளிப்பாடும்
இக்கதைகளின் சிறப்பியல்புகளாகும். சிறுகதைகளின் நிகழ்களம் நாவாந்துறையே ஆயினும் பெரும்பாலான கடலோரக் கிராமங்களின் கதையும் அதுவேயாயென்ற பொதுமைப் பண்புக்காரணமாக இச்சிறுகதைகள் வலுவான தளத்தைப் பெறுகின்றன. அடிநிலை மக்களின் ஏழ்மையும், அதனால் ஏற்படுகிற அவலங்களுமே இச்சிறுகதைகளின் கருவாகும். எடுத்துரைப்பு வடிவமும், அதன் மொழிவழி வெளிப்பாடும், இயல்பானதாய்க் காணப்படுகிறது. [ நூல் முன்னுரையில் சோ.கிருஷ்ணராசா].

அன்ரனிக்குச் சிறுகதை பற்றிய தெளிவு இருந்தது; அதைப் படைக்கும் ஆற்றலும் நிறைந்திருந்தது. இவற்றிற்குச் சான்றாய் அமைபவை இத்தொகுப்பிலுள்ள பத்துக் கதைகளுமே. ஒன்பது முதற்பதிப்பிலும் ஒன்று பின்னர் 'வெளிச்சத்திலும்' வெளியானவை. உருவம்,
உள்ளடக்கம் இரண்டும் உயிரும் உடலுமாய்ப் பேதமற்றுப் பிணைந்துலவும் உயிரிகள் அவன் ஆக்கங்கள். அன்ரனி தீவிர சமூக அக்கறை கொண்ட மனிதன். வாய்ச்சொல் வீரனாகவன்றி செயற்பாட்டாளனாகத் திகழ்ந்தவன்......
எந்த விஷயத்தை எந்தக் கோணத்தில் சொன்னால் அது சிறுகதையாகும் என்பதற்கும் உதாரணங்கள் இக்கதைகள். அலம்பல், சிலும்பல்கள் இல்லாத செதுக்கல்கள்.
குறிப்பாக சொல்லவேண்டிய இன்னுமொன்று அனரனியின் நடை. போலி அலங்காரம், பூச்சு-வேஷமற்ற, இய்லபான- எளிமையும் உறுதியும் வாய்ந்த - நேரடி நடை. அனரனியைப் போலவே அவன் மொழிநடையும் அதற்கேற்ற சொல்லாட்சி, யாழ் மண்ணுக்கேயுரிய, நாவாந்துறைக் கடலின் உவர்க்காற்றிலூறிய சொற்கள் ஆயிரம் இத் தொகுதி முழுவதும்.
அதேபோல, இந்த வலையிலகப்பட்ட மாந்தர் யாவருமே கடலோர மண்ணிற் காலூன்றிக் காறறோடும் அலையோடும் தம் விதியோடும் இச்சமூக அமைப்போடும் ஓய்வின்றிப் போராடும் மெய்யான மனிதர்கள்.
மனித நேயம், நியாய உணர்வு, பரந்த நோக்கு, போர்க்குணம் - இவையும்; இவற்றிற்கு மேலாகக் கலையாற்றலும் மிளிர வாழ்ந்தவன் அன்ரனி. அதை, இத்தொகுதியிலுள்ள கதைகள் அனைத்துமே உரத்து எதிரொலிக்கும்.
ஈழத் தமிழ்ச் சிறுகதை பற்றிப் பேசப் புகுவோர் எவருமே புறந்தள்ள இயலாத ஒரு கதை 'ஒரு வெறும் மனிதனின் மரணம்'. ஆனால் அனரனியின் அந்த அகால மரணம் ஒரு வெறும் மனிதனின் மரணம் அன்று. - [முன்னுரையில் எழுத்தாளர் ஐ.சாந்தன்].
மேற்படி நூலினைப் பற்றிய மேலதிக விபரங்களைப் பெற விரும்புவோர் கனடாவில் வசிக்கும் அவரது சகோதரர் எழுத்தாளர் டானியல் ஜீவாவுடனும் danieljeeva@rogers.com என்னும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
(நன்றி - பதிவுகள்)

Labels:
டானியல்அன்ரனி-பதிவுகள்,
விமர்சனம்
Tuesday, August 14, 2007
மண் குடிசைகளும் சில மயக்கங்களும்
(சிறுகதை)
-டானியல்அன்ரனி-
அவன் தனது குடிசைக்குத் திரும்பிக் கொண்டிருந்த வேளை நள்ளிரவைக் கடந்து விடிந்து கொண்டிருந்தது. நிலம் முற்றாக இன்னும் வெளுக்கவில்லை. அணைக்கப்படாத வீதி விளக்குள் இன்னும் எரிந்து கொண்டு தானிருந்தன. இரவு பூராவும் 'ரவுண்" முழுவதும் சுற்றித்திரிந்து அவனும் அவனுடைய நண்பர்களும் சுவர்கள், மதில்கள் ஒன்றும் பாக்கியில்லாமல் நாளை வெளிவரவிருக்கும் அவனுடைய அபிமான நடிகனின் புதிய படத்தின் போஸ்டர்களை அப்பொழுதுதான் ஒட்டி முடித்திருந்தார்கள். கழிந்து போன இரவில் இழந்துபோன நித்திரையின் அழுத்தத்தினால் கண்கள் எரிவு காண, கைகால்கள் சோர்ந்துபோய் வலி எடுத்த துடன், வியர்வையில் ஊறிக் காய்ந்துபோன மேனி பிசுபிசுத்து துர்நாற்றமும் வீசத் தொடங்கிவிட்டது. அவனுக்கு இவை ஒன்றும் புதியவையல்ல. ஏற்கனவே பழக்கப்பட்டவை தான். தன்னுடைய அபிமானத்திற்குரிய நடிகனின் புகழ் பரப்புவதற்காக இதை விட இயல்புக்கு மீறிய பல தியாகங்களையும் செய்யத் தயாராக இருந்தான். அதில் அவனுக்கு ஒரு இன்பம், ஆத்ம திருப்தி, அபரிதமான நம்பிக்கை, பக்தி என்று கூடச் சொல்லலாம். கஸ்தூரியார் வீதியைத் தாண்டி பஸ் நிலையத்திற்கு வந்துவிட்டான். பஸ் நிலையத்தைத் தாண்டி பண்ணை வீதி வழியாக கிழக்கை நோக்கி கடற்கரையை அண்டிய ஒதுக்குப் புறத்திலுள்ள அவனுடைய குடிசைக்குச் செல்ல வேண்டும். பஸ் நிலையத்தைச் சுற்றி கனமான வெளிச்சம் வாரி இறைத்துக் கொண்டிருந்தது. பஸ் வண்டிகள் ஒன்றன் பின் ஒன்றாகப் புறப்படும் உறுமல்கள். விடியல் வியாபாரத்துக்காக பல தேநீர்க்கடைகள் வெளிச்சம் போட்டுத் திறந்து கிடந்தன. திறக்கப்படாத கடைகளின் வெளிச்சத்தின் விழுதுகள் படியாத இருள் கனத்துக் கிடந்த விறாந்தை மூலைகளிலும், கானோரத்துக் கழிவுகள் கொட்டும் சந்துகளிலும், மூடியும் மூடாத உடல்களைப் கிடத்திப் போட்டுக் கவலையற்றுக் கிடந்த 'எளிய" சனங்களில் சில விழித்துக் கொண்ட நிலையில் தங்களுக் குள் கச....முச என்று பேசிக் கொள்வதும், வசவுகளை ஒருவருக்கு ஒருவர் உரத்துப் பரிமாறிக் கொள்வதும் அவனுக்குத் துல்லிய மாகக் கேட்டதாகிலும், அவர்கள் பேச்சில் சிதறி விழுந்த பல 'அழுகல்" வார்த்தைகளின் அருவருப்பான அர்த்தங்கள் மனதில் பதிந்ததைத் தவிர வேறு எந்தப் பிரக்ஞையும் அவன் மனதை உறுத்தவில்லை. சினிமாவில் அவன் அபிமான நடிகன் இதே ஏழைகள் உயர்வுக்காக கனல் தெறிக்க வசனம் பேசும் போதும்.... பாட்டுப்பாடும் போதும் உணர்ச்சி வசப்பட்டு உடல் சிலிர்த்து....உற்சாக மிகுதியினால்.... கைவிரல்களில் இரண்டை நாக்கின் அடியில் திணித்து ஒலி எழுப்ப ஆரவாரம் செய்யும் அவன் மனம் இப்பொழுது எனோ சுரணையற்றுக் கிடந்தது. பகல் முழுவதும் பரபரப்புடன் யுகம் யுகமாகக் காணமுடியாத எதையோ தேடிச் செல்லும் அவசரத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பெரிய பட்டினத்தின் மத்திய பகுதியிலிருந்து செல்லும் பிரதான பாதைகளில் குனிந்;து, நிமிர்ந்து வேகமாக பழைய கடுதாசிகளைப் பொறுக்கி சாக்குப் பைகளில் திணித்துக் கொண்டிருக்கும் சில சிறுவர்களைத் தவிர வேறு எதுவித அசுமாத்த மும் இன்றி வெறிச்சோடியே கிடந்தன. தூரத்தே - புகையிரதத்தின் கூவல்.... கடகட.... ஒசைகள்.... இப்பொழுது அவன் தனியாகத்தான் நடந்து கொண்டிருந்தான். கூட வந்த நண்பர்கள் ஒவ்வொருத்தராகப் பிரிந்து சென்றுவிட்டனர். மீண்டும் பிற்பகலில் சினிமாத் தியேட்டரில் அவர்களுடைய சங்கமம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. பல வேலைகள் அங்கு அவர்களுக்காகக் காத்துக் கிடந்தன. அவன் 'தேவி விலாஸ்" தேநீhக்கடை அருகே வந்ததும் பழக்க தோ~த்தில் தொண்டை அரிப்பு எடுத்தது. வறண்டு கிடந்த உதடுகளைச் சற்று உமிழ் நீரினால் நனைத்துக் கொண்டு சட்டைப் பைக்குள் கையைவிட்டுத் துளாவுகிறான். பத்துச் சதம்.....ஐந்து சதம்....ஒரு சதக்குத்திகள் கைகளில் தட்டுப்படுகின்றன. ஏமாற்றத்தின் எதிரொலியாக முகம் சுண்டிக்கொள்ள, ஒரு சக்கரைப் 'பிளேன் ரீ" குடிக்கலாம் என்ற மனத்தவிப்பும் தானே நழுவிக் கொண்டது. தொண்டை மீண்டும் எரிவெடுத்தது. கண்களிலும் நித்திரையின் கனப்பு. அங்கும் இங்கும் பார்வையை அலைய விட்டான். வீதி ஓரத்தில் அருகே.... தண்ணீர்க் குழாய். விரைந்து சென்று குழாயைத் திறந்து, சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருந்த நீர்த்துளிகளை கைகளால் ஏந்தி உறிஞ்சித் தொண்டைக்குள் இறக்கினான். நெஞ்சுக்குள்ளும் ஈரக்கசிவு இறங்கியது. முகத்தையும் அழுத்திக் கழுவிக் கொண்டான். மீண்டும் சற்று உற்சாகத்துடன் நடக்கத் தொடங்கினான். எதிரே கந்தசாமிதான் வந்து கொண்டிருந்தான். அவனைப் போலவே கந்தசாமியும் தீவிர அபிமானி. பல தடவைகளில் ஒரே படத்தைப் பார்ப்பதில் பல சாதனைகள் செய்தவன் என்பதால் நண்பர்களிடத்தே அவனுக்கு அதிக மதிப்புண்டு. 'என்ன கந்தசாமி, போஸ்டர் ஒட்ட உம்மைத் தேடினம். இங்காலப் பக்கமே காணயில்ல... எங்க போட்டு வாற". 'ஓம் மச்சான், அவசர அலுவலாகச் சாவகச்சேரிக்குப் போட்டு இப்ப படம் பாக்க வேணுமெண்டுதான் வாறன். நீ இப்ப போகயில்லையோ". 'என்னட்ட இப்ப காசில்ல. அடுத்த சோவுக்கு கண்டிப்பா நிப்பன்....ஒருக்கா வீட்ட போட்டு வாறன்:. 'ஆ....ஆ....அப்ப அங்க சந்திக்கிறன்". கந்தசாமி அவனைக் கடந்து போனான். 'எப்படியாவது வீட்டுக்குப் போய் ஒரு இரண்டு ரூபாக் காசு பிரட்டிப் போடவேணும்". அவன் உறுதியான தீர்;மானத்துடன் எட்டிக் கால்களை வைத்துச் சத்திரச் சந்தியடிக்கு வந்து விட்டான். அங்கேயே - கால்கள் நிதானித்து நின்றுவிட்டன. அவன் கண்ட காட்சி.... சில மணி நேரத்துக்கு முன் அவனும் அவனுடைய நண்பர்களும் அரும்பாடுபட்டு ஒட்டிப்போட்டுப் போன படப் போஸ்டர்களை வாளிக் கிணற்றுச் சுவரிலிருந்து கிழித்தெடுத்து.... சில சிறுவர்கள் சாக்குப் பைக்குள் அவசர அவசரமாகத் திணித்துக் கொண்டிருந்தார்கள். அவன் கண்கள் கோபத்தினால் சிவந்து வெளுத்தன. உதடுகள் துடித்தன. 'நாய் மூதேசிகள்".... அச்சிறுவர்கள் மேல் பாய்ந்து முதுகுப்புறம் வேகமாக அறைந்தான். சிறுவர்கள் சாக்குகளை விட்டு விட்டுச் சிதறி நாலாபக்கமும் ஓடினர். மனதிற்குள் கறுவிக் கொண்டே விடுவிடென நடந்தான். சாராயத் தவறணை, பெரிய தபாற்கந்தோர், சேமக்காலை, பொலிஸ் குவார்ட்டர்ஸ், அப்பால் அவனுடைய குடிசை தென்படும் ஒதுக்குப்புறம். தூரத்தில் வரும்போதே ஒருவித முடை நாற்றம். புதிய உலகத்திற்குள் புகுந்து கொள்வது போன்ற மனச்சுளிப்பு. எல்லாம் ஒரு கணம்தான். பழையபடி பழகிப்போன சுரணைக் கேடு. பரந்த குப்பை மேட்டைக் கிளறி எறிந்து இரைதேடும் முனைப்பில் கோழிகள் ஒன்றை ஒன்று கொத்தி விரட்ட, அழுகல் ஒன்றைக் கடித்துக் குதறும் சொறி நாய்களின் உர்....உர்....என்ற உறுமல்கள். ஏற்கனவே காய்ந்து கறுத்துப்போன புழுதி மேனிகள் விளையாட்டுத் திடலாக்கி விட்டிருந்தன. எங்கு நோக்கினும் சின்னஞ் சிறு குடிசைகள், மழையில் பாதி கரைந்து போய்விட்ட மண் சுவர்களை மூடிக்கிடந்த பொத்தல் கண்ட கூரைகள். அவற்றைச் சுற்றி கங்குமட்டை அடைப்புக்கள். அவ்வூர் மக்கள் அரும்பாடுபட்டுக் கட்டிய மீனாட்சி அம்மன் கோயில் கோபுரம் மாத்திரம் எல்லாவற்றுக்கும் மேலாக உயர்ந்து நின்றது. பண்ணை நெஞ்சு நோய் ஆஸ்பத்திரி இருக்கும் மேற்குப் புறத்தில் சரிந்து கிடக்கும் கிடுகு அடைப்புக்குள் தெரிவதுதான் அவனும் அவனுடைய அப்பு சின்னரும், ஆச்சி செல்லாச்சியும் வாழும் சின்னஞ் சிறு உலகம். அவன் குடிசையை அண்மித்துவிட்டான். ஒன்றை ஒன்று பார்த்து உறுமிய நாய்கள் அவனைப் பின் தொடர்ந்து குரைத்துக் கொண்டு ஓடி அருகே வந்ததும், சட்டென இனம் கண்டவைபோல வாலையாட்டிக் கொண்டு பின் தங்கிவிட்டன.படலை என்ற பெயரில் வேலிக்கட்டுடன் தொங்கிக் கொண்டிருக்கும் பழைய 'கார்" கதவுத் துண்டை ஓசைபடாமல் மெதுவாகத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். குடிசை முழுவதும் இருள் மண்டிக் கிடந்தது. செல்லாச்சி வேளைக்கே எழுந்து சாணம் பொறுக்க வயல் பக்கம் போயிருந்தாள். சின்னர்க் கிழவரின் கைவண்டியையும் அங்கே காணவில்லை. திண்ணை மூலையில் கிடந்த அவனுடைய ஓலைத் தடுக்க அங்கே இல்லை. நித்திரை கண்ணை விழுத்தியது. தட்டியில் சொருகிக் கிடந்த பேப்பரை எடுத்து திண்ணை யில் விரித்துப் போட்டுவிட்டு கைகளை தலைக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டே அப் படியே சுருண்டு படுத்துக் கொண்டான்.
இப்பொழுது நன்றாக விடிந்து பொழுது உச்சிக்கு ஏறிக் கொண்டிருந்தது. சூரியனின் சுள்ளென்ற வெளிச்சம் முதுகுப்புறம் தெறித்தும் அவன் எழும்பவில்லை. புரண்டு புரண்டு படுக்கிறான். அவனால் சரியாகத் தூங்கமுடிய வில்லை. மனம் புதிதாகத் திரையிடப்பட்டிருந்த படத்தைப் பற்றியும் அதற்குத் தேவையான இரண்டு ரூபாய் பணத்தைப் பற்றியுமே அலை மோதிக் கொண்டிருந்தது. படலை திறந்து கொள்ளும் கிறீச் சத்தம். மெதுவாகத் தலையை உயர்த்தி வாசலைப் பார்க்கிறான். அவனுடைய தந்தை சின்னர் அலுப்பாந்தியில் இருந்து வேலை முடிந்ததும் தனது கைவண்டியைத் தள்ளிக் கொண்டு உள்ளே வந்து முற்றத்து வேப்ப மரத்தின் கீழ் விட்டுவிட்டு, வியர்வை சிந்தி கறுத்து மினுமினுத்துக் கொண்டிருந்த நைந்து போன உடலை, தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து துடைத்துக் கொண்டே.... ஆயாசத்துடன் உள்ளே வருகிறார். அவன் இபபொழுது எதுவும் அறியாத வன்போல் கண்களை மூடிக்கொண்டு தூங்கும் பாவனையில் நடப்பவற்றைக் கிரகித்துக் கொண்டு கிடந்தான். 'செல்லாச்சி....செல்லாச்சி...." சின்னர்க் கிழவன் கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வந்தார். விறாந்தையில், விடிந்து பொழுது ஏறியும் நித்திரையில் புரண்டு கொண்டு கிடந்த ராசனைக் கண்டு கொண்டார். கோபத்தினாலும் வேதனையினாலும் உடல் கொதித்தது. அவனுடைய பொறுப்பற்ற போக்கினால் வீட்டில் நடந்துவரும் தொல்லை களை நினைக்கையில் அவனை வெட்டிப் போட்டால் கூடப் பரவாயில்லை என்பதுபோல் சிலவேளை யோசிப்பார். 'செல்லாச்சி....செல்லாச்சி...." மீண்டும் குரல் கொடுத்தபடியே முற்றத்திலிருந்த கிணற்று வாளியை எடுத்துக் கொண்டார் சின்னர்க் கிழவன். 'எப்பன் பொறுங்க....வாறன்...." குசினிக்குள் தேநீர் வைத்துக் கொண்டிருந்த செல்லாச்சிக்கிழவி குரல் கொடுத்துக்கொண்டே தேத்தண்ணியும் கோப்பையுமாக வெளியே வந்தாள். 'உவன் ராசன் எப்ப வந்து படுத்தவன்?" 'உப்பதான் வந்து மல்லாந்து கிடக்கிறான். செல்லாச்சிக் கிழவியும் கோபத்துடன் சீறினாள். 'இரா முழுவதும் ஊர்லாத்திப்போட்டு காவாலிப் பொடியளோட சேர்ந்து படம் பார்க்கிறது. விடிய வந்து படுக்கிறது. வேலையா வெட்டியா.... உவனுக்கு படத்திற்கு மாத்திரம் எங்க இருந்து காசு வருதோ.... முருகா...." 'இதுதான் இண்டைக்கு உழைப்பு. மத்தியானத்துக்குப் பாணை எண்டாலும் வேண்டுவம்". சின்னர்க்கிழவன் மடியில் சுற்றியிருந்த சில்லறைக்காசுகளை பக்குவமாக எடுத்துச் சின்னூச்சிக் கிழவியிடம் கொடுத்து விட்டு மெதுவாகக் கிணற்றடிப் பக்கம் நகர்ந்தார். 'இதுகள் என்னத்தைக் காணும். நேத்து கனகத்திட்ட வேண்டின கடன்காசு குடுக்கக்கூடக்காணாது". சின்னாச்சிக் கிழவி தனக்குள் முணுமுணுத்தபடியே திரும்பிப் பார்க்கிறாள். அவன் இன்னும் புரண்டுகொண்டுதான் கிடக்கிறான். 'டேய் ராசன் எழும்படா. இந்தா தேத்தண்ணியைக் குடி. விடிஞ்சு இவ்வளவு நேரமாப் போட்டுது. வெக்கம் கெட்ட இளந்தாரி". அவன் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு விழித்தபடிதான் கிடந்தான். ஆயினும் அப்பொழுதுதான் தூக்கத்திலிருந்து விடுபட்டவனைப்போல் அலுப்புடன் எழுந்து பார்த்தான். சின்னாச்சிக்கிழவி புருசன் கொண்டுவந்து கொடுத்த பணத்தை உள் அறையில் கொடியில் கிடந்த சேலைத் தலைப்பில் முடிந்து கொண்டிருந்தாள். அவன் கொஞ்சம் கொஞ்சமாகத் தேநீரை உறிஞ்சியபடியே பார்த்துக்கொண்டிருந்தான். சில கணங்கள் சென்று மறைந்தன. வெளியே தெருவில் சிறுவர்களின் ஆரவாரக்குரல். அதைத் தொடர்ந்து கூட்டுறவு கடைகளுக்கு பாண் ஏற்றிச் செல்லும் லொறியின் உறுமல் சத்தம் பெரிதாகக்கேட்டது. குசினிக்குள் இருந்த சின்னாச்சி பரபரப்புடன் வெளியே வந்து அறைக்குள் நுழைந்தாள். சின்னார்க்கிழவன் பசி மயக்கத்தில் சோர்ந்து போய்ச்சுருண்டு கிடக்கிறார்....முனகல் சத்தமும் பெரிதாகக் கேட்டது. சின்னாச்சிக் கிழவி. கொடியில் கிடந்த சேலையைப் பார்க்கிறாள். அது அவிழ்ந்து கிடந்தது....அவள் அதிர்ச்சியினாலும், ஆத்திரத்தினாலும் உடல் வெட வெடக்க குடிசைக்கு வெளியே வந்தாள்.
'கோதாரியில....கொள்ளையில போவான். உழைக்காம இருந்து தின்னிறதும் பத்தாம.... அந்த மனுசன் பாடுபட்டுக்கொண்டு வாறதையும் கொண்டுபோய்ப் படத்துக்குக்கொட்டுகிறானே...." அவள் குரல் எடுத்து அழுதாள்.
அவன் எதுவும் கேட்காதவனாய் மறுபடியும் தனது அபிமானத்துக்குரிய நடிகனைத் திரையில் பார்த்துவிடும் தீவிரத்தில் தியேட்டரைத்தேடி நடந்து கொண்டிருந்தான்.

கூர்
கூர்
கனடா நவீன தமிழ் கலை, இலக்கியத் தொகுப்பு
2008 பனி கால ஆரம்பத்தில் வெளிவரவிருக்கும் இத் தொகுப்பிற்கான சிறுகதை, கவிதை, விமர்சனக் கட்டுரை, நூல் மதிப்புரை, மொழிபெயர்ப்பு ஆக்கங்கள் வரவேற்கப்படுகின்றன.
படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் : koorcircle@gmail.com
தொடர்புகள்: Koor Art & Literary Circle,
24> Brimstone cres.,
ON. M1V 3L2
தொலைபேசி: 416-458 9426 416-551 0087-905-294 8607

Tuesday, January 02, 2007
உன் உயிர்க் கூட்டுக்குள்
உன் பார்வை தொட்டு
விழி விரித்த கணப் பொறியில்
எனக்குள் விழுந்து
வேர் கொண்டது…
உன் உயிர் வாசம்.
என் காதலின் காலம்
திறந்தே கிடந்தது
நீ வருவதற்கு முதல்…
உன்னைக் காணும் வரையில்
உன்னைக் காணும் வரையில்
என் காதல்
உணர்வுக்குள்ளிருந்த கணத்தை
உணராமலேயிருந்தேன்.
எனக்குள் நீயிறக்கிய யுத்தம்பற்றி
எனக்குள் நீயிறக்கிய யுத்தம்பற்றி
மறுநாளேமுழுவதும்
மறைக்காமல்உனக்குள் நிரப்பிவிட்டேன்.
உன் நேசிப்பால்,
கசங்கி உடைந்து
இயங்காமல் இருந்த
இதயத்திற்கு..
புது உணர்வும்
புது ஒளியும்…
நீ மூச்சு விட்டாலும்
முடிஞ்சுவைக்கச் சொல்லுது
என் மனசு…
என் உடலின்
ஒவ்வொரு அசைவிலும்
நீதான்…
உன் வரவின்மீது
நிதம் நிதம்
நம்பிக்கை விதைத்துக் காத்திருப்பேன்;.
உன் உதட்டின் ஈரம்
உன் உதட்டின் ஈரம்
உதடு வழிகசிந்த கவிதைகள்
உருண்ட முகத்தில்
ஊதாக் கலரில்ஓட்டுப் பொட்டு…
இன்னும் பிற…
நினைக்க நினைக்க
நினைக்க நினைக்க
ழியிரண்டின் மடல்கள்
விரும்பியே மூடுகின்றன.
வெண் பஞ்சு மேகத்திற்குள்
நின்ற நிலவு
எட்டிப் பார்த்து
புன்னகைத்ததுபோல்
எனக்குள்நீ சொன்ன வார்த்தைகள்.
நெய்தல் நிலத்தில்
நெய்தல் நிலத்தில்
நிகழ்ந்த கொடும் துயரம்
தொலைந்ததுபோல்
என் சோகமெல்லாம்
தொலைத்தன
உன் ஆறுதல் வார்த்தைகள்.
இன்றோமூழ்குகிறேன்
இன்றோமூழ்குகிறேன்
ஏல்லாவற்றையும்
நினைந்தும் நெகிழ்ந்துமாய்
வாழ் நதியில்.
- டானியல் ஜீவா
- டானியல் ஜீவா
உன் உயிர்க் கூட்டுக்குள்
உன் பார்வை தொட்டு
விழி விரித்த கணப் பொறியில்
எனக்குள் விழுந்து
வேர் கொண்டது…
உன் உயிர் வாசம்.
என் காதலின் காலம்
திறந்தே கிடந்தது
நீ வருவதற்கு முதல்…
உன்னைக் காணும் வரையில்
உன்னைக் காணும் வரையில்
என் காதல்
உணர்வுக்குள்ளிருந்த கணத்தை
உணராமலேயிருந்தேன்.
எனக்குள் நீயிறக்கிய யுத்தம்பற்றி
எனக்குள் நீயிறக்கிய யுத்தம்பற்றி
மறுநாளேமுழுவதும்
மறைக்காமல்உனக்குள் நிரப்பிவிட்டேன்.
உன் நேசிப்பால்,
கசங்கி உடைந்து
இயங்காமல் இருந்த
இதயத்திற்கு..
புது உணர்வும்
புது ஒளியும்…
நீ மூச்சு விட்டாலும்
முடிஞ்சுவைக்கச் சொல்லுது
என் மனசு…
என் உடலின்
ஒவ்வொரு அசைவிலும்
நீதான்…
உன் வரவின்மீது
நிதம் நிதம்
நம்பிக்கை விதைத்துக் காத்திருப்பேன்;.
உன் உதட்டின் ஈரம்
உன் உதட்டின் ஈரம்
உதடு வழிகசிந்த கவிதைகள்
உருண்ட முகத்தில்
ஊதாக் கலரில்ஓட்டுப் பொட்டு…
இன்னும் பிற…
நினைக்க நினைக்க
நினைக்க நினைக்க
ழியிரண்டின் மடல்கள்
விரும்பியே மூடுகின்றன.
வெண் பஞ்சு மேகத்திற்குள்
நின்ற நிலவு
எட்டிப் பார்த்து
புன்னகைத்ததுபோல்
எனக்குள்நீ சொன்ன வார்த்தைகள்.
நெய்தல் நிலத்தில்
நெய்தல் நிலத்தில்
நிகழ்ந்த கொடும் துயரம்
தொலைந்ததுபோல்
என் சோகமெல்லாம்
தொலைத்தன
உன் ஆறுதல் வார்த்தைகள்.
இன்றோமூழ்குகிறேன்
இன்றோமூழ்குகிறேன்
ஏல்லாவற்றையும்
நினைந்தும் நெகிழ்ந்துமாய்
வாழ் நதியில்.
- டானியல் ஜீவா
- டானியல் ஜீவா
Monday, January 01, 2007
உன் பாதை... (சிறுகதை)
-நாவாந்துறைடானியல்ஜீவா-
வானம் கறுத்து திரட்சியாய் இருண்டு கிடந்தது .வீதியில் மின் விளக்கு ஒளியிழந்து போய் பல மாதங்களாகி விட்டன சில வீடுகளில் மண்ணெண்ணைய் விளக்கிளிலிருந்து ஒளி தெறித்துக் கொண்டிருந்தன.
வானம் கறுத்து திரட்சியாய் இருண்டு கிடந்தது .வீதியில் மின் விளக்கு ஒளியிழந்து போய் பல மாதங்களாகி விட்டன சில வீடுகளில் மண்ணெண்ணைய் விளக்கிளிலிருந்து ஒளி தெறித்துக் கொண்டிருந்தன.
நான் இன்று எப்படியும் எங்களுடைய வீட்டை பார்க்க வேணும் எண்டு அம்மாவிடம் விடாப்பிடியாக காலையில் சொல்லி விட்டேன் . பொம்பர் அடிக்காத நேரம் பார்த்து போய்ப் பார்த்து விட்டு வாட என்று அம்மாவும் அனுமதி தந்து விட்டா.. பகல் நேரத்தில் அதிகமாக கெலியும் பொம்பரும் வந்து சுடுவதும் குண்டு போடுவதுமாக இருப்பதால் வீட்டிற்கு போய் தங்கி விட்டு காலையில் ஆனைக்கோட்டை கோயில் வளவுக்கு வந்து விடலாம் என்ற நினைப்போடு சயிக்கிளில் ஆறுகால்மடத்தை தாண்டி தட்டாதெரு சந்தியை நெருங்கிக் கொண்டிருந்தேன்.
யாழ்ப்பாணப் பிரதேசம் முழுவதும் விடுதலைப் புலிகளின் காட்டுப்பாட்டில் இருந்தது.கோட்டைக்குள் இலங்கை இராணுவம் இருந்தது.கோட்டையை சுற்றி வளைச்சு விடுதலைப் புலிகள் காவல் அரண்போட்டு இராணுவம் வெளியில் வராமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.பகலில் கோட்டையில் இருக்கும் இராணுவத்திற்கு சாப்பாடு போட கெலியும் பொம்பரும் வரும்போது பொடியலின் காவல் அரண்மீது பொம்பர் அடித்துக் கொண்டு உணவுப் பொதிகளை கோட்டைக்குள் போடுவார்கள். பொடியலும் மாறி காவல் அரணிலிருந்து துப்பாக்கி வேட்டுக்களை மேல் நோக்கி தீர்ப்பார்கள்.இண்டைக்கோ நாளைக்கோ கோட்டையை பொடியல் பிடித்து விடுவார்கள் என்ற செய்தி யாழ்ப்பாணம் முழுவதும் கதையாய் இருந்தது.
கம்மெண்டு இருண்டு கிடந்த வீதியில் ஒரு மாதிரி சயிக்கிளில் ஒடிக்கொண்டு வீடு சோக்கி வந்து கொண்டிருந்தேன்.அம்மா போட்டுத்தந்த இரவுச் சாப்பாடு சயிக்கிளின் பின் கரியலில் இருந்தது.நாங்கள் வீட்டை விட்டு வெளியேறி மூன்று மாதங்களுக்கு மேலாகிவிட்டது.அடிக்கடி பொம்பர் வந்து யாழ்ப்பாண நகரை அண்டிய பொதுமக்கள் வாழும் பகுதியில் தொடர்ந்து குண்டு போட்டு அழிப்பதால் எங்ககுடும்பமும் வெளியேறி ஆனைக்கோட்டை அடைக்கலநாயகி கோயில் வளவிற்கு வந்;து விட்டோம்.எங்கள் ஊரில் நாங்கள் மட்டுமல்ல நாய்களும் இடம் பெயர்ந்து ஊரே அமைதியாய்க் கிடந்தது.
நீண்ட நாட்களின் பின் இரவு நேர சயிக்கிள் பயணம் என்பதால் மனதளவில் அவ்வப்போது ஒரு வித அச்ச உணர்வு என்னையும் அறியாமல் அழுத்தியது.வீதி ஆள் அரவமற்று வெறிச்சொடிக் கிடந்தது.ஏக்கப் பெருமூச்சுடன் இருண்டு கிடந்த நிலப்பரப்பை நோக்கி கண்கள் தேடின...எதனை நான் தேடுகிறேன்?இந்த இருண்டு வாழ்வு தந்த வரலாற்றையா....?அல்லது ஆட்சியில் இருக்கும் அரசின் பௌத்த சிங்கள பேரினவாத போக்கின் தொடக்கத்தையா...? நினைவுகள் நிலையற்றலைந்தது. எண்பதுகளின் தொடக்கத்திலிருந்து தமிழின அழிப்பு உச்சத்தை தொட்டு எங்கள் வாழ்வு துயராய் மாறியது.வாழ்வு பல பரிமாணமாய்மாறி சொந்த மண்ணிலேயே அகதியானோம். இருத்தலுக்கான இருப்பில@; நம்பிக்கையை நாள் தோறும் இழந்து கொண்டிருந்தோம்.இந்த சோகத்தையெல்லாம் மனதில் சுமந்து கொண்டே இழந்த வீட்டை ஒரு முறைபார்த்து வருவதற்காகவே இன்றைய இரவுச் சயிக்கிள் பயணத்தை தொடங்கினேன்.1967 இல் ஜே.வி.பி.எனும் அமைப்புத் தோற்றம் பெற்று 1971 ஜனவரியில் ஜே.வி.பி.இயக்கம் அயுதமயப்படுத்தும் வேலையில் முழுமையாக ஈடுபடத் தொடங்கின.அப்போது ஈவிரக்கமின்றி 15000க்கு மேற்ப்பட்ட இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.பின் கிளர்ச்சி இந்தியாவின் உதவியோடு அடக்கப்பட்டது.இக்காலப் பகுதியிலேயே தமிழ் இளைஞர் மனதில் தமிழ்த் தேசிய உணர்வு எழுந்து சாத்வீக வழியிலிருந்து தனித்துவமாக கௌரவமாக தமிழர் வாழ்வதற்கான தனித்தேசத்தை நோக்கி ஆயுதப் போரட்டம் வடிவம் பெற்றது.எண்பதுகளின் எற்ப்பட்ட எல்லா நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வாழப் பழகிக் கொண்ட போதும் நாட்டின் விடுதலைக்கான போரட்டத்தில் எந்தவிதமான பங்களிப்பும் இல்லாமல் நானும் எனது படிப்பும் என்று வாழ்ந்து கொண்டிருந்தேன்.இது ஒரு வகையில் என்னுடைய சுயநலம் என்று என்று ஒப்புக் கொண்டாலும் எங்களுக்கு தமிழ்ப்; படிப்பிக்கும் மாஸ்டரை நினைத்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பாய் வரும்.எங்கள்; வகுப்பில் தமிழ் மட்டுமல்ல தமிழ் உணர்வையையும் ஊட்டுவதோடு இயக்கத்திற்கும் போகுமாறும் சொல்லிக்; கொண்டிருந்த மாஸ்டடரின் மூத்த மகன் ஓரு நாள் இயக்கத்திற்கு ஓடிப்;போக மாஸ்டர் பொடியலோடு எப்பிடியோ கதைச்சு மகனை மீட்டு வந்து உடனடியாகவே கனடாவுக்கு அனுப்பி வைத்து விட்டார்.மாஸ்டரின் நினைவில் தோய்ந்து சிரித்துக் கொண்டு சயிக்கிளில் ஒடிவந்த நான் வீதியில் கிடந்த சிறிய பள்ளத்திற்குள் சயிக்கிள் வீழ்ந்து எழும்பிய போது இடுப்பில் வந்த வலியோடு சுய சிந்தனைக்கு வந்து விட்டேன்.சயிக்கிளுக்கு வேறு காத்து இல்லாமல் றிம்மில் ஓடுகின்றது.காலையில் மானிப்பாய் சந்திக்கு போகும் போது சயிக்கிளுக்கு காத்தடிக் வேண்டுமெண்டுதான் நினைத்துக் கொண்டுதான் போனனான்;. ஆனால் அவசரத்தில் ஏனோ மறந்து விட்டேன். என்னுடைய கீரோ(ர்நுசுழு)சயிக்கிள் வாங்கி கிட்டத்தட்ட ஆறு அல்லது ஏழு வருடம் இருக்கும் அவ்வப் போது ஏற்ப்படுகிற பழுதுகளை உடனே திருத்தி விடுவது என்னுடைய வழக்கம். ஆனால் இப்போதுள்ள யுத்த கால நெருக்கடியில் சாப்பாட்டிற்கே வழியற்ற வாழ்க்கைக்குள் சயிக்கிளை திருத்துவது எப்படி? ஏப்படியான நிலமை நேர்ந்திருந்தாலும் இன்று காலை சயிக்கிளுக்கு காத்தடிக்க மறந்தது என் ஞாபக சக்தியில் ஏற்ப்பட்ட தவறுதான்.அதனால் நீயுட்டனின் இரண்டாவது விதி என்னைத் தாக்கும் என்று எள்ளவும் நினைக்கல.
பள்ளத்தில் வீழ்ந்த பின் விளைந்த உடல் வலி ஒரு சில நிமிட வரை நீண்ட போதும் என் சயிக்கிளின் வேகம் இன்னும் குறையவில்லை.குறையவும் விடவில்லை.ஏனென்றால் எனது வீடு பார்க்ப் போகும் கனவு இன்னும் ஈரமாய்.என் சிந்தனையின் போக்கில் ஏனோ இன்னும் இழப்புகளின் தொடர்ச்சியில் மீதி உறை நிலைப் படலமாய் ஊரும் உறவும் வீடும் வீட்டின் மேல் அடர்த்தியாய் படர்ந்திருக்கும் கடதாசிப்பூக்களின் மேல்;தான்.
சில நிமிடத்திற்குள் ஓட்டுமடத்து சந்தியைத் தாண்டி வலது பக்கமாக திரும்பி காரைநகரை நோக்கிய பதையால் திரும்பி இடது பக்கமாக ஒஸ்மோனியாக் கல்லூரி வீதியால் சயிக்கிளை ஓட்டினேன். பின் கரியலில் இறுக்கப்பட்ட சாப்பாட்டுப் பெட்டிக்குள்ளிருக்கும் சோறும் மாட்டு இறைச்சிக் கறியும் ஒரு கணம் மின்னலாய் மூளையில் வெட்ட ஒரு தடவை ஓடிக்கொண்டே இடது கையால் சாப்பாட்டு பெட்டியை தடவிப் பார்த்தேன். அம்மா அன்போடு போட்டுத் தந்த சோத்;தின் சுவையை மனதளவில் உணர்ந்து கொண்டு வீட்டிற்கு போனவுடன் முதல் வேலையாய் சாப்பிட வேண்டும் மெண்டு நினைத்துக் கொண்டேன் நாலு முச்சந்தியில் இருக்கும் பள்ளி வாசல் முலையிலிருந்து என்னை யாரோ இருட்டுக்குள்ளிருந்து அழைக்கும் குரல் கேட்டு அதிர்ந்து போனேன். என் சயிக்கிளின் வேகத்தை சடுதியாக நிறுத்தி விட்டேன்.இருட்டுக்குள் நின்ற ஒருவரின் கையிலிருந்த டொச்சிலைற்றிலிருந்து என்னை நோக்கி ஒளி பாய்ந்தது. அச்சம் படர்ந்த உணர்வோடு ஒளி வந்த திசை நோக்கி என்கண்கள் மேய்ந்;தன. நெஞ்சம் இன்னும் புலப்படதா புலனாய்வில்…திசையெட்டும் கேட்க உரத்து கத்த வேண்டும் போல் மனம் வெந்தழுதது.நெஞ்சங் கூட்டிற்குள் ஏதோ முட்டி நின்று முன்னகர மறுக்கின்றது.என்னுடல் உறைந்து போக உருவம் என்னை நோக்கி மெல்ல சயிக்கிளை உருட்டிக் கொண்டு வந்த போது என் மன ஆய்வின் முடிவு அவன் ஒரு இயக்கத்தை சேர்ந்தவன் என்பதை நிறுவி விட்டது. நொடிப் பொழுதுதான் “என்னோடு வா” என்று அவன் என்னை அழைத்த போது நான் நினைத்தது நிஜமென்று நிர்ணயம் செய்தது. நான் இடிந்த குரலில் “ஒரு அகதியென்றும் வீடு பார்ப்பதற்காகவே போகிறேன”; என்றும் தெளிந்த சிந்தனையோடு ஓப்பாரி வைத்தேன்.அதற்கு அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை சில நொடியின் பின் ஒப்பாரி வைக்கத் தொடங்கிய குரலை தடுத்து நிறுத்தியது.“எனக்கு பின்னால் வா”என்ற வார்த்தை.அவர்சொல்லிக் கொண்டே சயிக்கிளில் ஏறி சயிக்கிளை ஓட்டத் தொடங்கினார்.நான் பேசாமல் பறையாமல் அவருக்கு பின்னால் தொடர்ந்தேன்.அவன் டொச்சுலைற்றின் வெளிச்சத்தை முன்னால் பாய்ச்சிக் கொண்டு சென்றார்.நானும் அந்த வெளிச்சத்தில் மிக நிதனாமாகவும் மெதுவாகவும் சயிக்கிளை ஓட்டிக் கொண்டு போனேன்.
நானும் எனக்கு முன் சென்ற சயிக்கிளும் லைடன் சந்தியில் வந்து வலது பக்கமாக திரும்பி பின் வில்லுன்டி மாயனத்தையும் தாண்டி நாங்கள் கொட்டடியை நோக்கி போய்க் கொண்டிருந்தோம்.
நான் சிறுவனாக இருந்த காலத்தில் நடந்தவையெல்லாம் நினைவுக்கு மீண்டது.வில்லுண்டி மாயனத்தை ஒட்டியபடி கேணி இரண்டு இருந்தது.அதற்குப் பக்கத்தில் ஒரு சிறிய இந்துக் கோயில் இருந்ததாக் ஞாபகம். கோயிலோடு ஒரு இளைப்பாறு மடமும் இருந்;;;;;;;;;;;;;;தது. நாங்கள் பொடியலாய்ச் சேர்ந்து காற்று வாங்கிக் கொண்டு இந்தமடத்தில்தான் தூங்குவோம்.இந்த இரண்டு கேணியில் நாங்கள் ஒரு கேணியில் மட்டும்தான் குளிப்பது வழக்கம். மற்றையது வெறும் சேற்று நிலப்பரப்பாய்; இருப்பபதால் யாரும் அதற்குள் குளிப்பதில்லை.எங்க ஊரிலிருந்து நாங்கள் மாட்டின் அணையால் நடந்து வந்து கண்ணாப்பத்தையினுடாக ஒடுங்கிய ஒற்றையடி மணற்தரை பாதையினால் இந்தக் கேணிக்கு வருவோம். அது ஒரு ஆனந்தாக் காலம்.உண்மையில் இந்தக் கேணி வில்லுண்டி மயானத்தில் பிணத்தை எரித்து விட்டு வருபவர்கள் குளிப்பதற்காக கட்டப்பட்டதாக சொல்வார்கள். ஆனால் நாங்கள் பந்து விளையாடி விட்டு குளிப்பதற்காக பயன்படுத்தி வந்தோம். கேணியைச் சுற்றி கண்ணாப்பத்தைகள் நிறைந்திருக்கும்.இப்ப போது கண்ணாக் காடய் அழித்து கேணிக்குள்ளும் குப்பையை போட்டு நிரவி நிலத்தை செப்பனிட்டு ஒரு குடியேற்றமாய் மாற்றி விட்டார்கள்.சிறு வயது முதல் பழக்கப்பபட்ட இடமென்றாலும் மக்கள்; இடம் பெயர்ந்து போய் விட்டதால் ஒரு திக்குத் தெரியாத காட்டிற்குள் அகப்பட்டதைப் போல பய உணர்வு மனதில் உறைந்தது.கொட்டடியை அண்டிய வீடுகள் எல்லாம் செல்லடியில் சிதைந்து கிடந்தன.யாருமே இந்தப் பக்கம் வருவதே கிடையாது போல் கிடந்தது இந்த இயக்கப் பொடியன் என்னையேன் இந்த இருட்டுக்குள் கூட்;டிக் கொண்டு போக வேண்டும்..? மனதிற்குள் கேள்வியெழுப்பிக் கொண்டே மனம் பதகளிப்பில் கிடந்தது .
கொட்டடி முத்தமிழ் சன சமூக நிலையத்திற்கு முன்பாக உள்ள பொம்பர் அடித்து இடிந்து போய்க்கிடக்கும் வீட்டிற்கு வந்து விட்டோம்.சயிக்கிளை ஓரு சுவர் கரையோடு பூட்டி வைத்து விட்டு அவன் பின்னால் யாழ்ப்பாணக் கோட்டைக்கு முன்னால் இருக்கும். தொலைத் தொடர்பு கோபுரம் இருந்த இடம் நோக்கி சிறிய வாய்க்கால் போல் வெட்டப்பட்ட ஒடுக்கமான ஒரு பாதை வழியாக மெல்ல மெல்ல ஆழம் கூடிக் கொண்டு போகும் பதையால் வந்து ஒரு பெரிய பங்கருக்குள் வந்து விட்டோம். பின் என்னைக் கூட்டிக் கொண்டு வந்தவர் மாயமாக மறைந்து போய்விட்டார்.பதுங்கு குழியிலிருந்து அண்ணாந்து யாழ்ப்பாண கோட்டையை நோக்கி பார்ததேன். சிறிய மின் விளக்கின் வெளிச்சத்தில் மங்கலாய் இலங்கை இராணுவத்தின் காவல்அரண் கண்ணுக்குப் புலப்பட்டது. நான் நிற்கிற இடத்திற்கு பக்கமாக இடியுண்டு போய்க் கிடக்கின்ற கட்டிடத்திற்குள் பொடியல் ஆயுதம் ஏந்தியபடி எப்போதும் தாக்குதலை எதிர் கொள்ளக் கூடிய வகையில் வியூகம் வகுத்து நின்றார்கள்.
நான் பதுங்கு குழி வெட்டுகின்ற வேலை செய்வதற்காகவே அழைத்து வரப்பட்டேன் என்பதை இங்கு வேலை செய்து கொண்டிருந்த இளைஞர்களின் சுறு சுறுப்பில் உணர்ந்து கொண்டேன்.ஒரே பயமாக இருந்ததுபயமென்றால் என் வாழ்க்கையில் இதுவரையில் வராத பயம்.மனம் இனம் புரியாத அதிர்ச்சிக்குள் அகப்பட்டு தவித்தது.என் உயிரின் யாசிப்பு மரணத்தின் வாசலை அடிக்கடி எட்டிப் பார்த்தது.
நீண்ட இரும்பு ரெயில் தண்டவாளக் கேடர்கள் என் தோளில்.சில இளைஞர்களோடு சுமந்து பதுங்கு குளிக்குள் கொண்டு வந்;து ஒவ்வொன்றாய் அவர்கள் சொல்கிற இடத்தில் மெதுவாக அடுக்கி வைத்துக் கொண்டிருந்தோம். தோளில் இரும்புக் கேடர் கிழித்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது சற்றும் இரக்கமில்லாமல் என்னிடம் வேலை வாங்குகிறார்களே என்று மனதிற்குள் முணுமுணுத்தேன். உடல் வலிதாங்க முடியாமல் தவித்தேன்.
நெடுத்த வானப் பெருவெளியில் ஊமைநிலவு.. விண்மீன்கள் விரவிக் கிடந்தன.நிலவே நீ நித்தம் யாருக்காக காய்கிறாய்..? எனது தேசத்தின் சோகம் என்னைப் போல் உன்னைக் கொல்லவில்லையா? மனதிலிருந்து அழுகுரல் இடியோடு nருருப்பாய் நிலவின் மீது எரிந்து விழுந்தது.சூரியனை தொலைத்த இந்த நீண்ட இருள் கவிந்த வெறுமையான வாழ்வை வெற்றி கொள்ள ஒரு வெளிச்சக் கீற்று எப்போது வரும்...?
என் உடல் இன்னும் சோர்ந்து போனது. தூக்கம் மெல்ல துவைத்தது.முன்னிரவு மூட்டு வலியோடு முணு முணுத்து நகர்ந்து போய்க் கொண்டிருக்கும் போதுதான் கோட்டையின் மேல் இருந்த காவல் அரண்னில்லிருந்து எங்களை நோக்கி சரமாரியாக வெடிகள் தீர்க்கப்பட்டன.நாங்கள் இரும்புக் கேடர்கள் அடுக்குகிற சத்தம் கேட்டுத்தான் அந்த வெட்டுச் சத்தங்கள் தீர்க்கப் பட்டிருக்கலாம்.பதிலுக்கு இடிஞ்ச கட்டிடத்திற்குள் நின்ற பொடியல் பதில் தாக்குதல் தொடுத்தார்கள்.ஜந்தோ அல்லது பத்தோ நிமிடத்துடன் நிறைவுக்கு வந்த இந்த சிறிய யுத்தம் எந்த உயிர் இழப்பின்றி முடிவுக்கு வந்தது.பங்கருக்குள் குந்திப் பிடித்துக் கொண்டிருந் நாங்கள் மீண்டும் வேலையைத் தொடங்கினோம்.பின் இராணுவ அரணிலிருந்து சுற்று வரை என்ன நடக்கின்றது என்று தெரியக் கூடிய வகையில் மின் விளக்கொன்றை போட்டார்கள். அது பிரகாசமடமாக ஒளியை பரப்பிக் கொண்டிருந்துத நாங்கள் வேலையை தொடர்ந்து செய்து கொண்டிருந்தோம்.அந்த நேரம் பாhத்துத்தான் எ.கே.47 னுடன் ஒருவர் எனக்கு பக்கமாக குனிந்து கொண்டு மெதுவாக நடந்து வந்தார். நான் விக்கித்துப் போனேன்.எங்கைய்யோ பார்த்து பழகிய ஞாபகம் என் இறந்த கால நினைவுக் கட்டுக்குள் இழுத்துச் சென்றது.உருவத்தை வைத்து ஊகித்து முடிவுக்கு வந்தவுடன்”நீ அந்தோனியல்ல…?என்று கேட்பதற்குள் அவன் விரல்லால் வாயில் குறுக்காக வைத்துக் கொண்டு குறியீட்டு வடிவில்”மௌனமாய் இரு”என்று காட்டி விட்டு:’என் பெயர் அருள்’என்றான்.நான் பதிலுக்கு மௌனத்தை காணிக்கையாக்கினேன்.
“இங்க எப்படி வந்தனீ”என்று காதும் காதும் கேட்ப்பது போல் கேட்க நான்:“பங்கர் வெட்டுவதற்காக என்னை கூட்டிக் கொண்டு வந்திருக்கிறாஙக்” என்று சொன்னேன். “எத்தனை மணிக்கு வந்தனீ”“எழுமணியிருக்கும்.நான் வீட்ட போகவேணும் என்ன விடமாட்டங்களா…?”என்றேன். “நான் விடியற்காலையில் சென்றி மாற வரும் போது உன்னைக் கூட்டிக் கொண்டு நீ சயிக்கிள் வைத்து விட்டு வந்த இடத்தில் கொண்டு வந்து விட்டால் சரிதானே…” என்று சொன்னான்.என் மனம் மகழ்சிக் கடலில் மிதந்தது நாளை எனது வீடு போய்ப் பார்ப்பேன் என்ற கனவின் மீது நம்பிக்கை விழுந்தது.
அந்தோனி! அவன் நினைவில்லா இறந்த காலமா…? நினைச்சே பார்க்க முடியாது.அவன் வீட்டு முற்றத்தில் நின்று கிட்டி விளையாடி பொலையடிக்காத நாட்கள் இல்லையென்றே சொல்லலாம்.நானும் அவனும் ஒரே பாடசாலையில் முதலாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்தேன்.நான் உயர் கல்விக்காக வேறு கல்லூரிக்கு சென்ற பின் அந்தோனியை ஊரில் நான் க்hனவேயில்லை.நாவாலியில் அவனுடைய குடும்பத்தோடு குடியேறி விட்டான் என்று காற்று வழியாய் காதில் வந்த செய்தி.அதன் பின் இப்போது அந்தோனியை ஒரு தமிழ்ப் போராளியாக நான் பார்க்கும் போது என் உடலில் இனம் புரியாத சோகம் அப்பிக் கொண்டது.
ஜிம்முக்கு போய்; உடற் பயிற்சி செய்து உருண்டு திரண்ட உடல் கட்டுப் போல்@.அப்படியே இன்னும் கட்டுக் குலையாமல்.சின்ன வயதில் உடல் முழுவதும் ஒரு வித ‘சதைக்காய்’கள் படர்ந்திருந்தது. அது இன்று வரை ஏனோ உடலோடு ஒட்டியபடியே கிடக்கின்றது. அவனிடம் எனக்கு பிடித்த விடயம் பொய்யென்பதே வாயில் வராத கடவுள் பக்தியுள்ள நல்ல மனிதன்.சுருக்கமாக சொன்னால் ஒரு நேர்மையான காந்தியவாதி.
அவன் நினைவிலிருந்து விடுபட்டு அந்தோனி மீது ஆச்சரியத்தோடு பார்வையை செலுத்திக் கொண்டு மெதுவாக “இயக்கத்தில் இருந்து போராடி சாகவ போறாய்..?” அவன் முகத்தை கடுமையாக்கிக் கொண்டு@”இது எங்கட நிலமடா!எப்படிப் போராடியும் வெல்ல வேண்டுமடா…நான் என்னுடைய இழந்த மண்ணை மீட்க்க என் உயிரைத்தான் கொடுக்க வேண்மெண்டால் அதற்காக ஒரு துளியும் கவலைப் படமாட்டேன்.அந்த உயீர் தொலைப்பு அர்த்தமுள்ளது.அது ஆழமமான அர்த்தமுள்ள மண் மீது காதல் கொண்ட உணர்வு.என்னோடு மடிவதில்லை.அது ஆயிரம் உயீhப்பின் வேர்களை பதியம் போட்டுச் செல்லும். இதெல்லாம் உனக்கெங்கயட புரியப் போகுது…”அவன் சொல்லும் போதே என்னையும் அறியாமல் கண்ணீர் கசிந்தது. “போய்ற்று வாறன்” என்று சொல்லி விட்டு இடத்தை விட்டு நகர்ந்தான். ”இது எங்கட நிலமடா!எப்படிப் போராடியும் வெல்ல வேண்டுமடா..”அந்த வார்த்தையே மீண்டும் மீண்டும் என் நெஞ்சிற்குள் வந்து நெருப்பை மூட்டியது.
ஏங்கே போனானோ தெரியல்ல ஆனா சொன்னபடி குறித்த நேரத்திற்கு வந்து சேர்ந்தான்.என்னைக் கண்டதும் சைகையால் தன்னோடு வரும்படி கூப்பிட்டான்.நான் அவன் பின்னால் வெட்டப்பட்ட ஒடுங்கிய வாய்க்கால் வழியாக் கொட்டடியை நோக்கிப் போனேன்.கொஞ்ச நேரத்திற்குள் சயிக்கிளை நான் விட்டுட்டு வந்த வீட்டடிக்கு கூட்டிக் கொண்டு வந்து என்னை விட்டுட்டு ஒன்னும் பேசாமல் பறையாமல் போய் விட்டான். நான் விடிவதற்கு முதலே வீட்டிற்கு வந்து தூங்கிவிட்டேன்.மறுநாள் மதியம் பன்னிரன்டு வரை படுத்திருந்து விட்டு அதன் பின் எழுந்து கினற்றடியில் குளித்து விட்டு வீட்டை பார்த்த சந்தோசத்தோடு சயிக்கிளை எடுத்துக் கொண்டு மீண்டும் நாங்கள் அகதிகளாய் இருக்கின்ற ஆனைக்கோட்டை மாதகோயிலை நோக்கி பயணத்தை தொடங்கினேன். சயிக்கிளில் கொஞ்சத் தூரம்தான் வந்திருப்பேன் நாலுசந்தியில் ஒட்டப்பட்ட மரண அறிவித்தல் போஸ்டரை பார்த்ததும் விக்கித்துப் போனேன். யாருமல்ல அருள் என்ற இயக்கப் பெயர் கொண்ட அந்தோனிதான்.என் இதயம் இயங்காமல் மரணித்தது. என் கண்களிலிருந்து என்னையும் அறியாமல் கண்ணீர் கசிந்து அவன் பாதங்களில் அஞ்சலி செலுத்தியது.
(முற்றும்)
Thursday, April 27, 2006
வெற்றுக் காகிதங்கள் நாவாந்துறைடானியல்அன்ரனி
உள்ளே வந்தான். வீடு முழுவதும் ஒரே இருள். பொிய அறையின் வாசல் நிலைப்படிக்கு மேலாக தொிந்த வெளிக்கூடாக உள்ளே எாிந்து கொண்டிருந்த 'அாிக்கன் லாம்பின் ' மெல்லிய வெளிச்சம் மாத்திரம் மங்கலாக வெளி விறாந்தைக்கு நிழல் விழுத்தியது.முற்றத்தில் நிற்கும் முருங்கை மரத்துடன் சின்னவன் கட்டிப்போட்ட 'கறுவல் ' ஆள் அரவம் கேட்டதும் விறுக்கென்று எழுந்து கால்கள் இரண்டையும் அகட்டி உடம்பைச் சிலிர்த்து சோம்பல் முறித்துக்கொண்டே ஆக்ரோசத்துடன் குரல் எழுப்பியபடி அங்கும் இங்குமாக ஓடியது.அவன் மெதுவாக அதன் வழுவழுப்பான முதுகுப் புறத்தைத் தடவிக் கொடுத்து விறாந்தைக்கு வந்தான்.பொிய அறையில் அம்மா, மூத்த தங்கைகள், சின்னஞ்சிறுசுகள் சிலவும் படுத்துக் கொள்ளுவார்கள். தந்தையைக் கட்டிப்பிடித்துக் கொண்டு படுத்தால்தான் நித்திரை கொள்வேன் என்று அடம்பிடிக்கும் சின்னவன், வழமைக்கு மாறாக இன்று உள் அறையில். அவனுடைய விசும்பல் விட்டுவிட்டு உள்ளே கேட்டது. படுத்த பாயிலேயே சலம் பெய்துவிட்டதற்காக அம்மா சற்று நேரத்திற்கு முன் அவனை அடித்திருக்க வேண்டும்.சாருக்குள் விாித்துக்கிடந்த ஓலைத் தடுக்கில் அவனுடைய தந்தை தான் படுத்துக் கிடந்தார். குறட்டைச் சத்தம் பலமாகக் கேட்டாலும் அவர் அயர்ந்து தூங்குகிறார் என்று சொல்லிவிட முடியாது. சின்ன அரவம் கேட்டாலும் 'பேய் பிசாசைக் ' கண்டவர் போல திடுமென விழித்தெழுந்து விடும் சுபாவம் அவருக்கு.தகப்பனை நினைத்தால் இவனுக்கு இப்பொழுதும் பயம்தான். இவனுக்கு அம்மாவை எப்படியாவது அரட்டிச் சாப்பாடு கேட்கவேண்டும். அம்மாவை அரட்டும் சத்தத்திலே தகப்பனும் எழுந்து விட்டால் பிறகு என்ன, ஒரே புறு புறுப்புத்தான்.'சும்மா இருந்து தின்னுறதும் பத்தாமல் எங்கேயோ ஊர் சுத்திப்போட்டு ஏமஞ் சாமத்தில வந்து இஞ்ச விடியப்புறம் தொழிலுக்குப் போறதுகளட நித்திரையையும் குழப்புறான் '.தந்தையின் பேச்சுக்களை கேட்கும் போது கோபம் கோபமாக வரும். அவமானத்தால் உடம்பெல்லாம் கூசும். வீட்டைவிட்டு எங்கே யாவது ஓடிப்போகவேண்டும்போல ரோசம் வரும். பிறகு ஆறுதலாக இருந்து தனிமையில் சிந்தித்துப் பார்க்கும்போது அவர் சொல்லுவதிலும் கூட நியாயம் இருப்பதுபோல் தென்படும்.இருபத்தைந்தைக் கடந்தும் படிப்பையும் தொடரமுடியாமல் வேலையைத் தேடிக் கொள்கிற சாமார்த்தியமும் இல்லாத குடும்பத் திற்கு மூத்தபிள்ளையைப் பற்றி முழுக் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ள தந்தை இப்படி அலுத்துக்கொள் வதில் தவறில்லை என்று தனக்குள்ளேயே மனதைத் தேற்றிக்கொள்வான்.மற்றவர்களின் உழைப்பில் நின்று கொண்டிருக்க இவனுக்கும் வெட்கமாகத்தான் இருந்தது. அதற்காக அவன்தான் என்ன செய்வான்!அவனிடமும் தான் 'பைல் ' நிறைந்த 'சேட்டுவிக்கற் 'றுகள், வேலை யாராவது கொடுக்க வேண்டுமே! யாரையாவது பிடித்து 'சாிக்கட்டி ' காாியம் பார்க்கலாம் என்றால் கையில் மூவாயிரம் வேண்டும் என்று சொல்கிறார்கள்.கையில் மூவாயிரம் இருந்தால் மூத்த தங்கையின் கல்யாணம் இரண்டு வருசத்துக்கு மேல் இழுபட்டுக்கொண்டு கிடக்குமா ?வயிறு பிசைந்தது. பசியினால் விண்.... விண்.... என்று இரைந்தது. பொிய அறைக்கதவு அண்டை சென்றான். மூத்தவள் ராணியை எழுப்பலாம் என்று முதலில் நினைத்தான். அவளை இலகுவில் எழுப்பிவிட முடியாது. அவள் எழும்புவதற்கு முதல் தகப்பனே எழுந்து வந்து விடுவார். அம்மாவை எழுப்புவதுதான் இலகுவான காாியம்.'அம்மா....அம்மா....அம்மா 'மெதுவாக வாசலில் நின்றபடி கூப்பிட்டான். உள் அறையில் சில நிமிடங்கள் வரை எந்தவித சலனமும் இல்லை. கதவை லேசாகத் தட்டிக்கொண்டே மறுபடியும் குரல் கொடுத்தான். உள்ளே யாரோ அரண்டு எழும் சலனம். அதைத்தொடர்ந்து அம்மாவின் அடைத்த குரல்.'புள்ள....புள்ள....தங்கச்சி, அண்ணன் வந்து நிக்கிறான் போல இருக்கு. எழும்பிப் போய் சோத்தைப் போட்டுக் கொடு '.'போண எனக்கு அலுப்பாயிருக்கு.... சும்மா எல்லாத்துக்கும் என்னத்தான் இந்த மனுசி முறிக்குது. அங்க அவள் மெள்ள பிரண்டு கிடக்கிறாள். அவளை அரட்டிச் சொல்லன் ' இது ராணியின் குரல்.'எழும்படி. அவள் இப்பதான் வீடி இல வெட்டிப்போட்டு அலுப்பில கிடக்கிறாள். அங்க அந்த இளந்தாாி எவ்வளவு நேரமாகக் காத்துக் கொண்டு நிக்கிறான். எழும்படி. சுனங்கல் '.தங்கை ராணி அலுப்புடன் அம்மாவைத் திட்டிக்கொண்டே லாம்புடன் வெளியே வந்தாள். அவள் கண்களில் நித்திரையின் அழுத்தம். நாள் முழுவதும் வீட்டு வேலைகள் செய்து அலுத்துப்போன சோர்வு முகத்தில்.இவன் தந்தையின் படுக்கையைத் திரும்பிப்பார்க்கிறான். அவர் மறுபக்கம் புரண்டு படுத்துக்கொள்கிறார்.'பாவம் மனுசன். இனி நடுச்சாமத்தில் எழும்பிப்போய் நித்திரை முழிச்சு தூண்டலுக்கு கிடந்துபோட்டு விடிய பஞ்சி அலுப்பில வாறவர். 'அவன் எழுந்துபோய் கைகளை நீாில் நனைத்துக்கொண்டு குசினிக்குள் சென்று மரப் பலகையில் குந்திக்கொண்டான்.ராணி சோற்றைக் கோப்பையில் போட்டுக்கொடுத்துவிட்டு கிணற்றடிப் பக்கம் இருந்த குடத்தில் தண்ணீர் வார்த்து வரச்சென்று விட்டாள்.முதல்படியை பிசைந்து வாயில் திணித்துக்கொள்ளப்போனபோதுதான் முதல் நாள் இரவு இவனும் நண்பன் யோசப்பும் போய் பார்த்து வந்த 'வல்மத்துவ ' சிங்கள சினிமாப் படத்தின் காட்சிகள் ஒன்றின்பின் ஒன்றாக மனதில் நெருங்கியடித்துக்கொண்டு வந்தன.வேலையற்ற பட்டதாாி நண்பர்கள், அவர்கள் கிராமத்தில் படும் க~;டங்கள். முகம் கொடுக்கும் பிரச்சினைகள்.நிலச்சுவாந்தாரன் ஒருவனின் கபடத் தனமான கொடுமையினால் சொந்த நிலத்தைப் பறிகொடுக்கும் அந்த ஏழை வாலிபனின் குடும்பம், தட்டிக்கேட்கச்சென்ற வாலிபன் இறுதியில் துப்பாக்கிவேட்டுக்குப்பலியாகி மடியும் அந்தக் கொடூரமான இரத்தத்தை உறைய வைக்கும் காட்சி....இறுதியில் எாியும் அவனுடைய சிதைக்கு முன்னால் அழுது புலம்பும் வயோதிபத்தாயின் ஆறாத்துயர்! 'சை, என்ன கொடுமை '.அவன் இதயத்தில் அவனை அறியாமலே ஒர் அந்தாிப்பு கண்களில் நீர்க் கசிவு. கூடவே எழுந்த பழி உணர்வு. இத்தனை கொடுமைகள் மலிந்த சமூகமா ?'அண்ண, அம்மானும் மாமியும் கொஞ்ச நேரத்துக்கு முன்னால வீட்ட வந்திற்றுப் போயினம் '. வெகு நேரமாய்த் தலை குனிந்தபடி கோப்பையிலிருந்த சோற்றையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அவன் தலையை நிமிர்த்திப் பார்த்தான்.ராணி தன் எதிரே பலகையில் இருந்த இவனையே வெகுநேரமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் கேட்பது கூட இவன் காதுகளில் சாியாக விழவில்லை.'என்ன ராணி கேட்டனி ? ''அம்மானும் மாமியும் வீட்ட வந்திற்றுப் போயினம். இந்த ஆவணிக்குள்ள கல்யா ணத்தைச் செய்து போடட்டாம்.'அப்புவும் அம்மாவும் அதுக்கு என்ன சொன்னவியள் '.இவன் அப்படிக்கேட்டதும் ராணி தலையைக் குனிந்துகொண்டாள். அவள் கை விறகுச்சுள்ளி ஒன்றை எடுத்து நிலத்தில் ஏதோ கிறுக்கிக்கொண்டிருந்தது.மூத்தவனுக்கு வேலை கிடைச்சதுக்குப் பிறகுதான் கலியாணத்தைப் பற்றி யோசிக் கலாம் எண்டு சொல்லிப்போட்டினம்.'அதுக்கு அம்மான் ஆக்கள் என்ன சொல்லிச்சினம் ? ''உனக்கு வேலைகிடைச்சு எனக்குச் சீதனக்காசு சம்பாதிக்கிறதுக்கிடையில் தங்கட மகன் மூண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனாப் போயிடுவாராம். வசதியில்லாட்டி வேறு இடத்தைப் பார்க்கச்சொல்லிப் போட்டுப் போயிற்றினம். ' அவள் குரல் அதற்கு மேல் பேச முடியாமல் தழுதழுத்தது.இவன் நெஞ்சுக்குழியில் ஏதோ சிக்கிக் கொண்டது. மூச்சு முட்டிக்கொண்டு வருவது போன்ற தவிப்பு. பக்கத்திலிருந்த செம்பிலிருந்து நீரை மடமடவெனக் குடித்துவிட்டு விறுக்கென்று எழுந்து விட்டான்.அதற்கு மேல் ஒரு பிடி சோறும் தொண்டைக்குள் மறுத்துவிட்டது. செம்பையும் தண்ணீரையும், எடுத்துக்கொண்டு கழுவு வதற்காக வெளியே வந்தான். சில கணங்கள் மெளனத்தால் கரைந்தன.'தங்கச்சி சாப்பிட்டிற்றியா.... ''ஓம் .... ''பொய் சொல்லாத.... ''ஓம் அண்ணா, சோறு தண்ணியுக்குள்ள போட்டு பினாட்டோட குடிச்சனாங்க. ''அம்மா சாப்பிட்டாவா. ''ஓம்.... ''இவன் தம்பி எங்க ? படுக்கையில் காணோம். நாளைக்கு சோதனையில்ல தொடங்குது. ''ஓம் அண்ண, அவன் பள்ளிக்கூடத்தால பின்னேரம் வந்தான். நாளைக்கு ஆரோ மந்திாி மார் கொழும்பில் இருந்து புதுசாக்கட்டின கட்டிடத்தைத் திறக்க வருவினாமாம் எண்டு சொல்லிக்கொண்டு நின்றவன், பிறகு ஆரோ பெடியளோட சைக்கிளில கூடிக்கொண்டு போறான். மத்தியானமும் சாப்பிட வரயில்ல. 'தம்பியின் போக்கும் இவனுக்குப் பிடிபட வில்லை. எதற்கு எடுத்தாலும் நியாயம் பேசு வான். ஏதேதோ கூட்டங்களுக்கெல்லாம் போய் வருவதாக ஊாில் உள்ள பலர் இவனிடம் கூறியிருக்கின்றனர். படிப்பிலும் முன்பு போல் அக்கறையில்லை. வீட்டிலும் அதிகம் தங்கு வதில்லை.இவன் மனதில் பெரும் குழப்பம். நம்பிக்கைகள் தீர்ந்துபோன ஆற்றாமையினால் மனதை அழுத்திக்கொண்டிருந்த துயரங்கள் தூக்கத்தைத் துரத்தி அடித்தன.அறையைத் திறந்துகொண்டு உள்ளே போய்விட்டான்.அன்று பெளர்ணமி கழிந்து மூன்றாம் நாள். நிலவு அப்பொழுதுதான் காலித்துக் கொண்டு வந்தது. இதமாக வீசிக்கொண்டிருந்த சீதளக் காற்றின் சிலுசிலுப்பில் கிணற்றடிப் பக்கம் நிற்கும் நெல்லி மரத்திலிருந்து இலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன.எங்கேயோ வீட்டிலிருந்து யாரோ ஒருவன் உச்ச சுதியில் நாட்டுக்கூத்துப் பாட்டைப் பாடுகிறான். தகரப்பேணி மிருதங்கமாக முழங்குகிறது.இரண்டாவது சினிமாக் காட்சி பார்த்து விட்டு வீதியால் செல்வோாின் ஆரவாரங்கள், விமர்சனங்கள். அதிர் வெடிச் சிாிப்புக்கள். அவையும் அடங்கின.படுக்கையைத் தட்டிப் போட்டு அலுப்புடன் சாய்ந்துகொண்டு சில கணங்கள் தூங்குவதற்கான போராட்டம். படலை திறக்கும் சத்தம் கேட்டது. இவனுடைய தம்பிதான் வியர்த்து விறுவிறுக்க வந்து கொண்டிருந்தான். அவனுடைய கைகளில் சுருட்டப்படட போஸ்டர்கள். தகரப் பேணி, பிறஸ்....காகிதச் சுருள்களை அவசரமாக மூலையில் எறிந்து விட்டு கிணற்றடிப்பக்கம் சென்று நீரைவார்த்து கைகளை அழுத்தி உழக்கி கழுவிக்கொண்டிருந்தான்.கைகளில் இரத்த நிறத்தில் சாயம் நீருடன் கழுவுண்டு நிலத்தில் மண்ணுடன் கலந்து செந்நிறமாகி....அவன் படுக்கையிலிருந்து விறுக்கென்று எழுந்துபோய் காகிதச் சுருள்களை எடுத்து விாித்து ஒவ்வொன்றாக விளக்கு வெளிச்சத்தில் படித்துப்படித்துப் பார்த்தான்.'முதலாளித்துவக்கல்வி முறை முற்றாக ஒழிய வேண்டும். ''வெற்றுக்காகிதங்கள் வேலை தருமா ? ''தரப்படுத்துதல், இன ஒடுக்குதல். 'அவன் மனம் அந்த வெள்ளைத் தாள்களில் சிவப்பு எழுத்தில் பளிச்செனத்தொிந்த வாக்கியங்களின் அர்த்தங்களை முதல் முறையாக பிாியத்துடன் நினைத்துப் பார்க்கின்றது.இவன் சுமந்த வெற்றுக்காகிதங்கள், வீணான நாட்கள், 'சின்னத்தனமான ' அரசியல்வாதிகளின் பின்னே விவஸ்தை கெட்டு அலைந்துதிாிந்த அந்த நாட்கள். கசப்பான மாத்திரையை விழுங்கிக்கொண்டவன் போல் முகத்தைச் சுளித்துக் கொண்டான்.இந்த சமூகத்தை, வாழ்க்கையை, இந்தத் தேசத்தை அவனுக்கு முன்பே பூிந்துகொண்டுவிட்ட இவன் தம்பி இவனுக்கு இன்னும் புதிரானவனா....!தம்பி கிணற்றடியிலிருந்து கை கால்களைத் துடைத்துக் கொண்டே நிமிர்ந்து எழுந்தான். இவன் காகிதக் கட்டுக்களுடன் நின்று அவனை உற்றுப் பார்ப்பதை அவதானித்து விட்டவனாய் கொல்லைப்புறமாக மெதுவாக நகா;ந்தான்.முற்றத்தில் தந்தையின் மரக்கோல், சவள் பலகை, பறி.... நீர் கோலும் பட்டை....தங்கூசிப் பெட்டி.'இந்த ஆவணிக்கு தங்கச்சியின் கல்யாணத்தை எப்படியாவது முடிச்சுப் போடவேணும் '.அவன் அந்த நினைப்பிலிருந்து விடுபடவில்லை. ஒரு கணப்பொறிதான். தெரு நாய்கள் பலத்த சத்தத்துடன் குரைத்தன. அடங்கிப் போயிருந்த வெளிப்புற ஓசைகள், சனங்களின் விழிப்பும், நடமாட்டமும், ஒடுங்கிய குரல்களும் இவனைத் திடுக்கிட வைத்தன....தெற்குத் தெருவால் உறுமிக் கொண்டு வந்த ஜீப் ஒன்று படலைக்கு முன்னே 'சடின் பிறேக் 'குடன் நின்றது. ஜீப்பிலிருந்து 'தாம்தீம் ' என்று பூட்ஸ் கால்கள் நிலத்தில் குதித்தன. படலை திடாரெனத் திறந்தது.இரண்டு காக்கிச் சட்டைகள் முன்னே பாய்ந்து இவனைப் போஸ்டர்களுடன் இறுகப் பற்றிப்பிடித்துக் கொண்டன. பிடாியில் ஒருத்தனின் அ;டி ஓங்கி இறங்கியது. இரும்புக்குண்டால் அடித்தது போல். இன்னொருவனின் சப்பாத்துக்கால் சினத்துடன் முகத்தில் பதிந்தது. தாடையிலும், மூக்கிலும் வெடிப்பு. இரத்தம் கசிந்தது, நிலத்தில் முத்தமிட்டு எழுந்த அவன் முகத்தில் இரத்தத்துடன் அந்த மண்ணும் அப்பிக்கொண்டது.தரதரவென இழுத்துக் கொண்டு போய் ஜீப்பில் இவனை எறிந்தார்கள். உள்ளே இருந்தவர்களின் பூட்ஸ் கால்களுக் கிடையில் முகம் கவிழ்ந்து வீழ்ந்தான். 'போஸ்டர் ஒட்டுறது ? வடுவா றாஸ்கல்! செம்மையாகச் சாத்தினால் தான் திருந்துவீங்கள் '.தமிழ்க் குரல் உள்ளே இருந்து ஒலித்தது. இவன் மெல்ல எழுந்து 'அம்மா.... ' என முனகிக்கொண்டே இருக்கையில் அமர முயற்சித்தான். ஜீப் வண்டி வேகத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. தூரத்தில் வீட்டோாின் அவலக்குரல்கள் கேட்டன. இப்போது நன்றாக உள்ளே இருந்தவர்களைப் பார்க்க முடிந்தது. சில முகங்கள் வீதிகளில் கண்டவை, உதட்டிலும், தாடையிலும் வழிந்துகொண்டிருந்த இரத்தத்தைக் கையால் அழுத்தித் துடைத்தான். இப்போது வீதியை நன்றாகப் பார்க்க முடிந்தது. நிலவு வெளிச்சத்தில் மதில் சுவர்களில் சிவப்பு மையினால் எழுதப்பட்ட சுலோகங்கள் பளிச்செனத் தொிந்தன. போஸ்டர்களும் தொிந்தன.இவன் தம்பியை நினைத்துக்கொண்டான். அந்த வேதனைக்குள்ளும் கூடவே சிாிப்பு வந்தது.(முற்றும்)
Wednesday, April 26, 2006
உன்னில் உறைந்து போனேன் நாவாந்துறைடானியல்ஜீவா -
ஊசிக் குளிர்
வந்தென்னை
உரசித் தாக்க
உறை நிலைப் படலமாய்
நீ எந்தன்
நெஞ்சில்..
வாழ்வு
வறுமையின்
கரு முகிலாய்
உன் திருவுருவம்
மனத்திரையில்
தோன்றும் வேளை...
வெண்ணிலவாய் மாறும்
இடுப்புடைய
இடர்வந்து
நொகுமெந்தன்
மெய்யில்
என் நிழல் பார்க்க
எனக்கேது நேரம்....
இன்னும்
எனக்குள்
உன் வாசனை...
நீயும் நானும்
வெயில் சாய
வீதியில் நடந்தோம்.
கவிதையில்
பகிடி பண்ண
காற்றோடு உன் சிரிப்புதிர
எச்சி முறிகள்
என் முகத்திற்கு
சொந்தமாகும....
குளிர் காற்றும்
கொழுத்தும் வெயிலும்
கவி சொல்லும்
கனத்த மழையும்
நம் மகிழ்விற்காய்
வசப்படுத்தினோம்
வெள்ளம் வர முன்
வள்ளம் கரை சேரும்;
வீடு வந்ததும்
உன் தெருவுக்கு
ஓடி வருவேன்.
காற்றில்
கடிப்புதற
சாதாளையோடு
சுங்கான் மீன் கிடந்து
சுள்ளென்று குத்த
உன் புன்னகையை
ஒரு கணம் நினைத்தால்
விண்ணென்ற நோவெல்லாம்
விரல்களிருந்து
விடுதலையாகும்
அன்றொரு நாள்
பின்னிரவும்
பேசாமல்
புலர்ந்துபோனது.
உன் வரவிற்காக
என் உயிர்த்தீ
உருக்குலைந்து
காத்துக்கிடந்தது.
தொடும் தூரம்
நின்ற நீ
இன்று
நெடும் தூரம்
சென்று விட்டாய்
நீ நினைத்தாலே
உன் வேலிச்சிறகு
விாிந்து கொடுக்க
காதல் உட்புகுந்து
உள் சதைவரை பாயும்
நானோ
ஒரு மழையின்
வருகைக்காக
வெண் பனித் தூறலில்
காத்துக்கிடக்கிறேன்
ஆயினும்
உன் உதடு தந்த
ஈரத்தை
எப்படி உலர வைக்கமுடியும்.
Monday, April 24, 2006
பனிநிலா நாவாந்துறைடானியல்ஜீவா
போன வருசம் இதே நாளில் தான் கலா கனடா வந்ததாக அவளுக்கு நினைவு. கலா ஏதோ கப்பல் கவுண்டது போல் ஆழ்ந்த சிந்தனையில் இருந்தாள். மனமெல்லாம் புண்னாய் வேதனை கொத்திக் கிழித்தது. சோபாவில் இருந்து தொலைக்காட்சியில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த கலா நாடகம் முடிந்தது கூட தெரியாமல் முன் விறாந்தையின் பக்கமாக உள்ள கண்ணாடியினுடே வெளியே கண்வெட்டாது பார்த்துக் கொண்டிருந்தாள்.
வானம் மூடு பனியால் போர்த்திக் கிடந்தது. வெண் பனித்திவலைகள் உதிர்ந்து கொண்டிருந்தன. அங்கும் இங்குமாய் மனிதர்களின் நடமாட்டம். நிலவு போன்ற மலர் முகத்தில் எப்படி கருமேகம் குடிகொண்டது ?
அவள் எப்படி ஒரு மனநிலையில் இருக்க முடியும் ?
கணவன் வெளியில் போய் விட்டார். கலாவின் மாமன் முன்னறையில் தூங்கிக் கொண்டிருக்கிறார். மாமாவைப் பற்றிய கவலைதான் கலாவுக்கு அதிகம். போன வருடம் இதே நாள் தான் இரவு பதினொருமணி அளவில் ரொரண்டோ விமான நிலையத்தில் வந்திறங்கினதிலிருந்து அவள் மனதை ஓர் ஆயிரம் நினைவுகள் அரித்துக்கொணகின்றன.
சொர்க்க பூமி என்று சுகம் தேடி வந்தவளா ? இல்லை சொந்தம் விடுபட்டுப் போகக் கூடாது என்பதற்காக வந்தவளா ?அல்லது இந்த நிலைக்கு அப்படி அவள் மாற்றப்பட்டாளா ?
விழி நீரைத் துடைத்தாள். எல்லாமே இழந்ததாக அவள் நினைக்கவில்லை. வாய்விட்டு அழுவதற்குக் கூட நாதி அற்ற நாடாய்ப் போய்விட்டதே என்பதை நினைக்கும் போதே அவள் மனதை கவலை நிறைக்கின்றது.
ஒரு வருடத்திற்கு முன் ஒரு நாள். . . .
“கலோ நான் கனடாவில் இருந்து கலாவின்ர மாமி கதைக்கிறன். ஒருக்காள் என்ர மருமோள் கலாவோட கதைக்கலாமா ?”
மறுமுனையில் இருந்து....
“ஐயோ அக்கா! அவ இவ்வளவு நேரம் நீங்க எடுப்பீங்க எண்டு இருந்திட்டு இப்ப தான் போறாங்க.
வேணுமெண்டா இன்னொரு அரை மணித்தியாலத்தால எடுப்பீங்கெண்டால் நான் அவவ கூப்பிட்டு விடுறன்.”
“ஓம் பிள்ள பிரச்சினை இல்ல நான் அரை மணித்தியாலம் கழிச்சு எடுக்கிறன். என்று சொல்லிக் கொண்டு ரிசீவரை வைத்தாள்.”
“அம்மா என்னவாமென ?” சுரேன் கேட்டான்.
“அவ இருந்துட்டு போய்ட்டாவாம். அவ்வளவு பொறுமையில்லாதவள் என்ணெண்டு தான் இங்க வந்து சமாளிக்கப் போறாளோ தெரியேல்ல ? உம். . . உம் என்ன செய்யிறது என்ர அண்ணையின்ர மகளாப் போய்ற்று எண்டு தான் சின்ன வயசிலேயே அவருக்கு சொல்லி வைச்சனான். இப்ப என்ன கேட்டுக்கொண்டிருக்கிறார். சரி போனா போகுதெண்டு அண்ணன்ர மகள் தானே எண்டு நினைச்சு உனக்கு கட்டிக் கொடுத்து விடலாமென்டால் கொஞ்ச கூட பொறுமை யில்லாதவளாய் இருக்கிறாளே இனி அரை மணித்தியாலயம் கழிச்சு எடுக்க வேண்டும். என்ன செய்யிறது என்ர தலை விதி.”
சுரேன் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு நின்றான். மாணிக்கத்தின் கண்கள் அகள விரிந்தன.
“அம்மா பிள்ளையாச்சே கேட்கத் தானே வேணும்”எண்டு.மாணிக்கம் முனுமுனுத்தான்.
கோபத்தை உள்வாங்கிய முகத்தோடு மாணிக்கம் மனைவியையும் சுரேனையும் ஒரு பார்வை பார்த்து விட்டு;
“எடி ராசாத்தி நீ சொன்ன நேரத்திற்கு அந்தப் பிள்ளை வந்துதானே நிண்டது. நீ வீட்ட நேரத்தோட வராதது உன்ர பிழைதானே ? அதை விட்டுட்டுஅந்தப்பிள்ளையபேசிக்கொண்டிருக்கிறாய”
என்றுமாணிக்கம் சொன்னார்.
அடர்த்தியான மெளனம்.... உள்ளுக்குள் மனப்புழுக்கம் பிசுபிசுத்தது. உப்புச் சப்பில்லாத வாழ்வில் உண்டு உறங்கியதை விட மிஞ்சி இருப்பது மூன்று பிள்ளைகள் தான் மாணிக்கத்திற்கு. மூத்தவன் சுரேன். இளையவன் ரமேஷ். கடைக்குட்டி கவிதா. எந்த வகையிலும் மாணிக்கத்தை மதிக்காத மனைவி இராசாத்தியுடன் இணைந்து வாழ்ந்ததில் கிடைத்த சுகம் இந்த மூன்று பிள்ளைகளோடும் சிரித்து வாழ்வதில் தான்.
கோபம் கலந்த பார்வையோடு இராசாத்தி....
“நீ சும்மா இரும். உனக்கு என்ன தெரியும் தமிழ்க் கடையில மீன் வெட்டப் போறதும் வந்து தூங்கிறதும் தானே உன்ர வேலை. வீட்டில என்ன நடக்குது ஏது நடக்குது என்டு உனக்குத் தெரியப் போகுதா... ?
“ஏன்டி நீ தானே எல்லாத்தையும் தலையில தூக்கி வைத்துக் கொண்டு இருக்கிறாய். என்னெட்ட காசு வைத்திருக்க விடுறியா ? எல்லாப் பொறுப்பையும் நீ தான் என்று எடுத்துக் கொண்டிட்டாய். பிறகென்ன கதைக்கிற. மீன் கடைக்கு வேலைக்குப் போற சம்பளம் மாதம் முடிய உன்ர கையிலேயே கொடுக்க வேண்டும். வெல்வெயார் காசு உன்ர கையில் தான் இருக்க வேண்டும். அதுவும் போதாமல் அவன் சுரேனின் சம்பளக் காசையும் வாங்கி வைக்கிறாய் எப்ப பார்த்தாலும் பஞ்சம் கொட்டிக் கொண்டு தான் இருக்கிறாய். திரும்ப என்னண்டு வீட்டு விசயத்தில் நான் தலை போடுறது நீ விட்டாத் தானே.
“இந்தாளோடு கதைச்சாள் நம்ம வாய்தான் உழையும். பேசாமல் இருந்திட்டால் பிரச்சினை இல்லை” எண்டு முனுமுனுத்தபடி இராசாத்தி சோபாவில் உட்கார்ந்தாள்.
“சுரேன்! ஒரு கோப்பி ஒண்டு போடு மோன” என்று சுரேனைப் பார்த்து இராசாத்தி சொன்னாள். சுரேன் குசினிப் பக்கமாகப் போனாள்.
“ஏன்டி இராசாத்தி நீ போட்டா என்ன குறைஞ்சா போய்யிடுவ..”. கொஞ்சம் அதட்டல் கலந்த தொனியில் மாணிக்கம் கேட்டார்.
“நான் வெளியில போற்று வந்த களையில இருக்கிறன்....”
“அப்ப சுரேனும் தானே உன்னோட வெளியில போய்ட்டு வந்தவன். அவன் தானே காரும் ஓடி வந்தவன். இதில இருக்கிற வெல்வெயார் ஒப்பீசுக்கு போய்ட்டு வந்தது உனக்கு களைப்பாய்ப் போய்ற்றுதோ.”
“பேசாமல் இரு.விசர்க் கதை கதைககாமல்”. என்று இராசாத்தி வெட்டொண்டு துண்டாய் வார்த்தைகளை போட்டாள்.
“அம்மா இந்தான கோப்பி” என்று சொல்லிக் கொண்டு இராசாத்திக்கு முன்னாள் நின்றான் சுரேன்.
“அம்மாவுக் ஏற்ற பிள்ளை” என்று ஒரு நளினம் கலந்த நக்கலாக மாணிக்கம் சொன்னார்.
மாணிக்கம் தலைக்கு மேலாக இருக்கின்ற சுவர்க் கடிகாரத்தை பார்த்துக் கொண்டு;
“எடிய இராசாத்தி அரை மணித்தியாலம் ஆகுதே எடென்ரி” என்றார்.
கதிரையில் இருந்த இராசாத்தி தொலைபேசிக்குப் பக்கமாய் போய் அதைக் கையில் எடுத்து நம்பரை அழுத்திளாள்.
“கலோ. . . நான் கனடாவில் இருந்து இராசாத்தி கதைக்கிறன். கலா வந்திட்டாங்களா ?”
மறுமுனையில் இருந்து....
“ஓம் வந்திட்டாங்க அவங்கிட்ட குடுக்குறன்க கதையுங்க.”
இராசாத்திக்குள் சூடு ஏறியது. எதையாவது மனசில் வைத்திருப்பது இராசாத்திக்குப் பழக்கம் இல்லை. சட்டென்று வரும் கோபத்தில் தன் நிதானத்தை இழந்து விடுவாள். பின் எப்போதும் தான் கோபப்பட்டதற்கான காரணத்தை உணர்ந்தாலும் அவள் அது பற்றி அக்கறைப் படுவதில்லை.
“யாரு கலாவா கதைக்கிறது.... ?”
வார்த்தை தீயாய்ப் பாய்ந்தது.
“நான் உன்ர மாமி இராசாத்தி கதைக்கிறன். எப்படி புள்ள சுகமாய் இருக்கிறியா ?” வார்த்தையை தேனாகக் கொடுத்தாள். எப்போதுமே அப்படித்தான் அவள் வார்த்தையை போடுவாள். இது இராசாத்தியின் கதையின் தந்திரம்.
“ஓமுங்கோ நீங்க எப்படி இருக்கிறியள் மாமி.. ? மாமா மச்சான் மச்சாள் எப்படி இருக்கினம் ?”
“ஓம் சுகமாய் இருக்கினம...புள்ள நான் முதல்ல எடுத்தனான். நீ வந்துட்டுப் போனதாக சொன்னவைய. கொஞ்சம் பொறுத்திருக்கக் கூடாதா ?” சூடேறியது வார்த்தையில்.
“மாமி நான் கனநேரம் காத்திருந்தனான். வீட்டுல சமைக்கிற நேரமாய்ச்சுதெண்டுதான்போனனான்.அம்மாவுக்குமுன்னமதிாி
ஓடியாடி வேலை செய்ய முடியாது தானே.கண்காணத தேசத்தில் போய் இருக்கப் போறாயே என்று நினைக்கத்தான் கவலையாய் இருக்கு எண்டு சொல்லிச் சொல்லி அழுவா.அவள் தங்கச்சியும் படிப்புப் படிப்பு எண்டு ஒரேயடியாத் திாியிறாள். நான் தானே வீட்டுல சமைக்க வேணும். அப்பாவுக்கு வேற அல்சர் இருக்கிறதாலா நேரத்திற்கு சமைத்துக் கொடுக்க வேண்டும். அப்பா தொழிலுக்குப் போய்ட்டு வரும்போது கிடைக்கின்ற மீன்சாதியில் சொஞ்சத்தை கொண்டு வருவார். இறால், ஏதேனும் மீன் பெரிதாகக் கிடைச்சுதெண்டால் குடாவிற்கு கொண்டு போய் விற்றுவிடுவார். சில வேளையில் குடாவிற்கு போகாமல் கிடைக்கிற மீன் சாதியை வீட்ட கொண்டு வருவார். நேரத்திற்கு சமைக்காவிட்டால் மீன் சிலநேரம் பழுதாய்ப் போய் விடும். அரிசிக்கு காசு இல்லையெண்டால் கிடக்கிற அரிசியைப் போட்டு புளிக் கஞ்சி குடிப்பம். இண்டைக்கு மீன் அப்பா கொண்டு வந்தவர். மீன் பழுதாய்ப் போய்விடும் எண்டதற்காகத் தான் காத்திருந்து விட்டு போய்டேன். மன்னிச்சுக் கொள்ளுங்க மாமி”
அவள் பேச்சில் இனிமை இருந்தாலும் வீட்டு வறுமை அப்படியே கொப்பளித்துக் கொண்டு வந்தது.
“சாப்புட்டாச்சா ? என்ன புள்ள இண்டைக்குச் சமையல் ?”
“புளிக் கஞ்சி தான் இண்டைக்கு காய்ச்சினது. அடுப்பில் இருந்து இறக்கிக் கொண்டிருக்கேக்க தான் இந்த வீட்டுக்கார புள்ள வந்து ரெலிபோன் வந்திருக்குது எண்டு சொன்னது. அதால குடிக்காமல் ஓடி வந்திட்டன்.”
“சரி புள்ள நான் சொன்னதெல்லாம் நினைவிருக்குதா ?”
“என்ன மாமி ?”
“இங்கிலிஷ் கிளாசுக்கும், கொம்பூட்டர் கிளாசுக்கும் போகச் சொன்னேனே மறந்திட்டாயா ?”
“நினைவிருக்குது மாமி....ஆனா படிக்கப் போறத்துக்கு காசு வேணுமே ? அன்றாடம் சாப்பாட்டுக்கே அப்பா நாயாய் அலைகிறார். அதுக்குள்ள படிப்புத் தேவை தானா ? ஓ எல் வரை அப்பா எப்படியோ படிப்பிச்சு விட்டார். அதுவே அவருக்கு சாகும் வரை நன்றியோடு நான் இருக்க வேண்டும்....”
அவ்வளவும் போதும் இராசாத்திக்கு மூக்குமுட்ட கோபம் வந்தது.
“சோத்துக்கு வழியில்லை எண்டாலும் கதையில உசத்தியாய் இருப்பீங்க உங்கட அப்பாவைப் போல...
சுரேணெட்டக் கொடுக்கிறன் கதை” எண்டு சுரேனிடம் ரிசிவரை இராசாத்தி கொடுத்தாள்.
வார்த்தைகள் தேளாய் குத்தியது கலாவுக்கு. சொல்லம்புகளால் சுக்குனுறாய்ப் போனாள். மனதில் சொற்கள் கீறிய வலி சொல்லெனாத் துயரமாய் ஆழ் மனதில் தேங்கியது.
“கலாவா எப்படி இருக்கிறாய் ?”
“அத்தான் நல்லா இருக்கிறன். நீங்க எப்படி இருக்கிறியள் ?”சந்தோஷத்தில் தவழ்ந்து வந்தது கலாவின் குரல்.
“நான் சுகமாய் இருக்கிறன்.”
“ஏன் அம்மா சூடா இருக்கிறா ?”
“அவங்க அப்படித்தான். அதைப் பெரிது படுத்தாதே.”
“உங்கட அப்பா எப்படி இருக்கிறார் ?”
“அப்பா பக்கத்தில் தான் இருக்கிறார். அவருக்கென்ன குறை.”
“கதைச்சு முடிவில அப்பாக் கிட்டையும் குடுங்க. மாமாவோடு கதைச்சு கனகாலம்.”
“சரியுங்க.”
“அத்தான் கடிதம் போட்டேன் கிடைச்சுதாங்க ?”
“ஓமுங்க கிடைச்சது. சின்ன வயதில் ஓடி விளையாடியது போலவே இப்பவும் மனம் மாறாமல் இருக்கிறாய். கடிதத்தை வாசிக்கும் போது சின்ன வயதில் சிரித்து உன் கூட பேசித்திரிந்தது தான் நினைவு வருகிகுது. எப்படியும் விசா இந்த மாதத்திற்குள் உனக்கு கிடைத்து விடும். அப்புறம் நேரில கதைப்பம் தானே.
“எத்தனை காலம் கடந்தும் உங்கள் அன்பில் மாற்றம் இல்லாமல் இருக்குது.அத்தான் என் அன்பு எப்போதும் மாறாது. காதல் என்றும் உயிரோடு வாழும். நான் உங்களில் இருந்து விலகி இருந்தாலும் உங்கள் வார்த்தைகள் சிறு வயதில் குறும்புச் செய்கைகள் எல்லாம் என் அடிமனதில் பதிவாகி பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன். எப்போதும் உங்க கூடவே வாழ்வதாக என் நினைவெல்லாம் இருக்கும்;” கலா கதைத்துக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்டு....
“பதில் கடிதம் போடுறேன்.வேறு என்ன ரெலிபோனுக்கு காசு போகுது என்று அம்மா பேசப்போகுது. ரெலிபோனை வைக்கப்போகிறன் கலா.
“அத்தான் மாமா கிட்ட ஒருக்கா கொடுங்களன்”.
“அப்பா உங்களோடு கலா கதைக்கப்போகுதாம் கலாம்”
இராசாத்தியின் விசம் கலந்த பார்வை வீச்சுக்கள் சுரேன் மேல் விழுந்தது.
“பெல் கனடாவிற்கு ரெலிபோன் பில் ஏறப்போகுது என்று சொல்லிப்போட்டு வையடா சுரேன்.” சுரேனுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழி பிதிங்கியபடி நின்றான்.
“என்ன அத்தான் சத்தத்த காணேல ?” கலா கேட்டாள்.
“கலா....ரெலிபோன் பில் கூடிப்போச்சு ரெலிபோனை வைக்கிறேன்”என்றுசொல்லிக்கொண்டு தொலைபேசியை வைத்தான்.
ஒரு வருடத்தின் முன் ஒரு நாள் நடந்த சம்பவத்தை வைத்தே மாமியின் குணத்தை இடைபோட்டு விட்டாள் கலா.மாமி எந்தளவிற்கு மாமாவை வைத்திருக்கிறார் என்பதையும் சுரேன் எப்படி தலையாட்டிப் பொம்மையாக இருப்பதையும் உணர்ந்து கொண்டாள். ஆயினும் சுரேனின் மேல் சிறு வயது முதல் கொண்டு வளர்ந்த புனிதமான உறவு மாறாத நிலையிலேயே கலா. அதேபோல் எந்த நிலையிலும் சுரேனும் அதே நிலையிலேயே கவனிப்பு, எண்ணம், சிந்தனை, செய்ற்பாடுகள் எல்லாம் அமைந்திருந்தது. மாமியின் அழுத்தமான தாய் பிள்ளை உறவுக்குள் சிக்கித் தினறுவதை அவள் மனதளவில் உணர்ந்து கொண்டாலும் சுரேனோடு எப்போது எந்த நிலையில் கதைப்பது என்பதை அவளால் உணர்ந்து கொள்ள முடியாத நிலையிலும் அதற்கான சூழலை எதிர்பார்த்த படி காத்திருந்தாள்.
வெளியில் வெண்பனித் தூவல் சற்றுக் குறைந்து விட்டது. பிற்பகல் ஐந்து மணியைத் தாண்டுவதற்கு முன் இருண்டு விட்டது. கலா கண்ணாடியின் ஊடே பார்த்துக்கொண்டிருந்த பார்வை சற்று விலகி சுய நினைவுக்கு வந்தாள். கொஞ்சம் வயிறு பசிப்பது போல் உணர்ந்து கொண்டாள். ஆயினும் அவள் சாப்பிடுவதற்குரிய மனம் அவளிடம் இல்லை. தேத்தண்ணி போட்டுக் குடிக்கலாம் என்ற எண்ணத்தோடு குசினிக்குள் போனாள். சற்று நேரத்துக்குள்ளேயே அவள் தேத்தண்ணியை போட்டுவிட்டாள். அப்ப தான் அவள் மனதுக்குள் ஒரு நினைவு தோன்றியது. மாமா முன்னறையில் தூங்குவது நினைவுக்கு வந்தது. மாமாவிற்கும் ஒரு தேத்தண்ணியை போட்டுக் கொண்டு கதவைத் தட்டினாள்.
மாணிக்கம் எழுந்து வந்து கதவைத் திறந்தார்.
“என்ன பிள்ள ?”
“தேத்தண்ணி மாமா..”
கையை நீட்டி தேத்தண்ணியை வாங்கிக் கொண்டு மாணிக்கம் வெளியே வந்தார்.கதிரையில் உட்காந்து கொண்டு முகத்தை லேசாக துடைத்தார்.
“என்னபுள்ள ஒருதரையும்காணல... ?”
“மாமியும் இவரும் சொப்பிங் செய்யப்போய்ற்றினம்.... மச்சானும்,மச்சாளும் கடையில படக்கொப்பி கொடுக்கப்போய்ற்றினம்....”
“அப்ப நீ! ஏன் புள்ள அவனோட போய்யிருகக்கலாம்தானே.... ?”
“எனக்கும் விருப்பம்தான்....ஆனால்....!”
“என்ன புள்ள ஆனா எண்டு சொல்ற....பூாியக்கூடியதாக சொல்லன்புள்ள.... ?”
“உங்களுக்குத் தொியும்தானே மாமா.... மாமியடகுணத்தை....மாமி இவரோட அவ்வளவு கதைக்க என்ன விடமாட்டாங்க இவரை நான் கெடுத்துப்போட்டிருவன் எண்டுதான்.... இவர்கூட என்னோடு சாியாய் கதைப்பதில்லை.”
“எனக்குத்தொியும் புள்ள நான் சொல்றன் என்று குறை நினைக்காதே.அவன்கிட்ட உங்கட மனத்திலுள்ள
பிரச்சினையைமனம்திறந்துகதையுங்கஅவன்ஏற்றுக்கொள்ளுவான்.ஏனென்றல் அவனைப்பற்றி எனக்கு நல்லாய்த்தொியும்.அவன்ஒரு நல்ல பொடியன் இந்த நாட்டிலே இந்தப் பழக்க வழக்கங்களோடு பொடியலை காண்பது அாிது. ஆனால் அவனை என்ர மனிசிதானே ஆட்டிப்படைக்கிறாள்.நீ சாியென்றாள் அவனை உன் வழிக்கு கொண்டுவரமுடியும்.”
கலா கேட்டுக்கொண்டே மெளனித்திருந்தாள்.
வெள்ளையடித்த கல்லறைகள் நாவாந்துறைடானியல்ஜீவா
என் அண்ணன் மகள் நீலாவுக்கு என் மீது விருப்பம் என்று சொல்வதிலும் பார்க்க என் சயிக்கிளில் ஏறித் தி£¤வதிலேயே விருப்பம் என்று சொல்லலாம் .அவ்வப் போது அவள் செய்யிற குழப்படியால் என்னிடம் அடியும் வாங்குவாள்.அடி வாங்கினாலும் சுனக்கட்டினவள் போல் என்னையே சுற்றித் தி£¤வாள். எப்படியும் காலையில் அவள் படிக்கும் பாடசாலைக்கு நான் எட்டு மணிக்கு முதல் ஏற்றிக் கொண்டு எட்டரைக்கு பள்ளிக்கூட வாசலில் விடவேண்டும் .மீண்டும் பதினொரு மணிக்கு அவளைக் கூப்பிடுவதற்காக போக வேண்டும். சயிக்கிளில் நடுபா£¤ல் இருந்து என்னொட வரும் போதே ஏதேனும் என்னுடன் கதைத்துக் கொண்டே வருவாள்.நீலா எப்போதாவது என்னிடம் கேள் வியெழுப்புவாள்.சில கேள்விகளைக் கேட்டபின் அவளின் புத்திக் கூர்மையைக் கண்டு வியந்து போய் விடுவேன்.வீட்டில் இரவில் து£ங்கும் போதும் நான்தான் பக்கத்தில் து£ங்க வேண்டும்.அவள் எனக்குப் பக்கத்தில் து£ங்கும் போது சித்தாப்பா ஒரு கதை சொல்லுங்க என்று கேட்டாள் நான் கதைக்கு பதில் அவளுடைய குறும்புச் செயலை வேறொரு பாத்திரமாக சித்தா¤த்து கதையை விடுவேன3 நான் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவள் கதையின் போக்கை கவனித்துக்கொண்டிருந்து விட்டு இடையிலே சொல்லுவாள்ளூ ” இந்தக் கதை என்னைப் பற்றித்தான்”என்று சொல்லி விடுவாள்.”என்னெண்டு உன்ர கதையெண்டு நீ கண்டு பிடிச்சனி” என்று நீலாவிடம் கேட்டாள் அவள் சொல்லுவாள்: ”சித்தப்பா நீங்கள் கதையைச் சொல்லேக்கில்லையே ஒரு ஊரில ஒரு ராசாவுக்கும் ராணிக்கும் இரண்டு குழந்தைகளாம். ஒரு ஆணும் மற்றது பெண்ணுமாம். ராசாவினுடைய மகள் எந்த நேரமும் அவரட சித்தப்பாவோடுதான் சைக்கிளில்ல திரிவாவாம். எந்த நேரமும் அவங்கட அண்ணாவோட சண்டை பிடிப்பாவாம் என்று நீங்கள் சொல்லேக்கிலேயே எனக்கு விளங்கிடும்.” என்று நீலா சொல்லுவாள்.அவள் காலையில் எழுந்து விட்டாள் என்றால், பாடசாலைக்கு போறதுக்கு து£ய வெள்ளைச் சட்டையை போட்டுக்கொண்டே வீட்டில் நடமாடுவாள். எனக்கு எப்போதும் காலை வெயில் உடம்பில் படும் வரை து£ங்குவதென்றால் பிடிச்ச விசயம். அம்மா விடிகாலையில் து£ங்குவதைக் கண்டால் ”மோன எழும்படா” என்று சொல்லுவா. நான் உடுத்திக் கொண்டு படுத்திருக்கும் சாரத்தால் மேலும் தலைமுட்ட இழுத்து போத்திக் கொண்டு திரும்பிப் படுத்திருவேன். நீலா என்னை எழுப்ப வந்தாள் என்றால் அவளுடைய அரியுண்டம் தாங்க முடியாமல் எழும்பி விடுவேன். எப்பவும் எனக்குப் பக்கத்தில் து£ங்குகிறவள் நேற்றிறவு என்னோடு து£ங்காமல் தங்களுடைய அம்மாவோடு து£ங்கி விட்டாள். நேற்று பகல் அவளை பள்ளிக் கூடத்திற்கு போய் சைகிளில் ஏற்றுவதற்காக காத்துக்கொண்டிருத போது நீலாவிற்கு படிப்பிக்கும் ரீச்சர் எதேச்சையாக என்னைச் சந்திக்க நேர்ந்தபோது நான் அந்த ரீச்சரோடு கதைத்துக் கொண்டு நின்றேன். அந்த நேரத்தில் தான் நீலா பள்ளி முடிந்து என்னைத் தேடி ஓடி வந்தாள். நான் கதைத்துக்கொண்டு நின்றதை என் அண்ணனிடம் சொண்டு மூட்டிக் கொடுத்திட்டாள். அண்ணன் நேற்று சாய்ந்தரமே என்னட்ட இந்த விடயம் பற்றி கேட்கும் போது நீலா சிரித்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடினவள். நான் அடிச்சுப் போட்டிடுவன் என்ற காரணத்தாலோ எனக்குப் பக்கத்தில் து£ங்க வரவில்லை. அதனால் எந்த அரியண்டமும் இல்லாமல் நேரத்தோடு நேற்று து£ங்கி விட்டேன். எப்படி இருந்தாலும் காலையில என்னை எழுப்பி ஆக வேண்டிய கட்டாய நிலை நீலாவிற்கு. நசுக்கிடாமல் பக்கத்தில் வந்து நீலா உக்காந்து கொண்டு ”சித்தப்பா... சித்தப்பா... பள்ளிக் கூடத்திற்கு நேரம் போய்ற்று எழும்புங்கோ....”என்று சொல்லிக் கொண்டு தனது வலது கையால் என்னுடைய உடம்பை அசைத்தாள். து£க்க அசதி விழிகளில் அப்படியே விலகாது இருந்தது. கண்ணைக் கசக்கிக் கொண்டு படுக்கையை விட்டு எழுந்தேன். எழுந்த கையோடு வந்த விசருக்கு அவளுக்கு செவிடுபறிய குடுக்க வேண்டும் போல் இருந்த கோபத்தை அடக்கிக்கொண்டு”ஏன்ரீ உங்கட அப்பாக்கிட்ட அண்டிக் குடுத்தனி..” என்று நான் கேட்க...”சொல்லித்தான் குடுப்பேன்... நீங்க என்ன சைக்கிளில் ஏத்திக்கொண்டு பள்ளிக் கூடத்தில இறக்கேக்கையும் பள்ளிக்கூடம் முடியும்போதும் ஒரு ரீச்சரோ மட்டும் நெடுக நெடுக நீங்கள் கதைக்கிறியள். அந்த ரீச்சர் எனக்கு அடிக்கிற ரீச்சர் என்று தெரியாதோ...? "”உனக்கு அந்த ரீச்சர் அடிக்கிறது என்றால் நான் கதைக்கக் கூடாது என்று உன்ர சட்டமோ...? நேற்றுப் பின்னேரமே உங்கட அப்பா என்னட்ட ரீச்சரோட கதைச்சதைப் பற்றி கேட்டவர்...”. அண்ணன் வேறு அர்த்தத்தோடு கேட்டிருப்பார் என்று நினைத்துக் கொண்டு நீலாவின்ர காதை என்னுடைய கையால் பிடிச்சு திருகினேன். நீலா கத்திக்கொண்டு அண்ணனைத் தேடி ஓடினாள். நான் எழும்பி பல்லைத் தீட்டிய படி குளிக்க கிணத்தடிக்குப் போனேன்.நான் குளிச்சிட்டு வெளிக்கிட்டுக் கொண்டு அறையை விட்டு வரவும் நீலா புத்தகப் பையை கையிலே மாட்டிக் கொண்டு வரவும் சரியாக இருந்தது. நீலா வெளிவாசலில் நில்லு நான் ஒன்றுக்கு இருந்துட்டு சைக்கிளை எடுத்துக் கொண்டு வாறன். என்று சொல்லிக் கொண்டு கிணற்றடிப் பக்கமாக இருக்கும் மலசல கூடத்தை நோக்கிப் போனேன். நீலா வீட்டை விட்டு இறங்கி எனக்காக காத்துக்கொண்டு நின்றாள். அண்ணன் இன்னும் வேலைக்குப் போகவில்லைப் போல. அண்ணனின் சத்தம் அறையில் இருந்து எனக்குக் கேட்டது. ஒன்னுக்கு இருந்து விட்டு சைக்கிளை எடுப்பதற்காக முன் விறாந்தையில் சுவரோடு சாத்தியிருந்த சைக்கிள் பக்கமாக வந்தேன். சைக்கிளின் முன் சில்லைப் பார்த்ததும் ஒரு கணம் இடிந்து போய்ற்றேன். சைக்கிளின் முன் சில்லில் காற்றுப் போய் றிம்மில் நின்றது. வீட்டு வெளிவாசல் அடியில் நின்ற நீலா”சித்தப்பா பள்ளிக்கு நேரம் போற்று கெதியாக வாங்கோ...” என்று என்னைக் கூப்பிட்டாள்.”நில்லடி நீலா நான் வாறன்" என்று சொல்லிக் கொண்டு சைக்கிளை உருட்டிக் கொண்டு வாசல் பக்கமாகப் போனேன். சைக்கிளைப் பார்த்ததும் நீலா விக்கித்துப் போனாள். எனக்கு அவளைப் பார்த்ததும் ஒரு பொய்க் கோபம் வந்தது. அவளை வெருட்டுவதற்காக”காத்தால இரண்டு முறை நீ வந்து என்னைச் சுற்றிச் சுற்றி பார்த்துக் கொண்டு திரியும் போதே நினைச்சிட்டன் நீ சைக்கிளுக்கு ஏதும் செய்து போட்டாய் என்று. இப்ப ஏதோ தெரியாத மாதிரி நடிக்கிற....நீயாடி காற்றுத் திறந்து விட்டனீ?” ஒரு அதட்டலாய் என் வார்த்தை சீறிப்பாய...”என்ர அம்மாவான... என்ர பரலோக மாதவறிய... இல்ல சித்தப்பா எனக்குத் தெரியாது! இப்பத்தான் உங்கட சைக்கிளைப் பாத்தனான். எனக்கென்ன கோபம் உங்களில சித்தப்பா?””என்ன கோபமா ரீச்சரோட கதைக்கிறன் என்று அண்ணன் கிட்ட நேற்று போட்டுக் கொடுத்தியல்ல....””அது ரீச்சரில இருந்த கோபம் சித்தப்பா. இப்ப பள்ளிக்கு நேரம் போய்ற்று வாங்க சித்தப்பா போவம்.”வீட்டுக்குள்ளே இருந்து வெளி வாசலுக்கு ஓடி வந்த அம்மாளூ ”மோன கவனம் ஆமிக்காரன், பொடியல் .... சுறுக்கா வந்திரு மோன...””ஓமன....” அம்மா என்று சொன்னேன்.அம்மா வீட்டுக்குள் போக நீலாவைப் பார்த்துக் கொண்டு ”சரி சரி வா எல்லாத்துக்கும் உன்னைக் கவனிக்கிறன். இப்ப போய் சையிக்கிளுக்கு காத்தடிக்க ஜந்து ரூபா சித்தப்பா தரட்டாம் என்டு சொல்லி உங்கட அப்பாக்கிட்ட வாங்கிற்று வா”. அவள் காதில் விழுத்திய கையோடு வீட்டிற்குள் ஓடினாள்.”துர்ராசாவின்ர கடையில காத்தடிக்க இருபத்தைஞ்சம் தானே வரும் அதுக்கேன் இவன் ஐஞ்சு ரூபா கேட்கிறான்.என்ன புள்ளய கூட்டிக் கொண்டு போறதுக்கு சம்பளமோ...?”நீலா நான் சொல்லி விட்டதை கேட்டிருப்பாள் போல....அண்ணனின் குரல் வெளியில் நின்ற எனக்கு காதில் விழுந்து வெடித்துச் சிதறியது அந்த வார்த்தை.எனக்கு என்ன பதில் சொல்வதென்று தொ¤யாமல் முழிச்சுக் கொண்டு நின்ஆறன3ஒரு கணம்தான் அந்த அச்சம் படர்ந்த உறைநிலை.திடிரென பொறி மின்னலாய்”நீலா....!நோர்வேச் சித்தப்பா காசனுப்பின பிறகு அந்த ஐஞ்சு ரூபாயும் தாறனென்டு சொல்லு....” என்று அண்ணனின் காதில் பலமாக விழக்கூடிய மாதி£¤ கத்தினேன்.”வேல வட்டியில்லாமல் தி£¤யிறான் என்ற உணர்வும் கிடையாது....குடும்பப் பொறுப்பும் கிடையாமல்தெருவில தி£¤யிறா£ன்....ஆனா கோபம் மட்டும் சுறுக்கென்டு மூக்கு முட்ட வந்திரும்...ஐஞ்சு ரூபாய்க் காசுக்கு நோர்வேயில இருக்கிற தம்பியைச் சாட்டுற வடிவப்பார்...இந்தாடி நீலா இந்த ஐஞ்சு ரூபாயையும் அவனட்ட குடடடி..”என் முகத்தில் அறைஞ்ச மாதி£¤ இருந்தது.என்ன செய்யிறது உழைப்பு பிழைப்பு இல்லாமல் வீட்டில ஓசியாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் எல்லாத்தையும் பொறுத்துக் கொண்டுதானே போகவேண்டும் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டேன்.நீலா காசை வாங்கிக் கொண்டு என்னைத் தேடி வெளியில் வந்தாள்.நானும் அவளுமாக சயிக்கிளை உறுட்டிக் கொண்டு கடைக்கு வந்து சேர்ந்தோம்.காத்தை அடிச்சு போட்டு ஐஞ்சு ரூபாயை துர்ராசா அண்ணனிடம் குடுக்க அவர் தன்னட்ட சில்லறை யில்லையென்று சொல்லி திரும்ப வரும் போது காசைத் தரச்சொன்னார்.இனியெங்க அவருக்கு குடுக்கிறது....இருபத்தஞ்சம் லாபம் எண்டு மனசுக்குள் நினைச்சுக் கொண்டு ஐஞ்சு ரூபாயையும் பையில் வைத்துவிட்டுளூநீலாவை சயிக்கிளின் நடுபாறில் குறுக்ககா இருத்தி விட்டு சயிக்கிளை மிதித்தேன்.இப்போ சயிக்கிள் நாலு சந்தியைத் தாண்டி சோனகதெருவால் போய்க் கொண்டிருந்தது.ஐஞ்சு சந்தியால் திரும்பி ”பிளவுஸ்” தேத்தண்ணீக் கடையை தாண்டும் போது வீதியோரத்தில் பொடியல் துவக்கொடு நின்றார்கள். ஓரு கணம் உயிர் உறைந்தது.ஜஞ்சும் கெட்டு அறிவும் கெட்டு விழுந்தவன் போல் உடலின் யாசிப்பு.மழையில் நனைந்த கோழி போல் கூனிக் குறுகி நடுங்கினேன்.”இண்டைக்கு என்ன இளவோ...!ஆற்ற கண்ணில முழிச்சேனோ தொ¤யாது...எல்லாம் துக்கறியாத்தான் கிடக்கு...” நேற்றும் இப்படித்தான் சந்தியில நிண்டு போற வாற பொடியல புடிச்சவங்களெண்டு எங்கட வீட்டில கதைச்சவங்க எப்படித்தான் இருந்தாலும் நீலாவுக்கு நல்ல பயிற்சி ஏற்கனவே கொடுத்திட்ட சந்தோசம் என்ர மனசின் ஒரத்திலிருந்து விழித்துக் கொண்டது.நீலா கெட்டிக்கா£¤ அப்படி யெதும் தட்டுத் தவறி நடந்து விட்டாள் அவள் அழுது குளறி ஊரையே கூட்டி என்னைக் காப்பாற்றி விடுவாள் எண்டு மனதளவில் நினைத்தாலும் நலிந்த நம்பிக்கையோடு சயிக்கிளை மெதுவாக ஓட்டினேன்.என்னவோ தொ¤யல அவங்க என்னக் கண்டு கொள்ள வேயில்ல.மூன்றாம் நாள் உயித்தெழுந்த யேசுவைப் போல் புதுப் பிறப்பெடுத்தேன்.ஒரு பெருமூச்சை விட்டுக் கொண்டு சீனியின்ர கடையைத் தாண்டி கச்சான் கடைச் சந்தியால் இடப்பக்கமாக சயிக்கிளை திருப்பி வைத்தீஸ்வராக் கல்லு£¤ வழியாக நாங்கள் போய்க் கொண்டிருந்தோம்.பொடியலின்ர பயத்தில நீலாவிடம் சொல்ல நினைத்த கா£¤யம் மறந்து போய் நீலாவின் முகத்தை பார்க்க நீலா என்னை திரும்பி பார்த்தாள்.”என்ன சித்தப்பா!இயக்க பொடியல கண்டுட்டு பயந்து போயீட்டேங்களா..?அதுக்குத்தானே உங்கட ஜடியா உடன எனக்கு வந்திருமே....என்ர அப்பாவை விடுங்க....விடுங்க...எண்டு கத்திக் குளறுவேனே...””எனக்கு ஏதும் நடந்தால் ஊரேயே கூப்பிடுவியெண்டு தொ¤யும்தான்.... அதை விடு நீலா அந்த £¦ச்சா¤ன்ர கதைக்கு வாறன்.£¦ச்சா¤ரை எனக்கு எப்பிடி தொ¤யுமெண்டு உனக்கு சொல்லுறன் இதுக்கு புறவாவது வீட்டில வந்து அண்டிக் கொடுக்கக் கூடாது....என்ன...?””ம்...சித்தப்பா....நீங்க இரவில கதை சொல்லுறனென்டு என்னப் பத்தி சொல்ற மாதி£¤யென்ட எனக்குச் சொல்ல வேண்டும்....””இல்லை இது உண்மையாய் நடந்ததை ஒளிவு மறைவில்லாமல் சொல்லுறன்””ஆரு சித்தப்பா...அப்பாவையும் தங்கச்சியையும் இந்தியன் ஆமிக்காரன் சுட்டதென்டு நீங்க என்ன பள்ளிக்கூடம் முடிய உரும்பிராய்க்கு கூட்டிக் கொண்டு போனேங்களே அந்தச் சினேகப் பொடியனைப் பற்றிய கதையாங்க...?இல்ல..இது முல்லைத் தீவைப் பிறப்பிடமாக கொண்ட என்ர சினேகிதப் பொடியன் பற்றிய கதை. அவனும் நானும் ஒ. எல் ஒன்றாக £¦யூசன் சென்ரலில படித்த போது பழக்கமானவன்.நல்ல பொடியன் சோதனை எடுத்து முடிஞ்சாப் பிறகு நான் வீட்டோட இருந்து விட்டேன்.பா¦ட்சை முடிவைப் பார்த்து மேற்கொண்டு ஏதாவது செய்யலாமெண்ட நோக்கத்தோடு. ஆனா இனியன் அப்பவே அவங் கட ஊர்ப்புள்ளய விரும்பித் தி£¤ஞ்சவன்.சோதினை எடுத்து முடிய அந்த பொட்டையை கூட்டிக் கொண்டு ஓடி திரும்ப கிறிஸ்தவ முறைப்படி கோயிலில அடுத்தாருக்கு முன்னாலே வைச்சு சுவாமி கைப்பிடிச்சு விட்டவர். இனியனுக்கு அதுக்கு பிறகு செல்வி, மாறன் என்று இரண்டு குழந்தைகள் பிறந்தது.மீன்பிடித்தொழிலுக்கு போய் வந்த இனியனுக்கு திடீரென வெளிநாட்டிற்கு போக வேண்டும் என்ற ஆசை வந்தது.அதை நான் பிழையென்று நினைக்கெல அவனுடைய நிலையிலுள்ள எல்லா இளைஞர்களுக்கும் வருகின்ற ஆசைதான்.வீட்டிலிருந்த நகைளையும் காணியையும் விற்றும் பணம் பத்தமால் சொந்தக் காரர்களிடம் கடனாய் பணம் வாங்கிக் கொண்டு கனடா போய்ச் சேர்ந்தான். உழைத்து கடனளித்து ஊ£¤ல் வீடும் கட்டிக் கொடுத்தான்.ஆனால் ஆசைப்பட்ட அவன் மனைவி பிள்ளைகளை எடுக்க முடியாத நிலை.அகதிமனு அவனுக்கு நிராகா¤க்கப்பட்டது. அந்த காலகட்டத்தில்தான் இனியனின் அந்தோனி என்ற நண்பன் அவன் குடும்பத்துக்கு உதவி செய்யத் தொடங்கி கடசியில் இனியனின் மனைவிக்கும் அந்தோனிக்கும் நெருக்கமான உறவு எற்ப்பட்டு கல்யாணத்தில் முடிந்தது.அந்தக் குழந்தை இரண்டையும் அன்பில்லாமல் தன்னுடைய வேலைக் காரர்களைப் போல நடத்தி வந்தாள். இந்த சம்பங்களை யெல்லாம் கனடாவிலிருந்து பொறுத்துக் கொண்டிருக்க முடியாமல் வெளிநாட்டு வாழ்கையே வேணாமென்டு ஊர் திரும்பி விட்டான். இனியன் நடந்த சம்பவமெல்லாத்தையும் ஒன்றும் மறைக்காமல் என்னிடம் ஒப்புவித்தான். யு£ரை எனக்கு குற்றம் சொல்வதென்று எனக்கு பு£¤யவில்லை.... ஒருவேளை நீயும் என்னுடைய வயதை ஒத்தவளாக இப்போது இருந்தால் உனக்குள் ஒரளவு விளங்கிக் கொண்டிருப்பாய்.நான் இந்தப் பிரச்சினையை விளங்கிக் கொண்டளவுக்கு உனக்கு சொன்னாலும் நீ கேட்கக்கூடிய பக்குவ நிலையிருப்பதாக எனக்குத் தொ¤யவில்லை.இங்க வந்தவுடன் அவனுடைய மனைவியிடம் பிள்ளைகள் இரண்டையையும் கேட்ட போது அவள் எந்த மறுப்பும் தொ¤விக்காமல் இனியனிடம் கொடுத்து விட்டாள். அவனுடைய இரண்டு பிள்ளைகளையும் கொணடு வந்து நீ படிக்கிற பாடசாலையில சேர்த்து அங்கேயே தங்கவும் ஏற்ப்பாடு செய்துவிட்டான். அவங்கட ஊ££¤லயிருந்து யாழ்ப்பாணம் வந்தால் என்னோடுதான் தி£¤வான்.பிள்ளைகளை பார்க்கப் போகும் போது நானும் அவன் கூடவே உங்கட பள்ளிக்கூடத்தில இருக்கிற கொஸ்டலுக்கு போறனான்.அப்படிப் போய் வருகிற போதுதான் உங்கட £¦ச்சரையும் தொ¤ய வேண்டி வந்தது.எப்ப உங்கட £¦ச்சர் என்னைக் கண்டலும் இனியனின் பிள்ளைகள் பற்றித்தான் கதைப்ப....அதைவிட எந்தக் கதையும் வைத்துக் கொள்வதில்லை.இப்ப விளங்கிற்ற நீலா..?””ஓம்....சித்தப்பா!பாவமென்ன அந்தப் புள்ளயல்....அவங்கட அம்மா அவங்களை பார்க் கிறதில்லையா?””இல்ல நீலா....அவங்கட அம்மா இனியனின் நண்பனைக் கல்யாணம் செய்த பிறகு தன்ர சொந்தப் பிள்ளைகளையை வெறுத்துப் போட்டா....””ஏன் சித்தப்பா...?””தொ¤யல....ஒரு வேளை நான் நினைக்கிறேன் தன்னுடைய இரண்டு பிள்ளைகளை விட அவ ஏதோ இனியனின் நண்பனட்ட கண்டுபிடிச்சிருக்கிற போல....””உம்””என்ன நீலா உம் போடுறாய்.?””இல்ல சித்தப்பா உங்கட நண்பற்ற கதையை கேட்க அழுகைதான் வருகுது...””நீலா உனக்கு அழுகை வருவுதோ என்னவோ எனிமேல் உங்களின்ர £¦ச்சரரோடு கதைக்கிறதை மட்டும் வீட்டில போய் சொண்டுரஞ்சக் கூடாது... என்ன?””ஓம் சித்தப்பா எனிமேல் அந்தக் கதையை கதைக்கவே மாட்டேன்”.என்றாள் நீலாஎன்னுடைய சயிக்கிள் இப்போது ஆஸ்ப்பத்தி£¤ வீதி வழியல் சென்று இடப்பக்கமாக சென்றது.நீலா என்ன காரணமோ தொ¤யவில்லை ஒன்றும் பேசாமல் சயிக்கிளில் இருந்தாள். சு¤ல வேளை நான் எ£¤ஞ்சு விழுவன் என்ற நினைப்பிலோ அல்லது இனியனின் கதையைக் கேட்ட பிறகோ அப்படி அமைதிச் சூழலில் இருந்த அவளிடம் பள்ளிக் கூடம் கிட்டவர சயிக்கிளின் ஒட்டத்தின் வேகத்தை குறைத்துக் கொண்டு நானே கதையைத் தொடங்கினேன்....”நீலா!இந்த நத்தாருக்கு என்ன வாங்கித்தர....?””சித்தப்பா நீங்க இப்படித்தான் நெடு நெடுக கேப்பீங்க ஆனா வாங்கித் தரமாட்டிங்க நீங்க கஞ்சல்....””நானே உங்கட அப்பம்மா கைச்செலவுக்கு தாற காசிலதான் என்ர காலமே போகுது....உனக்கு வாங்கித்தர ஆசையாக இருந்தாலும் கையில காசு இருக்கவேணுமே”சயிக்கிள் பள்ளிக்கூடத்தின் வாசலடிக்கு வந்து விட்டது.சயிக்கிளிலிருந்து நீலாவை என்னுடைய முழுப்பலத்தையும் வைத்து கைத்தாங்கலாய் து£க்கி கீழே இறக்கி விட்டேன்.அவள் எனக்கு போய்ற்று வாறேன் என்று சொல்லிக் கொண்டு பள்ளிக்கூடத்தை நோக்கி ஒடவும் இனியனின் இரு பிள்ளைகளும் எனக்கு பக்கம் ஒடிவரவும் சா¤யாக இருந்தது.”மாமா எங்கட அப்பாவைக் கண்டியல....?”என்று இனியனின் மூத்த மகன் வாஞ்சையோடு என்னிடம் கேட்ட போது முகம் வாடி கண்கள் உள்ளொடுங்கி வறுமையின் சுவடு இழைந்திருந்தது.ஒற்றை வார்த்தையில் பதிலைச் சொல்லி விட்டு நகர என்னால் முடியவில்லை.நான் வளர்ந்த விதம் அப்படி.என் கண்களில் மேகத்திரள்.நெஞ்சில் இனியனின் நினைவு சட்டென மின்னியது.ஒரு மாதத்திற்கு முதல் இனியன் மறுமணம் செய்து கொண்டு யாழ்ப்பாணம் வந்த போது தான் புதிதாக மணம் முடித்த விடயத்தையும் தன் மனைவியையும் அறிமுகம் செய்ததோடு கல்யாணி கிறீம் கவுஸ்சுக்கு கூட்டிக் கொண்டு போய் ஐஸ்கிறீமும் வாங்கித் தந்தான்.அதன் பின்னாடி ஒரு வாரத்திற்கு முதல் என்னைச் சந்திக்க வீட்டிற்கு வந்த போது தானும் தன் மனைவியும் இந்தியாவிற்கு அகதியாக போறதுக்கு படகுக்கு ஒழுங்குபடுத்தும்படி கேட்டான்.நான் பாசையூருக்கு இனியனையும் கூட்டிக் கொண்டு போய் இந்தியாவுக்கு அகதிகளை ஏற்றிக்கொண்டு செல்கிற போட்டுக்காரரை தேடிப்பிடிச்சு இனியனுக்கு அறிமுகப்படுத்தியும் விட்டேன்.அன்றிரவே பொழுதும் சாயும்வேளை கூட்டிக் கொண்டு போவதாகவும் தன்னுடைய வீட்டுக்கே வரும்படி போட்டுக்கார சம்மாட்டியார் சொன்னார். பொழுது சாயும் முன்னமே நான் ஒரு சயிக்கிளிலும் இனியனும் அவன் மனைவியும் ஒரு சயிக்கிளிலுமாக பாசையூருக்கு புறப்பட்டோம்.வரும் வழியிலேயே £¦சனில் படித்த காலத்தில் தி£¤ந்த இடங்களையெல்லாம் நினைவுபடுத்திக் கொண்டு வந்தான்.பழைய நினைவுகளில் மூழ்குவது எனக்கு அலாதியாய் இருந்தது.சம்மாட்டியின் வீட்டிற்கு போகும் வழியிலே பாசையூர் அந்தோனியார் கோயில் இருந்ததால் இனியனும் மனைவியும் கோயிலுக்குள் போய் மன்றாடிப் போட்டு மெழுகுதி£¤யை கொழுத்திப் போட்டு வெளியில் வந்தார்கள்.நான் கோயிலுக்குள் போகவில்லை.நான் ஒரு இடதுசா£¤ப் போக்குள்ளவன் என்பது இனியனுக்கு தொ¤யுமென்பதால் அவன் என்னை வற்ப்புறுத்தவில்லை.சம்மாட்டி வீட்டிற்கு சென்று அங்கிருந்து கடற்கரைக்கு போய்ச் சேர்ந்தோம். இந்தியாவிற்கு படகில் அனுப்பிவைத்துவிட்டு கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு நின்று விட்டு வீடு திரும்பினேன். ஏன்பாட்டிற்கு யோசனையில் மிதந்த போது பள்ளிக்கூட பிள்ளைகளை ஏற்றிக் கொண்டு போன மினிவானொன்று எழுப்பிய ஒலிச்சத்தத்தில் நினைவுடைந்து என் பக்கம் நின்ற இனியனின் பிள்ளைகளைப் பார்த்தேன்.என்னைப் பார்த்தபடி சிலையாய் நின்றார்கள்.ஏனக்குள் கருக்கொண்ட துயர இருள்....துயரமா...?அது சொல்லி மாளாத துயரம். இயேசுவை சிலுவையில் ஆணியால் அறைந்து போ
danieljeeva@rogers.com
danieljeeva@rogers.com
Sunday, April 23, 2006
காத்திருப்பு டானியல்ஜீவா
நிலம் வேறாய் போனபோதும் நித்திரைகூட சிவாவிற்கு நிம்மதியற்றே போய் விட்டது.வேதனையில் விழியிலிருந்து கண்ணீர் வடிந்து தலையணையை நனைத்தது.சிவா கொழும்பிலிருந்து கனடாவிற்கு
வந்து ஒரு வாரம்தான். இன்னும் பேஸ்மன் அறையின் வாசலைத்தவிர வெளியில் என்ன நிகழ்கிறது என்று கூட தொியாமல் வாழவேண்டிய சூழலை அவன் வாிந்து கட்டிக்கொண்டிருக்கிறான். எப்போதும் கட்டிலில் முகம் புதைத்து@ அழுதபடியே கிடப்பான். அவன் நீண்டநாட்களாய் கண்ட கனவெல்லாம் நனவாகுமென்று வந்தவனுக்கு இப்படியொரு சோகமான நிலை உருவாகிவிட்டது.
யாழ்ப்பாணத்திலுள்ள கல்லூாி ஒன்றில் படிக்கின்ற காலத்தில் தான் சிவா-சசி காதல் அரும்பியது.இருவரும் ஒருவரையொருவர் நன்றாக மதித்து நடந்தார்கள்.நன்றாக படித்துக்கொண்டிருந்த சிவா காதல் வலையில் விழுந்து படிப்பில் அக்கறை குறைந்து தொடர்ந்து படிக்க முடியாமல் தொழிக்கு போக ஆரம்பித்தான்.ஒரு நாள் அவசரமாக தன்னை சந்திக்கும்படி சசியின் சினேகிதியிடம் ஒரு கடிதம் அவனுக்கு கொடுத்து விட்டாள்.கடித்தில் குறிப்பிட்ட இடம் வழமையாக சந்திக்கிற இடம்தான் சன நெருசடியற்ற அந்த கிராமத்தின் குச்சொழுங்கை நேரம் எட்டரை மணி ஒரு நாளும் இப்படி எழுதாதவள்...தனக்குள்ளே அவன் கேள்வி கேட்டான். அவளை சந்திப்பதற்கு முதல் அவன் விடைகாணமுயன்றான்..
முடியாவில்லை. எப்படித்தான் இன்றைய மாலை மயங்குமோ.... ?
“சிவா....உன்னை ஒருநாள் கூட விட்டுப்பிாியாதவள் நான் ....உனக்கும் அது தொியும்...”
“என்ன....என்ன....சொல்லன்கெதியாய்....”
“கனடாவில் இருக்கிற சித்தி எண்ண கொழும்புக்கு வரச்சொல்லி கடிதம் போட்டிருக்கிறா..”
ஏக்கம் கலந்த பெருமூச்சு அவனில்....”என்னத்துக்கு ... ?”
“கனடா எடுப்பதுக்குத்தான்.”
கணப்பொழுதில் பேசாமல் நின்றான்.கண்கள் கலங்கியது.அவனுக்கு மட்டுமல்ல அவளுக்கும்.
மெல்ல தனது கைகளை அகல விாித்தான்.அவளது தோளில் மீது பட்டது.ஒர் மெல்லிய அசைவு அவளில்....இரவு காதலுக்கு காணிக்கையானது.நிலா வெளிச்சம் குச்சொழுங்கையின் வேலியில் தெறித்து நிலத்தை நனைத்துக்கொண்டிருந்தது.சிவா தன்நெஞ்சோடு அணைத்துக்கொண்டான்.அந்தக்கணமே கிடுகு வேலிக்குள் இருந்து ஓரு சத்தம்....
“யாரட இருட்டுக்குள்ளே.... ?”
அந்த ஓலி வந்தவேகத்தில் அவர்கள் மறைந்து போனர்கள். அதன் பின்னர் அவனால் அவளை நோில் பார்க்கமுடியவில்லை. விடிய கொழும்புக்குச் சென்று கனடா வந்து விட்டாள். இங்கு வந்தவுடன் நிரந்தர வேலை யொன்று அவள் சித்தி எடுத்துக்கொடுத்தாள். படிப்படியாக அவளுடைய வாழ்கை நிலையை உயர்த்திக் கொண்டாள்.சிவா ஏதோ ஒருஇயக்கத்தில் தியாக உணர்வில் இணைந்து செயல் பட்டான். வாழ்வின் எல்லாச் சுகங்ககையும் இழந்து தேசத்தின் விடியலில்தான் கல்யாணம் என்பதே தனக்கு வேண்டும் என்று நினைத்தான். ஆயினும் அவன் தவிர்க்கமுடியாத காரணத்தால் அமைப்பிலிருந்து விலகிறான்.மீண்டும் சசியைப்பற்றிய எண்ணங்கள் அவனில் விாிய அவன் கொழும்புக்கு வந்தான்.அவளோடு தொடர்புகொண்டான். சசி பொன்ச பண்ண இங்கு வந்து விட்டான்.
சிவா இங்கு வரும் வரை அவனால் இப்படியான ஒரு வாழ்வை கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாவில்லை. அவனது பழக்கம் வழக்கம் அப்பாவித்தனம் எல்லாம் விகடம் தொியாத கடலோடி போல....அவளால் அவனை பச்சாத்தபமாக பார்க்க முடியவில்லை. தன்னுடைய வேலைக்கும் நாகாிக மாற்றத்திற்கும் பொருத்தமாில்ல உறவு போல் அவள் உணரத் தொடங்கினாள். அவள்தான் என்னதான் செய்ய முடியும் சினேகிதியின் கணவன் புதுக்காாில் நேற்றுக் கூட சித்திரவை கூட்டிக்; கொண்டு வீட்டிற்கு வந்திட்டு போனாள். இவற்றையெல்லாம் பார்க்கின்ற போது அவளுக்கு@ மூலைக்குள் முடங்கிக் கிடக்கும் சிவா தன்;னுடைய ஆசைகளையும் எண்ணங்களையும் நிறைவேற்றும் கணவனாக இருப்பாான என்ற அச்சம் அவளுக்குள் எழுந்துவிட்டதோ....
சிவா பார்வைக்கு அழகற்ற உடல் தோற்றமாயினும் உள்ளம் பால் போல் வெண்மையானது.வாழ்வு வறண்ட போதும் முகம் மட்டும் எப்போதும் புன்னகை பூத்திருக்கும் ஆடம்பர வாழ்வை அடியோடு வெறுப்பவன். அதிகமாக யாருடனும் கதைக்காதபோதும் அவனுக்கென்று பிடித்தமானவர்களோடு உயிரைக் கொடுக்குமளவுக்கு அன்பு கொள்வான்.வார்த்தைகளில் வர்ண ஜாலமில்லாத ஒரு யதாத்தவாதி சிறு வயதிலிருந்தே வறுமை எனும் சிலுவை சுமக்கிறவன்.சிவா இங்கு வந்தவுடன் தனியாக பேஸ்மன் எடுத்துக் கொடுத்தாள்.அவள் தன் சித்தியோடு இருந்தாள். சசி அடிக்கடி சிவாவை வந்து பார்த்துவிட்டுப் போவள். சந்திக்கும் போதெல்லாம் வார்த்தைகளால் வலுத்து சண்டையிலே முடிந்துவிடும் சசியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் வேதனைப்படுத்திய போதும் அவைகளை அவன் பொிது படுத்தாது.தனக்குள் குறுகிக் கொள்வான். அவளுடைய முகம் எத்தனை கனவுகளாய் அவனில் எழுந்து ஒவ்வொரு கணமும் கொல்லும் அவளோடு பழகிய நாட்கள் பேசிக்கொண்ட விடயங்கள் எல்லாம் கானல் வாிகளா.... ?
அவன் குப்புறக் கட்டிலில் படுத்தான்.உடலில் ஒரு வித சோர்வு அவனுள் குடிகொண்டு விட்டது. ஆயினும் அவன் கண்களுக்கு தூக்கம் வரமறுத்துக்கொண்டிருந்தது.அவனுக்கு அழுகை அழுகையாக வந்தது.ஓவென்று கத்தவேனும் போல் அவன் மனம் சொல்லியும் அவனால் அழமுடியவில்லை. அழுகைச் சத்தம் கேட்டாலே மேலேயிருக்கின்ற தமிழ்ச்சனங்கள் வந்திருவார்கள் என்பதற்காக....
மூன்று வருட மாற்றம் காதலுக்கு முக்காடு போட்டு விட்டதோ... ? வருடநகாவில் சசியில் இவ்வளவு மாற்றம் வந்து விட்டதோ ... ?
“தம்பி உங்களுக்கு போன்”மேலேயிருந்து வந்து வீட்டு உாிமையாளர் சொன்னார்.மேலே ஓடிப்போய் ரெலிபோனை எடுத்தான்.
“மறு முனையிலிருந்து ஹலோ....என்ன நெத்ரையோ....! இன்டைக்கு பின்னேரம் வேலை முடிய வருவேன் ஓக்கேய் பாய்....”தொலைபேசியின் மறுமுனை துண்டிக்கப்பட்டது.ஆசையோடு எதிர் பார்த்திருந்தவனுக்கு ஒரு ஜந்து நிமிடம் கூட ஆசையோடு பேசாதை நினைத்து தனக்குள் வெந்து சுருங்கினான்.ஆயினும் அவளின் வருகையை நினைத்து சந்தோஷப்பட்டன்.
இரவும் பகலும் மாறிய போதும் அவன் வாழ்வில் நெகிழ்சியற்ற இந்த இரண்டு கிழமையில் இன்றைய நாள் எல்லா வேதனைகளுக்கும் தகுந்த சன்மானம் வழங்குமென்ற நினைப்போடு அவன் காத்திருக்கிறான். எவ்வளவு நேரம் தங்குவாளோ அவ்வளவு நேரத்திற்குள்ளும் பேச வேண்டியவற்றை மனதில் இருத்தி வைத்தான்.
சொல்லியபடி தவறாது வந்துவிட்டாள். அவளைக் கண்டவுடன் அவனின் பார்வையின் வீச்சில் அவனில் வெறுமை விலகி புதுமை தோன்றியது. அஞ்சனம் அவள் கண்களுக்கு அழகற்றுக் கிடந்தது. வாசனைக் காற்று பேஸ்மன் முழுவதையும் அடைத்துக் கொண்டது.இதழில் கிடந்த உதட்டுச்சாயம் கடவாய்ப் பக்கமாக வழிந்து இருந்தது. அவன் சிதறிக் கிடந்த கடதாசித் துண்டுகளை வேகமாக புறக்கிக் காபேஜ் பாக்கில் போட்;டான்.தொங்க விடப்பட்ட கங்கரையும் ஒழுங்கு படுத்தினான்.
இருவருமே பேச முடியாத மெளனம்....சிவாவின் மனதில் தேக்கி வைதிருந்த சோகங்கள் கண்கள் வழிய கசிந்தது.கண்ணீரை துடைத்துக் கொண்டு சசியை பார்த்தான்.
“உன்னை என்னால் பூாிந்து கொள்ள முடியவில்லை. எதற்காக இப்படி நடந்து கொள்கிறாய் என்று விளங்கல....மணிப்புறா ஜோடி போல நம் காதல் மலர்ந்தது...வளர்ந்தது.இடையில் கனடா நம் இருவரையும் பிாிக்கின்ற பெரும் சுவராய்.... உன்னை என்னால் குற்றம் சொல்ல முடியவில்லை.மூன்று மாதத்திற்கு ஒரு தடவை கொழும்புக்கு வந்து காசு வங்குவதற்காக நீதான் உங்களுடைய குடும்பத்தை காக்கின்ற குல தெய்வமாக மாற்றி விட்ட உனதுபெற்றோர்....உன்னுடைய உலகமே வேலைதான் எண்டு நினைக்கும் மாயை....உனக்கு அருகில் நெருங்க முடியாத அளவுக்கு காசு செய்கின்ற மாயை....எல்லாத்தையும் நினைக்க ஆத்திரன்தான் வருகுது” என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அவளுடைய முகம் கன்றிச் சிவந்தது.
“கலாச்சாரம் விளங்காத ஆளயிருக்கியே..இன்னும் பிச்சைக்காரத்தனமாய் கதைக்கிறயே” என்றாள்.
இல்லை சசி.... அந்நிய நாட்டில் எங்களுடைய கலாச்சாரத்தில் நாங்கள் வாழ்வதுதான் எங்களுக்கு பெருமை”என்று சிவா முனு முனுத்தான்.
சசி வெடுக்கன முகத்தை திருப்பிக் கொண்டு....
“உன்ர இயக்கக் கதைகள் எனக்கு வேண்டாம்...வீடு தூங்கி தெருத் தெருவாக திாிந்த உன்னை எடுத்து விட்டதுதான் என் தவறு” என்றாள்.
“இல்லையென்று சொல்லல்லை.. வீடு வீடாய் தூங்கியதும் தெருத் தெருவாக திாிந்ததும் என் வயிற்றை நிரப்புவதற்காக அல்ல.. ஒரு தேசத்தின் எல்லையை தொடுவதற்காக சுதந்திர காற்றை சுவாசிப்பதற்காக துன்பக் கேணியிலிருந்து மக்களை மீட்பதற்காகத்தான்.அது தவறாக உனக்குத் தொியலாம் என்னைப்பொறுத்த மட்டில் அது சாியாகத்தான் படுகுது உன்னளவில் அது பிழையாகத் தொிந்தால் அதற்காக நான் வருத்தப்படப் போவதில்லை.என்றேனும் ஒரு நாள் என்னை இழந்திட்டாய் என்று நினைத்து நினைத்து அழுவாய் என்ற நம்பிக்கை எனக்குன்டு” என்றான்.
அவள் மெளனமாய் நின்றாள்.எல்லாவற்றையும் விளங்கியும் விளங்காதவள் போல். கணப்பொழுதில் சிவாவின் முகத்தை கோபத்தோடு பார்த்தாள்.மூஞ்சி எட்டு முழத்தில் வீங்கியது. ஏதோ உள்ளத்தில் ஒரு வித உத்வேகம் எழுந்து உடல் நிலையில் ஒரு மாற்றத்தை அவளில் கொண்டு வந்தது.
“உனக்கு விசர் உன்னோடெல்லாம் கதைப்பதற்கு நேரமில்லை” என்று சொல்லிக் கொண்டு கோப்பி ரேபிலில் இருந்த லெதா பையை கையில் எடுத்து வலது பக்கமாக மாட்டிக்கொண்டாள்.தலையைக் குனிந்து சப்பாத்தை போட்டாள்.வெளியே போவதற்காக...
“சசி கொஞ்சம் பொறு...”
அவள் அசையாத சிலை போல் நின்றாள்.
“நான் நாளை மறுநாள் கொழும்புக்கு போறத்துக்குாிய ஏற்ப்படெல்லாம் செய்து விட்டன்.இப்போது ஒருமனிதனின்பெறுமதியைஉன்னால்உணரமுடியவில்லை.அந்தளவுக்கு உனது உள்ளத்தில் நான் என்ற இறுமாப்பு இருக்கிறது.உன்னுடைய உள்ளத்தில் உறைந்து கிடக்கிற அழுக்குகள் கழுவப்பட்டு ஒரு தூய மனதோடு என்னை உன் வாழ்கை துனையாக எப்போது ஏற்றுக் கொள்கின்ற பக்குவநிலை வருமோ அப்போது கடிதம் போடு.... இல்லையே கடல் கடந்து வா..அதுவரை உனக்காக காத்திருப்பேன்....”
அவள் பேசமல் பறையாமல் இடத்தை விட்;டு நகாந்தாள்.
அவன் முகத்தில் மந்தகாசம் தவழ்ந்தது.அமைதியான தூக்கத்திற்கு கட்டிலை நோக்கி போனான்.
(முற்றும்)
danieljeeva@rogers.com
Friday, April 21, 2006
தவிப்பு- நாவாந்துறைடானியல்ஜீவா

என்னெண்டு தெரியேலை நாரி போட்டு விண்விண்ணென்று குத்தி, உளைஞ்சு கொண்டு இருக்கு. கால்வேற தசை இறுகி நொந்து கொண்டிருக்கு. நேற்று வேலை தேடி அதிகம் அலைந்ததாலோ இந்த உடல் வலியோ... கொஞ்சம் நோ எடுபடுமெண்டு நினைச்சுத்தான் சுடு தண்ணீயில கொஞ்சம் பச்சத்தண்ணீ கலந்து குளிச்சுட்டு வந்தனான்.நல்ல வெக்கையாய் இருக்குது. குளிச்சிட்டு வந்தாலும் உடம்பு பிசு பிசுத்தபடி. அப்பாட்மென்கா£¤ கீற்றரை நல்லாக் கூட்டிப் போட்டாள் போல இருக்கு. அவ கூட்டினாப் போல என்ன எங்கட கீற்றரால குறைச்சால் சா¤யாய் போய்விடும் எண்டு நினைச்சுத்தான் குளிச்சிற்று வெளியில வரக்கில கீற்றரை நல்லாக் குறைச்சுப் போட்டு வந்தனான். அப்படியிருந்தும், இப்புடி வெக்கையாய் இருக்கு.... உடம்பிலே வேற சேட்டு போட்டிருக்க வேண்டிய நிலை. மாமி எந்த நேரமும் வீட்டில் இருக்கும் போது கொஞ்சம் கூச்சமாய் இருக்கும் அதனால் என்டில்ல, ஊ£¤ல இருக்கும்போது கூட அப்படித்தான் எந்த வெக்கையாய் இருந்தாலும் உடம்பில் இருக்கிற சேட்டை கழட்ட மாட்டேன். அது என்ர பரவனி புத்தியெண்டு அம்மா சொல்லுவ. இப்ப முப்பது வயதாகிட்டு, உடம் பெல்லாம் மசுக்குட்டி மயிர் படர்ந்து கிடக்கிறது போல. என் உடம்பு முழுவதும். அதுவும் கூச்சத்துக்கு காரணமாயிருக்கலாம். சீச்...சீ... அப்படியும் சொல்ல ஏலாது. நான் பிறப்பாலே கொஞ்சம் கூச்சப்பட்டவன் தான். ஒரு தாழ்வுச் சிக்கல் எண்டுகூட சொல்லலாம். என்ர மனசு தேவையில்லாமல் எதை எதை யோவெல்லாம் அலட்டிக்கொண்டு இருக்குது என்று என் மனம் சொல்லியது.தொங்கப் போடப்பட்ட என் தலையை மேலே து£க்கிக் கொண்டு சோபாவில் இருந்த மாமியை நோக்கி என் கண்களின் பார்வையை நிலை நிறுத்தினேன். ஏதோ ஆழ்ந்த யோசினையிலிருந்த மாமி என்னை நோக்கி பார்வை வீச்சால் ஒரு தடவை உலாவவிட்டுவிட்டு, ”தம்பி ஏதும் குடியுமென்?” என்று கேட்டாள்.”வேண்டாம் மாமி. காலையில எழும்பின கையோடு ஒரு தேத்தணீ போட்டுக் குடிச்சிட்டன். நேற்று ஸ்£¦ல் பக்கமாக வேலைக்கு அலைஞ்சதில கால் சாடையாய் நோகுது”.”நேற்று நீங்க வேலை தேடப் போய்ற்றேங்க எண்டுதான் சொன்னனான். அதுக்கு அவள் என்னைத் தீண்டு போட்டாள். நீங்க வேலை தேடப் போறதில்லையாம், ஊர் சுற்றிப் போட்டு சாப்பாட்டு நேரம் பார்த்து வாறியளாம் எண்டு கவிதா சொல்லுறாள். கல்யாண றெஐ¤ஸ்ரேசன் வருகிற திங்கக்கிழமை ஸ்காபரோ ரவுண் சென்ரலில பதிவு செய்கிறதாம். கல்யாணம் மா¤யகொறற்றி சேச்சிலை ஒழுங்கு பண்ணியிருக்கிறாளாம். கல்யாணக்காட்டு அடிக்கிறதுக்கு பரடைஸ் அச்சகத்தில குடுத்திட்டாளாம். என்னமோ எனக்கு பயமாக இருக்குது. தம்பி உன்ர போக்குக்கும் அவளின்ர போக்குக்கும் என்று சொல்லி முடிப்பதற்குள், நான் குறுக்கிட்டு,”இதெல்லாத்தையும் என்னோடு கதைச் சிருக்கலாம்தானே.... அவ ஏன் என்னோட முகம்விட்டு கதைக்கிறாவில்ல நான் என்ன அவவ திண்டா போடுவன்...?””தொண்ணு£று நாட்களில்ல ஏதாவது செய்தே ஆகனும். இல்லையென்றால் அது பொ¤ய சிக்கலில வந்து முடியும்.” மாமி சொல்லும் போதே கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது.அச்சம் படர்ந்த பார்வையோடு மாமியின் முகத்தைப் பார்த்தேன். பாவம் மனிசி. ஒரேயொரு பிள்ளை. நல்ல அழகான பெயர் கவிதா. நான் வந்து ஒரு மாதத்திற்கு மேலாகுது. ஒரு நாள் கூட குண்டி குத்தி இருந்து, என்கூட கதைச்சது கிடையாது. எங்கட வீட்டாரும், மாமியும் விரும்பித் தான் இந்தக் கல்யாணத்திற்கு ஏற்பாடு பண்ணினவிய, என்ன மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு வருடம்தான் இந்த உறவு தொடங்கி, எனக்கு நல்லாய் நினைவுகூட இருக்கு. மன்னா£¤லே பனங்கட்டிக் கொட்டிலில் அகதியாய் அம்மமாக்களோடு இருக்கக்கேல ஒரு நாள் இரவு ஒன்பது மணியிருக்கும் எண்டு நினைக்கிறேன். மாமி ரெலிபோன் எடுத்து அம்மாக்கிட்ட கல்யாணம் சம்மந்தமாக கேட்டா. அம்மா என்னட்ட கேக்காமலே ஓமெண்டு சொல்லிப்போட்டா.... வெளிநாட்டுச் சம்மந்த மல்ல! அதுமட்டுமல்ல அம்மா சொல்லுத் தட்டாத பிள்ளையல்ல. நான், எப்படியோஇங்க வந்து சேர்ந்துட்டன். வாழ்வுதான் திசை தொ¤யாமல்இருக்கிறது. கவிதாவை கல்யாணம் செய்வதா....? நினைக்கவே மனசு எ£¤ச்சல அடைகிறது. வாழ்வின் நௌ¤வு சுழிவு தொ¤யாத எனக்கு, வாழ்க்கைத் துணைவியாய் வருபவள்..? எந்தக கோணத்தில் பார்த்தாலும், அவளின் அந்நிய கலாச்சாரத்துக்குள் என் மனம் அடங்க மறுக்கிறது. நெஞ்சு நொந்து சுருங்குகிறது.”தம்பி என்ன மோன கடுமையாய் யோசிக்கிறியள்?” மாமி கேட்டதும் நினைவிலிருந்து சுயத்திற்கு வந்தேன்.”என்ன தம்பி எத்தனை நாளாய் போய்ச்சு....ஒருநாள் கூட மனம் திறந்து கதைச்சது கிடையாது. வேலைக்கு போறாள், வாறாள், சாப்பிறாள், தன்ர பாட்டில போய் நெத்திர கொள்ளுறாள். விடிய எழும்பினா வேலைக்கு போறாள். இதென்னெண்டு ஒண்டுமா பு£¤யல....? இங்க என்ன தம்பி....பொ¤ய மனுசங்க எண்டு யாரையும் மதிப்பதில்லை. எத்தனை தாய் தேப்பன்மார் பெத்துப்போட்ட பிள்ளைகளை நினைச்சு கண்ணீர் வடிக்கிறாங்க....நான் என்னால ஆனமட்டும் அவளுக்கு புத்திமதி கூறிப்போட்டேன் அவளும் கிறுங்கிற மாதி£¤ தொ¤யல....”சற்று மௌனித்து விட்டு மீண்டும் தொடங்கினா...”கல்யாணம் பேசும் போதே இவள் விருப்பமில்லையெண்டு சொல்லிந்தால் இந்தளவுக்கு வந்திருக்காது. இப்ப என்னண்டால் நீங்க வந்த பின்ன மூஞ்சியைக் காட்டிக் கொண்டு தி£¤யிறாள். என்ர இவர் இருந்திருந்தாலும் ஏதாவது சொல்லிக்கில்லி சா¤க்கட்டிப் போடுவார். அவரை கோதா£¤யில வீழந்து போன, பிரண்டு போன, ஆமிக்காரன் கடலுக்கு போய்விட்டு வரக்கில சுட்டுப் போட்டானுங்க. அதிலயிருந்து ஊரக்குள்ள இருக்கவே பிடிப்பில்லாமல் போய்ச்சுது. எனக்கு அப்பதான் கவிதா ஸ்பொன்சர் பண்ணி எடுத்தவள். வந்ததிலிருந்து ஒருதாய் எண்டு என்ன மதிச்சு நடந்தது கிடையாது. என்ன செய்யிறது. “..தென்னையைப் பெற்றால்இளநீரு, பிள்ளையப் பெற்றால் கண்ணீரு என்று தொ¤யாமல்தானா பாடினாங்க...” மாமியின் கண்கள் கலங்கியது. நான் கண் வெட்டாது, மாமியின் பேச்சையே உன்னித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்.கொஞ்ச நேரத்தால மாமி விம்மி....விம்மி அழத்தொடங்கினா. அழுது கொண்டே...”என்ர இவர் தங்கப்பவுண். நான் கல்யாணம் செய்யிறத்து முதல் அவர்கூட பேசியதே கிடையாது. ஒரு முறையில் பார்த்தால் அவர் சொந்தம் தான். எங்கட வீட்டுக்காரரும், அவங்கட வீட்டுக்காரரும் பேசித்தான் எங்களுக்கு கல்யாணம் பண்ணி வைச்சாங்க நான் கூட பொ¤சாப் படிச்சது கிடையாது. இவர் களங்கண்ணி வலைத் தொழில் சாகிற வரையும் செய்தவர். சிகரட் குடிப்பழக்கம் கிடையாது. வெத்திலை பாக்குக்கூட போடுறது கிடையாது. சா¤யாய் உங்களைப் போல தான் அவற்ற குணம். வலைஇழுக்க சாமத்தில போகக்கில என்ன எழுப்புங்கோ. நான் தேத்தண்ணீ போட்டுத் தாறன் எண்டு சொன்னா அவர் சொல்லுவார், “நீ ஏன்£¤ அந்தச் சாமத்தில எழும்பி உன்ர நித்திரையை குழப்பிறாய். நான் போகக்கில சந்தியில காக்கவட கடையில ஒரு தேத்தண்ணீ குடிச்சிட்டு போறனடி” எண்டு சொல்லுவார். நல்ல மனுசன். வீட்டில சும்மா எண்டு இருக்க மாட்டார். விறகு கொத்தித் தருவார். மிளகாய்த்து£ள் இடிச்சுத் தருவார், வலை பொத்துவார். நான் கொஞ்ச நேரம் கூட அவர விட்டிட்டு இருக்க மாட்டன். எங்கயும் வெளியால அவர் போனவரென்டால் எப்ப வருவார்.... எப்ப வருவார் எண்டு வாசலிலேயே பார்த்துக் கொண்டிருப்பேன். அவரும் அப்படித்தான் எங்கயும் போனால் நேரத்தமினக் கெடுத்தாமல் சுறுக்கென்று வந்துடுவார்.இதென்ன இந்தக் காலத்து புள்ளயல நினைச்சாலே கவலையாய் இருக்குது. இவள் கவிதாவிக்குப் புறகு எங்களுக்கு ஒரு புள்ளயும் பிறக்கேல அதால அவளை கொஞ்சம் செல்லம் கொடுத்து வளத்திட்டோம். மாமியின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து கொண்டு வந்தது. கனத்த அழுகுரல் அடங்கிப் போகவும். தொலைபேசி கிணுகிணுக்கவும் சா¤யாய் இருந்தது. மாமி தொலைபேசி இருக்கும் இடம் தேடிப் போய் தொலைபேசியை எடுத்து “கலோ” என்று மாமி சொல்ல....மறுமுனையிலிருந்து ஏதோ குரல் வர....“ஆரு கவிதாவ?” என்று மாமி கேட்டா.இனியும் இந்தக் கதிரையில் தொங்கிக் கொண்டிருக்க மனம் இடம் கொடுக்கல. சடக்கென எழும்பி படுக்கை அறைக்குள் வந்தேன். இனம்பு£¤யாத சந்தேகம் இதயத்துள் குடிகொண்டது. குந்திதேவி கர்ணனைப் பெற்றதும் தன்மான உணர்ச்சி காரணமாய் தான் பெற்ற மகனேயே கங்கையில் விட்டது போல் கவிதாவையும் பிறந்தவுடன் அவள் குணத்தை மாமி அறிந்திருந்தால் கட்டையடி முனங்கால எறிந்திருப்பாளோ கவிதாவை....என்னுள் தேங்கிக் கிடந்த தேக அலுப்பும், வேதனையும் கண்ணீர் வழி கசிந்தது. உடலுழைப்பில் உரமேறிய உடலில் சந்தேக வலை மாயமாய் வந்து மடிந்து கொண்டது. கவிதாவின் வாழ்வின் மேல் இருந்த என் மதிப்பீடுகள் மங்கிப்போய் மாமியின் மீது சந்தேகம் படர்ந்தது.மாமி வேணு மெண்டு திட்டமிட்டு இந்தக் கதை கதைக்கிறவ...? அச்சம், அருவருப்புத் தன்மையோடு என்னுள் அ£¤யாசனம் ஏறியது.இவகாட்டும் பா¤வும் பாசமும் என்மீது எதற்காக....? ஆர்வத்தை நாசுக்காக புலப்படுத்தி தன்மனதில் இடம் பிடிக்கிற முயற்சியா?அறுபதோ, அறுபத்தெட்டோ தொ¤யல.இந்தக் கிழட்டு வயதுக்கு ஒரு பொடியன் தேவையாக்கும். தன்ர புருசன்ர குணம் மாதி£¤ எண்டு என்னைப் பார்த்து எந்தத் துணிவில சொல்லுவா? கனடாவில பொம்பிளையல் சா¤யில்ல எண்டு ஊ£¤ல இருக்கேக்க சொன்னவிய அது சா¤யாய்ப் போச்சு. நேற்று தலையிடிக்குது எண்டு சொன்னவுடன் பாஞ்சு விழுந்து ஓடிவந்து நெத்தியில விக்ஸ் தடவி விட்ட வடிவை பார்த்தாலே அவ வேற பிளான்னில என்ன மடக்கப் பாக்கிற போல. எனக்குள் இருந்த கோபம் ஐயமற்று மாமியில் முடங்கியது. இன்டைக்கு இரண்டில் ஒண்டு பார்க்கத்தான் வேணும் எண்டு நினைத்துக் கொண்டு கதவைத் திறந்து வெளியால் வருவதற்கும், திடீரென வந்த ஒப்பா£¤ச் சத்தத்துடன் நான் திறக்க வந்த கதவை மாமி தட்டவும் சா¤யாய் இருந்தது.”தம்பி....தம்பி....” என்று தலையில அடிச்சபடி நின்ற மாமியின் கோலத்தைக் கண்டதும், கொப்பளித்துக் கொண்டு வந்த கோபம் பெட்டிப் பாம்பாய் அடங்கியது. என்னங்க....என்னங்க.... என்னங்க நடந்துட்டெண்டு சொல்லிப் போட்டுத் தான் அழுங்களன்?அது ஏன் கேப்பான்..? அந்த தலையால தெறிச்சுப் போவாள், கவிதா யாரோ கயனாக் காரனோடு வேலை செய்யிற இடத்தில பழக்கமாம். அவனோடயே தான் இருக்கப் போறன் எண்டு சொல்லிப் போட்டுப் போறாள். குறுக்கால விழுந்து போவாள். பெத்து வளத்துவிட்ட நன்றியையும் மறந்துட்டு எளியன்தனமான வேலை செய்து போட்டாள். “..அவள் செத்துப் போய்ற்றாள்...அவள் செத்துப் போய்ற்றாள்....” என்று சொல்லி நெஞ்சில அடிச்சு அழுது கொண்டிருந்தா மாமி. நான் மலைத்துப் போனேன்....எதுவும் பேசாமல் ஊமையாய் நின்றேன். பிள்ளையைப் பி£¤ந்த பி£¤வு ரேகை முகத்தில் இழையோடியது .விழிகள் சிவந்து வீங்கியது . அழுகை நின்ற பாடில்லை, அவ அவமானப்பட்டது போல் துடித்து அழுதுகொண்டே பார்வை என்னில் நிலை நிறுத்திக் கொண்டு, “நான் செத்துப் போனால்.., கொள்ளி வைக்கிறது நீங்க தான். என்னுடைய பிள்ளை நீங்கதான். நான் லோயரோட கதைச்சு இங்கேயே இருக்கிறதுக்கு ஏற்பாடு பண்ணுறேன். நான் தனிக்கட்டையில்ல எனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்ற சந்தோசத்தில வாழந்து செத்துப் போவேன்.மாமி சொல்லும்போது என் மனக் கண்கள் என்னையறியாமல் அழுதது. என் தவறான கணிப்பு தகர்ந்து, கோபங்களெல்லாம் சிதிலமாகி.., கழிவிரக்கம் கொண்டது. நான் இழந்த தாயே என் முன்னால் நிற்பது போல் தோன்றியது. ஜயமும், அச்சமும் அகன்று அகல் விளக்கொளியொன்று என்னுள் படர்ந்தது.
Tuesday, April 18, 2006
எனக்கு பிடித்த கதைகள்-டானியல்ஜீவா-
வளைந்து போன வீரவாள்
-செழியன்-
மார்கழி மாத விடுமுறை விடவும் மாமா வந்து இறங்கவும் சரியாக இருந்தது. மார்கழி மாத விடுமுறையில் பெரிய பெரிய வசதிகள் எல்லாம் இருக்கின்றது. முப்பது நாட்களுக்கும் குறையாமல் வருகின்ற மிகப் பெரிய பள்ளிக்கூட விடுமுறை இது என்பதால் பள்ளிக்கூடம் போகாதவர்களுக்கும் கூட முக்கியத்துவம் வாய்ந்த விடுமுறை இது. இறுதிப் பரீட்சை முடிந்ததின் பின்னர் வருவதால் "புத்தகத்தை எடுத்துப் படியடா" என்கின்;ற வன்முறைகள் எதுவுமே கிடையாது. அன்டை நாட்டுக்கு எதிரான பெரும் படையெடுப்புக்குத் தயாராவது போல, அடுத்த கட்டப் பயிர்ச்செய்கைக்காக ஒட்டுமொத்த யாழ்ப்பாணமும் தயாராகின்ற காலகட்டம் என்பதால் "மிளகாய்ப் பழம் பிடுங்க வாடா", "கத்தரிக்காயை கழுவிச் சாக்கில் கட்டு" என்கின்ற சிறுவர் கள் மீதான கொடுமைகளும் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுவிடும். "தம்பியின் கொப்பிப்பேப்பரை கிழித்து விதம் விதமாகக் கப்பல் செய்து விடுவது", "முழங்காலை நனைத்துக் கொண்டு நின்று, தெருவில் ஓடி வருகின்ற வெள்ளத்தை கரிகாலன் பாணியில் அணை கட்டி வெடிவாணரின் வளவுக்குள்ளை விடுகின்றது" போன்ற வித்தைகளைக் கற்றிருந்தால் இந்த மார்கழி மழை கூட ஒரு பெரிய பிரச்சனை கிடையாது. ஒட்டுமொத்தமாகக் கூறுவது என்றால் இடை இடையே வந்து போகின்ற பேச்சுவார்த்தைக் காலகட்ட குதூகலம் போல மார்கழி விடுமுறை இருக்கும். இதிலே வசதி என்னவென்றால் இந்த கண்காணிப்புக் குழு போன்ற பிரச்சனை ஒன்றுமே கிடையவே கிடையாது. வழமைபோல ஒரு பழைய ச+ட்கேசுடன் மாமா வந்து இறங்கினார். அதற்கு இரண்டு ப+ட்டு போட்டுப் ப+ட்டி வைத்திருப்பார். சூட்கேசுக்குள் முகச்சவரம் செய்வதற்கான சவர அலகு, சின்னக் கண்ணாடி மற்றும் தட்டுமுட்டுச் சாமான்களுடன் ஒரு கால்சட்டையும் இரண்டு மூன்று சட்டைகளுடன் ஒரு கிழிந்த பெனியனும் இருக்கும். நிச்சயமாக சாரம் மற்றும் துவாய் வைத்திருக்க மாட்டார்;. இரண்டு நாளைக்கு ஒரு தடைவை நாங்கள் தான் அவற்றை அவருக்கு "சப்ளை" செய்ய வேண்டும். இந்த சமாசாரங்களுக்கும் அப்பால் ஒரு புத்தம் புதிய கத்தி அல்லது புது மண்வெட்டி, வாள் அல்லதும் போனால் கூர்மையான ஒரு கோடாலி நிச்சயமாய் சூட்கேசுக்குள் வைத்திருப்பார். பழைய சிங்களப் பேப்பர் ஒன்றில் மிகக் கவணமாகச் சுற்றப்பட்டு, அடிப் பெட்டிக்குள் இது பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும். யாராவது இதைப் பார்த்தால் மாமா ஏதோ பெரிய சண்டியர் என்று நிச்சயமாக நம்புவார்கள். பதினாறு வயதில் அப்புவிடம் அடிவாங்கிக் கொண்டு வீட்டை விட்டு ஓடிப்போனவர்தான் இந்த மாமா. "முற்றத்துக் கொடியில் காய்ந்து கொண்டிருந்த அப்புவின் கோமணத்தில் முடிந்திருந்த இருபது ரூபாயைக் களவெடுத்துக் கொண்டு ஓடிப் போய்ட்டான்"- ஆச்சி அலுக்காமல் அடிக்கடி இதைச் சொல்லுவா. டிக்கட்டும் எடுக்காமல் இரயில் ஏறிப் போனவர் சிங்களம், இங்கிலீஸ் எல்லாம் அளவாகப் படித்து இன்றைக்குப் பெரிய ஒரு அரசாங்க உத்தியோகத்தர். இப்போ அநுராதபுரத்தில் இருந்து இருபது மைல் தூரத்தில் இருக்கின்ற ஒரு சிங்களப் பகுதியில் "பெரும் தெருக்கள் திணைக்களத்தில்" ஸ்டோர் கீப்பராக வேலை செய்கிறார். அடிக்கடி வேலை காரண நிமிர்த்தம் அவருக்கு இட மாற்றங்கள் கிடைக்கும். விடுமுறைக்கு வந்து போகிறபோது தவறாமல் புதுக் கத்தி, கரண்டி, கோடரி என்று விதம் விதமாய்க் கொண்டு வந்து அம்மா, பெரியம்மா, சின்னம்மாவுக்கு கொடுத்து, பதிலாக உடைந்து முறிந்த பழைய சாமான்களை அள்ளிக் கொண்டு போய் கணக்குக் காட்டுவதில் ஆள் ஒரு பெரிய கிள்ளாடி. அவருடைய இந்த சேவைக்காக யாழ்ப்பாணம் வரும் போதெல்லாம் மேலதிக உபசரிப்புகள் எப்போதும் அவருக்கு உண்டு. இது மட்டுமல்லாது "தடியன்;", "எருமையன்", "குத்தியன்" என்று அப்பா, பெரியப்பா மற்றும் சின்னய்யாவை, அவர்கள் இல்லாத சமயமாகப் பார்த்து மாமா திட்டுவதைப்பற்றி மூன்று பெண்களும் கண்டு கொள்வதும் இல்லை. மாமா வந்தால் எங்களுடைய வீட்டில் தான் தங்குவார். அந்த இரண்டு மூன்று கிழமைக்குள் மாமா நடத்துகின்ற தர்ப்பாரில் அம்மா மனம் கிழிந்து, இட்டிலி அவிக்கின்ற துணிபோல நொய்ந்து போய்விடுவாள். "இவருக்குத் தான் ஏதொ ஒரு பெரிய குறு நில மன்னன் என்ற நினைப்பு." ஆத்திரத்தில் அம்மா ஒரு தடைவை வாய் விட்டுக் கூறினாலும் இது மாமாவுக்கு கேட்டு விட்டதோ என்று பயந்து போனாள். நல்ல வேளை அது எனக்கு மட்டும் தான் கேட்டது. ஆனால் எனக்கு மாமாவைப் பார்க்கின்ற போதெல்லாம் குறுநில மன்னனைப் போலத் தோன்றியதே இல்லை. கல்கியின் தொடர் கதையில் வருகின்ற வீர பாண்டியனின் நினைவுதான் வரும். வீரவாளை இழந்து விட்ட பின்னரும் கம்பீரமாகக் குரல் எழுப்பிப் பாட்டுப் பாடிக் கொண்டு திரிகின்ற சுந்தர பாண்டியன். கல்கியின் கதையில் ஒரு வசதி இருக்கிறது. ஆரசன் பிடிபட்டாலோ அல்லது கொல்லப்பட்டாலும் பிரச்சினை முடிந்து போவதில்லை. இந்த மணிமுடியையும், வீரவாளையும் மட்டும் எங்காவது ஒளித்து வைத்துவிட்டால் போதும். பிறகு சமயம் பார்த்து அந்த வீரவாளையும், முடியையும் யாராவது தூக்கிக் கொண்டு மறுபடி ஆட்சியைப் பிடித்துவிடலாம். நல்லகாலம் இந்த வசதி இப்பபோது கிடையாது. இருந்தால் யாருடைய துப்பாக்கியை யார் எடுத்துக் கொண்டு வந்து நிற்பார்கள் என்று சொல்ல முடியாது. மாமா வீரவாளை வெகு பவுத்திரமாக எங்கோ ஒளித்து வைத்திருப்பதாகவே எனக்குத் தோன்றும். எங்களுக்கும் இந்த மாமாவினால் பெரிய ஆக்கினை. ஏதோ ஆபத்து சமயத்துக்கென்று தயாராக வைத்திருப்பதைப் போல அவர் வைத்திருக்கும் ஒரே பெனியனையும் ஐட்டியையும் நானும் தம்பியும் தோய்த்துக் கொடுக்கவேண்டும். கை படாமல் அதைத் தோய்த்து எடுத்து அலசிக் காயப்போடுவது Nயுளுயு வின் புது முயற்சி போன்ற ஒரு அப+ர்வமான வேலை. இதை விட அவருடைய சாப்பாட்டுக் கோப்பை, தேத்தண்ணிக் கோப்பைகளைக் கழுவுவது, கடைக்குப் போய் அவர் சொல்லுற சாமான்கள் வாங்கிக் கொண்டு வருவது, சைக்கிளின் பின்னால் அவர் இருக்க, வேர்வை வழிய வழிய சைக்கிள் மிதிப்பது, வழியில் திடீரெனச் சைக்கிளை விட்டுக் குதித்து யாருடனாவது வம்பளக்கும் போது மிகப் பொறுமையாக காத்திருப்பது என்று பல விதமான வேலைகளும் எமக்கு இருக்கும். எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு விடுவோம். மாமா கடைசியாய் யாழ்ப்பாணம் கூட்டிக் கொண்டு போய்க் காட்டுகின்ற படத்துக்குக்காகவும், மலாயன் கடை வடை, தேத்தண்ணிக்காகவும் இன்னும் எத்தனை வந்தாலும் தாங்கிக் கொள்ளலாம். "மாமாவுக்கு ஏன் மாமி இல்லை" என்று மிக நீண்ட காலமாக எனக்குள் குடைந்து கொண்டிருந்த கேள்வியை ஒரு நாள் பொறுக்க முடியாமல் அம்மாவிடம் கேட்டு விட்டேன். ஒரு தடைவ என்னை முறைத்துப் பார்த்தாள். " உனக்கு என்னத்துக்கடா?" என்று முறுகல் முறுகி விட்டு " மாமி செத்துப் போய்விட்டார்" என்று அம்மா சொல்லியதை நான் நம்பவில்லை. அம்மாவும் பெரியம்மாவும் குசு குசுக்கின்ற போது மிகத் தந்திரமாக ஒட்டுக் கதை கேட்டுத் தம்பி தான் விசயத்தை ஒரு நாள் கூறினான். ஒட்டுக் கதைகள் கேட்டு ஆளுக்கு ஆள் பிரச்சனைகள் உண்டு பண்ணுவது, இவனுக்கு கில்லி விளையாட்டுப் போல ஒரு விளையாட்டு. இவனைப் பார்த்தால் ஒட்டுக் கதை கேட்கின்றான் என்று யாருமே நம்ப மாட்டார்கள். அயன்ஸ்டீனின் ஏதோ ஒரு கொள்கையை எடுத்து பரீட்சித்துப் பார்ப்பதைப் போல பரபரப்பாக ஏதோ செய்து கொண்டிருப்பான். கைகள் கிறு கிறுவென வேகமாக வேலை செய்யும். நெற்றியையும் கண்களையும் அடிக்கடி சுருக்கியும் விரித்தும் தன்னுடைய மூளை அந்த இடத்தில் இல்லை என்று காட்டிக் கொள்வான், சில சமயம் தன்னுடைய பாட்டில் ஏதோ புலம்புவான். காதுகளை மட்டும் தன்னுடைய இந்த வேலைகளோடு எதுவும் சம்பந்தம் இல்லாமல் தள்ளி வைத்துக் கொள்வான். அதை எத்தனை பாகையில் சரியாக சரித்து வைத்துக் கொள்வது என்பது அவனுக்கு மட்டும் தெரிந்த கலை. "மாமி எப்பவோ ஓடிப்போய்டா." எனக்குக் கண்ணீர் வந்தது. பாவம் மாமி எவ்வளவு பொறுமையாய் இருந்திருப்பாள். மூவேந்தர்களுக்குள் இருந்திருக்கக் கூடிய அறிவு குறைந்த ஒரு மூட வேந்தனைப் போல் மாமா போட்ட மிக மட்டமான அட்டகாசங்களை எல்லாம் பொறுத்துக் கொண்ட வாயில்லாப் ப+ச்சி. அடிக்கடி மாமி கிணற்றுக் கட்டில் குந்தி இருந்து கண் கலங்குகின்ற காட்சி எனக்குள் வந்தது. அவள் கண்ணீர் கலந்த தண்ணீரைத்தான் ச+ழ இருந்த இந்த எல்லாக் குடும்பங்களுக்கும் குடித்திருக்கும். ஆனால் மாமியின் மீது எந்த ஒரு கருணையும் காட்ட மறுக்கின்றது. "மாமி ஓடிப் போயிருக்க மாட்டா, மாமா தான் துரத்தி விட்டிருப்பார்." நான் இப்படிச் சொன்னதையும் கேட்டு வைத்துக் கொண்டான் தம்பி. நேராக பெரிம்மா வீட்டுக்குப் போனான். போனவன் சின்னக்காவிடம் போட்டுக் கொடுத்து நல்ல பிள்ளை என்ற பட்டத்தை தொடர்ந்தும் தக்க வைத்துக் கொண்டான். தெருவில போன ஓணானை மடியில பிடிச்சுக் கட்டிவைச்ச மாதிரித்தான் என்னுடைய தம்பி. ஒரு மாதிரியான நிலையில் தான் தம்பியுடனான எனது வாழ்கை போய்கொண்டிருந்தது. அடிக்கடி என் காலை வாரிவிட்டு விடுவான். "வர வர உன்னுடைய பழக்கங்கள் சரியில்லை ஒரு இத்துனியாய் இருந்து கொண்டு பெரிய விசயங்களுக்கை தேவையில்லாம் மூக்கை நுளைக்கின்றாய். குஞ்சப்பாட்;டை சொல்லட்டே" சின்னக்கா மிரட்டினாள். அவள் லேசில சொல்லமாட்டாள். சொன்னால் அவள் தாற கடிதங்களைக் குடுக்க இனி வேற ஆளத்தான் அவள் பார்க்க வேண்டும். மாமியால் தாங்க முடியாத மாமாவின் அட்டூழியங்களை எல்லாம் என்னுடைய அம்மா என்ன வென்று தலைக்கு மேல்;; தாங்குகிறாள் என்பது எனக்கு அதிசயமாய் இல்லாவிட்டாலும், அது அற்புதங்களில் ஒன்றாக ஆவது இருக்கக் கூடியது என்று தோன்றியது. ஒட்டுக் கதை மன்னன் இதையும் கண்டு பிடித்துச் சொல்லி விட்டான். எங்களுடைய புது வீட்டைக் கட்டி முடிக்க வட்டியே இல்லாமல் இருபது ஆயிரம் ரூபாய் மாமா கொடுத்த கதை தெரிந்த பின்னர், அம்மா மிகவும் நியாயமாய் நடப்பதாகவே எனக்குத் தோன்றியது. நீதி நியாயங்கள் தெரிந்தவள். மாமா இந்த முறை வரும் போது எப்படியாவது எங்களுடைய ரேடியோவைக் கொண்டு வருவார் என்ற நம்பிக்கையோடு நானும் தம்பியும் இருந்தோம். ஆனால் அவர் வழமை போல கொண்டுவரவில்லை. எனக்கும் தம்பிக்கும் சரியான கோபம் வந்தது. அவருக்கு முன்னால் காட்டிக்கொள்ளவில்லை. அது சாத்தியமான விடயமும் இல்லை. இந்த ரேடியோப் பிரச்சனை ஒரு நீண்ட காலப்பிரச்சனை. அப்பாவிடம் ஒரு பழைய பிலிப்ஸ் ரேடியோ இருந்தது. ஆறு மாதத்துக்கு ஒரு தடைவ அதற்கு மிகப் பெரிய பற்றி வாங்கிப் போடுவது கட்டுப்படி ஆகாது என்பது கூட பிரச்சனையாக இருந்ததில்லை. வாரத்துக்கு இரண்டு தடைவை மாமரத்துக்கும் புளிய மரத்துக்கும் இடையில் தொடுத்து கட்டியிருந்த ஏரியல் அறுந்து விழ விழ மறுபடியும் ஏறிக் கட்ட வேண்டும் என்பது பெரிய பிரச்சனை. ஒரு தடைவ மாமரத்தில் ஏறும் போது அப்பா சறுக்கி விழுந்தும் விட்டார். "இந்தக் குத்தியனுக்கு ஏன் இந்த வேலை?" என்று அம்மாவிடம் மாமா செல்லமாகத் திட்டினார். அம்மா இதுகளையெல்லாம் காதில் விழுந்த மாதிரியே காட்டிக் கொள்வதில்லை. "இந்த ரேடியோவை நான் முதியான்சேயிடம் கொடுத்து டிரான்சிஸ்டர் ரேடியோவாக மாற்றிக்கொண்டு வருகிறேன்" என்று கூறிக் கொண்டு போனவர் தான் இரண்டு வருடமாயும் திருப்பிக் கொண்டு வரவில்லை. ஒவ்வொரு முறையும் வரும் போது அடுத்த முறை கொண்டுவருவதாக சளைக்காமல் கூறுவார். "கழுவிக் காயப் போடும் போது மாமாவின் கோவணத்துக்குள் காஞ்சோண்டி இலையைப் ப+சி விடவேண்டும்." தம்பி கண்ணி வெடி வைப்பதற்குத் திட்டம் போட்டது போல திட்டம் போட்டான். இவனுடன் சேர்ந்து திட்டம் போடுவது காஞ்சோண்டி இலையை நானே ப+சிக் கொள்வதை விட மோசமான நிலைமைக்கு என்னைக் கொண்டு போய்ச் சேர்த்து விடும். இது எனக்குத் தெரியும். அதனால் அவனுடைய திட்டம் பிடித்திருந்தாலும் எடுத்த எடுப்பிலேயே நிராகரித்து விட்டேன். "சமாதான ரீதியான ஏதாவது திட்டம் போட்டால் தான் சரி" என்று நான் கூறியதை தம்பி சற்று சந்தேகத்துடனேயே பார்த்தான். சற்றும் எதிர்பாராமல் அம்மாவே ஒரு திட்டம் போட்டுக் கொடுத்தாள். "டேய் நீங்கள் இரண்டு பேரும் மாமா போகிற போது அவரோடையே போய், வரும் போது ரேடியோவையும் எடுத்துக் கொண்டு, மாமா வாங்கித் தாற அரிசியையும் கொண்டு வாங்கோவன்டா." மாமாவுக்கும் இந்தத் திடீர்த் திட்டம் பிடித்துக் கொண்டது ஏன் என்று பிறகு தான் எனக்கும் தம்பிக்கும் தெரிய வந்தது. அவர் சில மூட்டைகளை அநுராதபுரத்திற்கு கடத்தல் செய்ய என்னையும் தம்பியையும் நம்பி முழு ஏற்பாடுகளையும் செய்து முடித்தார். புது வருடம் முடிந்ததும் மாமாவின் விடுமுறையும் முடிவுக்கு வந்து விட்டது. வெங்காயம், செத்தல் மிளகாய், பாணிபோட்ட போயிலை சகிதம் இணுவில் ஸ்டேசனுக்குச் சென்று ரெயின் எடுப்பதற்காக நாங்கள் வெளிக்கிட்டோம். வேலிக்குப் பின்னால நின்று சர சர என்று சத்தம். பெரியம்மா அவரமாய் ஆனால் பதுங்கிப் பதுங்கி வந்தாள். பெரியம்மா முன் வாசல் வழியால் எங்கட வீட்டுக்கு வந்ததை ஒரு நாளும் நான் கண்டதேயில்லை. எப்பவும் அவள் பொழுது விழுந்ததுக்கும் பிறகு: வேலியைப் பொத்துக் கொண்டு, கிணத்தடிப் பக்கமாய் நின்று, திடீரென்று ஒரு மரத்துக்குப் பின்னாலை அல்லது ஆட்டுக் கொட்டிலுக்குள் பதுங்கி இருந்து அதிரடியாய் வந்து தரிசனம் தருவாள். அவளுக்கு என்ன பாதுகாப்புப் பிரச்சனை என்று கரிசனையாய் கேட்டறிய யாருமே யோசித்ததில்லை. கையில் கட்டுக் கிளுவம் இலையோட வந்த பெரியம்மா தம்பியின்ட காதுக்குள்ளை சொன்னாள் "ஆளுக்கொரு மூட்டையோடை வந்திடுங்கோடா." அநுராதபுரம் ஸ்டேசனில இறங்கி மாமாவின் குவாட்டசுக்கு போவதற்கான பஸ்சில் ஏறும் வரை பட்டவேதனைகளை சொல்ல முடியாது. என் தம்பிக்கு கை வீங்கியே விட்டது. இரகசியமாய் அழுதிருப்பான் போலவும் தோன்றியது. குவாட்டசுக்கு அருகிலேயே பஸ் நின்றது. இறங்கியதுமே மாமாவை எதிர்பார்த்துக் காத்திருந்தது போல லொக்கு பண்டா எங்களடிக்கு வந்து விட்டான். அவன் தான் அந்தக் குவாட்டசுக்கு காவல்காரன். இவனுக்கு காவலுக்கு இரண்டுபேரைப் போட வேண்டும் போல எனக்கிருந்தது. "ஐயா" என்று சிங்களத்தில் பணிவாக அழைத்தவன் தன்னுடைய புத்தாண்டு வாழ்த்துக்களை மாமாவுக்கு தெரிவித்தான். மாமாவும் பதிலுக்கு புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். லொக்கு பண்டா எங்களை ஆச்சரியமாகப் பார்த்தான். எங்களை மாமா சிங்களத்தில் அறிமுகம் செய்து வைத்தார். "ஓ.." என்று இழுத்தவன் "ஸ்கூல் எல்லாம் லீவு தானே இப்ப" என்று தமிழில் எங்களைப்பார்த்துக் கூறினான். மூட்டைகளை வெகு அனாயாசமாகத் தூக்கிக் கொண்டு வந்து இறக்கி வைத்தான். மாமாவின் இருப்பிடம் எனக்கு மிக்க அசௌகரியமாக இருந்தது. "எங்களுடைய ஆட்டுக் கொட்டில் இதைவிடப் பெரிசு" தம்பி குசு குசுத்தான். அவனுடைய காலில் நான் ஒரு மிதிமிதிக்க அமைதியாகி விட்டான். லொக்கு பண்டா காலையில் வருவதாகக் கூறி புறப்படும் போது "பெரிய மாத்தையா வந்து விட்டாரா?" என்று மாமா கேட்டார். "மாலையிலேயே வந்து விட்டார்" என்று கூறியபடி இருட்டுக்குள் போய் மறைந்துவிட்டான். "மாமா ரேடியோ எங்கே?" லொக்கு பண்டா போனதுமே ஆவலாய் கேட்டேன். அதை ஒரு தடவையாவது பார்த்துவிட்டால் பட்ட கஸ்டங்கள் நீங்கி விடும் போல இருந்தது. "இப்ப படுங்கோடா. அதையெல்லாம் காலையில பார்க்கலாம்" என்று கடுமையாகக் கூறினார். ஒரே ஒரு மரக்கட்டில் இருந்த அந்த இடத்தில் எப்படி படுப்பது என்று தீவிரமாகத் தம்பி யோசித்தான். மாஐpசியன் சர்க்காரைப் போல மாமா ஒரு இடத்தில் கைவைத்து இரண்டு சாக்குகளை எடுத்து தந்தார். "இதிலை படுங்கோ. சாராத்தாலை போர்த்துக் கொள்ளுங்கோ" எனக்கும் தம்பிக்கும் நித்திரை வரவில்லை. மாமாவின் குறட்டை சத்தம் கேட்டதும் தம்பி துள்ளி எழுந்தான். அந்த இருட்டுக்குள் பரபரப்பாக எதையோ தேடினான். கள்ள நாய். இவன் மாமாவின் காசை ஏதும் களவெடுக்கின்றான் போல. எனக்கு ஆத்திரம் வந்தது. "மாமாவை எழுப்பிச் சொல்லுவமோ" என்று நான் நினைக்க, மறுபடியும் என்னருகில் வந்து படுத்தான். மெல்ல என்னை சுரண்டினான். நான் ஆத்திரத்தில் பேசாமலே இருந்தேன். "ரேடியோ இருக்கிறது" என்று கூறினான். நான் திரும்பவே இல்லை. ஆனால் மனதுக்கு சந்தோசமாக இருந்தது. நின்மதியாக நித்திரை வந்தது. பரபரப்பாக காலையில் எழுந்த மாமா "இரண்டுபேரும் வெளிக்கிடுங்கோ" என்று அவசரப்படுத்தினார். எங்கு எதற்;கு என்ற எந்த விபரமும் மாமா வழமையாக கூறுவதில்லை. பாணிபோட்ட போயிலை மூட்டையில் இருந்து நல்லதாய் இரண்டு போயிலை கட்டுகளைத் தேடி எடுத்துக் கொண்டார். யாரையோ முக்கியமாக சந்திக்கப்போகின்றார் என்று நினைத்தேன். அந்த குவாட்டசை விட்டு வெளியேறி இன்னொரு குச்சு ஒழுங்கை வழியாக சிறிது தூரம் நடந்தோம். ஒரு சிறு கல் வீட்டுக்கு முன் நின்றார். எங்கள் இருவரையும் பார்த்தார். "ஒரு பிரச்சனையும் இல்லாமல் அமைதியாய் இருக்கவேண்டும்" என்று மிரட்டல் தொனியில் கூறினார். இப்படியான சந்தர்ப்பங்களில் என்னுடைய தலை எனக்கும் தெரியாமல் தானாகவே ஆடிவிடும். தம்பி யோசித்துத் தான் ஆட்டுவான். "பின்னாலேயே வாங்கோ" மூங்கிலால் செய்த படலையை திறந்து கொண்டு மாமா அந்த வீட்டு வளவுக்குள் காலடி வைத்தார். எனக்கு ஒரே பரபரப்பாக இருந்தது. சிங்கள மாமியைத் தான் சந்திக்கப் போகின்றோமோ? வீட்டுக் கதவைத்தட்ட ஒரு பெண்மணி கதவைத்திறந்தாள். அழகான பெண்மணிதான். மாமியா ஏற்பதற்கு எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை நான் தயார். "நோனா" சிங்களத்தில் மாமா கூறினார். "ஓ! யாப்பண இரிந்து வந்ததா?.... உல்லுக்கு வந்தி கொஞ்சம் இரிங்க." அந்தப் பெண் உள்ளே சென்று விட்டார். நானும் தம்பியும் ஒருவரை ஒருவர் கண்களால் பார்த்துக் கொண்டோம். தம்பியின் முகத்தில் பெரும் விசமம் கொப்பளித்துக் கொண்டிருந்தது. மாமா போயிலையை இரண்டு கைகளாலும் ஏந்தி ஒரு வீரனைப்போல தயாராக நின்று கொண்டிருந்தார். இரண்டு நிமிடத்தில் யாரோ வரும் காலடிச்;சத்தம் கேட்க மாமா பரபரப்பாகினார். வெறும் மேலுடன், கண்ணாடியும் சாரமும் அணிந்த ஒரு மனிதர் வர தடாலென்று மாமா சரிந்து விழுந்தார். மாமாவுக்கு என்ன? நான் திடுக்கிட்டேன். "மாத்தையா! புத்தாண்டு வாழ்த்துக்கள்" மாமாவின் குரல் பாதாளத்தில் இருந்து கரகரப்பாக கேட்டது. "ஓ. கே. நட்ராஐh" மாத்தையா கட்டைக் குரலில் கூறினார். அவர் தான் மாமாவின் மேலதிகாரி. ஏதோ ஒரு வளையில் மாட்டிக் கொண்ட கரடியைப் போல், மிக மெல்லமாக, கஸ்டப்பட்டு எழுந்த மாமா, சளைக்காமல் தனது முதுகை வளைத்து குனிந்து மாத்தையாவிடம் பாணிப் போயிலையை நீட்டினார். பாணிப்போயிலையைக் கண்டதும் மாத்தையாவின் விரிந்த முகம் அகலப்பக்கமாக இன்னமும் விரிந்தது. தம்பியைப் பார்த்தேன். காணக் கூடாததைக் கண்டதைப் போல் அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தான். மறுபடி அநுராதபுரம் புகையிரத நிலையத்தில் இருந்து, இரயில் வண்டி புறப்படும் வரை எதைப்பற்றியுமே அவன் மூச்சே திறக்கவில்லை. இப்போதெல்லாம் மாமாவைப் பார்க்கின்ற போது எனக்கு பாண்டியனின் நினை வருவதேயில்லை. வளைந்து போன ஒரு வாளின் நினைவு மட்டும் மறுபடி மறுபடி வந்து தொலைக்கின்றது. (ஜேர்மன் "பூவரசு" இதழ் நடாத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பசிசு பெற்றது)

செழியன்
Subscribe to:
Posts (Atom)